இங்கே
விருந்தாளிகளின் தொல்லை தாங்கலை!!!!
நம்ம வீட்டு விருந்தாளிகள் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சே?? ஒரு 4 நாள் முந்தி இரவில் கணினி முன்னால் உட்கார்ந்திருந்தேன் பெண்ணோடு சாட்டுவதற்குத் தயாராக. அவங்க வரதுக்கு நேரம் ஆச்சு. நான் உட்கார்ந்திருந்தது இரவு நேரம் ஆனாலும் விளக்குப் போட்டுக்கலை. விளக்குப் போட்டுட்டு உட்கார முடியாது. ம.பா.வோ சீரியல் சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தார். பொண்ணும் வரலை, சரினு மெயிலாவது பார்க்கலாம்னு ஜிமெயிலில் உட்கார்ந்திருந்தேன். ஒரு விவாத இழையில் ஆழ்ந்து போயிருந்த சமயம். காலில் ஏதோ குறு, குறு. வலக்கால் கட்டை விரலில். நமக்கு அது அடிக்கடி தொல்லை கொடுக்கும். அதுமாதிரிதான் ஏதோனு நினைச்சேன் முதல்லே. திரும்பவும் குறு, குறு, கொஞ்சம் அழுத்தமாய், வலியும் வந்தது. சாதாரணமாய் ஒரு பென்சில் விழுந்தாலே வலிக்கும் நமக்கு, அதனால் அப்படி ஏதோனு நினைச்சால், மீண்டும் அழுத்தமாய் ஒரு குறு, குறு. அவ்வளவு தான்.நாம அலறிய அலறலில் அக்கம்பக்கம் தூங்கப் போனவங்க எல்லாம் எழுந்து உட்கார, என்னோட ம.பா.வோ எனக்கு கணினி வழி ஷாக் அடிச்சுடுத்துப் போலிருக்குனு மெயினை ஆப் செய்யப் போக, நான் எழுந்து கத்திய கத்தலில், காலடியில் இருந்த ஒரு மூஞ்சுறு ரொம்பப் பயத்தோட ஓடிப் போச்சு.
அவ்வளவு தான். மொத்தமாய் நிலைமை அப்படியே மாறிப் போச்சு. அதுவரைக்கும் பயத்தோட இருந்த ம.பா.வுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? தேடணுமேனு ஒரே கவலை. தேடறது எதுக்குனு கேட்காதீங்க. எங்க வீட்டிலே துணி வைக்கும் அலமாரியிலே இருந்து, எல்லா இடத்திலும் தாராளமாய் வந்து போகும் ஜீவன் அது. துணி எல்லாம் அதன் கழிவுகளால் ஒரே நாசம். எப்படி என் புடவைகளைக் காப்பாத்தறதுனு ஒரே மண்டைக் குடைச்சல். அதை உள்ளே வர விடாதேனு இவர் ஆர்டர். என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி. என்னத்தைச் சொல்றது?? உள்ளே வந்த அதை வெளியே விடாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, அதை வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுக்க விட்டுட்டேனு இவருக்குக் கோபம். அது என்ன கையில் பிடிக்கவா முடியும்?? எப்படியோ ஓடி, ஒளிஞ்சுக்கறது.
நேத்திக்கும் அப்படித் தான் ராத்திரி உட்கார்ந்திருந்தேன் கணினிக்கு முன்னால். அப்போ பாருங்க, பக்கத்திலேயே இருக்கும் வார்ட்ரோபில் இருந்து ஏதோ தட்டற சப்தம். விட்டு, விட்டுக் கேட்டது. இவ்வளவு உள்ளே வந்து ஒளிஞ்சுக்கக் கூடிய ஒரே நபர் மூஞ்சுறைத் தவிர வேறே எதுவாய் இருக்கும்?? உடனேயே ம.பா.வைக் கூப்பிட, அவரும் ஓடோடி வந்தார், நேத்திக்கு சீரியல் எதுவும் இல்லை! அதனால் தான்! :P வந்து கதவைத் திறந்து பார்த்தால் ஒரு குஞ்சு தெரிஞ்சது. சரிதான், பிரசவத்தை இங்கே வச்சிருக்குனு நினைச்சு, இன்னிக்குக் காலம்பர வரை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு, பின்னே?/ அதில் இருக்கும் சாமான்களை எடுத்துட்டுத் திரும்ப வைக்க ஒரு அரை நாள் பிடிக்கும். அத்தனை வேண்டாத சாமான்கள் இருக்கு அதிலே. காலம்பர அவர் வார்ட்ரோபைத் திறந்து கொண்டு, வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) சகிதம் உட்கார, நான் கையில் கம்புடன், ஹாலில் நட்ட நடுவாக, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன், அம்மா வந்தால் வெளியே விரட்ட.
