சென்ற வருஷம் ஜூன் மாதம் போல் கொடைக்கானல் போனோம். மதுரைக்கு மீனாக்ஷியைப் பார்க்கச் சென்றபோது கோமதி அரசின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து கொடைக்கானல் சென்றோம். மதுரையிலிருந்து இரண்டு, மூன்று மணி நேரத்துக்குள்ளாகப் போக முடிந்தாலும் மேலே செல்ல நேரம் பிடிக்கிறது. ஊட்டி மாதிரி இல்லை. இது வேறே மாதிரி! எனக்கு எப்படினு சொல்லத் தெரியலை. ஆனால் பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே ஏமாற்றத்தைத் தந்தது கொடைக்கானல்.
மலை ஏறும்போதே சில்வர் லேக் என்னும் வெள்ளி ஏரி வந்து விடும். போகும்போதே பார்த்துக் கொண்டு போய்விடலாம். ஆனால் நாங்கள் வண்டியை நிறுத்திப் பார்க்கணும்னு ஆசைப்படலை. முதலில் தங்குமிடம் பார்க்கணுமே! தமிழ்நாடு அரசுச் சுற்றுலா ஓட்டலான தமிழ்நாடு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம். வண்டியும் நேரே அங்கே சென்றது. வண்டியிலிருந்து இறங்கி சுமார் இருபது படிகளுக்கும் மேல் கீழே இறங்கிச் செல்லவேண்டும் ஓட்டலின் வரவேற்பு அறைக்கு! அறை இருக்கா இல்லையானு அங்கே போய்த் தான் கேட்கணும்! இல்லைனா மீண்டும் மேலே ஏறி வரணும்! வேறே வழியில்லாமல் கீழே இறங்கிச் சென்றோம். அங்கே இருந்த பெண் ஊழியர் கொஞ்சம் பொறுங்கனு சொல்லிட்டார். அவரால் ஒரே நேரத்தில் எல்லோரையும் கவனித்துப் பதில் சொல்லும் அளவுக்குத் திறமை இல்லை. கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் அவர் ஒரு வழியா அறை இருக்குனு சொல்லிட்டுச் சாவியைக் கொடுத்தார்.
நாங்க செய்ய வேண்டிய நடைமுறைகளைச் செய்து முடித்துப் பணம் கட்டியதும் போய்ச் சாப்பிட்டுட்டு வாங்க ரசீது தரேன்னு சொல்லிட்டார். சரினு மேலே அறைக்குப் போய் சாமான்களை வைத்தோம். அறை பெரிதாகவே இருந்தது. நல்ல விசாலமான அறை தான்! அங்கிருந்து வெளியே பார்க்கும் காட்சிப்பார்வைக்கும் நல்ல காட்சியாகக் கிடைத்தது. ஆனால் பராமரிப்புப் போதாது. பின்னர் கீழே சமையலறைக்கு வந்தோம். காலை உணவு மட்டும் இலவசம்னு சொல்லி அதற்கான கூப்பன்கள் கொடுத்திருந்தாங்க. அதை மறுநாள் காலைக்குத் தான் பயன்படுத்த முடியும் என்பதால் அப்போ உணவு என்ன இருக்குனு கேட்டோம். சப்பாத்தி கிடைக்கும் என்றதால் அதற்கேற்ற பக்க உணவாகப் பனீர் மசாலாவைத் தேர்ந்தெடுத்தோம். தேநீர் கேட்டதற்குக் கிடைக்காதுனு சொல்லிட்டாங்க.
சப்பாத்தியும் பனீர் மசாலாவும் வந்தது. சாப்பிட்டோம். உணவு சுமாராக இருந்தாலும் காரம் குறைவாக இருந்ததால் சாப்பிட முடிந்தது. பின்னர் மீண்டும் வரவேற்புக்கு வந்து அங்கே இப்போது ஆள் மாறி இருந்தார்கள். அவங்களிடம் கேட்டுக் கொண்டு ரசீதை வாங்கிக் கொண்டு கிட்டே இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். ஏற்கெனவே மணி நான்கு ஆகி விட்டதால் முதலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப்போனோம். அங்கிருந்து பார்த்தால் பழனி மலை தெரியும் என்பார்கள். இந்தத் தொடர் மலைக்கூட்டங்கள் அனைத்துமே பழனி மலைத் தொடர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தது என்பதும் தெரிய வந்தது.
