ஜப்பான் பெவிலியனில் காகிதத்தில் கைவேலைப்பாடு செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தனர். இதுக்கு ஒரு பெயர் உண்டு. சட்டுனு மறந்துட்டேன். :) நினைவிருக்கிறவங்க சொல்லுங்க. :) சாப்பாடே போட்டுட்டு இருக்கேன்னு போன பதிவிலே சொன்னதுக்காக இந்தப் பதிவில் இதைக் காட்டி இருக்கேன். ஹிஹிஹி!
நினைவு வந்துடுச்சு. ஒரிகாமி என்னும் பெயர் இந்தக் கலைக்குனு நினைக்கிறேன். கூகிளாரைக் கேட்கணும். :)
நைஜீரியாவின் கைவேலைகளான மணிமாலைகள் செய்தல்!
ரஷிய பெவிலியனில் இரு குழந்தைகள் ராஜ உடை தரித்திருந்தனர்.
பெரு நாட்டுப் பெவிலியன் என நினைக்கிறேன்.
இங்கேயும் கூட்டம் அதிகம். இங்கே இவங்க தயாரிப்பாக சாக்லேட் குக்கீஸ் கொடுத்திருக்காங்க. கூட்டம் அதிகம் இருந்ததால் அருகே போக முடியலை! :)
இனி நாளை நிகழ்ச்சிகளைக் குறித்தும் அதற்கான படங்களையும் பார்ப்போம்.
படங்கள் நன்று நாளை வருகிறேன்
ReplyDeleteவாங்க வாங்க கில்லர்ஜி!
Deleteபடம்லாம் எடுக்கலாமா கூடாதான்னு பயந்துக்கிட்டே எடுத்தீங்களா? சில ரொம்பத் தெளிவில்லாம இருக்கு. ரஷ்ய பெவிலினியனில் ரெண்டு குழந்தைகள் ராஜ உடையோடுன்னு எழுதியிருக்கீங்க.. எனக்கு ஒரு குழந்தையும் ஒரு ஆன்டியும் தெரிஞ்சது. எனக்குமட்டும்தான் இப்படியா?
ReplyDeleteஎல்லோருமே காமிரா+அலைபேசி சகிதம் தானே இருந்தாங்க. பயமெல்லாம் இல்லை. குழந்தைகளும் பெரியவங்களும் குறுக்கும் நெடுக்கும் ஓடிட்டும் போயிட்டும் இருந்ததால் சரியா எடுக்க முடியலை! ஒரே கூச்சல்! :) அந்த இன்னொரு குழந்தையின் கிரீடத்தின் வேலைப்பாடு அதோட முகத்தையே மறைக்குது. அது ஃபோட்டோவுக்கு வெட்கப்பட்டுட்டுக் கீழே குனிஞ்சுடுத்து! :)
Deleteபடங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஓரிகாமியில் பலவகைகள் உண்டு.
ReplyDeleteஆமாம், பின்னர் நினைவுக்கு வந்தது வெங்கட், நன்றி.
Deleteபடங்களை ரசித்தேன். தலைப்பைப் பார்த்து பழைய பதிவு என்றெண்ணி தாண்டிச் செல்லவிருந்தேன்!!!!
ReplyDelete@ஶ்ரீராம், ஹிஹிஹி, அதான் படப்பதிவுனு கொடுத்திருக்கேனே!
Deleteபடங்கள் அழகு! அதற்குப் பெயர் ஒரிகாமி...ஜப்பானிய பேப்பர் கலை..அதில் பல வகைகள் உண்டு. மிகவும் அழகான கலை
ReplyDeleteகீதா
ஆமாம், அப்புறமா நினைவு வந்துடுச்சு! :) சேர்த்துட்டேன்.
Deleteகுடியரசு தினத்தில் நம்நாட்டில் இல்லையே என்ற நினைப்பு இருக்காதே வாழ்த்துகள்
ReplyDeleteஒவ்வொரு நிமிஷமும் இந்தியா நினைவு தான்! :) மனசெல்லாம் இந்தியாவில் இருக்க உடல் மட்டும் இங்கே!
Delete