பிள்ளையார், பிள்ளையார்
உபநயனம்
யோகாசனம்
கதை கதையாம் காரணமாம், ராமாயணம்
சிதம்பர ரகசியம்
ராமனின் பாதையில் சிறு பயணம்
லலிதாம்பாள் சோபனம்
ஓம் நமச்சிவாயா
நேற்றிரவு குட்டிக்குஞ்சுலுவுக்காகக் காத்திருந்தப்போ சமீபத்திய புடைவைப் பதிவில் சில, பல கருத்துக்களை வெளியிட்டு பதில் கொடுத்துட்டு இருந்தேன். அப்போ திடீர்னு குஞ்சுலு ஆன்லைனில் வரவே கமலாவுக்குக் கொடுத்த கருத்தை பப்ளிஷ் செய்தேன்னு நினைச்சுட்டு உடனே ஸ்கைபுக்கு மாறிட்டேன். திரும்பப் பதிவுப்பக்கம் வரலை. அந்தக் கருத்துக் கொடுத்த பதில் வெளீயாகாமலேயே காக்காய் கொண்டு போயிருக்கு! பாவம் கமலா! பதிலை எதிர்பார்த்து ஏமாந்திருக்காங்க!
அது போகட்டும். இன்னிக்கு ஏன் இந்த மொக்கைன்னா ஒரு முகநூல் நண்பர் என்னோட மின்னூல்களை எல்லாம் கேட்டிருந்தார். அவருக்காகத் தொகுத்தப்போ அதை முகநூலில் போட்டுச் சேமிக்காமல் பதிவில் போட்டுட்டேன். எல்லோரும் பாருங்களேன். விரும்பினால் படிக்கலாம். இன்னும் ஏதாவது விட்டிருக்கானு இனிமேல் தான் பார்க்கணும். இப்போதைக்கு நினைவில் வந்தவற்றைக் கொடுத்திருக்கேன். எல்லாமே க்ரியேடிவ் காமன்ஸ் மூலம் வெளியானது.
இதிலே ஒரு வேடிக்கை என்னன்னா இதுக்காக என்னோட பெயரைப் போட்டுத் தேடினால் ஏற்கெனவே முகநூலில் "கீதா சாம்பசிவம்"னு ஒருத்தர் சென்னை, பெரம்பூரில் இருந்து இருக்கார். நல்லவேளையா அவர் படம் ப்ரொஃபைலிலே போட்டிருப்பதால் குழப்பம் வரலைனு நினைக்கிறேன். அவங்களும் எழுதறாங்களானு தெரியலை. நாம தான் நம்ம நண்பரைத் தானே ப்ரொஃபைலில் போட்டிருக்கோம். இது சுமார் பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கிறதால் பிரச்னை வராதுனு நினைக்கிறேன். ஏற்கெனவே முகநூலில் கீதா சுதர்சனத்தை நான் எனவும் என்னை கீதா சுதர்சனம் எனவும் நினைச்சுக் குழம்பியவங்க உண்டு. அவங்க கவிதை எழுதறவங்க! நம்ம கிட்டேப் போய்க் கவிதை எல்லாமா கேட்க முடியும்? அப்புறமா அவங்க கீதா எம்.சுதர்சனம்னு பேரை மாத்திட்டாங்க! இஃகி,இஃகி, நம்மால் ஆன உதவி! அந்த கீதா சாம்பசிவம் பத்தி மறுபடி மத்தியானமாத் தான் போய்ப் பார்க்கணும். இப்போக் கிடைத்தக் கொஞ்ச அவகாசத்தில் சொந்த வேலைக்காகக் கணினியைத் திறந்தப்போ இந்த வேலையையும் சேர்த்துட்டேன். அப்புறமா வரேன்.
பதிவுகளைப் பார்த்து கண்டுபிடித்து விடலாம் அம்மா...
ReplyDeleteவாங்க டிடி, சில பதிவுகளில் வராமல் மழலைகள் குழுமத்தில் வந்தவை! :) ஆகவே கண்டு பிடிக்கிறது கொஞ்சம் சிரமம் தான். மழலைகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் சில வருடங்கள் முன்னர் காலமான பின்னர் குழுவே நடக்கவில்லை! :( என்னோட எழுத்துக்களையே அங்கே நான் தேடிப் பார்த்துத் தான் எடுக்கணும். அப்படி எடுத்துப் போட்டது தான் பிள்ளையாரும், யோகாசனமும்!
