நம்ம ஜோசியப் பதிவு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி. ஜோசியம் என்பது ஓர் கடல். இதிலே வியக்க வைக்கும் ஓர் விஷயம் என்னன்னா முன் காலத்திலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஜாதகப் பொருத்தமே பார்த்ததில்லை என்று திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சொல்லி இருக்கிறார். என் அப்பாவும் அப்படித் தான் சொல்லி இருக்கார்.
எனில், பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பொருத்தங்கள் பார்க்கவில்லையா?
அன்றைய நாளில் இருவரையும் நட்பில் இணையவைக்க ஜாதகம் பார்க்கும் படலம் தேவையில்லாமல் இருந்தது. பங்காளிகள், ஒழுக்கம், ஆரோக்கியம், படிப்பு, மகப்பேறு ஆகியவையே அவர்களது இலக்கணம். இவற்றை ஆராய்ந்து திருமணத்தில் இணைத்தார்கள். மனப்பொருத்தம் பார்க்கப்படவில்லை. நட்பு அவர்களின் மனப் பொருத்தத்தை நிறைவுசெய்து விடும்.
மேலே சொலி இருப்பது ஷார்தா சட்டம் வரும் முன்னர் நடந்தது. அதன் பின்னர் திருமண வயது பதினைந்தில் இருந்து இன்று முப்பது வயது என்று ஆகி இருக்கிறது. ஆனாலும் ஜாதகப் பொருத்தம் தேவையா இல்லையா என்பது குறித்து அதே சேஷாத்ரி நாத சாஸ்திரிகள் கூறுவது கீழே!
ஜாதகப் பொருத்தம் தேவையா இல்லையா? அதுபற்றிக் கூறுங்கள்.
இந்த அவலத்தைப் போக்குவதற்கான அருமருந்து ஜாதகப் பொருத்தம். இருவரின் சிந்தனைப்போக்கை ஆராய்ந்து, அவர்களின் இயல்பில் இருக்கும் சாதகபாதகங்களை நிலையிருத்தி, இணையோடு இணைந்து வாழும் தகுதியை எடைபோட்டு, திருமணத்தில் இணைத்தால் அந்தத் தாம்பத்தியம் சிக்கல் இல்லாமல் செழிப்பாக அமையும். அவர்களது மனநிலை, ஆசையின் அளவு, இயல்பின் தரம் ஆகிய அத்தனையையும் ஜாதகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டித் தந்துவிடும்.
எனினும், ஜாதகத்தைப் பொறுமையாக ஆராயும் திறமை வேண்டும். அப்போது வெற்றியை எட்டலாம். பத்து பொருத்தமோ, கிரஹ அமைப்புகளோ பொருத்தத்தை நிறைவு செய்யாது. மனதை ஆராய்ந்து, அதன் செயல்பாட்டின் தரத்தை உணர்ந்து, அவர்களது இயல்பையும் ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வந்தால் அவர்களின் இணைப்பு வெற்றிபெறும். அவர்களது வாழ்க்கை இனிக்கும். சண்டைசச்சரவு இல்லாத தாம்பத்தியம் இருக்கும். பிறவி பயனுள்ளதாக மாறும். விவாஹரத்து தலைதூக்காது. பிறன் மனை நோக்கும் எண்ணம் உதிக்காது. பாலியல்பலாத்காரத்தில் இறங்காது. தான் தேர்ந்தெடுத்த துணையிடம் திருப்தி ஏற்பட்டு நிம்மதி பெறும். நாகரிகமான வாழ்க்கை கிடைத்துவிடும். நல்ல குடிமகனாக மாற இயலும். சமுதாயத்தில் உண்மையிலேயே பெரிய மனிதர்களாக வளையவரலாம். அப்பழுக்கற்ற மனிதனாக மாறலாம்.
பின்னர் இந்த ஜோசியம் எல்லாம் எப்போ வந்தது? அதான் தெரியலை! அநேகமாகக் கடந்த 200, 300 வருடங்களுக்குள்ளாக இருக்கலாமோ என்னமோ! அதே போல் முன்னால் எல்லாம் கரிநாள் என்ற ஒன்றே கிடையாது என்றும் சொல்லுகிறார்கள். பொதுவாக நல்ல ஆழமாக ஜோசியத்தைக் கற்றறிந்த ஜோசியர்களும் சரி, வைதிகம் படித்த வைதிகர்களும் சரி மாசக்கரிநாளுக்கு தோஷம் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் கரிநாளன்று நக்ஷத்திரம், யோகம் எல்லாம் சரியாக இருந்தாலும் நல்ல காரியங்களைத் தள்ளிப் போடுபவர்கள் தான் அதிகம்!
ராகு காலம், எமகண்டம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி வராது. அதிலும் பரிக்ஷைக்குப் போகும்போது திங்கள் கிழமை பரிக்ஷை என்றால் ராகு காலம் பார்த்துக் கொண்டிருந்தால் பள்ளிக்கே போக முடியாது. நம் திறமை மீது நம்பிக்கை வைத்துக் கிளம்பிச் செல்ல வேண்டியது தான். இன்னும் சிலர் ஸ்வாமியை வேண்டிக் கொண்டு போனால் போதும்னு இருப்பாங்க. படிக்கவே படிக்காமல் ஸ்வாமியை மட்டும் வேண்டினால் போதுமா! ஸ்வாமியை வேண்டிக்க வேண்டியது தான்! ஆனால் நம் முயற்சியும் வேண்டுமே! பாடத்தைப் புரிந்து கொண்டு படிக்கவும் படித்து விட்டு ஸ்வாமியையும் வேண்டிக்கலாம்.
