கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போறதாலே முதலில் சிரிச்சுட்டு அப்புறமாப் பதிவைப்
படிக்கலாம். கல்கியிலே இருந்து சுட்டது:
"தொண்டர்கள் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறாங்களே....என்னவாம்?
தலைவர் "நூறாவது" முறையாக் கட்சித் தாவி இருக்காராம்!"
&&&&&&&&&&&&&
"நீங்க ஒரு பல் டாக்டரா?
இல்லையே, நான் 32 பல்லுக்கும்தான் டாக்டர்!"
&&&&&&&&&&&&&&
"என்னோட ரெண்டாவது பையன் அப்படியே என்னை உரிச்சு வெச்ச மாதிரி இருப்பான்!
அடப்பாவமே! முதல் பையனாவது அழகா இருப்பானா?"
&&&&&&&&&&&&&&&
சனிக்கிழமை ராத்திரி வீட்டோட படத்தைப் போட்டப்போ நேத்திக்கு உடனே பதிவு போடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் நேத்து முடியலை. ஒரு முக்கியமானவர்
வருவதாய்த் தகவல் சொல்லி இருந்ததால் அதற்கான எதிர்பார்ப்பில் இருந்தேன்.
அப்புறம் எல்லாரும் இது தான் கோட்டையா, தலைமையகமான்னு கேட்கிறாங்க. எல்லாம் இதுதான். நிஜமாவே வீட்டுக்கு அருகில் ஒரு சின்ன அகழி முனிசிபாலிட்டியால் 2 வருஷத்துக்கு முன்னே வெட்டப் பட்டு அதற்கு, 'Rain Water Harvesting Scheme" என்று பெயர்
சூட்டப் பட்டு முடிவடையாமல் எங்க தெருவிலே எங்க வீட்டுக்கு 4 வீடு தள்ளிப் பாதியில் முடிவடைந்து வருஷா வருஷம் சிக்குன் - குனியாவில் இருந்து சிக்காத குனியா வரை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. மழையில் நாங்க கேட்கும்போது வெயில் காலத்தில் செய்வோம் என்பார்கள். வெயில் காலத்தில் கேட்கும்போது இப்போ தண்ணீர் தான் முக்கிய பிரச்னை, ஆதலால் அதில் பிசி என்பார்கள். இப்படியே ஒவ்வொரு வருஷமாப் போகிறது. தெருவில்
எல்லாரும் சேர்ந்து அதை அடைத்து விடலாம் என்றாலும் யாரும் முன்வருவதில்லை. கிட்டத்
தட்ட 3 அடி ஆழம், 2 அடி அகலம் உள்ள பள்ளத்தில் எந்த நேரம் விழப் போகிறேனோ என்ற பயத்துடனேயே வாசலில் தினசரி கோலம் போட வேண்டும். சின்னக் குழந்தைகள் விழறதும் உண்டு. இப்போ தண்ணீர் அதுவும் ஓடாமல் தேங்கி இருக்கிறதால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் பார்த்தால் இங்கே இருந்து ஓடிடலாம் போல் இருக்கு. இதேதான் நம்ம அறிந்த அந்நியரும் சொல்கிறார். பதிவே அவருக்குப் பதில் சொல்வதற்குத் தான்.
"காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்-அங்கு
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்-அங்கு
கேணியருகினிலெ-தென்னை மரக்
கீற்றும் இளநீரும்"
இப்படி எல்லாம் நான் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் நான் போகும், போன இடம்
எல்லாம் எனக்குத் தனி வீடாகத் தோட்டம், துரவுடன்தான் அமைந்தது. மற்றதெல்லாமாவது
ராணுவக் குடியிருப்பு. அதனால் வீடுகள் பெரிதாகவும், தனியாகவும்கிடைத்தது என்று சொல்லலாம். ஆனால் சென்னையிலும் சரி, சிகந்திராபாத்திலும் சரி, வாடகைக்குக் குடி இருந்ததும் தனி வீடுகள் தான். சிகந்திராபாத்தில் மாடியில் வீட்டுக்காரர்கள் இருந்தார்கள்
என்பதைத் தவிர கீழே நான் தான் முழுக்க ஆட்சி செய்தேன். என்னைப் பொறுத்த வரை வீடு
என்பது விவரிக்க முடியாத ஒரு உணர்வு. அதை உயிருள்ள ஒரு ஆத்மாவாகத் தான் என்னால்
பார்க்க முடிகிறது. அதனால் தான் நாங்கள் மதுரையில் குடி இருந்த வீடுகளில் இருந்து என்னால்
நினைவில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை எழுத முடிகிறது என்று தோன்றுகிறது. ஒருவேளை
அதிகம் பற்று வைக்கிறோனோ என்னவோ? வாடகைக்கு இருந்த வீடுகளே அப்படி என்றால் சொந்த வீடு, அதுவும் கஷ்டப் பட்டுக் கட்டிய வீடு என்றால் எத்தனை, எத்தனை நினைவுகள், கனவுகள், நிகழ்வுகள். இத்தனைக்கும் நாங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ராஜஸ்தான், குஜராத் என்று போய் இருந்திருக்கிறோம்.ஆனாலும் இந்த வீட்டைக் கட்ட நாங்கள் பட்ட பாடு எல்லாம் இன்னொரு "ராஜத்தின் மனோரதம்" தான். அதில் "தேவன்" எழுதின நிகழ்ச்சிகளுக்குச் சற்றும் குறைவில்லை நாங்கள் பட்ட அனுபவங்கள் எல்லாம். அத்தகைய வீட்டை விட்டு விட்டு எங்கே போவது? வீட்டைக் கூடப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது. விற்கவும் மனசு இல்லை. எங்கள் தெருவிலேயெ நெருங்கிய நண்பர்கள் சிலர் இந்த மழைக்குப் பின் வீட்டை விற்கும் எண்ணத்தோடு இருக்கிறார்கள். எங்களுக்கு இன்னும் அந்த எண்ணம் வரவில்லை.