Deleteநீங்க ஒரு வேளை அந்த இன்னொரு கீதா சாம்பசிவத்தைச் சொன்னீங்களோ?
Deleteமின்னூல்கள் இன்னும் ஏதாவது விட்டு இருக்கா என்று பாருங்கள்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது படிக்க வசதி.
நன்றி.
இப்போ நெல்லை சொன்னதன் பேரில் கயிலை யாத்திரையைச் சேர்த்திருக்கேன். இன்னும் ஏதோ விட்டுப் போனாப்போல்! நினைவு வரலை!
Deleteமூன்று மின்னூல்களை எடுத்துக்கொண்டேன். படிக்கணும்
ReplyDeleteமெதுவாப் படிங்க. ராமனின் பாதையும், லலிதாம்பாள் சோபனமும், சிதம்பர ரகசியமும் பதிவுகளில் வந்தவை! கயிலை யாத்திரையும் தான்!
Deleteஉங்க கைலாய யாத்திரை மின்னூலா வந்திருக்கா?
ReplyDeleteஆஹா, அதை விட்டுட்டேன்! :) நன்றி.
Deleteகுறித்துக் கொண்டுவிட்டேன் கீதாக்கா. வாசிக்கிறேன்..
ReplyDeleteகீதா
மெதுவாப் படிங்க தி/கீதா! எல்லாம் அநேகமாய்ப் பதிவுகளில் வந்தவை தான். பிள்ளையாரும் யோகாசனமும் தவிர்த்து!
Deleteநன்று நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக படிக்கிறேன்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteகீதாக்கா ..நான் சிதம்பர ரகசியத்தை சேவ் செஞ்சி வச்சிருக்கேன் சீக்கிரமே படிக்கணும் .இருங்க புடைவை போஸ்டை பார்த்துட்டு வரேன் :)
ReplyDeleteஹாஹாஹா, ஏஞ்சல், புடைவைப் பதிவில் கரெக்டாச் சொல்லிட்டீங்க! ஏற்கெனவே முதல்லே போட்ட படப்பதிவிலேயும் வல்லி சிம்ஹனும், பானுமதியும் ஓரளவுக்குக் கரெக்டாச் சொல்லிட்டாங்க. கோமதி தான் ஏதோ "பூர்"னு வரும்னு சொல்லி இருந்தாங்க!
Deleteயாருமே சரியான பதிலை சொல்லலை .அந்த கோயில் கோபுரத்தை வச்சி கண்டுபுடிச்சேன் அது புனே மஹாலக்ஷ்மி கோயில் .
ReplyDeleteஎல்லாம் கூகிள் ஆண்டிகிட்டே கேட்டு தெரிஞ்சதுதான்
ஏஞ்சல், மஹாலக்ஷ்மி கோயில் சரி! ஆனால் புனேயில் இல்லை! புனேயில் பார்வதி ஹில்ஸில் பார்வதிக்குக் கோயில் இருக்கு! அதுக்கும் மேலே கார்த்திகேயன் எனப்படும் முருகனுக்குக் கோயில்! பெண்கள் போகமுடியாது! போகக் கூடாது! நல்லவேளையா சபரிமலை மாதிரிப் பிரபலம் இல்லை என்பதால் பெண் உரிமைப் போராளிகள் போராட ஆரம்பிக்கலை! :))))
Deleteஆஹா அந்த புடவைகள் கோலாப்பூர் காட்டன் சாரீஸ் :))
ReplyDeleteஅதே, அதே, ஏஞ்சல்!
Deleteஅக்கா அது கோலாபுர் சாரீஸ் அந்த கோயில் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் .என்னை வெற்றியாளரா அறிவிச்சிடுங்க :)
ReplyDeleteஅப்புறம் கோலாப்பூர் ஸ்லிப்பர்ஸ்லாம் போட்டு வழுக்கி விழுந்த நினைவும் எனக்கு வந்தது கோலாப்பூர் சாரீஸ் பார்த்ததும்
ஏஞ்சல், நீங்க தான் வெற்றியாளர். கோயிலை மட்டுமில்லாமல் புடைவைகளையும் கண்டு பிடிச்சதுக்கு! கோலாப்பூர்ச் செருப்பு வாங்கலை! இப்போப் போட்டுக் கொள்வது எனக்கே எனக்குனு தயார் செய்தது மட்டும்.
