எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 16, 2017

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி!

இந்தப் புதிர் விளையாட்டுப்பெரும்பாலோருக்குப் பிடிக்கிறது எனத் தோன்றுகிறது. இதை இன்னும் கொஞ்சம் பிரபல எழுத்தாளர்களின் எழுத்தைக் கொடுத்துத் தெரிகிறதா என்று பார்க்கலாம். மிகிமா "தேவன்" அவர்களின் "கோமதியின் காதலன்" நாவலைத் தேடிப் பிடித்து வாசித்த மாதிரி பலருக்கும் இதன் மூலம் வாசிக்கும் பழக்கம் வரலாம். ஆகவே கொஞ்ச நாட்கள் தொடரலாமா? அந்தக் கால கட்டத்து நாகரிகம், பேச்சு, வார்த்தை, சுற்றுவட்டாரங்களின் சூழல், சமூகச் சூழல்னு எல்லாமும் தெரிந்து கொள்ள இயலும்.  அப்போதைக்கு இப்போது நாம் எவ்வளவு மாறி இருக்கோம், எந்த விதத்தில் மாறி இருக்கோம்னு எல்லாம் புரியும்.  நம் தமிழ் பேசும் பாங்கே மாறி இருப்பதைப் புரிஞ்சுக்கலாம். சங்கத்தமிழ், பக்தி இலக்கிய காலத் தமிழ், பின்னால் சோழர் காலத் தமிழ், பிற்காலத் தமிழ், நாயக்கர் காலத் தமிழ், பின்னர் ஆங்கிலேய ஆட்சி காலத் தமிழ் எனத் தமிழ் மாறி வந்ததும் அறிய முடியும். வை.மு.கோ. காலத்தில் இருந்து எடுத்துப் போடணும்னு ஆசை தான்! ஆனால் எல்லோரும் படிச்சிருக்கணுமே! :)

ம்ம்ம்ம் எல்லோரும் தீபாவளி பக்ஷணம், பட்டாசு, துணிமணிகள் வாங்குவது என மும்முரமா இருப்பீங்க. நம்ம வீட்டிலே இந்த வருஷம் தீபாவளி இல்லை. அதுக்குனு இனிப்புச் செய்யாமல் இருப்போமா என்ன? இன்றைய விசேஷத்துக்காக நேத்திக்கு ஓர் இனிப்புச் செய்தேன். அது தென் மாவட்டங்களிலேயே குறிப்பாத் திருநெல்வேலிப் பக்கம் அதிகம் செய்வாங்க. அதுவும் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வந்தால் இது நிச்சயம் இருக்கும். அப்புறம் அல்வா, தவலை வடை! இப்போ இந்த ஸ்வீட் எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? இதை முதல் முதலாச் செய்யறேன் என்பதால் சோதனை எலியாக யார் மாட்டிப்பாங்கனு கவலையா இருந்தது. அப்புறமா இன்றைய விசேஷத்துக்கு என வைச்சுட்டதாலே இன்னிக்குச் சாப்பிட வரவங்க சாப்பிட்டுப் பார்க்கட்டும்னு நாங்க தப்பிச்சுட்டோம். சேச்சே, நாங்க அப்புறமாச் சாப்பிடலாம்னு இருந்துட்டோம். நம்ம ரங்க்ஸுக்குத் தான் இதிலே ஏக சந்தோஷம்! அவர் இம்முறை சோதனை எலியாக இருப்பதிலிருந்து தப்பிச்சுட்டாரே!

இதோட பெயர் திரிபாகம். இதைப் பத்திக் கேள்விப் பட்டிருந்தாலும் செய்முறை எல்லாம் தெரியாது. இப்போத் தான் முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்ததைப் பார்த்துட்டு நானும் கூகிளார் தயவில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். தேவையான பொருட்கள்.

கடலை மாவு இரண்டு கிண்ணம்

பால் நல்ல கொழுப்புச் சத்து உள்ள பாலாக அரை லிட்டர்

சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம்

நெய் ஒரு கிண்ணம்

ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடித்தது ஒரு டீஸ்பூன்

பாதாம், முந்திரிப் பருப்புப் பொடித்தது இரண்டு டேபிள் ஸ்பூன். பாதாமை நீரில் ஊற வைத்துத் தோலுரித்துக் கொள்ளவும். 50 கிராம் பாதாம் எனில் 50 கிராம் முந்திரிப்பருப்பு, இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நறநறவெனப்பொடிக்கவும்.

