எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 01, 2006

148. ஒரு வாய்க் காஃபி

ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன். ஆனால் காஃபி சம்மந்தமாவும் எழுதப் போறேன். ஆகவே தலைப்புக்கும் அதுக்கும் சம்மந்தம் வந்துடும், சரியா? முதலில் நான் ரசித்த ஒரு ஜோக்:

மனைவி கணவனிடம்: ஏங்க, எங்க அம்மா போட்டுத் தர காஃபியைக் குடிக்கவே மாட்டேங்கறீங்க?

கணவன்: எனக்குத் தண்ணியிலே கண்டம்னு ஜோசியர் எச்சரிக்கை பண்ணி இருக்கார், அதான்.

ஹிஹிஹி, கல்கியிலே இந்த வாரம் வந்தது. கொஞ்சம் மாறி இருக்கலாம். கல்கியை அதுக்குள்ளே தேடும்படியா எங்கோ வச்சுட்டேன். ஆனால் அர்த்தம் இது தான். ரொம்ப நல்லா சிரிக்க முடியுது. போனமுறை ஜோக் போட்டதைக் கைப்புள்ள தவிர யாருமே ரசிக்கல்லை. யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை. ஆனால் எங்க வீட்டிலே நகைச்சுவை மட்டும் இல்லை எல்லாச் சுவைக்கும் பஞ்சம் இல்லை. எங்க பிறந்த வீட்டிலே காஃபி எல்லாம் ரொம்பக் கட்டுப்பாட்டோட குடிப்பாங்க. காலை ஒரு தரம், மாலை ஒரு தரம். அதுவும் தம்ளர் எல்லாம் சின்னதாத் தான் இருக்கும். நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே (அப்போ நான் காஃபியே குடிக்க மாட்டேன், என் கணவராலே பழக்கம் ஆனது, இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்.) புகுந்த வீட்டுக்கு வந்தா முதலிலே அவங்க காஃபி குடிக்கிற தம்ளரைப் பார்த்தாலே பயமா இருந்தது. எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே அவங்க அவங்க நினைச்சப்போ காஃபி குடிச்சாங்களா? எனக்கு மயக்கமே வந்துடுச்சு. ஒரு சமயம் என் மாமியார் என் கிட்டே தனக்கு ஒரு வாய்க் காஃபி கலந்து எடுத்து வரும்படிச் சொல்ல நான் literally took it ஒரு சின்னத் தம்ளரிலே எடுத்துப் போய்க் கொடுக்க அவங்க விசித்திரமா என்னைப் பார்த்தாங்க. அப்புறம் பாருங்க, ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா நான் அசந்து போயிட்டேன்.