அதே போல சிலர் ஜாதகத்தையே நம்பிக் கொண்டு என் ஜாதகம் மிகச் சிறப்பானது. எனக்கெல்லாம் எதுவும் பிரச்னை வராது என்று அதீத நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். பிரச்னைகள் வந்தாலும் என் ஜாதக விசேஷம் சரியாகிடும் என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படி நடந்ததில்லை. அதே போல் குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் அவங்க குணம் இப்படினு முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். இதுவும் சரியல்ல! மூலம் நக்ஷத்திரத்தில் பெண் பிறந்தால் ஆகாது என்கிறார்கள். ஆனானப்பட்ட சரஸ்வதி தேவி (உம்மாச்சி) மூல நக்ஷத்திரம் தான். ஒவ்வொரு நவராத்திரியிலும் மூல நக்ஷத்திரத்தில் தான் தேவி ஆவாஹனம் செய்கிறோம். அவ்வளவு ஏன்? நம்ம ஆஞ்சி கூட மூல நக்ஷத்திரம் தான்.
இன்னும் சிலர் கேட்டை நக்ஷத்திரத்துப் பெண்ணே வேண்டாம் என்று உற்றார், உறவினருக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். முன்காலத்தில் ஜேஷ்டா தேவி என்னும் தேவிக்கு வழிபாடுகள் நடந்து வந்திருக்கிறது. இந்த ஜேஷ்டா தேவியை ஒரு சில பழமையான கோயில்களில் காணலாம். மஹாலக்ஷ்மிக்கும் மூத்தவளான இந்த தேவியை முதல் தேவி என்றே அழைத்துக் கொண்டிருந்தது போய் இன்று மூதேவி என்று ஆகி விட்டாள். ஜேஷ்டா என்றால் மூத்த என்னும் பொருள்! நம்ம யுதிஷ்டிரன், அதான் மஹாபாரதத்துப் பாண்டவர்களில் மூத்தவன் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்ததாக ஐதிகம். அதே போல் உலகில் முதல் முதல் தோன்றியவளாகக் கருதப்படும் தேவி ஜேஷ்டா தேவி! தசமஹா வித்யாவில் தூமாவதி என்னும் பெயரில் இவள் துதிக்கப்படுவாள். இவளே தூம்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இவளுக்கும் வாராஹிக்கும் வித்தியாசம் இல்லை என்றும் இவளை தூம்ர வாராஹி என்று அழைக்கப் படுவதாகவும் சொல்கின்றனர். இவளைப் பூஜிப்பவர்கள் மனதை இவள் பக்குவப்படுத்துவதாகவும் பூர்வஜென்மப் புண்ணியம் இருந்தாலொழிய இவளைப் பூஜிக்க முடியாது எனவும் சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து மதுரைக்கு அருகே திருவேடகம் கோயிலிலும், புதுக்கோட்டையில் கோகர்ணேசுவரர் கோயிலிலும் ஜேஷ்டா தேவியின் சிலைகளைக் காணலாம். என் புக்ககத்து ஊரான பரவாக்கரையில் பழைய சிவன் கோயிலில் இருந்த ஜேஷ்டாதேவிச் சிலையைக் கண்டெடுத்து அங்குள்ள ஐயனார் கோயிலில் வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் மட்டுமே ஜேஷ்டா தேவி விக்ரஹம் காணப்படும். அத்தகைய கோயில்களில் மிகப் பழமையானவை என்று அறியலாம். ஏனெனில் காலப்போக்கில் இந்த தேவி ஒதுக்கப்பட்டு விட்டாள் என்பதோடு அவள் பெயரையும் மூதேவி என மாற்றி விட்டார்கள். இவள் கைகளில் இருக்கும் முறத்தால் இவளை வழிபடுபவர்களின் பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதாகச் சொல்கின்றனர். எங்கேயோ ஜோசியத்திலிருந்து தசமஹா வித்யாவுக்குப் போயாச்சு. இந்த நாடி ஜோதிடம் குறித்துப் பலரும் தங்கள் அனுபவங்களைக் கூறி இருக்கின்றனர். எங்களுக்கும் இதில் அனுபவம் உண்டு என்றாலும் யாருக்கும் இது பலித்ததே இல்லை என்னும்வரை சொல்லிக் கொள்கிறேன்.
ஏனெனில் உண்மையான நாடி ஜோதிடம் இன்று யாருமே பார்ப்பதில்லை. எங்கோ ஒரு சிலர் மட்டுமே பார்க்கின்றனர். அத்தகையவர் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குக் குறைவு. நம் இறந்த காலத்தைக் கூறுபவர்களால் எதிர்காலத்தைக் குறித்துக் கூற முடியுமா? எங்கோ ஓர் சிலர் இருக்கலாம். அவர்கள் சொல்வது பலிக்கவும் செய்யலாம். அது மாதிரிச் சிலருக்குப் பலித்தும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத் தேடித் தான் கண்டு பிடிக்கணும். நம்மால் முடிந்ததெல்லாம் முயற்சிகளை முழுமையாகச் செய்துவிட்டுப் பலன்கள் என்ன வந்தாலும் எதிர்கொள்ளும் மனோபலத்தை வேண்டிப் பெறுவது ஒன்று மட்டுமே!
தொடருமா, முடியுமா?

நம் நம்பிக்கை பொறுத்து அனைத்தும்...
ReplyDeleteஆமாம் டிடி. நீங்க சொல்வது சரியே.
Delete//இன்னும் சிலர் ஸ்வாமியை வேண்டிக் கொண்டு போனால் போதும்னு இருப்பாங்க. //
ReplyDeleteஇதற்குத்தான் நாள் என் செயும் கோள் என் செயும்னும் சேர்த்தே பாடிவச்சிருக்காங்க.. மனசுல ஒரு தைரியம் வரும் பாருங்க..