 தட்டில் கடலை மாவு, ஏலக்காய்த் தூள் (சுமார் 30,40 ஏலக்காய்களை அல்லது பத்து கிராம் ஏலக்காய்களைத் தோலுரித்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்துப் பொடித்து வைத்துவிடுவேன். தேவையானப்போ உபயோகிக்கலாம். குட்டி டப்பாவில் பச்சைக் கற்பூரம்.


மற்றத் தேவையான பொருட்கள், முன்னால் இருப்பது அரை லிட்டர் பால், பக்கத்தில் நெய், பின்னால் கவரில் சர்க்கரை, பக்கத்தில் முந்திரி, பாதாம் பொடித்தது!


அடுப்பில் கடாயை வைத்துக் கடலைமாவை அதில் போட்டு நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அரை லிட்டர் பாலை அதில் சேர்க்கவும்.



பால் சேர்த்துக்கிளறும்போது மேலே காணும்படி பேஸ்ட் மாதிரி வரணும். நன்கு கிளறிக் கொடுக்கவும். கட்டி தட்டக் கூடாது! பின்னர் சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம் அவரவர் இனிப்புச் சுவைக்கு ஏற்றாற்போல் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் கலவை நீர் விட்டுக் கொண்டு கீழ்க்கண்டபடி வரும்.



இப்போது இதில் நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும். கிளறிக் கொண்டே இருக்கையில் உள்ளே நாலாபக்கமும் நிறம் மாறிப் பொன் நிறத்தில் பூத்துக் கொண்டு பொங்கி வர ஆரம்பிக்கும். அந்த நிலையில் படம் எடுக்க முடியவில்லை. ஏனெனில் படம் எடுத்தால் கிளற முடியாது! ஒரு கையால் கிளறிக் கொண்டே படம் எடுப்பது சிரமம். ஆகவே அந்தச் சமயம் பொடித்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் கலவையைக் கொட்டிக் கிளறிவிட்டு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து ஒரு கிளறு கிளறிக் கீழே இறக்கித் தாம்பாளத்தில் கொட்டி விட்டேன். இது பாதாம் அல்வா பதத்துக்கு அல்லது திரட்டுப் பால் பதத்துக்கு இருக்க வேண்டும். முந்திரி, பாதாமைச் சேர்த்த பின்னர் அதிகம் கிளற வேண்டாம் என்கின்றனர். ஆகவே இது நன்கு ஆறியதும் பட்டர் பேப்பர் என்னும் வெண்ணெய் பேப்பரில் உருட்டி வைத்துத் தட்டையாக ஆக்கி நாலாபக்கமும் மூட வேண்டும். விநியோகம் மற்றவர்களுக்குக் கொடுக்க எல்லாவற்றுக்கும் அப்படித் தான் வைச்சுப்பாங்க! கீழே அடுப்பிலிருந்து எடுத்துக் கொட்டியதன் படம்.

இது தான் திரிபாகம் என்பது! இது கடலைமாவு சேர்ப்பதால் மைசூர்ப்பாகு மாதிரியும், பால் சேர்ப்பதால் திரட்டுப் பால் மாதிரியும், முந்திரி, பாதாம் சேர்ப்பதால் காஜு கத்லி மாதிரியும் இருப்பதால் இதுக்கு அந்தப் பெயர்னு நினைக்கிறேன். இந்த வருஷ தீபாவளி சிறப்புப் பலகாரம் இதான்!

இன்னிக்கு வர முடியாதுனு நினைச்சேன். வந்துட்டேன். சுடச் சுடப் பதிவும் போட்டுட்டேன். எங்கள் ப்ளாக் "திங்க"ற கிழமைக்குத் தான் அனுப்ப இருந்தேன். ஆனால் இப்போ தீபாவளி என்பதாலும் நாளைக்கே இதைச் செய்து பார்க்கலாம் என்பதாலும் என்னோட வலைப்பக்கமே போட்டுட்டேன். நாளைக்கு எப்படி வர முடியும்னு சொல்ல முடியாது! இதுக்குக் கருத்தெல்லாம் சொல்லி வைங்க! மெதுவா வந்து பார்க்கிறேன். :) அநேகமா இதுக்குக் கூட்டம் கூடும்!

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி! புதிர் வருது, வருது, வந்துட்டே இருக்கு!

