எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 12, 2018

நலம் தானே! நலம் தானே! உடலும் உள்ளமும் நலம் தானே!

2 நாட்களாக ஒரே படுத்தல்! படுத்துக் கொண்டே இருத்தல்னு ஆகிப் போச்சு! :( என்னமோ தெரியலை. எப்போவும் செய்யறாப்போல் தான் உ.கி. குருமா செய்தேன் சப்பாத்திக்கு! ஆனால் சாப்பிடும்போதே கொஞ்சம் அரை மனசு தான். சாப்பிடப் பிடிக்கலை! பாதிக் குருமாவை எறிஞ்சுட்டேன்! என்றாலும் சாப்பிட்டது ஒத்துக்கலை போல! அன்றிரவு படுக்கும்போதே வயிறு கொஞ்சம் பிரச்னை செய்தது. தூங்கி எழுந்தால் சரியாகும்னு நினைச்சேன். அதிகாலை 2 மணியில் இருந்து வயிறு உப்புசம்! வலி! தலைவலி, குமட்டல் இத்யாதி! தலையணையில் சரியாப் படுத்துக்காததால் தலைவலினு நினைத்து சமாதானம் செய்து கொண்டு மறுபடி படுத்தேன். தூக்கம் ஒரு தரம் கலைஞ்சால் கலைஞ்சது தான். வரவே இல்லை!

அப்புறமாக் காலை வழக்கம்போல் எழுந்து வேலைகளைப் பார்த்தேன் காஃபி குடிக்கையில் கூட ஒரு மாதிரியாவே இருந்தது. அதோடு பயங்கரமாப் பசி! மயக்கம்! கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. பிஸ்கட் எடுத்துக் கொண்டு காஃபியைக் குடிச்சேன். வீட்டுவேலைகளைப் பார்க்கையில் மறுபடி மறுபடி வயிற்றில் வலி. அடுத்தடுத்து ஏப்பம். எனக்கு இப்படி எல்லாம் வந்ததில்லை. சரினு ஜீரகம், சோம்பு, இலவங்கம், பட்டை, கிராம்பு, ஏலக்காயைப் பொடித்துப் போட்டுக் கஷாயம் வைத்துக் குடித்தேன். உடனே கிளம்பிக் கொண்டு வந்தது வாந்தி! அடுத்தடுத்து 2,3 முறை எடுத்தபின்னர் கொஞ்சம் சுமாராக இருக்கவே குளித்து அன்றாட சமையல் வேலைகளைப் பார்த்தேன். கரைச்சுக் குடிச்சுக்கலாம்னு மிளகு ரசம் வைச்சேன். ஆனால் சாப்பிட முடியுமானு சந்தேகமாவே இருந்தது. சரி மோர்சாதம் சாப்பிடலாம்னு கொஞ்சம் போல் சாதத்தில் நிறைய மோர் விட்டுக் குடித்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் எல்லாம் வெளியே வந்து விட்டது.  உடனே போய்க் காட்டிவிட்டு மருந்துகள் வாங்கி வந்து எடுத்துண்டாச்சு.

போய்ப் படுத்துட்டேன். மூணு மணிக்கு எழுந்து ராகு கால விளக்கேத்திட்டுக்  கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கலாம்னு நினைச்சா மறுபடி அதே! அதே! கணினியைத் திறந்தவள் போய்ப் படுத்துட்டேன். ஆறு மணிக்குத் தான் சாயங்கால நேரம் படுக்க வேண்டாம்னு எழுந்து  உட்கார்ந்தேன். ஏற்கெனவே இட்லி மாவு இருந்ததால் அதில் ரங்க்ஸுக்கு மட்டும் தோசை வார்க்கலாம்னு முடிவு செய்தேன். அதுக்குள்ளே மறுபடி 2,3 தரம் வாந்தி. உடனே அவர் என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டு அவர் மட்டும் போய்ச் சொல்லி வாந்தி நிற்க மாத்திரை கேட்டு வாங்கி வந்தார். ஹார்லிக்ஸ் குடிச்சுட்டுப் போட்டுக்கலாம். திட உணவு வேண்டாம்னு முடிவு செய்தேன். அவருக்கு தோசை வார்க்கும்போதே கீழே துளசி வந்திருப்பதாகப் பாதுகாவலர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனே அவங்களை வரவேற்கத் தயாரானோம்.

