எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 19, 2019

தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!

உ.வே.சா க்கான பட முடிவு

அப்படிச் சொல்லலாமா?

பாலவனத்தம் ஜமீன்தாராக இருந்தவரும், தமிழன்பு மிக்கவரும், இப்போது மதுரையிலுள்ள தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகருமாகிய ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் ஒருமுறை தம் பரிவாரங்களுடன் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்கள். அவருடைய அன்பரும் ஸேது சம்ஸ்தானத்துச் சங்கீத வித்துவானுமாகிய பூச்சி ஐயங்காரென்று வழங்கும் ஸ்ரீநிவாஸ ஐயங்காரும் அப்போது அவருடன் வந்திருந்தார். ஐயங்கார் அக்காலத்தில் சிறு பிராயத்தினர்; பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடத்திலும் மகாவைத்தியநாதையரிடத்திலும் அவர் இசைப் பயிற்சி பெற்றவர்; அவர் முன்னுக்கு வந்து புகழடைய வேண்டுமென்ற விருப்பம் பாண்டித்துரைத் தேவருக்கு மிகுதியாக இருந்தது. அதனால் கும்பகோணத்திலிருந்து திரும்புகையில் அங்கிருந்த அன்பர்களிடம், "இவரைப் பிரகாசப்படுத்தவேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் இராமநாதபுரம் சென்றார். ஸ்ரீநிவாசையங்கார் மட்டும் கும்பகோணத்தில் தங்கினார்.


அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ ஸாது சேஷையர் முதலிய பல கனவான்கள் சேர்ந்து ஸ்ரீநிவாசையங்காருடைய சங்கீதக் கச்சேரி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தனர். கச்சேரி அந்நகரத்துள்ள "போர்ட்டர் டவுன் ஹாலில்" நடைபெற்றது. நகரத்திலிருந்த கனவான்களும், உத்தியோகஸ்தர்களும், சங்கீத வித்துவான்களும், வேறு பலரும் வந்திருந்தார்கள். கூட்டம் மிகுதியாக இருந்தது; அம்மண்டபம் முழுவதும் எள்ளிட இடமில்லை.


ஸ்ரீநிவாசையங்கார் மிகவும் அருமையாக அன்று பாடினார். திருக்கோடிகாவல் கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் அந்தக் கச்சேரியில் பிடில் முதலியன வாசித்துச் சிறப்பித்தனர். சங்கீத ரஸிகர்கள் பலர் நிறைந்த அந்தப் பெரிய நகரத்துக்கேற்றபடி ஸ்ரீநிவாச ஐயங்காருடைய பாட்டு அமைந்திருந்தது. அவருக்கு அன்று ஒரு தனி ஊக்கம் உண்டாயிற்று. கச்சேரிக்கு வந்திருந்த யாவரும் ஐயங்காருடைய கானாமிர்தக் கடலில் மூழ்கித் தம்மையே மறந்திருந்தனர். பலர் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு அவரை வருவித்துப் பாடச் செய்யவேண்டுமென்று அப்போது தீர்மானித்தனர்.


கச்சேரி முடிவடைந்த பிறகு அவ்வித்துவானைப்பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டுமென்று ஸாது சேஷையர் என்னிடம் சொன்னார். அவரைப் பற்றிப் பின்வருமாறு பேசினேன்:

