எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 21, 2019

உம்மாச்சிங்களைப் பார்க்கலாம் வாங்க!


நேற்றுப் பௌர்ணமி என்பதாலும் தை வெள்ளிக்கிழமைகளில் பரவாக்கரை மாரியம்மன் கோயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதையும் கருத்தில் கொண்டு நேற்றே பரவாக்கரை போய் மாவிளக்குப் போட்டு விட்டு வந்தோம். பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலேயே போட்டாலும் சில சமயங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் புதன், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போடுவது உண்டு. மேலும் ஆவணி மாத ஞாயிறும் தை மாத ஞாயிறும் அம்மனுக்கு உகந்த நாட்களாகச் சொல்லப்படுவது உண்டு. இந்த வாரம் போகலாம் எனில் வேறே நிகழ்ச்சிகள்! அடுத்த வாரம் 3ஆவது வாரம். கூட்டம் அதிகம் இருப்பதோடு மாவிளக்குப் போட இடத்துக்கு வேறே முந்திக்கணும். என்ன தான் சீக்கிரம் போனாலும் வெள்ளிக்கிழமைகளில் பத்தரைக்குள் மாவிளக்குப் போட வேண்டி இருக்கு. ஆனால் பூசாரிக்கு அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு அபிஷேகம் பண்ணிக் கொடுத்தாலும் பின்னர் மறுபடி ஒரு அபிஷேகம் விலாவரியாகச் செய்ய வேண்டும். அது தான் முக்கிய அபிஷேகம். அது பனிரண்டு மணி ஆகி விடும். அத்தனை நேரம் காத்திருந்து விட்டு மாவிளக்குப் போடும்போது கூட்டம் காரணமாக உள்ளே இடமே கிடைப்பதில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து நேற்றே போய்ப் போட்டுவிட்டு வந்தோம். 

முதலில் பொய்யாப்பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை வழக்கம் போல் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்கு வந்தோம். பட்டாசாரியாரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்திருந்தோம். அவரும் வந்து கோயில் கதவைத் திறந்து அர்ச்சனை செய்து கொடுத்தார். கீழே பெருமாள் ரொம்ப நாளைக்கப்புறமாக  நேற்று அனுமதியுடன் எடுத்த படம்.



இந்த ஆஞ்சிக்குத் தான் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே வடைமாலை சார்த்தினோம். குட்டியா இருந்தாலும் கீர்த்தி பெரிது.


இவர் வேணுகோபாலர். கும்பாபிஷேக சமயத்தில் கண்டெடுக்கப்பட்டு இவருக்கெனத் தனி சந்நிதி பெருமாளின் வலப்புறமாய்க் கட்டிப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கும்பாபிஷேகம்


கோயில் வாசலில் ஆட்டுக்குட்டிகள் குளிருக்குச் சுருண்டு உட்கார்ந்திருந்தன. திரும்பி வரச்சே படம் எடுக்கலாம்னா வரும்போது இரண்டைத் தவிர்த்து மற்றவை அதனதன் தாயுடன் சென்று விட்டன. 


மாரியம்மன் கோயிலில் மாவிளக்குப் போட்டு விட்டுக் கிளம்பும் சமயம் அனுமதியுடன் எடுத்த படம். 



இம்முறை கருவிலி கோயில் திறந்து வைக்கச் சொல்லி இருந்தோம். பரம்பரை குருக்கள் காத்திருந்தார். சற்குணேஸ்வரர் சந்நிதியில் படம் எடுக்க முடியலை. கையில் சாமான்கள். பிரகாரம் சுற்றும்போதும் படம் எடுக்க முடியாமல் சாமான்கள். அம்மன் சந்நிதியில் படம் எடுத்தேன் அனுமதியுடன். அம்பாள் நல்ல உயரமாக இருப்பாள். அம்பாள் கல்யாணத்திற்கு முன்னால் சர்வாலங்காரத்துடன் காட்சி கொடுத்த இடம் என்கின்றனர். அதனால் அம்பிகையின் பெயர் சர்வாங்க சுந்தரி.


எல்லாச் சோழ நாட்டுச் சிவன் கோயில்களையும் போல் கருவறைக்கு மேல் மட்டும் விமானம் உள்ள கோயிலாகத் தான் இதுவும் இருந்தது. அனைத்துச் சிவன் கோயில்களின் விமானங்களிலும் ஒற்றுமைகளும் காணப்படும். இந்தக் கோயிலும் விமானம் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறை கும்பாபிஷேஹத்தின் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ராஜகோபுரம். 