ஒண்ணும் இல்லை கொடுக்க. ஆகவே தோசையை ஆஃபர் பண்ணலாம்னு நினைச்சேன். தித்திப்பு எதுவுமே இல்லையேனு யோசனையா இருந்தது. அவங்க வந்து பார்த்துட்டு எதுவுமே வேணாம், முரளி கடையில் காஃபி குடிச்சுட்டு, பஜ்ஜி, வடை சாப்பிட்டுத் தான் வந்தோம்னு ஃபோட்டோ எல்லாம் காட்டினாங்க. சும்மாவே யாரானும் வேணாம்னு சொன்னால் உபசாரம் பண்ணிக் கொடுக்கத் தெரியாத எனக்கு அன்னைக்கு அவங்க சொன்னதும் சரினு பேசாமல் இருந்துட்டேன். ரங்க்ஸுக்குத் தான் மனசு ஆகலை. சாப்பிடப் பண்ணி வைச்சிருந்த ரிப்பன் பக்கோடா (நாடாத் தேன்குழல்) வை எடுத்துக் கொடுத்தார். அவங்க தொடவே இல்லை. சுமார் ஒரு மணி நேரம் இருந்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க இருக்கும்போதே ஹார்லிக்ஸ் குடிச்சுட்டேன் என்பதால் மாத்திரைகளைப் போட்டுப் படுத்துட்டேன்.

நேத்திக்கும் எழுந்துக்க முடியலை! கொஞ்சம் முடியாமல் தான் இருந்தது. ஆகவே நேத்திக்கும் கணினியைத் திறக்கலை! மொபைல் வழியே முகநூல் மட்டும் பார்த்தேன். துளசி ஃபோட்டோ எல்லாம் போட்டிருக்காங்க! இனி தான் போய்ப்பார்க்கணும். யாரோட பதிவுக்கும் போகலை! இனி தான் போகணும். இன்னிக்கு அமாவாசை என்பதாலும் வங்கி வேலைகள் நான் நேரிலே போய் செய்ய வேண்டி இருந்ததாலும் இன்னிக்கும் இத்தனை நேரம் வர முடியலை. வாந்தி நிற்க நாக்கின் அடியில் வைச்சுக்க ஒரு சின்ன மாத்திரை கொடுத்த பின்னர் தான் நின்னது. ஆனாலும் அந்த மாத்திரையின் கசப்பு! :( இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாளைக்குப் பின்னர் இன்னிக்குத் தான் அன்னத்தைக் கண்ணால் பார்த்தேன். :)

45 comments:

 1. அடக் கடவுளே... அப்படி என்ன திடீரென்று ஆகிவிட்டது? Food poisonஆ? இப்போ சரியாகிவிட்டதா?

  அங்கேயும் ஆளைக் காணோமே என்று நினைத்தேன். பின்னூட்டங்களுக்கும் மறுமொழி இல்லையே என்று தோன்றிற்று.

  துளசி டீச்சர், நெடிய பயணம் தமிழ்நாட்டிலா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ஃபுட் பாய்சன் தான் ஆகி இருக்கணும். இப்போப் பரவாயில்லை. துளசி கடந்த மாதம் கர்நாடகாவில் பயணங்கள் கழித்தார். இப்போத் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கார். இங்கே வந்துட்டு நேத்துக் கிளம்பி இருப்பாங்க! அடுத்து எங்கேனு கேட்டுக்கலை! எப்படியும் சென்னைக்கு வருவாங்களே! அதிலும் அடையாறு அனந்தபத்மநாபனைப் பார்த்ததாத் தெரியலை. ஆகவே சென்னைக்கு வரச்சே கேட்டுப் பாருங்க!

   Delete
  2. நோஓஓஓஓஓஓஓ மீதான் 1ஸ்ட்ட்டூஊஊஊஊஉ இன்று பார்த்து கீசாக்கா பக்கம் ஓபின் ஆக நீண்ட நேரம் எடுத்துது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு இன்று நாள் சரியில்லை:(

   Delete
  3. ஹாஹாஹாஹாஹா ஹிஹிஹிஹி, வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்! :)))))

   Delete
 2. நம் உடம்புக்கு வருத்தம் எப்போ வரும் எப்போ போகும் எனச் சொல்லவே முடியாது.. மிக கவனமாக இருந்தாலும் இப்படி ஆகிவிடுவது நோர்மல்தான்.. டொக்டரிடம் காட்டிட்டிங்கதானே இனிக் கொஞ்சம் பத்திய உணவாக சாப்பிட்டு நோர்மலுக்கு வாங்கோ.

