எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 03, 2006

149. இன்றைய ஹி,ஹி,ஹி,க்கள்.

விகடன் நெட்டிலே இருந்து சுட்டு, நான் அதிலே இருந்து சுட்டது.
சூடு ஜாஸ்தியா இருந்தா நான் பொறுப்பு இல்லை.

1. "யோவ், டிக்கெட்டைக் காமி!"
"இந்தாங்க" நம்ம ஆள் டிக்கெட்டைக் காட்டுகிறார்.
"என்ன, விளையாடுறியா, இது பழைய டிக்கெட்."
"அடப் போங்க, இந்த ரெயில் மட்டும் புதுசாக்கும்?"

2."என்னடா இது, பரீட்சையிலே 0 வாங்கிட்டு வந்திருக்கே? ஒழுங்காப் படிக்கலியா?"
"ஐயோ, அது ஜீரோ இல்லைப்பா! நான் சூப்பரா படிக்கிறேன்னு டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு "ஓ" போட்டிருக்காங்க!"

3."தினமும் புலம்புவீங்களே, இன்னிக்கு எப்படி, காஃபி ஸ்ட்ராங்கா இருக்கா?"
"சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?"
"அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!"

4."ஹலோ, உமா மேடமா? (பெப்ஸி உமாவிடம்) சிவகாசியிலே இருந்து ஒரு பாட்டு போடுங்க!"
"ஸாரிங்க, நான் இப்போ சென்னையிலே இருக்கேன்!"

இன்னும் விகடன் முழுசாப் படிக்கலை. படிச்சதும் பிடிச்ச விஷயங்களை நேரத்தைப் பொறுத்து எழுதறேன். இப்போ எல்லாரும் வெகுநாட்களாய்க் காத்துக் கொண்டிருந்த என்னுடைய் பம்பாய் விஜயம் பற்றி மேற்கொண்டு. இதன் முதல் பகுதி பதிவு எண் 145, 146-ல் இருக்கிறது. படிக்காதவங்க படிச்சுக் கொள்ளுங்க.
**********************


எங்க ஆட்டோவை நிறுத்தின போலீஸ்காரர் ஆட்டோ டிரைவரிடம் லைசென்ஸ் கேட்டார். லைசென்ஸ் குஜராத் மாநிலத்துக்குள் மட்டுமே ஓட்டக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஆகவே எங்களை போரிவிலிக்குள் கூட்டிப் போக முடியாது எனத் தெரிவிக்க, நாங்கள் ஸ்டேஷன் பக்கம் இறங்கிக் கொண்டு அனுப்புவதாய்க் கேட்டுக் கொண்டு லெவெல் க்ராஸிங் தாண்டியதும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டோம். சாமான்களை இறக்கி நாங்களும் இறங்கி ஆகி விட்டது. ஒரே ஆட்டோக்களும், டாக்ஸிகளுமாய் நின்று கொண்டிருந்தது. ஆனால் விலாசம் தெரியாமல் இனி என்ன செய்வது? பையன் போய் ஸ்டேஷனில் உள்ளே பார்த்து விட்டு வந்தான். ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடந்தது. யாரைக் கூப்பிடுவது எனத் தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு பொது தொலைபேசியில் போய் விலாசங்களைப் பார்த்தால் உறவினர் யாருடைய விலாசமாவது கிடைக்கும். அவங்க யார் கிட்டேயாவது சொல்லலாமான்னு யோசித்தோம். அதைச் செயல்படுத்தலாமா வேண்டாமான்னு எங்களுக்குள் தீவிர விவாதம். அதுக்குள் என் பெண் பக்கத்தில் ஒரு வண்டி கிளம்புவதற்கு யாரோ வருவதைப் பார்த்து விட்டுக்கொஞ்சம் நகர்ந்து இடம் விட்டவள், "சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. நாங்கள் வந்த வண்டி அங்கே நின்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரிந்த படியால், நாங்கள் வண்டியிலேயே இருப்போம் என்று நினைத்துப் பால்கர் போய் வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூடவே இன்னொருத்தரும் அவர் குடும்பத்தை அழைத்து வர அவர்களுடன் கிளம்பி இருக்கிறார். எங்க சத்தம் கேட்டதும், அல்லது உடனே எங்க பையன் ஓடிப் போய்ச் சித்தப்பாவைக் கட்டிப் பிடித்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. நிஜமாவே அவங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை, நாங்க தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு. கொஞ்ச நேரம் யாருக்கும் பேச்சே வரவில்லை. அப்புறம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு,நல்ல வேளை நாங்க இறங்கின கிழக்குப் பகுதி (இறங்கும்போது கிழக்கா, மேற்கா தெரியாத், மேற்கே இறங்கி இருந்தால் பார்த்திருக்க முடியாது.)யிலேயே மச்சினன் வீடும் இருந்தது. வீட்டிற்குப் போய்க் குழந்தையைப் பார்த்த போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையும் எங்களைப் பார்த்ததும் தெரிந்த மாதிரி சிரித்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினனை அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.

