வடகிழக்குப் பருவ மழைக்காலம் இப்போத் தான் ஆரம்பம்! நான்கைந்து நாட்களுக்குள் தான் ஆகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரண்டு நாட்களோ என்னமோ மழை பெய்திருக்கு போல! ஏனெனில் இங்கே திருச்சி/ஶ்ரீரங்கத்தில் அவ்வளவு மழை இல்லை! அதுவும் ஶ்ரீரங்கத்தில் தூறினாலே பெரிய விஷயம்! இங்கே வந்த இந்த ஐந்து வருஷங்களில் நல்ல மழை ஒரு இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் பெய்து பார்க்கவே இல்லை! இந்த வருஷம் இங்கேயும் தண்ணீருக்குக் கஷ்டம் தான் என்று திருச்சி வாழ் மக்கள் சொன்னார்கள். இங்கே எங்களுக்குக் காவிரிக்கரையோரம் என்பதால் அதிகம் பிரச்னை இல்லை. போரில் வேலை செய்தாலோ, அல்லது தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தாலோ அன்று தண்ணீர் வராது. முன்கூட்டியே சொல்லி விட்டால் பிடிச்சு வைச்சுடலாம். பெரிய அளவில் பிரச்னை இல்லை. மழை இல்லாமல் இங்கே காய்கறிகள் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடக்கின்றன.
சென்னைக்குப் பல இடங்களில் இருந்தும் காய்கள் வரும்! அப்படியும் அங்கும் விலை ஏற்றம் தான். ஏனெனில் மக்கள் பெருக்கம். காய்களுக்கு உள்ள தேவை! சுற்று வட்டாரங்களில் மழை பொழிந்து காய்கறிகள் பயிரிடுவோர் தண்ணீர்க் கஷ்டம் இல்லாமல் இருந்தால் தான் காய்கள் விலை குறைய வாய்ப்பு! 2015 ஆம் வருஷத்தில் பெய்த மழையினாலும் வெள்ளத்தினாலும் சென்னை வாசிகள் மழை என்றாலே பயப்படுகிறார்கள். இது ஓர் உளவியல் பிரச்னையாகவே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில்
சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை தீராத பிரச்னை! அங்குள்ள ஏரிகள் எல்லாம் கூறுபோடப் பட்டு வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் மழைநீர் வாய்க்காலை எல்லாம் ஆக்கிரமித்தாயிற்று. இப்போ மழைநீர் சாலைகளில் தான் தேங்கும்! அது போகும் வழியெல்லாம் மூடி எந்தக் காலமோ ஆகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் சாலைகளில் தேங்குகிறது என அரசைச் சாடுவது எந்த விதத்தில் நியாயம்?
மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தால் மின் வாரியத்தைத்திட்டும் நாமே மின்சாரத்தின் மூலம் இறப்போரைக் குறித்தும் அதே மின் வாரியத்தைச் சாடுகிறோமே! தண்ணீர் சாலைகளில் அதிகம் தேங்கி இருந்து மின்சாரக் கம்பங்கள் அருகே, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே எல்லாம் நீர்த் தேக்கம் இருந்தால் மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டிக்கத் தான் செய்யும். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இரு சிறு பிஞ்சுக்குழந்தைகள் உயிர் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் என்று சிலரைத் தாற்காலிகமாக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே முன்கூட்டியே மின்சாரத்தை எச்சரிக்கை உணர்வோடு துண்டித்தால் பொதுமக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இருக்கும் கொஞ்ச, நஞ்ச ஏரிகளையும் தூர் வாரி மழைநீர் சேமிக்கும்படி பண்ண வேண்டும், அதை விடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்கிறது. சாலைகளில் வெள்ளம் என்று சென்னையை மட்டுமே தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அரசைக் குற்றமும் சொல்கிறார்கள். ஆனால் முகநூலில் இன்று ஒரு நண்பர் எழுதி இருந்ததில் அவர் கொளத்தூரில் இருந்து மயிலாப்பூர் வரை சென்று திரும்பியதில் சாலைகளில் நீர்த்தேக்கத்தைக் காண முடியவில்லை என்றும், ஆங்காங்கே குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி வந்தார்கள் எனவும் சொல்கிறார். இத்தனைக்கும் அவர் ஷேர் ஆட்டோவில் கொளத்தூரில் இருந்து அண்ணாநகர் திருமங்கலம் வரையும், அங்கிருந்து மயிலாப்பூர், மந்தவெளிக்குப் பேருந்திலும் தான் சென்றிருக்கிறார். அதுவும் பகல் நேரம்! பீக் அவர்ஸ் எனப்படும் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரம். எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் குடும்பம், வீடு, பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லவா? அவற்றை எல்லாம் மறந்து தான் நம்போன்றவர்க்கு சேவை செய்ய வருகின்றனர்.
அதோடு இல்லாமல் 2015--2016 மழை, வெள்ளத்தின்போது கொடுத்த செய்திகளை இப்போது புதிய செய்தி போல் வாட்ஸப், முகநூல் மூலம் பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அதை நம்பி யாருக்கும் அனுப்பாதீர்கள்! தேவை எனில் அதில் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொலைபேசி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் செய்தியை மற்றவர்க்கு அனுப்புங்கள்.
ஆகவே தொடர்ந்து நேர்மையான முறையில் செய்திகளைப் பொதிகை போல் தரும் செய்தி சானல்களை மட்டுமே பாருங்கள்! சென்னையில் மழை நின்றால் போதும் என நினைக்காதீர்கள். மழை வேண்டும். அதிலும் சென்னை வாழ் மக்களுக்கு மழை கட்டாயம் தேவை. இல்லை எனில் இன்னும் இரண்டு மாதம் சென்றால் மார்ச்--ஏப்ரலில் இருந்தே குடிநீருக்குத் தட்டுப்பாடு வந்து விடும். மழை நன்றாகப் பொழிந்து புழல், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் மட்டுமில்லாமல் இங்கே தமிழ்நாட்டின் உள் பாகங்களிலும் மழை நன்கு பொழிந்தால் தான் சென்னை வாசிகளுக்கு வீராணம் ஏரி நிரம்பிக் குடி தண்ணீர்த் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். இங்குள்ள விவசாயிகளுக்கு வயல்களில் பயிரிட ஏதுவாக இருக்கும். காய்கறிகள் நன்கு விளையும். காய்கறிகள் விளைச்சல் அதிகமானால் தான் உங்களுக்கு வாங்கும் விலையில் கட்டுப்படி ஆகும்படி காய்கள் விற்க முடியும்!
உணவு தானியங்கள் என எல்லாவற்றிற்கும் மழை நீர் தேவை! மழையை யாரும் வேண்டாமென்று சொல்லாதீர்கள்! அவரவர் வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் மழை நீர் வடியும்படியும் வைத்துக் கொண்டாலே போதும். மழை நீர் தேங்காமல் ஓடி விடும்! அதை விடுத்துத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் கொடுத்து மழையை விரட்டி அடிக்காதீங்க! மழையையே நம்பி இருக்கும் மாவட்டங்கள் பல இருக்கின்றன தமிழ்நாட்டில்! அவங்களுக்காகவாவது மழை நன்றாகப் பொழிய வேண்டும்.
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!