எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 09, 2006

153. எதிர்க் கட்சியின் சதி?

இருங்க, இருங்க, முதலிலே நான் ரசித்த சில ஜோக்ஸ்: அப்புறம் தான் விஷயம் என்னன்னு சொல்வேன்.
நயன் தாரா ரசிகர்கள்(முக்கியமா "மனசு" இப்போல்லாம் கண்ணிலேயே படறதில்லை.) கவனிக்கவும்.

"சிம்புவாலே என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோன்னு பயமா இருக்கு டாக்டர்!

ஏன்?

அடிக்கடி என் கனவிலே நயன் தாரா வர்றாங்களே!"
***************
"உனக்கும் உன் மனைவிக்கும் பிரச்னையா?

ஆமாம், எப்படித் தெரியும் உனக்கு?

பூரிக்கட்டை இரும்புலே கிடைக்குமானு உன் மனைவி என் கிட்டே கேட்டாங்களே!"
***************

"என் கணவர் மஸ்கட்டுலே இருக்காரு, உன் கணவர் எங்கே இருக்காரு?

சமையல்கட்டுலே!"
**************

"பார் வேந்தே! என்னைப் பார் வேந்தே!

சும்மா பார் பார் என்று என்னை பயமுறுத்த வேண்டாம் புலவரே! நேற்றிரவு டாஸ்மாக் பாரில் சைடு டிஷ்ஷுக்காக உம்மிடம் கடனாக வாங்கிய சில்லறையைத் தந்து விடுகிறேன்!"
***************

ஒரு நாலு நாளா என்னை "ஆளே இல்லை, எங்கேயோ காணோம்"னு சந்தோஷப் பட முடியாமல் அப்போ அப்போ உங்க பதிவுகளில் மட்டும் தலைகாட்டிட்டு இருந்தேன். என்ன வழக்கமான நம்மோட பிரச்னைகள்தான். அதை விவரிச்சா கார்த்திக் புலம்பல்னு சொல்லுவார். சரி, மழையைப் பத்தியும் ரோட்டிலே மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைத்ததையும். அக்கம்பக்கம் வீட்டுக்காரர்களில் வீடுகளில் கீழே இருந்து ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் தண்ணீரை இறைத்து மாளாமல் அவங்க அவங்க சொந்தக் காரங்க வீடுகளுக்குப் போகிறதையும் எழுதினா மணிப்ரகாஷ் வந்து "என்ன மேடம்?"னு கேட்பார். ரெயில் பயணத்திலே இன்னும் மிச்சம், மீதி இருக்கிறதை எழுதலாமான்னு பார்த்தால் நம்ம அறிந்த அந்நியர் வந்து, "போரடிக்குது, ஸ்டைலை மாத்துங்க, இல்லாட்டிப் பின்னூட்டக் குத்தகை கிடையாது"னு வந்து பயமுறுத்துகிறார். எல்லாத்துக்கும் மேலே இந்த அம்பிக்கு ஏதோ அவர் தம்பி எழுதிக் கொடுத்து அவர் எழுதற மாதிரி நான் யாரோ எழுதிக் கொடுக்கிறதை எழுதற மாதிரி ஒரு எண்ணம். என்னத்தைச் சொல்றது.? எல்லாம் எதிர்க்கட்சிகளோட சதி. நான் வலை உலகில் பேரும், புகழும் பெற்றுத் தன்னிகரில்லாத, (!) ஒப்பற்ற தனிப் பெரும் (?!) தலைவியாய்த் திகழுவது கண்டு எதிரிக்கட்சியினர் (யாரு அவங்க?) செய்த சதியால் நான் நாலு நாளாய் ஒண்ணுமே எழுத முடியவில்லை. இதோ வந்துவிட்டேன், வீறு கொண்டு எழுந்து விட்டேன்., விட மாட்டேன் உங்களை. என் எழுத்தால், என்னோட அனுபவங்களை நீங்க வேண்டாம், வேண்டாம்னு சொல்ற வரைக்கும் சொல்லியே தீருவேன் என்ற திடமான முடிவுடன் வந்துள்ளேன். வணக்கம். சீச்சீ, இப்போதானே ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே வணக்கம்லாம் சொல்லி விடை பெற ஆரம்பிச்சுட்டேனே, ஒரே குழப்பம். எனக்கில்லை, உங்களுக்கு. நான் எழுத ஆரம்பிச்ச புதுசுலே யார் வந்து படிக்கப் போறாங்கன்னு நினக்கறது உண்டு, ஆனால் இப்படி ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆகவே இப்போதைக்கு உங்களை எல்லாம் விடறதா எண்ணம் இல்லை.
**********************