"வெற்றி வடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்:
சுற்றி நில்லாதே போ!-பகையே
துள்ளி வருகுது வேல்!"
**********************
இ.கொ. கேட்டுக் கொண்டதற்காக, ரத்தப் பொருத்தம் பத்தி எழுதக் கொஞ்சம் உழைப்புத் தேவைப் படுது. தகவல்கள் சேகரிக்கிறேன். அதனாலே இரண்டு நாளைக்குப் பதிவு எதுவும் இல்லை. எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். முதல் முறையா "ஹோம்வொர்க்" கொடுத்திருக்கார். கண்டபடி எழுதற விஷயம் இல்லை. என்னால் எந்த அளவு முடியும்னு தெரியலை, முயற்சி செய்யறேன். கடவுள் விட்ட வழி. கார்த்திக், குஜராத் பத்தி எழுத இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு, வரேன் சீக்கிரம் உங்களை வெறுப்பேத்த. :D

8 comments:

  1. ஜோக் எல்லாம் நல்லா இருந்ததுங்க! நன்றி!

    கீழே போட்டிருந்த ஜோக் ரொம்ப பெரிசா இருந்தது. அப்புறமா படிக்கறேன்!

    ReplyDelete
  2. கடவுளே, இப்போத் தான் "இலவசம்' தலைப்பைப் பார்த்து ஏமாந்து போயிட்டுத் திரும்பி வந்தேன், பின்னாலேயே ஆவி துரத்துதே? காப்பாத்துங்க, காப்பாத்துங்க! :D

    ReplyDelete
  3. //டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு "ஓ" போட்டிருக்காங்க!"
    //
    :)

    ReplyDelete
  4. ஜோக் எல்லாம் நல்லா இருந்ததுங்க! நன்றி!

    கீழே போட்டிருந்த ஜோக் ரொம்ப பெரிசா இருந்தது. அப்புறமா படிக்கறேன்!

    ReplyDelete
  5. பெரிசா இருந்த ஜோக்கயும் படிச்சுட்டேன்...அதுவும் நல்லா தான் இருக்கு :-)

    ReplyDelete
  6. கீதாம்மாவுக்கு ஒரு O போடுங்கப்பா!
    zero இல்லை கீதாம்மா, ஒரு ஓ! :-))
    துணுக்குகள் அருமை!

    ReplyDelete
  7. அம்பிக்கு ஒரு zero போடுங்க எல்லாம்.

    @விவசாயி, மழை எல்லாம் போதுமா? விவசாயம் நல்லா நடக்குதா? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, ஆவியைப் பாத்து மிரண்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்.:D

    ச்யாம், பெரிசா இருந்தது ஜோக்கா, என்னத்தைச் சொல்ல, உண்மையைச் சொன்னா நம்புவார் யாரும் இல்லை. No smiley.

    கண்ண பிரான், இது நியாயமே இல்லை. என்னோட அனுபவம் துணுக்காப் போச்சே? :D

    ReplyDelete
  8. //இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினனை அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.
    //

    தலைவியின் நல்ல மனசுக்கு ஏத்தபடி எல்லாமே நல்லதா நடந்துருக்கு. பம்பாய் பயணம் சுபம்னு சொல்லுங்க.
    :)

    ReplyDelete