சிவன் கோயில்க்குளம். இந்தக்குளத்தின் தென்கரையை ஒட்டியே அக்ரஹாரம். அக்ரஹாரத்தில் குளத்தை ஒட்டித் திரு கிருஷ்ணமூர்த்தியின் மூதாதையர் இருந்திருக்கின்றனர். இந்தக் குளம் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு நடுவே வட நாட்டுப் பாணியில் சிவன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மராமத்து செய்யப்பட்டது. முன்னெல்லாம் சுற்றுச் சுவர் கிடையாது. இந்தக்குளக்கரையில் தான் கணுவன்று கணுப்பிடி வைத்துவிட்டுக் குளித்துவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்வோம். 



இன்னிக்குத் திங்கற பதிவு தான் போடறதுக்கு இருந்தேன். நேற்றுக் கோயிலுக்குப் போனதில் திட்டம் மாறிவிட்டது. 2,3 திங்கற பதிவுகள் போடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. எப்போது நேரம் வரும்னு தெரியலை.

இம்முறையும் ரெட் டாக்சி தான். சேவை நன்றாக இருக்கிறது. இப்படியே தொடரணும். இப்போதைக்குக் கோவை, சேலம், மதுரை, திருச்சியில் தான் இருக்கு. மற்ற ஊர்களில் இருப்பதாய்த் தெரியலை. சென்னையில் முயன்று கொண்டிருப்பதாகக் கேள்வி. குறைந்த கட்டணம் வாங்குகின்றனர். ஆனால்  கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் இதுவே தொடர்ந்தால் நல்லது! அது தான் பெரிய கேள்விக்குறி.

66 comments:

  1. கோவில் தரிசனங்கள் அருமை. ஆஞ்சநேயர், வேணுகோபாலன், பெருமாள், சர்வாங்க சுந்தரி என்று படங்களாகப் போட்டுவிட்டீர்கள். (கொழுக்கட்டை, மாவிளக்கைத்தான் காணோம்)

    ரெட் டாக்சி என்பது பிரைவேட்டா? ஓலா ஊபர் போல? அப்போ அங்க வரும்போது தேவைக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாமா? சார்ஜ்லாம் எழுதலை. நீங்களாகவே குறைந்த கட்டணம் என்று சொல்றீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. கொழுக்கட்டை படம் எடுக்க முடியலை! கையில் சாமான்களோடு நின்னுட்டு இருந்தேன். கைப்பையிலிருந்து மொபைலை எடுத்து எடுக்கணும். முடியலை! மாவிளக்கு எடுக்க வேண்டாம்னு சொல்லிடறாங்க! :( முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு தரம் எடுத்தேன். அந்தப்படம் தான் இருக்கு. திரும்பத் திரும்ப அதையே போடவேண்டாம்னு போடலை!

      Delete
    2. ஃபாஸ்ட் ட்ராக், மாதிரி ரெட் டாக்சியும். இங்கே இப்போது பிரபலம். இதைத் தவிர்த்து பெஸ்ட் ட்ராக்னு ஒண்ணும் இருக்கு! ஆனால் குறைவாகவே தென்படுகிறது. ஓலாவும் உபேரும் எங்களுக்குச் சரி வரதில்லை. ஓலா முதலில் ஒரு ரேட் காட்டும். இறங்கும்போது இரட்டிப்பாகக் காட்டும். உபேர் அவங்களாகவே கான்ஸல் செய்துக்கறாங்க! ஆகவே கூப்பிடறதே இல்லை. ஃபாஸ்ட் ட்ராக் மற்றும் தனியார் ட்ராவல்ஸிலே போனால் ஆகும் பணத்தை விட இதிலே சுமார் ஆயிரம் ரூபாயாவது குறைகிறது. போகும் இடம், காத்திருப்பு நேரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.இவங்க டாரிஃப் எல்லாம் இங்கே போட்டால் விளம்பரம் போய் ஆயிடும் பதிவு! :)))))

      Delete
    3. சரி... அப்படீன்னா அவங்க ரேட் போடாதீங்க. அங்க வரும்போது கேட்டுக்கறேன்.

      Delete
  2. படங்களுடன் பதிவு மிக அருமை.
    நானும் நன்கு தரிசனம் செய்து கொண்டேன்.

    ReplyDelete
  3. குளக்கரை அழகு.