மேலே குறிப்பிட்ட ஜோக்ஸ் எல்லாம் இந்த வாரக் குமுதத்தில் வந்தது. அதிலே 2-வது ஜோக் வெளிப்படையா சிரிப்பு மாதிரி இருந்தாலும் நிறையப் பெண்கள் கணவனை அடிக்கிறவங்க இருக்கிறாங்க.மனைவிகள் கிட்டே அடி வாங்கற கணவன்மாரைக் காப்பாத்த என்ன சட்டம் கொண்டு வரப் போறாங்க? சமம்னா இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நீதி தானே இருக்கணும்? இப்போ பேப்பர், பத்திரிகை எல்லாத்திலேயும் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வந்ததையும், அதுக்கு அப்புறம் சில பெரிய மனுஷங்களோட மனைவிகள் கூட தங்கள் கணவன்மார்களைப் பத்திக் குறை சொல்ல ஆரம்பிச்சிருக்கிறதும் தான் பேச்சு, இந்தச் சட்டத்தால் பெண்களுக்குப் பாதுகாப்புன்னு ஒரே புகழ்மாலை. என்னைப் பொறுத்தவரை இது தேவையில்லாத சட்டம். அப்படின்னா ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் பொறுத்துக்கணுமான்னு கேட்கிறவங்களுக்கு. இப்போ பெண்கள் ஒண்ணும் அப்படி தைரியம் இல்லாமல் இல்லை. இப்போ இருக்கிற சட்டமே போதும் ஆண்களைத் தண்டிக்கிறதுக்கு. புதுசா என்ன சட்டம் வந்தாலும் அது இன்னும் பிளவைப் பெரிசு படுத்தத் தான் பயன்படும். ஒரு சின்ன குற்றத்துக்குக் கூடப் பெண்கள் கணவனைத் தண்டிக்க ஆரம்பிப்பார்கள் என்று தோன்றுகிறது. மேலும் இப்போதைய பெண்கள் கணவனை "வாடா, போடா!" என்று (பெயர் மட்டுமில்லாமல்) கூப்பிடுகிறார்கள். குழந்தைகளும் அப்பா, அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடுகிறது. கேட்டால்," மரியாதை மனசில் இருந்தால் போதும். நாங்க நண்பர்கள் மாதிரிக் குழந்தைகளை வளர்க்கிறோம்" என்று பதில் வருகிறது. இது நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, பல இடங்களில் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டது தான். அப்பா, அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடும் குழந்தை தன் ஆசிரியரையோ அல்லது மற்றப் பெரியவர்களையோ மதிக்குமா என்பது சந்தேகமாய்த் தான் இருக்கிறது. இப்போது ஒரு பிரசித்தி பெற்ற தொலைக்காட்சித் தொடரில் பேத்தி தன் தாத்தாவைப் பேர் சொல்லிக் கூப்பிடும்படியாகவும், "டா" போட்டுப் பேசும்படியாகவும் அமைத்திருக்கிறார்கள். எந்தக் குழந்தைகள் அமைப்போ அல்லது, பெண்கள் அமைப்போ அல்லது யாரிடமிருந்தாவது மறுப்புக் கடிதமோ இன்று வரை யாரிடம் இருந்தும் வரவில்லை.

