எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 11, 2017

எதுக்குத் தான் கூவறது?

பொங்கலுக்கு விடுமுறை குறித்து எல்லோரும் பொங்கல் வைச்சுட்டு இருக்காங்க. இது காலம் காலமாக் காங்கிரஸ் ஆட்சியின் போதே நடந்த ஒன்று தான். அதை இப்போத் தான் மோதி அரசு வந்து அறிவிச்சாப்போல் எல்லோரும் பொங்கிட்டு இருக்காங்க. இதிலே சிலருக்கு மத்திய அரசு நடுங்கிப் போய்ப் பொங்கலைக் கட்டாய விடுமுறையில் சேர்த்திருப்பதாக சந்தோஷப்படறாங்க.  எப்போவுமே ஆங்கிலப் புத்தாண்டோ, பொங்கலோ மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டதில்லை. நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டு அன்று என் கணவர் அலுவலகம் போயிருக்கிறார். அதே போல் பொங்கல் அன்றும் முன்னால் எல்லாம் தபாலில் அனுப்பப்படும் வாழ்த்துகள் வழக்கம்போல் தபால்காரரால் கொண்டு கொடுக்கப்படும்.

இதுவே பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஊழியர்னால் அவர் அன்னிக்கு வரமாட்டார். வேறு ஊழியரைப் போடுவார்கள். இவர்களை ஆப்பரேடிவ் ஊழியர் என்பார்கள். நிர்வாக ஊழியர்கள் விடுமுறையை எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே இது சாதாரண நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.  இப்போ சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வார விடுமுறை நாட்களாக மாநில, மத்திய அரசுகளால் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. இந்த வார விடுமுறையை நிர்வாக ஊழியர்கள் மட்டுமே அனுபவிப்பார்கள். ஆப்பரேடிவ் ஊழியர்கள் அன்று கட்டாயமாய் வேலை செய்வார்கள். இதில் பிஎஸ் என் எல் டெக்னிஷியன்கள், மின்சார ஊழியர்கள்(மாநிலம்) தபால்காரர்கள் மற்றத் துறைகளின் ஆபரேடிவ் ஊழியர்கள் ஆகியோர் அடங்குவார்கள்.  முதல்லே நாம் நிர்வாக நடைமுறையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே சரியா, தப்பா என்னும் முடிவுக்கு வர வேண்டும்.

பொங்கல் அந்த அந்த மாநில அரசின் விடுமுறை தினத்தை ஒட்டி restricted holiday என்று இரண்டு மாசம் முன்னர் அறிவிப்புச் செய்யப்பட்டது (தமிழ்நாடு) மாநில ஒர்கிங் கமிட்டியோட இந்தத் தீர்மானம் இரண்டு மாதங்கள் முன்னரே வந்தாச்சு! ஆனால் இந்த ஊடகங்கள் விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பரபரப்புக்காகப்பொங்கல் விடுமுறை இல்லை என்பது போல் விஷயத்தைத் திரித்துப் பரப்பி விட்டாங்க. இதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

மத்திய அரசின் கட்டாய விடுமுறைக்கான அறிவிப்பு நாட்களில் பொங்கல் எப்போதுமே இருந்ததில்லை. இது அந்த அந்த மாநில அரசின் வொர்கிங்க் கமிட்டி தான் முடிவு செய்யும். இப்போதும் அப்படித் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஷயமே இல்லாமல் ஒண்ணுமே இல்லாததொரு விஷயத்தை மோதி அரசு வேணும்னு செய்திருக்காப்போல் கண்டனங்கள் வருவதைத் தான் கண்டிக்கணும். :))))) எதுக்குத் தான் கூவறதுனு ஒரு வியவஸ்தையே இல்லாமல் போச்சு! :)))  இது பொங்கலுக்கு மட்டும்னு இல்லை, ஓணம்  போன்ற பண்டிகைகளுக்கும் பொருந்தும்.   தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், குருநானக் ஜயந்தி, மஹாவீர் ஜயந்தி, புத்த பூர்ணிமா, தசரா ஆகியன கட்டாய விடுமுறை நாட்களில்  சேர்க்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் ஓணத்துக்கு ரெஸ்டிரிக்டட் விடுமுறை தான்! அதே போல் பொங்கலும். இதுக்குப் போய்ப் பொங்கலுக்கு முன்னாடியே பொங்கல் வைக்கலாமா? :)))

28 comments:

  1. உண்மைதான். இது அந்தந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்குத் தெரியும். அன்புமணி ராமதாஸ் கூடச் சொல்லியிருந்தார்.

