ஒரு வாரம் நல்லா விடுமுறை கிடைச்சதிலே சில பல தொலைக்காட்சிப் படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள்னு பார்க்க முடிஞ்சது. தினமும் மத்தியானம் சீரியல்னு வரதை எல்லாம் பார்த்து மனசைக் கெடுத்துக்கிற வழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் நகைச்சுவைத் தொடர்னால் எப்போ வேணால் பார்க்கலாம். சாயந்திரம் பார்க்கிறதும் சும்மா இப்படிப் போயிட்டுப் போயிட்டு வந்து பார்க்கிறது தான். உட்கார்ந்து பார்த்தது என்பது 8-30 தொடர்கள்தான். அதிலேயும் எது நல்லா இருக்குமோ அது மட்டும் தான் பார்ப்பேன். இல்லாட்டி பொண்ணோட சாட்டிங் செய்ய வந்துடுவேன். இப்போ யு.எஸ்ஸில் நேரம் மாத்தி இருக்கிறதாலே கொஞ்சம் நேரம் கழித்துக் கூப்பிட வேண்டி இருக்கு. என்னோட நேரப்படிக் கூப்பிட்டாக் காலை அவசரம் அவங்களுக்கு. அது முடியணுமே. அப்படி ஒரு நாள் உட்கார்ந்திருந்தப்போ பார்த்த "கோலங்கள்" தொடரில் சற்றும் ஏற்கவே முடியாத காட்சிகள் எல்லாம் வந்தது. சிறையில் இருக்கும் பெண்ணான கதா நாயகி தியாகத்தின் மொத்த உருவமாய் இருக்கிறாள். அவளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கூட இப்படி இருக்கக் கூடாது என்று சொல்ல அவள் மட்டும் ரொம்பவே நல்லவளாய் இருக்கிறாள். அவளைக் கொல்லவும் சிறையிலேயே முயற்சி செய்கிறார்கள். எல்லாம் சிறைக் கண்காணிப்பாளர் முன்னாலேயே நடக்கிறது. கொதிக்கும் எண்ணெய்? தண்ணீர்? எதுன்னு புரியலை. அதிலே கையை விட்டு முழங்கை வரை வெந்து போகிறது. ஆனாலும் அவள் பொறுமை காக்கிறாள். அதற்கு மட்டும் சிகிச்சை எப்படிக் கொடுத்தார்கள்னு புரியலை. தொடர்ச்சியாய்ப் பார்த்தால் தானே புரியும். நமக்குத் தான் அந்த வழக்கமே இல்லையே! :D
அப்புறம் பாருங்க, இந்த "ஆனந்தம்" தொடர் அதுக்கு மேலே இருக்கு.ஏற்கெனவே 2 மனைவி உள்ள் ஒரு தொடர். அதிலே முதல் மனைவி தான் வில்லி. 2வது மனைவி ரொம்பவே நல்லவள். ஆனால் இப்போது கணவன் பேச்சை மீறிக்கொண்டு தன்னோட கணவனின் முதல் மனைவியை சிறையில் போய்ப்பார்க்கிறாள். அவ்வளவு நல்ல பெண் அவள். கதா நாயகியோ கேட்கவே வேண்டாம். ஆயத்த ஆடை மாதிரி அந்த நாயகிக்கு என்றே ஏற்பட்ட கதாபாத்திரம் அது. அதுக்கு முன்னாலே 6-30க்கு ஒரு தொடர் வருது. அது கிட்டத் தட்ட "கோபுரங்கள் சாய்வதில்லை" படக் கதைன்னு சொல்கிறார்கள். முதல் மனைவி, 2-ம் மனைவி எல்லாருடனும் ஒரே வீட்டில் குடித்தனம். இதிலே முதல் மனைவி இருப்பது 2-ம் மனைவிக்கோ அல்லது அவள் பெற்றோருக்கோ தெரியாதாம். நல்ல வேளை, நான் அப்போவெல்லாம் பார்ப்பது இல்லை. (பொதிகையில் அப்போதான் நல்ல நிகழ்ச்சிகள் வரும். அதனால் அதைப்பார்ப்போம்.) இதுக்கடுத்து ஒரு தொடர் வருது பாருங்க. ரொம்பவே பிரமாதம். பெண்களுக்கு என்றே ஏற்பட்ட இந்த சீரியலை எந்தப் பெண் விடுதலைக் காரர்களோ, பெண்களின் ஜனநாயகத்திற்கான முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களோ பார்ப்பதில்லையானு தெரியலை.
