எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 10, 2006

154. ஹையா, ஹையா, ஹையா!!!!!!!!!!

மூணு ஹையாக்கள். எல்லாம் நம்ம வலை உலகிலே நடந்ததைப் பத்தித் தான். அதுக்கு முன்னாலே உங்களை எல்லாம் ஒரு சின்ன ரம்பம் போட்டுட்டுப் போறேன்.

கார்த்திக்குக்காக ஒரு ஜோக்: விகடனில் இருந்து சுட்டது:

"வரலாறு படத்திலே நம்ம அஜீத் அட்டகாசமா நடிச்சு........

சரித்திரம் படைச்சுட்டார்னு சொல்லு!"

இப்போ அம்பியைச் சமாதானப் படுத்தறதுக்காக சில ஜோக்ஸ்:

"வீட்டுக்காரியை அடிச்சா ஒரு வருஷம் ஜெயிலாச்சே, அவருக்கு மட்டும் ஏன் ஆறு மாசம் கொடுத்திருக்காங்க?

அவர் அடிச்சது சின்ன வீட்டை!"

"நேத்து உன் புருஷன் உன்னை அடிச்சாரே போய்ப் போலீஸ்லே சொல்றது தானே?

அப்புறம் ஒரு வருஷத்துக்கு எனக்கு யார் சமைச்சுப் போடுவா?"

இப்போ மனைவிக்குக் கணவன் எழுதிய ஒரு லெட்டர். இதுவும் விகடனில் இருந்து சுட்டது. முருகேஷ் பாபு என்பவர் எழுதிப் பரிசு பெற்றிருக்கிறது. நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாமா? அதான்.

மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு,
வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்கக் கரிக்கக் கஷ்டப் பட்டுச் சாப்பிட்டு விட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்து போயிருந்த பட்டனைத் தைத்துத் தரும்படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டு விட்டீர்கள். ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்து கொண்டேன். அப்புறம், நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து உலர்த்த முடியவில்லை. ஆனால், அதற்காக நீங்கள் என் மீது எறிந்த சுடுசொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப்படுத்தி விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எல்லாம் உங்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதினேன். மற்றபடி, தங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இப்படிக்கு,
அபலைக்கணவன்."
"மனைவியை அடித்தால் ஒரு வருஷம் சிறை" சட்டம் வெளியானதற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம்."
அம்பி, இப்போ கொஞ்சம் சிரிங்க.அதுக்கு ஒரு ஹையா!

அடுத்த "ஹையா" பெனாத்தல் நான் எழுதற பதிவே புரிஞ்சுட்டதுன்னு சொல்லிட்டாரே! அதுக்குத் தான். அவர் வளராத சிறுவனா இருந்தப்போ நான் எழுதற பின்னூட்டம் எல்லாம் புரியலைன்னு சொல்வார். இப்போ வளர்சிதை மாற்றத்துக்கு அப்புறமோ அல்லது விக்கி, விக்கி அழுததாலேயோ நான் எழுதற பதிவே புரிஞ்சிருக்குன்னு சொல்றார். அதுக்கு ஒரு பெரிய "ஹை ஹை ஹையா!"

அடுத்த "ஹையா" என்னோட மண்ணில் பிறந்த உ.பி.ச. பட்டத்துக்குத் தயாராகிட்டிருக்கும் SKM என்று செல்லமாக அழைக்கப்படும் "சண்டைக்கோழி அம்மா" என்னைத் "தலைவி"ன்னு அவங்க வாயாலே சொல்லிட்டாங்களே! இப்படிப் புதுசா வந்தவங்களே என்னைத் தலைவின்னு ஒத்துக்கிட்டதாலே நான் "நிரந்தரத் தலை(வலி)வினு உறுதி ஆகிடுச்சே! அதுக்கு ஒரு பெரிய "ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹையா!"
**********************
நேத்திக்கு இந்த விஷயத்தை எடுத்துக்கும்போதே இம்மாதிரியான பதில்களை எல்லாம் எதிர்பார்த்தேன். பிறகு கைப்புள்ள சொன்னதன் பேரில் கவிதாவின் பதிவையும் போய்ப் பார்த்தேன். கவிதாவின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், புத்தகம் படிக்கக் கூடக் கணவன் அனுமதி வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது தான் பெண்கள் சுதந்திரத்தை அவமதிப்பது. ஒரு புத்தகம் படிப்பதால் மனைவி மனம் மாறிக் கணவனை மதிக்க மாட்டாள் என்று நினைத்தால் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி அந்தக் கணவனின் அபிப்பிராயம் என்னவாய் இருக்கும்? தொலைக்காட்சிப் பெட்டியைப் பூட்டி விட்டு வருவாரா அலுவலகத்துக்கு? உண்மையில் புத்தகங்கள் செய்வதை விட அதிகமாய்த் தொலைக்காட்சித் தொடர்கள் செய்கின்றன. இது தான் உண்மையான தாக்கம். மற்றபடி இந்தப் பதிவில் நான் சொன்ன கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் பதில் சொன்ன விதத்தில் அம்பியோ அல்லது தி.ரா.ச. அவர்களோ அல்லது கைப்புள்ளயோ அல்லது உமாகோபுவோ பாதிக்கப் பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கருத்து வேறுபாடு சகஜம். ஆனால் ஒருவேளை நான் என் கருத்தைச் சொன்ன விதமோ அல்லது எழுதின விதமோ சரியாக வெளிப்படுத்த வில்லையோ என நினைக்கிறேன். தவறும் முழுப் பொறுப்பும் என்மேல் தான். மன்னிக்கவும்.

