எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 20, 2006

156. கதவு திறந்தால் இணையம் வரும்!

எல்லோரும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்க. அதுவும் ஒரு வாரமா நான் இல்லைன்னதும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருக்கும்.முக்கியமா அம்பிக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்திருக்கும். எனக்குத் தான் சண்டை போட ஆள் இல்லாமல் ரொம்பவே போர் அடிச்சது. எல்லாம் இந்த ஜன்னல் கதவை இறுக்கிச் சாத்திக் கொண்டு விட்டதா? அதனால்தான். போன வாரம் திங்கள் கிழமை அன்னிக்கு ஜன்னல் திடீர்னு இறுக்கிச் சாத்திக் கொண்டு விட்டது. எல்லாம் மழைக்காலம் இல்லையா அதனாலோ என்னமோ தெரியலை. திறக்கவே வரலை. நானும் என்ன என்னமோ குட்டிக் கரணம் எல்லாம் போட்டுப் பார்த்தேன். திறக்கவே வரலை. நல்லா இறுக்கி மூடிக் கொண்டு விட்டது. உடனேயே safe modeற்குப் போய்த் திறக்கப் பார்த்தால் அது என்னடாவென்றால் adminisiter pass word கொண்டா என்று கேட்கிறது? யாருக்குத் தெரியும்? சரினு உடனேயே யு.எஸ்ஸில் பையனுக்குத் தொலைபேசிக் கேட்டால் அவன் நான் அதெல்லாம் கொடுக்கவே இல்லைங்கறான். உடனேயே ஒகே கொடுத்துட்டுத் திறந்துக்கோன்னு சொன்னான். அப்படியே செய்தால் ஜன்னல் திறந்த உடனேயே மூடிக் கொள்கிறது.

என்னடா இது, "மதுரைக்கு வந்த சோதனை?"ன்னு ரொம்பவே பயமாப் போச்சு. உடனேயே மெக்கானிக்குக்குத் தொலைபேசிட்டுக் காத்திருந்தால் செவ்வாய்க்கிழமை பூரா அவர் வரவே இல்லை. நான் ரொம்பவே சோர்வா உட்கார்ந்திருந்ததைப் பார்த்த என் கணவர் உடனேயே காரணத்தைக் கண்டுபிடித்தார். என்ன இருந்தாலும் என் மறு பாதி இல்லையா? "என்ன, அம்பியோட சண்டை போட முடியலையா? கடைசியா எப்போ போட்டே? அம்பி பங்களூர் மீட்டிங் பத்தி எழுதினதுக்கு நீ பதில் எழுதினதும்?" அப்படின்னு கேட்டார். "நேத்திக்குக் கூட பின்னூட்டம் கொடுத்துட்டுத் தான் வந்தேன். என்ன பதில் வந்திருக்கு தெரியலை,"ன்னு சொன்னேன். அப்புறம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இடைப்பட்ட காலத்தில் ஒரு முழு சினிமா பார்த்தேன். "சில்லுனு ஒரு காதல்" ஹிஹிஹி, விகடன் ஜோக்கிலே வந்த மாதிரி அதெல்லாம் சி/டியை ஃபிரிஜ்ஜில் எல்லாம் வைக்கலை. அப்புறம் சில பல பாதி சினிமாக்கள், காமெடி தொகுப்புக்கள். சீரியல்கள், புத்தகம் படித்தல்னு பொழுதைப் போக்கினேன்.எனக்கு என்னமோ சரியாத் தான் இருந்தது. ஏன் என்றால் மத்தியானம் ஒரு 2 அல்லது 21/2 மணி நேரம்தானே உட்காருவேன். அதனாலே ஒண்ணும் தெரியலை. ஆனால் என்னோட கணவருக்குத் தான் ரொம்பவே கஷ்டமா இருந்திருக்குன்னு நினைக்கிறேன்.பின்னே இஷ்டத்துக்கு சீரியலோ, சினிமாவோ பார்த்துட்டு ஜாலியா இருந்தவர்கிட்டே போய், "இது என்ன சீரியல்/சினிமா? இவள் யாரு? ஏன் அழறா? இந்தப் பொண்ணு ஏன் தன்னோட கணவனுக்கு இன்னோர் கல்யாணம் செய்யப் போறா? இவன் ஏன் இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்துகிட்டான்?" அப்படின்னு இடைவிடாமல் கேள்விமழை பொழிந்தால் அவர் சீரியலோ, சினிமாவோ பார்ப்பாரா? அல்லது எனக்குப் பதில் சொல்லுவாரா?

