முகநூல் நண்பர்கள் பலருக்கும் திரு பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா.சு. அவர்களைத் தெரியாமல் இருக்காது. பல்லாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதின ரவாதோசை பற்றியதொரு கட்டுரையை யாரோ மீண்டும் கேட்க அதைப் பதிவிட்டதோடு ஆனியன் ரவாதோசை ரசிகர் சங்கம் என்னும் பொருள்படி ORDS என்னும் ரசிகர் மன்றத்தையும் துவக்கி அதில் சேருபவர்கள் அவரவருக்கு வெங்காய ரவாதோசையோடு ஏற்பட்ட அனுபவங்களைப் படங்களுடன்பதியச் சொல்லி இருந்தார். அப்போ நான் அம்பேரிக்காவில் இருந்தேன்னு நினைக்கிறேன். பையர் வீட்டிலோ, பெண்ணின் வீட்டிலோ ரவாதோசையே பண்ண முடியாது! அப்படியும் ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் எனப் பெண் வீட்டில் ரவாதோசை பண்ணியும் அதைப் படம் எடுத்துப் போட முடியலை. அதுக்குப் பரிசு எல்லாம் கொடுத்தார்! ம்ஹூம்னு பெருமூச்சு விட்டதோடு சரி! நமக்குக் கொடுத்து வைக்கலைனு நினைச்சுண்டேன். அவர் ரவாதோசை பற்றி எழுதிய வெங்காய ரவாதோசை மஹாத்மியம் சுட்டி கிடைச்சால் பகிர்கிறேன்.
அப்புறமா இந்தியா வந்ததும் பலமுறை ரவாதோசை (ஆசை தீர) பண்ணினாலும் ஆனியன் போட்டுப் பண்ண முடியலை. நேத்திக்குத் திடீர் என ரவாதோசை பண்ணும் எண்ணம் வந்தது. ஆனால் காலம்பர சாம்பார் வைக்கலை. ராத்திரிக்கு வைச்சால் மிஞ்சிடும். ஆகவே தேங்காய்ச் சட்னி, ஏற்கெனவே முதல்நாள் அரைச்சு வைச்சிருந்த தக்காளிச் சட்னி மற்றும் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு திருப்தி அடையலாம்னு முடிவு கட்டினேன். இதிலே நம்ம ரங்க்ஸ் தேங்காய்ச் சட்னியைத் தவிர மற்றவற்றைக் கண்ணெடுத்தும் பாரார்! ஆகவே கொத்துமல்லிச் சட்னியும் ஏற்கெனவே அரைச்சது கொஞ்சம் இருந்ததைத் தேவை எனில் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன். யாருப்பா அங்கே கொத்துமல்லி விற்கிற விலையில் னு கூவுறது? ஹிஹி, அதான் அரைக்கலையே! மற்றபடி தேங்காய், வெங்காயச் சட்னிகள் தயார் செய்யப்பட்டன. ரவாதோசைக்குக் கலவையும் கலந்து வைக்கப்பட்டது. ஹிஹி, மாவு கலக்கும்போது படம் எடுக்கும் நினைவு வழக்கம் போல் இல்லை. முதல் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் ஊற்றியதும் நினைவு வந்தது. கீழே மாவு கலந்திருக்கும் பாத்திரத்தின் மேல் தோசைத்திருப்பியோடு! :)
தோசையை தோசைக்கல்லில் ஊற்றியதும் எடுத்த படம்! நினைவா எடுத்துட்டோமுல்ல! :)
தோசையைத் திருப்பிப் போட்டதும் எடுத்த படம் கீழே!
திருப்பிப் போட்டதும் எடுத்த படம். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியதால் ஜாஸ்தி தெரியாது. அதோடு நான் வெங்காயத்தை மாவோடு கலந்து விட்டேன். ஓட்டல்களில் மேலே தூவுறாப்போல் தூவவில்லை. ஏனெனில் வெங்காயம் கொஞ்சம் முறுகலாக ஆனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். மேலே தூவினால் பச்சை வெங்காயம் மாதிரியே இருக்கு பல சமயங்களிலும். கீழே சட்னி வகைகள்.
முன்னால் தெரிவது தேங்காய் அதுக்கு வலப்பக்கம் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, இடப்பக்கம் வெங்காயச் சட்னி! ஆசையாய் தோசை சாப்பிட வாங்க!