என் கணவரோ அதுக்கு மேலே என்னைக் கூப்பிட்டு வகுப்பே எடுத்தார். ஒரு வாய்க்காஃபின்னா ஒரு தம்ளர். இது பெரிய வாய். கொஞ்சமாப் போதும்னா அது 1/2 தம்ளருக்குக்கொஞ்சம் கூட, அது சின்ன வாய்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் ஒரு வாய்க் காஃபின்னா நான் பெரிய வாயா? சின்ன வாயான்னு கேட்டு சந்தேக நிவர்த்தி பண்ணிக்கிட்டே கொடுக்கிறது வழக்கமாப் போச்சு. ஆனால் இன்னிக்குப் பாருங்க காலையிலே அவருக்குக் காஃபி கொடுத்துட்டு நான் யோகா பண்ணிட்டுக் குளிக்க ஏற்பாடு செய்யும்போது திடீர்னு எனக்கு ஒரு வாய்க் காஃபி கொடு, னு என் கணவர் கேட்க,யோகாவிலேயே கவனமாக இருந்த நான் மூச்சுப் பயிற்சியிலே இன்னும் என்ன பண்ணறது? மூச்சை நிறுத்தணும்னா எத்தனை நேரம் நிறுத்தறோம்னு தெரிய எண்ணிக்கை வேணும், எண்ணிக்கையிலே கவனம் இருந்தா மூச்சை நிறுத்தறது இயல்பா இருக்காது,னு யோசிச்சிட்டே காஃபி கொடுத்துட்டுக் குளிக்கப் போயிட்டேன். வந்து டிஃபன் கொடுத்துட்டு, காஃபி தான் இன்னிக்கு 2 தரம் குடிச்சாச்சே, மோர் கொடுக்கலாமானு யோசிச்சப்போ அவர் நீ 2-ம் தரம் காஃபி எங்கே கொடுத்தே, சும்மா காட்டிட்டுப் போயிட்டே? ஒரு வாய்னா அர்த்தம் சொல்லி இருக்கேன், இன்னும் புரியலியேங்கறார், என்னத்தைச் சொல்றது, ஒரு பெரிய வாயாக் காஃபியைக் கலந்து கொடுத்தேன், ஏற்கெனவே படிக்கிற நாளில் அவரோட சொந்தக்காரங்க வந்து என் கணவர் கிட்டே படிப்பு முடிச்சதும் மேலே என்ன செய்யப் போறேன்னு கேட்டதுக்கு, மேலே இப்போ ஒண்ணும் கூரை எல்லாம் மாத்த வேணாம் எல்லாம் நல்லாத் தானே இருக்குன்னு பதில் சொன்னவர் ஆச்சே, அதனாலே ஜாஸ்தி பேச்சுக் கொடுத்தா மாட்டிப்போம்னு தெரிஞ்சா விடு, ஜூட், வெற்றிகரமா வாபஸ்.
**********************

இன்னிக்கு அவள் விகடனிலே ஒரு கல்லூரி மாணவி தன்னோட ரத்த குரூப் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததுன்னும், அதனாலே பெண் பார்த்தவங்க வேண்டாம்னு சொல்லிட்டதாயும் வருத்தப்பட்டிருக்காங்க. இதைப் படிச்சதும் ரொம்பவே வருத்தமா இருக்கு. மருத்துவம் நிறையவே முன்னேற்றங்களைக் கண்டிருக்கு. எனக்கு முதல் பிரசவம் அப்போ என் பெண்ணிற்கு வந்த மஞ்சள் காமாலை மூலம் தான் எனக்கு "O" Rh Negative வகை ரத்த குரூப் எனத் தெரிய வந்தது. இத்தனைக்கும் எங்க வீட்டிலே எங்க சித்தப்பா ஒரு டாக்டர் தான். மதுரைக்கு அருகே சின்னமனூரில் டாக்டராக இருந்தார். எங்க அம்மாவோட தங்கை கணவர். (அந்த ஏரியாவிலே அவருக்குத் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு உண்டு.) இருந்தாலும் யாருக்கும் இது பத்தி அப்போ யோசிக்கத் தெரியலை. என் பெண்ணைத் தினமும் வெயிலில் போட்டு எடுத்ததும், அதுக்கு அப்புறம் 2-வது பிரசவத்தில் பையனுக்கு வயிற்றிலேயே 7-ம் மாசத்திலேயே மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததும், பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடனும், enlargement liverஉடனும் பிறந்த அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) அதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாலே ரத்த குரூப் பார்க்க ஆரம்பிச்சாங்க, அல்லது குழந்தை உண்டானதும், ரத்த குரூப் பார்த்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாங்க. சொந்தம் என்றால் தான் இப்படி இருக்கும்னு முன்னாலே சொல்லிட்டிருந்தது என்னோட விஷயத்திலே பொய்யாப் போச்சு. நானும் என் கணவரும் முன்னைப் பின்னே தெரியாதவங்கதான். எங்களுக்கு இப்படி நடக்கலியா? ஆகவே ரத்த குரூப் பாருங்க, ஆனால் இளைஞர்களே, இந்தச் சின்னக் காரணத்துக்காகப் பார்த்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க, இப்போவெல்லாம் கருவில் குழந்தை உருவானதுமே அதுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏராளமா இருக்கு, கவலை வேண்டாம்.
அவள் விகடனிலே ரசிச்ச ஒரு சிறு கவிதை:

ஒரு பெண்குழந்தை கேட்கிறது:
நான் பிறந்தப்போ
நெல்மணி கொடுக்க
முயற்சித்தாயாமே!
இப்போ கொடும்மா.,
பசிக்கிறது!"