44 comments:

  1. பதிவில் செய்முறை என்னாச்சு பாதியில் நிற்கிறது ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இரண்டு, மூன்று முறை சோதித்து விட்டேன். எனக்குப் பதிவு முழுசும் தெரியுதே! :(

      Delete
  2. இது என்ன அநியாயமா இருக்குது. கீதா சாம்பசிவம் மேடத்தை நம்பி திரிபாகம் (அட பேர் நல்லாருக்கே... அடுத்து சதுர்பாகம் ஸவீட் வருதா? துவிபாகம் ஸ்வீட் ஏற்கனவே போட்டாச்சா?) ஸ்வீட் பண்ண ஆரம்பிச்சா பாதியோட நிற்கிறது. இப்போ என்ன செய்ய?

    இதுவரை கேள்விப்படாத பேராவும் இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. முழுசும் போட்டிருக்கேன்! உங்களுக்கும் பாதியோட நிற்குதா? எங்கே எந்த இடத்தில் புரியலை?

      Delete
    2. கடலை மாவை வறுத்துப் பால் சேர்த்துப் பின்னர் சர்க்கரை சேர்த்து நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு பூத்து வரும்போது முந்திரி, பாதாமைச் சேர்க்கணும். கீழே இறக்கணும். இவ்வளவு தான் திரிபாகம். அதை முழுசும் கொடுத்திருக்கேன்! எனக்கு என்ன தப்பு, எங்கே தப்புனு புரியலை! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  3. வேறே யாரானும் பார்த்துட்டுச் சொல்றாங்களானு பார்க்கலாம். :( இப்போவும் எனக்குச் சரியா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது 100% ஓகே முதலில் பகுதியோடு இருந்தது படமும் இல்லை தலைப்பும் இல்லை.

      புதிர்கள் வரட்டும் தீபாவளி வாழ்த்துகள்.
      திருத்தும் முன்பே வெளியிட்டு இருப்பீர்கள்.

      Delete
    2. !!!!!!!!!!!!!!!!!! அப்படியா? திருத்தற வழக்கமே இல்லையே! ஏதோ தொழில்நுட்பக் கோளாறு போல! நான் இரண்டு மூன்று முறை அப்டேட் செய்தேன். அதில் சரியாகி இருக்கு போல! சொன்னதுக்கு நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. இப்போ செய்முறையும் படங்களும் முழுமையாத் தெரியுது. மைசூர்பாக்கு மாதிரி இருக்கேன்னு நினைக்கும்போதே இரண்டு மூணு ஸ்வீட் செய்முறை சேர்ந்தமாதிரி இருக்கு. ஆனா பார்க்க நல்லாவும் எளிதாகவும் இருக்கு. உங்களை மாதிரி அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஜுஜுபி.

    எப்போவும் ஸ்வீட் பண்ணும்போது சரியா வருமா அல்லது எப்போவாவது சொதப்புமா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெ.த. முதலில் ஏன் அப்படி வந்ததுனு புரியலை! எனக்குச் சரியா இருந்தது. நல்லவேளையா சொன்னீங்க ரெண்டு பேரும்! இது ரெண்டு, மூணு ஸ்வீட் சேர்ந்தாப்போல் தான் ருசி, மணம், குணம் எல்லாம்! ஜுஜுபி எல்லாம் ஒண்ணும் இல்லை! நேத்திக்குத் தான் முதல்முறையாப் பண்ணறேன் என்பதால் கொஞ்சம் திக், திக் தான்! அதுவும் சாப்பிட்டும் பார்க்க முடியாது! :) இன்னிக்கு வந்த விருந்தாளி சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கு என்றதும் தான் கவலை விட்டது! நம்ம ரங்க்ஸ் சாப்பிட்டுவிட்டுக் கல்கண்டு சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்குனுட்டார்! :) பால் இன்னும் சேர்த்திருக்கலாமோ என நினைத்தேன். அல்லது கோவா சேர்க்கலாமோ? கோவா சேர்த்து நிறையச் செய்தாச்சு! இம்முறையில் இப்போத் தான் செய்து பார்த்தேன். சமயத்தில் சொதப்பும்! அப்படிச் சொதப்பினால் அதைச் சமாளிப்ஸ் வேலை செய்ய வேண்டியது தான்!

      Delete
    2. உங்க வீட்டுக்கு வரும் விருந்தாளியை வைத்துதான் மைக் டெஸ்டிங் செய்வீங்களா ? பாவம் அவர் இந்த பதிவு பிக்க மாட்டாரோ.... ?

