எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 01, 2017

வரும் புத்தாண்டில் நன்மைகள் சிறக்கட்டும்!

இங்கே யு.எஸ். வந்ததிலிருந்து அதிகம் இணையத்தில் உட்கார முடியலை. பகல் பொழுது பூராவும் குழந்தையுடன் போயிடும். காலை நேரம் அதிகம் உட்கார முடியாது. வேலை இருக்கும். மதியம் மட்டும் சிறிது நேரம் உட்காருவேன்.  இங்கே இன்னமும் புத்தாண்டு பிறக்கவில்லை. இப்போது நேரம் மாலை நாலே கால். அங்கே விடிகாலை மூன்றே முக்கால் மணி இருக்கும். மனமெல்லாம் இந்தியாவில் தான் இருக்கு. இங்கே வந்தாலும் ஒரே இறுக்கமான சூழ்நிலையாகத் தான் அமைந்து விட்டது.  இந்த வருடம் முழுவதுமே அப்படி ஆகி விட்டது. வரும் வருடமானும் சரியாக இருக்கவேண்டும் என்று அனைவர் சார்பிலும் பிரார்த்திக்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கடந்து போன வருடம் பொதுவாகவே மோசமான வருடமாகப் பலருக்கும் இருந்திருப்பது தெரிய வருகிறது. அரசியல் சூழ்நிலையும் சரி இல்லை.  தமிழ்நாட்டுச் சூழ்நிலை கேட்கவே வேண்டாம். இந்த அழகில் அனைவருக்கும் ரூபாய் நோட்டுச் செல்லாது என்று அறிவிப்புச் செய்ததில் மன வருத்தம். இது பெரும்பாலும் தமிழ்நாட்டில் தான் அதிகம் தெரிகிறது என நினைக்கிறேன். ஊடகங்களும் இதைப் பெரிது படுத்துகின்றன. ஆனால் இதன் மூலம் விளைந்திருக்கும் நன்மைகளை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பொதுவாகக் குளிர் நாட்களில் காய்கறிகள் விலை குறைந்து விடும். ஆகவே அதை விட்டு விடுவோம். பருப்பு வகைகள் விலை மிகக் குறைந்திருப்பதாக தினசரிகள் சொல்கின்றன. அதை யாருமே சுட்டிக் காட்டவே இல்லை. ஒரு ரூபாய் விலை உயர்ந்தால் அதைச் சொல்லிக் கொண்டே இருப்பதோடு அதனால் பலரும் கஷ்டப்படுவதாகச் சொல்லித் திரும்பத் திரும்ப அதையே காட்டுவார்கள். ஆனால் விலை குறையும்போது அதைச் சொல்வதில்லை. :(

நேரடிப் பணபரிவர்த்தனையைக் குறைத்ததை ஒரு குற்றமாகச் சொல்பவர்கள் அதன் மூலம் ஒரு இடத்தையோ, பொருளையோ விற்பதின் மூலம் கணக்கில் காட்டும் பணம், கணக்கில் காட்டப்படாத பணம் என்று இருந்து வந்தது இனிமேல் அப்படிச் செய்ய முடியாது என்பதை மறந்து விடுகிறார்கள். அரசுக்கு விற்பதாக இருந்தால் அது வெளிப்படையாக விற்க வேண்டி இருக்கும் என்பதால் யாரும் விற்க மாட்டார்கள். அதையே தனியாருக்கு விற்கும்போது வெள்ளைப் பணம், கறுப்புப் பணம் எனக் கணக்கில் காட்டாமல் வாங்குவார்கள். இப்போது அனைத்தும் செக் மூலம் அல்லது இணையம் மூலம் பரிவர்த்தனை என்பதால் கணக்கில் வந்தே தீரும். அதே போல் சில தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள், கம்பெனிகள் போன்றவற்றில் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் கூட இப்படித் தான் கொடுப்பது ஒன்று, அவர்கள் கணக்கில் காட்டப்படுவது ஒன்று என இருக்கும். இப்போது செக் மூலம் வங்கியில் சம்பளம் போட்டாக வேண்டும் என்பதால் இனி அப்படிச் செய்ய முடியாது.

அடுத்து குப்பன், சுப்பன் என அனைவரும் வங்கிக்கு வந்து வங்கிக் கணக்கு தொடங்கி அனைவரையும் பணத்தை வங்கியில் போட வைத்ததன் மூலம் எல்லோருடைய வருமானக் கணக்கும் அரசின் பார்வையில் வருமாறு செய்ததும் ஓர் வெற்றி என்றே கொள்ள வேண்டும்.  அதோடு ஏடிஎம்மில் 50 நாட்கள் ஆகியும் பணம் வரவில்லை என்பவர்களுக்கு 50 நாட்களில் நாட்டின் நிலைமை மாறும் என்று தான் சொன்னாரே தவிர, ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதாகச் சொல்லவே இல்லை. இப்போது ஓரளவுக்கு எல்லோருமே கையில் பணம் இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்யும்படி ஆகி விட்டது. ஆகவே இதுவும் இந்த அரசுக்குக் கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும்.  அதோடு இல்லாமல் மக்கள் வங்கியில் போட்ட தொகையில் மூன்றில் ஓர் பங்கு தான் இப்போது அரசு மக்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆக அதிகம் புழங்கிய பணம் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யப்பட்டதால் என்பதும் இந்தக் குறைந்த அளவு பணத்திலேயே நாட்டில் பணப்புழக்கம் சரியாக இருக்கிறது என்பதையும் இந்த அரசு புள்ளி விபரங்களோடு எடுத்துக் காட்டி இருக்கிறது.