இதுவும் ஒரு கல்லூரி மாணவி எழுதியது தான். ரொம்பப் பெரிசா எழுதறேன்னு எல்லாரும் சொல்றதாலே பம்பாய் பயணம் முடிஞ்சா நாளை தொடர்கிறேன்.

44 comments:

  1. //நான் பிறந்தப்போ
    நெல்மணி கொடுக்க
    முயற்சித்தாயாமே!
    இப்போ கொடும்மா.,
    பசிக்கிறது!"
    //

    மனதைப் பிசையும் கவிதை!
    :(

    மற்றபடி காபி நமக்குப் பிடிக்காது.

    நான் டீவிரவாதி!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, நீங்க டீவிர வாதின்னு தெரியாது ஹிஹிஹீரவாதின்னு இல்லை நினைச்சேன்.
    சிபி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, கவிதை என்னோடது இல்லை.

    ReplyDelete
  3. //கவிதை என்னோடது இல்லை.//

    நீங்க எழுதியதுன்னு யாரு சொன்னாங்க?

    அதான் கவிதை நல்லா இருக்குன்னு சொல்லும் விதமா

    //மனதைப் பிசையும் கவிதை!
    :(
    //
    இப்படி எழுதியிருந்தேனே!

    :)

    ReplyDelete
  4. கீதாம்மா(அட ப்ரமோஷன்!)

    அந்த ரத்த வகை சோதிப்பு பத்தி கொஞ்சம் விரிவா எழுதுங்களேன். இங்க கூட போட வேண்டாம்,நம்ம விக்கி பசங்க ஐ.டிக்கு அனுப்புங்க. அங்க போடலாம். :)

    விரிவா எழுதுங்கன்னு முதல் முறையா ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு, மறந்துறாதீங்க. :)

    ReplyDelete
  5. கீதா மேலே படிக்கக் கேட்டா, கூரையப் பாத்தாரா?

    எங்க (புகுந்த) வீட்டிலயும் இரண்டு ஆழாக்கு டம்பளர் தான்.

    ஏறி நின்னால் வேயிங் மஷின் ஒரு சுத்து சுத்திட்டுதான் நிக்கும்னு பெரியவர்கள் சொல்லிக் கொள்ளுவார்கள்:-)

    ReplyDelete
  6. கீதா! காஃபிமணம் என்னை இங்கே இழுத்தது வந்தேன் அருமையா நல்லா எழுதி இருக்கீங்க...என்னதான் சொல்லுங்க ஃபில்டர் காஃபிக்கு ஈடு இணை உண்டா?பெங்களூர்ல எம்டிஆர் ஹோட்டல்ல வெள்ளி டம்ளர்ல காஃபி தராங்க..சுவை ஜோரா இருக்கும்..சிபி மாதிரி டீவிரவாதி( சிபி! ரசிச்சேன் இதை!)கள் கூட காஃபிக்கு கட்சி மாறிடுவாங்க!
    ஷைலஜா

    ReplyDelete
  7. ஹிஹிஹி, சிபி, நான் கவிதைன்னா காத தூரம்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல இருக்கு.(மனசுக்குள்) வேறே வழி நாம் எழுதினதை இந்த மனுஷன் எப்போ பாராட்டப் போறாரோ? தெரியலை. எடுத்துப் போட்ட கவிதையைப் பாராட்டறார். எல்லாம் head letter.:D

    ReplyDelete
  8. hihihi, இ.கொ. நீங்க முதல் முறை கேட்டு நான் எப்படி மாட்டேன்னு சொல்றது. ஒரு 2 நாளிலே அனுப்பிடறேன். அப்புறம் தலைவியை "அம்ம்ம்மம்மாஆஆ"னு கூப்பிடறது தமிழ் நாட்டிலே வழக்கம்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க. :D

    ReplyDelete
  9. வல்லி, வாங்க, வாங்க, இந்தக் காபி புராணம் இன்னும் நிறைய இருக்கு. இது ஒண்ணுமே இல்லை.அப்புறம் நியூ ஜெர்ஸி பத்தி எழுதியாச்சா, வந்து பார்க்கறேன்.