இறைவன் மேல் இருக்கும் நம்பிக்கை தான் நம்மை வழி நடத்துகிறது! :)
Deleteஇவ்வளவு விவரங்களையும் (ஜேஷ்டா தேவி போன்ற) நினைவடுக்குகளிருந்தே எடுத்துக் கொடுக்கிறீர்களா, ரெபரென்ஸ் ஏதாவது பார்த்துக் கொள்வீர்களா? ஆச்சர்யப்பட வைக்கிறீர்கள். முன் காலத்தில் ஜாதகம் பார்க்கும் வழக்கம் இல்லை, பிற்காலத்தில்தான் ஏற்பட்டது என்றால் வரதட்சணை வாங்கச் செய்யப்பட்ட சதியாக இருக்குமோ!
ReplyDeleteஜேஷ்டா தேவி பற்றி ஏற்கெனவே வேறே ஓர் பதிவு எழுதும்போது படிச்சு எடுத்த குறிப்புகள் ட்ராஃப்ட் மோடில் இருந்தது. ஹிஹிஹி, அதைப் பார்த்துக் கொண்டு தான் எழுதினேன். ஶ்ரீ வித்யை குறித்துப் படிக்கையில் ஜேஷ்டாதேவி தான் தூமாவதினு படிச்சிருக்கேன். அந்தக் குறிப்பும் இருந்தது. மற்றபடி ஜேஷ்டா தேவி விக்ரஹங்கள் இருக்கும் கோயில்களுக்குப் போயிருக்கேன். நினைவில் இருந்தவை மதுரை திருவேடகமும், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயிலும், எங்க ஊர் பரவாக்கரையும் தான்! மற்றவை நினைவில் இல்லை! :)
Deleteதிரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சக்தி விகடனில் இது குறித்துப் பல வருடங்களாக விபரமாக எழுதி வருகிறார். நான் எழுதின கல்யாணமாம் கல்யாணம் தொடருக்காக அதைச் சேகரித்து வைத்திருந்தேன். அதிலே அவர் திட்டவட்டமாக ஜாதகம் பார்ப்பது என்பது கடந்த நூறு வருடங்களுக்குள் ஏற்பட்டது தான் என்று சொல்லி இருக்கிறார். என் அப்பாவும் சொல்லி இருக்கார். சொந்தம், மற்றும் நண்பர்கள் என்று பெண் கொடுத்துப் பெண் வாங்கும் வழக்கம் இருந்து வந்ததாகவும், சிறு வயதுக் கல்யாணம் என்பதால் ஜாதகம் எல்லாம் பார்த்ததில்லை என்றும் சொல்லுவார். சில ஊர்களில் பிரமசாரிகள் (பதினாறு வயதுக்குட்பட்டவர்கள்) பிக்ஷைக்குப் போகும்போது பிக்ஷை கொடுக்க முடியாதவர்கள் கன்னியை தானம் செய்வார்கள் என்றும் என் அப்பாவின் கொ.பா. அப்படித் தான் ஆந்திராவிலிருந்து வந்தபோது நம்பூதிரிப் பெண்ணைத் திருமணம் முடித்துக் கொண்டு மதுரைக்கு அருகே மேல்மங்கலத்தில் குடித்தனம் இருந்தார் என்றும் சொல்லி இருக்கிறார். இதையும் ஏற்கெனவே எழுதி இருக்கேன். :)
Deleteநல்லா இருக்கு,. ஏற்கெனெவே பிக்ஷை எடுத்த ஆசாமிக்கு கன்னியை வேற கொடுத்து ரெண்டு பேருக்கு பிக்ஷை எடுக்க வைத்தாங்களா? :-))
Deleteஏற்கெனவே பிக்ஷை எடுத்தார்னு எங்கே சொல்லி இருக்கேன், தம்பி? பிக்ஷை எடுக்கப் போனப்போ பிக்ஷைக்கு வேறே ஒண்ணும் இல்லாமல் கன்னியை தானம் செய்வார்களாம். இது குறித்து மேலதிக விபரங்கள் சேகரிக்கிறேன். :)
Deleteசமீபத்தில் ஒரு மாமா வீட்டில் ராசிபலன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் பையன் ராசிக்கு பழைய சிநேகிதர் நீண்ட காலத்துக்குப் பிறகு வருவார், அவருடன் வெளியூர்ப் பயணம் இருக்கும் என்று போட்டிருந்ததை படித்துக் கொண்டிருக்கும்போதே பழைய சிநேகிதர் ஒருவர் வந்ததோடு, பையனையும் பாண்டிச்சேரி அழைத்துக் கொண்டு உடனடியாகக் கிளம்பி விட்டார். இவருக்கு நீண்ட நாளாக வராமலிருந்த கடன் ஒன்று வரும் என்று போட்டிருந்ததை படித்து விட்டு இது மட்டும் நடந்தால்? என்று புன்னகையுடன் யோசித்துக் கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் பழைய பிஸினஸ் நண்பர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கிடைத்து விட்டதாகவும் அவர் வங்கிக்கணக்கில் சேர்த்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார். சேர்ந்தும் விட்டது.
ReplyDeleteஅதே சமயம் வீட்டில் மற்ற இருவருக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கவில்லை. அவை இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் டைப்! ஆனாலும் இதனால் எல்லாம் அவருக்கும் சரி, கேட்ட எனக்கும் சரி, இதில் நம்பிக்கை வந்து விடவில்லை! கா உ ப வி கதைதான்!