"ஆறு சுவைகளும் நிரம்பிய விருந்துணவை உண்டுவிட்டு அந்த உணவைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்யவேண்டுமென்றால் அது முடியுமா? அதுபோல ஸீநிவாசையங்காரளித்த சங்கீத விருந்தை நுகர்ந்து எல்லாம் மறந்திருக்கும் இந்த நிலையில் பேசுவதற்கு எப்படி முடியும்? என்னைப் போலவே எல்லோரும் இருக்கிறீர்களென்பது எனக்குத் தெரியும். சங்கீதத்திற் பெயர் பெற்ற சோழநாட்டிற் பரம்பரையாகச் சங்கீத வித்துவான்கள் வாழ்ந்துவரும் இந்த நகரத்தில், பாண்டி நாட்டிலிருந்து ஒரு வித்துவான் வந்து எல்லோரையும் மயக்கி விட்டாரென்பதை நினைக்கையில் எனக்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. இந்தச் சிறு பிராயத்திலேயே இவ்வளவு திறமையோடு விளங்கும் இவர் இன்னும் சிலகாலத்தில் நம்முடைய நாட்டிலுள்ள யாவருடைய உள்ளத்தையும் கவரும் ஆற்றலுடையவராவாரென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்தில் முன்பு த்ஸெளகம் ஸ்ரீநிவாசையங்காரென்று ஒரு பழைய சங்கீத வித்துவான் இருந்தார். அவர் தஞ்சாவூரிலிருந்த சிவாஜி மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். இந்நகரில் சக்கரபாணிப்பெருமாள் ஸந்நிதியில் அவ்வரசர் கட்டளைப்படி இருந்து பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார். அவரை யாவரும் த்ஸெளகம் சீனுவையங்காரென்றே வழங்குவார்கள். இந்த நகரத்தில் வேறொரு ஸ்ரீநிவாசையங்கார் வந்து எல்லோருக்கும் சங்கீதத் தேனைப் புகட்டிப் புகழ்பெறப் போகிறாரென்பதை நினைந்து அவருடைய இயற்பெயராகிய ஸ்ரீநிவாசையங்காரென்பது சீனுவையங்காரென்று முன்பே குறைந்துவிட்டது போலும்" என்று பேசிப் பாராட்டினேன்; அப்பொழுது புதிதாக இயற்றிய பாடலொன்றையும் சொன்னேன். பிறகு ஸ்ரீநிவாசையங்கார் தக்க சம்மானம் பெற்று ஊர் போய்ச் சேர்ந்தார்.


கும்பகோணத்தில் அக்காலத்தில் பக்தபுரி அக்ரஹாரத்தில் கோபாலையரென்ற ஒரு தமிழ் வக்கீல் இருந்தார். அவர் தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து புகழ்பெற்ற பல்லவி கோபாலையருடைய பேரர். அவர் தம்முடைய பாட்டனார் பெற்ற சர்வமானியங்களை வைத்துக் கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார். அவருக்குச் சங்கீதத்திலும் நல்ல பழக்கம் உண்டு. பல பழைய வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்களும் மற்ற உருப்படிகளும் அவருக்கு ஆயிரக்கணக்காகப் பாடம். பல்லவி கோபாலையருடைய சாகித்தியங்களையும், த்ஸெளகம் சீனுவையங்காருடைய கீர்த்தனங்களையும் அவர் அடிக்கடி பாடிக்கொண்டேயிருப்பார்; அவ்வூருக்கு வரும் சங்கீத வித்துவான்களெல்லோரும் அவர் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசியிருந்துவிட்டுச் செல்வார்கள்; அவரிடமிருந்து சில கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டும், தமக்குத் தெரிந்த கீர்த்தனங்களிற் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டும் போவார்கள்.


பூச்சி ஐயங்கார் கும்பகோணத்திற்கு வந்த காலத்தில் முற்கூறிய கோபாலையருக்குப் பிராயம் ஏறக்குறைய எழுபதுக்கு மேல் இருக்கும். ஐயங்கார் அவரைப் போய்ப் பார்க்கவில்லை. அவரும் கச்சேரிக்கு வரவில்லை.