    ReplyDelete
  10. வாங்க ஷைலஜா, கிளிக்குக் கலர் கொடுத்துடுங்களேன், ஒரு ஆலோசனைதான். முடிஞ்சா பாருங்க, முதல் வரவுக்கு நன்றி. ப்ளாக் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க, முத்தமிழ்குழுமத்தில் பார்க்க முடியலை.
    எங்க வீட்டுக் காஃபியும் நல்லாவே இருக்கும். இது வரை நாங்க நல்ல புதுசாக் கறந்த பாலாகத் தான் வாங்கறோம். அதனாலே தைரியமா வந்து காஃபி குடிச்சுட்டுப் போங்க. :D

    ReplyDelete
  11. காபியின் சுவை அறியாமல் இது வரை வாழ்ந்து உங்கள் வாழ்வில் பாதி சுகத்தையே இழந்து வீட்டீர்களோ என்று தோன்றுகிறது..... காபி... காபி தான். வீட்டில் தான் காபி, அதுவும் பில்டர் காபி. வெளியே போன நானும் டீ விரவாதி தான். என்னா காபி பெயர்ல அவங்க கொடுக்குற கழனி தண்ணி நமக்கு பிடிக்காது.

    ReplyDelete
  12. 0 - ve இருப்பதிலே மிகவும் அரிதான ரத்தம். சத்தியமாக அந்த பையன் அறிவுக்கெட்டவனாக தான் இருப்பான். ரத்தத்தின் அருமை தெரியாத முட்டாள். இந்த வகை ரத்தம் கிடைக்க எத்தனை பெயர் அலையோ அலை என்று அலைக்கின்றார்கள்.

    ReplyDelete
  13. //ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன்//

    நான் ஒரு டம்ளர் காஃபி குடிக்கலாம்னு வந்தேன். கிடைக்குமா தலைவியே

    ReplyDelete
  14. //யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை//

    நீங்க என்னதான் சொன்னாலும் இது தப்பு தான் தலைவியே.. (உங்களுக்கும் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவோ..ஹிஹிஹி நீங்களும் தென்னிந்தியர் தானே தலைவியே)

    ReplyDelete
  15. //அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) //

    ஆஹா தலைவியே.. இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க.. என்ன போஸ்ட் ஒரே ரவுசா இருக்கு..

    ReplyDelete
  16. //ஒரு பெண்குழந்தை கேட்கிறது:
    நான் பிறந்தப்போ
    நெல்மணி கொடுக்க
    முயற்சித்தாயாமே!
    இப்போ கொடும்மா.,
    பசிக்கிறது!"
    //

    enna madam, comedy, story, kalaaichchal, kavithainnu intha pathivu ore navarasamaa irukku.. navarasam oru vaai kidaikkumaa..LOL

    ReplyDelete
  17. இந்த காபி வாடையே நம்ம வீட்டில் கிடையாது.யாரும் குடிக்கமாட்டார்கள்.யாரவது விருந்தினர் வந்தால்தான் அதுவும் ப்ரூ காபிதான்.

    எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே

    மாட்டுபெண்தானே என்று நினைத்திருப்பார்கள்

    சின்ன பொண்ணுலிருந்து அம்மாவுக்கு விட்டுக்கொடுத்தாகிவிட்டதா குமரன் உபயமா?