வடநாட்டில் நான் செப்டம்பர் மாதம் போனபோது கூடப்பார்த்தது, சின்னக் குழந்தைகளைக் கூடப் பெற்றோரும் சரி, தாத்தா, பாட்டியும் சரி, நீங்க என்னும் பொருளில் வரும் "ஆப்" போட்டுத் தான் அழைப்பார்கள். அந்தக் குழந்தைக்கும் அது பழக்கம் ஆகிவிடும். எனக்குத் தெரிந்து அதிகம் கூட்டுக் குடும்பம் இன்றளவில் இருந்து வருவதும் வட மாநிலங்களில் தான். (கார்த்திக், கொஞ்சம் பொறுத்துக்கோங்க!). நாம் அப்படிக் கூப்பிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மரியாதை தெரியுமாறு பழகலாமே! கணவன், மனைவி நெருக்கமோ அல்லது சமம் என்பதோ இதன்மூலம் தான் வெளிப்படுகிறது என்று நினைத்தீர்களானால் அது நிச்சயம் தவறு. மேலும் இப்போதைய பெண்களின் பெற்றோரும் இதற்கு ஆதரவு தெரிவிக்காமல் பெண்களை அப்படிக் கூப்பிடாதே என்று சொல்ல வேண்டும். தன்னோட பெண், மாப்பிள்ளையைப் பேர் சொல்லிக்கூப்பிடுவதையும், "வாடா' என்று சொல்லுவதையும் ஏற்றுக் கொள்ளும் தாயால் அதே தன் மருமகள் தன் மகனை அம்மாதிரிக் கூப்பிட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. டாக்டர் ரங்கபாஷ்யம் (Gastro Enterologist) கூட ஒரு பேட்டியில் இதைக் குறித்து வருந்தி இருக்கிறார். இதை ஆரம்பித்து வைத்த கைங்கர்யம் நம்ம தொலைக்காட்சித் தொடர்கள்தான். அதுவும் சில வருடங்களுக்கு முன்னால் வந்த "ரமணி வெர்சஸ் ரமணி" தொடரின் முதல் பாகத்தில் (வாசுகியும், "பப்ளி" என்ற ப்ருத்வி ராஜும் நடித்தது) ஆரம்பித்து வைத்தார்கள். இன்று பட்டி, தொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டது. படங்களில் கலாச்சாரச் சீர்கேட்டைக் கொண்டு வந்தது போதாதுன்னு தொலைக்காட்சியிலும் கூட ஆரம்பிச்சிருக்காங்க. என்னத்தைச் சொல்றது? அதுதான் எகோபித்த பாராட்டைப் பெற்று வெற்றிகரமா ஓடுது. இதைச் சொல்ற எனக்கு எதிராத் தான் பின்னூட்டம் வரும்னு நினைக்கிறேன். எது வந்தாலும் வரட்டும், சொல்றதைச் சொல்லிடலாம்னு ஒரு எண்ணம். சொல்லிட்டேன், அப்புறம், உங்க இஷ்டம்.

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!"

பாரதி சொன்னதுக்கு இதா அர்த்தம் எனக்குப் புரியலை! உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்!

21 comments:

  1. Between hubby and wife, they cud call as they wish. but when it coems in public, better to call by name or with some respect.

    ithellam youth generation matter, ungalukku therinju irukka vaaypu illai. :)


    *ahem* unga veetula epdi?nu naan inga pottu odaikkava? athaan neengalum saambu maamavum bnglre vantha pothu paarthenee? :D

    ReplyDelete
  2. அம்பி, அவங்களுக்குள்ளே எப்படிக் கூப்பிட்டாலும் சரினு நீங்க சொல்றீங்க, ஆனால் அது சமூகத்திலே பார்க்க நல்லா இருக்குன்னு நீங்களும், உங்களை மாதிரிப் பையன்களும் நினைக்கிறது தப்புன்னு நீங்களே உணரும் நாள் வரும். எனக்கு younger generation matter-ம் எழுத வரும். Older generation matter-ம் எழுதுவேன். எங்க வீட்டிலே என் கணவரை எப்படி நான் கூப்பிடுகிறேனா இல்லையா என்பது எங்க உறவிலே எல்லாருக்குமே நல்லாத் தெரியும். சும்மாச் சும்மா பங்களூரிலே பார்த்தேன்னு நீங்க சொல்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம். No smiley.

    ReplyDelete
  3. //ஆனால் அது சமூகத்திலே பார்க்க நல்லா இருக்குன்னு நீங்களும், உங்களை மாதிரிப் பையன்களும் நினைக்கிறது தப்புன்னு நீங்களே உணரும் நாள் வரும்.//


    hope you haven't read my comment carefully. so i've bolded again. no smiley.

    but when it comes in public, better to call by name or with some respect.

    ReplyDelete
  4. கீதாக்கா,

    கணவன் மனைவி எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் இப்பொழுது சமவயதினராகத்தான் இருக்கிறார்கள், நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்னியோந்நியம் அப்படி.

    அது பிடிக்காத பெரியவர்கள் இருக்கும் போது அடக்கி வாசிக்கலாம்.

    அதற்காக அப்பா அம்மாவையோ, தாத்தா பாட்டியையோ வாடா போடா என அழைக்க வேண்டாம்.

    இது என் கருத்து.

