எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 04, 2006

151. ரத்தத்தின் ரத்தமே!

மஹேசனுக்கே தெரியாத விஷயம்!

மக்கட் பிறப்புத் தான். வேறே

என்ன? அது மட்டும் மஹேசனுக்கே

தெரியாதாமே! ஆச்சரியமா

இல்லை? ஆனால் அப்படித்தான்

ஒரு பழமொழி எங்க அம்மா

சொல்லுவார்கள். "மழை வரவும்,

மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே

தெரியாது" அப்படின்னு. இப்போ

மழை நல்லா வெளுத்துக் கட்டுது.

ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை

வெளுத்துக் கட்டுது. எது

தப்பினாலும் இது மட்டும் தப்பாது.

காலா காலத்தில் வந்துடும். ஆனால்

குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம

பூர்வ ஜென்ம புண்ணியம்.

கல்யாணம் ஆனா உடனேயே

எல்லாரும் கேட்கும் கேள்வி

விசேஷம் ஏதும் உண்டாங்கறது

தான்.
"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,

செல்வக்களஞ்சியமே"ன்னு

கொஞ்சவோ அல்லது "சின்னச்

சின்னக் கண்ணனுக்கு என்னதான்

புன்னகையோ?"னு கேட்டுக்

கொஞ்சவும் எல்லாருக்கும்

ஆசைதான். ஆனால் எல்லாருக்கும்

அது நிறைவேறுதா? இல்லை.

சிலருக்கு நிறைவேறாமல்

போகிறது. உடலில் குறைபாடுகள்

இல்லாதவர்களுக்குக் கூடக்

குழந்தை பிறப்பில் தாமதம்

ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி"

கூட முயன்றாலும் எல்லாருக்கும்

சாத்தியம் ஆவது இல்லை. அதே

மாதிரி வாடகைத் தாயும் இப்போ

பிரபலம் ஆகி வருகிறது.

அதிலேயும் எல்லாருக்கும் பலன்

கிடைப்பது இல்லை. உண்மையில்

பார்த்தால் இறைவன்

விதித்தவருக்குத் தான்

கொடுக்கிறான். அதில் மாற்றம்

இல்லை இது வரை.

கிடைக்கிறவங்களுக்கும் சரியான

விதத்தில் குழந்தை பிறக்குதா?

அதுக்கும் சிலபிரச்னைகள்

இருக்கே? அதிலே ஒண்ணுதான்

ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி

மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ

பார்க்கப் போறோம்.

எனக்குப் படிக்கிற நாளிலேயே

என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னு

தெரியும். ஆனால் அப்போ அது

Rh+ அல்லது - என்பது பற்றி

எதுவும் தெரியாது. பின்னால் சில

நிகழ்வுகள் மூலம் Rh- என்றால்

குழந்தை பிறப்பில் பிரச்னை என்று

தெரிய வந்தாலும் அது எல்லாம்

சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக்

குழந்தை பெற்றுக்

கொண்டவர்களாய்ப் போய்

விட்டார்கள். ஆகவே இதில் பெரிய

விஷயம் ஏதுவும் இல்லைனு

யோசிச்சுப் பார்க்கவே இல்லை.