    ReplyDelete
  18. கல்கி ஜோக்கை விட உங்க 'ஒரு வாய் காஃபி' ஜோக் ப்ரமாதம். எங்கப்பா கூட 'ஒரு வாய் காஃபி குடு'னு தான் எங்கம்மா கிட்ட கேப்பார். எங்க வீட்டு ஃபில்ட்டர் காஃபிய ஞாபகப் படுத்திட்டிங்க..

    -ve blood group இருக்கறவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குமாம். spouse க்கும் -ve group இருக்கணும்னு தான் செவ்வாய் தோஷம் இருக்கற மாதிரி வரன் பாப்பாங்களாம் - எங்கம்மா சொன்னது, எவ்ளோ தூரம் நிஜம்னு தெரியாது. As u said, இப்பலாம் couple க்கு different Rh factor இருந்தா pregnancy அப்ப ஒரு injection னோ என்னமோ போடராங்க, அவ்ளோ தான். ஆனா நிறைய பேருக்கு awareness இல்ல.

    ReplyDelete
  19. கல்கி ஜோக்கை விட உங்க 'ஒரு வாய் காஃபி' ஜோக் ப்ரமாதம். எங்கப்பா கூட 'ஒரு வாய் காஃபி குடு'னு தான் எங்கம்மா கிட்ட கேப்பார். எங்க வீட்டு ஃபில்ட்டர் காஃபிய ஞாபகப் படுத்திட்டிங்க.

    -ve blood group இருக்கறவங்களுக்கு ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குமாம், spouse க்கும் -ve group இருக்கணும்னு தான் செவ்வாய் தோஷம் இருக்கற வரனா பாப்பாங்களாம் - எங்கம்மா சொன்னது, எவ்ளோ தூரம் நிஜம்னு தெரியல. ஆனா இப்பலாம், couple க்கு different Rh factor இருந்தா pregnancy அப்போ ஒரு injection னோ என்னமோ போடறாங்க, அவ்ளோ தான். ஆனா, நிறைய பேருக்கு awareness இல்ல.

    ReplyDelete
  20. // ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா //

    இதே லாஜிக்கை 16 வயது (போன வருடம்) / 15 வயது (இந்த வருடம்) என்பதற்கும் அப்ளை செய்யலாமா ?
    :-)))

    ReplyDelete
  21. padichutten.I can't write in tamil in this computer,so please parden me.Lap top office poi irukku.:)
    kavidhai arumai.(unga kavidhai illanaalum)Jokeum arumai.
    I have a similar experience pugundha veetla.LOL!

    As you have said the difft blood group is not at all a problem now a days.My SIL is A- and BIL is O+.
    They have 2 healthy kids.The modern day medicine has an injection which they give it to mother during pregnancy and it will save the baby and mother.So no need to worry at all.--SKM

    ReplyDelete
  22. காப்பின உடனே நான் ஜெராக்ஸ் காப்பியோன்னு நினைச்சேன்...பில்டர் காப்பியா பேஷ் பேஷ்... :-)

    ReplyDelete
  23. இப்போல்லாம் birth jaundice ரொம்ப சாதாரணம்...இதுக்கும் பிளட் குரூப்பிற்கும் சம்பந்தம் இருக்குங்கறது எனக்கு இப்போ தான் தெரியும் :-)

    ReplyDelete
  24. //விரிவா எழுதுங்கன்னு முதல் முறையா ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு//

    சும்மாவே நீங்க ரொம்ப சுருக்கமா எழுதுவீங்க..இதுல விரிவா வேற எழுத சொல்லி...என்னத்த சொல்ல :-)

    ReplyDelete
  25. அப்புறம் சொல்ல மறந்த்துட்டேன் பாருங்க...முகில்க்கு bunny and pumpkin dress for halloween :-)

    நாலுக்கு நாலு சரியா போச்சு :-)

    ReplyDelete
  26. //இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்//

    யாரு, நீங்க? கைலாச யாத்திரைக்கு போயி காப்பி நல்லா இல்லை!னு போஸ்ட் போட்டதை நாங்க மறக்க மாட்டோம். :)