      Delete
    3. வாங்க கில்லர்ஜி, மீள், மீள், மீள் வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பின்னே! வேறே என்ன செய்யறதாம்? அவர் சாப்பிடப் போறார் என்பதற்காகத் தானே இந்த ஸ்வீட் எல்லாம்! சாப்பிட்டார். நல்லா இருக்குனு சொல்லிட்டார். மேலும் அவர் திருநெல்வேலி+நாகர்கோயில் இணையும் பகுதியில் உள்ள ஊர்க்காரர். அதனால் இதைப் பத்தி அவருக்குத் தெரியும். அவர் குடும்பம் கல்யாணங்கள், விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுக்கிறார்கள். :) வ.வா.பி.ரி. பட்டம் கிடைக்குதுன்னா சும்மாவா? :)

      Delete
    4. திசையன்விளை ஊர்க்காரரா ?

      அதென்ன வ.வா.பி.ரி எனது அறிவுக்கு புரியும்படி சொல்வது நல்லது.

      Delete
    5. ஹாஹா கில்லர்ஜி! திசையன்விளை இல்லை! வ.வா.பி.ரி. என்பது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! என்பதன் சுருக்கம். :) அவங்க சமையலிலே கை தேர்ந்தவங்க! :)

      Delete
  5. அடடே... புதுசா இருக்கே... பெயர் நல்லாயில்லை.கடலைமாவு பால் கேக். அல்லது வேறு என்ன வைக்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், அதென்னமோ அந்தப் பேர் தான் வைச்சிருக்காங்க! அதான் முகநூலிலும் பார்த்தேன்.

      Delete
    2. ஸ்ரீராம் நான் இதனை மைசூர்பால் கேக்/ஸ்வீட் என்று சொல்லுவேன்...என் மகனுக்குப் பால் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் என்பதால் எல்லாம் மில்க் பௌடர் அல்லது மில்க் அல்லது சுகர் லெஸ்கோவா போட்டுச் செய்து பார்ப்பது வழக்கம்...இதில் ஸ்வீட்லெஸ் கோவா சேர்த்தும் செய்யலாம்...நன்றாக இருக்கும்.

      கீதா

      Delete
    3. வாங்க கீதா. அது மாதிரி கோவா போட்டு வடக்கே இருக்கையில் நிறையச் செய்தாச்சு! :) இப்படிப் பால் ஊற்றிச் செய்ததில்லை. :) நாளாக ஆக ருசியும் கூடுகிறது! மணல் மணலாக மேலே இருந்தாலும் உள்ளே காஜு கத்லி மாதிரி ருசி! :)

      Delete
  6. இந்த 'இறக்கும் பதம்' கண்டுபிடிப்பதுதான். தான் பேஜார். கொஞ்சம் மாறினாலும் நாம் இன்னும் புதிய பெயர் தேட வேண்டியதாகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், பழகினால் நமக்கே புரிஞ்சுடும். பாத்திரத்தில் ஒட்டாமல் நாலாபக்கமும் சுருண்டு வரும். மேலே பொங்கும்! அப்போப் படம் பிடிக்கணும்னு ஆசை தான்! பதம் என்ன ஆயிடுமோனு பயம்!

      Delete
  7. ஏலக்காய் பிடித்து வைத்துக் கொண்டால் வாசனை என்ன ஏர்டைட் கன்டெய்னரில் மூடி வைத்தாலும் பழைய வாசனை வரும் என்று மனப்பிரமை தோன்றும். அவ்வப்போது புதுசாய் பொடித்துக்கொள்வதே பெட்டர்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், ஏலக்காயை ஏன் பிடிச்சு வைச்சுக்கறீங்க? நான் பொடிச்சுத் தானே வைச்சுக்கச் சொன்னேன். இப்போ எனக்கு அடுத்தடுத்துத் தேவை இருப்பதால் சீக்கிரம் செலவாயிடும். இல்லைனா பண்டிகை சமயத்தில் பொடிச்சு வைச்சுப்பேன். :))))))

      Delete
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளிக்கு புதிய ஸ்வீட் திரிபாகம் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி! டெஸ்ட் பண்ணிட்டேளா? ஓ சாரி! டேஸ்ட் பண்ணிட்டேளா!

