எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 30, 2017

தீராத மன வேதனை! :( எப்போ மாறும்!

நேற்றுக்  காலம்பர இருந்து இணையம் வரலை! இணையச் சேவையில் தான் குறைபாடுனு நினைச்சா இங்கே நம்ம குடியிருப்பிலே உள்ள மின் இணைப்பு ஒரு ஃபேஸ் முழுக்க வேலை செய்யலை. பக்கத்துக் கட்டிடத்தின் லிஃப்ட், விளக்குகள், அவங்க வீட்டு மின் சாதனங்கள் எதுவும் வேலை செய்யலை. நம்ம பக்கம் லிஃப்ட் இருந்தது. மின் சாதனங்கள் வேலையும் செய்தன.  இணையச் சேவை கொடுப்பவர் அலுவலகத்திலிருந்து ஒருத்தர் வந்து பார்த்துட்டு இதை உங்க குடியிருப்பு ஆட்கள் தான் சரி செய்யணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அது ஆச்சு electrician வந்து பார்த்துச் சரி பண்ணி இணையம் வர மதியம் ஒரு மணி ஆச்சு! அப்புறம் தொலைக்காட்சியில் படங்கள் வரலை! சரினு மறுபடி அவங்களைக் கூப்பிட்டா யாருமே தொலைபேசியை எடுக்கலை. போனால் போகட்டும் போடானு பாடிட்டுப் போய்ப் படுத்தாச்சு!

3 மணிக்குத் தொலைக்காட்சியைப் போட்டால் வந்திருக்கு! எல்லாச் சானல்களிலும் பி.சி.யைப் போட்டு வாங்கிட்டிருந்தாங்க. தலைவர்கள் தான் இப்படின்னா மக்கள் போற போக்கு! அதுக்கும் மேலே! விசாகப் பட்டினத்தில் சாலையில் மயங்கிப் படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததைப் படிச்ச வேதனை ஆறுவதற்குள்ளாக வேறொன்று. இது தமிழ்நாட்டில்னு நினைக்கிறேன்.   சமீபத்தில் மனம் பதற வைத்த வீடியோக்கள் சில பார்த்துட்டு ரொம்பவே வேதனையாப் போச்சு! தூத்துக்குடியில் ஒரு குடும்பமே எரிந்ததை யாரோ படம் எடுத்துப் பகிர்ந்திருக்காங்களேனு நினைச்சா இன்னொருத்தர் முகநூலில் ஒரு குழுமத்தில் சிநேகிதன் என நினைத்துப் பிக்னிக் சென்ற ஒரு பெண்ணை அந்தச் சிநேகிதன் வலுக்கட்டாயமாய்க் காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதைப் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. அந்தப் பெண் கத்திக் கூப்பாடு போடுகிறாள். தப்பிக்க முயற்சி செய்கிறாள். கூடவே வந்திருக்கும் இன்னொரு பெண்ணும் அந்தப் பையருக்கு உடந்தையா, யார் படம் எடுத்தாங்க எதுவும் தெரியலை! அந்தப் பெண் தப்பினாளா இல்லையா என்றும் தெரியலை! ஆனால் கதறித் துடித்தாள்! அதைப் பார்த்த சில நண்பர்கள் முகநூலில் அதைப் பகிர்ந்த நண்பரிடம் இந்த வீடியோவை அழித்துவிடு என்று சொன்னார்கள்.

உண்மைதான்! அந்தப் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் கூட வந்தது என்று நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் கேட்டுக் கொண்டதன் பேரில் அதைப் போடாமல் அழிச்சிருக்காங்க போல நல்லது தான்! முகநூலில் கூட அழிச்சிருப்பாங்க என்றே நினைக்கிறேன்.  என்றாலும் இப்போதைய இளைஞர்கள் செல்லும் வழி சரியானதாய்த் தெரியலை! ஏன் இவ்வளவு மோசமாகக் கீழான இழிந்த ரசனையுடன் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. யார் மேல் குற்றம்? பெற்றோரா? வளர்ப்பா அல்லது சமூகச் சூழலா? அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையா! எது நல்லது, எது கெட்டது என்பது புரியாமல் போச்சா? இவங்களுக்கெல்லாம் அக்கா, தங்கை இல்லையானு நாம் இப்போக் கேட்க முடியாது! ஏனெனில் பெரும்பாலோர் ஒற்றைப் பிள்ளைகள் அல்லது ஒற்றைப் பெண்கள்! முதல்லே இந்தக் கலாசாரத்தை உடைச்சு எறிஞ்சுட்டு குறைந்தது 2 குழந்தைகளாவது பெத்துக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்! :(