மெதுவாய்த் திறந்து பார்த்தால், ஒரு மூஞ்சுறு அசையாமல் கிடக்கு. என்னனு புரியலை, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் மேலும் 2 குஞ்சுகள். அதுங்க இரண்டும் துள்ளலோ துள்ளல். மெதுவா அதை எடுத்து வாளிக்குள் போட்டுவிட்டு, அதுக்குள்ளே அம்மா வராமல் இருக்கணுமேனு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்லி, அசையாமல் இருக்கிறதை முதலில் வெளியே கொண்டுவிட்டு, காக்காய் வேறே கொத்தாமல் இருக்கணும், அது கண்ணுக்குப் படாமல் மறைவாய் விட்டு, மத்தது இரண்டையும் அப்படியே விட்டுட்டு வந்து, திரும்ப வார்ட்ரோபை சுத்தம் செய்து, அறையையும் சுத்தம் செய்துவிட்டுக் குளித்துச் சாப்பிடும்போது மணி 1-00 க்கு மேல் ஆயிடுச்சு.
கொல்லையில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் கொஞ்ச நாளாக் காணாமல் போயிருந்த அம்மாப் பூனை வருது, மெதுவாய் ஏதோ விஷயம் சொல்லிக் கொண்டே. என்னனு பார்த்தால் அதோட வயிறு பெரிசா இருக்கு. மீண்டும் குட்டி போடப் போகுதோ?? அதுக்குத் தான் தாஜா பண்ணுதோ??

மேலே உள்ள இரண்டு படங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டவை! சொந்தப் படங்கள். :))) அது ஒரு காலம்! மேலுள்ள பூனை தான் நாய்களிடம் மாட்டிச் செத்துப் போனதுனு நினைக்கிறேன். கீழே உள்ளது அதன் பின்னர் வந்தது. இது வந்த சில நாட்களில் நாங்கள் அந்த வீட்டை விட்டே கிளம்பிட்டோம்! இது அம்பத்தூர் வீட்டுக்கிணற்றடி! கிணற்றடியிலே கிடைக்கும் கொஞ்ச நிழலில் ஓய்வு எடுக்குது!
சோதனையோ சோதனை!
ReplyDeleteஒரு வேளை, உங்க வீட்டுல அதுகளுக்குத் தேவையான உணவு கிடைக்குதோ? (இல்லை... நீங்க சமைக்கறது மூஞ்சூறுகள் ரசித்துச் சாப்பிடும்படி இருக்கோ என்று கேட்டால் அது தப்பான அர்த்தத்தைக் கொடுத்துடுமே)
ReplyDeleteஇருந்தாலும் மூஞ்சூரை யாரும் கொல்லமாட்டார்கள். அதன் சவுண்டே கீச் கீச்சுன்னு இருக்கும்.
நீங்க சொல்வது சரி, எங்க வீட்டுக்கு வரவங்களும் அதுக்குத் தேவையான சாப்பாடை நாங்க கொடுப்பதால் வருகின்றன என்பார்கள்.
Deleteமூஞ்சூறை கொன்னதாக யார் சொன்னது? என்ன தான் கொல்லைக்கதவு, வாசல் கதவு இரண்டையும் மூடி வைச்சாலும் எப்படியோ இடுக்கு வழியா உள்ளே வந்துடும். வெளியே போகத் தெரியாமத் தவிக்கும். குட்டிகள் போடுகையில் வார்ட்ரோபில் போட்டு விட்டது! :)))
Delete'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்'னு பாரதியார் சொன்னதை ஓவரா நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களோ?
ReplyDeleteநெ.த. ஆமா இல்ல! இருக்கும், இருக்கும்! :)
Deleteபிள்ளையார் வாகனத்தை பயமுறுத்தலாமா ?
