நேத்திக்குச் சாயந்திரம் மறுபடி மழை ஆரம்பிச்சதிலே வேறே வேலை வெட்டி இல்லாமல் வலையிலே உலாத்திக் கொண்டிருந்த போது "இலவசம்'ங்கிற தலைப்பைப் பார்த்தேன். நமக்குத் தான் இலவசம்னா நாக்கைத் தொங்கப் போட்டுட்டுப் போவோமே, அதான் உடனேயே போனேன். போனால் ஆவி ஒரு ப்ளாக் திறந்து வச்சுக்கிட்டு எல்லாருக்கும் , leg piece, hand pieceனு இலவசமாக் கொடுத்திட்டு இருக்கு. கைப்புள்ள கேட்டாரேன்னு மின்னலை கைப்புள்ள வீட்டுக்கு அனுப்பி இருக்கேன்னு நினைச்சா கடைசிலே அவர் ஆவி கூட மின்னிட்டிருக்காரு. சூடான் புலி ஏதோ மின்னலைப் பிடிச்சிருக்கிறதா சொன்னாங்களேன்னு கூடப் போய்ப் பார்த்துட்டு வந்தேன், அது ஏதோ பெண் மின்னலாம். சரியாப் போச்சு, மழை வந்ததிலே மின்னலுக்கு வேலை ஜாஸ்தின்னு நினைச்சா கதையே வேறயா இருக்குன்னு நினைச்சு, என்னோட வலைவீட்டுக்குத் திரும்பிட்டேன். பார்த்தா பின்னாலேயே ஆவி, சரினு பயந்து அடிச்சு வெளியே போனால் ஆவிக்குப் பயப்படாத அம்பி வந்து சிரிச்சுட்டுப் போனதும், விவசாயி வந்து ஆவி சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லிட்டுப் போறார். என்ன ஆச்சு? அவருக்கு? ஆவியைப் பார்த்த பயமா? ச்யாம் தான் தைரியமா வந்து எல்லாத்தையும் படிச்சுட்டுப் போயிருக்காரு. இது போகட்டும்னு வேறே யாராவது வருவாங்களான்னு இந்த மழையிலே கடைத் திறந்து வச்சு உட்கார்ந்திருந்தா யாருமே வரலை. நம்ம வீட்டுக்கு இந்த மழையிலே யாரு வரப் போறாங்கன்னு மெயிலைப் பார்க்கலாம்னு போனேன்.
அப்போதான் ஒரு புதுச் செய்தி அனுப்பிச்சிருந்தாங்க, i51.photobucket.லே இருந்து.. உங்க ஆல்பத்தில் உள்ள படங்களை நீங்க தேர்வு செய்து நீங்க விரும்பும் நபருக்கு மெயிலிலோ, அல்லது உங்க வலைப்பக்கத்திலோ கொடுக்க நாங்க புதுசா உதவி செய்யறோம், வந்து அதன் பலனை அனுபவிங்கன்னு கூவிக் கூவிக் கூப்பிட்டிருந்தாங்க. ஏற்கெனவே படம் போட்டு அது பப்படமா வந்து தலைகீழா இருக்கேன்னு வேதா, சிவசங்கர், கைப்புள்ள எல்லாரும் கேட்டாங்க.அவங்க கிட்டே இதுவே திரு மலைநாடன் அட்ரஸ் கொடுத்துப் போய் விசாரிங்கனு சொன்னதாலே போய்ப் பார்த்தேன். இதுக்கு மேலே நம்மளுக்கு வராதுன்னா அவங்க எல்லாம் க்ளாஸ் எடுக்கறோம்னு சொல்றாங்க. இதிலே பாருங்க நம்ம வேதா தான் 'இது தேறாதது"னு முன்னேயே முடிவு பண்ணி ஃபோட்டோவை அவங்களே சரி செய்து திருப்பி எனக்கு அனுப்பி இதை உங்க ஆல்பத்திலே போட்டுக்கோங்கன்னு சொல்லவே அது தாங்க கீழே இருக்கிற படங்கள். அதிலே முன்னால் இருக்கிற 2 படங்களும் தலைகீழா இருக்கிற மாதிரி தெரியுதேன்னு கார்த்திக்கும், SKM-ம் சொல்றாங்க. இல்லை.இது தான் சரியானது. ஏரித்தண்ணீரில் சூரிய ஒளி பிரதிபலிப்பையும் சேர்த்துப் படம் எடுத்ததால் இப்படி இருக்குன்னு நினைக்கிறேன். தவிரக் கம்பி வேலி தெரியுது பாருங்க, அது தான் சாகாவில் இருந்து போகும் போது கொஞ்ச தூரம் வரும். அது நேராத் தான் இருக்கு.