முக்கியமாக எங்க வீட்டு மரங்கள், செடிகள், கொடிகள் ஒண்ணொண்ணுக்கும் ஒவ்வொரு
கதை உண்டு. உயிர் உண்டு. எல்லாம் என்னோடு பேசும். நானும் பேசுவேன். வேப்பமரத்தடி
தெருவில் போகிறவர், வருகிறவருக்கெல்லாம் சொர்க்கமாய் இருக்கிறது. அதை வெட்டுவது என்ற நினைப்பே அந்த வேம்பை விட அதிகமாய்க் கசக்கிறது. மின் வாரியக் காரர்கள் கூட எங்களைக் கேட்டுக் கொண்டு சில கிளைகளை மட்டும் கழித்து விட்டுப் போவார்கள் அவ்வப்போது.அந்தப் பறவைகள் எல்லாம் எங்கே போகும்? கடவுள் எல்லாவற்றுக்கும் இடம் வைத்திருப்பார். இருந்தாலும் நான் இடம் பெயர்வது என்பது எனக்கு எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு
அதுகளுக்கும் இருக்குமே? ஒரு ஒரு குச்சியாக எடுத்துப் போய் ஒவ்வொரு பறவையும் கூடுகள்
கட்டும் அழகும், அதில் குஞ்சுகளுக்குப் படுக்கவோ என்னமோ போட எங்கிருந்தோ புல்லை வாயில் கெளவிக் கொண்டு வைப்பதும் அப்புறம் பார்க்கவே முடியாதே! வீட்டு வாசலில் வந்து படுக்கும் பசுமாடுகளும், சாப்பிட ஏதாவது கொடுத்தால் ஒழியப் போக மாட்டேன் என்று வாசல் கேட்டைக் கொம்பால் முட்டிக் கத்துவதும் நடக்குமா? வெளியே போவது என்றால் இவங்களோட அன்புத் தொல்லை தாங்க முடியாது. ஏதாவது கொண்டு போவது என்றால் மூடி மறைத்துத் தான் எடுத்துப் போகணும். இல்லாட்டிப் பின்னாடி வந்து முட்டும். நாய்கள் எல்லாம் கால்களுக்கு இடையே புகுந்து புறப்பட்டு மிதிபட்டுக் கத்தினாலும் திரும்ப வரும்.