Deleteராஜின்னு ரெண்டு பேர் எழுதினோம். அதனால் என்னைய அடையாளப்படுத்திக்க நாய்க்குட்டி படம் வைக்க, அதுவே அடைமொழியாகிட்டுது. என் பேரை நாய்க்குட்டி ராஜின்னே பலர் அலைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த கொடுமைலாம் நடந்துச்சு.
ReplyDeleteஆமாம், இயற்கை ராஜி னு ஒருத்தர் எழுதினதா ஞாபகம். நீங்க தான் அவர்னு நினைச்சிருக்கேன். ஆனால் இல்லைனு நினைக்கிறேன். :)))) நல்லவேளையா இந்த இன்னொரு கீதா சாம்பசிவம் பதிவுகள் எழுதலைனு நினைக்கிறேன். முகநூலில் இருக்காங்க!
Deleteகைலாய யாத்திரை நூல் தரவிறக்கம் செய்து படித்தேன். இன்னும் சிலவும். இங்கே மொத்தமாய் கொடுத்ததில் மகிழ்ச்சி. படிக்காதவை படிக்க வசதி!
ReplyDeleteநன்றி வெங்கட். முடிஞ்சப்போப் படிங்க!
Deleteமின் நூல்கள் இறக்கி வைத்துக் கொள்கிறேன். எப்போது படிப்பேனோ தெரியாது.
ReplyDeleteமெதுவாப் படிங்க ஶ்ரீராம்!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களது மின் நூலாக்கங்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். எல்லாவற்றையும் படித்துப் பார்க்கிறேன்.
தாங்கள் எனக்காக கொடுத்திருந்த பதில் காக்காவோ, கழுகோ தூக்கிகிட்டு போனாலும் பரவாயில்லை..! தாங்கள் தங்கள் பேத்தியை பார்த்து மகிழ்வடைந்ததே எனக்கும் சந்தோஷத்தை தந்தது. அந்த பொழுதுக்கு நிகர் வேறேது? அதனால் நான் எள்ளளவும் ஏமாற்றம் அடையவில்லை என தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் இரவு ஒன்பது மணி போலக் கணினியில் இருப்பேன். மற்ற நாட்களில் பிள்ளை, மாட்டுப்பெண் இருவருக்கும் வர முடியாது! ஆகவே அன்று அதற்காகக் கணினிக்கு வந்திருந்தேன்.
Deleteகீசாக்கா இப்போ என்ன ஜொள்ள வாறா?:)
ReplyDeleteம்க்க்க்கும், தோசை வாலி! முந்தைய பதிவைப் படிக்கவே இல்லையாம். என்னத்தை ஜொள்ளறது? கடைசியில் வெற்றி பெற்றவர்களில் முதன்மையானவர் ஏஞ்சல், இரண்டாவது வல்லி சிம்ஹன், மூன்றாவது பானுமதி வெங்கடேஸ்வரன்! :))))))
Deleteஉங்களுடைய மதுரை பற்றிய பதிவை படித்தேன். மார்கழி பற்றிய நினைவலைகள் சூப்பர்.
ReplyDeleteமுடிஞ்சால் எல்லாமும் படிச்சுப் பாருங்க. ஒரு காலத்தில் எல்லோருமே ரொம்பவே அருமையான நினைவுகளைப் பகிர்ந்தோம்.
Deleteமாதக் கடைசியானதால் அதிக வேலை...
ReplyDeleteமாதாந்திரக் கணக்குகளை முடிக்கவேண்டும்... அதனால் தான் உடனுக்குடன் வரமுடியவில்லை...
குஞ்சுலுவின் குறுநகையில்
குதுகலிக்கும் நெஞ்சம் வாழ்க...
நெஞ்சகத்தில் நிம்மதியும்
நிறைநலமும் என்றும் வாழ்க..
பரவாயில்லை துரை, நானும் தாமதமாய்த் தான் பதில் கொடுக்கிறேன். குஞ்சுலு விஷமம் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு! ஸ்டூலை எல்லாம் இழுத்துக் கொண்டு போட்டுக் கொண்டு மேலே ஏறி எல்லாத்தையும் எடுக்கிறது. சைல்ட் லாக் போட்டிருக்காங்க! இல்லைனா வீடே தலைகீழ் தான்! :)))))
Delete