இப்போவெல்லாம் பெண்களைக் கொடுமைப் படுத்துவதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றி இருக்கிறார்கள் என்று எல்லாப் பெண் வக்கீல்களும், பெண்களுக்கென்றே ஏற்பட்ட ஜனநாயக முன்னணித் தலைவிகளும் பத்திரிகை, பத்திரிகையாகப் பேட்டி கொடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இனி பெண்கள் மேல் கையை வைத்தால் தெரியும், ஜாக்கிரதை! என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். அவங்க எல்லாம் எங்கே போனாங்கனு எனக்குப் புரியலை. இந்த "மலர்கள்" தொடரிலே ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின் குழந்தை பிறக்கவில்லை என்பதால் தன் கணவனுக்கு அவளே பெண்பார்த்து 2-ம் கல்யாணம் செய்து வைக்கப் போகிறாள். அதைத் தடுக்கப் பார்க்கும் கணவனையோ, தன் பெற்றோரையோ, தன் சகோதரர்களையோ அவள் லட்சியம் செய்வது இல்லை. ஏன் என்றால் அவளுக்குத் தன் கணவனின் குடும்பம் சந்தோஷமாக இருப்பது தான் முக்கியம். தன்னால்தான் தன் கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் சந்தோஷத்தை வழங்க முடியும் என்பது அவள் தரப்பு நியாயம்.அதுக்காக அவள் எது வேணாலும் செய்வாள். இத்தனைக்கும் அவள் இப்போது குழந்தை உண்டாகி இருக்கிறாள். அவள் சோதனைக்குப் போன நகரிலேயே பெரிய ஆஸ்பத்திரியிலும் சரி, நகரிலேயே பெரிய மருத்துவரும் சரி, அவள் சோதனை ரிப்போர்ட் மாறி இருப்பதைத் தான் தெரிந்து கொள்ளவில்லை. அத்தனை பெரிய மருத்துவருக்கு ஒரு பெண் கருவுற்றிருப்பது கூட எப்படித் தெரியாமல் போகும்? குழப்பமா இருக்கே? யாராவது கொஞ்சம் உதவுங்க. ப்ளீஸ்!
அவங்க அம்மாவுக்குக் கூடத் தன் பெண் கருவுற்றிருப்பது தெரியவில்லையே? இத்தனைக்கும் அவங்க கதைப்படி 5,6 குழந்தைகள் பெற்றவர்கள். அந்தப் பெண்ணின் கணவன் அதுக்கு மேலே. ஆரம்பத்தில் எல்லாம் 2-ம் கல்யாணத்துக்கு ஆசை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த 2-ம் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் அவனைப் பார்த்து பேசினதும் அவள் துயரத்தைப் பார்த்து மனம் மாறி விட்டானாம். அப்படி மனம் மாறினவன் தன்னுடைய கல்யாணம் ஆகாத நண்பர்களில் ஒருத்தரையோ, உறவினரில் ஒருத்தரையோ அல்லது வேறு வழியாக முயற்சி செய்தோ தன் செலவில் அந்தப் பெண்ணைத் தங்கையாக ஏற்றுக் கொண்டு கல்யாணம் செய்து வைக்கக் கூடாதா? அப்படி இருந்தால் கதை ஓட்டம், விறுவிறுப்புப் போய்விடுமே? அப்புறம் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது அல்லவா? என்னவோ தெரியலீங்க, எல்லாத் தொலைக்காட்சித் தொடர்களிலும் "ஒரு மனைவி, கல்யாணம் செய்து கொண்டால் ஒரு மனைவி இலவசம்" அப்படினு ஒரு கொள்கை வச்சிருக்காங்களோனு நினைக்கிறேன்.
