எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 14, 2017

பொங்கணுங்க பொங்கணும்! இது பொங்கல்!

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எங்க வீட்டில் இந்த வருஷம் பொங்கல் இல்லை! ஆனாலும் கனுப்பிடி உண்டு. ஆகவே இணைய அண்ணன்மார்கள், தம்பிமார்கள் சீர் அனுப்பி வைச்சுடுங்க. இப்போ யு.எஸ்ஸிலே இருக்கிறதாலே டாலர்களில் ஹிஹிஹி யு.எஸ். டாலர் தான் அனுப்பி வைக்கவும்.

தமிழ்நாட்டிலே எல்லோரும் ஜல்லிக்கட்டுக்குக் கூவிட்டு இருக்காங்க போல! இந்த மாதிரி வேறே எதுக்கானும் கூவி இருக்காங்களானு யோசிச்சால் இல்லை போல் தெரியுது! சாலை வசதி, மின்சாரம், குடிநீர், உழவர் பிரச்னை, காவிரிப் பிரச்னை,  பெரியாறுப் பிரச்னை போன்றவற்றில் ஒண்ணு சேராதவங்க எல்லாம் இப்போ ஒண்ணாய்ச் சேர்ந்து கூவறாங்க. என்னவோ போங்க! ஒண்ணும் ரசிக்கும்படி இல்லை! இதைக் குறித்து இன்னும் நிறைய எழுதலாம்னாலும் வேணாம்னு நிறுத்திக்கிறேன்.  ஏனெனில் உண்மை கசக்கும்! அதோடு  விலைவாசி குறித்தே இரண்டு விதக் கருத்துகள். ஒரு கருத்தில் பண மதிப்புக் குறைச்சலாலும் பணப்புழக்கம் இல்லாததாலும் விளை பொருட்கள் விலை மிகக் குறைந்து விட்டன என்று உற்பத்தியாளர்கள் புலம்பல். இன்னொரு பக்கம் பொங்கலை ஒட்டி எல்லாம் விலை ஏறி விட்டன என்றும் ஒரு கரும்பே நூறு ரூபாய்க்கு விற்கப் படுவதாகவும் வாங்குபவர்கள் புலம்பல்!

பேசாமல் தெருக்காரங்க எல்லோருமாச் சேர்ந்து கோயம்பேடு அல்லது மொத்தக் கரும்பு, விளைபொருட்கள் விற்கும் இடங்களுக்குச் சென்று மொத்தமாகப் பொருட்களை வாங்கிப் பங்கிட்டுக் கொண்டால் உற்பத்தியாளர்களுக்கும் லாபம். நமக்கும் லாபம். அதிக விலை கொடுத்து எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். ஆனால் இதெல்லாம் "அத்தைக்கு மீசை முளைச்ச" கதை தான்! யாரும் அப்படிச் செய்யப் போறதில்லை. போனால் போகட்டும் போடா தான்! :))))

இந்த வருஷமாவது எல்லாப் பிரச்னைகளுக்கும் சுமுகமான தீர்வு கண்டு நல்லபடியாக முடியணும்னு பிரார்த்திக்கிறேன்.  பொங்கலோ பொங்கல்! பொங்குங்க எல்லோரும்!

22 comments:

  1. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. பொங்கல் என்னும் பெயரிலே கொண்டாடுவது மட்டுமே தமிழர்கள். மற்றபடி இந்தியா முழுவதுமே சங்கராந்தி என்னும் பெயரிலே (கேரளாவைத் தவிர்த்து!) கொண்டாடப் படுகிறது. :) வட மாநிலங்களில் எள், கடலை போன்ற பொருட்களிலே செய்த தின்பண்டங்களை விநியோகிப்பார்கள். முக்கியமாய் மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தானிலே எள் மிட்டாய்கள், கடலைமிட்டாய்கள் போன்றவைகளைப் பகிர்வதோடு அன்று பூஜையிலும் வைத்து வழிபடுவார்கள்.

      Delete
  2. கீதா சாம்பசிவம் மேடத்துக்கும் அவர் குடும்பத்திற்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். சிறு வயதில் அப்பாவுடன் பரமக்குடி மார்க்கெட்ல கரும்பும் மஞ்சளும் வாங்கிவந்த நினைவு (7 வயதில்) ஞாபகத்தில் வந்துவிட்டது.