கா.உ.ப.வி.க.வோ என்னமோ! இந்தப் புஞ்சைப் புளியம்பட்டி பத்திப் போன பதிவிலே சொல்லி இருந்தேனே! அவர் என் ஜாதகத்தைப் பார்த்துட்டு 50 வயதுக்கு மேலே பிரபலமா ஆவீங்கனும் ஆன்மிகம், பக்தி இதிலே ஆர்வமும் எழுதும் ஆர்வமும் வரும் என்றும் சொல்லி இருந்தார். அதே மாதிரி எனக்குப் பூர்விக சொத்திலிருந்து ரொக்கமாகப் பணம் வரும்னும் சொல்லி இருந்தார். மத்தது ஏதும் பலிக்கலை! 50 வயசுக்கு மேலே எழுத்தாளி ஆனது மட்டும் பலிச்சிருக்கு. :))))
Deleteஓ! எழுத்தாளி ஆயாச்சா? சொல்லவே இல்லையே? :P
Deleteஹிஹிஹிஹிஹி! உலகமே அறிஞ்ச ஒண்ணு, தம்பிக்கு மட்டும் தெரியலையாம்! :)
Deleteவிரிவான தகவல் களஞ்சியம் நன்றி
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteதொடரும் ஜோசியம்.... :)
ReplyDeleteஹிஹிஹி, இதுக்கு முடிவு அவ்வளவு விரைவில் வராது! :)
Deleteமுடிவே இல்லாத டாபிக்!! என் ஜாதகத்தைப் பார்த்து ஒருத்தர் சொன்னதும் எனக்குப் பலிக்கவில்லை! அவர் சொன்னது நிறையப் பேருக்கு பலிச்சிருக்கு என்பார்கள்...
ReplyDeleteஇதெல்லாம் பலிக்கும்னும் சொல்ல முடியாது; பலிக்காதுனும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குச் சரியாக வரும். ஒவ்வொருவருக்குச் சரியா வராது! :)
Deleteபடித்தேன். அப்பறம் கருத்திடுகிறேன். @ஶ்ரீராம்- நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் கோளென் செய்யும்..... சண்முக்க் கடவுளின் திருவடி என் முன் நிற்கையிலே... அதாவது என் மனம் கடவுளின்பால் உறுதியாகப் பற்றிக்கொண்டு அதில் ஒன்றியிருக்கையிலே. அப்படின்னா... அப்படி இல்லாத பட்சத்தில் நாளும் கோளும் வினையும் நமைப் பாதிக்கும் என்ற கருத்து தொக்கி நிற்கிறதல்லவா?
ReplyDeleteஇறை நம்பிக்கையை வலியுறுத்தும் பாடல்னு எடுத்துக்கலாம் இல்லையா? இறைவன் பாதாரவிந்தத்தை முழு மனசாய்ப் பிடித்துக் கொண்டதால் தானே மார்க்கண்டேயன் தனக்கு நேரிட இருந்த அகாலமரணத்தைத் தடுத்துச் சிரஞ்சீவியாக ஆனான்!
Deleteஅதே போல் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரும் முழு மனதோடு சரணகதி ஆனதாலே தானே அரசனால் கொடுக்கப்பட்ட தண்டனைகளை எதிர்கொண்டு போராடி வென்றார்கள்? இங்கே அப்படித் தான் அர்த்தம் எடுத்துக்கணும். நம் தீவினையே கடவுளின்பால் நம்மைச் செல்லவிடாது! அதையும் பார்த்திருக்கேன்! :)
அருமையான தகவல்
ReplyDeleteசிறந்த பகிர்வு
நன்றி.
Delete1880 முதல் பால்ய விவாஹங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் கொண்டுவர பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டும் அவை மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டு, நிறைவேற்ற முடியாமலே போய் விட்டதாம்.
ReplyDelete1929-இல் இது சம்பந்தமாக மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றள்ளது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ஹாபிலாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் சார்தா சட்டம் என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது.
1929 செப்டம்பர் 28-ஆம் நாள் அது சட்டமாக நிறைவேற்றப்பட் டது. 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு ஒரு சட்டம் வரப்போகிறது என்ற பயத்தில் மட்டுமே, 7-8 வயதே ஆகியிருந்த என் மாமியாருக்கும், 6-7 வயதே ஆகியிருந்த அவர்களுடைய தங்கைக்கும் அவசர அவசரமாக கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
>>>>>
ஆமாம், இது குறித்து நானும் படித்துள்ளேன். என் மாமியாரின் அக்காவுக்கு அதனாலேயே பக்கத்து ஊரான ஃப்ரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்த காரைக்காலில் போய்க் கல்யாணம் செய்ததாகச் சொல்வார்கள்.
Deletehttp://gopu1949.blogspot.in/2013/10/62.html
ReplyDeleteஇந்த என் மேற்படி பதிவினில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் தரிஸனத்திற்கு வந்து, தன் குடும்ப வறுமை நிலையைப் பற்றி புலம்பிய ஒரு ஜோஸ்யருக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் சொல்லியுள்ள அருள் வாக்கினைப் படிக்கவும்.
சுவாரஸ்யமாகவும், இந்தத் தங்களின் பதிவுக்குச் சற்றே சம்பந்த உள்ளதாகவும் இருக்கிறது.
>>>>>
உங்கள் பதிவைப்படிக்கிறேன்.
Deleteதிருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது இடையில் சமீபகாலங்களாகவே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும்.
ReplyDeleteபிள்ளையும் பெண்ணும் ஒரே கோத்ரமாகவோ, சஹோதர கோத்ரமாகவோ இல்லாமல் இருந்தாலே போதும் என்றும் சொல்லப்படுகிறது.
மனப் பொருத்தம் + ஸ்வாமியிடம் அல்லது குலதெய்வத்திடம், பூக்கட்டி அல்லது குங்குமம், விபூதிப் பொட்டலங்களைப் போட்டு, ஒரு சின்னக் குழந்தையைவிட்டு எடுக்கச்சொல்லி, ஸ்வாமி உத்தரவு கேட்பது என்று சிலர் வைத்துக்கொண்டுள்ளார்கள்.
மணமகன் + மணமகள் ஜாதகங்களில் பத்துப் பொருத்தங்களும் சரியாகப் பொருந்தி அமைவது என்பது மிகவும் அபூர்வமாகும். அதில் முக்கியமான ஐந்து அல்லது ஆறு பொருத்தங்கள் சரியாக அமைந்தாலே போதும் என்பது இன்றைக்கு பலரின் வாதங்களாகவும் உள்ளது.
