எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 24, 2017

ஏன், ஏன், ஏன்??????

"மெர்சல்" திரைப்பட விவாதங்கள் ஓய்ந்து இப்போக் "கந்து வட்டி" விவாதங்கள், போராட்டங்கள் ஆரம்பிச்சிருக்கு! :( இது வரை எல்லோரும் என்ன பண்ணிட்டிருந்தாங்கனு தெரியலை! இப்போத் தான் நிதி எல்லாம் மும்முரமாத் திரட்டிக் கொடுக்கிறாங்க. இதை முன்பே பண்ணி இருந்தா நாலு உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். அவங்க தீ வைச்சுக்கும்போதும் எரியும் போதும் அதைப் படம் எடுக்கும் அளவுக்கு மனசு கல்லாக அங்கிருந்த மக்களுக்கு இருந்திருக்கு! யாரும் தடுக்கலை! ஏதோ இலவசக் காட்சினு நினைச்சாங்க போல! :( மிருகங்களை விட மோசமாகப் போய்க் கொண்டிருக்கோம்! :(

இம்மாதிரி எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டியே மத்திய அரசு "முத்ரா"திட்டம் கொண்டு வந்திருக்கு! ஆனால் அதை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய ஊடகங்கள் அதைச் செய்வதில்லை. வங்கிகள் கேட்கவே வேண்டாம். இதில் அவங்களுக்கு என்ன லாபம்னு நினைக்கிறாங்க போல! ரிசர்வ் வங்கியோ தன்னுடைய தனி ஆளுமை இதனால் பாதிக்கப்படும்னு நினைக்கிறது! ஆக ஒரு நல்ல திட்டம் பயனின்றி வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மத்திய அரசு ஏழை மக்களுக்கு எனச் செய்து கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று அடைவதே இல்லை. இப்போ 108 ஆம்புலன்ஸ் திட்டமே மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏற்பட்டது தான்! ஆனால் தமிழ்நாட்டில் அப்படிச் சொல்லுவதே இல்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப் பட்டது என நினைக்கிறேன். ஆனாலும் இது மத்திய அரசின் நிதி உதவியால் நடப்பதைச் சொல்லுவதே இல்லை!  மற்ற மாநிலங்களில் ஊர்தியின் இரு பக்கச் சுவர்களிலும் மத்திய அரசின் நிதி உதவி எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும்!

மற்ற நாடுகள் எனில் ஊடகங்கள் இந்தப் பணியைச் செய்யும். இங்கேயோ இல்லாத ஒரு விஷயத்துக்கு ஊடகம் வாத, விவாதம் செய்வதைத் தான் முக்கியமாய்க் கருதுகிறது.  ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவிலிருந்து நேற்று சோதனைக்கு விஷால் வீட்டுக்குச் செல்லவில்லை என்பதைப் பத்திரிகைகளுக்குத் துறை ரீதியாக அறிக்கை கொடுத்தும் எல்லாத் தமிழ் சானல்களும் இதை ஏதோ முக்கியமாக எடுத்துக் கொண்டு விஷாலுக்கு ஆதரவாக வாத, விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

கருத்துச் சுதந்திரம் இல்லைனு சொல்லும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் சுதந்திரம் இல்லாதப்போவே இத்தனை பேசினால் சுதந்திரம் கொடுத்துட்டா இன்னும் என்னென்ன பேசுவாங்களோ!

அது மட்டுமா? விசாகப்பட்டினத்தில் பசிக்கொடுமையுடன் சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணிடம் பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கயவன்! அதைப் படம் எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள் நம் மக்கள்! யாரும் அதைத் தடுக்கவில்லை. அந்தக் கயவனைப் பிடிக்கவும் முடியவில்லை. அவன் போயே போய்விட்டான்! அந்தப் பெண் இப்போ மருத்துவமனையில்! என்னவோ படிக்கும் செய்திகளும் சரி, பார்க்கும் செய்திகளும் சரி! மனதைக் கலங்க அடிக்கின்றன!


முத்ரா கடன் பெற இங்கே சென்று பார்க்கவும். இந்த முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வசதியைப் பின் தங்கிய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பிஹார், ஒரிசா ஆகிய மாநிலங்களின் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த அருமையான திட்டத்தைத் தமிழகத்தில் ஏன் அறிமுகம் செய்யவே இல்லை?  வெறும் இட ஒதுக்கீடு மட்டும் போதுமா?  இம்மாதிரியான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுப்பதும் அவர்களைப் போய்ச் சேர வேண்டாமா? 