ReplyDeleteஹிஹிஹிஹி, கில்லர்ஜி, அது பயப்படப் போகுதுனு நான் என்ன கண்டேன்! :))))
Deleteஎப்படித்தான் அவைகளை விட்டு வைக்கிறீர்களோ எனக்கானால் அவற்றை அப்புறப் படுத்தாமல் இருக்க முடியாது எங்கள் வீட்டு தோட்டத்தில் பெருச்சாளிகள் மேயும் கதவை எப்பவு மூடியே வைத்திருப்போம்
ReplyDeleteஅவையும் ஓர் உயிர் தானே! எப்படியோ உள்ளே வந்துடும். கதவை எந்நேரமும் திறக்காமல் இருப்போமா? கிடைக்கும் இடைவெளியில் உள்ளே புகுந்துடும்.
Deleteமீள் பதிவு என்றாலும் ஸ்வாரஸ்யம். இப்படி தோட்டத்துடன் இருக்கும் கீழ் வீடுகளில் இருப்பது நல்ல வசதி. நெய்வேலியில் இருக்கும் வரை பெரிய தோட்டம், வீடு. சுப்புக்குட்டியிலிருந்து எல்லா உயிரினங்களும் வந்து போக வசதி! விதம் விதமான பூச்சிகளைப் பார்த்தது அங்கே தான்.
ReplyDeleteவாங்க வெங்கட், சுப்புக்குட்டிகள் பத்தி நிறையவே எழுதி இருக்கேன். இங்கே அதெல்லாம் பார்க்கவே முடியறதில்லை. ஜன்னல் வழியாகப் பறவைகளைப் பார்ப்பதோடு சரி! விதவிதமான வண்ணத்திப் பூச்சிகள் அவ்வப்போது வரும்! இப்போ ஒரு குளவி கூடு கட்டிக் கொண்டிருக்கு!
Deleteபடித்த மாதிரி நினைவே இல்லை.
ReplyDeleteநல்லதாப் போச்சு மறதி மீண்டும் எத்தனையோ விஷயங்களை ரசிக்க வைக்கிறது. சென்னையில் மூஞ்சூறு வருவதும்,அதைத் துரத்த பூனையார் வருவதும்
ரெகுலர் டாம் அண்ட் ஜெர்ரி ஷோ தான். பலசமயம் பூனை சார் வந்தப்புறம் தான் எலி சாரும் உள்ள இருக்கார்னு தெரியும். இப்போ எல்லாத்துக்கும் தடா போட்டாச்சு.வெகு சுவாரஸ்யம் கீதா மா.
வாங்க வல்லி, இந்தப் பதிவுக்கு நீங்க வரலை. அம்பி அம்பேரிக்கா போறதுக்கு முன்னாடி, அபி அப்பா, இ.கொ. கோபி, கவிநயா எல்லோரும் நெருங்கிப் பழகிட்டு இருந்தப்போ பல்லாண்டுகளுக்கு முன்னர் வந்தது! :)))) 2008 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன்.
Delete/ வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) //
ReplyDeleteஆமாம் தானேக்கா பாவம் அப்போதான் பிறந்த பட்டு உடம்பு .பிறகு அம்மா வந்து அதுங்களை கண்டுபிடிச்சிருச்சா ??
ஊரில் எங்க வீட்டில் பூனைங்க எலிகளை ஒண்ணுமே செய்யாதுங்க :) ரியல் டாம் அண்ட் ஜெரி தான் :
வாங்க ஏஞ்சல், அம்மாவோட சேரும்படி தானே கொண்டு விட்டோம்! இல்லைனா அவ்வப்போது நம்ம மூதாதையர் வேறே வருவார்! அவர் இதுங்களை ஒண்ணும் பண்ணாட்டியும் பயம்மா இருக்குமே. இந்த நாய், பூனை இதுங்க கிட்டே இருந்தும் காப்பாத்தணும் இல்லையா? அதுங்களும் வாழத்தானே பூமியில் பிறக்குதுங்க! :)))
Deleteஹையோ ஏஞ்சல் அண்ட் கீதாக்கா பூனை கூட பரவாயில்லை போல இருக்கே? எலியை ஒன்றும் செய்யாமல்!!!!! ஆனா நம்ம பைரவி கண்ணழகி செல்லம் இருக்காளே!!ஹையோ செம கில்லாடி எலி, அணில் பிடிப்பதில் எல்லாம்...ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
கீதா
வாங்க தி/கீதா, எதுவானாலும் உயிர்தானே! அதுங்களுக்கு இடம் இல்லாம நம்ம வீட்டுக்கு வந்து பிரசவத்தை வைச்சுக்குதுங்க! :))) அந்த நம்பிக்கையைக் காப்பாத்த வேணாமா?