அவள் தங்கையோ என்றால் அதுக்கு மேலே. அவளும் கருவுற்றிருக்கிறாள். ஆனால் அவள் மேல் சந்தேகப்பட்டு அவள் கணவன் கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். சுவற்றில் தலையை வைத்து மோதுகிறான். வார்த்தைகளாலும், வன்முறைகளாலும் கொடுமைப் படுத்துகிறான். இத்தனைக்கும் அவள் என்னை விவாகரத்துப் பண்ணி அனுப்புங்க என்று கேட்கிறாள். அதுக்கும் மறுக்கிறான். அவளைக் கொலை செய்யக் கூட ஏற்பாடு செய்கிறான்.எல்லாப் பெண்களும் இப்படித் தொலைக்காட்சித் தொடர்களில் கஷ்டப்படுவதைத் தடுக்கச் சட்டம் தனியாய்ப் போடணுமோ ன்னு நினைக்கிறேன். இவங்களை எல்லாம் வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றும் செய்யாதா? யார் மேல் போடுவது என்று குழப்பமோ ஒரு வேளை? அந்தத் தொடர் தயாரிப்பாளர் மேலா? இயக்குநர் மேலா? கதை வசனகர்த்தா மேலா? அந்த நடிக நடிகையர் மேலா? தொடரை வெளியிடும் தொலைக்காட்சி மேலா? புரியவே இல்லையே? அப்புறம் இந்த "ரோஜா" தொடரில் கதை எங்கேயோ போகிறது. திடீர்னு தீபா வெங்கட்டை இரண்டு வேடத்தில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலே ஒரு தீபா வெங்கட், இன்னொரு தீபா வெங்கட்டிற்குச் சித்தி. அவள் அம்மாவின் தங்கை. அப்படின்னா இந்தச் சித்தி தீபா வெங்கட்டிற்கும், இன்னொரு தீபா வெங்கட்டின் அம்மாவிற்கும் ஒரே அப்பாவா? இல்லாட்டி இவர் சித்தப்பாவா? சித்தப்பா என்றால் எப்படி ஒண்ணுமே புரியலியே? அம்மாவழிச் சித்தியும், அக்கா பெண்ணும் ஒரே மாதிரி இருப்பாங்களா? அப்பா வழிச் சித்தி பெண்ணும், அவங்க அக்கா பெண்ணும் ஒரே மாதிரி இருப்பாங்களா? சித்தப்பாவா? அப்பாவா? குழப்பமோ குழப்பம்? அதை விடக் குழப்பம் இந்தத் தொடர் முடியவே முடியாதா என்பது தான்? இதை எல்லாம் என் கணவரிடம் கேட்டேனோ இல்லையோ, "நீ போய்ப் புஸ்தகத்தை வைத்துக் கொண்டு உட்காரு, அல்லது கம்ப்யூட்டரில் போய் ஏதாவது படி, எழுது." னு சொல்றார்.இவரோட இந்த வன்கொடுமையைத் தடுக்க ஏதாவது சட்டம் உண்டா? சொல்லுங்களேன், ப்ளீஸ்! ரொம்பவே குழம்பிப் போயிருக்கேன். ROTFL:
All saambu maama Head Letter, unga kooda kudumbam nadata vendi irukku!