33 comments:

  1. இதெல்லாம் பொழுதுபோக்குன்னு நினைக்காம, நீங்களும் சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சாச்சா? அப்படிப்பார்த்தால் சசி பெருமாளிலிருந்து எத்தனை எத்தனை விவாதங்கள் தொலைக்காட்சியில் நடந்திருக்கின்றன. இந்தத் தடவை அடையார் பக்கம், டாஸ்மாக்கில் ரோடில் கார் செல்லமுடியாத அளவு நெரிசல் (தீபாவளி அன்று). ம்.ம். என்னத்தச் சொல்ல.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பட்டாசு சப்தம் எரிச்சலைத் தரது எனில், நெரிசல் எரிச்சலைத் தரது எனில் உங்களுக்கும் வயசாச்சுனு தெரியுதே! ஹிஹிஹி!

      போகட்டும்! இதெல்லாம் பொழுதுபோக்கு இல்லை. உங்களுக்கு வந்திருந்த கொஞ்ச நாட்களில் இங்கே உள்ள நிலவரம் புரியலை! :(

      Delete
  2. / படிக்கும் செய்திகளும் சரி, பார்க்கும் செய்திகளும் சரி! மனதைக் கலங்க அடிக்கின்றன!
    // ஆமாம் அக்கா இப்போல்லாம் தமிழ் நியூஸ் பார்க்க கூடாதுன்னு இணையம் பார்க்காம இருக்கேன் ஆனா பாருங்க இங்கிலிஷ் நியூஸ் ல சன் நியூஸ் பத்திரிகைல விசாகபட்டின மேட்டரை போட்டு வச்சி கண்ல பட்டிடுச்சி :(
    அமரிக்க 3 வயசு குழந்தை விஷயமும் கலங்க வைத்தது ..மனிதன் ஏலியனாகிறானோ ..மிருகமாக சான்ஸ் இல்லை மிருகங்களுக்கும் அன்பு பாசமுண்டு

    என்னுள்ளும் ஆயிரம் ஏன் ஏன் ஏன் கள் :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், இப்போ என்னனு பார்த்தா அந்த இறந்து போன பெண்ணைப் பற்றிப் பல செய்திகள்! எதை நம்பறதுனு புரியலை! ஆனாலும் அந்தப் பெண் தீ வைத்துக் கொண்டு இறந்திருக்க வேண்டாம்! :(

      Delete
    2. மனிதன் ஏலியனாகிறானோ ..மிருகமாக சான்ஸ் இல்லை மிருகங்களுக்கும் அன்பு பாசமுண்டு // யெஸ் யெஸ் உங்கள் கருத்துடன் 100% ஒத்துக் கொள்கிறேன்..அப்படியே வாசித்து, எழுதிப் பழகிவிட்டதால் தவறிக் கூட வந்துவிடுகிறது ஏஞ்சல்....ஆனால் .நானும் இதைக் கான்ஷியஸாகத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

      கீதா

      Delete
  3. நீங்கள் சொன்னா முத்ரா திட்டத்தை பற்றி இப்பதான் நான் அறிகிறேன். சும்மா தாம் தூமுன்னு குதிக்கிற தமிழிசை ராசா மற்றும் பாஜக கட்சியினர் இதை அதிமாக மக்களுக்கு எடுத்துரைக்கலாமே அதனால் மக்கள் பலன் பெறுவதுமட்டமல்லாமல் அவர்கள் கட்சிக்கும் நன்மைதானே.. எனக்கு ஒரு சந்தேகம் தமிழகத்தில் உள்ள பிஜேபி தலைவர்கள் அவர்களின் தொண்டர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்லா என்று

    ReplyDelete
    Replies
    1. எங்கே! பிஜேபிகாரங்க ஏதானும் சொன்னாலே தினசரிகள், ஊடகங்கள் எல்லாம் ஒரே அலறல்! :( இதை ஊடகங்களும் ஆளும் ஆட்சியாளர்களும் தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களில் ஆளும் கட்சிக்கு எனத் தொண்டர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் மூலம், விஏஓ மூலம், தன்னார்வலர்கள் மூலம் எனக் கொண்டு செல்ல வேண்டும். வங்கி அதிகாரிகள் இதற்கென ஈடுபட்டுச் செய்ய முன் வருவது கடினம்! :(

