எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 08, 2018

சர்க்கரையா ! கவலைப்பட வேண்டாம்!

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு எனக்குக் கடந்த 2,3 வருடங்களாய்த் தான். அதுவும் அவ்வப்போது தலை காட்டும். சில சமயம் அதிகம் இருக்கும். பல சமயங்களிலும் இருக்கவே இருக்காது.  3 மாதத்துக்கான சராசரி சர்க்கரை அளவில் சர்க்கரையே காட்டாது! ஆனால் ரங்க்ஸுக்கோ 2இட்லிக்குப்பதிலா 3சாப்பிட்டாலே சர்க்கரை துள்ளிக் குதிக்கும். நான் என்னோடசர்க்கரைக்காக அவ்வளவா கவலைப்பட்டதில்லை. படுவதும் இல்லை. ஆனால் அவரோ இதே புலம்பல்! எந்த எந்த வகையில் சர்க்கரையைக் குறைக்கலாம்னு பார்ப்பார்.அது சம்பந்தமான யூ ட்யூப்கள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, ஆங்கில மருத்துவர்கள் சொல்வது, மற்றும் சிலர் சொல்லும் வெந்தயம், கொத்துமல்லி, ஜீரகக் கஷாயம், பார்லி, சம்பா கோதுமை, கருஞ்சீரகம் போட்ட கஷாயம்,ஆவாரம்பூக் கஷாயம், நெல்லிக்காய்ச் சாறு, பாகல்காய்ச் சாறு என எதையும் விடலை. அவரோடு சேர்ந்து எனக்குச் சர்க்கரை இருக்கோ இல்லையோ கவலைப்பட்டுக்காமல் நானும் குடிப்பேன். இதிலே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடும்போது உண்மையிலேயே சர்க்கரை அளவு குறையத் தான் செய்தது. ஆனால் நம்ம ரங்க்ஸிடம் கொஞ்ச நாளிலேயே அதை மாத்தணும்னு தோணி வேறே யாரோ சொன்ன மேற்சொன்ன ஏதாவது கஷாயத்துக்கு மாறுவார். நிலவேம்புக் கஷாயமும் சாப்பிட்டுப் பார்த்தாச்சு. திரிபலா சூரணமும் எடுத்துக் கொண்டாச்சு.

நேத்திக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தா உடனே இன்னிக்குச் சர்க்கரை எகிறிக் குதிக்கும். அப்போத் தான் இங்கே குடியிருப்பு வளாகத்திலே ஒரு மாமி அவங்க எடுத்துக்கும் ஆயுர்வேத மருந்து பத்திச் சொல்லி இருக்காங்க. அவங்க எடுத்துக் கொண்ட ஆயுர்வேத மருத்துவம் முழங்கால் வலிக்கு. ரங்க்ஸும் என்னோட பொறுக்க முடியாத கால்வலிக்குத் தான் அவங்க கிட்டே கேட்டிருக்கார். ஏனெனில் சில நாட்கள் என்னால் நிற்கக் கூட முடியாமல் போகும்.  இரவு எழுந்து கழிவறைக்குச் சென்று வர 20 நிமிஷம் ஆகும். தத்தித் தத்தி நடக்க வேண்டி இருக்கும். வலக்கால் ஆடுசதையில் முழங்காலுக்குக் கீழே இருந்து கணு வரை தொட்டாலே வலி! கத்துவேன். இரவுகளில் க்ராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு காலை 3 மணிக்கே ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் பாடாய்ப் படுத்தும்.  காலை எழுந்ததும் இரு முழங்கால்களும் பிடித்துக் கொண்டு தூக்கி வைத்து நடக்க முடியாது! தேய்த்துத் தேய்த்து நடப்பேன். ருமாடிஸமோ எனச் சோதனை செய்ததில் நெகடிவ் என வந்து விட்டது. ஆகவே ஆங்கில மருத்துவர் கொடுத்த ஆன்டிபயாடிக்கை அவ்வப்போது ரொம்பத் தாங்க முடியாத சமயங்களில் சென்னையிலிருந்து வரவழைத்து ( இங்கே கிடைப்பதில்லை. சென்னையிலும் மேற்கு மாம்பலத்தில் ஒரே ஒரு கடையில் தான், என் தம்பி வாங்கி அனுப்புவார்) சாப்பிடுவேன்.