Deleteஇந்த மூஞ்சுறு வகையறா நீள மூக்குடன் இருக்கும் .
ReplyDeleteஅம்மா அதுங்க தோட்டத்தில் நைட் விறுவிறுன்னு போகும்போது குழந்தைங்க போகுதுன்னு சொல்வாங்க :)
இதில் வெள்ளை வெரைட்டியும் உண்டு.அழகா பழகுங்க மூர்மார்கெட்டில் வெள்ளை வெரைட்டி கூண்டில் வளர்க்க விற்பாங்க . .
எங்க வீட்டில் ஓட்டின் உள்பக்கம் தான் இப்படி குட்டி போட்டு டிவி ஒயர் மேலே தாய் நடந்து தூக்கிட்டு போகும் :) பைரவர்கள் இருப்பதால் பீரோ பக்கம்லாம் வர மாட்டாங்க .ஆனா சாதம் ஜன்னலோரம் வைப்போம் .ஒரு பல்லி கூட வந்து சாப்பிட்டு போகும்
ஏஞ்சல், சென்னை மூர் மார்க்கெட்டில் நானும் வெள்ளை மூஞ்சுறு பார்த்திருக்கேன். சாதம் எல்லாம் கொல்லையில் நான் வைப்பது தான்! வேலை செய்யும் பெண் வரும்போது கொல்லைக் கதவைத் திறப்பேனா, அந்த நேரம் பார்த்து எப்படியோ உள்ளே வந்துடும்! :))))
Deleteஆமாம் ஏஞ்சல் வெள்ளையும் பார்த்திருக்கேன் செம அழகா இருக்கும்...நானும் எங்கள் ஊரில் இருந்த வரை மூஞ்சூறுகளுடன் நல்ல பழக்கம் இருந்தது...ஹூம் இப்பத்தான் ஃப்ளாட்டில் கரப்பான், பல்லி, குளவி அப்புறம் குரங்குகள், புறா, காக்கை, பட்டர்ஃப்ளை, எப்பவேனும் குருவிகள்னு...அதுவும் நம்ம கண்னழகி செல்லம் இதுங்களை எல்லாம் விட்டாத்தானே!! பால்கனி கதவு மூடியிருந்தா பிரச்சனை இல்லை அதுங்க பயமில்லாம வந்துட்டுப் போகும். திறந்திருந்தா ஒன்னும் வராது ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
///ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? //
ReplyDeleteஹா ஹா ஹா சூப்பர்ர்ர்ர் மாமா கரெக்ட்டாத்தானே சொல்லியிருக்கிறார்:) நீங்க உளக்கியிருந்தால் மூஞ்சூறுப்பிள்ளை இப்போ சொர்க்க வாசலில் இருந்திருக்கும் ஹா ஹா ஹா..
அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எலியே கடிச்ச கதை கூட இருக்கு! போட்டேனா இல்லையானு நினைவில் இல்லை. ஆனால் எலிகடிக்கலை, பிறாண்டி இருக்குனு ரங்க்ஸும் , டாக்டரும் சத்தியம் பண்ணிட்டாங்க! என்றாலும் விடாமல் ஊசி போட்டுக் கொண்டு வந்தேன்! :))))
Deleteஅக்கா நாங்கள் எங்க்ள் ஊரில் கஸின்ஸ் எல்லோரும் ராத்திரி படுத்திருக்கும் போது எல்லோர் குதிகாலையும் எலி பதம் பார்த்துவிட்டுப் போகும். ரொம்பவே தோண்டியிருக்கும். எனக்கெல்லாம் புண்ணாகி ரத்தம் வரும் அளவு. ஆனால் நாங்கள் அடுத்த நாள் நன்றாகக் கழுவி விட்டு அதற்கு தேங்காய் எண்ணை போட்டு பகல் எல்லாம் ஊற வைத்து ராத்திரி படுக்கும் போது நன்றாகக் கழுவி விட்டு துணியைப் பல அடுக்குகள் வைத்துக் கட்டிக் கொண்டு தூங்குவோம். டாக்டரிடம் எல்லாம் எங்களைக் கூட்டிக் கொண்டு போனதில்லை அப்போது யாருக்கும் இதெல்லாம் தெரியாதே அக்கா அப்போது...கண்டிப்பாகப் பிராண்டி இருக்காதுக்கா...கடிச்சுதான் இருக்கும்!!!
