எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 18, 2020

முத்துக்குமரா என்று அழைக்கவா! கந்தசஷ்டிப் பதிவுகள்! 4

 கதை பற்றி துரை அவர்கள் ஆதாரமில்லை என்கிறார். ஆனால் இந்தக் கதையைப் பலரும் சொல்லிக்கேட்டிருக்கேன்.  அந்த அந்தக் கோயில்களிலும் இது வழங்கப்படுகிறது. ஆகவே இந்தக் கதையை நாளையிலிருந்து வழங்கப் போகிறேன். இது செவிவழிக் கதையாகவே பரவி வருகிறது. ஆகவே யாரேனும் "தரவு" எனக் கேட்டால், "இல்லை" என்பதே பதில். இப்போது இன்றைய பதிவைப் படிக்கலாம். கதைக்கு நாளை வரை பொறுத்திருக்கவும்.

***********************************************************************************


** குமாரன்= என்றால் சிவ, சக்தி ஆகியோரின் அருளால் வெளிப்பட்டவன் என்று ஒரு பொருள் ஆன்றோர் வாக்கில் சொல்கின்றனர். ஷரவணப் பொய்கையை அம்பிகையின் அம்சம் என்றும், கங்கையானவள் அந்தப் பொய்கையில் ஈசனின் வீரியத்தைக் கொண்டு சேர்த்ததால் சிவ சக்தி ஐக்கியத்தில் சர்வலோகத்துக்கும் அன்னை, தந்தை ஆனவர்களின் புத்திரன் என்பதாலும் குமாரன் என்று சொல்வதுண்டு என்று பரமாச்சாரியார் கூறுகின்றார். முதன்முதலாய்க் கந்தன் புராணத்தைக் "குமார சம்பவம்" என்று வால்மீகியே ராமாயணத்தில் பால காண்டத்தில் கூறி இருக்கின்றார். கு= என்ற சொல்லுக்கு அக்ஞானம், (ஆணவம், மலம், கன்மம்) இம்மூன்றில் உள்ள மலம் என்றும் கொள்ளலாம். மாரன்= என்றால் அழிப்பவன். நம் ஆணவத்தை அழிப்பவன். நம் கர்மாவை அழிப்பவன். நம் மலத்தை அழிப்பவன். அனைத்து உயிர்களின் மலப்பிணிகளை அழித்து ஒழிப்பவன் என்று கொள்ள வேண்டும். 

நம்மை அழிக்காமல், தன் வேலாயுதத்தால் காத்து ரட்சித்து நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழித்து ஞானத்தைப் பிறப்பிக்கின்றவனே குமாரன். இந்தக் குமாரன் என்ற பெயரை வைத்தே ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதங்களில் உள்ள கெளமாரம் பிறந்தது. வடநாட்டில் குமாரன் என்றாலே கார்த்திகேயன் ஒருவன் தான். அங்கே இவன் நைஷ்டிக பிரம்மச்சாரி. புனே நகரில் உள்ள பார்வதி மலையில் கந்தன் தவக்கோலத்தில் அன்னையிடம் வேல் வாங்கும் முன்னர் தவம் புரிவதாயும் அங்கே பெண்கள் செல்லக் கூடாது என்றும் இன்றளவும் இருக்கின்றது. பார்வதியைத் தரிசித்து விட்டு மேலே போய்க் குமாரனைத் தரிசிக்க வேண்டும். பார்வதியையும் மலை ஏறியே தரிசிக்க வேண்டும். அன்னை அங்கே குமாரனுக்கு அருள் தர ஆயத்தமாய் இருக்கின்றாள். மேலே கார்த்திகேயன் இருக்குமிடத்துக்கு ஆண்கள் மட்டுமே செல்லலாம். இந்தக் குமாரனே குமாரஸ்வாமியாகவும் ஆகின்றான். குமரனாகவும் ஆகின்றான்.