    ReplyDelete
  5. This matter of calling by name is on the increase.whether we like it or not it happens.we should have mind set to accept these things.let us the matter to the young people to decide about since their liking is primary and our is secondary

    ReplyDelete
  6. // அதை விவரிச்சா கார்த்திக் புலம்பல்னு சொல்லுவார். //

    உண்மைய சொன்னா ஏன் எப்படி கோபப்படுரீங்க தலைவியே.. பொறுமை..ஹிஹிஹி.. இன்னும் கோபம் வரலையா உங்களுக்கு

    ReplyDelete
  7. //மேலே குறிப்பிட்ட ஜோக்ஸ் எல்லாம் இந்த வாரக் குமுதத்தில் வந்தது. அதிலே 2-வது ஜோக் வெளிப்படையா சிரிப்பு மாதிரி இருந்தாலும் நிறையப் பெண்கள் கணவனை அடிக்கிறவங்க இருக்கிறாங்க.//

    ஆஹா.. மேட்டர் கிடைக்காம ஜோக்ல இருந்து ஆரம்பிக்கிறீங்களா.. அய்யோ..நான் ஒண்ணும் சொல்லல..அடுத்த போஸ்ட்ல நான் இப்படி சொன்னேன்னு வேற சொல்வீங்க..நமகெதுக்கப்பா வம்பு..

    ReplyDelete
  8. //எனக்குத் தெரிந்து அதிகம் கூட்டுக் குடும்பம் இன்றளவில் இருந்து வருவதும் வட மாநிலங்களில் தான். (கார்த்திக், கொஞ்சம் பொறுத்துக்கோங்க!). //

    மேடம்..நீங்க என்ன சொன்னாலும் சரி விடப் போறதில்லை.. ஆமா..அதென்ன எதுக்கெடுத்தாலும் வடமாநிலம் தான் பெரிசு..அப்படின்னு சொல்றது.. திருச்சியை தாண்டி போய் பாருங்க மேடம்.. எத்தனை கூட்டுக்குடும்பம் வட மாநிலம் புல்லா இருக்கோ..அத்தனை பாதி தமிழ் நாட்டுல மட்டுமே இருக்கு..

    நீங்க பொறுத்துக்கோங்க சொன்ன பிறகும், இப்படி ஒரு பின்னூட்டதுக்கு..ஹிஹிஹி..மன்னிக்கவும் தலைவியே.. தமிழ்நாட்டை என்னால விட்டுத்தரவே முடியாது..

    ReplyDelete
  9. மஸ்கட் சமையல்கட் ஜோக் நல்லாருக்கு.ரசிகர் கூட்டத்தை கொடுமை படுத்தியே தீருவது என்ற உங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறேன். அந்த வேலை தலைவியைத் தவிர வேறே யார் சரியா செய்ய முடியும்?

    லோகத்திலே படிப்புக்கும் வாழ்கையின் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரி.அம்பி வயசுக்கு அப்படிதான் பேசத் தோனும்.சும்மா உங்க வாயை கிண்டிப் பார்க்கிறார்.இது மட்டுமல்ல, இன்றைய நாகரீக டிரண்டான பெண்கள் தன்னை விட வயதில் குறைந்த ஆண்களை திருமணம் செய்வது இன்னும் பல பிரச்சனைகள் தருகிறது. இதில் ஆண்களுக்கு மரியாதை,அன்பு, அனுசரனை எதுவும் கொடுப்பதில்லை பெண்கள்.பெண்கள் சம உரிமைப் போரில் ஆண்களை காலடியில் நசுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். பேர் சொல்லி கூப்பிடுவது பிரச்சனையில்லை.அப்படி செய்ய செய்ய வருடங்கள் போகப் போக வீட்டில் வேலை செய்பவர்களை (அவர்களை கூட இப்போதெல்லாம் மரியாதையாகதான் கூப்பிடனும்)போல ஆகிறது.இதனால் இளைய குழைந்தைகள் எது சரி எது தவறு தெரியாமல் வளர்கிறார்கள்.குடும்ப அமைப்பு பாதிக்கப் படுகிறது. வெஸ்ட்டெர்ன் கல்ச்சர் என்பதன் பாதிப்பு.ஒரு வயதில் அப்பா,அம்மா, பாட்டி யார் எது சொன்னாலும் தப்பு.தனக்கு என சுயபுத்தி வரும் போது it is always too late.இதை பற்றி பேச ஆரம்பித்தால் முடிவே இல்லை.என் எண்ணங்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி.I agree with you 100%.--SKM