இந்நிலையில் இந்த ஆயுர்வேத மருந்தை முயன்று பார்க்கலாம். ஏற்கெனவே நான் சென்னையில் வாரியர் மருத்துவசாலைக்கே சென்று பார்த்து விட்டேன். என்றாலும் இப்போ சர்க்கரைக்கானும் நிவாரணம் பெறலாம்னு நம்ம ரங்க்ஸ் முடிவு செய்து அந்த மாமி சொன்ன மருத்துவமனையைத் தேடிச் சென்றார். நம்ம ரங்க்ஸிடம் ஒரு குணம். எந்தப்பெயரையும் நினைவில் வைச்சுக்க மாட்டார். என் பெயரைத் தவிர! அதை மறந்தால் பூகம்பம்னு நினைவு வைச்சிருப்பாரோ? தெரியலை! :)))))) ஆகவே அந்த மாமி சொன்னது ஆயுர்வேத வாரியர் மருத்துவமனை என்பதை மறந்து விட்டு அதே தெருவில் அந்த ஆயுர்வேத மருத்துவமனை ஓர் குறுக்குச் சந்தில் இருக்கு! அதற்கு நேரே முக்கிய ரஸ்தாவில் அகத்தியர் சித்தமருத்துவமனை, பாரம்பரிய மருத்துவர் எம்.என்.கோபாலகிருஷ்ணன், என்ற பெயருடன் ஓர் சித்தமருத்துவ மனை இருக்க அங்கே போய்த் தகவல்கள் சேகரித்து வந்து விட்டார். இந்த ஆயுர்வேத மருத்துவமனையும் அங்கேயே இருப்பதைப்பார்க்கவே இல்லை. ஹிஹிஹி!

ஒரு நல்ல நாள் பார்த்து (உண்மையாகவே) இரண்டு பேரும் போனோம். கூட்டமோ கூட்டம்! தலை சுத்தியது. காலை பதினோரு மணிக்கு மருத்துவர் வருவார்னு சொன்னாங்க. வந்தார். ஆனால் எங்களைப் பார்க்கையில் மதியம் 2 மணி ஆகிவிட்டது. எந்தவிதச் சோதனைகளும் இல்லை. நாடியை மட்டும் பார்த்துக் கேட்டு நாடி பேசுவதை வைத்து மருந்தைத் தீர்மானிக்கிறார். அதை நம்மிடம் முதலிலேயே சொல்லி விடுகிறார். சர்க்கரை அளவு கடந்த 2 மாதங்களுக்கானது எடுத்துச் சென்றிருந்தோம். கட்டாயமாய்ச் சர்க்கரையைக் குறைக்கலாம் என உறுதிமொழி கொடுத்தார். என்னுடைய கால் பிரச்னையைச் சொல்லவும் காலில் எந்த இடத்தில் வலி  எனத் தொட்டுப் பார்க்க நான் அலறிய அலறலில் வெளியே இருந்தவங்கல்லாம் பயந்துட்டாங்கனு நம்ம ரங்க்ஸோட கணிப்பு! அதையும் குணப்படுத்தலாம் எனச் சொல்லி விட்டு மருந்துகளை எழுதினார். ஆனால் அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை நம்ம கையில் கொடுப்பதில்லை. நமக்கு ஓர் அடையாளச் சீட்டு மட்டுமே பெயர், வரிசை எண் போட்டுத் தருகிறார்கள்.