பூச்சி ஐயங்காரது கச்சேரி நடந்த மறுநாள் யாரோ ஒருவர் கோபாலையரிடம் சென்று, "த்ஸெளகம் சீனுவையங்கார் பெயர் இவருடைய பெருமையை நோக்கிக் குறைந்துவிட்டது" என்று நான் பேசினதைச் சொல்லிவிட்டனர். தம்மிடம் ஐயங்கார் வாராமையால் இயல்பாக அவருக்கு இருந்த கோபத் தீ பின்னும் மூண்டெழுந்தது. "அப்படியா சமாசாரம்! விட்டேனா பார் அந்தப் பிள்ளையாண்டானை!" என்று சொல்லிக் கைத்தடியை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். அவருடைய உடலில் முதுமையினால் இருந்த நடுக்கம் அப்பொழுதுண்டான கோபத்தாற் பின்னும் அதிகமாயிற்று; கை நடுங்கக் கால் தள்ளாடக் கோபம் தம்மைச் செலுத்த வீதிவழியே வந்தார்; அங்கவஸ்திரம் விழுந்து கீழே புரண்டது. வரும்போதே, "காலம் கலிகாலமாய்விட்டது. வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிடுவதா?" என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவருடைய வேகத்தையும் கோபநிலையையும் கண்ட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். "யாரையோ தன் கைத்தடியால் அடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறார் இவர்" என்று யாவரும் எண்ணினர்.


பக்தபுரி அக்கிரகாரத்துக்கு அடுத்ததாகிய ஸஹாஜி நாயகர் தெருவின் இரண்டாவது வீட்டில் நான் வசித்து வந்தேன். கோபாலையர் என் வீட்டை நோக்கி வந்தார். அப்பொழுது காலையில் மணி 9 இருக்கும். நான் காலேஜுக்குப் போகவேண்டியவனாகையால் வழக்கப்படி வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தேன். கோபாலையர் என் வீட்டில் நுழைந்தார். உள்ளே என் சிறிய தந்தையார் இருந்தார். கோபாலையருக்கு அப்பொழுது கண்பார்வை குறைந்திருந்தது. ஆகையால் என் சிறிய தந்தையாரருகில் வந்து அவரை மேலுங்கீழும் பார்த்து இன்னாரென்று தெரிந்து கொண்டு மிக்க ஆத்திரத்தோடு, "உங்கள் பிள்ளையாண்டான் இருக்கிறாரா?" என்று இரைந்து கேட்டார். அவர் கேட்ட குரல் என் காதில் விழுந்தது. அவர் என் பேச்சினாற் கோபங்கொண்டு வந்திருக்கிறாரென்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். நனைந்த ஆடையுடனே உள்ளே ஓடி வந்து கோபாலையரிடம், "க்ஷமிக்கவேண்டும்! க்ஷமிக்க வேண்டும்!!" என்று பணிவாகச் சொன்னேன்.


"க்ஷமிக்கவா? உங்களுடைய தகப்பனார் இருந்தால் நீங்கள் பேசினதைக் கேட்டுச் சகிப்பாரா? நீங்கள் அப்படிச் சொல்லலாமா? த்ஸெளகம் சீனுவையங்கார் பெருமை உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இருந்தால் இப்பொழுது உங்களை என்ன செய்திருப்பார் தெரியுமா! ஒரு சிறு பையனை இவ்வளவு தூரம் உயர்த்திப் பேசலாமா? அந்த ஸிம்ஹமெங்கே! இந்தப் பூச்சி எங்கே!" என்பவற்றைப் போலப் பல கேள்விகளைச் சரசரவென்று ஆத்திரத்தோடு அவர் என்னைக் கேட்டுக் கொண்டே போனார். நான் என்ன சொல்வேன்!


"பொறுத்துக்கொள்ளவேண்டும்; பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி நமஸ்காரம் செய்தேன்.


"நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?" என்று கேட்டார் கோபாலையர்.


"க்ஷமிக்கவேண்டும்: என்னவோ சொல்லிவிட்டேன். ஒரு வித்தையில் நூதனமாக முன்னுக்கு வருபவர்களை அப்படிப் பேசித்தானே பிரகாசப்படுத்தவேண்டும்; ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லியே உத்ஸாகத்தை உண்டாக்க வேண்டும்; அதனால் அப்படிச் சொன்னேன். வேறு விதமாகத் தாங்கள் எண்ணிக்கொள்ளக் கூடாது" என்றேன்.