    நேற்றைய செய்தி. மத்திய அரசு பொங்கலை கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்து விட்டது. தசரா விடுமுறைக்கு பதிலாக!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அரசியல் கட்சிகள் பலவும் இதற்காகப் போராட்டங்கள் எல்லாம் அறிவித்திருக்கின்றனர்! :) என்ன ஒரு சோகம்னா இப்போப் பொங்கலுக்காகக் கட்டாய விடுமுறை தமிழ்நாடு அரசின் விடுமுறையை ஒட்டி எடுத்துக் கொண்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அப்படி எடுக்க முடியாது. ஏனெனில் பொது விடுமுறையில் சேர்த்து விட்டதால் அந்தக் கட்டாய விடுமுறையை இப்போ எடுக்க முடியாது. ஆக மொத்தம் அரசியல்வாதிகளின் இந்தப் போராட்டத்தினால் நஷ்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கே! பல மத்திய அரசு ஊழியர்களின் புலம்பலும் முகநூலில் வந்திருக்கின்றன! :))))) அடிப்படை கூடத் தெரியாமல் போராட்டம் நடத்த நம்மை மிஞ்ச ஆள் இல்லை!

      Delete
  2. பல வருடங்களாகவே பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் கிடையாது.

    அந்தந்த மாநிலத்தின் முக்கிய பண்டிகை தினங்களை விடுமுறையாக வைத்துக் கொள்பதற்கு மூன்று தினங்களை அந்தந்த மாநிலமே முடிவு செய்யும் வசதி பல வருடங்களாக இருக்கிறது.

    பெரும்பாலான பொங்கல் நாட்களில் நானும் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன் - தலைநகர் தில்லியில் விடுமுறை கிடையாது என்பதால்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இனிமேல் விடுமுறை கிடைக்கும். :)))) ஹிஹிஹி

      Delete
  3. விளக்கம் நன்று

    ReplyDelete
  4. நல்ல அலசல்...

    எல்லாத்தயும் தப்பும், தவறுமாக பரப்புவதே இந்த ஊடகங்களின் வேலை ஆய்டுச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஊடகங்களுக்குப் பிரசாரம் செய்யத் தீனி வேண்டும்! :)

      Delete
    2. "எல்லாத்தையும் தப்பும், தவறுமாகப் பரப்புவதே
      இந்த ஊடகங்களின் வேலை ஆய்டுச்சு..." என்பதை
      வரவேற்கிறேன்...
      ஊடகங்களுக்கு எப்பதான் சமூகப் பொறுப்பு வருமோ?

      Delete
    3. ஆமாம். ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. :(

      Delete
  5. Yes.
    Pongal is not celebrated in Kerala or Karnataka, our neighboring states. it's not a holiday there too

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் ராஜஸ்தானில் நாங்க இருந்த ஏழு வருடங்களிலும் பொங்கல் அன்று மகர சங்க்ராந்தி என்பதால் மாநில அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் உத்தரப் பிரதேசத்திலும் கங்கைக்கரையில் மகர சங்க்ராந்தி கொண்டாடப்படும் என்பதால் அங்கேயும் மாநில அரசு விடுமுறை நாள்.

      Delete
  6. 365 நாட்களும் 24 மணி நேரங்களும் இரயிலும், பஸ் போன்ற இதர வாகனங்களும் ஓடிக்கொண்டேதான் உள்ளன.

    அதுபோல (அரசாங்க + தனியார்) அனைத்து அலுவலகங்களும், அனைத்து வியாபாரிகளின் கடைகளும், தொழிற்சாலைகளும், மருத்துவமனைகளும் விடுமுறை ஏதும் இன்றி இரவு பகல் எப்போதுமே, மூன்று ஷிப்ட் போட்டு இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அப்போதுதான் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும். உற்பத்தி அதிகரிக்கும். எங்கும் எதிலும் ஓர் சுறுசுறுப்பு ஏற்படும்.

    ‘இன்று விடுமுறை’ ‘இன்று இந்தப்பகுதி இயங்காது’ என்ற வெறுப்பேற்றக்கூடிய வாசகங்களைக் கண்ணால் காணாமல் நிம்மதியாக மக்களும் இருக்க முடியும்.

    பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அவரவர் விருப்பப்படி OPTIONAL HOLIDAYS + WEEKLY ONE DAY OFF கொடுத்து விடலாம். ஆனால் எல்லா நிறுவனங்களும் எப்போதும் விடுமுறை ஏதும் இன்றி இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

    இதுபோன்ற விடுமுறையற்ற தொடர்ச்சியான கடும் உழைப்புகள் இருந்தால் மட்டுமே இந்தியா வல்லரசாக மாற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு விளக்கம். நீங்க சொன்னது போல் சேவை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை என்பதே இல்லையே. முக்கியமாகப் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான சேவை! காய்கறிக்கடைகள், பால் விநியோகம்! இவங்களுக்கெல்லாம் மட்டும் பொங்கலோ,தீபாவளியோ மற்றப் பண்டிகைகளோ இல்லையா என்ன? இவங்க ஒரு நாள் கடையை மூடட்டும்! அப்போத் தெரியும் உண்மையான பிரச்னை என்னனு! :(((

      Delete
  7. அமெரிக்கா​ போனவுடன் இந்திய பிரச்சினைகளை எழுத மாட்டீர்கள் என்று நினைத்தால் அங்கேயும் மோடிக்கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள். உங்களை ஹூஸ்டனில் இந்திய தூதராக மோடி நியமித்திருக்கிறார் போலும்.
    எப்போதும் மத்திய அரசு ஆண்டு விடுமுறைகள் 17. இதில் 14 கட்டாய விடுமுறைகள். அவை பின்வருமாறு.