முதல் முதல் போகும்போது மருத்துவருக்கான ஃபீஸாக 200 ரூ வசூலிக்கின்றனர். ஆனால் மருந்துகள் பதினைந்து நாட்களுக்கு சர்க்கரை நோய்க்கு மட்டும் 1,500 ரு ஆகிறது. எனக்கு முழங்கால் வலிக்கும் சேர்ந்து சிகிச்சை என்பதால் 3,000க்கும் மேல் ஆகி விட்டது. என்றாலும் இது சோதனை முயற்சி தானே என வாங்கி வந்தோம். 2 நாட்களிலேயே என் கால்களில் அது வரை இருந்த பாரம், அழுத்தம், இறுக்கம் குறைய ஆரம்பித்தது. ரங்க்ஸே சொல்ல ஆரம்பித்தார். நடையில் வித்தியாசம் தெரிகிறது என. இப்போக் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது வரும் முழங்கால் வலியைத் தவிர காலில் வலி அவ்வளவாக இல்லை! சர்க்கரை அளவும் எனக்கு நார்மலுக்கு வந்து விட்டது(பதினைந்து நாட்களில்) ரங்க்ஸுக்கு அவ்வளவு குறையலை என்றாலும் 175/135 என்ற அளவில் இருக்கிறது. அடுத்த பதினைந்து நாட்களுக்கான மருந்தை வாங்கி வந்து இன்றோடு ஒரு மாதம் முடியப் போகிறது. எனக்கு உடம்பில் முன்னைவிட அசதி, சோர்வு குறைந்திருப்பதை உணர்கிறேன். மனச்சோர்வு வேறே! அது தனி! ஆனால் உடல் சொன்னபடி கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த மருத்துவர் மாதம் ஆறு நாட்கள் மட்டுமே ஶ்ரீரங்கத்தில் இருப்பார். பூர்விகம் பாலக்காடு என்றாலும் அவர் இப்போது இருப்பது திருவானைக்கா என்றாலும் மாதம் 9,10,11 தேதிகள் மற்றும் 24,25,26 தேதிகள் ஶ்ரீரங்கம். மற்ற நாட்கள் தஞ்சை, மதுரை, கோவை போன்ற ஊர்களில் மருத்துவம் பார்க்கச் செல்லுகிறார். பல ஆய்வுகள் செய்திருப்பதாகவும் செய்து வருவதாகவும் சொன்னார். சர்க்கரையைக் குறைக்கும் எண்ணம் உள்ளவர்கள் உங்கள் ஊருக்கு இவர் வந்தால் முயன்று பார்க்கலாம். எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடும் இல்லை. வழக்கம் போல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். அகத்திக்கீரை தவிர்த்து. தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பதாகச் சொன்னார். ஶ்ரீரங்கத்தில் மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் இவரது ஆலோசனை இல்லம் அமைந்துள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இவரது மருந்துகளின் பெயர்கள் எதுவும் நமக்குச் சொல்லுவதில்லை. ப்ரிஸ்க்ரிப்ஷன் அவர்களிடமே இருக்கு! நாம் போய் நம்முடைய பெயர், வரிசை எண் உள்ள அடையாளச் சீட்டைக் கொடுத்தால் மருத்துவர் இல்லாத நேரங்களிலும் கூடத் தேவையான மருந்துகளை அடுத்து அவர் வரும் நாட்கள் வரை சாப்பிடும்படி வாங்கி வைத்துக் கொள்ளலாம்.பெயர்கள் தெரியாததால் என்ன என்ன மருந்துகள் எனக் கொடுக்க முடியவில்லை. ஆனால் எல்லாமே காப்ஸ்யூல் வடிவில். எனக்கு மட்டும் ஒரு சூரணம் கொடுத்திருக்கார் வெந்நீரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடணும்.

இங்கே உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் மட்டும் இவரது பேட்டி வருகிறதாம். இரண்டு, மூன்று நாட்கள் முன்னர் நியூஸ்7 அல்லது நியூஸ் 18 எதிலேனு தெரியலை. அருண் என்னும் அரசு சித்தமருத்துவரும் இதே கருத்தைக் கூறினார். மேலும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் சித்தமருத்துவப்பிரிவு தனியாக இருக்கிறது. யாருக்குத் தேவையோ அவங்க அங்கேயும் சென்று விசாரிக்கலாம். சென்னை அண்ணா நகரில் மாநில அரசு நடத்தும் சித்த மருத்துவ மனையும், தாம்பரத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மருத்துவமனையும் உள்ளது. அங்கேயும் விசாரிக்கலாம். எப்படியோ நாங்க எங்கோ போக நினைச்சு இந்த மருத்துவமனையைக் கண்டு பிடித்தோம். நன்மையாகவே முடிந்தது. இதை முழுவதும் எழுதி சேமிக்கையில் தவறாய் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல! பப்ளிஷ் ஆகி இருக்கு. கருத்துகள் வந்திருக்கானு இனிமேத் தான் பார்க்கணும்.  இப்போத் தான் மெயிலுக்கு எதுவுமே வரதில்லையே! :)))) தகவல்களை முழுவதும் போடுவதற்குள் அது என்னமோ அவசரம் அவசரமா பப்ளிஷ் ஆயிக்குது! :(

61 comments:

  1. நல்ல தகவல் கீசா மேடம். நிறையபேருக்கு உபயோகமா இருக்கும். உங்களுக்கும் குணம் தெரிவது கண்டு மகிழ்ச்சி.

    ஆமாம்... ஏன் கல்யாணத்துக்குப் போனா சுகர் ஏறணும்? அங்க நல்ல சாப்பாடு கிடைப்பதாலேயா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இப்போ மேலதிகத் தகவல்கள் சேர்த்திருப்பதால் மீண்டும் ஒரு முறை படிக்கவும். மற்றபடி கல்யாணத்துக்குப் போனால் மூன்று நாளைக்கும் ச்ச்ச்வீட்டோ ச்வீட்டு தானே! அதான்! :P :P :P

      Delete
    2. இந்த மருத்துவரை டயபடீசுக்கு மட்டும்தான் பார்க்கிறார்களா இல்லை பொதுவான உடல் நலனுக்கும் பார்க்கிறார்களா? நீங்கள் நாடி பிடித்து அவர் பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

      Delete
  2. நல்லதொரு யோசனையை சொல்லி இருக்கிறீர்கள். நிறைய பேருக்குப் பயன்படும். எனக்கும் சேர்த்துத்தான்! அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி! ஸ்ரீரங்கத்தில் இந்த மல்லிகைப்பூ அக்ரஹாரம் எங்கிருக்கிறது? [பெயர் அழகாக இருக்கிறது!]