  உடம்புக்கு முடியவில்லை எனில் ஒரு கொமெண்ட் இல் சொன்னால் போதாதோ.. எதுக்கு இப்படி பந்திபந்தியா எழுதி போஸ்ட் போடுறீங்க கர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. @அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))

   Delete
  2. எதுக்கு இப்படி பந்திபந்தியா //

   ஹலோ அதிர்ஸ் கீதாக்கா என்ன பந்தியிலா உக்காந்துருக்காங்க ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. ஹிஹிஹி,தி/கீதா, ஆனாலும் நான் புரிந்து கொண்டேன். பத்தியைத் தான் அதிரடித் தமிழில் "பந்தி"னு சொல்றார்னு! ஏற்கெனவே வயிறு பிரச்னை! இதிலே பந்தியிலே எங்கே உட்காருவது? :))))

   Delete
 3. பாத்துக்கோங்க மா..

  நானும் இதான் நினைத்தேன் முடியாத ப்போ கூட எப்படி இப்படி type பண்றீங்க ன்னு...

  ரெஸ்ட் எடுத்து..மெதுவா வாங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அனுராதா. இப்போது பரவாயில்லை. இரண்டு நாட்களாக உட்கார முடியலையே! இன்னிக்கு உட்கார முடிஞ்சதால் தான் தட்டச்சும் செய்தேன். :)

   Delete
 4. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். என்ன திடீரென்று? துளசி டீச்சருடன் இருந்த புகைப்படத்திலேயே சந்தேகம் வந்தது. மருந்து அதே அகத்தியர் வைத்தியசாலையிலா?

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி ஶ்ரீராம் , எனக்கு எப்போவும் என்னோட சமையல்லே தான் இந்த மாதிரி உடம்பெல்லாம் வரும். குழந்தைங்க கேலி செய்வாங்க! :) அதே போல் என்னோட உ.கி.குருமா எனக்கே ஒத்துக்கலை போல! இங்கே அவர் consultation dates for first week முடிஞ்சு போச்சு. இனிமேல் இந்த மாசம் 24, 25, 26 தேதிக்குத் தான் வருவார். அதனாலே ஆங்கில வைத்தியரிடம் தான் போனோம். இப்போவே ஏற்கெனவே எடுத்துக்கும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கத் தான் சொல்லி இருக்கார். படிப்படியாகத் தான் நிறுத்தணுமாம்.

   Delete
  2. துளசிக்காவுடன் படமா? எங்க போட்டீங்க கீதாக்கா? முகநூலா?

   கீதா

   Delete
  3. ஆமாம், நான் போடலை! துளசி தான் படம் எடுத்தார். அவர் தான் போட்டிருக்கார். அப்போ என்னாலே நிற்கக் கூட முடியலை! :) அவங்க முன் கூட்டியே சொல்லிட்டு வந்திருந்தா புதன்கிழமை வரச் சொல்லி இருக்கலாம். ஃபேஸ்புக் மெசஞ்சரில் மெசேஜ் கொடுத்திருந்திருக்காங்க. நான் கணினியையும் திறக்கலை. மொபைலையும் பார்க்கலை! :)))) சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வந்துட்டு முகத்தைக் காட்டிட்டுப் போயாச்சு! தண்ணி கூடக் குடிக்கலை!

   Delete
 5. ஃபுட் பாய்சன் ஆகி இருக்கலாம்...

  உடம்பை கவனிச்சுக்கோங்கம்மா

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜி. இப்போப் பரவாயில்லை.

   Delete
 6. ரெண்டு நாள் வலைப் பக்கம் வரலே..ன்னா
  என்னெவெல்லாம் நடந்திருக்கு!...

  இதை இப்படியே விடுவதற்கில்லை...

  இன்னைக்கு இரவு வேண்டிக்கப் போறேன்...
  கவலை வேண்டாம்!...