    ReplyDelete
  10. மேடம்,
    நீங்க சொல்ல வர்ற கருத்து நல்லா இருக்கு. ஆனாலும் அம்பியும் தப்பா எதுவும் சொல்லலை. நாலு சுவத்துக்குள்ள கணவன், மனைவி அடுத்தவங்க கண்ணுக்குப் படாம என்ன வேணா பேசிக்கட்டுமே...அதுல தவறொன்னுமில்லியே. ஆனா பொது இடம்னு வரும் போது கணவனை மனைவி வாடா, போடா எல்லாம் இல்லாமல் மரியாதையாக அழைத்தல் நல்லது. அதே போல மனைவியையும் கணவன் வாடி போடி என்று பலர் முன்னிலையில் அழைத்தலும் கண்டிக்கத் தக்கதே என்பது என் எண்ணம்.

    //சும்மாச் சும்மா பங்களூரிலே பார்த்தேன்னு நீங்க சொல்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம். No smiley.//

    மத்தபடிக்கு இதை விளையாட்டாகத் தான் சொல்லியிருப்பாரு. 16 வயது சின்னப் பொண்ணா இருந்தாலும் தங்கள் தாய்மை உள்ளத்தினைக் கொண்டு
    மன்னித்தருளுங்கள்.
    :)

    ReplyDelete
  11. தலைவி அப்பப்ப பஞ்ச் டயலாக்ல பெரிய ஆளுன்னு நிரூபிக்கிறீங்க. அஜீத், விஜய், சிம்பு எல்லாம் தோத்தானுங்க போங்க.

    //எனக்கு younger generation matter-ம் எழுத வரும். Older generation matter-ம் எழுதுவேன். //

    இதோட "ஏய்","டா" இதெல்லாம் சேத்தா சாட்சாத் பஞ்ச் டயலாக்கே தான்.

    "ஏய்! எனக்கு younger generation matter-ம் எழுத வரும். Older generation matter-ம் எழுதுவேன்டா"

    கார்த்திக் ப்ளாக்ல படிச்ச இன்னொரு பஞ்ச் டயலாக் ஞாபகம் வருது...
    "ஏய்! நான் ஞாபக சக்தியிலே யானைடா"

    நீங்க வசனம் எழுத ஆரம்பிச்சிட்டா டைரக்டர் பேரரசுக்கு எல்லாம் மார்க்கெட் அவுட் ஆயிடும்.
    :))

    ReplyDelete
  12. Sorry Ambi, I have noted the point. But it seems., No I am not going to argue. Leave it.
    But I agree with you in one matter, between them personally, It is OK. But not in public and before the children. It is to be underlined.
    So now smiley; A big one :D OK?

    ReplyDelete
  13. @இ.கொ. நீங்க சொல்றதும் அம்பி சொல்றதும் சரியாத் தான் இருக்கு. தாத்தா, பாட்டியை வாடானு கூப்பிடற பழக்கத்தை இப்போ ஒரு சீரியல் ஆரம்பிச்சு வச்சிருக்கு. என்னத்தைச் சொல்றது?

    ReplyDelete
  14. TRC Sir, Ofcourse it is to be decided by the younger generation. But they should definitely understand what is wrong or what is right. It is our duty to tell them atleast to follow some etiquetee I mean., in public places and before children. Because a society begins in a family. May be Parents should not be a role model to their children. Atleast they can teach their children to respect elders.

    ReplyDelete
  15. hihihi, கார்த்திக், நான் வம்புக்குத் தான் எழுதறேன்னு நல்லாத் தெரியுமே? அப்புறம் நீங்க எனக்கு இலவச விளம்பரம் தினமும் கொடுக்கறதுக்கு நானும் பதிலுக்குக் கொடுக்க வேணாமா?
    நானும் தமிழ் நாட்டை விட்டுக் கொடுக்கலை. தமிழ்நாடு முன்மாதிரியா இருந்தது இப்போ இல்லைங்கற ஆதங்கத்திலே சொல்றேன்னு புரிஞ்சுக்குங்க, ப்ளீஸ்!