    ReplyDelete
    Replies
    1. சுற்றுச்சுவர் கட்டும் முன்னே இன்னமும் அழகாய் இருந்தாப்போல் எனக்குத் தெரியும். அப்போல்லாம் படம் எடுக்கும்படியான வசதிகள் இல்லை. :(

      Delete
  4. நல்ல தரிசனம் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, நன்றி.

      Delete
  5. /இந்த் ஆஞ்சிக்குத் தான் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே வடைமாலை சார்த்தினோம். குட்டியா இருந்தாலும் கீர்த்தி பெரிது/ மேலும் வடைகளின் எண்ணிக்கையும் குறையும் அல்லவா குழந்தைக்களிடம்தான் உம்மாச்சி என்பார்கள் பரவாயில்லை நீங்களும் குழந்தைதானே சில நேரங்களில் அதிகம் உரிமை எடுகிறேனோ .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, பெண்களூர் திரும்பியாச்சா? பொங்கல் மகன் குடும்பத்தாரோடு சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். பதிவர்கள் சந்திப்பு நடந்ததா?

      வடைகள் எண்ணிக்கை குறையாது ஐயா! இந்த ஆஞ்சிக்கே நான் 108 வடை செய்து மாலை போட்டிருக்கேன். :)))) ஹிஹிஹி, நான் குழந்தை தான்! ஒத்துக்கொண்டதுக்கு நன்னி! அதெல்லாம் பரவாயில்லை. இணையத்தில் பதிவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தான் செய்கின்றனர். :))))

      Delete
    2. குழந்தைக்கே 108 வடையா? எங்களுக்கு ஒன்றும் மிஞ்சாதா?

      Delete
    3. ஹாஹா, உங்களுக்கு ஏதும் கொடுப்பதாக இல்லை நெல்லை! :P

      Delete
    4. இப்படி நெகடிவ் ஆக எழுதுதாதீங்க ப்ளீஸ். 'கேட்டால்தான் கொடுப்பேன்' என்ற மாதிரி எழுதினால் ஓகே.

      Delete
    5. OK OK. :))))) will give you a grand feast! :D

      Delete
    6. எண்ணிக்கை என்று தவறாக எழுதி விட்டேன் சைஸ் என்று இருந்திருக்க வேண்டுமோ

      Delete
  6. சிறப்பான தரிசனம்... நன்றி அம்மா...

    ReplyDelete
  7. உம்மாச்சிகளை நாங்களும் தரிசித்தோம் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  8. ஆ... கொழுக்கட்டை! படத்தில் அதைக் காட்டி இருக்கக் கூடாதோ!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, சில சமயங்களில் கோயிலுக்குச் செல்லும்போது அங்கே படங்கள் எடுக்கணும் என்பதெல்லாம் நினைவில் வரதில்லை என்பதே உண்மை ஸ்ரீராம். நான் பொதுவாகக் காமிரா எடுத்துச் சென்றாலும் பையைக் காரிலேயே விட்டுவிட்டு இறங்குவேன். அதே போல் இப்போதும் மொபைல் வைத்திருந்த கைப்பையைக் காரிலேயே விட்டுட்டேன். அதனால் பிள்ளையார் கோயிலையோ, கொழுக்கட்டைகளையோ படம் எடுக்கலை. வீட்டில் கூடப் படம் எடுக்க அவர் தான் நினைவு ஊட்டுவார். படம் எடுக்கலையா என்று கேட்பார். எப்போவானும் சில குறிப்பிட்ட சமையல்கள், திப்பிசங்கள் தான் நானாக நினைவு வைத்துக்கொண்டு படம் எடுப்பேன். :))))) இப்போவும் எல்லாம் முடிஞ்சதும் தான் கிளம்பறச்சே மாரியம்மன் கோயிலிலும், கருவிலி கோயிலிலும் படம் எடுத்தேன். திடீரென நினைவு வந்து! :))))

      Delete
  9. அனுமதியுடன் அனுமதியுடன் என்று நிறைய படங்கள் எடுத்திருக்கிறீர்கள். நன்றாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், இப்போல்லாம் அனுமதி கேட்டே எடுக்கிறேன், சில சமயங்களில் படம் எடுக்க ஆரம்பிச்சால் வேண்டாம்னு சொல்லிடறாங்க.