  கருணை கொண்ட தெய்வம் காத்து நிற்கும் என்றும்!...
  வெற்றிவேல்!.. வீரவேல்!...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வேண்டுதலுக்கு மனமார்ந்த நன்றி. மனம் நெகிழ்ந்து போனேன். எப்போவும் காக்க, காக்க, கனகவேல் காக்க! என்று தான் சொல்லிக் கொண்டிருப்பேன். அதை விட்டால் ஶ்ரீராமஜயம்! :) கவலை எல்லாம் இல்லை!

   Delete
 7. உடல் நலம் பாதுகாக்கவும்.
  துளசி மேடம் வீட்டுக்கு வந்தது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. துளசி: உணவில் ஏதோ ஒவ்வாமை என்று நினைக்கிறேன். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  கீதா: அக்கா டேக் கேர். இனி நைட் உகிகு தவிர்த்துப் பாருங்க....பகல் நா வேலை செய்வீங்க நடந்துட்டே இருப்பீங்க இல்லையா அப்படி இருக்கலாமோனு...பார்த்துக்கோங்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், எனக்கு அடிக்கடி இப்படி நேரும். இப்போத் தான் டிசம்பரில் ஆனது. அதன் பின்னர் ஆறுமாதங்கள் ஒண்ணும் இல்லை. இப்போ இப்படி! :))))

   தி/கீதா, உ.கி. நான் பொதுவாக ரொம்பச் சேர்க்க மாட்டேன். எப்போவோ சி.உ.கி. கறி பண்ணுவதோடு சரி. அரைக் கிலோ வாங்கினால் 2,3 மாசம் வரும். இப்போ நாளாச்சே முளைச்சுடப் போகுதுனு சமைச்சேன். ஒரு வேளை முளை உள்ளே வந்திருந்து அதனால் ஒத்துக்கலையோனு கூட நினைச்சேன். :)) முளை வந்த உ.கி. சமைக்கக் கூடாதுனு சொல்றாங்களே!

   Delete
 9. அன்பு மாமிக்கு இப்போ நலமா? எனக்கும் இப்படித்தான் உணவு ஒத்துக்கொள்ளவில்லலை எனில் அந்த உண்வின் கடைசி துனுக்கு வெளியில் வரும் வரை குடலே வெளியில் வருவது போல் வாந்தியும் பிளப்பது போல் தலைவலியும் வரும்.எல்லாம் சரியாக 4 நாட்கள் ஆகும்.கடந்த 25 வருடமாக 2 மாதத்துக்கு ஒரு முறை அனுபவித்து விடுவேன்.இஞ்சி கஷாயமே தீர்வு.ஓமம் சாப்பிட்டு வென்னீர் குடிக்க்வும்.சூடான உண்வை மட்டுமே சாப்பிடவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மீரா பாலாஜி! முகநூலில் இருப்பவரும் நீங்க தானா? ஓமம் சாப்பிட்டு வெந்நீரும் குடிச்சேன். அது எல்லாம் உள்ளே உள்ளதை வெளியே கொண்டு வந்து விட்டது! :) நீங்க சொல்றாப்போல் அந்த உணவின் கடைசித் துணுக்கு வரை வெளியே வந்துவிட்டது. இப்போப் பரவாயில்லை.

   Delete
  2. நானேதான் டால்பின் படத்துடன் இருப்பேன்.வென்னீரே குடிக்கவும்.ஏ.சி யில் அதிக நேரம் இருக்கவேண்டாம்.அனுபவம் கூருகிரேன்.தவராக நினைக்கவேண்டாம்.மாமி.பச்சை நிற
   ம் உள்ள உருளை கி.உபயோகிக்கவேண்டாம்.

   Delete
  3. மீரா பாலாஜி, நாங்க ஏசி எல்லாம் அக்னி நட்சத்திர நாட்களில் கூட இரவு மூன்று மணி நேரம் போட்டுக்கொள்வதோடு சரி! அதுக்கு அப்புறமா மின் விசிறி தான்! பகலில் இங்கே ஏசியே வேண்டாம். அடிக்கிற காத்தில் வண்டியே ஓட்ட முடியறதில்லைனு சொல்லுவார்! எதுக்கு ஏசி எல்லாம்! மின் விசிறி போட்டால் கூடச் சின்னதாகத் தான் வைப்போம். அவர் இதே குளிருது என்பார்! :))))

   Delete
 10. அன்புடையீர்..