அதோடு இல்லாமல் ராத்திரி நான் போய்ப்படுத்தால் ஒரு 2 மணி வரைக்கும் நல்லாத் தூங்கிடுவேன். அப்புறம் அவ்வளவாத் தூக்கம் வராது. பல வருஷங்களா இப்படித்தான் என்பதால் பழக்கமா ஆயிடுச்சு. அதுவே என் கணவர் படுத்தார்னா உடனேயே குறட்டைதான். காலையில் நாம் எழுப்பினாத் தான் எழுந்துப்பார். ராத்திரி நான் முழிச்சிட்டு இருக்கிறது வீட்டுக்கு ரொம்பவே பாதுகாப்புன்னு வேறே அபிப்பிராயம் அவருக்கு. பின்னே? சின்னச் சத்தம் வந்தாக்கூட உடனேயே பார்த்துடலாமே?சும்மாவே கோழித் தூக்கம்தான். "யானை படுத்தா வியாதி"ன்னு சொல்வாங்க. ஹிஹிஹி, அதெல்லாம் யானை மாதிரி இருக்க மாட்டேன். குட்டி யானை மாதிரித் தான் இருப்பேன். சும்மா ஒரு உள உளாக்கட்டிக்குச் சொன்னேன். யானை மாதிரி நான் ஏதாவது உடம்பு சரியில்லைன்னாத் தான் படுப்பேன். இல்லாட்டிப்படுக்க மாட்டேன். இப்படிப் பட்டவள் இப்போ நல்லாத் தூங்க ஆரம்பிச்சுக் காலையிலே 4, 41/2 வரை தூங்க ஆரம்பிக்கவே என்னோட மறுபாதிக்குப் பயம் பிடிச்சுக் கொண்டது. ஏன்னா அவருக்குத் தூக்கம் போயிடுச்சே? ஹிஹிஹி, இதிலேயும் நாங்க 2 பேரும் கிழக்கும் மேற்கும்தான் பாருங்க. இந்த மாதிரித் தூங்கினால் சரிப்பட்டு வராது, உடனேயே இதுக்கு ஒரு வழி பண்ணணும்னு யோசிச்சார். என்ன செய்யறதுன்னு தெரியாமல் காய் வாங்கப் போன இடத்திலே தன்னோட கஷ்டத்தை நினைச்சுப் புலம்ப அங்கே ஒருத்தர் இதைக் கேட்டுட்டு (தெரிஞ்சவர்தான்) நான் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்து பார்த்தார். சாம, தான, பேத, தண்ட முறைகளை உபயோகித்தும் ம்ஹும், அசைந்து கொடுக்கவே இல்லையே! கல்லுளி மங்கனுக்கு நான் அண்ணனாக்கும்னு சொல்லிட்டுது. அவரும் "சரி,ஜன்னல் புதுசாப் போட்டுடுங்க" னு சொல்லவே புது ஜன்னலும் போட்டாச்சு. ஆனால் கதவு (இணையம்) திறக்கவே இல்லை. கதவு திறக்க எல்லா ஏற்பாடும் செய்துட்டு மூணு நாளாக் காத்துட்டு இருந்தேன். கடைசிலே இன்னிக்குத் தான் அதுவும், "உங்க தெருவிலே ஒரே தண்ணியா இருக்கு. எப்படி வருவோம்?"னு ஒரெ மிரட்டல். "நாங்க இல்லையா? நீங்க வந்தால் என்ன?"ன்னு சொல்லி வரச் சொன்னோம். பாவம்,வண்டியைத் தூர நிறுத்திவிட்டு நடந்தே வந்தும் கூட ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. பின்னே? எங்களுக்கே எங்கே மேடு? எங்கே பள்ளம்னு கண்டு பிடிக்க முடியாது. இன்னிக்குப் பள்ளமா இருந்ததேன்னு நினைச்சா நாளைக்கு மேடாகி இருக்கும். மேடு பள்ளமா ஆயிருக்கும். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவே வந்து பார்த்துத் திறப்பு விழா நடக்கும்போது 5-00P.M. ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் எழுதிச் சேமித்து வைத்ததைப் போட்டால், ஹிஹ்ஹி அடிக்க வருவீங்க, சைனீஸ் பாஷையிலே வந்துடுச்சு. அதனாலே இப்போ வேறே மாதிரி எழுதி இருக்கேன். முன்னால் எழுதினதிலே இன்னும் இணையம் வரலைன்னு சொல்லி இருந்தேன். இப்போ இணையம் வந்துடுச்சுன்னு சொல்றேன் அவ்வளவு தான்.