      Delete
  10. மாரியம்மன் அழகாய் இருக்கிறார். கோவிலும் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கோயிலும் அழகு, அம்மனும் அழகு, சுற்றுப்புறம் அத்தனை அழகு. அங்கே போனாலே மனதில் ஓர் அமைதி குடி கொள்ளும். இம்முறை அங்கே காய்த்திருந்த இளங்கொட்டை ஒன்று (சின்னப் பறங்கி) காய்த்து 2 நாளே ஆனது பூசாரிகொடுத்தார். அருமை! அந்த மண்ணிற்கே காய்கறிகள் தனிச்சுவையுடன் இருக்கும். அதிலும் கீரை சொல்லவே வேண்டாம். திருவையாறில் ஒரு கிழவி சுமந்து சென்றவற்றில் இருந்து கீரை வாங்கினோம். கட்டு ஆறு ரூபாய். வாழைத்தண்டு 5 ரூபாய்க்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளம். பாதியைப் பக்கத்தில் ஒருத்தருக்குக் கொடுத்தோம். அப்படியும் எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு வருது.

      Delete
  11. ரெட் டாக்சியா? இங்கே சென்னையில் இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன். ஊபர் எல்லாம் நிறைய காசு வாங்க தொடங்கி விட்டார்கள். நேற்று அந்தத்திருமணத்தின் ரிஸப்ஷனுக்குச் செல்லலாம் என்று பார்த்தல் 450, இல் தொடங்கி 500, 600 என்று கட்டணம் உயர பஸ்ஸிலேயே சென்று வந்தார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாங்க எப்போவுமே அதிலும் குறிப்பாய் எனக்கு இந்த ஓலா, உபேர் அத்தனை பிடிக்கலை. இது இப்போதைக்கு நம்பகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் வந்த ஓட்டுநர்களும் சரி, இப்போது வந்த இப்ரஹிமும் சரி நல்ல உதவியாகவும், பொறுப்பாகவும் வண்டி ஓட்டினார்கள். இனிமையான இணக்கமான சுபாவம்.

      Delete
  12. ஆஹா மீண்டும் பயணமா.... மகிழ்ச்சி.

    கிராமத்தில் இருக்கும் கோவில்களுக்கு செல்வது மகிழ்ச்சி தரும்.... இந்த மாதக் கடைசியில் தமிழகம் வரும்போது இப்படி சில கோவில்களுக்குச் செல்லும் ஆசை உண்டு. பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட், இன்னும் இரண்டு இருக்கின்றன. ஒன்று நீங்க வருவதற்குள் முடிஞ்சுடும் என நினைக்கிறேன். நேற்று பானுமதி வந்தப்போ உங்களைப் பற்றி விசாரித்தார். இன்னும் வரவில்லை என்று சொன்னேன். அவங்க என்னிக்குத் திரும்பறாங்கனு கேட்டுக்கலை. முடிஞ்சால் இம்முறை கும்பகோணம் போய் எங்க ஊர்க்கோயில்களையும் முக்கியமாய்க் கோனேரிராஜபுரம் நடராஜரையும் தரிசித்து வாருங்கள். நேற்றுக்கூட பானுமதியிடம் இந்த நடராஜரையும் தில்லை கோவிந்தராஜப்பெருமாளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

      Delete
  13. //உம்மாச்சிங்களைப் பார்க்கலாம் வாங்க!///

    உப்பூடிச் சொல்லிப்போட்டு கீழே பெருமாள் படத்தைப் போட்டிருப்பது ஞாயமோ?:). நானும் ஏதோ கடவுளைத்தான் அப்படி செல்லமாக அழைப்பீங்கபோல என நினைச்சுட்டேன்ன்ன்:).

    அது மஞ்ஞாக்களையோ சொன்னீங்க மே..மே ரொம்ப அழகுக் குட்டிகள்.. பட்டுக் கம்பளம் போல இருக்கு, நான் எனில் ஒருதடவை தூக்காமல் வந்திருக்க மாட்டேன்ன்..

    தூரமா எடுத்திருக்கிறீங்க.. மொபைலில் பார்க்க ஒரு சோடி செருப்புப்போல தெரிஞ்சுது டக்கென.. ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பெருமாள் எனில் உம்மாச்சி இல்லையா என்ன? எல்லோரும் ஒண்ணு தானே? உமா , மஹேஸ்வரர் மட்டுமே உம்மாச்சினு யாரு சொன்னாங்களாம்? எல்லோருமே உம்மாச்சிங்க தான். :)))))

      தூர இருந்து தான் குட்டிங்களை எடுக்கும்படி இருந்தது. கிட்டேப்போனால் எழுந்து ஓடுதுங்க. ரொம்பச் சின்னக்குட்டிங்க இல்லையா? அதுங்களுக்கு எப்படித் தெரியும் நான் ஓர் ரசிகை என! :))))

      Delete
  14. ஆஞ்சிப்பிள்ளை வெற்றிலை மாலையுடன் இருக்கிறார்ர்.. வடைமாலை எங்கே?:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது..:).. மாவிளக்குப் படம் எங்கே...?:)) ஆதாரத்துடன் சொன்னால்தானே மீ நம்புவேனாக்கும்:).