  இங்கே இரவு 10.30 மணியளவில்
  தங்களது உடல் நலனுக்காகத்
  தேவாரத் திருப்பதிகம் பாராயணம் செய்யப்பட்டது...

  நலம் பெருகும்...
  தீவினையின் தாக்கம் குறையும்...

  தங்களால் இயலுமெனில்
  திரு அரங்கத்துள் - ஆமை தாங்குவது போல இருக்கும் துளசி மாடத்தை சிறிது நேரம் தியானம் செய்து விட்டு ஒரு குவளை தண்ணீர் அருந்தவும்...

  ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உளமார்ந்த பிரார்த்தனையில் என் உடல் நிலை தேறி வருகிறது. நீங்கள் சொன்னாப்போல் துளசிமாடத்தை மனதில் இருத்திப் பிரார்த்தித்துக் கொண்டேன். தியானமும் செய்தேன். மிக்க நன்றி. நானும் மந்திரமாவது நீறு பாராயணம் செய்தேன். அவரும் சொன்னார்.

   Delete
  2. இப்படி தியானம் செய்தால் உடல் நலம் பெறுமா? நான் அடிக்கடி உடல் நல்ன்குறைவால் கஷ்ட்ப்படுகிரேன்.

   Delete
  3. தியானம் செய்வது மிகவும் நல்லது. இரவில் பத்து நிமிஷம் படுக்கையில் அமர்ந்தே செய்யலாம். காலையும் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்துட்டு தியானம் செய்யலாம்.

   Delete
  4. ok mami i will try .morning not possible night ok. here too much wind .so net connection is going nd comming.

   Delete
  5. நீங்க எங்கே இருக்கீங்கனு தெரியலை. இங்கே ச்ரீரங்கத்திலும் காத்து ஆளையே தள்ளுது. வண்டி ஓட்ட முடியலைனு சொல்றாங்க! :))))) குளு குளு! நேத்திக்குப் பதினோரு மணிக்கே ஏசியை அணைச்சாச்சு. அதுக்கு முன்னால் பனிரண்டு , ஒரு மணி வரை ஓடும்.

   Delete
 11. உங்கள் உடல் பற்றி உங்களுக்குத்தெரிந்திருக்கும் மனதை டைவெர்ட் செய்தால் உபாத்தைகள் குறையலாம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், இருக்கலாம், மனமும் ஒரு காரணி தானே! ஆனால் இப்போ அப்படி ஏதும் இல்லை! :)

   Delete
 12. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
  துளசியுடன் இருந்த படத்தில் நீங்கள் சுரத்தே இல்லாமல் இருந்தீர்கள்.
  சிரிக்கவே இல்லை.
  உடல் நலாம் சரியில்லை அதனால் தான் எங்கள்பளாக் பக்கம் காணவில்லை.
  நான் நீங்கள் ஊருக்கு எங்காவது போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
  உடலுக்குள் இருக்கும் வேண்டாதது வெளியே வந்து விட்டால் சரியாகி விடும். எதற்கும், உப்பும், சர்க்கைரையும் சேர்த்து குடித்து பார்த்தீர்களா?
  என் ராசிதான் நீங்கள் எனக்கும் ஒருவாரமாய் உடம்பு படுத்துகிறது, பல்வலி வந்து பல்லை பிடுங்கியாச்சு, முதுகு, கால்வலி அதற்கு உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.
  ஒய்வு எடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, இப்போ உடம்பு பரவாயில்லை. இன்னிக்குக் காலம்பர ஒன்பது மணியிலிருந்து மின்சார விநியோகம் இல்லை. இப்போத் தான் 3-30 மணிக்கு வந்திருக்கு! அதான் இன்னிக்குக் காலம்பரவந்தப்புறமா வர முடியலை! :)

   உங்கள் உடல் நலமும் மோசமாய்த் தான் இருக்கு நீங்க சொல்வதைப் பார்த்தால். உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஊருக்கு எல்லாம் இப்போது போகவில்லை. மாமனார் ச்ராத்தம் இந்த மாதக் கடைசியில். அதுக்கு அப்புறம் தான்! :)))))

   Delete
 13. இதற்கெல்லாம் காரணம் குருமா என்று முடிவுகட்டிவிடாதீர்கள். பாவம் உ.கி.! ஒரு தப்பும் செய்யாத அ.கி.!