      Delete
  4. இப்படி பல பிரச்சனைகள் வர காரணம் பெரியவர்கள் அவரவர்களின் மத ஒழுக்கங்களை போதித்து வளர்க்காமல் மத வெறியை ஊட்டி வளர்ப்பதால் மக்களிடம் ஒழுக்கங்கள் பண்பாடுகள் ஏதும் இல்லாமல் போய்விட்டன. இது எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது.. நான் வாழ்ந்து வளர்ந்த தமிழகத்திற்கும் இப்போது உள்ள தமிழகத்திற்கும் எவ்வளவு வேறுபாடு தெரியுமா? எந்த வித வேற்றுமை இன்றி ஒன்றாக பேசி பழகி வாழ்ந்து வந்தோம் அது எல்லாம் இப்ப எங்கே என்று தோன்றுகிறது நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ எங்கள் வீட்டில் நாங்கல் அனைவரும் எந்த ஒருவித மத வேறுப்பாடு இல்லாமல்தான் எல்லோரிடமும் பழ்குகிறோம் நானும் என் மனைவியும் வேஏறு மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும் இன்று வரை மதங்கள் மாறாமல் அடுத்தவரின் மதத்தை ஒருவர் மேல் ஒருவர் திணிக்காமல் பிள்ளையிடம் இந்த மதம் உயர்ந்தது தாழந்தது என்று சொல்லாமல் எந்த மத வழிபாட்டு தளங்களுக்கு சென்றாலும் அங்கு வழிபடும் கடவுளை வழிபட செய்ய பழகி இருக்கிறோம்... ஹும்ம் எங்கே நான் வளர்ந்த தமிழ்நாடு என்றுதான் இப்ப கேட்க தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மையே! இதற்குத் தான் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் வைக்கப்பட வேண்டும்.

      Delete
  5. ///விசாகப்பட்டினத்தில் பசிக்கொடுமையுடன் சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணிடம் பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கயவன்//

    ச்சே மனம் பதறுகிறது இதையும் படம் எடுத்தவர்களை சுட்டால்தான் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, மக்களா, மாக்களா என நினைக்கத் தோன்றுகிறது!

      Delete
  6. மனதைக் கலக்கும் செய்திகள். படிக்கும்போது கஷ்டமாக இருந்தது.நல்லவேளை நான் வீடியோ எல்லாம் பார்க்கவில்லை. மக்கள் மாக்களாகவும், மரங்களாகவும் மாறி வருகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இன்னிக்கு "உங்க" ப்ளாக் திறக்க அடம்! :) புதிர் வந்திருக்கு போல! நானும் தூத்துக்குடி வீடியோ மட்டும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சிகளில் காட்டுவதால் பார்க்க நேரிட்டது! :(

      Delete
  7. இந்தமதிரி விஷயங்கள் யாரோ மகானுபாவன் காணொளி எடுத்ததால் தெரிகிறது அதை நான் நியாயப்படுத்தவில்லை ஒரு வினாடி நான்பார்வையாளனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்றே எண்ணத் தோன்று கிறது வெரி டிஃப்ஃபிகல்ட் குவெஸ்டியன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் எனக்கும் தோன்றியது இப்படி படித்தவுடன் என்ன செய்வோம் என்ன செய்ய முடியும் யாரை கூப்பிட்ட என்று ...தனி ஒரு மனிதன் தவறு செய்கிறான் ஆனால் தனி ஒரு மனிதன் தண்டிக்க முடியவில்லை துணிந்து ஏன் புரியவில்லை சினிமாவிலாவது ஹீரோன்னு ஒருத்தன் வருவான் தட்டி கேட்க நிஜத்தில் லைவ் ஷோ பார்க்கிறார்களா

      Delete
    2. ஜிஎம்பி ஐயா, எல்லோரும் கடந்து தான் செல்வார்கள்! யாரும் தலையிட்டுத் தனக்குத் தானே தொந்திரவை வரவழைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்! :(