    என் அம்மா தரும் காப்பி தவிர வெளியில் எங்கும் No காப்பி. Only Tea. :)

    //நீங்க எழுதியதுன்னு யாரு சொன்னாங்க?
    //
    @Sibi, அப்படி போடு அருவாள! :)

    //கீதாம்மா(அட ப்ரமோஷன்!) //
    @Koths, நீங்க பாட்டி!னே கூப்பிடலாம், அதான் உண்மையும் கூட! :)

    Porkodi, come soon, inga coffee kudukaraanga. :)

    ReplyDelete
  27. சிவா, காஃபியின் சுவை தெரியாமல்லாம் இல்லை. தெரியும். இருந்தாலும் அது நம்மை ஒரு addict ஆக்குகிறது. நாங்க கைலாஷ், மானசரோவர் போனப்போ ஹோட்டலில் தங்கறப்போ காப்பி கிடைக்காமல் ரொம்பப் பேர் தவிச்சாங்க.
    அப்புறம் அந்தப் பெண்ணுக்கு அருமையான கணவன் கிடைப்பான். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  28. கார்த்திக், எங்க வீட்டிலே ஒரு தம்ளர் காஃபின்னா ஒரு சொம்பு, பரவாயில்லையா?
    அப்புறம் நான் தென்னிந்தியர் தான், ஆனால் வடநாட்டிலே ரொம்ப நாள் இருந்ததாலே நகைச்சுவை உணர்ச்சி அதிகம் இருக்கிறதாப் பேசிக்கிறாங்களே? இது எப்படி இருக்கு? :D
    (கார்த்திக், பொதுவான அபிப்பிராயம் அது. நமக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு. அவங்க புரிஞ்சுக்கிறதில்லை.)
    நான் தான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே, என்னோட போஸ்ட்டிலே நவரசமும் இருக்கும்னு, அதான் எல்லா ரசமும் கலந்து கொடுத்திருக்கேன். உங்களுக்காக சினிமா பேரும் எழுதினேன். :D

    ReplyDelete
  29. வேதா, உங்களுக்கு ஒரு வாய்க்காஃபி வேணுமா? அல்லது ஒரு டம்ளர் காஃபி வேணுமா? முதலில் அதைச் சொல்லுங்க. :D ஆமாம் என்ன தூங்கறீங்களா என்ன? அப்புறம் ஒண்ணுமே எழுதலை?

    ReplyDelete
  30. சார், நாங்க காஃபியும் குடிப்போம், "டீ"விரவாதியாயும் இருப்போம். பிரச்னை இல்லை.
    அப்புறம் தமிழ்நாட்டிலே தலைவியை "அம்ம்ம்ம்ம்மாமாமாமா"னு சொல்றது தான் வழக்கம். உங்க சிஷ்யனுக்கும் சொல்லி வைங்க. இ.கொ. அதைப் புரிஞ்சு வச்சிருக்கார். :D

    ReplyDelete
  31. வாங்க ப்ரியா, முதல் வருகைக்கு நன்றி, உங்க கருத்துக்களுக்கும். இந்தக் காஃபி ஜோக் அநேகமா எல்லார் வீட்டிலேயும், அதுவும் தமிழ்க்காரங்க வீட்டிலே நடக்காம இருக்காது.
    எனக்குச் செவ்வாய் தோஷம்லாம் எதுவும் இல்லை. அவருக்கும் அது இல்லை. சொல்லப் போனா என்னோட நாத்தனார் பெண்ணுக்குக் கடுமையான செவ்வாய் தோஷம். ஆனால் அவளுக்கு Rh Positive தான். Normal delivery as well as normal babies.