Deleteகீதா
தி/கீதா சும்மாவே எனக்கு ஸ்கின் அலர்ஜி சின்ன வயசிலே இருந்து உண்டு. வெயில்காலம்னா கேட்கவே வேண்டாம். சிவப்புக் கலரைப் பார்த்தாலே உடம்பெல்லாம் சிவக்கும். அந்த நிறத்தில் எந்த உடையும் உடுத்த முடியாது! :)))) இப்போக் கொஞ்ச நாட்களாகக் காஃபி ப்ரவுன் கலரும் சேர்ந்திருக்கு!:) அதோட ஃபோட்டோ அலர்ஜி வேறே உண்டு. இத்தனை அலர்ஜியை வைச்சுண்டு எங்க தோல் வியாதி மருத்துவரையே தலையைப் பிச்சுக்க வைச்ச அனுபவம் எல்லாம் உண்டு. அது தனிக்கதை! அப்படி இருக்கும்போது எலி கடிச்சதா, பிறாண்டினதானு சீட்டுப் போட்டுப் பார்க்க முடியுமா? வம்பே வேணாம்னு மருத்துவரிடம் காட்டிட்டு வந்தோம்.
Deleteகுட்டிகளை வெளியே போட்டால் அவை என்னாகுமோ?..
ReplyDeleteஓ அடுத்த பிரசவ வார்ட் ரெடிப் பண்ணுங்கோ. போடும் குட்டிகளை நம் புளொக்கேர்ஸ் க்கு குடுங்கோ பிளீஸ்ஸ்:))
ஞானி, இங்கே எதுவும் இல்லை! இருந்திருந்தால் ஸ்கொட்லாண்டுக்குக் கூட அனுப்புவேனே! :))))
Deleteமீள்பதிவானாலும் பொருத்தமான பதிவு. பலர் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம்.
ReplyDeleteஆமாம், முனைவர் ஐயா, அம்பத்தூர் வீட்டில் இருந்தவரை இம்மாதிரி நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை.இங்கே நேர்மாறாக இருக்கு! :)))))
Deleteமூஞ்சுறு துணிகளை பாழ் செய்யும் தூக்கி போகும் என்பார்கள்.
ReplyDeleteசின்ன குழந்தை வீட்டுக்கு வந்தால் அதன் உச்சிமண்டையில் கொஞ்சம் எண்ணெய் தொட்டு வைத்து வாயில் கொஞ்சம் சீனி கொடுப்பார்கள் அம்மா அப்படி கொடுக்க வில்லை என்றால் மூஞ்சுறு வீட்டு வந்து விடும் என்பார்கள், வந்து துணியை தூக்கி கிட்டு போய்விடும் என்பார்கள்.
வாங்க கோமதி, சின்னக் குழந்தைங்களை முதன் முதல் பார்க்கையிலே உச்சி எண்ணெய்னு தடவுவது உண்டு. இது வடமாநிலங்களிலும் இருக்கு! ஆனால் இதான் காரணம் என்பது தெரியாது.
Deleteசின்னக் குழந்தை என்றால் பிறந்த குழந்தைகளைத்தானே சொல்லுறீங்க கோமதிக்கா? யெஸ் அது அந்த உச்சி கொஞ்ச நாள் துடித்துக் கொண்டிருக்கும் இல்லையா....அதனால் அதற்கு சும்மா உச்சி எண்ணைவைத்து நார்மலாகவே குட்டிக் குழந்தையைப் பார்க்கப் போனால் அல்லது வீட்டுக்கு வந்தால் சர்க்கரையை நாவில் தீட்டுவது உண்டு...அந்தத் துடிப்புக்குத்தான் எண்ணெய்.அது பொதுவாக பெரியவர்கள் பலர் செய்வதைப் பார்த்திருக்கேன். அந்த இடம் மிகவும் ஸாஃப்டாக இருக்கும்
Deleteகீதா
குழந்தை பிறந்து உட்காரும் வயசு வரும் வரை உச்சி எண்ணெய் வைப்பது உண்டு.
