குறிஞ்சி ஆண்டவர் கோயில் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டருக்குள். நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்தும் அது மிகக் கிட்டே இருந்ததால் முதலில் அங்கே சென்றோம். இந்தக் கோயில் ரொம்பப் பழமையான கோயில் எல்லாம் இல்லை. இது இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண்மணியால் கட்டப்பட்டதாகச் சொல்கின்றனர். விக்கி, விக்கிப் பார்த்தப்போ அங்கேயும் அதே தகவல் தான் கிடைத்தது. ஐரோப்பியரான லீலாவதி, லில்லி(?) தெரியலை, ஆனால் இவர் இலங்கையில் இருந்ததாகவும் பொன்னம்பல ராமநாதன் என்பவரை மணந்ததாகவும் சொல்கின்றனர். இவர் தான் கொடைக்கானலுக்கு வந்தபோது குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியில் இந்தக் கோயிலை 1936 ஆம் ஆண்டில் கட்டி இருக்கிறார். பின்னாட்களில் இவர் மகள் லேடி ராமநாதன் அவர்களின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி பாஸ்கரன் என்பவரும் அவர் கணவர் பாஸ்கரனும் இந்தக் கோயிலைப் பழனி மலை அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு சந்நிதி மட்டுமே! அங்கிருந்து ஓர் குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் பழநி மலை தெரியும் என்றார்கள். நாங்களும் சிறிது நேரம் நின்று பார்த்தோம். ஒரே மேகக் கூட்டங்கள்! அரை மணி நேரம் ஆகியும் கலையவில்லை. காலை ஆறரை மணிக்குத் திறக்கும் கோயில் மாலை ஏழு வரை திறந்தே இருக்கிறது. அங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அங்கேயே ஒரு தேநீர்க்கடையில் தேநீரும் அருந்திவிட்டு அடுத்த இடத்துக்குக் கிளம்பினோம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் பில்லர் ராக்ஸ் என்னும் தூண் பாறைகள் ஆகும்.
இங்கே செங்குத்தாய்க் காணப்படும் மூன்று பெரிய பாறைகள் தூணைப் போல் காட்சி அளிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. நாங்கள் போன சமயத்தில் மேகங்கள் இருந்தன. சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தோம். சூடான வேக வைத்த வேர்க்கடலை வாங்கிக் கொறித்த வண்ணம் பில்லர் ராக்ஸைப் பார்த்துப் படமும் எடுத்துக் கொண்டேன். ஹிஹிஹி, படமெல்லாம் ஶ்ரீரங்கத்தில் பழைய மடிக்கணினியில் பத்திரமா இருக்கு! இப்போ இதை எழுத ஆரம்பிப்பேன்னு நினைக்கலையா! அதான் போட முடியலை! வழக்கம் போல் படமில்லாப் பதிவுகள்! :)
பின்னே பதிவு ஏன் போட்டேன்னு கேட்கறீங்களா? ஹிஹிஹி, நாட்டில் சூடான விஷயங்கள் ஓடிட்டு இருக்கிறச்சே கொஞ்சமானும் குளிர்ச்சியா இருக்கட்டுமேனு தான். பென் டிரைவில் சிலது காப்பி பண்ணி இருக்கேன். அதை இன்னும் இந்தக் கணினிக்குக் கொண்டு வரலை. அதிலே இருக்கானு பார்க்கணும். :)
பில்லர் ராக்ஸ் பார்த்துட்டு அங்கிருந்து பிரயன்ட் பார்க் வந்தோம். ஒரே கூட்டம். டிக்கெட் வாங்கவே எக்கச்சக்கமாக் கூட்டம். ஒரு மாதிரியாப் பார்த்துட்டுப் பின்னர் கொடைக்கானல் ஏரியைக் காரிலேயே சுற்றி வந்தோம். ரொம்பவே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான ஏரி. அதுக்குள்ளே இருட்டி விட்டது. அங்கே இருந்த கடைகளில் காஃபி பவுடர், தேயிலை, சாக்லேட், ஏலக்காய் போன்றவை விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு கடையில் பேரம் பேசிக் காஃபி பவுடர், தேயிலைத் தூள், சாக்லேட் கொஞ்சம் போல், ஏலக்காய் போன்றவை வாங்கினோம். ஏலக்காய் விலை கொள்ளை! கிட்டத்தட்ட 2,000 ரூபாய் கிலோ விற்றார்கள். மற்றப் பொருட்களிலும் கொள்ளை அடித்திருப்பது மறுநாள் தான் தெரிந்தது.