    ReplyDelete
    Replies
    1. இன்னும் தேவைப்படும் தகவல்களைச் சேர்த்திருக்கேன். மீண்டும் ஒரு முறை படிக்கவும். மல்லிகைப்பூ அக்ரஹாரம், ராகவேந்திரா நகரில் இருந்து வலப்பக்கம் கோயில் செல்லும் வழியில் வரும். அங்கே சிறிது தூரத்திலேயே நடுவில் அமைந்துள்ளது. வலப்பக்கம் உள்ள ஶ்ரீமதி அவென்யூ என்னும் சந்தில் தான் நாங்கள் போக இருந்த ஆயுர்வேத மருத்துவமனை. வாரியர் வைத்தியசாலை. ஆனால் அவர் இதைக் கவனிக்கவே இல்லை. இது முக்கியச்சாலையிலேயே இருந்ததால் கண்ணில் பட்டிருக்கு. ஆகவே இங்கே போய்விட்டார்! எல்லாம் நன்மைக்கே! :)

      Delete
    2. அது ராகவேந்திரபுரம் இல்லையோ? அந்த நீண்ட தெருவில் ராகவேந்திர மடத்திற்கு முந்தைய பகுதி மல்லிகைப்பூ அக்கிரஹாரம் என்றும், ராகவேந்திர மடத்திற்கு அப்பால் இருக்கும் பகுதி ராகவேந்திரபுரம் என்றும் அழைக்கப்படும். ஸ்ரீமதி அவின்யூ? புதிதாக இருக்கிறது.

      Delete
    3. ராகவேந்திர மடம் இருக்கும் தெரு தான் இப்போது ராகவேந்திர நகர் என்கிறார்கள். அந்த மடத்துக்கு எதிரே வலப்பக்கம் பிரியும் தெரு மல்லிகைப்பூ அக்ரகாரம். அங்கேயே சிறிது தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இன்னொரு சிறிய சந்து ஶ்ரீமதி அவென்யூ.

      Delete
  3. சர்க்கரை உள்ளவர்களுக்கு சர்க்கரைச் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ஆம், ஐயா, இயன்றால் மீண்டும் வந்து ஒரு முறை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  4. நல்ல தகவல்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தேவையான மற்றத் தகவல்களையும் சேர்த்திருக்கேன். சிரமம் பார்க்காமல் மீண்டும் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  5. தகவல்கள் பலருக்கும் பலன் அளிக்கட்டும். வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, தேவையானால் மீண்டும் ஒரு முறை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

      Delete
  6. மல்லிப்பூ ஆம் பற்றி சுஜாதா ஒரு கதை எழுதி இருக்கிறார் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில்.

    எப்படியோ இந்த சர்க்கரை வியாதியும் முட்டு வலியும் குணமானால் சரி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, அந்த வழியாய்க் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் பெயரைப் பார்த்து நானும் சுஜாதா அவர்களைத் தான் நினைச்சுப்பேன். கருத்துக்கு நன்றி.

      Delete
  7. ///வழக்கம் போல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். //// mkkum! ;-))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, காய்கள், கனிவர்க்கங்களில்கொய்யா, பப்பாளி, மாதுளை, அன்னாசி போன்றவை சாப்பிடலாமே! எப்போதேனும் ஆப்பிள் ஒரு துண்டம் சாப்பிட்டுக்கலாம். மற்றபடி கீரை வகை வகையா இருக்கு! சாதம், சாம்பார், ரசம், மோர் , ஊறுகாய் நெல்லிக்காய்னா நல்லது! இதெல்லாம் சாப்பிடக் கூடாதுனு சொல்லலையே! ஆகவே வரம் பெற்றவர்களாக்கும்! :))))

      Delete
    2. கட்டுபாடு இல்லைன்னு சொன்னா ஏதோ அர்த்தம் இருக்கு. பழையபடி கட்டுப்பாடான உணவுன்னு சொன்னா அப்புறம் அதுல என்ன விசேஷம்?