    ReplyDelete
  32. ஹிஹிஹி, கொடி,
    போண்டாவே கிடைக்காத ட்ரைவ்-இன் கண்டு பிடிச்ச மாதிரி காஃபியே கிடைக்காத ட்ரைவ்-இன் கண்டு பிடிச்சுச் சொல்லுங்களேன்.
    அப்புறம், இந்த லாஜிக் எப்பவுமே செல்லும். நம்ம ராஜ்ஜியத்தில் செல்லாதுங்கற பேச்சுக்கே இடம் இல்லை. :D

    ReplyDelete
  33. SKM, இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு? நீங்க வீட்டுக் கணினியிலும் உங்களுக்குத் தேவையான வசதி பண்ணிக்கலாம். உங்க வசதியையும்,தேவையையும் பொறுத்துச் செய்துக்கோங்க.
    கவிதை ஒரு கல்லூரி மாணவியோடது, பேர் மறந்துட்டேன். அப்புறம் இந்த ப்ளட் க்ரூப் பத்தி எங்க வீட்டிலே முதலில் என்னாலே தான் தெரிய வந்தது. அதுக்கு அப்புறம் எல்லாரும் ஜாக்கிரதை ஆயிட்டோம். எங்க அண்ணன் மனைவிக்கு நீங்க சொல்ற ஊசி போட்டோம். அவங்க குழந்தைக்கு எங்க குழந்தைங்க மாதிரி கஷ்டம் வராம இருக்கணுமேன்னு. எல்லாரும் சொல்ல வந்த விஷயத்தைப் புரிஞ்சுக்கறது பத்தி ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  34. என்ன ச்யாம், வந்து கணக்குத் தீர்த்துட்டுப் போனா அடுத்த பதிவுக்கு என்ன செய்வேன்?
    அப்புறம் இ.கொ.வுக்குப் போதாத வேளைன்னு நானும் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. :D
    முகிலுக்கு என்னோட ஆசிகள்.
    நாலெல்லாம் சரியாப் போகலை.

    ReplyDelete
  35. அம்பி,
    கைலை யாத்திரையில் காஃபி கொடுக்கலைன்னு நான் குத்தம் சொன்னேன்னு கண்ணிலே விளக்கெண்ணை விட்டுத் தேட வேண்டாம். நான் சொல்ல வந்தது ட்ராவல்ஸ்காரங்க சொன்ன வாக்கை நிறைவேத்தலைன்னு காட்டறதுக்கு. அது உங்க மாதிரி மொக்கைப் பதிவாளருக்குப் புரியறது கஷ்டம். :D
    அப்புறம் எங்க வீட்டிலே காஃபி ரொம்பவே நல்லா இருக்கும்.ஆனால் உங்களுக்குத் தரப்போறதில்லை. :D
    சிபியையும் கெடுக்காதீங்க:D
    அப்புறம் தலைவியை "அம்மாஆஆஆ"னு கூப்பிடறது தமிழ்நாட்டிலே வழக்கம்னு உங்களுக்கு எங்கே தெரியப்போகுது?
    இதுக்குப் பொற்கொடி எதுக்கு வரணும்? தமிழ்நாட்டிலே "அம்மாஆஆஆஆஆ"னு சொன்னா தலைவிதான்னு அங்கீகாரம் இருக்கு.

    ReplyDelete
  36. //அப்புறம் எங்க வீட்டிலே காஃபி ரொம்பவே நல்லா இருக்கும்.//

    அதை நாங்க சொல்லனும்! :)

    //ஆனால் உங்களுக்குத் தரப்போறதில்லை.//
    நீங்க குடுத்தாலும் நான் குடிக்கறதா இல்லை. :)

    ReplyDelete
  37. //நான் பிறந்தப்போ
    நெல்மணி கொடுக்க
    முயற்சித்தாயாமே!
    இப்போ கொடும்மா.,
    பசிக்கிறது!"
    //

    கவிதை வரிகள் நன்றாய் உள்ளதுனு சொல்ல வந்தேன்,,ஆனால்...
    எப்போது இதை மாற்றி எழுத போகிறோம்...

    அப்புறம் நமக்கு பிடித்த காபி...