அதற்காகவே நாய்களைக் கூப்பிட்டுச் சாப்பாடு போடாமல் தெரியாமல் வைத்து விட்டு
வரவேண்டி இருக்கிறது. எங்கானாலும் ஊர்களுக்குப் போவது என்றால்கூட ஆள் வைத்துத் தோட்டத்தைப் பராமரிக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது. திரும்ப ஊர் வரும்போது முதலில் வரும் நினைவு செடி, கொடிகள் எப்படி இருக்கிறதோ என்பது தான்.இப்போ எல்லாம் நான் ஜாஸ்தி தோட்டத்தில் வேலை செய்யறது இல்லை என்றாலும் கூட ஒரு முறை மரங்களையும் செடிகளையும் அதில் புதுசா வந்திருக்கிற பறவைகளையும் பார்க்காமல் இருக்க முடியாது. தவிர இந்த வீட்டில் தான் என்னோட எத்தனை கஷ்டங்கள், சந்தோஷங்கள், கொண்டாட்டங்கள் என்று
இருக்கிறது. ஒவ்வொரு செங்கல்லும் கிட்டத் தட்ட நாங்கள் எடுத்து வைத்துக் கட்டினமாதிரிதான். ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கதை சொல்லும். க்யூரிங் தண்ணீர் ஊற்றி நாங்களே
செய்வோம். கிணற்றில் தண்ணீர் இறைத்துத் தான் அப்போதெல்லாம். ரொம்பவருஷம்
மோட்டாரே போட வில்லை. கையால்தான் இழுத்தோம். அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வீடு
கட்டிட்டு உள்ளே வரும்போது உண்மையாகவே கொல்லை, வாசல் இரண்டு பக்கத்துக்கு மட்டும் தான் கதவு போட்டுக் கொண்டு வந்தோம். மற்ற கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து
கொஞ்சம், கொஞ்சமாகச் செய்தோம். சிமெண்ட் பெர்மிட்டில் தான் அப்போதெல்லாம் வாங்க
வேண்டும். அதற்கு சென்னைத் துறைமுகத்தில் போய்ப் படுத்து இருந்து, கொரியாவில் இருந்து
சிமெண்ட் மூட்டைகள் கப்பலில் வந்து இறங்கியதும் பெர்மிட் கடிதத்தைக் காட்டி சிமெண்ட்
வாங்கி வரவேண்டும். அப்படி ஒரு நிலைமை. அதுவும் நடந்தது. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக் கட்டிய இந்த வீட்டில் உயிர் கட்டாயம் இருக்குமே. அதான் ஆங்கிலத்தில் "Home, Sweet Home" என்று சொல்கிறார்களோ என்னமோ? புராணம் முடியலை. தொடர்ந்தாலும் தொடரும். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ தெரியலை.
பதிவைத் தமிழ் மணத்திலே சேர்க்கப் போனேன். நீ யாரோ தெரியலைன்னு ஒரு முறையும், புதுசா எதுவும் எழுதாமல் ஏன் வரேன்னு 2வது முறையும் கேட்டிடுச்சு. அதனாலே பார்த்துப் போடுங்க உங்க பின்னூட்டங்களை. அப்புறம் எதையும் அழுத்தமாச் சொல்ல வேண்டாம்னு நான் BOLD font உபயோகிக்கறதே இல்லை. அதனாலே எல்லாத்தையும் லேசாச் சொல்லிடலாம் பாருங்க அதான்! :D
ReplyDelete//இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக் கட்டிய இந்த வீட்டில் உயிர் கட்டாயம் இருக்குமே.//
ReplyDeletevery True. builted with Ramco cement..? :D
After certain stage, better be detached from our beloved ones, belongings, so that our soul will attain salvation, the eternal truth.
Change is the only constant in this world.
அம்பி,
ReplyDeleteஇந்த வயசிலே அந்தப் பக்குவம் உங்களுக்கு ஏற்பட்டதற்கு அந்த ஆஞ்சநேயனுக்கு என் நமஸ்காரங்கள்.
மற்றபடி இந்த மாதிரி நுண்ணிய உணர்வுகளை எல்லாராலும் புரிஞ்சுக்க முடியாது.
மேடம்..வீடு பத்தி நீங்க எழுதினவுடனே எனக்கு பாலுமகேந்திராவோட வீடு படம் தான் ஞாபகம் வருது.. மேலும் எங்கள் ஊரில் 1999-இல் நாங்கள் வீடு கட்டியபொழுது நடந்த நினைவுகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது..
ReplyDeleteஅம்பி சொல்வது போல்.. பற்றற்று இருப்பது ஒரு வயதுக்கு மேல் நல்லது என்பதே என் கருத்தும் கூட..
ReplyDeleteஆனால் எல்லாவற்றையும் ரசிக்கலாம் தலைவியே.. ரசித்தல் என்பது என்றைக்கும் நம்மை இளமையாக, மனதை இளமையாக வைத்திருக்கும்..
கீதா,அருமையா உங்கள் எண்ணங்களை எடுத்துரைக்கிறீர்கள்.எனக்கு என் அம்மா வீடு ஒன்றுதான் அந்த நினைவுகளைத் தரும்.அதுவும் இல்லை என்ற தருணங்கள் நெருங்கி வந்துள்ளன.உங்கள் மனநிலையை நானும் உணர்கிறேன்.--SKM
ReplyDeleteநாமிருக்கும் வீடு நமதென்பதறிந்தோம்
ReplyDeleteஇது நமக்கே உரிமை என்பதறிந்தோம்
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே
நாம் இருக்கும்வீட்டின்மீதும் நம் மக்கள் மீதும்
ஆசையையும் பாசத்தையும் ஏற்படுதிக்கொள்வோம்
அது நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கும்
சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தையும் கொடுக்கும்
@ அம்பி எப்படி இருக்கு.கேசரி மேலே அதீத ஆசை வைத்த நாமா பற்ற அற்ற வாழ்க்கையைப் பற்றி பேசுவது.