      Delete
    3. இப்போப் புரிகிறது. ஆனால் அவர் ஆங்கில மருத்துவத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்தையும் நிறுத்தச் சொல்லலை. இப்போதைக்குச் சர்க்கரை அளவு குறையும்வரை உணவு கொஞ்சம் கவனமாக எடுத்துக்கச் சொல்றார். எனக்கு நார்மல்னு ஆனதுமே அவர் என்னிடம் இன்னும் ஒரு மாதம் பார்ப்பேன். அப்புறம் குறைந்தால் மருந்தை ஒரு வேளை குறைத்துக் கொடுப்பேன். அதற்கப்புறமாக மருந்து ஒரே வேளையாக்குவேன். அதன் பின்னரும் குறைந்தால் ஒரு மாசம் மருந்தி நிறுத்திப் பார்த்த பின்னரே இந்தக் கட்டுப்பாடுகள் அகற்றப்படும்னு சொல்லி இருக்கார். ஆனாலும் நான் என்னமோ ஸ்வீட்டு சாப்பிடத் தான் செய்யறேன். ஒண்ணும் பிரச்னை இல்லை. :) அவ்வப்போது உ.கி. காரட் எல்லாமும் சாப்பிடறோம். எப்போதாவது தானே! அவங்க சாப்பிடச் சொல்ற காய்கள் மட்டும்னு வைச்சுக்கலை! :))))

      Delete
  8. சுகர் வந்திட்டால் கொஞ்சம் அலுப்புக் குடுக்கும்தான் கீசாக்கா... இயற்கை மருந்தை எடுப்பதோடு முக்கியம் டெய்லி வோக் போகோணும்.. எவ்வளவு நடக்கிறீங்களோ அவ்வளவுக்கு கொன்றோலில் வச்சிருக்கலாம்.. சின்னச் சின்ன வேலைகளை நடந்தே செய்து முடிக்கலாம்.. இப்போ மார்கட் போவதுகூட டெய்லி நடந்து போய் வரலாம்.

    நெட்டையும், யூ ரியூப்பையும் அதிகம் நம்பாதீங்க.. உண்மையான மருத்டுவர்கள் எழுதியிருந்தால் ஓகே மற்றும்படி.. கண்ட நிண்டபாட்டுக்கெல்லாம் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள்.. அதை எல்லாம் நம்ப வேண்டாம்.

    மூட்டு வலிகளுக்கு கறி மஞ்சள் நல்ல நிவாரணி என்கிறார்கள். புரோக்கோலியையும் அதிகம் உணவில் சேர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஞானி அதிரடி, புலவி, கிச்சன்செஃப், மருத்துவர் அதிரா, இந்த மருத்துவர் பல்லாண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். 25 வருடமோ, 27 வருடமோ சொன்னார். எங்களுக்குத் தான் முதல்லேயே தெரியலை! மற்றபடி நெட்டில் சொல்லுவதெல்லாம் நான் அதிகம் படிப்பதில்லை.யூ ட்யூபும் நான் பார்ப்பதில்லை! இப்போப் பேலியோ, பேலியோனு சொல்றாங்களே! அதை எழுதினவர் எனக்குப் பனிரண்டு வருஷங்களாய்த் தெரிந்தவர் தான். ஆனால் நான் பேலியோவுக்கெல்லாம் போகலை. இது இயற்கை மருந்துகளும் இல்லை. சித்தமருத்துவம். அதுவும் அகத்தியர் அருளிய சித்த மருத்துவம்! சுவடிகள் எல்லாம் வைச்சிருக்காராம். பல ஆய்வுகள் செய்யறதாகவும் சொன்னார். பார்த்தால் மருத்துவர்னே சொல்ல முடியாது!

      Delete
    2. சிலருக்கு ஆயுள்வேத மருத்துவம் நல்ல பலன் கொடுக்கிறது எனத்தான் சொல்கிறார்கள்.. ஒவ்வொருவரின் உடல் வாசியைப் பொறுத்தே மருந்துகளும் பொருந்தும் போல..

      ///வாங்க ஞானி அதிரடி, புலவி, கிச்சன்செஃப், மருத்துவர் அதிரா,//

      ஹா ஹா ஹா ஹையோ இதை என் செக் படிக்காமல் இருக்கிறாவே இன்னும் கர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. அதிரடி, ஆயுர்வேதம் இன்னும் தாமதமாக வேலை செய்யுதோனு எனக்குத் தோணும். மற்றபடி ஆயுர்வேதமும் பல வருடங்கள் சாப்பிட்டிருக்கேன். இங்கே ச்ரிரங்கத்திலேயே ஒரு பெண் மருத்துவர் என்னோட அமீபயாசிஸ் பிரச்னைக்குக் கொடுத்த கஷாயம் நல்லா வேலை செய்தது. ஆனால் திரும்பிப்போனதும் அந்தப் பெண்ணின் கணவர் அவங்க இனிமேல் வரமாட்டாங்க. உங்களுக்குச் சரியாயிடுச்சு இல்லையா? இனிமேல் மருந்து தேவையில்லைனு சொல்லிட்டார். ஆனால் கொஞ்ச நாட்கள் தான் அது சரியாகி இருந்தது. பின்னர் மறுபடி வந்து விட்டது! :(

      Delete
    4. உங்க செக் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்ச்சில் பிசியாக இருப்பாங்க!