    ReplyDelete
    Replies
    1. வடைமாலை நேத்திக்கு நான் போடலை அதிரடி, ஆனாலும் செய்யும்போது நானே தான் செய்கிறேன். இஃகி, இஃகி. இப்போவும் 31 கொழுக்கட்டை, நெய்யில் பொரித்து, மாவிளக்கு மாவு ஊற வைச்சு மிக்சியில் போட்டுப் பொடித்து எல்லாமும் நானே தான் செய்துக்குவேன். இங்கே யார் இருக்காங்க துணைக்கு? இருந்தாலும் நம் வேலையை நாம் தானே பார்த்துக்கணும். இதுக்குச் செய்யும் அளவுக்கு உடம்பில் வலுவை அந்த மாரியம்மன் கொடுப்பாள். கொடுக்கிறாள். கொடுத்திருக்காள். அது போதுமே!

      Delete
  15. அதுசரி 1008 வடை, மாவிளக்கு எல்லாம் நீங்க தனியே செய்தீங்களோ கீசாக்கா?.

    சர்வாங்க சுந்தரி அம்மாள் எழுந்து நிற்கிறா அழகாக காட்சி தருகிறா.

    ReplyDelete
    Replies
    1. 1008 வடை இல்லை அதிரடி. 108 வடை! நானே தான் செய்வது வழக்கம். என்ன, காலம்பர கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்கணும். வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுப் பின்னர் குளித்துக் காலை உணவு எடுத்துக்காமல் ஆரம்பிச்சு இதை எல்லாம் செய்து முடித்துவிட்டுப் பத்து மணி போல் கஞ்சி குடிச்சுப்பேன். சர்வாங்க சுந்தரி நின்ற திருக்கோலம் தான். அழகான அம்பிகை!

      Delete
  16. அதுசரி 1008 வடை, மாவிளக்கு எல்லாம் நீங்க தனியே செய்தீங்களோ கீசாக்கா?.

    சர்வாங்க சுந்தரி அம்மாள் எழுந்து நிற்கிறா அழகாக காட்சி தருகிறா.

    ReplyDelete
  17. அந்த கோபுரத்துக்கு முன்னால் தனியே கட்டிடம் கட்டி இருப்பது நந்திக்கோ? அப்படி வைத்து எங்கேயும் பார்த்ததில்லை தனியே...

    வாழைமரங்கள் இருப்பது கோயிலுக்கு சொந்தமான பூங்காவனமோ?.. குளம் நிரம்பி அழகாக இருக்கிறதே.. ஆனா இப்போ குளிக்கக்கூடியதுபோல தெரியவில்லை தண்ணியைப் பார்த்தால்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதிரடி, நந்தி இங்கே மூலஸ்தானத்தில் சிறிய நந்தி காணப்படுவார். இவர் கோயிலுகு வெளியே பல்லாண்டுகளாகக் காணப்படுகிறார். முன்னே கோயில் திருப்பணி நடக்கும் முன்னர் இருந்தே இப்படித் தான் மண்டபத்தில் இருக்கார். ஊரில் யாருக்கானும் மாடு கறக்கலைனாலோ, மாடுகளுக்கு நோய் வந்தாலோ இவரைத் தான் வேண்டிப்பாங்க என நம்ம ரங்க்ஸ் சொல்லுகிறார்.

      Delete
    2. கோயிலுக்கு உள்ளேயும் பிரகாரங்களில் சுற்றி நந்தவனம் அமைத்துள்ளார்கள். வெளியேயும் தென்னை, வாழைத்தோப்புகள் உள்ளன அதிரடி. நிதானமாகப் போனால் தான் எல்லாவற்றையும் படம் பிடிக்கலாம். நாம் தான் காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்டு போறோமே! :( குளத்துத் தண்ணீர் நாங்க இருந்தப்போக் குளிச்சிருக்கோம். குடிக்கக் கோயில் கிணற்றுத் தண்ணீர் கொண்டு போவோம். தண்ணீர் நன்றாக இருக்கும். இப்போக் கிணறு தூர்ந்து விட்டது. :(