>>>>>
உண்மை தான். மனப்பொருத்தம் இல்லாமல் கல்யாணம் செய்வது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்த் தள்ளி விடுகிறது! :(
Deleteபத்துப் பொருத்தங்களில் முதல் பொருத்தமான நக்ஷத்திரப் பொருத்தத்தில் ஒருசில ஆராய்ச்சிகள் நான் செய்துள்ளேன். அதுவும் திருமணம் ஆனவர்களின் கேஸ்களில் மட்டுமே. அதில் ஒரு கணவருக்கு புனர்பூச நக்ஷத்திரம்.
ReplyDeleteபொதுவாக புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்துள்ள ஆண்களுக்கு ’புனர்பூசம், கிருத்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி, மகம், பூரம்’ ஆகிய எட்டு நக்ஷத்திரத்தில் பிறந்துள்ள பெண்களை திருமணம் செய்வது நல்லதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது.
நான் ஆராய்ச்சி செய்துள்ள தம்பதியில் கணவர்: புனர்பூசம் + மனைவி: உத்திராடம். மிகச்சிறிய வயதிலேயே அந்தப்பெண்ணுக்குக் கல்யாணம் ஆகியுள்ளது. இன்றுவரை அமோகமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
கணவருக்கு இப்போது 88 வயது. மனைவிக்கு இப்போது 78 வயது. அவர்கள் இருவருக்கும் ஆறு பிள்ளைகள் + இரண்டு பெண்கள் என ஆகமொத்தம் எட்டு குழந்தைகள். எல்லோருக்கும் கல்யாணம் ஆகி செளகர்யமாகத்தான் இருந்து வருகிறார்கள்.
அந்த வயதான தம்பதிக்கு இன்றைய தேதியில் 5 பேரக்குழந்தைகள் + 9 பேத்திகள் + 2 கொள்ளுப்பேரன்கள் உள்ளார்கள்.
இதே நக்ஷத்திரக் காம்பினேஷனில் நான் ஆராய்ச்சி செய்த மற்றொரு ஜோடி. வயது 67....63 மட்டுமே. அவர்களுக்கு 3 பிள்ளைகள். இதுவரை ஒரு பேத்தி + மூன்று பேரன்கள். செளகர்யமாகத்தான் இருந்து வருகிறார்கள்.
>>>>>
ஆமாம், இந்த நக்ஷத்திரங்கள் விஷயத்தில் நானும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருக்கேன். பூராட நக்ஷத்திரம் நூலாடாது என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்த பூராட நக்ஷத்திரப் பெண்மணிகள் அனைவரும் குறைந்தது 40 ஆண்டு காலம் திருமண வாழ்வு வாழ்ந்துவிட்டு சுமங்கலியாகவே இறந்திருக்கிறார்கள். அதே போல் பரணி தரணி ஆளும் என்பார்கள். மிகக் கேவலமாகக் கஷ்டப்படும் பரணி நக்ஷத்திரக்காரர்களைப் பார்க்கிறேன். கேட்டை நக்ஷத்திரம் பிறர் மனம் புண்படப் பேசும் என்று ஓர் பெரும்பான்மைக் கருத்து இருக்கிறது. எனக்குத் தெரிந்த கேட்டை நக்ஷத்திரக்கார ஆண்கள், பெண்கள் வாய்மூடிக் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். பேசுகிறவர்களிடம் திரும்பக் கூடப் பேசுவதில்லை. :(
Deleteஆரம்ப காலத்தில் சுப்பையா வாத்தியாரின் வகுப்பறைக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் இதைக் குறித்து அவரிடம் பலவிதமான சந்தேகங்களைக் கூடக் கேட்டிருந்தேன். அவர் இருக்கும் வேலை மும்முரத்தில் பதில் கொடுக்க அவரால் முடியவில்லைனு நினைக்கிறேன். பின்னர் அங்கே போவது குறைந்து விட்டது. :)
Deleteஏற்கனவே இந்தக்காலத்தில் பிள்ளைகளுக்குப் பொருத்தமான பெண்களே கிடைப்பது இல்லை. இதில் தீவிரமாக ஜாதக ஆராய்ச்சிகள் செய்துகொண்டு, கேட்டை, மூலம், பூராடம் ஆகியவைகள் கூடாது என்று ஃபில்டர் செய்துகொண்டே போனோமேயானால், யாருக்கும் உரிய பருவத்தில் கல்யாணமே நடக்காது.
ReplyDeleteஅவரவர்களாகப் பார்த்து யாரையேனும் லவ் பண்ணி, ஜோடி சேர்த்து இழுத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை மட்டுமேதான் ஏற்படக்கூடும்.
-oOo-
ஆமாம், என் சொந்தக்காரர்கள் பலரிடமும் இப்படி நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்துக் கொண்டு தாமதம் ஆக்க வேண்டாம் என்றே சொல்லி வருகிறேன்.
Deleteஎனக்கு ஜாதகம் பார்த்துத் திருமணம் நடக்கவில்லை. என் இரு மகன்களுக்கும் ஜாதகம் பார்க்கவில்லை தொல்காப்பியத்திலேயே திருமணம் செய்யும் முன் பார்க்கும் பொருத்தங்கள்பற்றி இருக்கின்றன. என் பதிவு ஒன்றில் எழுதி இருந்தேன் சோசியத்தில் பலிப்பது எல்லாம் காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான்
ReplyDeleteஜாதகம் பார்த்தும் பொருத்தம் இல்லாமல் கல்யாணம் செய்யப்பட்டு இன்றளவும் நன்றாக வாழ்பவர்கள் நிறைய இருக்கின்றனர் ஐயா! அதே சமயம் பத்துப் பொருத்தங்கள் இருந்தும் வாழ்க்கை சரியாக அமையாமல் போனவர்களும் உண்டு.