8 comments:

  1. //பெனாத்தல் நான் எழுதற பதிவே புரிஞ்சுட்டதுன்னு சொல்லிட்டாரே//

    எல்லாமா புரிஞ்சுதுன்னு சொன்னேன்? எதோ விக்கிக்காக நீங்க எழுதினது.. ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுதுன்னு சொன்னேன். சில சில பின்னூட்டமும் புரிஞ்சுதுன்னு சொல்லி இருக்கேனே;-)

    அறியாச்சிறுவன்லே இருந்து பிரமோஷன் எல்லாம் கொடுத்துடாதீங்க.

    ReplyDelete
  2. //ஆனால் நான் பதில் சொன்ன விதத்தில் அம்பியோ அல்லது தி.ரா.ச. அவர்களோ அல்லது கைப்புள்ளயோ அல்லது உமாகோபுவோ பாதிக்கப் பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்//

    அட எனக்கு என்னங்க பாதிப்பு? வாடா போடான்னு வருங்காலத்துல நம்மளை யாராச்சும் பேசுனாக் கூட நீங்க சொன்ன மாதிரி பவ்யமா ஒரு லெட்டர் எழுதிட மாட்டேன்?
    :)

    ReplyDelete
  3. //கார்த்திக்குக்காக ஒரு ஜோக்://

    ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம்..

    /இப்போ அம்பியைச் சமாதானப் படுத்தறதுக்காக சில ஜோக்ஸ்:

    "வீட்டுக்காரியை அடிச்சா ஒரு வருஷம் ஜெயிலாச்சே, அவருக்கு மட்டும் ஏன் ஆறு மாசம் கொடுத்திருக்காங்க?

    அவர் அடிச்சது சின்ன வீட்டை!"
    //

    மேடம் இது எதுக்கு அம்பிக்கு..
    அம்பி அடிகொடுக்கிறவன் இல்ல..அடி வாங்குபவன்..
    அந்த லெட்டர் தான் அம்பி எப்பவும் பண்றதுங்க மேடம்

    ReplyDelete
  4. ஆனாலும் என் பதிவை முழுசா படிக்காம தலைப்பை மட்டுமே வைத்து சினிமா பதிவுன்னு முடிவு கட்டின உங்களை, தலைவியா இருந்தாலும் வன்மையா கண்டிக்கிறேன் மேடம்

    ReplyDelete
  5. //நான் "நிரந்தரத் தலை(வலி)வினு உறுதி ஆகிடுச்சே! //
    கீதா மேடம்,நீங்க தலைவி(வலி)என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.நான் சும்மா ஏதோ வந்து போறது பிடிக்கலையா?வம்புல மாட்டிவிடாதீங்க.
    இந்த பேர் சொல்லி கூப்பிடுவது அவங்க அவங்க இஷ்டம்தான்.ஆனா வாங்க போங்கன்னு சொல்லலாம்.என் கணவரை நானோ,என்னை அவரோ பேர் சொல்வது அபூர்வமாக நடக்கும். அப்பாவை கூப்பிடு அல்லது அம்மாவை கூப்பிடு அப்படிதான் நடக்கும்.
    //புத்தகம் படிக்கக் கூடக் கணவன் அனுமதி வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது தான் பெண்கள் சுதந்திரத்தை அவமதிப்பது.//
    // உண்மையில் புத்தகங்கள் செய்வதை விட அதிகமாய்த் தொலைக்காட்சித் தொடர்கள் செய்கின்றன. இது தான் உண்மையான தாக்கம்.//
    என் தோழிகளில் சிலரின் கணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மனைவியை cell phone il அழைத்து எங்கு இருக்கிறாய்,யாருடன்,எதற்கு, எவ்வளவு நேரம் என செய்து check செய்து கொண்டே இருப்பார்கள்.சிலர் அது சரி என்பார்கள்.எனக்கு அது நம்மிடம் நம்பிக்கை இல்லை என்பது போலத் தோன்றும்.TV serials are giving countless problems.It is brainwashing youngsters those who don't have their own brain (I mean manathidam).yevalo solliyum thirundhamal divorce vangiya friends ullanar.
    //மற்றபடி இந்தப் பதிவில் நான் சொன்ன கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் பதில் சொன்ன விதத்தில் அம்பியோ அல்லது தி.ரா.ச. அவர்களோ அல்லது கைப்புள்ளயோ அல்லது உமாகோபுவோ பாதிக்கப் பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.//
    Each and every one has their opinions.you have expressed yours.
    you don't have to worry if they all are not agreeing to that.--SKM

    ReplyDelete
  6. //என் கருத்தைச் சொன்ன விதமோ அல்லது எழுதின விதமோ சரியாக வெளிப்படுத்த வில்லையோ என நினைக்கிறேன். தவறும் முழுப் பொறுப்பும் என்மேல் தான். மன்னிக்கவும்.//

    இதை படிச்சுட்டு தான் சிரிச்சேன். என்ன தப்பு பண்ணிண்க்க, இப்போ மாப்பு, மன்னிப்பு எல்லாம் கேட்கறத்துக்கு?
    அதோட நீங்க என்னை விட ஒரு ஐம்பது வயசு பெரியவங்க வேற. :)
    (உங்க வயச கொஞ்சம் குறைச்சு சொல்லிட்டேனோ?) :D

    ReplyDelete
  7. மன்னிப்பா எதுக்கு/ அவசியமமில்லை.கருத்து சுதந்திரம் நிறைய உண்டு.

    ReplyDelete
  8. ஆகா அந்த லெட்டர் அருமை...நானும் அத காப்பி பண்ணிவெச்சுகிட்டேன் அடிக்கடி உதவும் :-)

    ReplyDelete