      Delete
  18. கீசாக்கா, கீழே ஒரு லிங் போடுகிறேன், அதில் பத்துநிமிடத்திலிருந்து மட்டும் பாருங்கோ.. காவேரி திருமண மஹால் திருவையாறு என வருகுது... அப்போ போன் பேசும்போது, மரங்களுக்குப் பின்னால் காவேரி ஓடுது... இதில் அவர் “அம்மா மண்டபத்துக்கு”.. வாங்கோ பேச என அழைக்கிறார்.. நான் உடனே உசாராகி.. ஆவ்வ்வ்வ் கீசாக்கா சொன்ன அம்மா மண்டபம்..என, அதைப்பார்த்தால், அதே நீங்க படம் போட்ட படிக்கட்டுக்கள்.. ஆண்டாள் ஆனைப்பிள்ளை இருக்கிறாவோ எனப் பார்த்தேன் இல்லை... ஆனா இது திருவையாறாமே.. நீங்க சொன்னது ஸ்ரீரங்கமெல்லோ.. இதுதான் அதுவா.. இல்லை ஒவ்வொரு ஊரிலும் அம்மா மண்டபம் இருக்கோ.

    நான் எந்த ட்றாமாக்களும் பார்ப்பதில்லை, ஆனா இதை அந்த காவேரியைப் பார்ப்பதற்காகவே பார்க்க தொடங்கினேன்.. இதன் ஆரம்ப எபிசோட் களில் காவேரி ஆற்றில் நல்ல வெள்ளை மணல், பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள்.. பின்பு வெள்ளம் வந்துது .. இப்போ முட்டி வழியுது.. எப்பவும் இந்தக் காவேரிக் கரையிலேயே வீடியோ எடுப்பார்கள்.. பார்க்க ஆசையா இருக்கும்...

    ஆனா டெய்லி பார்க்கோணுமெண்டில்லை.. நான் 10 நாட்களுக்கு ஒருக்கால்.. ஒரு கிழமைக்கு ஒருக்கால் பார்ப்பேன்ன்.. விட்ட இடத்திலேயே நிற்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா..

    https://www.youtube.com/watch?v=-45M1-keY4U

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு ஆர்வம் அதிரா... எனக்கும் சில சமயம் இதுமாதிரி ஆர்வங்கள் வருவதுண்டு!

      Delete
    2. அதிரடி, இப்போத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியல் தானே! அதில் திருவையாறு, கல்லணை சுற்றுவட்டாரங்கள் வருகின்றன. ஏதோ ஒரே ஒரு காட்சியில் அம்மாமண்டபம்னு சொன்னாங்க. ஆனால் அம்மாமண்டபம் வரலை. ஆண்டாள் கோயில் யானைக் கொட்டடியில் தான் இருப்பாள். இங்கே அம்மாமண்டபத்தில் இருந்தால் அது யாரோ ஒருத்தரின் வளர்ப்பு யானை. தினமும் அம்மாமண்டபம் வந்துட்டுக் கலெக்ஷன் பண்ணி உரிமையாளருக்குக் கொடுக்கும். நாங்க போனால் வாழைப்பழம் சீப்பாக எடுத்துச் சென்று கொடுப்போம். தேங்காயும் கொடுப்போம்.

      Delete
    3. எனக்கு ஶ்ரீராம் நதிகள் ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த காவேரி, கங்கை எல்லாம் பெயருக்காகவே பிடிக்கும்... அத்தோடு கீசாக்காவின் அம்மா மண்டபமும் வரவே... ஒரே ஆர்வமாகிட்டுது.

      கீசாக்கா அவர்கள் நின்று பேசும் படிக்கட்டுக்கள் பாருங்கோ அது அம்மா மண்டப படிக்கட்டுக்கள் தச்னே... இது உங்கட இடம் இல்லைத்தானே?

      Delete
    4. அமுதசுரபி அதிரடி, இது அம்மாமண்டபமே இல்லை. திருவையாறுக்கும் கல்லணைக்கும் நடுவே ஓர் இடம். அநேகமாய்த் திருவையாறாக இருக்கலாம். அதோடு இப்போக் காவிரியில் நீர் இல்லை. திட்டுக்கள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஆகவே இவ்வளவு நீர் ஓடுவதால் இந்தக் காட்சியை முன்னரே எடுத்திருப்பாங்களோனு நினைக்கிறேன். சுந்தரராஜன் (முன்னாள் இயக்குநர்) நடிப்பு இதில் நன்றாகவே இருக்கிறது. இவரும் காமெடியில் கலக்குவார். திருமுருகனும் நடிக்கிறார். ஆனால் எல்லா சீரியல்களிலும் அவர் மட்டுமே நல்லவர்; வல்லவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத்வர்! :) இஃகி, இஃகி!