ரவாதோசை கலவைக் குறிப்பு:
நல்ல பொடி ரவையாக இருந்தால் அரை மணி முன்னால் ஊற வைச்சால் போதும். எங்களோடது கொஞ்சம் பெரிய ரவை. என்றாலும் அரை மணி முன்னால் தான் ஊற வைச்சேன்.
ரவை இரண்டு கரண்டி அல்லது ஒரு சின்னக்கிண்ணம்
அரிசி மாவு ஒரு சின்னக் கிண்ணம்
வறுத்து அரைத்த உளுத்தமாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு ஒரு கரண்டி! (மைதாமாவு இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை! ஆதலால் கோதுமை மாவு! உளுத்தமாவு சேர்ந்து வரதுக்காக! எப்போவுமே கைவசம் இருக்கும் வறுத்து அரைத்த உளுத்த மாவு!) எந்த தோசைக்கும் உளுத்தமாவு போட்டால் நன்றாக எடுக்க வரும். இதில் பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கடுகு தாளித்துவிட்டு அரை மணி வைத்துப் பின்னர் தோசை வார்க்க ஆரம்பிக்கலாம்.
அப்புறமா இந்தியா வந்ததும் பலமுறை ரவாதோசை (ஆசை தீர) பண்ணினாலும் ஆனியன் போட்டுப் பண்ண முடியலை. நேத்திக்குத் திடீர் என ரவாதோசை பண்ணும் எண்ணம் வந்தது. ஆனால் காலம்பர சாம்பார் வைக்கலை. ராத்திரிக்கு வைச்சால் மிஞ்சிடும். ஆகவே தேங்காய்ச் சட்னி, ஏற்கெனவே முதல்நாள் அரைச்சு வைச்சிருந்த தக்காளிச் சட்னி மற்றும் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு திருப்தி அடையலாம்னு முடிவு கட்டினேன். இதிலே நம்ம ரங்க்ஸ் தேங்காய்ச் சட்னியைத் தவிர மற்றவற்றைக் கண்ணெடுத்தும் பாரார்! ஆகவே கொத்துமல்லிச் சட்னியும் ஏற்கெனவே அரைச்சது கொஞ்சம் இருந்ததைத் தேவை எனில் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன். யாருப்பா அங்கே கொத்துமல்லி விற்கிற விலையில் னு கூவுறது? ஹிஹி, அதான் அரைக்கலையே! மற்றபடி தேங்காய், வெங்காயச் சட்னிகள் தயார் செய்யப்பட்டன. ரவாதோசைக்குக் கலவையும் கலந்து வைக்கப்பட்டது. ஹிஹி, மாவு கலக்கும்போது படம் எடுக்கும் நினைவு வழக்கம் போல் இல்லை. முதல் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் ஊற்றியதும் நினைவு வந்தது. கீழே மாவு கலந்திருக்கும் பாத்திரத்தின் மேல் தோசைத்திருப்பியோடு! :)
தோசையை தோசைக்கல்லில் ஊற்றியதும் எடுத்த படம்! நினைவா எடுத்துட்டோமுல்ல! :)
திருப்பிப் போட்டதும் எடுத்த படம். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியதால் ஜாஸ்தி தெரியாது. அதோடு நான் வெங்காயத்தை மாவோடு கலந்து விட்டேன். ஓட்டல்களில் மேலே தூவுறாப்போல் தூவவில்லை. ஏனெனில் வெங்காயம் கொஞ்சம் முறுகலாக ஆனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். மேலே தூவினால் பச்சை வெங்காயம் மாதிரியே இருக்கு பல சமயங்களிலும். கீழே சட்னி வகைகள்.
முன்னால் தெரிவது தேங்காய் அதுக்கு வலப்பக்கம் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, இடப்பக்கம் வெங்காயச் சட்னி! ஆசையாய் தோசை சாப்பிட வாங்க!
ரவாதோசை கலவைக் குறிப்பு:
நல்ல பொடி ரவையாக இருந்தால் அரை மணி முன்னால் ஊற வைச்சால் போதும். எங்களோடது கொஞ்சம் பெரிய ரவை. என்றாலும் அரை மணி முன்னால் தான் ஊற வைச்சேன்.
ரவை இரண்டு கரண்டி அல்லது ஒரு சின்னக்கிண்ணம்
அரிசி மாவு ஒரு சின்னக் கிண்ணம்
வறுத்து அரைத்த உளுத்தமாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு ஒரு கரண்டி! (மைதாமாவு இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை! ஆதலால் கோதுமை மாவு! உளுத்தமாவு சேர்ந்து வரதுக்காக! எப்போவுமே கைவசம் இருக்கும் வறுத்து அரைத்த உளுத்த மாவு!) எந்த தோசைக்கும் உளுத்தமாவு போட்டால் நன்றாக எடுக்க வரும். இதில் பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கடுகு தாளித்துவிட்டு அரை மணி வைத்துப் பின்னர் தோசை வார்க்க ஆரம்பிக்கலாம்.
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்ன கதையாயிருக்கிறதே...... படித்துவிட்டு எழுதுகிறேன்....
ReplyDeleteவாங்க நெ.த. என்னது? புரியலையே?
Delete"நோ போட்டி ஶ்ரீராமோடு! " - இதைத்தான் சொன்னேன்.
Deleteஹாஹாஹாஹா, ஶ்ரீராமுக்கு மின்சாரம் இல்லை அல்லது இணையம் இல்லைனு நினைக்கிறேன். ஆளையே பார்க்க முடியலை! ராத்திரி வரார் போல! நான் தூங்கிடுவேன் அல்லது படுத்துடுவேன். :)))
Deleteஜராசு மாதிரி போட்டியெல்லாம் எங்கிட்ட பகிர்ந்துக்கலையே.... எங்க பரிசு கிடைச்சுடுமோன்னா?
ReplyDeleteஎன்னது.... ரவா ஒரு கப், அரிசி மா ஒரு கப், கோதுமை/மைதா மாவு அரை கப்பா? தோசையைத் திருப்பிப் போட்ட படம்தான் ரவா தோசைன்னு ஒத்துக்க வைக்குது.
என்னோட செய்முறைல எழுதி எங்கள் பிளாக்குக்கு படத்துடன் அனுப்பலாம்னா......அது வர நேரமாயிடும் (ஸ்லாட் ரொம்ப டிமான்ட்). - ஶ்ரீராமை இப்படி வம்புக்கு இழுத்தாத்தான் உண்டு.
நீங்க ப.மி, இஞ்சி, க.இலை, கொ.தழை அரைத்துச் சேர்த்திருவீங்களா?
நெ.த. ஹாஹாஹா, அந்தப் போட்டி நடந்த சமயம் என்னால் கலந்து கொள்ளவே முடியலை. ஆசை இருந்தது! ம்ம்ம்ம்ம்ம், மைதா மாவு இப்போல்லாம் சேர்க்கிறதில்லை. ரவையே எங்க பொண்ணு, பையருக்குத் தள்ளுபடி! :) அதனால் அங்கே பண்ண முடியாது! தோசையைப் பெரிதாகத் தான் ஊற்றினேன். காமாட்சி அம்மா சொன்னாப்போல் வீசி! துவாரங்களை அடைச்சுட்டதால் உங்களுக்குத் தெரியலை போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteமுகநூலில் பகிர்ந்தும் இன்னமும் ஜராசு சார் அதைப் பார்க்கலை! :(
Deleteநெல்லை, ரொம்பப் பொடியாக தோசை வார்க்க வசதியாக நறுக்கிச் சேர்ப்பதால் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி போன்றவை முழித்துப் பார்க்காது! :)
Deleteமாவைக் கரண்டியில் எடுத்து வீசி தோசையாகவே வார்க்கணும். அப்புறம் கரண்டியாலே ஷேப் கொடுக்க முடியாது அதையும் சொல்லுங்கோ. தோசை ஆசையாகச் சாப்பிடலாம் சுடச்சுட ரவாதோசை. அன்புடன்
ReplyDeleteஆமாம், அம்மா! கரண்டியால் துழாவி வட்டமாகக் கொண்டு வர முடியாது! ஆனாலும் எனக்கு இந்த தோசை தொட்டுக்க வகையா இருந்தாத் தான் உள்ளே இறங்கும். சின்ன வயசில் அம்மா பண்ணினால் அன்னிக்குச் சாப்பிட அடம் தான்! :)
Deleteநாளைக்கு மகளிடம் செய்ய சொல்லணும்
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, செய்து சாப்பிட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். நல்லா இருந்ததா?
Deleteஎனக்குப் பிடித்த டிஃபனில் ஒன்று! முன்பு தோசைக்கல்லிலிருந்து சாப்பிட வசதியாக எடுத்துக் கொண்டிருந்தேன், இப்போ எக்ஸ்பெர்ட் ஆயிட்டேனாக்கும் - ஹோட்டல் தோசை போலவே செய்வேன்! உளுந்த மாவு போட்டதில்லை, மைதாவும் போடுவதில்லை. ரவை மற்றவற்றை கலந்து ஊற வைக்கும்போது சிறிது மோர் சேர்ப்பேன்!
ReplyDeleteஅடுத்த முறை உளுந்த மாவு சேர்த்துப் பார்க்கிறேன்
வாங்க மிகிமா, உளுந்தமாவு பைன்டிங்கிற்காகத் தான்.மைதா சேர்க்க வேண்டாமே! அதான்! என்றாலும் கோதுமை மாவு ஒரு கரண்டியாவது போடுவேன். மோர் சேர்ப்பதும் உண்டு. இதிலே எழுதலை! :) உங்க செய்முறையையும் உங்களோட வலைப்பக்கத்திலே பகிர்ந்துக்கோங்க. வித்தியாசம் என்னனு தெரிஞ்சுக்கலாம்! :) வெ.பு.க. க்கு அப்புறமா எதுவுமே இல்லை போலிருக்கே! :)
Deleteமிகவும் பிடித்த தோசை அதுவும் ஆனியன் ரவா. நானும் மாவுடன் கலந்துவிடுவேன். என்னிடமும் உளுத்தம்பருப்பு வறுத்து அரைத்த மாவு இருக்கும் இல்லைனா கடையில் உளுத்த மாவு வாங்கி லைட்டாக வறுத்து வைத்துக் கொண்டுவிடுவேன். இந்தத் தோசையில் கலப்பதுண்டு. அதே போல தோசை மாவு அரைக்கும் போது அதிலும் கரண்டு மாவு எடுத்து அதிலும் இப்படிக் கலந்து செய்தாலும் நல்லா வருது. மெலிதாகவும் வரும். பார்க்கவே நல்லாருக்கு கீதாக்கா. அதுவும் சட்னிஸ் சூப்பரா இருக்கு.
ReplyDeleteதோசை, சப்பாத்தி செய்தால் ப்ரௌனிக்கு மூக்கில் வியர்க்கும். எழுந்து நின்று குதித்து குதித்துக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவாள். ஆனால் அவளுக்கு அவள் உணவைத் தவிர வேறு கொடுத்ததில்லை. சப்பாத்தியாவது ஒரு சிறு துண்டு மற்றபடி கொடுத்ததில்லை. இதைப் பார்த்ததும் ப்ரௌனியின் டிமாண்டிங்க் குரல் கேட்குது.
கீதா
வாங்க தில்லையகத்து கீதா, இட்லி, தோசை மாவு சில, பல சமயங்கள் ஒரு கரண்டி, இரண்டு கரண்டினு கொஞ்சமா மிஞ்சினால் நீங்க சொன்னாப்போல் அதிலே ரவை மட்டும் கலந்து தேவைன்னா உளுந்த மாவு கலந்து வார்ப்பேன்.
Deleteப்ரௌனி நினைவு என்றும் மங்காது! எங்க மோதிக்கு உடம்பெல்லாம் இல்லை! முதல்நாள் ராத்திரி கதவுக்கு வெளியே விடும்போது நல்லாத்தான் பார்த்து வாலை ஆட்டி விடை கொடுத்தான். மறுநாள் காலை மார்கழி மாதம் ஒன்றாம் தேதினு கோலம் போட நாலரைக்கே கதவைத் திறந்து விளக்கைப் போட்டுப் பார்க்கையில் ஒரு மாதிரியாகப் படுத்துக் கிடந்தான். சமயங்களில் விளையாட்டுக்கு அப்படிப் பண்ணுவான். போய்க் கூப்பிட்டால் பார்வையே ஒரு மாதிரி இருந்தது. உள்ளே போய்க் கணவரை அழைத்து வந்ததும் இருவரையும் பார்த்து எழுந்திருக்க முடியாமல் தலையை மட்டும் தூக்கிப் பார்த்து வாலாட்டியது தான்! உயிர் போய் விட்டது! அப்போ ஏற்பட்ட துக்கம் இன்னமும் மாறவில்லை. அதுக்கப்புறமும் ஒன்று வந்தது! ஆனால் வீட்டில் எல்லோரும் என்னோட உடல்நிலையை யோசிச்சு வேண்டாம்னு திரும்பக் கொண்டு விட்டுட்டாங்க! நானும் சரினு மனதைத் தேத்திக் கொண்டு 20 வருஷம் ஆகப் போகிறது! :( ஆனால் மற்றத் தெருநாய்களெல்லாம் நம்ம வீட்டில் தான் வந்து குடித்தனம் பண்ணும். குட்டிகள் போட்டுப் பாதுகாப்பது எல்லாம் நம்ம வீட்டுத் தென்னைமர நிழலிலே தான்! சாப்பாடெல்லாம் போட்டுப் பார்த்துக்குவேன். கிட்டே நெருங்க விடுவது இல்லை! குட்டிகளை மட்டும் பெரிதானதும் கொஞ்சம் தள்ளிப் போய் பத்திரமான இடத்தில் விட்டு விடுவோம். அல்லது கேட்பவருக்கு எடுத்துப் போகச் சொல்லுவோம். பூனை கூட ஒன்று இருந்தது. பசின்னா என்னைச் சுத்திச் சுத்தி வந்து சாப்பாடு கேட்கும்! அதுவும் அதோட குட்டிகளும் இந்தத் தெருநாய்களால்!!!!!!!!!!!!!!! அது ஒரு மன வேதனை! :(
எங்க மோதிக்கும் சப்பாத்தி பிடிக்கும். மாவு பிசையும்போது நான் உப்புச் சேர்ப்பதில்லை. வட மாநிலம் மாதிரி உப்பில்லாத சப்பாத்தி தான்! ஆகவே மோதிக்குக் கொடுப்போம். பண்ணப் போறேன்னு வாசனை தெரிஞ்சா சமையலறை வாசலிலேயே தவம் கிடக்கும்! உள்ளே வராது!
Deleteபார்க்கவே மொறு மொறுன்னு இருக்கே !!
ReplyDeleteஇங்கே கொத்தமல்லி லீவ்ஸ் கட்டு 3 ஒரு பவுண்ட் விலைக்கு கிடைக்குது எல்லாம் சைப்ரஸ் ஸ்பெயின் வரவு
நானும் மாவோடதான் வெங்காயத்தை சேர்த்து தோசை வார்ப்பேன் இது வரைக்கும் ரவா தோசைக்கு உளுந்து சேர்த்ததில்லை அதனால்தான் எனக்கு குண்டு குண்டா வந்திருக்கு தோசை .இனிமே உளுந்து மாவு சேர்க்கிறேன்
வாங்க ஏஞ்சலின், எல்லாக் காய்களும் இப்போது இங்கே விலை ஏறி விட்டன! :) கொத்துமல்லி இப்போக் கட்டு 15 ரூக்கு வந்திருக்காம். ரவா தோசை மெல்லிதாக வருமே! மாவு கலப்பதில் இருக்கு சூக்ஷ்மம்! :) இதே போல் கோதுமை, கேழ்வரகு மாவையும் கொஞ்சம் போல் அரிசிமாவு, உளுந்து மாவு கலந்து வெங்காயம் சேர்த்து/சேர்க்காமல் தோசை வார்க்கலாம். மெலிசாக நன்றாக வரும்! திருப்பிப் போடவும் சுலபமாக இருக்கும்.
Deleteகொத்துமல்லி இருக்கட்டும்.. தேங்காய் மட்டும் என்ன கம்மி விலையா?
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், சென்னையை விட இங்கே தேங்காய் விலை கம்மி தான். பதினைந்து ரூபாய்க்கு நடுத்தர அளவுத் தேங்காய் கிடைக்கிறது. நேற்றுக் கூட வாங்கி வந்தார்! ஒரு தேங்காய் உடைத்தால் அதை நான் ஒரு வாரத்துக்கு ஓட்டிடுவேன். :) சட்னி அரைச்சாலும் அன்றே தீர்ந்து போகும்படி அரைப்பேன். ஆகவே பிரச்னை இல்லை!