"எண்ணிக்கொள்வதா? நீங்கள் அப்படிப் பேசினதற்கு வேறு என்ன அர்த்தம்? கீழே உட்காருங்கள்; அந்த மகானாகிய த்ஸெளகம் சீனுவையங்கார் கீர்த்தனங்களைக் கேளுங்கள்" என்று சொல்லி அந்தக் கிழவர் உட்கார்ந்தார்; நானும் ஈரவேஷ்டியோடே உட்கார்ந்தேன். உடனே அவர் த்ஸெளகம் சீனுவையங்கார் இயற்றிய சில வர்ணங்களைப் பாடிக்காட்டினார்; அவை வெவ்வேறு ராகங்களில் அமைந்திருந்தன. அவர் வேறு சில கீர்த்தனங்களையும் பாடினார். நடுங்கிய குரலாக இருந்தும் அவறைப் பாடும்பொழுது கையை ஆட்டுவதும் தலையை அசைப்பதுமாகிய அவர் செயல்கள் அவருடைய உத்ஸாகத்தின் அளவைப் புலப்படுத்தின. மேல் ஸ்தாயியில் பாடத் தொடங்கும்போது அது பிடிபடாமையினால் தம் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் காட்டி அவர் அபிநயம் செய்தபோது அவர் அடைந்த இன்பத்தை, உண்மையில் தம் சாரீர பலத்தினால் அந்த ஸ்தாயியில் பாடுபவர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த பிராயத்தில் அவர் அவ்வளவு பாடியது எனக்கு அளவற்ற வியப்பை உண்டாக்கியது. த்ஸெளகம் சீனுவையங்கார்பால் அவருக்கிருந்த பேரன்பும், அவருக்கு இழுக்கு நேர்ந்ததைப் போக்கவேண்டுமென்ற எண்ணமும் அவரிடம் புதிய சக்தியை உண்டாக்கின.


"எப்படி இருக்கின்றன, பார்த்தீர்களா? அவருடைய பெருமையை நீங்கள் உண்மையில் தெரிந்துகொண்டிருந்தால் அப்படிச் சொல்லத் துணிந்திருக்க மாட்டீர்கள். இப்பொழுதாவது த்ஸெளகம் சீனுவையங்காருடைய சக்தியைத் தெரிந்துகொண்டீர்களா?" என்று கோபாலையர் கேட்டார்.


"தெரிந்து கொள்ளாமல் என்ன? முன்பும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன். இப்பொழுது பின்னும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். அவரெங்கே! இவரெங்கே! உபசாரத்துக்காக நான் சொன்னதை ஒரு பொருளாகத் தாங்கள் எண்ணக்கூடாது. பெரியவர்களெல்லாம் ஒரு வஸ்துவைப் பெருமைப்படுத்தவேண்டுமென்றால் இப்படிப் பாராட்டிச் சொல்வது வழக்கம். மாளிகைகளை மேருவைக் காட்டிலும் சிறந்தவை என்று சொல்லுவார்கள்; அதனால் மேருவுக்குப் பெருமை குறைந்து போகுமா? மேருவை எடுத்துச் சொல்வதனாலேயே அதன் பெருமை பின்னும் விளங்கும். அதுபோல இதுவும் த்ஸெளகம் சீனுவையங்காரை நான் குறைவாகக் கூறியதாகாது; இப்படிக் கூறியதால் பின்னும் அவருடைய பெருமையே விளங்கும்."


"அதெல்லாம் உங்கள் தமிழ்ப் புஸ்தகங்களில் வைத்துக்கொள்ளுங்கள். சபையிலே பேசுவதென்றால் அப்படி யோசியாமல் சொல்லிவிடலாமா? தப்பு தப்புத்தான்" என்று தீர்ப்புக் கூறினார் கோபாலையர்.


அதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்? ஒருவாறு சமாதானங் கூறி அனுப்பினேன். பழைய வித்துவானிடத்தில் அந்தக் கிழவருக்கு இருந்த அன்பும், அவ்வித்துவானுடைய பெருமையைக் காப்பாற்றுவதில் அவருடைய சக்திக்கு மேற்பட்டு விளங்கிய பற்றும், அப்பெருமைக்குக் குறைவு நேருங் காலத்தில் உண்டான மானமும் இந்நிகழ்ச்சியால் நன்றாக வெளியாயின.

 மரபு விக்கியில்  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சேர்த்தது!

 இன்னிக்குத் தாத்தாவின் பிறந்த நாளைக்காக நேற்றிரவே ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்ததாய் நினைச்சேன். கடைசியில் பார்த்தால் (ஆரம்பத்தில் இருந்தே) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்ராஃப்ட் மோடிலேயே இருந்திருக்கு! தேடிப் பிடிச்சுப் போட்டிருக்கேன். :)

43 comments:

  1. அந்தக் காலத்து எழுத்து நடை மணிப்ரவாளம் என்பார்கள்.. சமஸ்க்துதம் பரவலாகக் கலந்த நடை...

    இப்படியான உரைநடைகளைப் படிப்பதில் எவ்வித சிரமும் இருந்ததில்லை...

    ஆனால் இப்போது தமிழை எப்படிப் பேசுவது என்றுகூடத் தெரியவில்லை.. எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும்....

    தனியார் வழங்கும் காணொளிகள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இவற்றைக் கேட்டாலே தூணில் முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது...

    ஆனால் வீடுகளில் தூண்களே இருப்பதில்லை....

    அந்த வகையில் தலை தப்பியது....

    ReplyDelete
    Replies
    1. துரை அண்ணா அதே அதே...

      ஹா ஹா ஹா முட்டிக்க தூண் இல்லை தலை தப்பியது...ஹா ஹா சிரித்துவிட்டேன்...

      கீதா

      Delete
    2. ஆமாம், துரை, விக்கிபீடியாவில் இவற்றை ஏற்றும்போதுதான் இந்த நடையை மாற்ற வேண்டும் என்றார்கள், நான் மறுக்கவே அவர்களே மாற்றிவிட்டார்கள். ஆகவே நான் வெளியே வந்துவிட்டேன். பின்னர் மின் தமிழ்க்குழுமத்தின் மரபு விக்கியில் இவற்றை எல்லாம் நிறுவனர் சுபாஷிணி துணையுடன் ஏற்றினேன்.

      Delete
    3. சூப்பர் அக்கா விக்கில ஏற்றியதற்கு...

      தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்...

      நாளைக்கு சென்னை பயணம்...வெள்ளி காலையில் பங்களூர் வந்துடுவேன்...ஸோ அப்புறம் தான் வலைக்கு வர முடியும்...இப்போதும் கொஞ்சம் வேலைகள் அதான் அப்பப்ப வந்து கருத்து...போடுறேன்..அக்கா

      கீதா

      Delete
    4. அதிகமா எல்லாம் விக்கியில் எழுதலை தி/கீதா. இதை இப்போது ஏற்றி இருக்கும் இடம் மரபு விக்கி/ தமிழ் மரபு அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்ட தளம். இங்கே நிறைய உ.வே.சா. பற்றி மட்டுமில்லாமல் பலதும் எழுதி இருக்கேன். பலருடைய எழுத்துக்களை ஏற்றி இருக்கேன். என்னோட சில சமையல் குறிப்புக்கள், எழுத்துகள், பதிவுகள் என இடம் பெற்றிருக்கின்றன.

      https://tinyurl.com/5w32r9j இங்கே போய்ப் பார்த்தால் கிடைக்கும்.