Deleteசமீபத்தில் 2008-இல் நடந்த ஓர் உண்மை சம்பவம்.
ReplyDeleteஒரு பையன். வயது 26. சிவனுக்குரிய ’திருவாதரை நக்ஷத்திரம்’. நல்ல கெட்டிக்காரன். பார்க்க லக்ஷணம். நல்ல படிப்பு. நல்ல உத்யோகம். நல்ல குடும்பம். மொத்தத்தில் மிகவும் நல்ல பையன்.
ஒரு பெண். வயது 22. பெருமாளுக்குரிய ’திருவோண நக்ஷத்திரம்’. கல்லூரிப் படிப்பு முடித்தவள். பார்க்க லக்ஷணம். வேலைக்குச் செல்லவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. நல்ல குடும்பம். (அவளுக்கு ஒரேயொரு தம்பி மட்டுமே. அவனும் அப்போது இஞ்சினீரிங் படித்துக்கொண்டிருந்தான். திட்டமிட்ட + ஓரளவு வசதி வாய்ப்புகள் உள்ள நல்ல ஆச்சாரனமான குடும்பம் மட்டுமே.)
படிப்பில் சந்தேகங்கள் கேட்க இவனிடம் நேரில் வந்துகொண்டிருந்த அந்தத் திருவோண பெண்ணும், இந்தத் திருவாதரைப் பையனும், எப்படியோ ஒருவரையொருவர் மனதார விரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது கம்ப்யூட்டர் சாட்டிங் தவிர, வரம்பு மீறி எந்தத்தப்புத் தண்டாவுக்கும் அவர்கள் போனதாகத் தெரியவில்லை.
இருவரும் பொருந்தக்கூடிய வெவ்வேறு கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே !
ஒருநாள் இருவரும் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு தங்கள் தங்கள் பெற்றோர்களிடம், வெளிப்படையாக, தங்களின் இந்த விருப்பத்தைச் சொல்லி விடுகிறார்கள்.
இரு குடும்பத்தாருக்கும் இதில் உள்ளூர மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.
இருப்பினும் இருவருக்கும் நக்ஷத்திரப்பொருத்தம் இல்லை என்பதால் பெண் வீட்டினர், பெண் கொடுக்க மிகவும் தயங்குகிறார்கள். ஜாதகம் + ஜோஸ்யத்தில் ஊறிப்போன குடும்பத்தார் அவர்கள். ஏனெனில் பெண்ணின் அம்மா வழி தாத்தா அந்தக்காலத்திலேயே, திருச்சியிலேயே மிகப்பிரபலமான ஜோஸ்யர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் தெரியாதவர்கள் திருச்சியில் யாருமே கிடையாது எனச் சொல்லலாம்.
2008-இல் மிகவும் வயதாகி படுத்த படுக்கையாக இருந்த அவரிடம் போய் இதுபற்றி பெண்ணின் பெற்றோர்கள் பேசுகிறார்கள். நிலைமையைக் கேட்டறிந்த அவரும் ஏதேதோ புதுப்புதுக் கணக்குகள் போட்டு, இதிலுள்ள வேறு சில சாதகமான விஷயங்களை எடுத்துச்சொல்லி, இவர்கள் இருவருக்கும் தாராளமாகக் கல்யாணம் செய்யலாம் .... இதில் குற்றமில்லை, தோஷம் இல்லை என அடித்துச் சொல்லி விட்டார்.
பிறகுதான் பெண்ணின் பெற்றோர்கள் சற்றே மனம் சமாதானம் அடைந்தார்கள்.
பெண் வீட்டினரும் தங்களின் ஒரே செல்ல மகள் ஆசைப் படுவதாலும், அந்தப் பிரபல ஜோஸியர் ஆகிய தன் தந்தையும், விசேஷமாக அப்ரூவல் கொடுத்துவிட்டதாலும், மறுப்பேதும் சொல்லாமல் திருமணம் செய்து கொடுக்க (அரை மனதுடன்-கொஞ்சம் நெருடலுடன்) சம்மதிக்கிறார்கள்.
பிள்ளையைப் பெற்ற பெற்றோருக்கும் இதில் எந்தவிதமான ஆட்சேபணைகளும் இல்லை. எப்படியோ தங்கள் மகனின் மனம் போல, அவன் ஆசைப்பட்டவளே அவனுக்கு மனைவியாகக் கிடைக்கப்போவதில் மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.
2009-இல் அவர்கள் இருவருக்கும், ஸ்ரீரங்கத்தில் உள்ள மிகப்பிரபலமான, மிகப்பெரிய கல்யாண மண்டபத்தில், ஜாம் ஜாம் எனக் கல்யாணம் நடந்து விட்டது.
திருமண நாளன்று, மணப்பெண்ணின், மிகவும் வயதான அப்பா வழி தாத்தா, பாட்டி + அம்மா வழி தாத்தா, பாட்டி ஆகிய நால்வரும் (இரு பழுத்த தம்பதிகளும்) நேரில் வந்து கலந்துகொண்டு ஆசீர்வதிக்கும் ப்ராப்தம் இருந்து, கல்யாணம் நல்லபடியாக ஜோராக நடந்து விட்டது.
கல்யாணம் முடிந்ததும், தான் ஆசைப்பட்ட மனைவி வந்த வேளை, மாப்பிள்ளை பிள்ளையாண்டானுக்கு ஐந்து ஸ்தான சம்பளமாக இருந்தது ஆறு ஸ்தான சம்பளமாக உயர்ந்தது. இரண்டு பிரமோஷன்களும் கிடைத்தது. சொந்தத்தில் வீடு வாங்கினான். சொந்தத்தில் புத்தம் புதிய ஏ.ஸி. கார் வாங்கினான். அடுத்தடுத்து லட்டு மாதிரி இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்து, இன்றுவரை செளக்யமாகவும் சந்தோஷமாகவுமே இருந்து வருகிறார்கள்.