ஸ்கந்தன் எப்படித் தமிழில் கந்தன் ஆனானோ அப்படியே குமாரனும் தமிழில் குமரன் ஆகின்றான். அடுத்து ஷரவணபவ. ஷ=மங்கலம் என்ற பொருளிலும், ர= ஒளி என்ற பொருளிலும், வ= சாத்வீகம், என்ற பொருளிலும், ண= போர், யுத்தம் என்ற பொருளிலும், பவன்= என்றால் தோன்றியவன், உதித்தவன் என்ற பொருளிலும் வருகின்றது. நம் ஷண்முகன் பிறக்கும் முன்னரே தேவசேனாதிபதி அவன் தான் என்பது தீர்மானம் ஆயிற்றே. பிறக்கும் முன்னரே அவனுக்குரிய பதவியைத் தீர்மானித்தாயிற்றல்லவா. அது மட்டுமா??? எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான். ச= என்ற சொல்லுக்கு மகா லட்சுமி என்ற பொருளும் உண்டு. ர= என்றால் வாக் தேவி, சரஸ்வதி, வ= என்றால் ஆரோக்கியம், அந்த ஆரோக்கியம் தரும் வீரம் என்ற பொருளில் வரும். இந்த ஆறெழுத்து மந்திரத்தைத் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தோமானால் கந்தன் கருணையால் அவன் வேல் நம்மைக் காத்து அரணாக நிற்கும். 

கதை இல்லையேனு பார்த்துட்டுத் திரும்பப் போயிடாதீங்க, கதை ரொம்ப நீஈஈஈஈஈளம். அதான் சுருக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு பகுதியாய்ப் போடறேன், நாளையில் இருந்து.

19 comments:

  1. கதைக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா. போட்டுவிட்டேன் ஒரு பகுதிக்கதையை!

      Delete
  2. முருகன் திருவருள் முன்னின்று காக்க..

    ReplyDelete
  3. கதை நாளை வரட்டும் . இப்போது குமாரனைப்
    பற்றி அறிவோம்.
    ஓஹ்ம் சரவணபவ.!

    ReplyDelete
    Replies
    1. கதையும் போட்டாச்சு ரேவதி!

      Delete
  4. கதை இல்லைன்னு திரும்பி எல்லாம் போகவில்லை.  படித்து விட்டுதான் செல்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நன்னி, நன்னி!

      Delete
  5. வணக்கம் சகோதரி

    தினமும் கந்தனைப் பற்றி, அவன் பெருமைகளைப் பற்றி அருமையான விளக்கங்களை அளித்து வருகிறீர்கள். இன்றைய விளக்கமும் அவன் நாமத்தின் ஒவ்வொரு எழுத்தின் மகிமைகளோடு நன்றாக புரிகிற மாதிரி தெளிவாக இருந்தது. மிகவும் பக்தியுடன் படித்து தெரிந்து கொண்டேன் இனி வரும் அவன் கதைகளுக்காகவும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. ஆஹா கதை வரப் போகிறதா! கதை அறியும் ஆர்வம்..

    முந்தைய பதிவும் வாசித்துவிட்டேன் கீதாக்கா. இப்பதிவும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. கந்தசஷ்டிப் பதிவுகளை வாசிக்கிறேன் ஆனால் இணையம் பக்கம் வர இயலாமல் போவதால் தாமதமாகத்தான் கருத்து அனுப்புகிறேன்.

    கதையை வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  8. கதைகள் வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  9. தலைப்பை படித்தவுடன்


    முருகா என்று அழைக்கவா,
    முத்துக்குமரா என்று அழைக்கவா
    கந்தா என்று அழைக்கவா கதிர்வேலா என்று அழைக்கவா
    எப்படி அழைப்பேன் கந்தா உன்னை எங்கே காண்பேன்

    டி. எம்.எஸ் பாடல் காதில் ஒலிக்கிறது.

    பதிவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  10. கந்தனைத் தொழுவார் நெஞ்சில்
    .....கவலைகள் மறக்கும் ! வாழ்ந்த
    சொந்தமண் வாசம் போல
    .....சுகம்நிறை வாக்கும் ! கோயில்
    சந்தன வாசம் எல்லாம்
    .....சங்கடம் போக்கும் ! நாளும்
    வந்தனம் செய்தே வாழ்வின்
    .....வரங்களைக் கொள்வோம் நன்றே !

    தொடர வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  11. கந்தனைத் தொழுவார் நெஞ்சில்
    .....கவலைகள் மறக்கும் ! வாழ்ந்த
    சொந்தமண் வாசம் போல
    .....சுகம்நிறை வாக்கும் ! கோயில்
    சந்தன வாசம் எல்லாம்
    .....சங்கடம் போக்கும் ! நாளும்
    வந்தனம் செய்தே வாழ்வின்
    .....வரங்களைக் கொள்வோம் நன்றே !

    தொடர வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  12. தொடர்கிறேன். அருமை.

    ReplyDelete