Deleteமுப்பாத்தம்மா.. எங்குடும்பத்தைக் காப்பாத்தினியே... முப்பாத்தம்மா!..ன்னு
ReplyDeleteமூஞ்சூறு நன்றி சொன்னதா கேள்விப்பட்டேன்...
ஹாஹா, இருக்கும். இங்கே வந்தப்புறமாப் பார்க்கக்கூடக் கிடைக்கலை! பூனையார் மட்டும் அவ்வப்போது விசிட்!
Deleteதுரை அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
ரசித்து ரசித்து வாசித்தேன் அக்கா!! மூஞ்சூறு ஹையோ அழகு அக்கா. அதன் குஞ்சு செமை ப்யூனியா இருக்கும். ரொம்ப குட்டியா நம்ம சுண்டுவிரலையும் விடச் சின்னதா இருக்கும் பொறந்திருக்கும் போது..பிள்ளையார்தான் அனுப்பிருப்பார் இவங்க வீட்டுக்குப் போ உனக்கு ஒன்னும் ஆகாம உன் குட்டிய பெத்துக்கலாம்னு...ஹா ஹா ஹாஹ் ஆ...மூஷிக வாகன!
ReplyDeleteகீதா
ஆமாம், தி/கீதா! எனக்கு எங்க பட்டுக்குஞ்சுலுவோட சுண்டு விரலைப் பார்த்தால் இங்கே வாங்கும் வெண்டைக்காய் நினைவில் வரும். வெண்டைக்காய் அத்தனை சின்னதாய் இருக்கும். மஹாராஷ்ட்ராவில் பண்ணறாப்போல் முழு வெண்டைக்காயையும் ஸ்டஃப் பண்ணி வதக்கலாமானு தோணும்! ஹிஹிஹி! நீங்க மூஞ்சுறைச் சொல்றீங்க! புரியுது! ஆனால் சுண்டுவிரல்னதும் இந்த விரல் நினைவில் வந்தது. நேத்திக்குக் குட்டிக் குஞ்சுலுவைப் பார்த்தேனா, அதான்! ஃப்ளையிங் கிஸ் கொடுக்கக் கத்துட்டு இருக்கு!
Deleteபூனை படங்கள் செம அழகா இருக்கு அக்கா....அம்பத்தூர் வீடு பற்றி சொல்லும் போது ஆஹா நல்ல மரங்கள் கிணறுனு ஆஹா வீடு...நீங்க படங்கள் கூட முன்ன போட்டிருந்தீங்க. உள் ரூம்ஸ் எல்லாமே...நினைவு இருக்கு..
ReplyDeleteகீதா
ஆமாம், தி/கீதா, 88 வரை நாலு பக்கமும் பூச்செடிகள்,மல்லிக்கொடிகள், ரோஜாச் செடிகள், முல்லை, நித்யமல்லிக் கொடிப் பந்தல், பவளமல்லிமரம்னு இருந்தது. மாமரம், மாதுளை, எலுமிச்சை மரம் எல்லாம் கொல்லையில். மேற்குப் பக்கம் நான்கு தென்னை மரங்கள்! வீட்டின் கூடமே ஜில்லென்று இருக்கும். ஃபானே போட வேண்டாம். கொல்லைக் கதவும், வாசல் கதவும் திறந்து வைச்சுட்டுப் படுத்தால் காற்று அள்ளிக் கொண்டு போகும். 88க்குப் பின்னர் மறுபடி ராஜஸ்தான், குஜராத் போயிட்டுப் பத்து வருஷங்கள் கழிச்சு வந்தப்போ இருந்தவற்றைக் காப்பாத்தி வைச்சோம். பின்னரும் அரும்பாடுபட்டு மரங்களையாவது காப்பாத்துவோம்னு காப்பாத்தினோம். பவளமல்லி போன இடம் தெரியவில்லை. என்றாலும் தங்க அரளி, செம்பருத்தி 2,3 நிறங்கள், அரளி, நந்தியாவட்டை ஒற்றை, அடுக்கு, மல்லி, சந்தனமுல்லை எல்லாமும் இருந்தன.வாசலில் இரண்டு விருட்சி மரம் போல் இருந்தன. எந்தப் பூஜைக்கும் பூக்கள் வாங்கியதே இல்லை. போறவங்க வரவங்க எல்லாம் எங்க வீட்டுக்குள் நுழைந்து பூக்களைப் பறித்துச் செல்வார்கள். எல்லாம் ஓர் கனவாகி விட்டது! :(
Delete