      Delete
    5. எங்கே உங்க செக்கைக் காணலை?

      Delete
  9. >>> நம்ம ரங்க்ஸிடம் ஒரு குணம்.
    எந்தப்பெயரையும் நினைவில் வைச்சுக்க மாட்டார். என் பெயரைத் தவிர!.. <<<

    ஆஹா.. அருமை..

    இது ஒன்று போதுமே ஏழேழ் பிறவிக்கும்!...

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெ, அன்னிக்கு புதன்கிழமைக் கேள்வியிலே யாரோ கேட்டிருந்தாங்களே, அதிரடியோ, ஏஞ்சலோ கௌதமன் சாரை, உங்க மனைவி பெயருக்குப் பதிலா வேறே உங்க சகோதரிகள் பெயரைச் சொன்னதுண்டானு! அப்போவே சொல்ல நினைச்சேன். சொல்ல மறந்து போச்சு! :))) உங்க பெயரை துரை செல்வராஜூ னா ராஜூனு நினைவிருந்தாப்பரவாயில்லை. இல்லை துரைனு நினைப்பு வைச்சுண்டாலும் பரவாயில்லை. புதுசா ஒரு பெயரைக் கொண்டு வருவார்! :))))

      Delete
    2. இன்னிக்கு வங்கியில் பிடிவாதமா மானேஜர் பெயரை "அகிலா"னே சொல்லிட்டு இருந்தார். அவங்க பெயர் கலைவாணி! :)))))

      Delete
  10. எனக்கு கால் பிரச்சனை உண்டு முதல் அடிஎடுத்துவைக்க சிரமம் அதிகமென் காலையே தூக்க கஷ்டப்படுவேன் என் மகனும் நான் தேய்த்து தேய்த்து நடப்பதாகச் சொல்கிறான் இருந்தாலும் தினம் வாக் போகிறேன் தூரம் அதிகமில்லை சுமார் ஒரு கி மீட்டருக்கும் சற்று அதிகம் மற்றபடி வலி ஏதும் இல்லை பொறுத்துப் போகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்னை!

      Delete
  11. //எனக்குக் கடந்த 2,3 வருடங்களாய்த் தான். //

    23 வருடங்களாகத்தான் என்று படித்து விட்டேன். ஹிஹிஹி...

    ReplyDelete
  12. நிலவேம்பு கஷாயம் அதிகம் சாப்பிடக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆண்டிபயாட்டிக்கை வலிநிவாரணி போலச் சாப்பிடலாமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. @Sriram, வலி நிவாரணி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆகையால் வேறே ஏதோ மாத்திரை கொடுத்தார். ஆன்டிபயாடிக்னு தப்பாய்ச் சொல்றேனோ என்னமோ!

      Delete
  13. ஒரு ஜோக் சொல்வார்கள். "நீங்கள் முழங்கால் வலிக்கென்று கொடுத்த மாத்திரை போட்டதும் ரொம்ப நாளாய் இருந்த இருமல் நின்று விட்டது. முழங்கால் வலிக்கான மாத்திரையை இந்தப் பெயரில் தருகிறீர்கள் என்று சொல்லவும்" என்று ஒருவர் அந்தக் கம்பெனிக்கு கடிதம் எழுதினாராம். எப்படியோ... குணம் கிடைத்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. @Sriram, அப்படி எல்லாம் இல்லை. இதில் உண்மையான குணம் தெரிகிறது என்பதாலேயே பகிர்ந்தேன்.

      Delete
  14. உங்கள் பதிவின் பின்னூட்டங்கள் உங்கள் மெயிலுக்கு வர, பதிவை வெளியிட்டதும் கமெண்ட் பாக்சில் ஒரு டிக் போட்டு விடுங்கள். மெயிலுக்கு பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விடும்.

    ReplyDelete
  15. அவர் சென்னைப்பக்கம் வருவதில்லையே?

    ReplyDelete
    Replies
    1. தெரியலை ஶ்ரீராம்.

      Delete
  16. நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  17. அடடே... சாதாரணமாக இந்த நேரத்தில் இணையம், கணினி பக்கம் வரமாட்டீர்களே... எப்படி இன்று?