      Delete
  2. பூச்சி ஐயங்காரென்று வழங்கும் ஸ்ரீநிவாஸ ஐயங்காரும் //

    அக்கா இவர் நிறைய பாட்டுகள் எழுதி கம்போஸ் செஞ்சுருக்கார் ரொம்ப ரேர் லஷ்மிஷ தாளத்தில் தில்லான எழுதியிருக்கார்...ரொம்ப ஃபேமஸ் ஆச்சே இவர்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நான் இதைப் போடும்போதே உங்களை நினைத்துக்கொண்டேன்.முதலில் கனம் கிருஷ்ணையர் பற்றி எழுதியதைத் தான் போடலாமோனு நினைச்சேன். கனம் கிருஷ்ணையர் உ.வே.சா.வின் பாட்டிக்குத் தாய்மாமா. அம்மான் என அந்தக் கால வழக்கப்படி உ.வே.சா. எழுதி இருப்பார். :) பின்னர் இதைத்தேர்ந்தெடுத்தேன்.

      Delete
    2. ஓ என்னை நினைத்துக் கொண்டீங்களா நன்றி அக்கா..

      அம்மான் பத்தியும் அதையும் வேறு பதிவாகப் போடுங்களேன்...

      எங்கள் வீட்டிலும் தாய்மாமாவை அம்மான் என்றுதான் சொல்லுவாங்க

      மலையாளத்திலும் அம்மாவன் என்றுதான் இப்போதும் வழக்கில் உள்ள சொல்

      கீதா

      Delete
    3. ஆமாம், பாடல்கள் பற்றியும் வித்வான்கள் பற்றியும் படிக்கும்போதும் கேட்கும்போதும் உங்களுடைய பரந்து பட்ட விசாலமான அறிவு நினைவில் வருவதைத் தவிர்க்க முடியாது. வாட்சப்பிலும் பார்க்கிறேன். ராகங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறீர்களே! சாஹித்யகர்த்தாக்கள் பற்றிய உங்கள் அறிவும் வியக்கத்தக்கது!

      Delete
  3. க்ஷமிக்கவேண்டும்! க்ஷமிக்க வேண்டும்!!//

    இந்த வார்த்தைதான் இப்போதும் மலையாளத்தில். ஷமிக்கணம்...ஷமிச்சு...ஷமிச்சோ என்று ...

    சமஸ்க்ருதம் கலந்த தமிழ் அப்போது இல்லையா? அது அப்போதைய கதைகள் பலவற்றிலும் பார்க்கலாம். கல்கி, தேவன் போன்றவர்களின் கதைகளில்...

    அருமையான நிகழ்வு ஒன்றை சொல்லியிருக்கீங்க அக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி/கீதா. இந்த வார்த்தையை அப்படியே பயன்படுத்தியதால் மலையாளத்தின் செழுமை குறைந்து விட்டதா என்ன? ஆனால் தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு இது பிடிப்பதில்லை. ஸ்டாலினை மட்டும் ஸ் போட்டு எழுதுகின்றனர். மற்றவற்றிற்குப் போடுவதில்லை. ராஜா/ராசாவாகிறார். :( ராஜாஜியை ராசாசி என்றே எழுதுகின்றனர். ஹூஸ்டனை கூச்டன் என எழுதுகின்றனர். :(

      Delete
    2. ஹையோ அக்கா..... ராசாசி, கூச்டன் - ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ..

      கீதா

      Delete
  4. அப்போதெல்லாம் பாருங்க என்ன மரியாதை...குளித்துக் கொண்டிருந்தவர் ஈர உடையுடனேயே வந்து கோபாலையரை நமஸ்கரித்து என்று....அவரிடம் அழகாக சமாதனமாகப் பேசி..தான் பேசியது தவறுதான் ஆனாலும் இப்படிப் பேசுவதால் த்சௌகம் ஐயாங்காரின் பெருமை இன்னும் கூடும் என்றெல்லாம் சொல்லி அழகாகப் பேசி ...