    நானும் இதை என் நண்பன் வீட்டிற்கு முதல் முறையா போகும்போது அனுபவித்தேன். காபி குடிக்கிறியானு கேட்டுண்டே பிரண்ட்டோட அம்மா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய தம்ளரும் அதை ஆற்றி குடிக்க டவராவும்..

    தம்ளர் என்ற கிணரை எட்டிதான் பார்த்தேன்.. தினமும் அதே தம்ளருக்காக அவன் வீட்டுக்கு, அவன் இல்லாத போதும் போனது என்பது வேற விசயம்,,(எனா அவங்களொட லச்சுமிவிலாஸ் ஹோட்டல் காபி திண்டுக்கலில் பெயர் போனது...)

    காபி பேஸ்..பேஸ் ரொம்ப நன்னா இருந்து உங்க பதிவும்...

    ReplyDelete
  38. //நான் பிறந்தப்போ
    நெல்மணி கொடுக்க
    முயற்சித்தாயாமே!
    இப்போ கொடும்மா.,
    பசிக்கிறது!"
    //

    கவிதை வரிகள் நன்றாய் உள்ளதுனு சொல்ல வந்தேன்,,ஆனால்...
    எப்போது இதை மாற்றி எழுத போகிறோம்...

    அப்புறம் நமக்கு பிடித்த காபி...

    நானும் இதை என் நண்பன் வீட்ற்கு முதல் முறையா போகும்போது அனுபவித்தேன். காபி குடிக்கிறியானு கேட்டுண்டே பிரண்ட்டோட அம்மா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய தம்ளரும் அதை ஆற்றி குடிக்க டவராவும்..

    தம்ளர் என்ற கிணரை எட்டிதான் பார்த்தேன்.. தினமும் அதே தம்ளருக்காக அவன் வீட்டுக்கு, அவன் இல்லாத போதும் போனது என்பது வேற விசயம்,,(எனா அவங்களொட லச்சுமிவிலாஸ் ஹோட்டல் காபி திண்டுக்கலில் பெயர் போனது...)

    காபி பேஸ்..பேஸ் ரொம்ப நன்னா இருந்து உங்க பதிவும்...

    ReplyDelete
  39. @அம்பி,
    நீங்க என்ன காஃபி டேஸ்டரா வேலை பார்க்கறீங்களா என்ன? எங்க வீட்டுக் காஃபியைப் பத்தி நீங்க சொல்றதுக்கு? அதனோட மணமே இன்னிக்கு இத்தனை பேரை இழுத்துட்டு வந்திருக்கிறதிலே இருந்து தெரியலை?

    @மணி ப்ரகாஷ்,
    வாங்க, கவிதையை மாற்ற எல்லாரும் சேர்ந்து தான் முயற்சி செய்ய வேண்டும். இன்னிக்குப் பேப்பரிலே ஒரு செய்தி, குஜராத்தில் படேல் கம்யூனிட்டியில் பெண்களே அரிதாகி விட்டதாம். ஏன் என்றால் பெண் குழந்தைகளுக்கு நிறைய வரதட்சணை தர வேண்டி இருப்பதால் பெற்றோர் பெண்ணைப் பெத்துக்க விருப்பப்பட வில்லையாம். அந்தப் பெற்றோரில் ஒரு பெண்ணும் தானே இருக்கிறாள்? இது அநியாயமாய் இல்லை?

    ReplyDelete
  40. இங்கே கமெண்ட் போட்டால் பிரசுரம் ஆகுமோ...ச்ச்சும்மா டெஸ்ட்....

    ReplyDelete
  41. ஆகுமே, பாருங்க இதுவும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா டெஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. ஹி.. ஹி.. ஹி.. நானும் மைக் டெஸ்டிங்தான்.

      Delete
    2. காஃபியின் அளவுகோல் இன்றுதான் படித்துக்கொண்டேன்.

      Delete
    3. ஹாஹா, வாங்க கில்லர்ஜி! டெஸ்ட் பாஸ்!

      Delete