    ReplyDelete
    Replies
    1. நேத்திக்கு ஞாயித்துக்கிழமை! அதோட குஞ்சுலுவும் லேட்டா வந்தது. அதனால் உட்கார்ந்திருந்தேன். :)

      Delete
  18. தகவலுக்கு அன்பு நன்றி!
    இங்கு தஞ்சையிலும் அகத்தியர் சித்த மருத்துவமனை இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @மனோ சாமிநாதன், அப்படியா? மருத்துவர் பெயர் எம்.என்.கோபாலகிருஷ்ணன். அவ்ர் தானா என நிச்சயம் செய்துக்குங்க!

      Delete
  19. சித்த மருத்துவமனையில் உங்களுக்கு கால்வலி, மூட்டுவலி குணம்ஆகி வருவது மகிழ்ச்சி.
    பக்கவிளைவுகள் இல்லாத வைத்தியம் என்பார்கள்.
    நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, இதோடு ஏற்கெனவே சாப்பிட்டு வரும் ஆங்கில மருந்துகளை நிறுத்தவில்லை. இன்னும் 2 மாதம் போகணும்னு சொல்லி இருக்கார். அதுக்கப்புறமாப் படிப்படியா நிறுத்தணுமாம். நன்றி கருத்திற்கு.

      Delete
  20. சித்தா மருந்துகளில் லெட் இருப்பதால் அதிகம் சாப்பிடக் கூடாது என்கிறார்களே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, காரீயம் இதில் இல்லை. வெள்ளீயம் இருக்கலாம். மற்றபடி நம் சித்தர்கள் சொல்லிவிட்டுப் போனது எப்போவும் தவறாக ஆனதில்லை. முன்னெல்லாம் சொல்லப் போனால் எனக்குப் பத்து வயது வரை நாட்டு வைத்தியம் தான் பார்த்திருக்காங்க! அதுக்கு அப்புறமாத் தான் ஆங்கில மருத்துவம்!

      Delete
  21. அன்பு கீதா மாமிக்கு வணக்கம்.நல்ல தகவல் தந்தீர்கள்.நன்றி.இந்த மருத்துவர் பாலக்காடு வருவாரா? என் அத்தைக்கு முட்டி வலியால் மிக்க அவதிப்படடுகிரார்.பார்க்காத மருத்துவம் இல்லை.வீட்டுக்குள் சுவர் பிடித்தபடி நடக்கிரரார்.வெளியே செல்லும் போது சக்கர நாற்க்காலி.வயது 60 சர்க்க்ரை உண்டு.தயவு செய்து அவர் போன் நம்பர் வாங்கி கொடிக்க முடியுமா.அல்லது முமூ விலாசம் கொடுத்து உதவினால் மிக்க நன்ரி கூறூவேன்.என் அத்தை திருவனந்தபுரத்தில் இருப்பதால் எளிதாக பாலக்காடு செல்ல முடியும்.தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாலக்காட்டுக்கு வருகிறாரா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். அவர் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை மத்தியானம் போல் கொடுக்கிறேன். இன்றும் நாளையும் ஶ்ரீரங்கத்தில் இருப்பார். ஆகவே நீங்க பேசித் தெரிந்து கொள்ளலாம்.

      Delete
    2. டாக்டர் கே. கோபால கிருஷ்ணன், (எம்.என். எனத் தப்பாய்ச் சொல்லி விட்டேன். மன்னிக்கவும்) அகத்தியர் சித்த மூலிகை பரம்பரை வைத்தியசாலை, எண் 23, மல்லிகைப்பூ அக்ரகாரம், ஶ்ரீரங்கம்.
      தொலைபேசி எண் 94884 05820 , 94884 05825.
      உடனே எடுக்கும்படியாக் கிடைத்தது. :)

      Delete
    3. மிக்க நன்றி மாமி.இப்படி அழக்கலாமா என தெரியாது.எங்காத்தில் வயதில் பெரியவர்களை இப்படி கூப்பிட்டு பழகிவிட்டது.நான் போன் நம்பர் அவர்களுக்கு கொடுத்து நீங்கள் உதவியதையும் கூறுகிறேன்.மன்னிப்பெல்லாம் வேண்டாம் மாமி.தவறுவது இயல்புதானே .வயதில் பெரியவர்.மீண்டிம் நன்றி.

      Delete
    4. வாங்க மீரா/(மேரா?) பாலாஜி, எப்படி சௌகரியமோ அப்படி அழையுங்கள். கல்யாணம் ஆன சில நாட்களிலேயே 30 வயசு ஆகி 2, 3 குழந்தை பெற்றவங்கல்லாம் என்னை மாமினே கூப்பிடுவாங்க! :) நீங்க எப்படியும் சின்னவர் தானே! பரவாயில்லை!