29 comments:

 1. பிறகு வருகிறேன். இது டிரான்சிஷன் பீரியட். இணையவெளி செய்யும் வேலை இந்தக் குற்றச்செயல்களெல்லாம். குழந்தையிலிருந்தே இதனைப் பயிற்றுவிக்கவேண்டும் (ஆண், பெண் பேதமின்மை ரெஸ்பெக்டை)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெத. அப்புறமா வந்ததாத் தெரியலை, பார்க்கிறேன்.

   Delete
 2. முடிவில் சொன்னீங்களே ஒற்றைப்பிள்ளை இதுதான் இதன் ஆணிவேர் இதற்கு காரணம் யார் ?

  தனக்கு பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் முதலில் பெண்தான்.

  ஆணையும், பெண்ணையும் கலந்து பெற்று சிறு பிராயம் முதல் சகோதரத்தை வளர்த்து இருந்தால் இப்படி நடக்குமா ?

  இனி வரும் காலங்களில் நீங்கள் சொல்வது நடக்க சாத்தியக்குறைவு.

  ஆனால் நான் சொல்வதுபோல் குழந்தைகளே வேண்டாம் கணவனும், மனைவியும் குழந்தைகளாக மாறி கடைசிவரை சந்தோஷமாக வாழலாம்.

  காரணம் குழந்தைதான் கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறது அல்லது தெருவில் இறக்கி விடுகிறது ஆகவே இந்தக் குழந்தைகளுக்காக அதிகம் உழைத்து கஷ்டப்பட வேண்டாம்.

  இப்படிச் செய்தால் வம்சவிருத்தி வராது மனிதஇனம் அழிந்து விடும் என்றால் அதுதானே இப்பொழுது நடக்கிறது இந்த உலகம் அழிந்து போகட்டும்.

  இறைவன் மீண்டும் உலகை தோற்றுவிக்கலாம் அப்பொழுது விஞ்ஞானம் இல்லாத மனிதம் உள்ள மனிதன் பிறக்க தொடங்கட்டும்.

  (ஃப்ரம் செல் பிகாஸ் ஸ்மால் கமெண்ட்)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்கள் கருத்துகள் அனைத்தையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

   Delete
 3. கொஞ்சம் மழை பெய்தால் எங்களுக்கு மின்சாரத்தைத் துண்டித்து விடுவார்கள். அதுபோல, இன்று காலை மழைக்கு காலை 5 மணிமுதல் மின்சாரம் கட்! மதியம் 12.15க்குத்தான் சரி செய்து கொடுத்தார்கள். எரிகளாகத்தான் இருக்கும். எரிச்சலாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், இப்போ மழை எப்படி? தொலைக்காட்சியில் ஒண்ணும் சொல்லலை. மின்சாரமும் இருக்கும்னு நினைக்கிறேன்.

   Delete
 4. பொதுவாக நாட்டில் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. என்ன சொல்ல... கொடுமை.​

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம். :(

   Delete
 5. ஒரு கொஞ்ச நேரத்துக்கு மின்சாரம் இல்லாமல் போனாலே அனைத்தும் ஸ்தம்பித்துப் போய்விடுது இக்காலத்தில்.