      Delete
    3. பூவிழி, இதன் பின்னணியில் அரசியல் இருக்குமோ என்னும் பயம் எல்லோரிடமும் இருக்கும்! என்றாலும் கூட்டமாகப் போய்த் தடுத்திருக்கலாம்! :(

      Delete
  8. எதற்கு பேசவேண்டுமோ அதற்கு பூசி முழுப்புவார்கள் எதற்கு தேவையே இல்லையோ அதற்கு உட்கார்ந்து தொண்டைகிழிய விவாதிப்பார்கள் இந்த சேனல்களில் எல்லாம்...... முத்ரா கடன் திட்டம் பறறிய குறிப்பு பகிர்ந்தது அருமை ........நிஜமா ஒன்றும் புரியலை நடக்கும் கொடுமைகளும் அதை பார்த்தும் காணாமல் போகும் மனிதர்களும், ஊக்குவிக்கிறார்கள் தவறுகள் கரையையும் உடைத்து கொண்டு போக......... ஒரு போலீஸ் கூடவா வராது போலீஸ் என்பவன் மனிதன் இல்லையோ அவன் கை கொடுப்பான் என்ற நிலைப்பாடு வந்தால் மக்களும் பிரச்னை கண்டு பயந்து ஓடமாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. போலீஸெல்லாம் சும்மா! அவங்களும் மனிதர்கள் தானே! முத்ரா திட்டம் பெருவாரியான மக்களைச் சென்று சேராதது போல் இந்த ஜிஎஸ்டி பத்திய உண்மை நிலவரமும் மக்களைச் சென்று அடையவில்லை! :(

      Delete
    2. நெட் சொதப்புது! முகநூல் பக்கம் போனால் சுத்தோ சுத்துனு சுத்துது! :( இங்கேயும் பதில் கொடுக்க முடியாமப் பிரச்னை! எப்படியோ எல்லாம் போட்டிருக்கேன்!

      Delete
    3. உங்களுக்குமா எனக்கு நேற்று ரொம்ப படுத்தல் நான் bsnl தான் அதான் இப்படினு வீட்டில் பிள்ளைகள் சொல்கிறர்கள்

      Delete
    4. இங்கே பிஎஸ் என் எல்லை விட்டு 2 வருஷம் ஆச்சு. தனியார் கொடுக்கும் இணைய இணைப்பு! ஆனாலும் சொதப்பல்! சமீப காலமாக மிகவும் மோசமான இணைப்புத் தான் கிடைக்கிறது! அவங்களிடம் சொன்னால் மோடத்தை மாத்துங்க என்கிறார்கள். அதுக்குச் சுமார் 20000 வரை செலவு சொல்கின்றனர். நாம என்ன அலுவலகமா நடத்தறோம் என்று வேண்டாம்னு சொல்லியாச்சு. பிஎஸ் என் எல் இருந்தவரை இவ்வளவு மோசம் இல்லை! :( ஆனால் அது என்னோட அன்ட்ராய்ட் மொபைலில் இணைக்க முடியலை! அதுக்காகத் தனியார் இணைப்புக்கு மாறினோம்.

      Delete
    5. அப்படியா என்னுடையதும் ஆன்ராய்டு தான் இணைகிறதே... இப்பொழுது வசதியை அதிகரித்து இருக்கிறார்களோ ....

      Delete
    6. கீதாக்கா அண்ட் பூவிழி நேற்று வரை படுத்திய என் கணினி மற்றும் க்ரோம் இன்று சமர்த்தாக
      தானாகவே வேலை செய்யுது. ஆஃப் செய்து ஆன் செய்துகொண்டே இருக்கும் நிலைமை இல்லை... இதுவும் இல்லைனா இப்போது இருக்கும் மன நிலையில் எனக்குக் கஷ்டமாகவே இருந்திருக்கும் மனதை டைவேர்ட் செய்ய... திருஷ்டி சுத்திப் போட்டுறனும்...