பிற்காலத்தில் இது மதுரை மாவட்டத்தில் சேர்ந்திருந்திருந்தது. இப்போது திண்டுக்கல் மாவட்டம். என்றாலும் இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது என்றே சொல்லப்படுகிறது. கொங்கு வேட்டுவக் கவுண்டர் இனத்தைச் சார்ந்த கடிய நெடுவேட்டுவன் என்பவர் இதை ஆண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் பண்ணி என்பவர் இதை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அனுபவப் பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteஹிஹிஹி, வாங்க வாங்க, என்ன அனுபவம்னு சொல்லிப்போடுங்கோ!
Deleteகீதா மேடம்... கொடைக்கானலுக்கு நாங்கள் இருமுறை சென்று வந்துள்ளோம். இரண்டாவது முறை, மூன்று வாரங்களுக்கு முன்பு சென்றது. எதிர்பார்த்த அளவு குளிர் இல்லை. ஆனாலும் சென்னையிலிருந்து away from home என்ற அளவில் ஹஸ்பண்டுக்கும் குழந்தைகளுக்கும் நிறைவுதான். கொடைக்கானலிலேயே கொஞ்சம் உருப்படியா சாப்பிட அஸ்டோரியா ஹோட்டலைவிட்டால் வேறு எதுவும் கிடையாது. ஒரு சில இடங்களைத் தவிர வேறு இன்டெரெஸ்டிங்கா எதுவும் கிடையாது. நீங்கள் எங்க எங்க போயிருந்தீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்று பார்ப்போம்.
ReplyDeleteம்ம்ம்ம் ஊட்டியை முதலில் பார்த்ததாலோ அல்லது அங்கேயே வசிக்க நேர்ந்ததாலோ ஊட்டிதான் பிடிச்சது. அதன் அருகில் கூட கொடைக்கானல் வர முடியாது! அஸ்டோரியா ஹோட்டல் எங்கே இருக்கோ! தெரியலை. நாங்க போன அன்னிக்குச் சாப்பிட்ட அனுபவமே போதும் போதும்னு ஆயிடுச்சு! :(
Deleteஒவ்வொருவர் அனுபவத்தைப் படிக்கும் போது நம் அனுபவங்களும் நினைவுக்கு வருகிறது நாங்கள் அந்தப் பயணத்தை ரசித்தோம் அது ஆயிற்று பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அங்கு இரவு தங்கவில்லை
ReplyDeleteம்ம்ம்ம் தங்கிப் பார்க்கும்படி இடங்களும் அவ்வளவு இல்லை தான்! :) ஊட்டி இன்னும் பெரிசு!
Deleteநீண்ட இடைவெளிக்குப் பின் எழுதும் தொடரோ.... தொடர்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஅவ்வளவுதானா கொடைக்கானல்? கட்டுரை முடிந்ததா..தொடரப்போகிறதா? ஒன்றும் சரியாகத் தெரியவில்லையே!
ReplyDeleteஅட! இப்போத் தானே ஆரம்பிச்சிருக்கேன்!
Deleteஅருமை அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஉதகையையும் கொடையையும் ஒப்புநோக்கும்போது எனக்கு கொடைதான் ஐயா பிடித்திருக்கிறது.
ReplyDeleteம்ம்ம்ம் இருக்கலாம். ஆனால் உதகையில் தங்கி இருந்த நாட்களின் சுகமான அனுபவங்கள் இன்றளவும் மறக்க முடியாது! கொடைக்கானல் அவ்வளவு அழகு இல்லை.
Deleteஅப்புறமா நான் "அம்மா" "ஐயா" இல்லை!
நல்ல பயணத் தொடர்!!! தொடர்கிறோம்.
ReplyDeleteகீதா: அக்கா எப்போதுமே எந்த மலைவாசஸ்தலித்திலும் ஒரு சில இடங்களே அதாவது டூரிஸ்ட் ஸ்பாட் என்று சொல்லப்படுபவை நன்றாக இருக்கும். கொடைக்கானல் ஊட்டி போன்று கூட்டாமாக இருக்காது. சிறிய மலைதான். அங்கு என்றில்லை எந்த மலை ஊரிலும் நார்மல் இடங்களைத் தவிர நாம் புகுந்து புறப்பட்டால் நிறைய அழகிய இடங்களைப்பார்க்கலாம். ஆனால் எல்லோராலும் செய்ய முடியாதே! தொடர்கிறோம்
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தோம் அதுவும் ஒரு கதை எப்போதோ பதிவில் பகிர்ந்திருக்கிறேன்
ReplyDelete