ReplyDelete//வரதை எல்லாம் பார்த்து மனசைக் கெடுத்துக்கிற வழக்கம் எல்லாம் இல்லை.//
ipdi sollinde ithanai serial paathachu, oru mookai psotum pottachu!
ipdi mokkai postukellam TRC sir vera vanthu comment podanumaam, *ukkum*
privateaa mail canvassing vera,
avar antha maila enakku fwd panniaachu! :D
grrrrrrr, Sir, It is not justifying. இந்த அம்பி விஷயம் தெரிஞ்சும் இப்படி மானத்தை வாங்கறீங்களே? இது நியாயமா? தர்மமா? முறையா? தகுமா? நல்லாவே இல்லை.
ReplyDeleteஅம்பி, இது ஒண்ணும் மொக்கை போஸ்ட் இல்லை. நல்ல போஸ்ட் தான் போட்டிருக்கேன். சமூக அக்கறை இல்லாதவங்க பேசற பேச்சு இது. ம்ஹும். :D
:D :-D :-D :-D
ReplyDelete//ipdi mokkai postukellam TRC sir vera vanthu comment podanumaam, *ukkum*
privateaa mail canvassing vera,
avar antha maila enakku fwd panniaachu! :D
கீதா சாம்பசிவம் said...
grrrrrrr, Sir, It is not justifying. இந்த அம்பி விஷயம் தெரிஞ்சும் இப்படி மானத்தை வாங்கறீங்களே? இது நியாயமா? தர்மமா? முறையா? தகுமா? நல்லாவே இல்லை.
அம்பி, இது ஒண்ணும் மொக்கை போஸ்ட் இல்லை. நல்ல போஸ்ட் தான் போட்டிருக்கேன். சமூக அக்கறை இல்லாதவங்க பேசற பேச்சு இது. ம்ஹும். :D //
This is very interesting.--SKM
பாருங்க இந்த குழப்பத்துக்குதான் நானும் சீரியல் பார்ப்பது இல்லை.ஆனால் மாமியாரோ அம்மாவோ வந்து இருக்கும் போது அவர்களுக்காக பார்க்கநேரும். யாரும் சமூக அக்கறையோடு எடுப்பது இல்லை.பெண்கள் ஏதோ இப்படி சீரியல் பெண்களுக்கு வருத்தப் பட்டுக் கொண்டு தங்கள் கவலை மறக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.சினிமாவைப் போலவே லாஜிக் இல்லாமல் தான் இருக்கின்றன..பார்த்து நம் இதய அழுத்தத்தை அதிகரிக்காமல் இருப்பது ஒன்றே வழி.
ReplyDeleteஇவ்வளவு சீரியலும் பாத்துட்டு இன்னும் சீரியலே பாக்கலேன்னு வருத்தம் வேறு. இதுக்கு நடுவுலே எப்போ சமைச்சி எப்போ அவருக்கு சாப்பாடு போடரது.பாவம்.
ReplyDeleteஇவ்வளவு நல்ல பதிவு எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க எழுதறீங்க அதைப் போய் படி அப்பறமாவது மொக்கை பதிவு போடாம நல்ல எழுதுவேன்னு சொன்னா இந்த அம்பி அப்படியே கதையை மாத்திட்டானே.பேசாம நீங்க சொன்னா மாதிரி வேறே எங்கேயாவது நல்லா மாட்டி விட்டுற வேண்டியதுதான்.
என்னிக்கோ ஒரு நாள் நான் சீரியல் பார்க்கிறதுக்கு இவ்வளவு எதிர்ப்பா? என்ன இது? அப்புறம் யார் அந்த லட்சுமி, புது முகமா இருக்கே?
ReplyDeleteபாருங்க,நீங்க சீரியல் பார்த்ததோட விளைவு,உங்களுக்கே குழப்பிடுச்சு.மாமா,உங்களை அலுத்துக்கிற அளவுக்கு.இந்த Blogger வேறே உங்களுக்கு காலை வாருது.பாவம்,நீங்க.என்னதான் பண்ணுவீங்க?Relax--SKM
ReplyDelete