      Delete
  19. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் பையர் வந்திருக்கும் போது முறைப்படி தாங்கள் செல்லும் இந்த கோவில்களுக்கு செல்ல முடியவில்லை என குறைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். மறுபடியும் அனைத்து இடங்களுக்கும் முறையாக,
    நலமாக தங்களை பயணிக்க வைத்த ஆண்டவனுக்கு நன்றி. தங்கள் வலிகள் எல்லாம் பூரண குணமாகி நலமுடன் உள்ளீர்களா?

    இந்த தடவை எடுத்த எல்லா ஸ்வாமி போட்டோக்களும் மிக அருமை. மிகவும் அருமையாக சென்றவிடங்களைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளீர்கள். நாங்களும் உங்களுடன் வந்திருந்து தரிசனம் செய்த உணர்வை தங்கள் பதிவு தந்தது. உயரமான சர்வாங்க சுந்தரி அம்பாளின் படம் உண்மையிலேயே தெய்வ தரிசனம் கிடைத்த ஆனந்தத்தை தந்தது. குளக்கரை படமும் மிகவும் அழகாக உள்ளது. ராஜகோபுரம் தரிசனம் கண்டேன். பதிவு அருமை. பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நடுவில் கொஞ்ச நாட்களாக வலைப்பக்கம் என்னால் வர இயலவில்லை. என்னை காணாது என் தளம் தேடி வந்து நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் பழைய பதிவுகளையும் ஒவ்வொன்றாக மிகவும் ஸ்வாரஸ்யமாக படித்து வருகிறேன். விரைவில் கருத்திடுகிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பையர் வந்திருந்தப்போக் கருவிலி கோயிலில் தான் தரிசனம் கிட்டவில்லை. அது கூட நான் கீழே விழாமல் நிதானத்தில் இருந்திருந்தால் முன்னாலேயே சொல்லி இருந்திருப்பேன். கொஞ்சம் சீக்கிரமாகப் போயிருக்கலாம். இம்முறையும் முன்கூட்டித் தொலைபேசித் தெரிவித்து விட்டோம். ஆகவே பரம்பரை குருக்கள் காத்திருந்தார். நியமிக்கப்பட்ட குருக்கள் ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருந்தார்.

      Delete
    2. நிதானமாக நேரம் கிடைக்கும்போது படிங்க கமலா, அவசரம் இல்லை. எனக்கும் வீட்டில் வேலை இருந்தால் அதை முடித்த பின்னரே இணையம். பெரும்பாலும் மதியம் தான் அதிக நேரம் உட்காருவேன். என்றாவது காலை நேரம் கிடைக்கும்.

      Delete
  20. நல்ல தரிசனம் ஆச்சு. பெருமாள், அம்மன். ,ஆஞ்சி. அனைவரின் படங்களும் வெகு. அழகு. இதே. போல் எந்நாளும். தெய்வ தரிசனம். கிடைக்க வேண்டும்.கீதா மா. குளம் ரொம்ப அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  21. இந்தத் தடவை அந்தப் பிள்ளையார் சிலை (கோவில்ல) மிஸ்ஸிங்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பிரகாரம் சுற்றும்போது கையில் அம்மனுக்குக் கொடுக்கவேண்டிய பொருட்கள்! கைப்பையில் இருந்து மொபைலை எடுத்துப் படம் பிடிக்கணும். குருக்கள் முன்னால் போய்விட்டார். நம்மவரும் முன்னால் போக நான் மெதுவாகத் தனியாகப் போனதால் படம் பிடிக்க நினைத்தும் முடியாமல் போனது. அதனால் என்ன? இன்னொரு முறை போவேனே! :) அப்போ எடுத்தால் போயிற்று.

      Delete
  22. ஆவணி மாத ஞாயிறும் தை மாத ஞாயிறும்//

    ஓ ஆவணி ஞாயிறு எங்கள் ஊரில் நாகராஜாருக்கு விசேஷம்...அப்புறம் ஆடி வெள்ளி செவ்வாய், தை வெள்ளி இவை அம்பாளுக்கு என்றுதான் அறிந்திருந்தேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகச் செவ்வாய், வெள்ளி அம்பாளுக்கு உரியது எனச் சொன்னாலும் ஞாயிற்றுக்கிழமைகள் மாரியம்மனுக்குச் சிறப்பித்துச் சொல்கின்றனர் தி/கீதா. முந்தாநாள் பானுமதி வந்தப்போ உங்களைப் பத்திப் பேச்சு! :))))

      Delete
  23. அக்கா எல்லா உம்மாச்சிகளும் சூப்பரா இருக்காங்க. ஆஞ்சு மூர்த்தி சிறிது கீர்த்தியில் பெரியவர்! ஆமாம் ஆஞ்சு எப்போதுமெ கீர்த்தியில் பெரியவர்தான்....ரொம்பப் பிடிக்கும்.