இதுவும் நான் செய்துள்ள மற்றொரு Case Study ஆகும்.
ஜோஸிய ஜாதகப் பொருத்தங்களில் திருவாதரை நக்ஷத்திரத்தில் பிறந்த ஆண்மகன் ‘திருவாதரை, கேட்டை, அனுஷம், ரோகிணி, ஹஸ்தம், ஸ்வாதி, திருவோணம், சதயம்’ ஆகிய எட்டு நக்ஷத்திரங்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்வது நல்லதல்ல என்றே போட்டுள்ளது.
இதையெல்லாம் நம்புவதா, புறக்கணிப்பதா என்பதே புரியாமல் உள்ளன .... என் இதுபோன்ற ஆராய்சிகளினால் 😘
மொத்தத்தில் ’மனம்போல் மாங்கல்யம்’ கிடைக்க, ஜாதகப் பொருத்தங்களைவிட, ஒருவருக்கொருவர் ஏற்படும் மனப்பொருத்தமே மிகவும் சிறந்தது என்பது எனது அபிப்ராயமாகும்.
உண்மை தான். இதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டு வருகிறேன்.
Deleteஎன் மேற்படி பின்னூட்டத்தில் 3-வது பாராவில், கடைசி வரியில், இரண்டாவது வார்த்தையில், ஓர் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. :(
Deleteஆச்சாரனமான = ஆச்சாரமான
அதனை தயவுசெய்து திருத்திக்கொண்டு வாசிக்கவும்.
இன்றைக்கும் என் வீட்டருகே உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாதர் என்ற சிவன் கோயிலில் ஒருவர் ஜோஸ்யம் சொல்கிறார். இவர் பெயர் ரகு என்பது. இவர் பிறவியில் ஒரு வைஷ்ணவர் மட்டுமே. சிறுவயது முதலே இந்த சிவன் கோயிலில் இவருக்கு ஓர் ஈடுபாடு இருந்துள்ளது. இப்போது அவருக்கு சுமார் 50க்கு மேல் 60க்குள் வயது இருக்கும். சற்றே மாநிறமாக கட்டை குட்டையாக குண்டாக இருப்பார்.
ReplyDeleteபட்டையாக விபூதி, குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, ருத்ராக்ஷ மாலைகள் கழுத்தில் அணிந்துகொண்டு, காவி வஸ்திரத்தை இடுப்பில் உடுத்திக்கொண்டு, மாலை சுமார் ஆறு மணிக்கு கோயிலுக்குள் ஒரு பிரதக்ஷணம் செய்து விட்டு, ஸ்வாமி அம்பாளை தரிஸித்துவிட்டு, கோயில் உள்ளேயே நந்திக்குப் பின்பாக உள்ள உண்டியலுக்கு முன்பாக ஒரு சதிர் தேங்காயை உடைத்துவிட்டு, மிகுந்த ஆவேசத்துடன் வந்து, ஓர் தூண் அருகே அமர்ந்துகொள்வார். அதற்குள் அவரைப் பார்த்து தங்களின் கஷ்டங்களைச் சொல்லி அழ ஒரு கூட்டமே கூடி இருக்கும்.
அவர் ஜோஸ்யம் சொல்லும்போது, ஸ்ரீ ஆனந்தவல்லீ அம்பாளின் சக்தியே அவர் உடலில் ஏறி விடுவதாகச் சொல்லுவார்கள். முன்பு தினமும் வந்துகொண்டிருந்தார். இப்போது வெள்ளிக்கிழமை மட்டும் கட்டாயமாக வருகிறார் என்று கேள்வி.
அவருக்கு அந்த ஸ்பெஷல் சக்தி வரும் நாட்களில், அங்குள்ள கூட்டத்தில் உள்ள ஒரு சிலரை மட்டுமே தன்னருகில் அழைத்து அமர வைத்துக்கொண்டு, அவர்களின் கஷ்டங்களைச் சுருக்கமாக ஓரிரு வரிகளில் மட்டுமே சொல்லச் சொல்லுவார். கண்களை மூடிக்கொண்டு, அவர்களின் கேள்விக்கான பதிலும் சொல்லி, ஒருசில பரிகாரங்களும் சொல்லிவிட்டு, தன் இடுப்பிலிருந்து விபூதி எடுத்து பொட்டலமாகக் கட்டிக் கொடுத்து அனுப்புவார்.
யாரிடமும் ஜோஸ்யம் சொன்னதற்கு காணிக்கையாக ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளவே மாட்டார். வற்புருத்திக் கொடுக்க நினைத்தால், கோயில் உண்டியலில் போட்டுவிட்டுப் போகச்சொல்லி விடுவார்.
அவ்வாறு அவருக்கு அம்பாளின் அருள் வந்து ஜோஸ்யம் சொல்லும் நாட்களில் சுமார் ஒரு பத்து பேர்களுக்கு மட்டுமே சொல்லுவார். அவர் பிறருக்குச் சொல்வதை நாமும் அருகில் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ கேட்க முடியும். அம்பாள் அருள் அவரைவிட்டு விலகியதும், உடனே எழுந்துகொண்டு, மீண்டும் கோயிலை வேக வேகமாக, ஆக்ரோஷமாக, ஓர் பிரதக்ஷணம் செய்துவிட்டு, மீண்டும் ஓர் சதிர் தேங்காய் உடைத்துவிட்டு, நமஸ்காரம் செய்துவிட்டுக் கிளம்பி விடுவார்.