பின்னால் எனக்குக் கல்யாணம்

ஆகி உடனே குழந்தை

உண்டாகாதபோதும் இது பற்றிக்

கவனம் செலுத்தவில்லை. அதுக்கு

அப்புறம் குழந்தை உண்டாகிக்

குழந்தை பிறந்து 3-ம் நாள்

குழந்தை மஞ்சள் என்றால் அப்படி

ஒரு மஞ்சளாக இருக்கவே

எல்லாருக்கும் சந்தேகம் ஏன்

இப்படி? என்று. ஆனால் என்

கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள்

காமாலை நோய் இருந்த

காரணத்தால் வீட்டில் இருந்த

பெரியவர்கள் அதன் காரணமாய்

இருக்கலாம் என்று சொல்லி

விட்டார்கள். ஆனாலும் டாக்டர்

வந்து பார்த்து விட்டு இது Rh-

குரூப், அதன் குறைபாடுதான் என்று

உறுதிப் படுத்தினார். ஆனால் அவர்

வந்து பார்த்து உறுதிப்

படுத்துவதற்குள் குழந்தை பிறந்து

4 நாளுக்கு மேல் ஆகி

விட்டிருந்தது. ஆகவே எனக்கு

அப்போது உடனே போட

வேண்டிய ஊசி போடமுடியாத

நிலை. குழந்தைக்கு மட்டும்

மருத்துவம் செய்தார்கள். தினமும்

காலை வெயிலில் குழந்தையைப்

போட்டுக் கொண்டு என் அம்மா

உட்காருவார்கள். நான் எங்கேயோ

ரூமில் இருப்பேன். குழந்தையின்

ஆகாரத்தில் இருந்து அது

குளிப்பது வரை எல்லாம் கட்டுப்

பாடு. கிட்டத் தட்ட 45 நாள்

இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து

விட்டு ஒரு மாதிரியாக நானும்

புக்ககம் வந்து விட்டேன். அப்புறம்

எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் சில வருடங்கள்

கழித்து இரண்டாவது குழந்தை

உண்டான சமயம் நாங்கள்

ராஜஸ்தானில் இருந்த

காரணத்தால் என் கணவர்

முன்கூட்டியே என் பெற்றோரை

வரவழைத்து என்னை அனுப்பி

விட்டார். இஷ்டம் இல்லாமல்தான்

போனேன் அப்போது, அதுவும்

மதுரைக்கு. ஆனால் குழந்தை

பிறந்த சமயம் விடிகாலை ஆதலால்

அப்போது ஒண்ணும்

தெரியவில்லை. அப்புறம் நல்ல

சூரிய வெளிச்சம் வந்ததும்

குழந்தையைப் பார்த்தால் ஒரே

மஞ்சள் நிறம். துணி எல்லாம்

மஞ்சள். உடனேயே எனக்குள்

ட்யூப் லைட் எரிய நான் முதல்

குழந்தைக்கும் வந்திருந்தது என்று

சொன்னேன். நல்லவேளையாகக்

குடும்ப டாக்டர் என்பதால் முதல்

பிரசவமும் அதே ஆஸ்பத்திரி,

அவங்களுக்கும் நினைவு இருந்தது.

உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து

விட்டு முன்னால் வந்த அதே

குழந்தை நல சிறப்பு மருத்துவரை

வரவழைத்தனர். அவர் பார்த்து

விட்டு உடனேயே பழைய கதையும்

தெரிந்ததும் இது Rh-

குறைபாட்டினால் வந்ததுதான்

என்று சொன்னார். உடனேயே

முதல் பிரசவத்தில் ஊசி ஏன்

போடவில்லை என்று கேட்டதற்குக்

குழந்தை பிறந்து 72 மணி

நேரத்துக்கு மேல் ஆனதால்

போட்டாலும் பயன் இல்லை என்று

போடவில்லை என்று

சொன்னார்கள். மஞ்சள்

காமாலையுடன் enlargement

liver-டன் பிறந்த என் குழந்தை

அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு

காட்சிப் பொருள் ஆனான். இதன்

காரணம் என்னோட 'O' Rh

Negative வகை ரத்தம் தான். இது

ஏன் ஏற்படுகிறது என்று

புரியவில்லை என்றாலும் இதைத்

தடுக்க நிறையத் தற்காப்பு

நடவடிக்கைகள் இருக்கின்றன.

அவை நாளை தொடரும்.

DISCLAIMER; மருத்துவம் பற்றிய

பதிவு என்பதால் முதலில் என்

கணவர் யோசித்தார். மருத்துவம்

தெரியாமல் எழுதுவது சரியாய்

வருமான்னு. ஆனால் நான்

பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி

வேறு மருத்துவ சம்மந்தமான

குறிப்புக்கள் எல்லாம் வராது

என்றும் சொல்லி இருக்கிறேன்.