"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே,
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சமென்பதில்லையே!"

இதுக்கு மேலே இன்னும் என்ன வரப்போகுது? எது வந்தாலும் அதுவும் கடந்து போயிடும். நாளைக்கு என்ன பண்ணப் போகுதோன்னு இப்போவே சொல்லி வைக்கிறேன். வந்தா என்னோட அதிர்ஷ்டம் வழக்கம்போல். இல்லாட்டி உங்களுக்கு. இனிமேல்தான் எல்லாருடைய வீட்டுக்கும் போகணும். வேதா வீடு திறக்கவேஇல்லை. தி.ரா.ச. வீடு விலாசம் சரியில்லைன்னு சொல்லுது. கார்த்திக் வீடும், அம்பி வீடும் தான் திறந்தது. பார்க்கலாம், வர்ட்டா?

13 comments:

  1. //
    கார்த்திக் வீடும், அம்பி வீடும் தான் திறந்தது//
    தலைவிக்காக என்னிக்குமே கதவு திறந்து தான் இருக்கும்.. வாங்கோ வாங்கோ

    ReplyDelete
  2. ஐந்து நாள் இந்த இணையதளமே சொர்க்கம் மாதிரி இருந்தது.. எல்லாரும் ரொம்ப சந்தோசம இருந்தாங்க.. என்னன்னு கேட்ட நீங்க இல்லாதது தான்னு சொல்றாங்க.. அப்புறம் உங்க பதிவுல பின்னூட்டம் பாத்தா ஒரு வாரத்துகுள்ள வந்திடுவேன் புளி கரைக்கிற சேதி.. ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க தலைவியே

    ReplyDelete
  3. உங்களை காணாம்ன உடனே உங்க தலைவி பதவிக்கு ஏகப்பட்ட போட்டி.. என் கிட்ட மனு மேல மனுவா குவிஞ்சுடுச்சு.. நான் கூட தலைவி கீதாவை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோர்க்கு இருநூறு கசையடின்னு ஒரு பதிவு போடலாம்னு நினச்சேன்..சே அதுக்குள்ளாட்டியும் வந்துட்டீங்களே..

    ReplyDelete
  4. என்னடா திடீர்னு கரிசனம்..இத்தனை பின்னூட்டம்னு பாத்தீங்களா.. நீங்க பதிவு போடாத நாளுக்கெல்லாம் சேர்த்து இப்போ போடுறேன்..சரி..சரி..நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரியுது.. கடமை தவறாத கார்த்திக்ன்னு ஒரு பதிவு போடப்போறீங்க..சரியா.. ஹிஹிஹி.. பரவாயில்லை பரவாயில்லை அதெல்லாம் வேண்டாம் மேடம்..

    ReplyDelete
  5. முதல் பின்னூட்டம்னு சொல்லி புளியோதரை எல்லாம் அனுப்ப வேண்டாம்.. வீட்டுக்கு வர்றப்போ விருந்தே சாப்புடுறேன் மேடம்.