அவர் வீடு இப்போது ஸ்ரீரங்கத்தில் எங்கோ இருப்பதாகக் கேள்வி. 1965-1980 காலக் கட்டத்தில், தன் இளம் பிராயத்தில் இங்கு திருச்சி வடக்கு ஆண்டார் தெருவிலேயே, தன் பெற்றோர்களுடன் குடி இருந்து வந்தார். அப்போது I.T.I படித்திருந்த அவர், 1985 வாக்கில் BHEL Factory Area வில் ஒரு Artisan ஆக பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இப்போதும் BHEL-இல் வேலை பார்க்கிறாரா அல்லது பணிஓய்வு பெற்றுவிட்டாரா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை.
ம்ம்ம்ம் இப்படி அருள் வாக்கு சொல்பவர்கள் எல்லோருமே சரியாகச் சொல்வதாக நினைக்க முடியாது! இவர் ஓர் விதி விலக்குனு நினைக்கிறேன்.
Deleteஜோசியம் பார்த்து மனதை
ReplyDeleteஅலக்கழிப்பதை விட வாழ்க்கையின்
சுவாரசியத்தை அறிய
ஆவலாய் இருப்பதே நல்லது...
உண்மை தான். ஆனால் மனித மனங்களின் ஆவல், ஆர்வம், எதிர்பார்ப்பு இவை இருக்கும்வரை இதுவும் இருக்கும். இதைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது.
Delete'வெள்ளிக்கிழமை விரதக் கதை' அப்படின்னு ஒரு பூஜை இருக்கு அம்மா!.. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒரு ஈ புக் கூட வந்திருக்கு. இது ரொம்ப காலமாகவே வழக்கத்தில் இருக்கும் பூஜை. அதில் ஒரு கதை வரும். ஒரு ஏழை தகப்பனார். இரண்டு சிறு வயதுப் பெண்கள் அவருக்கு. மனைவி, குறித்த வயதுக்குள் குழந்தைகளை கன்னிகா தானம் செய்ய வேண்டுமென நினைவுபடுத்த, தன் பெண்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிரயாணமாகிறார். ஒரு ஊரில், அந்த ஊர் செல்வந்தர்களில் ஒருவர், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு, அதிதி போஜனத்துக்கு யாரும் உண்டா என்று கேட்க, இவர், தானிருப்பதாகக் கூறி உணவுக்குச் செல்கிறார். சாப்பிட்டதும், செல்வந்தர், அந்த ஊருக்கு வந்த காரியம் என்ன என்று விசாரிக்க, இவரும் சொல்கிறார். உடனே, தன் பெரிய மைந்தனுக்கு, இவரது பெரிய பெண்ணை மணம் செய்து தரச் சொல்லி செல்வந்தர் கேட்க, இவரும் சம்மதித்து, பெண்ணின் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்து, துளசி தீர்த்தம் விட்டு கன்னிகா தானம் செய்து கொடுத்து விட்டு, கிளம்புகிறார். அடுத்த ஊரில் சின்னப் பெண்ணுக்கும் இவ்வாறே திருமணம் செய்கிறார்.
ReplyDeleteஆக, அந்தக் காலத்தில், பெண், அவள் குலம் மட்டும் பார்த்தார்களே
ஒழிய ஜாதகமோ, வசதியோ பார்க்கவில்லை என்று தான் நிச்சயமாகிறது. திருமணத்திலும் இவ்வளவு ஆடம்பரங்கள் இல்லை. எல்லாம் சமீபத்தில் தான் வந்திருக்கு.
@ பார்வதி ராமச்சந்திரன், நீங்கள் சொல்வது பெண்ணை வேறு ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொடுக்கும் முறை. ஆனால் நான் சொன்னது பிரமசாரிகள் ஊர் ஊராகப் போகும்போது பிக்ஷையாகக் கொடுக்கப்படும் பெண்ணே கன்யாதானம் முறையில் கொடுக்கப்பட்டவள் என்று நினைக்கிறேன்.
Deleteகன்யா சுல்கம் என்ற முறையில் பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் பணம், நகை, நட்டுகள், சொத்துக்கள் என்று தானம் கொடுத்துப் பிள்ளை வீட்டார் பெண்ணைத் தங்கள் பிள்ளைக்கு மணம் முடித்துக் கொடுப்பார்கள். இம்மாதிரித் திருமணம் தான் தமிழ்த்தாத்தா காலத்திலும் நடந்து வந்திருக்கிறது. இது காலப்போக்கில் வர சுல்கம்/வர தக்ஷணை என்று மாறி இப்போது சமமாக இரு வீட்டாரும் செலவு செய்து வருகின்றனர். என்றாலும் பெண் வீட்டார் கை இப்போது ஓங்கித் தான் இருக்கிறது.
Deleteஅம்மா!.., அந்தக் காலத்தில் ஜாதகம் பார்க்காமல் தான் திருமணம் செய்தார்கள் என்று தாங்கள் சொன்னதற்கு ஆதாரமாகவே அந்தக் கதையைச் சொன்னேன்!. இரண்டாவதாக தாங்கள் சொன்னது முற்றிலும் முற்றிலும் உண்மை.. பெண் வீட்டார்கள் கைங்கரியத்தால், சென்ற வருடம், நான் சென்று வந்த இரு திருமணங்கள் முறியும் நிலையில் உள்ளன.. வருத்தமாக இருக்கிறது..:((!.
Deleteநன்றி பார்வதி!
Delete@நெல்லைத் தமிழன், அப்புறமா வருவதாகச் சொல்லிட்டு வரவே இல்லையே! :)
ReplyDeleteஎல்லாம் அவன் செயல்! என்று அவனிடம் கொடுத்துவிட்டு ஹப்பாடா என்று நிம்மதியாக அவன் பாதங்களில் வீழ்வதே எங்கள் இருவரின் எண்ணம் கருத்து எல்லாம்....யாமிருக்கப் பயமென் என்று அவன் இருக்கும் போது நமக்கேன் கவலை!
ReplyDeleteநாளும் கோளும் என் செய்துவிடும் என்று கோளறுபதிகத்தில் முதல் பாடல் வரும்..
தொடருமோ....