நம் இனிய சிநேகிதி பானுமதிக்கு இன்று பிறந்த நாளாம். நேத்திக்கு வீட்டுக்குக் கணவரோடு வந்தாங்க. அவங்களும் சொல்லலை. அவங்க கணவரும் சொல்லலை! முன்னரே தெரிஞ்சிருந்தா அட்வான்ஸா கேக் வாங்கி வைச்சிருந்திருக்கலாம்! அதனால் பரவாயில்லை. படம் போட்டுடறேன்.
படங்களுக்கு நன்றி கூகிளார்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பானுமதி வெங்கடேசன் :)
ReplyDeleteநன்றி தேனம்மை(எவ்வளவு அழகான பெயர்!).
Deleteஎமது வாழ்த்துகளும்...
ReplyDeleteநன்றி சகோ!
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமதி அக்கா :)
ReplyDeleteநன்றி ஏன்ஜெல்.
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பானு அக்கா. இந்த நாளின் சந்தோஷமும், இனிமையும் வருடத்தின் எல்லா நாட்களிலும் தொடர பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம், அதுதான் முகநூலில் வாழ்த்தி விட்டீர்களே.
Deleteஎனது வாழ்த்துக்களும்...
ReplyDeleteநன்றி அனு.
Deleteதாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமதி வெங்கடேசன், வாழ்க வளமுடன்.
ReplyDeleteநன்றி கோமதி அக்கா. Better late than never.
Deleteசகோதரிக்கு/ பானுக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! என்றென்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திட பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நன்றி துளசிதரன். நன்றி கீதா.
Deleteகேக் இல்லாவிட்டால் என்ன? அதுதான் அருமையான குலாப் ஜாமூன் கொடுத்தீர்களே. அது ரெடிமேட் மிக்ஸ் போல் தெரியவில்லை. பால் பவுடர் மற்றும் பால் கோவா சேர்த்து நீங்களே தயாரித்தது என்று நினைக்கிறேன். மிக நன்றாக இருந்தது.
ReplyDeleteசிறு வயதில்தான் பிறந்தநாள் வாழ்த்திற்கு மனம் ஏங்கும். அப்போது பிறந்த நாள் என்றைக்கு என்றே தெரியாது. அம்மாவிடம் கேட்டால், "ஆனி மாதம், விசாக நட்சத்திரம்" என்பாள். அப்போதெல்லாம் யாரும் வாழ்த்தியதில்லை, இப்போது நிறைய பேர் வாழ்த்து சொல்கிறார்கள். உங்கள் மூலம் இன்று சிலர் வாழ்த்தியிருக்கிறார்கள். மிக்க நன்றி.
வாங்க பானுமதி! முதலில் போளிதான் பண்ணுவதாய் இருந்தேன். அப்புறமா அம்பேரிக்காக்காரங்களும் வராங்கனதும் ப்ளான் மாறிடுத்து! அந்தச் சின்னப் பசங்க எல்லாம் போளி சாப்பிடுவாங்களா, அது பத்தித் தெரியுமானுசந்தேகம். சட்டுனு இதான் கை கொடுத்தது. எம்டிஆர். குலாப்ஜாமுன் மிக்ஸ் தான் எப்போவும் வாங்குவேன். இப்போப்பண்ணியே சுமார் ஏழெட்டு வருடங்கள் இருக்கும். வட மாநிலங்களில் இருந்த வரை நீங்க சொன்னாப்போல் சர்க்கரை போடாத கோவா வாங்கி மைதா கொஞ்சம் சேர்த்துப் பண்ணுவேன். அல்லது பால் பவுடர்(அமுல்)+மைதா மிக்ஸ் பண்ணிச் செய்வேன். இங்கே வந்தப்புறம் எம்டிஆர். தான். பால் விட்டுப் பிசைந்துடுவேன் மன ஆறுதலுக்காக! :))))
Deleteஆமாம், பானுமதி, சின்ன வயசில் பள்ளியில் படிக்கும் காலங்களில் கூடப்படிக்கும் பெண்கள் புதுப்பாவாடை கட்டி வந்து சாக்லேட் எல்லாம் கொடுப்பாங்க!வகுப்பின் அனைத்து மாணவிகளும் "ஹாப்பி பர்த்டே" பாடுவோம். அப்போல்லாம் ஆசையா இருக்கும். எங்கே! வீட்டில் கூட அது எல்லா நாளையும்போல் ஒரு நாள் தான்! அதோடு மே மாதம் வருவதால் பள்ளி விடுமுறை! :)))) எங்க குழந்தைங்க விபரம் தெரிஞ்சப்புறமாத் தான் இந்தப் பிறந்த நாள், மண நாள் வாழ்த்துகள், வாழ்த்து அட்டைகள் எல்லாம். அவங்க குழந்தைங்களா இருந்தப்போ சர்ப்ரைஸாக் கொடுக்கணும்னு பேசி வைச்சுட்டுக் கொடுப்பாங்க! அதெல்லாம் இன்னும் பத்திரமா வைச்சிருக்கேன். தூக்கிப் போட மனசு வரலை! என்னைப் பொறுத்தவரை பொக்கிஷம் அதெல்லாம்! :)))))
Deleteஎமது வாழ்த்துகளும் உரித்தாகுக.
ReplyDeleteThank you Sir.
Delete