    ReplyDelete
    Replies
    1. அட சுரேஷ், கிட்டத்தட்ட ஒரு வருஷம்/இரண்டு வருஷம்??? நினைவில் இல்லை. கழிச்சு வந்ததுக்கு நன்றி. நீங்க எழுத்துலகில் பிரபலமாகிக் கொண்டு வருவது குறித்தும் சந்தோஷம்.அதற்கான தகுதிகள் உங்களிடம் நிறையவே உள்ளன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். திரிபாகம் செய்து தீபாவளி கொண்டாடுங்கள்.

      Delete
  9. அட தீபாவளிக்கு இனிப்பு பலகாரம் நான் முதலில் படிக்கும் போது அல்வாவோ சொல்லநினைத்தேன் நீங்க வேற சுவீட் திரிபாகம் பெயருடன் க -மாவு ரெசிபி கொடுக்கறீங்க நல்ல தான் இருக்கு படங்களுடன் ஜோர் செய்து கொண்டே நீங்களே படமுமா சூப்பர் இன்றைய தமிழில் சொல்லனும்னா செம டக் தான் நீங்க ஹா ஹா செய்து பார்த்து சொல்கிறேன் அநேகமா மற்றொரு பெயர்தான் வைப்பேனோ தெரியலை:-):- ) இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, போன பதிவிலே உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன். வரலை! இப்போ தீபாவளி ஸ்வீட் சாப்பிட வந்ததுக்கு நன்றி. செய்து பார்த்துட்டுச் சாப்பிட்டும் பார்த்துட்டுச் சொல்லுங்க. :) கட்டாயம் பிடிக்கும்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

      Delete
  10. //மிகிமா "தேவன்" அவர்களின் "கோமதியின் காதலன்" நாவலைத் தேடிப் பிடித்து வாசித்த மாதிரி பலருக்கும் இதன் மூலம் வாசிக்கும் பழக்கம் வரலாம்.// நன்றி! புத்தகங்கள் படிப்பதில் எனக்குள்ள ஆர்வத்துக்கு என் பெற்றோரே காரணம். என் அப்பாவுக்கு தேவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லையாதலால் நான் துப்பறியும் சாம்பு தவிர வேறு தேவன் புத்தகங்கள் முன்பு படித்தது இல்லை! //வை.மு.கோ. காலத்தில் இருந்து எடுத்துப் போடணும்னு ஆசை தான்! ஆனால் எல்லோரும் படிச்சிருக்கணுமே!// புதிராக இல்லாமல் பதிவாகப் போட்டால் தெரிந்து கொள்கிறோம்!! :-))
    திரிபாகம் பெயரை வேணுமானால் திரிஷா என்று மாற்றி விடலாம்!! எனக்கு இந்த த்ரீ ஸ்வீட்ஸும் பிடிக்கும் ஆதலாம் இந்த ஸ்வீட்டும் பிடிக்கும் என நம்புகிறேன். செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. //என் அப்பாவுக்கு தேவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லையாதலால் நான் துப்பறியும் சாம்பு தவிர வேறு தேவன் புத்தகங்கள் முன்பு படித்தது இல்லை!//

      ஆச்சரியமான விஷயம் மிகிமா. தேவன் அவர்கள் மிகவும் பிரபலமான அருமையான எழுத்தாளர்! மற்றப் புத்தகங்களும் படித்துப் பாருங்கள். அதிலும் ஶ்ரீமான் சுதர்ஸனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் இரண்டும் படிச்சால்! அருமை! மிஸ்டர் வேதாந்தமும், துப்பறியும் சாம்புவும் தூர்தர்ஷன் சென்னையில் அது பொதிகை ஆகும் முன்னர் தொடராக வந்து கொண்டிருந்தது. பரவாயில்லை ரகம். ஶ்ரீதரின் தம்பி சி.வி.ராஜேந்திரனின் இயக்கம் என ஆசையாகப் பார்க்க ஆரம்பித்துக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

      Delete
  11. மைசூர் பாகு ,திரட்டுப்பால் காஜு கத்லி செய்ய சோம்பேறிபட்ட திருநெல்வேலி பெண்மணியால் கண்டுபிடிக்கப்பட்ட பலகாரம்தான் திரிபாகம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அவர்கள் உண்மைகள்! ஹாஹாஹா! தனித்தனியாச் செய்யறதை விட ஒண்ணாச் செய்து ஒவ்வொண்ணையும் நினைச்சுட்டுச் சாப்பிடலாம்னு தோணி இருக்கும்! :)