    It consists of holidays which have to be observed compulsorily across India.[9] These holidays are:

    Republic Day,
    Independence Day,
    Gandhi Jayanti
    Mahavir Jayanti
    Budha Purnima
    Christmas Day
    Dussehra
    Diwali (Deepavali)
    Good Friday
    Guru Nanak's Birthday
    Eid ul-Fitr
    Eid al-Adha (Bakrid)
    Muharram
    Prophet Mohammad's Birthday (Id-e-Milad)

    n addition to the above 14 Compulsory holidays mentioned three holidays are decided from the list indicated below by the Central Government Employees Welfare Coordination Committee in the State Capitals

    An additional day for Dussehra
    Holi
    Janamashtami (Vaishanvi)
    Ram Navami
    Maha Shivratri
    Ganesh Chaturthi / Vinayak Chaturthi
    Makar Sankrantili
    Onam
    Sri Panchami / Basanta Panchami
    Vishu / Vaisakhi / Vaisakhadi / Bhag

    தேசிய விடுமுறைகள்.

    1. சுதந்திர தினம்.
    2. குடியரசு தினம்.
    3. மகாத்மா காந்தி பிறந்த தினம்.
    மத சார்புடைய விடுமுறைகள்.
    கிறிஸ்தவர்
    4. கிருஸ்து பிறப்பு.
    5. தூய வெள்ளி.
    புத்த மதம்
    6. புத்த பௌர்ணமி. (வைகாசி விசாகம்)
    ஜைன மதம்
    7.மஹாவீரர் பிறந்த தினம்.
    சீக்கிய மதம்.
    8. குரு நானக் பிறந்த தினம்.
    இஸ்லாம் மதம்.
    9. முகரம்
    10. ரம்ஜான்
    11.பக்ரீத்
    12. முஹம்மது நபி பிறந்த தினம்.
    இந்து மதம்
    13. தசரா
    14. தீபாவளி.

    இது தவிர 3 பொது கட்டாய விடுமுறைகள் ஒரு பட்டியலில் இருந்து அந்த அந்த மாநில மத்திய அரசு ஊழியர் நல குழு எனப்படும் அதிகாரிகள் ஊழியர்கள் கொண்ட குழு தேர்ந்து எடுத்து அந்த அந்த மாநிலங்களில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்.
    ​​இப்பட்டியலில் ​ஹோலி, பிஹு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, பொங்கல், விஷு, ஓணம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, சிவராத்திரி போன்றவை அடங்கும்.

    இதுவே முறை

    தற்போது எவ்வாறு இந்த முறை மாற்றப்பட்டது என்பது தெரியவில்லை. உங்களுக்கும் விவரமாக தெரியவில்லை.
    அதனால் தற்போது இது சரி, சரியில்லை என்று விவாதிக்கவில்லை.

    எனக்கு தோன்றுவது பொது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து 3 தேர்வு செய்யும்போது பொங்கல் விடுபபட்டுப் போயிருக்கலாம்.

    ரோஸ்டர் எனும் முறைப்படி வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை அல்லாது வேறு பொது விடுமுறை என்பது கிடையாது. பொது விடுமுறைகளில் அவர்கள் வேலை செய்தால் அது டபுள் டூட்டி என்று கனக்காக்கப்படும். அவர்கள் அதற்கு பிரதியுபகாரமாக overtime அல்லது விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி. என் கணவர் மத்திய அரசு ஊழியராக இருந்தே பணி ஓய்வு பெற்றதால் இந்த விபரங்கள் தெரியும். என்றாலும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த விடுமுறை குறித்த சர்க்குலர் செப்டெம்பர் மாதமே சுற்றுக்கு வந்த விபரங்கள் பல தினசரிகளிலும் பல நண்பர்கள் முகநூலிலும் பகிர்ந்திருந்ததோடு இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதையும் விளக்கி இருந்தார்கள். நானும் ஸ்டேட் வொர்க்கிங்க் கமிட்டியின் தீர்மானம் தான் இது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். இந்த விஷயத்துக்கு இது போதும் என்பதால் இவ்வளவு விபரங்கள் கொடுக்கவில்லை. வொர்க்கிங் கமிட்டியின் சர்க்குலரைப் பலரும் ஸ்கான் செய்தும் போட்டிருந்தார்கள். பொங்கல் இந்த முறை சனிக்கிழமை வார விடுமுறை நாளில் வந்ததால் அதைப்பொதுப்பட்டியிலில் சேர்க்கவில்லை. விஷயம் அவ்வளவே! எனினும் அன்று வேலை செய்யும் ஆபரேடிவ் ஊழியர்கள் வேறொரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னர் பொங்கலைச் சேர்த்ததும் மாநில வொர்க்கிங் கமிட்டி தான்! :))))) கடைசியில் சொல்லப்பட்டிருப்பது எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்பதையும் அறிவேன்.

