ஒரு வாரம் முன்னர் ஷுகர்லான்ட் பையர் வீட்டிலிருந்து இங்கே கேடிKT என்னும் இடத்தில் இருக்கும் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கோம். அப்பு படிக்கும் பள்ளியில் இந்தியக் குடியரசு தினத்தன்று இன்டர்நேஷனல் இரவு கொண்டாட உத்தேசித்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஏற்கெனவே எங்க பொண்ணு சொல்லி இருந்தாள். அப்புவும் எங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பொண்ணு விழாவுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய இந்தியத் தரப்பின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவள் முன்னாடியே சென்று விட்டாள். "ஜய ஹோ!" பாடலுக்கு இந்தியக்குழந்தைகள் நடனம் ஆடத் தயார் செய்யப் பட்டிருந்தனர். நடனம் ஆடுவோரில் அப்புவும் ஒன்று. ஆகவே மிகவும் ஆவலுடன் இந்நிகழ்ச்சியை எதிர்பார்த்திருந்தோம். இங்கே உள்ள சில கடைக்காரர்கள் நிகழ்ச்சிக்கென தங்கள் கடையின் பொருட்கள் சிலவற்றை நன்கொடையாகக் கொடுத்தனர். அப்படி ஒரு கடைக்காரர் Currywalah என்னும் குஜராத்தி உணவுப்பொருட்கள் விற்கும் கடைக்காரர் 150 சமோசாக்களையும் அதற்கான துணை உணவுகளையும் கொடுத்திருந்தார்.
இந்தியப்பெவிலியனில் சமோசாக்களும் பால் கேக்கும் உண்ணத் தயாராக வைத்திருக்கும் காட்சி! இந்தியப்பெவிலியனின் மற்றும் சில காட்சிகள்.
இந்தியப் புரத உணவுகள் மற்றும் அஞ்சறைப்பெட்டியில் மசாலாக்கள். இந்திய தேசியப் பறவையான மயில் மற்றும் தாஜ்மஹல்.
இந்தியப்பாரம்பரிய உடைகளும் வைக்கப்பட்டிருந்தன. சமோசாவுக்குக் கூடிய கூட்டத்தால் அவற்றைச் சரியாகப் படம் பிடிக்க முடியவில்லை.
இது சீன/தென் கொரியப்பெவிலியன் என நினைக்கிறேன். எந்த நாடு என்பதைக்குறிப்பிட்டிருந்தாலும் அது கண்ணுக்குத் தெரியும்படியாக வைக்கவில்லை. பங்கு பெற்ற நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா,பொலிவியா, கனடா, நைஜீரியா, க்வாட்டமாலா, வெனிசுலா,இந்தியா, யு.எஸ்,கானா, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, ரஷியா, மெக்சிகோ போன்றவை ஆகும்.
கானா/க்வாட்டமாலா போன்ற நாடுகள் நம் தமிழ்நாட்டுப்புளியோதரை போன்ற ஓர் உணவை வைத்திருந்தார்கள். ஸ்விட்சர்லாந்து சாக்லேட் நன்றாகவே இருந்தது. யு.எஸ்ஸில் சாக்லேட் குக்கீஸ்! கொலம்பியாவில் காஃபி சாப்பிடச் சொன்னார்கள். வேண்டாம்னு சொல்லிட்டோம். நுழையும் இடத்திலேயே இருவர் நின்று கொண்டு குழந்தைகள் பெயரைக் கேட்டுக் கொண்டு அவங்களோட வரும் விருந்தினரையும் உள்ளே விடுகின்றனர். உள்ளே நுழைந்ததுமே பள்ளி சார்பில் பாஸ்போர்ட் கொடுக்கின்றனர். எனக்கு அது தெரியலை என்பதால் நான் வாங்கிக்கலை. :( நம்ம ரங்க்ஸ் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு பெவிலியனிலும் முத்திரை பதித்துக் கொண்டார். :)
படங்களும் பதிவும் தொடரும்! :)
பி.கு: படங்களைக் கைபேசியில் தான் எடுத்தேன். காமிரா கொண்டு போகலை. ஆகவே குற்றம், குறைகள் இருக்கலாம். கைபேசியிலிருந்து வாட்சப் மூலமா ஶ்ரீராமுக்கு அனுப்பி அவரை எனக்கு மெயில் பண்ணச் சொல்லுவேன். ஆனால் இப்போவோ நிறையப்படங்கள். என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கைபேசியிலிருந்து நேரடியாக் கணினியில் பிகாசாவைத் தரவிறக்கிட்டு அதிலே இணைக்க முடிவு செய்தேன். ஆனால் கணினியில் கைபேசியை இணைத்துப் பிகாசாவைத் தரவிறக்கினால் இங்கே இந்தப் புதுக்கணினியின் நார்ட்டன் செக்யூரிடி இது பாதுகாப்பானது அல்லனு தானே அதை எடுத்துடுச்சு. திரும்பத் திரும்பக் கொடுத்தாலும் அதே தான்! :( ஆகவே கணினியின் ஃபோட்டோ ஃபோல்டரில் சேர்த்துட்டு சி ட்ரைவின் படங்கள் பகுதியில் மாத்தலாம்னா அது என்னமோ கணினி நகராமல் அடம் பிடித்தது. அப்புறமா ஒருவழியா எல்லாத்தையும் மறுபடிஎடுத்துட்டு மீண்டும் போட்டுனு இரண்டு மூன்று முறை முயன்றதும் அப்பாடா! எல்லாப் படங்களும் பிக்சர் ஃபோல்டருக்கு வந்தாச்சு! கிட்டத்தட்ட 352 படங்கள்! ஶ்ரீராம் தாங்குவாரா! :)))))) பிழைச்சேன்!
வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை. இருந்தாலும் பருப்பு உணர்ச்சி சீச்சீ, பொறுப்பு உணர்ச்சியோடு கடமை ஆத்திட்டிருக்கேன். :) அம்பி ஒரு எ.பி. சுட்டிக்காட்டும்படி ஆயிடுச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஸூப்பர். ஏகப்பட்ட படங்களுடன் பதிவு போட்டு கலக்குகிறீர்கள். 352 படங்களா? ஏ அப்பா...
ReplyDeleteதொடர்கிறேன்.
ஹிஹிஹி, ஆமாம் ஶ்ரீராம், (பேரைச் சொல்லிட்டேனே!) 352 படங்கள் தான்! ஆனாலும் எல்லாத்தையும் போட மாட்டேன். :)
Delete//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை//
ReplyDeleteHouston! We have a problem. Get well soon Madam.
ஹிஹிஹி, வாங்க கைப்புள்ள, பல ஆண்டுகளுக்குப் பின் நலம் விசாரிக்கும் சாக்கிலாவது இங்கே வந்தீங்களே! மறுபடி ஒரு ரவுண்டுக்கு நான் தயார்! நீங்க தயாரா? :))))))
Deleteஉங்களின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Delete"சமோசாவுக்குக் கூடிய கூட்டத்தால்" - குழந்தைகள்தான் என்று நம்புகிறேன். ஆனா, உங்க படங்களிலும் பெரும்பான்மை, சாப்பாடு ஐட்டங்களாகவே இருக்கிறது. நிகழ்ச்சிகளையும் எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDelete@நெல்லைத் தமிழன், பெரியவங்க கூட்டம் தான் ஜாஸ்தி இருந்தது. குழந்தைகள் எல்லாம் ஸ்விஸ் பெவிலியனிலும், யு.எஸ். பெவிலியனிலும் சாக்லேட்டுக்கும், சாக்லேட் குக்கீஸுக்கும் சுத்தினாங்க! :) உண்மையிலேயே ஸ்விஸ் சாக்லேட் நல்லாவே இருந்தது. நிகழ்ச்சிகளையும் எழுதுவேன்.
Deleteநிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! மேலும் படங்கள் வரும் - ஓ.கே.......
ReplyDeleteபடங்களும் வரும் வெங்கட்!
Delete//வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை//
ReplyDeleteats OR tt POTTUKKANUM APPADINNU NINAIPPOM. ANTHA OOR DOCTORS ATHELLAAM INGE VENDAAM. ENDRU SOLKIRAARKAL.
SUBBU THATHA.
அப்படி எல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை. கட்டை விரல் என்பதால் (எந்த விரலாக இருந்தாலும்!) கொஞ்சம் சிரமம்! :) மற்றபடி பான்ட் எய்ட் போட்டதில் சரியானது நேத்து மறுபடி கரண்டி விளிம்பு பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சுடுத்து! மறுபடி பான்ட் எய்ட்! :)
Deleteசாதாரணமாக படங்கள் எடுக்கும் போது எடுப்பவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் உங்களைக் காணவில்லையே
ReplyDeleteநான் செல்ஃபியே எடுக்கிறதில்லை ஜிஎம்பி சார்! :)
Deleteபடங்களுடன் செய்திகள் அருமை. துர்கா பாட்டியை தேடுவாளே!
ReplyDeleteஅப்புக்கு பாட்டியின் வரவு மகிழ்ச்சி அளிக்கும்.
கட்டைவிரல் விரைவில் குணமடைய மருந்து தடவி வருகிறீர்களா?
வாங்க கோமதி அரசு, துர்காவும் நானும் மட்டும் தனியாக விளையாடும் விளையாட்டுக்களை இப்போது துர்கா விளையாடவில்லை. என்னிடம் போடும் சப்தங்களும் இப்போ இல்லைனு சொல்றாங்க! :( கட்டை விரலுக்கு பான்ட் எய்ட் போட்டிருக்கேன். அப்பு துர்காவை இங்கே தூக்கி வந்துடலாம்னு சொல்றா! :)
Deleteகட்டை விரலில் அடி பட்டிருப்பதால்தான் எழுத்தை குறைத்து, படங்களை அதிகப்படுத்தி விட்டிர்களோ? நம் நாட்டு குடியரசு தின விழாவில் மற்ற நாடுகளும் கலந்து கொண்டது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. Take care!
ReplyDeleteவாங்க பானுமதி! படங்களைப் பகிரத் தானே எடுத்திருக்கேன். பாராட்டுக்கு மிக்க நன்றி.
Deleteசெல் போனில் புகைப்படம் எடுக்கும் பொழுது அந்த படங்களை நான் எனது மெயில் ஐ.டி.க்கு அனுப்பிக் கொள்வேன். பிறகு அதை ப்ளாகில் அப்லோட் செய்வேன். முயன்று பாருங்கள்.
ReplyDeleteசெல்ஃபோனில் இருந்து அப்படித் தான் அனுப்பிட்டு இருந்தேன். ஆனால் என்னமோ திடீர்னு மெயிலுக்கு அனுப்ப மாட்டேன்னு செல்ஃபோன் பிடிவாதம். முயற்சி செய்து பார்த்துட்டேன். இப்போ கணினியிலேயே ஏற்றத் தெரிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கேயே அப்லோட் செய்துடுவேன்.
Deleteபடங்கள் அசத்தல் அக்கா...விவரங்களும். நல்ல கலாச்சார விருந்து போல...விரலில் அடியே பட்டாலும் விடாது தட்டச்சுவேன் என்ற உங்கள் பொருப்புணர்ச்சிக்குப் பாராட்டுகள்... இல்லைனா இவ்வளவு பார்க்கக் கிடைத்திருக்குமா....கலர்ஃபுல்!!
ReplyDeleteகீதா