எல்லோரும் ஜல்லிக்கட்டுப்போராட்டங்கள் முடிந்து சாவகாசமா இருப்பீங்க. இன்று அதாவது இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி வந்திருக்கும். குடியரசு தினம். அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒன்றாகக் கூடி இந்த தினத்தை நல்லமுறையில் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஆயிரம் இருந்தாலும் நாடு என்பது தனி! அரசு என்பது தனி. ஆகவே அரசின் மீது உங்களுக்கு இருக்கும் கோபத்தை நாட்டின் மீது காட்ட வேண்டாம். இது வெறும் குடும்பச் சண்டை. எப்போவுமே இளவட்டங்களுக்குப் பெரியவர்கள் மேல் ஒரு விதக் கோபம் வருவதுண்டு. அப்படி வந்த கோபம் தான் இது. கோபத்தில் குழந்தை கையில் இருப்பதைக் கீழே போட்டு உடைப்பதில்லையா? அது மாதிரி தான் இப்போவும் நடந்திருக்கிறது. அதற்காகக் குடியரசு தினத்தைக் கொண்டாடாமல் எப்படி? நம் தாய்க்குப் பிறந்த நாள் என்றால் நாம் கொண்டாட மாட்டோமா என்ன? பாரத் தாயின் பிறந்தநாள் இது!
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எத்தனை எத்தனை மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரம் இது! இந்த ஜல்லிக்கட்டுப்போராட்டத்திலும் ஒரு சிலர் நம் நேதாஜியை மறக்கவே இல்லை. அவர் என்ன தன் மாநிலமான வங்காளத்துக்காகவா போராடினார்? ஒட்டுமொத்தமாக இந்திய விடுதலைக்குத் தானே போராடினார்! அதே போல் தமிழ்நாட்டுப் போராளிகளும் தனித் தமிழ்நாட்டுக்கா போராடினார்கள்? இல்லையே! ஒட்டுமொத்தமான இந்திய விடுதலைக்குத் தானே போராட்டம்? ஆகவே நாம் நம் மனதில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து நம் நாட்டிற்காக குடியரசு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
வந்தேமாதரம்!
வந்தே மாதரம்! உள்ளதைச் சொல்லணும்னா குடியரசு தினத்தை எல்லாம் யார் கொண்டாடுகிறார்கள்? இது ஒரு விடுமுறை நாள்! அதற்கான இலக்கணங்களுடன் நாள் கழியும். அவ்வளவே!
ReplyDeleteம்ம்ம்ம்ம் கொண்டாடுகிறவங்க இருப்பாங்களே! :)
Deleteவந்தே மாதரம்
ReplyDeleteகருத்து நன்று
நன்றி கில்லர்ஜி!
Deleteநல்ல செய்தி. குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நெல்லைத்தமிழன்.
Deleteஎனது இனிய குடியரசுதின வாழ்த்துகள். வேற்றுமையில் ஒற்றுமை - இதுவே இந்தியாவின் பலம்.
ReplyDeleteநன்றி ஐயா!உங்கள் பதிவுகள் இப்போது எனக்குக் காணக்கிடைக்கின்றன. :)
Deleteநல்ல பகிர்வு.... ஜெய் ஹிந்த்.....
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள்.
நன்றி.
Deleteபள்ளிகளில் ஒரு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவார்கள் குடியரசு தினத்தில் தொலைக்காட்சி சானல்களில் அதிகம் சினிமா காட்டப்படும் அனைவரும் கண்டுகளிக்க......!
ReplyDeleteநாங்க குடியரசு தினம் மட்டுமல்ல எந்த விடுமுறைச் சிறப்புதினங்களிலும் தொலைக்காட்சியில் உட்காருவதில்லை! :) முன்னால் தூர்தர்ஷன் மட்டும் இருக்கும்போது காலைக் கொடியேற்றம் நேரடி ஒளிபரப்பில் ஓரிரு முறை பார்த்திருக்கோம். பின்னர் நான்கு நாட்கள் கழித்து வரும் Beating retreat பார்க்க அற்புதமாக இருக்கும். அதில் அநேகமாக மெதராஸ் ரெஜிமென்ட் தான் முதல் பரிசு வாங்கும். :)
Deleteஜெய் ஹிந்த்
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி அரசு!
Deleteஇனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteIntha naalin mukkiyathuvaththai oru nimishamaavathu yosippom illiya!! antha alavu thaan ippo kudiyarusu naal!!
ReplyDeleteEnaku ithu eppovume tv doordarshan live telecast udan kaziyum!! apram tv off!
ம்ம்ம்ம்ம் தொலைக்காட்சியே போட வேண்டாத நாள் இந்த நாள் தான் எங்களைப்பொறுத்தவரை! :)
Deleteநல்ல கருத்து! தாமதமாகிவிட்டது வருவதற்கு. அதனால் என்ன என்றுமே ஜெய்ஹிந்த் தானே!!
ReplyDelete