அன்றைய ஊர் சுற்றலை முடித்துக் கொண்டு ஓட்டல் திரும்பினோம். இரவு உணவு அறைக்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஆனியன் ஊத்தப்பம் இரண்டு கொண்டு வரச் சொன்னோம். வந்தது ஆனியன் கருகலப்பம். கையெல்லாம் கறுப்பு ஒட்டிக் கொண்டது. சாம்பாரில் வெறும் மிளகாய்த் தூள் மட்டுமே போட்டிருந்தார்கள். சட்னியில் தேங்காய் என்பதே தேட வேண்டி இருந்தது. சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த அறை ஊழியர் இந்த வயசான காலத்திலே ஏன் சார் இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடப் போறீங்களானு ரங்க்ஸிடம் அனுதாபப் பட்டார். கடைசியில் சாப்பிடவே இல்லை. அப்படியே குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டுப் படுத்து விட்டோம். மறுநாள் காலை கோமதி அரசு சொன்ன குழந்தை வேலப்பரைப் போய்ப் பார்க்க வேண்டும். அதுக்குக் காலையிலேயே புறப்படணும். ஆகவே படுத்துட்டோம்.

When we visited Kodai, it suddenly rained heavily for one full day. Missed a lot . Kurinji Andavar temple reminded us of NaPa's Kurinji Malar....Must visit again.
ReplyDelete_Raya Chellappa from New Jersi
ம்ம்ம் சில சமயம் இப்படித் தான் ஆகி விடும். என்ன செய்வது!
ReplyDeleteம்ம் பில்லர் ராக்ஸ் அழகான படம். நேரில் கண்டதுண்டு என்றாலும் உங்கள் படம் மீண்டும்நினைவூட்டியது. தொடர்கிறோம்
ReplyDeleteகீதா: படங்கள் அழகாய் இருக்கிறது அக்கா. உங்களுக்கு எங்கு சென்றாலும் இப்படி ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது இல்லையா அக்கா..இம்முறை சாப்பாடு...அதுவும் அந்த ஊழியரே சொல்லும் அளவிற்கு..ம்ம் மலையில் உள்ள க்டைகளில் காஃபி, தேயிலை ஏலக்காய் அதுவும் மலை அங்கு விளைவது என்பதால் நன்றாக இருக்குமே என்று வாங்கக்கூடாது கொள்ளைவிலை. ஆனால் நியாயமான கடைக்ள் இருக்கும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே. பொதுவாக தேயிலை ஃபேக்டரி கடைகளில் நன்றாகக் கிடைக்கும். அது போல வீட்டில் செய்யப்படும் சாக்லேட்டுகள் என்று கடைகளை விட செய்யப்படும் வீடுகளேக்குச் சென்றால் நன்றாகக் கிடைக்கும்....ஆனால் தேட வேண்டும்!!
பொதுவாகவே கொடைக்கானலில் சாப்பாடு சரியாகக் கிடைக்காது என்றும் தண்ணீரும் சுத்தமாக இருக்காது என்றும் பலரும் எழுதி இருக்கின்றனர்/சொல்லி இருக்கின்றனர். ஆகவே தான் நாங்க தமிழ்நாடு ஓட்டலைத் தேடிச் சென்றோம். அங்கேயும் இப்படி! என்ன செய்ய முடியும்!