ஆகவே இந்த ரத்தக் குறைபாடு

உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய

முக்கியத் தகவல்கள் மட்டுமே

நாளை கொடுக்கப் படும்.

டாக்டர்கள் என்ன மாதிரி

ட்ரீட்மெண்ட் சிபாரிசு

செய்வார்கள், நாம் என்ன மாதிரி

நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பது போன்ற பொதுவான

விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.

9 comments:

  1. ஹிஹிஹி, நேத்திக்கு ஆவி வந்துச்சா? அதன் தாக்கம் போல் இருக்கு, பதிவு ஒரு கவிதைன்னு சொல்லிட்டுப் படிச்சுக்குங்க என்ன செய்யறது? எல்லாம் உங்களோட Head Letter! :D

    ReplyDelete
  2. With all that rain and powercut problems,kadavulae,ungal aarvathai paaraatta varthaigalae illai.
    Still confused with those 2 photos.
    You have cleared my doubts.Thank you--SKM

    ReplyDelete
  3. SKM, வேதா சொல்றதைப் பார்த்தா எனக்கும் சந்தேகம் வந்துடுச்சு. ஆனால் என்னோட கணவர் சரியாத் தான் இருக்குங்கறார். இது வேதா அனுப்பிச்சதைத் தான் நான் போட்டிருக்கேன். மத்தது எல்லாம் ஆல்பத்திலே சைடில் வந்திருக்கும். பார்க்க முடியாது.

    @வேதா, +பாசிட்டிவ் வகைக்குப் பயமே இல்லை. கவலையே படாதீங்க. நல்லாக் கூடிய சீக்கிரம் மனதுக்குப் பிடித்த இடத்தில் கல்யாணம் ஆகி ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்னுடைய மனப்பூர்வமான ஆசிகளும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  4. முதன் முதலாக உருப்படியான பதிவு. :)

    நல்லா படம் காட்றீங்க, மண்டபத்துல யாரோ எழுதி குடுத்ததா இருந்தாலும், மானசரோவர், கைலாச கிரி படங்களுக்கு நன்றி. :)

    ReplyDelete
  5. அதெப்படி மேடம்..உங்களுக்கு மட்டும் பிளாக்கர் இப்படி சதி செய்யுது.. கவிதை எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  6. @அம்பி, காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சளாய்த் தான் தெரியும்.

    @கார்த்திக்,
    அதான் சொன்னேனே, ஆவி வந்துட்டுப்போயிருக்குன்னு, கூடவே வேதாளமும் வந்திருக்கும். :D கணினி வேறே உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டிருக்கு, பார்க்கலாம்.

    ReplyDelete
  7. nice article from the mother of rh-. I learnt this at a early age very eagerly - around my age of 7 when my uncle and aunt got married and every one was worried on their first child conceiving time.

    ReplyDelete
  8. விக்கியில் போட்ட பின்னூட்டத்தை இங்க போ்டலைன்னா எப்பிடி? இதோ!

    //DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு.//

    மிகவும் சரியாத் தான் வந்திருக்கு கீதாம்மா! விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு! பாராட்டுக்கள்!!

    இப்பெல்லாம், சென்னையில் இந்தத் தகவல்களைப் பேறு காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று என் தங்கை (மருத்துவர்) கூறினாள்! இப்படிச் செய்வதால் டெலிவரி முடிந்த உடனேயே, இயல்பாக அது system-க்குள் வந்து விடுகிறது! தவற விட்டோமோ என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை!

    இங்கு அமெரிக்காவில் இது போல் முன்கூட்டிய நடவடிக்கை உண்டா என்று தெரியவில்லை!

    "-" பற்றிய பதிவுக்கு ஒர் "+" குத்து! :-)

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி, கண்ணன், இதிலேயும் போட நினைச்சேன், அப்புறம் போட்டேன்னு நினைக்கிறேன். வரலையோ என்னமோ?

    ReplyDelete