ஆகவே நாடு முன்னேற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று சொல்வதால் எந்த வேலை நின்று போயிருக்கிறது? எல்லோரும் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆகவே குற்றம் குறை சொல்லாமல் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பைக் குறைத்ததன் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்வோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். 

24 comments:

 1. ஆம், பருப்பு விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளது. சொந்தச் சோகங்களும், பொதுக் கஷ்டங்களும் இருக்கத்தான் செய்தன கடந்த வருடத்தில். அனைத்தையும் மீறி நடந்த நல்ல விஷயங்களையும் நினைவில் கொள்வோம். வரும் ஆண்டு இனிமையானதாகவும், சுகம் நிறைந்ததாகவும் ஆகா விட்டாலும், கஷ்டங்கள் குறைவாகவும், அதைத் தாங்கும் பலமும் இணைந்து மலரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சென்ற வருடம் பலருக்கும் பல்வேறு விதமான இழப்புகள், சோகங்கள் என்று தான் இருந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல் கஷ்டங்களைத் தாங்கும் மனோபலம் தான் தேவை! :(

   Delete
 2. வணக்கம் நலமா ?
  நல்ல அலசல் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்க பதிவுகள் பாக்கி இருக்கின்றன. வர்ணும். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 3. நம்பிக்கைகள் தான் வாழ்வின் ரகசியம். எப்போதும் வரும் வருடங்கள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் போன வருடம் மோசமாக இருந்தது என்ற பொருமலும் நிலையானவை. பொதுவாக நல்லவை நினைவில் நிற்பது குறைவு. ஆனால் விரும்பாதவை நினைவில் நிற்கும், ஏன் என்றால் அவை காயபடுத்தும்.

  "வந்ததை வரவில் வைப்போம். செய்வதை செலவில் வைப்போம்." 2017 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. என்னைப்பொறுத்த வரை சென்ற வருடம் போன்ற மோசமான வருடம் இதற்கு முன்னர் இல்லை. ஆனால் அதன் மூலம் மனிதர்களின் தராதரம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

   Delete
 4. புத்தாண்டின் தொடக்கத்திலேயே சர்ச்சை வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சர்ச்சைக்கு எதுவுமே எழுதவில்லையே! பத்திரிகைச் செய்திகளைத் தான் பகிர்ந்துள்ளேன். :)

   Delete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 6. நல்லது நடந்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களைப் பாதிக்கிற விஷயங்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது மானிட இயல்பு. மோடி பாதிக்கிறார். ஆகவே எதிர்க்கிறார்கள். ..தங்கள் அமெரிக்க விஜயம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க முதல்முறையாக என்னுடைய வலைப்பக்கம் வந்திருக்கீங்கனு நினைக்கிறேன். நல்வரவு. உங்களுக்கும் வாழ்த்துகள்.

   Delete
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே, உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   Delete
 8. தங்களுக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  நேரடிப் பணப் பரிவர்த்தனை, கொஞ்சம் டிசிப்ளினை மக்களிடையே கொண்டுவந்துள்ளது என்று தோன்றுகிறது. இன்னும் 3 மாதங்களில் நிச்சயமாக நிலைமை சீராகிவிடும்.மனதில் கொஞ்சம் பயம் இருப்பதால், (சில்லரை கிடைக்காதோ என்று), 100,50 ரூ நோட்டுக்கள் எல்லோரும் கொஞ்சம் பதுக்கிவைக்கும்படியாக (குறைந்தது 4000 ரூபாய்க்காவது) ஆகிவிட்டது. இதுவும் சில மாதங்களில் சரியாகிவிடும். பல பணக்காரர்களிடம் 2000 ரூ நோட்டுக்கள் சென்று சேர்ந்ததும், அரசியல்வாதிகளிடம் புதிய நோட்டுக்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்ததும்தான் கொஞ்சம் ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது.

  உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், 100 ரூ 50 ரூ நோட்டுக்களைப் பலரும் பதுக்கி விட்டனர் என்பதே உண்மை! விரைவில் நிலைஐ சீரடையும் என்று நினைக்கிறேன்.

   Delete
 9. ஆஹா.... பருப்பு விலை உங்களுக்குக் குறைஞ்சுருக்கு. எங்களுக்கு ஏறிப்போச்சு:-(

  கள்ளக்கணக்கு வச்சுருக்கவங்க வேற எதாவது வழி கண்டுபிடிச்சுருப்பாங்கன்னு தோணுது. என்ன மாற்றம், சட்டம் கொண்டு வந்தாலும்.... அதுலேயும் காசு பார்க்கற கூட்டம் இருக்கே!

  உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பலரிடமிருந்தும் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைப் பார்க்கையில் மயக்கமே வருகிறது. ஆனால் அரசிடம் நோட்டுக்கள் அச்சடித்த வரிசை எண்களோடு கணக்கு இருப்பதால் கண்டுபிடிக்க முடிவதாகவும் சொல்கிறார்கள். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 10. புத்தாண்டு சிறப்பாக அமையும் என நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், கீதா.
  எனக்கும் இரண்டு வருடங்களாக சரியில்லை. இந்த வருடமாவது கொஞ்சம் நல்லது நடக்கவேண்டும். மனது ரொம்பவும் சோர்ந்து போயிருக்கிறது.
  பேத்தியைப் பார்க்கப் போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்களது ஆசிகளை சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பலருக்கும் கடந்த ஆண்டு பல்வேறு விதமான கஷ்டங்கள்! :( இனியாவது நன்மைகள் பெருகட்டும் என்று வேண்டிக் கொள்வோம். பேத்தி நன்கு விளையாடுகிறாள்.

   Delete