  உண்மைதான் கீதாக்கா, ஒரு பக்கம் கூக்குரல் போட்டு எதிர்த்தாலும் இன்னொரு பக்கம் கொடுமைகள் நடந்தே தீருது.. சவூதிபோல, குற்றம் செய்தவருக்கு.. அந்த அந்தப் பாகத்தைக் கட் பண்ணி விடோணும் என்றே நான் நினைப்பேன்.. அப்போதான் அடங்குவினம்.. இது ஜெயில்தானே.. சில வருடங்கள் ஜாலியா இருந்திட்டு வெளியே வந்திடலாம் எனும் தைரியம்தான்.

  இன்னொன்று நான் பேஸ்புக்கம் பக்கம் போகாமல் விட்டதுக்கு இதுவும் ஒரு காரணம்... திறந்தவுடன், கொடூரமான படங்கள் சிலசமயம் கண்ணில் தெரியும்.. இப்படிப் பார்த்து சாப்பிடாமல் இருந்து ஆத்துக்காரரிடம் பேச்சு வான்கியிருக்கிறேன் எதுக்கு இதெல்லாம் பார்க்கிறீங்க என.. [நானா தேடிப் பார்க்கிறேன்?:) அது தானா வந்து கண்ணில் பட்டிடுதே:)]சில சமயம் கனவுகள் கூட கன்னா பின்னா என வந்து மிரட்டும் இப்படிப் படங்கள் பார்க்கும்போது.

  நம் நாடுகளில்தாஅன் இக்கொடுமை.. வெளிநாட்டில்.. ஒரு ஆக்ஸிடன்ட் என்றால் கூட.. அந்த இடத்தை ,,காரை.. இப்படி மட்டுமே படமெடுத்துப் போடுவார்கள்.. ஆட்களை எடுத்துப் போடமாட்டினம்.

  ReplyDelete
  Replies
  1. சவூதியில் தப்பிற்காக ஆட்களை வெட்டி விடுகிறார்கள் என்று சொல்லி அது சரி என பலர் விவாதிக்கின்றனர். தண்டனை கடுமையாக இருப்பதில் எனக்கு ஆட்சபணை இல்லை ஆனால் கடுமையான சட்டங்கள் அரேபியாவில் இருந்தும் அங்கு குற்றங்கள் குறையவில்லையே. காரணம் மனிதன் தானக திருந்தி வாழாவிட்டால் குற்றங்கள் குறையவாய்ப்பில்லை அதற்கு காரணம் தனி மனித ஒழுக்கங்களை நாம் கற்று கொடுக்கவில்லை மதங்களும் கற்று தர மறந்துவிட்டன

   Delete
  2. ஆமாம் அதிரா நானும் அன்று திட்டு வாங்கினேன் வீட்டில் ஆனால் தெரியாமல் இருந்தாலும் என்னை போல் பெண் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை செய்யமுடியாமல் போக வாய்ப்பு இருக்கிறதே வாயால் சொன்னால் எங்கே நம்புதுங்க இந்த காலத்து பிள்ளைகள் எக்சிரீமா திங் பண்ணாதே என்று நமக்கு அறிவுரை சொல்லுதுங்க நம்ம பயம் புரியாம

   Delete
  3. @அதிரா, முகநூல் என்றெல்லாம் இல்லை! இப்போதெல்லாம் எல்லாருமே இப்படியான செய்திகளைப் பகிர ஆரம்பிச்சாச்சு! எல்லோருடைய ரசனைகளும் தலைகீழ்! :( என்னத்தை சொல்றது!

   Delete
  4. அவர்கள் உண்மைகளின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

   Delete
  5. மனதை வாட்டும் செய்திகளைப் பார்த்துவிட்டுக் கடந்து செல்வது கஷ்டம் தான் பூவிழி! என்ன செய்யறது! நீங்கள் சொல்றாப்போல் எச்சரிக்கையும் செய்ய யோசிக்க வேண்டி இருக்கு!

   Delete
 6. இப்போதைய நிகழ்வுகள் - என்னத்த சொல்ல! ஒன்றும் சொல்லும்படி இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ஏதேனும் அதிசயங்கள் நடந்தால் தான் உண்டு!