    வெத்தலை மாலை ரொம்ப அழகா இருக்கு அக்கா.

    ஆஞ்சு என்றாலே வடை கேட்கத் தோனும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இம்முறை ஆஞ்சிக்கு வடைமாலை சார்த்தலை தி/கீதா. வெற்றிலை மாலை கூட வேறே யாரோ போட்டது.

      Delete
  24. அம்மன் சூப்பர்.

    குளம் ரொம்ப அழகா இருக்கே அக்கா. எங்கள் ஊர் குளம் நினைவு வந்தது. ஆனால் கனு எல்லாம் குளத்தில் படிக்கட்டில் வைத்ததில்லை. நாங்கள் ஆற்றங்கரையில் வைத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வருவது உண்டு. சில சமயம் வீட்டில் செய்து விட்டு சாப்பாடு மட்டும் அங்கு சென்று சாப்பிடுவது...

    பிள்ளையாரும் செம. நம்ம தோஸ்த் ஆச்சே...

    மாவிளக்கு மற்றும் கொழுக்கட்டை எங்கே?!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் இருந்தப்போ எல்லாம் கொல்லைக்கிணற்றடி அல்லது மொட்டை மாடியில் வைப்போம். நாலு குடித்தனங்களும் சேர்ந்து ஒரே கூட்டமாக இருக்கும். அந்த ஜாலி எல்லாம் இப்போ வராது. போன வருஷம் மாமியார் வருஷாப்திகம் என ஓர்ப்படி, நாத்தனார்கள் வந்திருந்தனர். அதற்கு முந்தைய வருஷம் அம்பேரிக்காவில் மாட்டுப்பெண்ணோடு வைத்தேன். இந்த வருஷம் தன்னந்தனி. நல்லவேளையா இன்னொரு குடித்தன மாமி அங்கே வைத்துக் கொண்டிருந்தார். :)

      Delete
  25. ஆட்டுக்குட்டிகள் அழகா இருக்கு...சுருண்டு படுத்துக் கொண்டு....

    சிவன் கோயிலுக்குப் போகும் அந்த நீண்ட பாதை ரொம்ப அழகா இருக்கு அக்கா...கோபுரம் அழகா இருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த கோபுரம், நந்தி எல்லாம் ஏற்கெனவே பகிர்ந்திருக்கேன் தி/கீதா. நீங்க அப்போல்லாம் நம்ம பிரண்டை இல்லையா! அதான் தெரியலை! இஃகி, இஃகி. உங்க அண்ணார் நெல்லையைக் கேளுங்க, கரெக்டாச் சொல்லுவார் எத்தனாம் தரம்னு! :P :))))))

      Delete
  26. ஆட்டுக்குட்டிப் படம் லாங்க் ஷாட் போல! ரொம்பச் சின்னதா இருக்குங்க...குட்டிகள் ரொம்ப அழகா இருக்கும் எழுந்து நின்னுருந்தா இன்னும் தெளிவா வந்திருக்குமோ...முதலில் வேறு ஏதோன்னு நினைச்சுட்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஒண்ணும் லாங் ஷாட்டெல்லாம் இல்லை. அந்தக்குட்டிங்க ரொம்பவே சின்னதுங்க! ஒரு வாரம் தான் ஆகுதுனு சொன்னாங்க! ரொம்பப் பயப்படுதுங்க! அதனால் ஜாஸ்தி கிட்டே போகலை!

      Delete
  27. அன்று பையருடன் சென்ற போது தரிசிக்க முடியாமல் போனதே அக்கா நீங்கள் கீழே விழுந்து என்று...அப்படி விட்டதை இப்ப தரிசனம்க் செய்தது...ப்ளஸ் மாவிளக்கும் ஏற்றியது என்று நல்லபடியாக முடிந்ததே. மகிழ்ச்சிதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாங்க எப்படியும் பார்க்க முடியும். பையருக்குத் தான் வருத்தம் கீதா! பார்க்க முடியலைனு. அன்னிக்கு என்னமோ அப்படி ஆயிருக்கு! :(

      Delete