      Delete
  22. உபயோகமான தகவல்கள்! நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிலாமகள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கு நன்றி.

      Delete
  23. துளசி: நானும் இனிப்பானவன் தான். நான் ஆயுர்வேத மருத்துவம் தான். முதலில் அலோபதிதான் ஆனால் கொஞ்ச நாள் தான் அப்புறம் ஆயுர்வேதத்திற்கு மாறிவிட்டேன். நன்றாகவே செல்கிறது.

    கீதா: ரங்க்ஸுக்கோ 2இட்லிக்குப்பதிலா 3சாப்பிட்டாலே சர்க்கரை துள்ளிக் குதிக்கும். //

    எனக்கும் அப்படித்தான் இருந்தது கீதாக்கா. வீட்டு வேலை எல்லாம் நானே தான் செய்கிறேன். உடல் உழைப்பு, வாக்கிங்க்...என்று...கூடவே மூலிகை பொடியும்...(சித்த). இப்போது முன்பு போல் இல்லை...என்றாலும், நான் அளவோடுதான்...இதோ மீதியையும் படித்து விட்டு வரேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், நீங்களும் இனிப்பானவரா? நல்லபடியா ஆரம்பத்திலேயே ஆயுர்வேதம் போனது சரியாப் போச்சு!

      தி.கீதா! இப்போவும் அவருக்கு இப்படித் தான் சர்க்கரை எகிறும். அதான் அவருக்கு வருத்தம்! என்றாலும் முன்னைக்கு இப்போது எவ்வளவோ குறைஞ்சிருக்கு.

      Delete
  24. முழுவதும் வாசித்து காலையில் கருத்தும் போட இருந்தப்ப கரன்ட் ஹோகயா....ஹா ஹா எங்க ஏரியா மெயின்டெனன்ஸ் ஷட் டவுன். இப்பத்தான் வந்துச்சு. நல்ல காலம் அந்த கமென்டை வேர்டில் சேவ் செய்திருந்தேன்...

    சித்த மருத்துவத்தில் எப்போதுமே மருந்துகளின் பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் (எங்கள் வீட்டில் என் மகன் எடுத்து வைத்திருக்கும் புத்தகம் போகர் 7000 முழுவதும் வைத்தியக் குறிப்புகள் ஆனால் அதைப் பிரித்துப் படிப்பதில் சரியான அர்த்தம் தெரிந்தால் மட்டுமே சரியான முறைகள் கிடைக்கும். சித்த மருத்துவத்திற்கு நல்ல மருத்துவர் அமைந்தாலே நல்லது. நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் நல்ல தகவல். ரொம்பவெ பயனுள்ள தகவல். மருந்து எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு மூன்று நான்கு மாதம் சென்ற பின் மூன்று மாத ஆவெரெஜ் எடுத்துப்பீங்கல்லில்லய் அதையும் அப்டேட் செய்யுங்கக்கா... எனது ஆயுர்வேத மருத்துவ நண்பர் எப்போதுமே மூன்று மாத ஆவெரெஜ் தான் கேட்பார். சாப்பாட்டிற்கு முன் பின் என்பதைவிட. ஆனால் எது சாப்பிட்டால் கூடுது குறையுது, ப்ளஸ் ஆர் மைனஸ் நம் உடல் உழைப்பு என்பதை வைத்து இதைக் கணக்கிட அது உதவும்.

    சில சமயம் எனக்கு மூன்று இட்லி எடுத்துக் கொண்டால் (பொதுவாகவே என் அளவு இரண்டுதான்...சர்க்கரையினால் அல்ல....) கூட ஏறுவதில்லை அன்று என் உடல் உழைப்பு சரியாக இருந்தால்....சாதம் சாப்பாட்டிற்குப் பின் சமீபத்தில் மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடாமலேயே சும்மா வீட்டில் டெஸ்ட் செய்து பார்த்துக் கொண்டேன். ஒன் டச்சில். 170 காட்டியது. பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மருந்தில்லாமலேயே....அதுவும் முந்தைய தினம் மாம்பழம் கொஞ்சம், பலாப்பழம் கொஞ்சம் சாப்பிட்டும்...(நான் ஸ்வீட் பிடிக்கும் என்றாலும் கூட எடுத்துக் கொள்வதில்லை ஆனால் பழங்கள் மட்டும் விடுவதில்லை...எந்தப் பழமானாலும் சாப்பிடுகிறேன்..) அப்படியும் இத்தனைதான் காட்டியது என்ற போது பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன்..

    கீதா

    ReplyDelete
  25. அரிய தகவல்கள் படித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete