நேற்றைய தினம் துலா மாதப் பிறப்பு. இந்தத் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் ஸ்நானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. காவிரி பற்றிய புராணம் "துலா புராணம்" என்றே அழைக்கப்படுகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு (சின்ன ரங்கு) தினம் தங்கக்குடத்தில் காவிரி நீர் எடுத்துச் செல்லப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். கடந்த ஐந்து வருஷங்களாக இதைப் பார்த்து வருகிறோம். இந்த வருஷமும் அதே போல் ஆண்டாளம்மா காவிரி நீர் எடுத்துச் செல்லும் காட்சியைக் காணலாம். சரியா அம்மாமண்டபத்திலிருந்து ஆனையார் தெருவில் ஏறும் நேரம் தெருவிளக்கை எல்லாம் அணைச்சுட்டாங்க. அதனால் தூரத்தில் வருவதை எடுத்திருப்பது சரியாத் தெரியலை.
இது எங்க குடியிருப்பு வளாக வாசலில்!
அடடே... ஆனை!
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
அட! உடனே! தீபாவளி வாழ்த்துகள் ஶ்ரீராம். உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
Deleteதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteஉங்கள் எல்லோருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நெ.த. ஶ்ரீரங்கம் விசிட் உண்டா?
Deleteவாழ்த்துகள், வாழ்த்துகள்...
ReplyDeleteஅட! ஸ்பை! ஆனை உங்களை இங்கே வர வைச்சிருக்கா? நன்றி. நன்றி.
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி மனோ சாமிநாதன்
Deleteஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஆனையார் காட்சி ரசித்தேன். காண அருமையான ஒன்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா!
Deleteஸ்ரீரங்கக் காட்சிகளுக்கு நன்றி!!
ReplyDeleteநன்றி மிகிமா!
Deleteஉங்களுக்குத் தீபாவளி இல்லைனு சொன்னதாலே உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லவே இல்லை...
ReplyDeleteஎல்லோருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்
நன்றி துளசிதரன்/கீதா
Deleteரொம்ப சிறப்பு நன்றி பகிர்ந்தமைக்கு
ReplyDeleteநன்றி பூவிழி!
Deleteஇருட்டில படமெடுத்துப் போட்டிட்டு ஆனை போகுது பார் என்றால் நான் என்ன நம்பிடுவேனோ?:).. என்னை ஆரும் பேய்க்காட்ட ம்ய்டியாது!:)... ஆனையும் கறுப்பு இருட்டும் கறுப்பு:) கர்ர்ர்ர்:)...
ReplyDeleteஇருப்பினும் நீங்களும், ஆனையைப் பார்த்த ஸ்ரீராமும் பொய் சொல்ல மாட்டீங்க:) என்பதால டக்கென நம்பிட்டேன்... ஹா ஹா ஹா .
அழகு அழகு யானையின் நடையும் தீபாவளியும் அழகு...
ஹாஹாஹா அதிரா, காலை ஐந்தேமுக்கால் மணி! அதுவரை எரிந்து கொண்டிருந்த தெருவிளக்குகளை அணைச்சுட்டாங்க. இல்லைனா தூரத்திலேயே தெரிஞ்சிருக்கும். :)
Deleteமாயவரத்தில் துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் குளிக்கும் ஆட்கள் உண்டு. பல ஊர்களிலிருந்து வருவார்கள்.
ReplyDeleteஉங்கள் பகிர்வுக்கு நன்றி.
வாங்க கோமதி அரசு! மகன், மருமகள், பேரனோடு தீபாவளி மகிழ்வாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நினைக்கிறேன். இங்கேயும் துலா ஸ்நானத்துக்கு வருகின்றனர்.
Deleteஇனிய யானை தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஒரு ஐப்பசிக்கு, இந்தக் காட்சியை இரண்டு முறை ரசித்தேன்.
ReplyDeleteமிக நன்றி கீதா. அனைவருக்கும் ரங்கன் அருள் நிறையட்டும்.
நன்றி வல்லி! இப்போ இரண்டு நாட்களாகப் போக முடியலை! நாளைக்குப்போக முடியுமானு பார்க்கணும்.
Deletehttp://agasivapputhamizh.blogspot.com/2017/10/Earth-Shaking-facts-about-Temple-Worship-Rights-of-Tamils.html
ReplyDeleteமாத்திப் போட்டுட்டீங்களோ? இவரோட பதிவை நானும் அவ்வப்போது வாசிப்பேன். கிட்டத்தட்ட நான் சொல்லுவதைத் தான் அவரும் இன்னும் விலாவரியாகச் சொல்கிறார். எல்லாம் முறையாகக் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகர் ஆவதில் பிரச்னை இல்லை என்பதே என்னுடைய கருத்தும்! அதை விட்டு வருமானத்துக்காகவெல்லாம் அர்ச்சகர் ஆவது என்பது சரியாக வராது!
Deleteஅப்புறமா இந்த இயற்கையை வணங்குவது, நதியை வணங்குவது, மரங்களை வணங்குவது இந்தியா முழுவதும் உண்டு! தமிழருக்கு மட்டுமே உரித்தானது என்பதில்லை. தினம் தினம் கங்கையிலும் யமுனையிலும் ஆரத்தி எடுத்து வணங்குகின்றனர் அது போல் இங்கே எந்த நதி தீரத்திலாவது நடக்கிறதா? அந்த அந்தப் பண்டிகை நாட்களைத் தவிர்த்து! அதே போல் அரச மரம், ஆல மரம், அத்தி மரம், வேப்பமரம் போன்றவற்றிற்கு வட மாநிலங்களிலும் வழிபாடுகள் உண்டு. மரத்தின் ஓர் இலையைக் கூடப் பறிக்க மாட்டார்கள்! இங்கே?
Delete