Deleteரவா தோசை எப்பவுமே என் ஃபேவரைட்.அதிலும் ஆனியன் ரவா... ஆஹா....
ReplyDeleteஅமையும் வகையில் அமைந்தால் அதைச் சாப்பிடும்சுவை இருக்கிறதே...சுற்றிலும் மொறுமொறு.... நடுவே பதமாய், கூட அளவாய் வெந்த வெங்காயம்... அவ்வப்போது கிடைக்கும் ஓரிரு முந்திரி... வெங்காய, தக்காளி, புதினா சட்னிகள்.
சாம்பார் மட்டும் கடைசியாய்தான் அதன்மேல் அபிஷேகம் செய்யவேண்டும்.இல்லா விட்டால் மொறுமொறுவை ரசிக்க முடியாமல் போகும்!
ஶ்ரீராம், அந்த மொறு மொறு பார்ட் ஒரு இரண்டு, மூன்று அங்குல நீளத்துக்கு எடுத்துக் கொண்டு சாம்பாரில் சூடாக இருக்கும்போதே முக்கிக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். மொறு மொறு டேஸ்டுக்கும், சாம்பாரின் சுவைக்கும்! அடடா! அதே போல் கடைசி வாய்க்குனு முறுகலைத் தனியா ஒதுக்கிடணும்! அதை வெங்காயம்/தக்காளிச் சட்னியில் தோய்த்துச் சாப்பிடணும். அந்தச் சட்னிக்குத் தனியா நல்லெண்ணெய் ஊத்திக்கணும். அந்த நல்லெண்ணெய் வாசனையோடு முறுகலும் சேர்ந்து! சொர்க்கம்! நான் தோசையே நல்லெண்ணெயில் தான் வார்ப்பேன்.
Deleteநெல்லை.. தோசைக்கு தனித் தொடர்பதிவே எழுதியிருந்தேன். அதில் ரவா தோசை, ஆனியன் ரவாக்கு ஸ்பெஷல் ஸ்லாட்!
ReplyDeleteஆமாம், ஆமாம், தோசையாயணம், இருந்ததே!
Deleteசாப்பாடு விஷயங்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதேயில்லை. நீங்கள் ரவா தோசை என்று சொன்னதும் 85-86ல் மதுரை கற்பகம் (ஸ்டேஷனுக்கு வெளியில்) ஹோட்டலில், ரவாதோசையும், அதன்மேல் சட்னி சாம்பாரும் விட்டுக்கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. அங்கு ரவா தோசையும் (களும்) மசாலா பாலும் அருந்திவிட்டு அப்புறம் காலேஜ் ஹாஸ்டலுக்குச் செல்வேன். 5-6 வருடங்களுக்கு முன்பு, அதே எண்ணத்தில் கற்பகம் ஹோட்டலுக்கு என் குடும்பத்துடன் சென்றேன். அவ்வளவு நன்றாக இல்லை.
Deleteஇங்க, சரவண பவனில், வெங்காய ரவா, எண்ணை விடாமல் வார்த்துத் தரவேண்டும் என்று சொன்னதற்கு, எண்ணெய் விடாமல், சீவல் தோசை மாதிரி, வெங்காயம் துருத்திக்கொண்டு தெரியாமல் வழித்துவிட்டு, நன்றாகத் தந்தார்கள். நல்லாத்தான் இருந்தது.
வெங்காயம் துருத்திக் கொண்டு தெரியாமல் இருக்க பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு மாவில் கலந்துடணும்! என் தம்பி பொடியாக நறுக்குவதைப் பார்த்தால் வெங்காயம் போட்ட மாதிரியே தெரியாது! தோசை சாப்பிடும்போது தான் தெரியும்! நானும் ஓரளவுக்குப் பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன்.
Deleteநெல்லை... அதே கற்பகத்தில் அதே காலகட்டங்களில் நானும் சாப்பிட்டிருக்கிறேன். இட்லி, குறிப்பாக சட்னி சாம்பார் அப்போது நன்றாயிருந்ததை நம்பி ஒரு சமீபத்திய பயணத்தில் நானும் ஏமாந்தேன். உங்கள் ஹாஸ்டல் எந்த ஏரியா?