   Delete
 7. ஐயோ நீங்களும் பார்த்திங்களா நானும் பார்த்தேன் சிஸ் அந்த கொடுமையை பத்ரி போயிற்று மனசு தொண்டை அடைக்குது அன்று முழுவதும் சத்தமாய் மூணு முனுத்து கொண்டே அலைந்தேன் வீட்டில் என்ன என்ன நடக்குதுனே புரியலை என்ன மனநிலையில் இருக்காங்க ஏன் இப்படி ?????பிரத்யங்கராதேவியின் முன்னின்று நின்று நீதான் தேவையை இப்பொழுது இந்த உலகுக்கு எல்லாமே நீயாக வா என்று வேண்டி கொண்டேன் எனக்கும் இன்று மழையின் காரணமாய் கரண்டு விட்டு விட்டு இப்போது தான் வந்து எல்லாவற்றயும் பார்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. பூவிழி, கடவுள் தான் அனைவரின் மனதையும் மாற்ற வேண்டும்.

   Delete
 8. முதல்பக்க செய்தி, சற்றுமுன் செய்தி, சூடான செய்தி, காரசாரமான செய்தி என்று கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மனம் பதைத்து , நாள் முழுவதும் மனது கஷ்டபடுவது மட்டும் தான் நம்மால் முடிகிறது.
  கடவுளிடம் ஏன் இப்படி என்று கேட்டு எல்லோருக்கும் நல்ல மனதை கொடு என்று பிரார்த்தனை அது மட்டும் தான் நம்மால் முடியும்.  வீட்டில் பெற்றோர் நல்லபடியாக வளர்த்தாலும் சமூகம் , வெளிவுலகத்தில் கவனமாய் இருக்க வேண்டி இருக்கிறதே!


  அதிரா சொன்னது போல் இவைகளை படிக்காமல், கேட்காமல் இருந்துவிட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, சேர்க்கையும் காரணம் தான்! என்றாலும் பெற்றோரின் அதீத செல்லமும், தொலைக்காட்சி, திரைப்படங்களுமே முக்கியப் பங்கு!

   Delete
 9. கரண்ட் நம்ம ஊரில் கொஞ்சம் நேரம் போனாலும் அவ்ளோதான் :( அதுவும் இப்போ எல்லாமே மின் சாதனங்கள் வந்துவிட்ட காலத்தில் ரொம்ப கஷ்டம் ..


  உண்மையில் சொல்லப்போனா எப்போ fb யை விட்டு வந்தேனோ அப்போலேருந்து இந்த தேவையற்ற எதுவும் கண்ணில் படறதில்லை ...
  நியூஸ் கூட ரொம்ப கேர்புல்லா தான் பார்க்கிறேன் ..நல்ல வழியில் நற்பண்புகளுடன் வளரும் பிள்ளை ஒற்றைப்பிள்ளையாய் இருந்தாலும் சிறந்த ஆணாகவோ பெண்ணாகவோ வளரும் என்று 90 சதவீதம் உறுதியா சொல்லலாம் ..மிச்ச 10 சதவீதம் :(.எனக்கு தெரிந்த குடும்பத்தினர் 6 பிள்ளைகள் அதில் ஒன்று கரும்புள்ளி :(
  பிள்ளையே இல்லைன்னு தத்து எடுத்து செல்லம் குடுத்து தருதலையாக்கின பேரண்ட்ஸையும் பார்த்திருக்கேன் தெய்வ பக்தி நிறைந்த குடும்பத்தின் மூத்த மகன் 14 வயதிலேயே இல்லாத கெட்ட பழக்கத்தை கற்று குட்டி சுவரானவனையும் பார்த்திருக்கேன் ..ஆனால் இக்கால பிள்ளைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டம்க்கா :( என் பொண்ணு 3 வயசில் ரொம்ப அமைதியா இருப்ப அதே குணத்தை இப்போ 3 வயது பிற பிள்ளைங்ககிட்ட பார்க்கவே முடியாது ....வளர்ப்பு மட்டும் காரணி இல்லை சுற்றம் சூழல் நட்பு அப்புறம் நமக்கெல்லாம் சின்ன வயசில் கிடைக்காத எல்லா சாதனங்கள் வசதிகள் அடம் பிடிவாதம் எவ்ளோ சொல்லலாம் ..எங்கே போகிறார்கள் எங்கள் இளைய சமூகம்னு புரியலா :(