Deleteஅதோடு நாங்க ஒரு இரவு மட்டுமே தங்கியதால் அங்கே கடைகளைத் தேட முடியவில்லை. ஊட்டியில் இரண்டு வருஷம் இருந்ததால் அங்கே எந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கும் என்பதை அங்கே போறவங்களுக்குச் சொல்லும் அளவுக்குத் தெரிஞ்சு வைச்சிருந்தோம். ஆனாலும் என் மனதுக்கு இன்னமும் ஊட்டி தான் அழகு ராணி! :)
Deleteஎங்கேனும் ஊட்டி பற்றி விளக்கமாக எழுதியிருக்கீங்களா? அடுத்த வாய்ப்பில் ஊட்டிதான் எங்கள் இலக்கு. சாப்பிட, தங்க, பார்க்கவேண்டிய இடங்கள். நான் 12வது படிக்கும்போது ஒரு வாரம் தங்கியிருந்தேன்.. அது 81ல்.
Deleteஊட்டி பத்தி விளக்கமா எல்லாம் எழுதினதில்லை. ஆனால் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கேன். போயிட்டு வாங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போகும்! குன்னூரில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே லக்ஷ்மி விலாஸ் என்ற ஹோட்டல் இருந்தது. தயிர் வடை, காஃபி நல்லா இருக்கும். மற்ற உணவுப் பண்டங்களும் ஓகே தான். மேலே ஊட்டியில் ஒரு ஓட்டல் இருக்கு, பெயர் மறந்து போச்சு! மேலும் அங்கே எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைச்சிருந்ததால் ஹோட்டலுக்குப் போகும் வாய்ப்புக்குறைவு. வீட்டிலேயே சாப்பிட்டுட்டுச் சுத்துவோம். எப்போவானும் ரொம்பப் பசிச்சாத் தான் ஓட்டல்! தங்குமிடம் பத்தித் தெரியலை. ஆனால் குன்னூரில் நிறைய இருக்கு. ஊட்டியிலும் இருக்கு. ஊட்டிக்கு மேலே போகும் பாதையில் தான் ஊட்டியின் பிரபலமான வர்க்கி மற்றும் ஹோம் மேட் சாக்லேட் கிடைக்கும் வீடுகள் இரண்டு இருந்தன.
Deleteகொடைக்கானல் இதுவரை சென்றது இல்லை...விரைவில் செல்லும் எண்ணம் உள்ளது...அதற்கு உங்கள் பயண குறிப்பு உதவியாக இருக்கும்...
ReplyDeleteஅழகான இடம் அல்லவா...
போயிட்டு வாங்க. கொஞ்சம் நெரிசலாகத் தெரியுது! ஊட்டி அவ்வளவு நெரிசல் இல்லை. அநேகமாய்க் கிராமங்கள் எல்லாமும் பார்த்திருக்கேன். அழகான காட்சிகள்! அதுவும் எங்க குடியிருப்புப் பகுதியிலிருந்து கீழே பார்த்தால் 200, 300 அடியில் அரவங்காடு ரயில் நிலையம். மேலே பார்த்தால் எதிரே வெலிங்க்டன் மலைப் பகுதி!
Deleteபில்லர் ராக்ஸ் அழகாய் இருக்கிறது.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் விற்கும் இந்தப் பொருளுமே விலையில் கொள்ளைதான். தவிர்க்க முடியாத பொருள் என்றாலொழிய அங்கு வாங்காமலிருப்பதே நலம்!
ReplyDeleteஊட்டியில் அப்படி இல்லை. பலருக்கும் நான் தேயிலைத் தூள், ஏலக்காய் போன்றவை வாங்கி வந்து கொடுத்திருக்கேன். :)
Deleteகொடைக்கானல் மட்டுமல்ல, எந்த சுற்றுலாத் தலம் சென்றாலுமே பொருட்கள் விலை ஓஹோ தான்....
ReplyDeleteதொடர்கிறேன்.
எல்லா இடங்களையும் சொல்ல முடியலை! கன்யாகுமரியில் முந்திரிப்பருப்பு விலை குறைவு. ஊட்டியில் தேயிலைத் தூள், ஏலக்காய், காஃபி பவுடர் விலை குறைவு. கர்நாடகாவின் ஹொரநாட்டில் காஃபி பவுடர், ஏலக்காய் விலை குறைவு. :)
Delete