  சிஸ்டத்திலேதான் ஏதோ கோளாறு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், உகி பாவம் தான். ஆனாலும் நான் உ.கியை ஒன்று அல்லது இரண்டு தான் பயன்படுத்துவேன். அதிகம் சாப்பிடறதுனா அது சி.உ.கி. தான். அது இப்போக் கிடைக்கிறதில்லை! சிஸ்டம் சரியில்லை என்பதும் சரியே! :))))))

   Delete
 14. வணக்கம் சகோதரி

  நலமா என கேட்டு விசாரிக்க வந்தேன். ஆனால் தங்களுக்கு உடல் நலமில்லையென, பதிவின் மூலம் அறிந்தேன்.மனதிற்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. தற்சமயம் எப்படி உள்ளீர்கள்? நலம் பெற்று வருகிறீர்களா? உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும். நன்றாக ஓய்வு எடுங்கள். உ. கி சிலசமயத்தில் ஒன்றும் பண்ணாது. சில உ. கி இந்த மாதிரி ஏதாவதை கிளப்பி விட்டு விடும். நானும் இந்த மாதிரி சில சமயங்களில் உ. கி, பருப்பு வகைகளினால் இந்த மாதிரி அவஸ்தையை பட்டதுண்டு. தாங்கள் சீக்கிரம் பரிபூரண சுகமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, குலதெய்வ வழிபாடுகள் நல்லபடியா முடிஞ்சதா? உடம்பெல்லாம் நல்லா இருக்கீங்களா? எனக்கு இப்போப் பரவாயில்லை. உ.கி. முளை வந்திருந்திருக்கும் உள்ளே இருந்திருக்குனு நினைக்கிறேன். முளை வந்தால் சாப்பிடக் கூடாதுனு சொல்வாங்களே!

   Delete
 15. உங்களிடமிருந்து பதிவும் இல்லை, பின்னூட்டங்களும் இல்லை, உடல் நலம் சரியில்லையோ என நினைத்தேன். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். Mother bless!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, இப்போப் பரவாயில்லை. பதிவு போடணும். கொஞ்சம் வேலையும் அதிகமா இருக்கு! அதான் போட முடியலை! சில பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு! :)

   Delete
 16. உங்களுக்கும் அலர்ஜியா !!
  எனக்கும்... என்னோட ஆர்வ அவசர கோளாறால் ஒரே ஒரு குட்டி பூரியால் வந்து போச்ச்சே .மகரந்த அலர்ஜி //ஹே ஃபீவர் மட்டும் சரியாகல்லை .
  பொதுவா முளை விட்ட அப்புறம் பச்சை கலர் வைச்ச உருளையில் சில நேரம் இப்படி ஆகும் . Solanine Poisoning அப்படின்னு சொல்வாங்க இங்கே .பச்சை நிறத்துடன் மற்றும் வேக வச்ச கிழங்கு கசப்பு டேஸ்ட் இருந்தா அது கட்டாயம் இப்படி அலர்ஜி தரும் .
  இப்படி உணவால் அலர்ஜி வரும் நேரம் ஒரு ஸ்ட்ரோங் பிளாக் காஃபி குடிங்க .
  .

  ReplyDelete
  Replies
  1. வாங்க, ஏஞ்சல் கிட்டத்தட்ட ஒரு வாரமா ஆளைக் காணோமே! உடம்பைப் பார்த்துக்குங்க! உருளைக்கிழங்கு பச்சையாக இல்லை. ஆனால் முளை விட ஆரம்பிச்சிருக்குமோனு சந்தேகம். மேலே கரும்புள்ளிகள் காணப்பட்டன! ப்ளாக் காஃபி? நீங்க வேறே! தண்ணியே குமட்டல் எடுக்க ஆரம்பிச்சது! காஃபி எங்கே குடிக்கிறது! :( வயிறு இன்னும் சரியா இல்லை/ சரியா இருக்கு! :)))) இன்னும் கடுமையான கட்டுப்பாடுடன் இருக்கணும்னு நினைக்கிறேன்.

   Delete