      Delete

  12. உங்க வீட்டுகாரருக்கு உங்க மேலே கரிசனமே இல்லை நீங்கள் பலகாரம் செய்து கொண்டே போட்டு எடுக்கிறீங்க அது எவ்வளவு கஷ்டம் அதை பார்த்து உதவாதா அவருக்கு கண்டணம்

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அவருக்குக் கரிசனம் இருப்பதால் தான் வரலை! வந்தால் சொதப்பிடும்! ஃபோட்டோ எல்லாம் எடுக்கும் அளவுக்குப் பொறுமை கிடையாது! அடுத்த காரணம் நான் ஃபோட்டோ எடுத்துப் போடுவேன் என்பதையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். பல சமயங்களிலும் சொல்லாமலேயே படம் எடுத்துப் போட்டிருப்பேன். திடீர்னு தோணும். படம் எடுத்துப் போடுவேன். :)

      Delete
  13. கீதாம்மா நீங்க இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீங்க அதனாலதான் ஸ்விட் செஞ்சுகிட்டே போட்டோ எடுக்குறீங்க.. ஆனால் இப்படி ரிசிப்பி பதிவு போடும் பல பலகாரம் செய்வது போல போட்டோக்கு போஸ் கொடுப்பது மட்டும்தான் அவர்கள் மீதி எல்லாம் அவர்கள் வீட்டுகாரர்கள் மட்டும்தான் செய்வார்கள் ...நோ நோ செய்யனும்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் உண்மைகள்! செய்யத் தெரிஞ்சால் செய்யலாமே! அதனால் என்ன தப்பு? எங்க வீட்டிலே ஆண்களும் சமையலில் பங்கெடுப்பது உண்டு! என்றாலும் எல்லாத்துக்கும் கூப்பிடுவதில்லை! :)

      Delete
  14. Replies
    1. நன்றி நாஞ்சில் கண்ணன். தீபாவளி வாழ்த்துகள்.

      Delete
  15. இங்கு வந்து கருத்துச் சொல்லிப் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கக் குடும்பத்தினர் அனைவரோடும்,உற்றார்உறவினரோடும், நண்பர்களோடும், தீபாவளித்திருநாளைக் கொண்டாட வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா .
    எங்க வீட்ல ஒரே ஒருத்தர்தான் ஸ்வீட் வெரி ஸ்வீட் பிரியர் :) அவருக்காக கொஞ்சம் குவான்டிட்டி போட்டு செய்து பார்க்கிறேன் .
    இந்த பச்சை கற்பூரம் மட்டும் என் கண்ணிலேயே படலை இங்கே :) ஹிந்தி பேர் வேறெயோ தெரில ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சலின். பச்சைக்கற்பூரம் இந்தியாவின் வடமாநிலங்களிலேயே பார்த்ததில்லை! வெளிநாட்டில் எப்படிக்கிடைக்கும்? எதுக்கும் இங்கே இருக்கும் ஒரு ராஜஸ்தானியரிடம் இதைக் காட்டிப் பெயர் என்ன ஹிந்திலேனு கேட்டுடணும்! :)

      Delete
    2. edible camphor என்றால் பச்சைக்கற்பூரம். இந்தியக் கடைகளில் கிடைக்கும்.

      Delete
  17. கீதாக்கா இந்த ஸ்வீட் செய்ததுண்டு ஆனால் 2 கப் சர்க்கரைதான் நான் சேர்க்கிறதுண்டு. இதில் பருப்புகளைப் பொடித்துக் கடைசியில்தான் சேர்க்க வேண்டும் ஏனென்றால் பதம் மாறிவிடும். முந்திரி பொடி ஸ்வீட்டின் பதத்தையே மாற்றும் எளிதில் பதம் காட்டாது. நீங்கள் சொல்லுவது போல் இது பதம் காட்டுவது நம்மை படுத்தும் கவனமாகச்செய்யணும் தான். நான் இதனை பருப்புகள் போடாமலும் செய்வதுண்டு. பச்சைக் கற்பூரம் சேர்ப்பதில்லை. மில்க் கடலைமாவு டேஸ்ட் தெரியாமல் போய்விடுமென்பதால்...அப்புறம் நெய்யை நான் கொஞ்சம் சூடாக்கி விட்டு விட்டுச் செய்வேன் மைசூர்பாகிற்குச் செய்வது போல்...நான் இதை மைசூர்பால் ஸ்வீட் என்பேன்....