Deleteநாகமலைப் புதுக்கோட்டை. நாங்க பல சமயம், காலேஜ் முடிந்து மதுரை வந்து, காலேஜ ஹவுஸ்ல, நான்/மட்டர் மசாலா சாப்பிட்டுவிட்டுப் போவோம் (7 ரூபாய்னு ஞாபகம். 4 ரூபாயாகவும் இருக்கலாம்-85ல்). அப்படி இல்லைனா, அந்த சைடுல மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி கேன்டீன் போவோம். இல்லைனா, இரவு கற்பகம்ல டிஃபன்-ரவாதோசை மசாலா பால் (படிப்பைத் தவிர எல்லாம் செய்தோம்).
Deleteகாமாட்சி அக்கா முக்கியமான குறிப்பை கொடுத்து விட்டார்கள்.
ReplyDeleteகீதா ரெங்கனுக்கு ப்ரெளனியின் குரல் நினைவுக்கு வந்து விட்டது.
உங்கள் தோசைத்திருப்பி எவ்வளவு நீட்டம்?
படங்கள் விவரம் எல்லாம் அருமை.
உங்கள் ரவா தோசை பதிவால் சொல்வனத்தில்
சொல்வனத்தில் ஜி.சுரேந்திரநாத் தானே! ஏற்கெனவே படிச்சேன். ஜி+ இல் அல்லது முகநூலில் னு நினைக்கிறேன். சொல்வனத்தில் படிச்சதில்லை. தோசைத் திருப்பி இங்கே ஶ்ரீரங்கம் கோயில் கடைகளில் நீளமாக வைத்திருக்கிறார்கள். எங்க பெண்ணுக்குக் கூட ஒன்று வாங்கிக் கொடுத்தோம்.
Deleteகீ.சா மேடம்.... அந்த தோசை திருப்பி, கடைகளுக்கு உண்டானதுன்னு நினைக்கறேன் (2 அடிக்கு 5 அடி தோசைக் கல்லுக்குள்ளது). ஆனாலும் ரொம்ப நீளமா இருக்கு.
Deleteபடத்தில் பார்க்க ரொம்ப நீளமாத் தெரியுதோ? முன்னால் இருந்ததும் இவ்வளவு நீளம் உள்ளதே! பல வருடங்களாக (கல்யாணம் ஆனப்போ இருந்து) அதை வைச்சிருந்தேன், ஶ்ரீரங்கம் வரச்சே அம்பத்தூரிலேயே விட்டுட்டு வந்திருக்கேன்! அதுக்கப்புறமா இங்கே வாங்கினது! ஆனால் முன்னால் இருந்தது தூக்க எளிது! இது கொஞ்சம் கனம்! தூக்கக் கடினம்! :)
Deletehttps://nanrasithathu.blogspot.com/2012/07/blog-post
ReplyDeleteபாக்கியம் ராமசாமியின் ரவா தோசை கட்டுரையை தேடியதில் அருமையான நினைவலை ரவா தோசை பதிவு கிடைத்தது படித்தேன்.
'தீனித்தின்னிகள் " என்ற பதிவு சொல்வனத்தில் வந்த பதிவு .
முடிந்த போது படித்துப் பாருங்கள்.
கோமதி அரசு, ஜராசு அவர்கள் இந்த ரவாதோசைக் கட்டுரையை ஆனந்த விகடன்/சாவி/குங்குமம்/குமுதம் நினைவில் இல்லை! எதிலோ 90 களின் கடைசியில் எழுதி இருந்த ஞாபகம். அதை யாரோ கேட்க மீள் பதிவாக முகநூலில் அவரோட டைம்லைனில் பகிர்ந்திருந்தார். அப்போத் தான் ஆ.ர.தோ.ர.ச. ஆரம்பிக்கப்பட்டது. கிடுகிடுவென்று ரசிகர்கள் சேர்ந்தோம்! அதன் பின்னர் போட்டி வைத்தார். மூன்று பேருக்குப் பரிசு கொடுக்கப்பட்ட நினைவு. முதல் பரிசி எஸ்.பி.ராமநாதன் அல்லது ர்வி ராதா என்பவர் இருவரில் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்த நினைவு! :)
Deleteஇந்தச் சுட்டிக்குப் போனால் திறப்பதில்லை கோமதி அரசு! :( நான் சொல்வனத்திலும் படிச்சுட்டேன்.