    ReplyDelete
  6. நல்ல கதையா இருக்கே, இத்தனை நாள் நல்லாக் கொண்டாடி இருக்கீங்க? ம்ஹும் இது ஒண்ணும் சரியில்லை. தாற்காலிகக் கடலை கார்த்திக்கில் இருந்து, சீச்சீ முதலமைச்சரில் இருந்து தூக்கறதைப் பத்தி யோசிக்கிறேன். கொஞ்ச நாள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே இப்படியா? இருக்கட்டும், இருக்கட்டும் வச்சுக்கறேன்.

    ReplyDelete
  7. இவ்வளவு பின்னூட்டம் போட்டும் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை என்னுடைய மக்கள் பணியை பாராட்டுறீங்களா.. சே.. என்ன ஒரு பொறாமை உங்களுக்கு.. நான் மக்களோட அன்பினால ஆட்சிக்கு வந்தவன்.. இந்த பின்னூட்டம் எல்லாம் நீங்க என்னை பதவியிலிருந்து தூக்காம இருக்கிறதுக்கான லஞ்சம்னு நினச்சா நான் என்ன பண்றது தலைவியே.. நான் என் கடமையை எப்போதும் செய்பவன்..

    ReplyDelete
  8. வாங்க,வாங்க.வெற்றி வாகை சூடியதற்கு.அம்பி உங்க இடமே ஈ ஓட்டிட்டு இருப்பதாலே இங்கே வம்பு வைச்சுக்க சொல்லிட்டார்.உங்க வசதி எப்படி?நானும் உங்கக் கட்சிதான் தூக்கத்தில்.ஜன்னல் மூடிடுதோ,கதவு மூடுதோ உங்கள் விடாமுயற்சிக்கு ஒரு "ஓ" போடலாம்.--SKM

    ReplyDelete
  9. தலைவிக்காக என்னிக்குமே கதவு திறந்து தான் இருக்கும்.. வாங்கோ வாங்கோ
    Same comment. ( ellam en head letter) :)

    //அம்பியோட சண்டை போட முடியலையா? கடைசியா எப்போ போட்டே? //
    sema comedy. naan enniki sandai potten..? (innocent looku)

    ReplyDelete
  10. கொஞ்ச நாள் நான் இல்லைன்னதும் என்னோட தலைவி பதவியைப் பறிக்கப் பார்த்த "கடலை கார்த்திக்" பத்திக்கூடிய சீக்கிரம் ஒரு பதிவிலே எழுதறேன். ம்ம்ம்ம், எதிர்க்கட்சிக்குத் தான் ஆள் சேர்ந்துட்டே இருக்காங்க. எல்லாம் இந்த அம்பி காட்டிலே மழை. வேறே என்ன சொல்றது?:-P

    ReplyDelete
  11. வேதா(ள்), நீங்க உண்மையானாத் தொண்டு உள்ளம் கொண்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியுமே! ஹிஹிஹி, என்ன இருந்தாலும் நாம இரண்டு பேரும் ஒரே நட்சத்திரம், ராசி இன்ன பிற பிற இல்லையா? அதனாலே என்னோட தலைவி பதவியைத் தக்க வச்சுக்கறதுக்கு எனக்கு உதவியதுக்கு நன்றி.

    ReplyDelete
  12. SKM,என்ன அநியாயம் இது? நமக்காகவே அம்பி வலைப் பக்கத்தைத் திறந்து வச்சுட்டுக் காத்திருக்கிறப்போ நாம் இங்கே பேசிக்கிறதாவது?<:-) அதெல்லாம் வேண்டாம். நாம வழக்கம் போல அங்கேயே பேசிக்கலாம். அப்போதான் நல்லா மூடு வரும் பேசறதுக்கு. :D

    ReplyDelete
  13. அம்பி, சேச்சே, நீங்க சண்டையே போடறதில்லை. நான் தான் போடறேன். ஆனால் எப்போ நிறுத்தப் போறேன்னு கேட்டால், நாயகன் மாதிரி, "அவனை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!" அப்படின்னெல்லாம் சொல்ல மாட்டேன். அவன் நிறுத்தினாலும் நான் நிறுத்த மாட்டேன். இது தான் நம்ம வழி. ஹிஹிஹி, என் வழி, தனீஈஈஈஈஈஈஈ வழி! இது எப்படி இருக்கு?:D

    ReplyDelete