    இப்போதைய காலகட்டத்தில் இப்படி எதிர்பார்க்க முடியுமா? கோபாலையரின் வயதிற்கும் அவருக்கு த்சௌகம் ஸ்ரீர்னிவாசயங்காகின் மீதான அன்பு மரியாதைக்கு தாத்தா கொடுத்த மரியாதை அதை அழகாகச் சொல்லியிருப்பது எல்லாமே அருமை...

    அதைக் கூட எந்தவித குறைகளுடன் சொல்லாமல்...அழகா சொல்லியிருக்கார்...இது போன்ற நல்ல எண்ணங்கள், மரியாதையை இப்போது காண்பது மிக மிக அரிது என்றே தோன்றுகிறது...

    ஒரு வேளை கோபாலய்யர் அந்த சிமஹம் எங்கே இந்த பூச்சி எங்கே என்று சொன்னதால் இவருக்கு பூச்சி ஸ்ரீநிவாசயங்கார் என்ற பெயர் வந்திருக்குமோ அக்கா? இது வரை பூச்சி என்ற அடைமொழிக்குக் காரணம் தெரியவில்லை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தி/கீதா, நானும் நீங்கள் சொல்வது போல் தான் நினைத்தேன். "பூச்சி" எனத் திட்டு வாங்கியதால் அதைச் சேர்த்துக்கொண்டிருப்பாரோ எனத் தோன்றியது.

      Delete
  5. ஒரு நல்ல நிகழ்வைப் படித்த திருப்தி.

    இதில் பெரியவர்களுக்கான மரியாதையும், தன் அபிமானமுள்ளவருடைய மேன்மையைக் காப்பாற்ற நினைத்த கோபாலய்யரையும், திறமை உள்ள ஒரு ஐயங்காரை பாண்டித்துரை தேவர் அவர்கள் பிரகாசிக்கச் செய்யவேண்டும் என்று நினைத்ததையும் நினைக்கும்போது, இழந்த காலங்களின் மேன்மை தெரிகிறது.

    80 ஆண்டுகளின் சாக்கடை அரசியலும் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ரசித்ததுக்கு ரொம்ப நன்றி.

      Delete
  6. இன்றைக்கு பொதிகையில் தாத்தா பிறந்த நாள் பற்றி பார்த்த போது உங்களை நினைத்துக் கொண்டேன்...

    எனது வணக்கங்களும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, தொடர்ந்து பதிவுகளை வாசித்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி.

      Delete
  7. என்ன ஒரு பணிவு!!என்ன ஒரு நடை!!பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா. நீண்ட நாட்கள்/மாதங்கள் கழித்து வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. அழகான ஒரு நிகழ்வு. இது வரை அறியாத ஒன்றும். அக்கால நிகழ்வுகளில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அபிமானம். மரியாதை என்பதன் வெளிப்பாடு எல்லாமே எத்தனை அழகாக இருந்திருக்கிறது. மிகவும் ரசித்தேன் பதிவை. உ வே சா தமிழ்த்தாத்தா அவர்களுக்கு வணக்கங்கள்!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். கருத்துக்கு நன்றி.

      Delete
  9. சிறப்பான நிகழ்வு... விவரித்த விதம் அருமை அம்மா...

    ReplyDelete
  10. தாத்தாவுக்கு நமஸ்காரங்கள், படிக்க இனிமையாக இருந்துது...

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, தமிழிலே "டி" வாங்கிட்டு இப்படிச் சுருக்கமாக் கருத்துச் சொன்னா எப்ப்பூடிஈஈஈஈஈஈஈஈஈஈ?

      Delete
  11. தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!
    நினைத்தேன் உங்களிடமிருந்து இன்று பதிவு வரும் என்று.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, பயணமெல்லாம் முடிஞ்சு வந்தாச்சா?