Deleteஎனக்கும் என் மகனுக்கும் பிடித்த தோசை. ஹோட்டலுக்கு சென்றால் நானும் ஜ.ரா.சு. போல ரவா தோசைதான் சாப்பிடுவேன். கடைசியாக மாயவரம் சென்ற போது, காளியாகுடியில் ரவா தோசை ஆர்டர் செய்தால், முறுகலாக தருகிறேன் என்று முறுக்கு போல வாயில் குத்தும்படி தந்து விட்டார்கள். சாப்பிடவும் முடியவில்லை, பசியும் தீரவில்லை. அதற்குப் பிறகு எங்கும் ரவா தோசை கேட்பதே இல்லை.
ReplyDeleteநான் உளுத்தம் மாவு சேர்ப்பது இல்லை. இனிமேல் சேர்த்து பார்க்கிறேன்.
இணையம் தகராறு ஆரம்பம். கருத்துகளைக் கொடுக்க சிரமமா இருக்கு! :) ஹோட்டலுக்குப் போனால் நான் வீட்டில் அடிக்கடி செய்யாத ஒன்றைச் சொல்லணும்னு நினைப்பேன். ஆனால் எல்லாமும் வீட்டில் செய்வது தான்! ஆனாலும் வழக்கமான இட்லி, தோசை வேண்டாமேனு தோணும்! மாயவரத்தில் இப்போது இருக்கும் காளியாகுடி ஒரிஜினலா? இல்லைனு சொன்னாங்க! நீங்க கும்பகோணம் போனால் பெரிய கடைத்தெரு முக்கில் இருக்கும் வெங்கட்ரமணாவில் ரவாதோசை சாப்பிட்டுப் பாருங்க! :)
Deleteஅமிர்தசரஸ் போனப்போ இரவு உணவுக்குத் தென்னிந்திய உணவு வேணும்னு ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போய் ரவாதோசை தான் ஆர்டர் பண்ணினோம். நீங்க சொன்னாப்போல் நாக்கில் ரத்தம் வந்துடும்போல் இருந்தது. பசியே மறந்து போச்சு! அதுக்கு 250 ரூ+ டிப்ஸ் எனக் கிட்டத்தட்ட 300 ஆச்சு! வயித்தெரிச்சல், ஃபுல்கா ரொட்டியே சாப்பிட்டிருக்கலாம். வயிறாவது நிறைஞ்சிருந்திருக்கும்.
Deleteரவா தோசை பேஷ் நன்னா இருக்கு குறிப்புகளுடன் நியாபக படுத்திட்டீங்க செய்ய வேண்டும்
ReplyDeleteவாங்க பூவிழி, செய்து பாருங்க, சொல்லுங்க சுவையை!
Delete//கரண்டியில் எடுத்து வீசி தோசையாகவே வார்க்கணும்
ReplyDeleteஎன்ன..? கரண்டியில் எடுத்து வீசணுமா?
வாங்க அப்பாதுரை! ஹாஹா, சாதாரண தோசை வார்க்க மாவைக் கரண்டியில் எடுத்து நடுவே விட்டுத் துழாவிப் பெரிதாக்குவோம் இல்லையா! இதுக்கு அப்படி இல்லை! மாவை வீசி முதலில் பெரிய ரவுன்ட் போட்டு எல்லைகளைத் தீர்மானித்துக் கொண்டு நடுவே மாவை மறுபடி அதே போல் விட்டு மூடிக் கொண்டு வரணும். பலருக்கும் ரவாதோசை வார்க்க வராது! :)
Deleteஎன்ன இத்தனை பெண்கள் வந்தும் ராவா தோசையை சரியாக செய்ய வழிமுறை தெரியவில்லையே...சரி வரும் வாரத்தில் ரவா தோசை எப்படி பண்ணுறதுன்னு ஒரு பதிவு போடுறேன்
ReplyDeleteஅவர்கள் உண்மைகள், இது நல்ல கதையா இருக்கே! மேலே நான் ரவா தோசை செய்யறதைத் தானே எழுதி இருக்கேன்! "ராவா" தோசையைச் சாப்பிடவா சொல்லி இருக்கேன்? :)))))
Delete