  அதிரா சொன்னது மாதிரி இங்கே வெளிநாட்டில் ஒரு ஆக்சிடன்ட் படத்தை கூட வெளியிட மாட்டாங்க :(
  முன்னாள் பிரதமரின் உடலை அவமானப்படுத்திய கேவலம் நம் நாட்டில் தான் பார்த்தேன் :(

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் உங்கள் கருத்து போலவே நான் இங்கு பகிர்ந்திருக்கேன். இப்போதான் உங்க கருத்து பார்த்தேன். அல்மோஸ்ட் சேம்!!!!

   கீதா

   Delete
  2. @ஏஞ்சலின், நீங்க சொல்வதும் சரியே என்றாலும் முன்னால் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இப்போது தினசரிச் செய்தியாக ஆகி விட்டது. இளைஞர்கள்/இளம்பெண்கள் நிலையை நினைத்தால் கவலை அதிகம் ஆகிறது. வெளிநாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தின் எல்லையைப் புரிந்து கொள்கிறார்கள் என்றாலும் அதே பத்திரிகைக்காரர்கள் பப்பராசி என்னும் பெயரில் டயானாவைத் துரத்தியதும் நினைவில் வருகிறது! :(

   Delete
 10. நடக்கின்ற நிகழ்வுகள் ஒன்றைவிட ஒன்று மிஞ்சும் அளவு மோசமாக உள்ளது. இவை போன்றவனவற்றைப் பார்க்கும்போதும், படிக்கும்போதும் வேதனையே.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முனைவரி ஐயா! வேதனை தான் அதிகம் ஆகிறது!

   Delete
 11. அங்கலாய்த்துக் கொண்டால் தீருகிற விஷயமா இது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், மனிதர்கள் மனம் மாறினால் தான் தீரும்!

   Delete
 12. கில்லர்ஜி ஒரு குழந்தை என்பதால் என்று சொல்லிட முடியாது. சகோதரத்துவம் என்பதை நாம் பெற்றோர் குழந்தைகளுக்கு வளர்க்கலாம். ஒரு குழந்தை ஆணோ பெண்ணோ....அதைவிட பல குழந்தைகள் இருந்தும் ஒழுங்காக இல்லாத குழந்தைகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஐந்து குழந்தைகள் என்றால் ஐந்துமே நன்றாகவா நல்ல குணங்களுடனா இருக்கின்றனர்? சொல்லுங்கள்..ஒரே தாய் தந்தைதானே?! எனவே என்னைப் பொருத்தவரை மிக முக்கியக் காரணங்கள், // பெற்றோரா? வளர்ப்பா அல்லது சமூகச் சூழலா? அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையா! எது நல்லது, எது கெட்டது என்பது புரியாமல் போச்சா?// இஅவை எல்லாமும் அடங்கும் என்றாலும் முதலில் வருவது பெற்றோர் வளர்க்கும் விதம்...வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன நிலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும்......அவர்களே சமூகச் சூழலை எப்படிக் கையாளனும் என்றும் நல்ல வழிகாட்டியாகவும் இருந்திட முடியும். ஐந்தறிவு படைத்த விலங்குகளையே பயிற்சி கொடுத்து அழகாக இயக்க முடிகிறது என்றால் மனிதக் குழந்தைகளை முடியாதா? சுயமாகச் சிந்திக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல விதத்தில்! பெற்றோருக்கு அடுத்து பள்ளி இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தில்லையகத்து/கீதா, நீங்க சொல்வது சரியே என்றாலும் இம்மாதிரிக் குற்றங்கள் செய்ய முன்னால் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பயமே இல்லாமல் சர்வ சகஜமாக ஆகிவிட்டது! ஒழுக்கம் முக்கியம் என்று குழந்தைகளுக்குப் போதிக்கப்பட வேண்டும்.

   Delete