    திரிசங்கு என்று சொல்லலாமோ.....அதுவுமில்லை இதுவுமில்லை என்பதால் ஹிஹிஹிஹி

    என் அம்மா எங்கள் ஊரில் கறந்த பால் வாங்கி அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருப்பார்கள். அது நல்ல ப்ரௌனாகி கொட்டும் பதம் வரும் போது முந்திரி பௌடர்....ஃபைன்பௌடராகச் செய்யாமல் கொஞ்சம் கரகர ரொம்பச் உடைத்த உளுந்து இருப்பது போல்...செய்து சேர்த்து பதம் வந்ததும் கொட்டி பீஸ் போடுவார்கள். பார்க்க சாக்லேட் போல் இருக்கும் ஆனால் பால் கேக். பார்த்தால் கடிக்க கடினமாக இருக்குமோ என்று தோன்றும் ஆனால் கடிக்க கடினமாக இருக்காது. வெகு டேஸ்டியாக இருக்கும். க்றந்த பாலி நன்றாக வருகிறது. அதுவும் எருமைப்பாலில்தான். ஆவின் பாலில் செய்வதை விட... என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். அம்மா இறந்து 4 வருடங்களில் பங்களூர் சென்றிருந்த போது நந்தினி டயரி தயாரிக்கும் மில்க் ஸ்வீட் சிங்கிள் சிங்கிள் பீசாக ஒரு சிறிய பாக்கெட்டில் விற்றாற்கள் அப்போது....கெம்பகௌடா பஸ்ஸ்டாண்டில் இந்த ஸ்வீட் நானும் மகனும் சாப்பிட்டு அசந்து போனோம் மகன் உடனே அம்மா பாட்டி பன்ற அதே ஸ்வீட் என்று சொல்லி நிறைய வாங்கிக் கொண்டு போனோம் வீட்டிற்கு அவன் சாப்பிட...இப்போதும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லி இருக்கும் சாக்லேட் கேக் என் மாமியார் வீட்டில் ரொம்பப் பிரபலம். வீட்டிலேயே நாலைந்து கறவை மாடுகள் இருந்தனவே! ஆகவே நினைச்சால் செய்வாங்க! நானும் முயன்று பார்ப்பேன். நந்தினி டயரியில் கொடுக்கும் அந்த ஸ்வீட் ரொம்பவே நல்லா இருக்கும். நம்ம ரங்க்ஸ் பெண்களூர் அலுவலகத்துக்கு வேலையாச் செல்லும்போதெல்லாம் வாங்கி வருவார்.

      Delete
  18. எங்கல் பிளாக்கில் நீங்கள் பதிந்த அதிரசம் போன்ற காரமான ஆப்பம் அன்றே செய்து உண்டோம். சுவையாகவே இருந்தது.பச்சை மிளகாய் போட்டதனால் தொட்டுக்க எதுவும் தேவையாக இருக்கவில்லை. இரவு டிபனே அதுவாய் தான் இருந்தது. அடுத்த தடவை வெல்லம் சேர்த்து செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன்.

    அதற்கும் முன் இந்த திரிபாகம் செய்து பார்த்து விட வேண்டியது தான்.எனக்கு சோதனை எலிகளுக்கு பஞ்சமே இல்லையம்மா. வீட்டில் செய்தால் அடுத்த நாள் ஹோட்டலில் கொண்டு போய் வைத்தால் போகும் போதும் வரும் போதும் வேலை செய்யும் ஆட்களே அனைத்தையும் காலி செய்து விடுவார்கள்.

    அதிலும் இனிப்பு பலகாரம் எனில் பெயரே தேவையில்லை. நான் இப்படித்தான் ஹோட்டல் டெசட்டுக்கே புதிது புதிதாய் நெட்டில் பார்த்து சுட்டுக்கொள்வேன்.வீட்டில் இப்போதெல்லாம் அதிகம் சமையலில் மெனக்கெடுவதில்லையாதலால் ஹோட்டலில் செய்து எல்லோருமே சாப்பிட்டு விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிஷா. நீண்ட நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி. அந்த வெள்ளையப்பம்/போண்டா நன்றாகவே இருக்கும். இப்போத் திரிபாகமும் முயன்று பாருங்க! நல்லாவே இருக்கு!

      Delete