    ReplyDelete
  16. SKM, உங்க ஆதரவுக்கு நன்றி. இதைப் பத்தி நிறையப் பேசலாம். ஆனால் விவாதம் பெரிசாப் போகும் நீங்க சொல்றாப்போல். நான் நேத்து எழுதும்போதே நினைச்சேன். எதிர்ப்பும் வரும்னு, கார்த்திக் மட்டும் எந்தக் கருத்தும் கூறாமல் தப்பிச்சிட்டார். பரவாயில்லை. மற்றபடி உங்க கருத்தும் என் கருத்தும் ஒண்ணுதான். நன்றி.

    ReplyDelete
  17. கைப்புள்ள, கவுத்திட்டீங்களே இப்படி? தலைவியை ஆதரிக்காமல் இப்படி அம்பியோட போட்ட ஒப்பந்தம் நினவுக்கு வந்து அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?:D

    அம்பி, விளையாட்டா இதைச் சொன்னாலும் விஷயம் விளையாட்டில்லை என்பதால்தான் அப்படி எழுதினேன். அம்பியும் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். மன்னிக்கிற அளவுக்கு எல்லாம் எனக்குத் தகுதி கிடையாது. இது ஒரு விவாதம். கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு இல்லையா?

    மறுபடி வாரி விட்டுட்டீங்களே?:D நான் பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லலை. younger generation பத்திப் புரிஞ்சுக்க முடியும்னுதான் சொன்னேன். நீங்க வேறே அவரை இன்னும் தூண்டி விட்டுட்டு, நடத்துங்க, நடத்துங்க, எல்லாம் head letter. இந்த ச்யாம் எங்கே காணோம், விஷயத்தைப் பார்த்துட்டுப் பயந்து போயிட்டாரா? அதான் நான் யானை இல்லைனு நிரூபிச்சுட்டீங்களே! :D

    ReplyDelete
  18. உமாகோபு, பெண்களுக்குப் பெண்களே எதிரிங்கறது எந்த அளவிலேனு எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்குன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி விஷயம் பெண்ணுக்குச் சுதந்திரம் தருவதுன்னு நீங்க நினைச்சா, மன்னிக்கவும், நான் ஒருவேளை பெண்ணுக்கு எதிரியாத் தான் தெரிவேன். என்னாலே சில ஆதாரங்களோட எழுத முடியும். ஆனால் இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம்னு இருக்கேன். ரொம்ப நன்றி உங்க கருத்துக்களுக்கு. நான் தப்பா எல்லாம் நினைக்கலை. எல்லாருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் இருந்தால் வாழ்க்கையில் ருசியே இருக்காதுனு என் எண்ணம்.

    ReplyDelete
  19. வேதா, இப்போவும் வயசு வித்தியாசத்திலே கல்யாணம் செய்துக்கிறவங்க இருக்கிறார்கள். இதெல்லாம் அவங்க அவங்க இஷ்டம், மனப்பான்மையைப் பொறுத்தது. தாராளமாப் பேர் சொல்லிக் கூப்பிடட்டும். ஆனால் அது குறைந்த பட்சம் அவங்க மாமியார், மாமனார், குழந்தைகள் முன்னிலையிலாவது தவிர்க்கலாமே? மரியாதை கொடுப்பதால் என்ன குறைந்து போகும்னு நினைக்கறீங்க புரியலை? நிச்சயம் நம்மளை மதிக்கிறாளேன்னு பெரியவங்களுக்குச் சந்தோஷமாத் தான் இருக்கும். 8, 10 வயசு வித்தியாசத்தில் கல்யாணம் செய்து கொண்ட பெண் கூடத் தன் கணவனை "டேய்" என்னும்போது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  20. பின்ன என்ன, இன்னமும் பிராண நாதா! சுவாமி! அத்தான்!னு உங்க காலம் மாதிரியே கூப்டனும்!னு சொல்றீங்களா? :)

    kaipulla, after that punch dialogue, thalaivi face yaanai maathiri change aagi, thumbikaiyala oru salute adikara maathiri set pannidalam. how is it..? :)

    ReplyDelete
  21. அம்பி, நான் ஒண்ணும் அத்தான், பொத்தான்னு எல்லாம் கூப்பிடற டைப் இல்லை. உங்களுக்கு எல்லாம் அந்த ஆசை இருந்தால் நிறைவேறாமல் போகப் போகுது. எனக்கு என்ன வந்தது? உங்க வருங்கால மனைவி கிட்டே நானே போய் "டேய், அம்பி!"னு கூப்பிடுனு சொல்லிடறேன், போதுமா? :D

    ReplyDelete