      கீதா

      Delete
    7. வாங்க கீதா, இங்கே இணையமே அவ்வப்போது படுத்தல் தான். இணையச் சேவை தருபவரிடம் புகார் அளித்தால் மோடத்தை மாத்துங்க என்கிறார்கள். எங்க பையர் மோடம் பிரச்னை இல்லை அவங்க செர்வர் தான் பிரச்னை என்கிறார். ஆகவே மோடத்தையும் மாற்றாமல் இணையம் இருக்கும்போது பார்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். :)

      Delete
  9. ஒவ்வொரு முறையும் இவ்வாறாக பிரச்சினைகள் வரும்போது விறுவிறுப்பாக பேசப்படும். பின்னர் அடுத்த பிரச்சினைக்கு விவாதம் தாவிவிடும். ஒரு நிலையிலிருந்து அடுத்த கீழ்நிலைக்கு நாம் போய்க்கொண்டிருக்கிறோம். வெட்கப்படவேண்டியன, வேதனைப்படவேண்டியன.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பிரச்னையின் உள் வரை சென்று பார்த்ததில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள். யாரிடம் கடன் வாங்கினாரோ அவர் தான் இப்போது பல்வேறு விதங்களிலும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். உண்மை வெளி வந்தால் தான் உள்ள நிலைமை புரியும்! :( மொத்தத்தில் அநியாயமாக 3 உயிர்கள் போனது போனது தான்! :(

      Delete
  10. இங்கே நடக்கும் பல விஷயங்களைக் கண் கொண்டு பார்க்கவோ, கேட்கவோ முடிவதில்லை. நம் ஊரில் படம் எடுத்தவர் செய்தியாளராம். யாரோ கேட்டிருந்தார்கள் இதை எல்லாம் விடியோ எடுக்கும் நேரம் அவர்களைக் காப்பாற்றி இருக்கலாமே என்று. கொடுமைதான் நல்லவேளை நான் அந்த வீடியோ பார்க்கவில்லை.
    இந்த முத்ரா படிப்பவர்கள் மூலம் பாமரர்களைப் போய்ச்சேர்ந்தால் எத்தனை நல்லது.

    ReplyDelete
    Replies
    1. காப்பாற்றுவதை விட இம்மாதிரிப் பரபரப்புச் செய்திகளால் அவங்க பத்திரிகை/ஊடகம் முதல் இடத்துக்கு வருமே! அவங்களுக்கும் ஊக்க போனஸ் கிடைக்குமாய் இருக்கும்! :(

      Delete
  11. பூவிழி, அது என்னமோ தெரியலை! எங்க கணினி மருத்துவரும் முயன்று பார்த்தார். அவரோட ஆன்ட்ராயிடிலும் எங்க வைஃபை இணைக்க முடியலை! அதுக்கப்புறமாத் தான் தனியார் சேவைக்கு மாற்றினோம்.

    ReplyDelete
  12. வாங்க வல்லி, இதைவிடக் கொடுமையான வீடியோப் பகிர்வு ஒன்று பார்த்தேன். மனதை உடலைக் கைகால்களைப் பதற வைத்தது! முத்ரா திட்டம் குறித்து ஊடகங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கணும்! அவங்களுக்கு அதெல்லாம் கவலை இல்லை! மெர்சல் படம், கமல் கட்சி இதைப் பற்றித் தான் கவலை!

    ReplyDelete
  13. இப்போது நடக்கும் விஷயங்கள் பல மனதை வேதனைதான் செய்கிறது. முத்ரா திட்டம் மக்களைச் சென்றடைந்தால் நல்லது. பொது இடத்தில் பலாத்காரம்...ம்ம்ம் மக்கள் திரண்டு அந்தக் கயவனைத் தாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த ஒற்றுமை இப்போதெல்லாம் இல்லையோ என்றும் தோன்றுகிறது. முன்பெல்லாம் தெருவில் ஒரு சண்டை என்றாலு ஊரே கூடிவிடும். இப்போது என்ன நடந்தாலும் யாரும் கண்டு கொள்ளாமல் யாருக்கு வந்த விருந்தோ என்று சென்றுவிடுகிறார்கள்....நாம் அங்கிருந்து செய்ய நினைத்தாலும் நமக்கும் கூட உதவிட ஆட்கள் வந்தால்தான் ஏதேனும் செய்ய முடியும் இல்லை என்றால் தனிமனிதனாக ஏதும் செய்ய இயலாதுதான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அடுத்த பதிவில் ஒரு இளம்பெண்ணை தைரியமாகக் கெடுக்க முயற்சி செய்து அதை வீடியோவும் எடுத்துப் போட்டிருப்பதைப் படியுங்கள்! :( வர வர எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை!

      Delete