      Delete
  12. தாத்தாவை வணங்கினேன்.
    இன்றைய நிலையிலிருந்து வெகுதூரமான நடை ரசித்து படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. நேற்று த.தாத்தாவுக்கு பிறந்த நாள் என்று தெரிந்ததும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். மிக அழகான பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நினைத்துக்கொண்டதுக்கு ரொம்ப நன்றி. பதிவுக்குக் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.

      Delete
  14. தமிழ்த் தாத்தா பற்றி நீங்கள் பதியாமல் இருந்தால் தான் அதிசயம்.
    மிக மிக அழகான தமிழில் ஸ்ரீ உ வேசா அவர்களின் தனித்துவமான பண்பை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.எத்த மகான் கள் நம் நாட்டில்.
    அனைவருக்கும் வந்தனம்.
    தங்கள் தொண்டு என்றும் வளமையோடு இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி,முகநூலிலும் நீங்க சொல்லி இருப்பதைப் படித்தேன். தமிழ்த்தாத்தா பற்றிச் சின்ன வயசில் இருந்தே படிச்சதால் எப்போவும் அவர் மேல் ஓர் பக்தி! அவ்வளவே!

      Delete
  15. எங்கே ஸ்ரீராம் இப்போதெல்லாம் என்னோட பதிவில் வராமல் லீவ் எடுத்துக்கறார்? ம்ம்ம்ம்ம்?உடம்பு சரியில்லைனா மற்றப்பதிவுகளில் காணப்படுகிறார்! மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

    இந்தப் பதிவு அறுவையா, அந்தப் பதிவு சுவையா, ஸ்ரீராம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? (பாடிப் பார்த்துக்குங்க!)

    ReplyDelete
  16. அன்னைக்கே எதிர்பார்த்து ஏமாத்தம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி.வா. ஜி+இல் பதிவு வெளியிட்டதுமே போடும் தேர்வு எனக்கு இப்போல்லாம்வரலை. ஆனால் சுட்டியைக் காப்பி செய்து போட்டால் அது வருது.அதை அன்னிக்கே போடாமல் இருந்திருக்கேன் போல! எதுக்கும் இருக்கட்டும்னு இன்னிக்குப் போட்டேன். நீங்க இங்கே வந்து பார்த்திருந்தால் தெரிஞ்சிருக்கும். எட்டி எட்டிப் பார்த்தால்? :))))

      Delete
  17. கூகுள் ப்ளஸ்ல பார்த்துட்டு வர்றேன். எபி சைட் பார்ல அப்டேட் ஆகவில்லையா? எப்படி கண்ணில் படாமல் போனது?

    ReplyDelete
    Replies
    1. 19 ஆம் தேதியே வந்திருந்தது ஶ்ரீராம். நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க! முதலில் ஷெட்யூல் பண்ணினது வரலை. அப்புறமா ட்ராஃப்ட் மோடில் இருந்ததை எடுத்து வெளியிட்டேன்.

      Delete
  18. இப்படிக் கூட கிழவருக்குக் கோபம் வருமா? ஒரு பிடிபிடித்து விட்டாரே... வயதான காலத்தில் சில வித்வான்கள் பாடுவதைக் கேட்க பாவமாக இருக்கும். பழைய பெருங்காய டப்பா போல பழைய வாசனை நினைவில் கேட்கவேண்டும். அப்படி கோபாலய்யர் பாடியதை தாத்தா கேட்டிருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், செம்மங்குடி நினைவு வந்தது எனக்கு! :)

      Delete
  19. பூச்சி அய்யங்கார் புகழ் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பின்னரான சந்ததிகளே இப்போது வயதானவர்கள். இவரைப் பற்றி என்ன சொல்ல? சொல்லப்பட்டிருக்கும் சம்பவத்தில் தெரிவது அந்தக்காலத்து பண்பாடும், மரியாதையும்.

    ReplyDelete
    Replies
    1. அதற்குத் தான் பதிவே! இளம் தலைமுறையினர் புரிஞ்சுக்கணும்.

      Delete