ஆத்தோரத்திலே அரைகாணி நிலத்தை அபகரிச்சவன்
ஆறுநாள் தொடர்ந்து ஊரிலே வேதாந்த விளக்கம் கொடுத்தானாம்....கதை போல இருக்கு
ஜோக் எல்லாம் நல்லா இருக்கு...பின்ன வேற பக்கம் இருந்து சுட்டது நல்லா தான் இருக்கும் :-)
ReplyDeleteவீட்ட கட்டி பாருனு சும்மாவா சொன்னாங்க...
ReplyDeleteபுராணம் இன்னும் முடியலயா... :-)
//இந்த வயசிலே அந்தப் பக்குவம் உங்களுக்கு ஏற்பட்டதற்கு அந்த ஆஞ்சநேயனுக்கு என் நமஸ்காரங்கள்.//
ReplyDeleteநீங்க என்ன அம்பிய சின்ன பையன்னு நினைச்சுட்டீங்களா
//பதிவைத் தமிழ் மணத்திலே சேர்க்கப் போனேன். நீ யாரோ தெரியலைன்னு ஒரு முறையும், புதுசா எதுவும் எழுதாமல் ஏன் வரேன்னு 2வது முறையும் கேட்டிடுச்சு//
ReplyDeleteதமிழ் மணத்துக்கும் தெரிஞ்சு போச்சா :-)
மிகவும் நல்லா இருங்க....
ReplyDeleteவீடுங்குறது- எப்படா வீட்டுக்கு போவோம் என்று ஏங்க வைக்க வேண்டும். ஏண்டா வீட்டுக்கு போறாம் என்று இருக்க கூடாது....
என்னை இன்று வரை ஏங்க வைத்து கொண்டு இருக்கின்றது... தொடர வேண்டும் என்பது தான் என் பிராத்தனை
To You All Good News for you. My system is in problem. So no Mokkai for some days, I think. But I see here that Ambi, Karthik and Veda are in a same wavelenghth. Thank You Sir, TRC and SKM thank you also.Nagai Siva, a special thanks for you. Will meet after two or three days. May be Ambi is going to celebrate it. :D
ReplyDelete//ஆத்தோரத்திலே அரைகாணி நிலத்தை அபகரிச்சவன்
ReplyDeleteஆறுநாள் தொடர்ந்து ஊரிலே வேதாந்த விளக்கம் கொடுத்தானாம்....கதை போல இருக்கு //
evvalo azhaga udharanam kodukkirrar parunga TRC sir.
too good.I liked it.:)
neega thirandhuteengalannu adikadi vandhu pathu poitu irukken.
Hope that problem gets solved once and for all(namma oorla adhellam appdi nadadhuma enna kekureenga.adhuvum sari--SKM
//எதிலும் பற்று வைக்காமல் இருப்பது என்றுமே நல்லது தான்:) //
ReplyDeleteஇதை மட்டும் சரியா செய்துட்டா நாம தான் மகாத்மா ஆகி விடுவோமே....
//Nagai Siva, a special thanks for you. //
ReplyDeleteஎனக்கு ஏன் இந்த ஸ்பேஷல் .... இதுல ஏதும் வில்லங்கம் இல்லயே....
நல்லா வூடு கட்றீங்க கீதாக்கா...
ReplyDelete//இதையெல்லாம் தாண்டி(!) எங்க தங்கத்தலை(வலி)வி திரும்ப முடிசூடுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்//
ReplyDeleteவேதா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் தலைவி எப்படி இருக்காங்க.. மறுபடியுமா?
நீங்க ஒவரா ஐஸ் வச்சு பேசுறத எல்லாம் வச்சு பாத்தா லைட்டா உங்களுக்கு தலைவி ஆகுற ஆசை வந்துடுச்சு போல..
நாராயணா!!! நாராயணா!!!
//
ReplyDeleteசிமெண்ட் பெர்மிட்டில் தான் அப்போதெல்லாம் வாங்க வேண்டும். அதற்கு சென்னைத் துறைமுகத்தில் போய்ப் படுத்து இருந்து, கொரியாவில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் கப்பலில் வந்து இறங்கியதும் பெர்மிட் கடிதத்தைக் காட்டி சிமெண்ட் வாங்கி வரவேண்டும். அப்படி ஒரு நிலைமை. அதுவும் நடந்தது.
//
இது நடந்தது ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்தானே ? :-)))