    இதற்கு முன்னால் கூறியது மதுவிலக்கிற்கு. அந்த சீசன் டாஸ்மாக்கில் தஞ்சம் புகுந்தவுடன் நிறைவுக்கு வந்தது.

    விலைவாசி, உற்பத்திச் செலவுகள் இவற்றால் எப்போதும் பாதிக்கப்படுவது, நுகர்வோர்களும் உற்பத்தியாளர்களும். வியாபாரிகள் காட்டில் எப்போதும் மழைதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இந்த வருஷம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இல்லை! ஆனாலும் வாழ்த்துவதற்குக் கட்டுப்பாடு இல்லை. :)

      Delete
  3. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! முதல் வருகை? அல்லது முன்னரே வந்திருக்கீங்களோ? நினைவில் இல்லை! :)

      Delete
  4. வரும் சீருக்குக் கணக்கு காட்ட வேண்டி வரும் பொங்கள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இணையச் சீர் தானே! அங்கேயே கணக்கும் வந்துடுமே! இந்த வருஷம் எந்தத் தம்பிங்களும் சீ"ர" (ற)லை! :)

      Delete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தைத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். கண்ணுக்குத் தெரியும் கடவுள் சூரிய, சந்திரர் தானே! கர்நாடகாவில் சூரியன், சந்திரன் இருவரையும் கோலங்களாக வரைந்து வழிபடுவார்கள். தமிழ்நாட்டிலும் ஒரு சில குடும்பங்களில் உண்டு. வெண் பொங்கல், சர்க்கரைப்பொங்கல் இரண்டும் செய்வார்கள்.

      Delete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கனுப்பொங்கல் வாழ்த்துக்கள்!

    சரி அக்கா அங்கு காகாய் வருகிறதோ??!!அதுவும் ப்ரெட், பிசா சாப்பிடும் காக்காய்களாக...ஹிஹி இங்கு மட்டும் என்னவாம்....மிக்சர் கூட சாப்பிடும்!! அது சரி அண்ணன் தம்பிகள் எல்லாரும் ஆன்லைன் சீர் தான் வைப்பார்கள் ஆல் அக்கவுண்டெட்!ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காக்காய் வரதில்லை கீதா! சின்னச் சின்னக் குருவிங்க வருது! ஆனால் மருமகள் குழந்தை பெற்று நாள் அதிகம் ஆகவில்லை என்பதால் வெளியே போய்க் கனுப்பிடி வைக்கலை. உள்ளேயே ஸ்வாமி அலமாரி முன்னால் வைத்து விட்டோம். :)

      Delete
  9. இனிய பொங்கல் வாழ்த்துகள் ...

    ReplyDelete
  10. அந்த குளிரிலும் விடாமல் கணுப் பொங்கல் வாய்த்த உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன். அது சரி, அங்கு மஞ்சள் கொத்து, கிடைக்குமா? அல்லது அமேசானில் வாங்கினீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ரொம்பக் குளிரும் இல்லை. அதுக்காக வெளியே போய் வைக்கவும் முடியாது. மஞ்சள் வீட்டிலேயே இருக்கு. குளிரினால் இலைகள் காய்ந்து விட்டன. :) அமேசானில் எல்லாம் நான் எதுவும் வாங்குவதில்லை!

      Delete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா!...யு. எஸ்ஸில் எங்கே, எப்படி கனுப்பிடி வைத்தீர்கள் என்பதை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்!.. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது!.. எல்லாரும் கூடி ஏதேனும் ஓர் இடத்தில் வைக்க வேண்டுமா?!.. இங்கே நாங்களெல்லாம் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் வைத்தோம்.... காக்கையார் டென்ஷனாகப் பார்த்து விட்டு பறந்தே விட்டார்!;))!.. நாங்கள் போன பிறகு வரலாம்னு நினைச்சிருப்பார் போல!..

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் தான். சுவாமி அலமாரி முன்னால் வைச்சாச்சு. இங்கே நானும் மாட்டுப் பெண்ணும் மட்டுமே! :) சென்னையில் அம்பத்தூரில் முன்னால் எல்லாம் இப்படித் தான் பக்கத்து வீட்டுக்காரங்க, நாங்க, எங்க வீட்டிலே குடியிருக்கிறவங்க எல்லோருமாகச் சேர்ந்து மொட்டை மாடியில் வைப்போம். அதுக்கப்புறமாத் தனியாத் தான் கனுப்பிடி! ஶ்ரீரங்கத்திலும் தனியாத் தான் வைப்பேன்! :)

      Delete