முதலிலே என்னோட ஆன்மீகப் பக்கத்திலே தான் போட நினைத்தேன். ஆனால் அதிலே பாருங்க, அப்படி ஒரு பக்கமே இல்லைனு ப்ளாக்கர் ஒரே சத்தியம் பண்ணுது. சரி, இதிலேயே போடலாம், மேலும் இதுக்குத் தான் யாராவது வராங்க, அங்கே தான் ஈ, கொசு எல்லாம் அடிச்சுட்டு இருக்கோமேன்னு இதிலேயே போட்டேன். ஹி,ஹி,ஹி, இது சொந்த முயற்சிதான். அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்லை. இருந்தாலும் இந்த போட்டோவைத் திருப்புன்னு சொல்றாங்க பாருங்க அதிலே ஒரு முறை தனித் தனியாத் திருப்பிட்டேனோ என்னமோ தெரியலை, 2 படமா வந்துடுச்சு. அதனாலே மத்த படம் எல்லாம் அப்புறமா மெதுவாப் போடறேன். இப்போதைக்கு ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையா இதைப் போட்டுக் கொஞ்ச நாள் வித்தை காட்டலாம் பாருங்க. நாம ப்ளாக் எழுதறதே ஒரு வித்தைதான்னு சொல்றீங்களா? அது என்னமோ வாஸ்தவம் தான். நேத்திக்குப் பாருங்க, இன்னிக்கு வரமாட்டேனு சொல்லிட்டுப் போனேன். ஆனால் இன்னிக்கு வரும்படியாப் போச்சு. சீச்சீ, அந்த வரும்படி இல்லைங்க, வந்து எழுதற மாதிரி ஆகிப் போச்சு, அதான் சொன்னேன். தவிர இது என்னோட 150-வது பதிவு, அதைக் கொண்டாடலாம்னு ஒரு தன்னடக்கத்தோட:D முடிவு பண்ணினேன். அதனாலேயும் தான் இன்னிக்கு எழுதி இருக்கேன். என்னோட முதல் முயற்சியைப் பாராட்டிட்டுப் போக வருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.
படங்கள் எல்லாம் நன்னாத்தானே வந்து இருக்கு. இதுக்குப் போய் ஒரு பில்டப்பா.150க்கு நாந்தான் முதல். சீக்கரம் பாதம் அல்வா கொடுத்து அனுப்புங்கள்.இலவசமா எல்லாருக்கும் கொடுத்தால் தேன்கூடு பரிசு தானாக வரும்.
ReplyDelete150க்கு வாழ்த்துக்கள் கீதாம்மா.
ReplyDeleteபடங்கள் வெகு அருமை.
பாதம் அல்வா என்று திராச ஐயா கேட்கிறார் பாருங்கள்; இதெல்லாம் முதலில் சிஷ்யனுக்கு அனுப்புங்கள்; இங்கிருந்து சென்னைக்கு நான் அனுப்பிக் கொள்கிறேன் (மீதம் இருந்தால் -:))
ரொம்ப நாளாச்சேன்னு இந்தப் பக்கம் வந்தேன்.
ReplyDeleteபடமெல்லாம் தலைகீழா போட்டு கணினியெ திருப்பி பாக்க வச்சி கழுத்து சுளுக்கு வந்துடுத்து.
தம்பி சிவாவின் புண்ணியத்தில் நல்ல படங்களை முத்தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டேன். \
அதனாலெ ரொம்ப கஸ்டபடாதீங்க.
வாழ்த்துக்கள்.
தி.ரா.ச.சார், பாதாம் கொட்டை கூடக் கிடைக்காது. என்னமோ எல்லாரும் தலைகீழா வந்திருக்குன்னு சொல்றாங்க, கொஞ்சம் பொறுங்க, பார்க்கலாம்.
ReplyDelete@கண்ணன், நீங்க எழுதறதே பாதாம் அல்வா சாப்பிடற மாதிரித் தான் இருக்கு, இதிலே நான் வேறே தரணுமா? :D
@மஞ்சூர், அது எப்படிக் கரெக்டா மூக்கிலே வேர்த்து வரீங்களோ தெரியலை. இன்னிக்குன்னு பார்த்து பத்தி சரியா வராமல் கணினி தகராறு பண்ணிப் புதுக்கவிதை வெளியிட்டிருக்கேன். ஓம் நமச்சிவாயா-16-க்கு அப்புறம் ஒரு வாரமா முத்தமிழிலே உங்க தலையைப் பார்த்தாலே ஓடி வந்துட்டு இருந்தேன். இங்கே வந்து வேறே எப்படிப் போடறேன்னு பார்க்கணுமா? :D
அப்புறம் முத்தமிழில் நான் எல்லாருக்கும் தானே அனுப்பினேன், படங்களை, குழுமத்தின் பேரால், அதிலே உங்களுக்கு வரவில்லையா?
//இது என்னோட 150-வது பதிவு//
ReplyDeleteவாழ்த்துக்கள் மேடம்.. கலக்குறீங்க தலைவியே..
தலைவி வாழ்க..
150 போஸ்ட் போட்ட தங்க தலைவி வாழ்க வாழ்க...
வாழ்த்துக்களுக்கு நன்றி, வேதா(ள்),
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி,
கார்த்திக்.
150th post!!!WOW!Hats off to you Geetha.Thank you specially for your encouraging words.--SKM
ReplyDeleteஹிஹிஹி, மண்ணின் மைந்தர்களுக்குள் நன்றி எல்லாம் எதுக்கு? இதைப் பார்த்து அப்படியே வலை உலகில் புல்லரிச்சுப் போக மாட்டாங்களா? :D
ReplyDeleteIt is nothing. Just try and you will, you can. That is all.