      Delete
    2. மற்றபடி யு.எஸ்ஸில் இருந்தாலும் திரும்பி வரப்போவது இந்தியாவுக்குத் தான். இங்குள்ள பலரும் இந்தியாவின் அன்றாடப் பிரச்னைகள் மட்டுமல்லாது அரசியல் பிரச்னைகளிலும் ஆர்வம் காட்டியே வருகின்றனர். எல்லோரும் உடலளவில் இங்கே இருந்தாலும் மனத்தளவில் இந்தியராகவே இருக்கின்றனர். :)))))

      Delete
  8. இது எல்லாம் அரசியல் கீதா மேடம்... யார், எந்தத் தளம், பத்திரிகை என்று பார்த்தால் அதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாகத் தெரியும். அரசியல்வாதிகள், தங்கள் தங்கள் நிலைக்கு ஏற்ப ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கை விடுகிறார்கள். தமிழ் வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தைக்கு மாற்றியபோது இந்தமாதிரி எதிர்ப்புக்குரல் எழுந்ததில்லை. நல்லவேளை மீண்டும் சித்திரைக்கே மாற்றப்பட்டது. யாராவது ஆப்பரேடிவ் ஊழியர்களுக்கும் விடுமுறை வேண்டும் என்று போராடுகிறார்களா? விடுமுறையினால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்றால் ஏற்றுக்கொள்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆபரேடிவ் ஊழியர்களுக்கு மட்டும் பண்டிகைகளே இல்லையா என்ன? அதே போல் விடுமுறை என்பதால் எந்தப் பொருளும் கிடைக்காது என்றால் மட்டும் சும்மா இருப்பார்களா? எல்லாம் அரசியல் தான்! :(

      Delete
    2. ஆபரேடிவ் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணி செய்தால் O.T. உண்டு. இரண்டாவது தொலைபேசி இணைப்பகங்களில் ஷிப்ட் முறையில் பணிக்காலம் இருப்பதால், காலையில் பண்டிகையைக் கொண்டாடி விட்டு மாலையில் பணிக்கு வந்து விடலாம். ஓ.டி.க்கு ஓ.டி., ட்யூட்டிக்கு ட்யூட்டி. மதச் சார்பான பண்டிகைகளில் லீவு தேவையானவர்களுக்கு தங்கள் பணி நாளை லீவு தேவையில்லாதார்களுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. அதனால் பண்டிகை நாட்கள் எந்த இடையூறும் இல்லாமல் செளகரியமாகவே சென்றன.

      Delete
    3. உண்மை ஐயா. இது பொதுத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் அல்லவா! பொதுவாக மக்கள் எந்தவிதமான சிரமங்களும் படுவதாகச் சொல்வதில்லை. இந்த அரசியல்வாதிகள் கிளப்பி விடுவது தான் எல்லாமும். அதுவும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசு தான் காரணம் என்பார்கள்! :( இதைச் சுட்டிக் காட்டினால் மோதிக்குக் கொடி பிடிக்கிறேன் என்றும் மோதி அரசின் பிஆர் ஓஎன்றும் சொல்கின்றனர். உண்மையைக் கூடச் சொல்ல முடியாத நிலை. இத்தனைக்கும் அனைத்து ஊடகங்களும் பத்திரிகைகளும் மோதி அரசுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன! அப்படி இருக்கும்போதே இந்த மாதிரிச் சொல்றாங்க. :(

      Delete
  9. நேரம் கிடைக்கும்போது வைத்துவிடவேண்டியதுதான் பொங்கலை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நேரம் பார்த்துத் தானே ஐயா பொங்கல் வைப்பாங்க! :)

      Delete
  10. அறியாமை...
    அறியாமை...
    அறியாமை...

    ReplyDelete
  11. "எல்லாத்தையும் தப்பும், தவறுமாகப் பரப்புவதே
    இந்த ஊடகங்களின் வேலை ஆய்டுச்சு..." என்பதை
    வரவேற்கிறேன்...
    ஊடகங்களுக்கு எப்பதான் சமூகப் பொறுப்பு வருமோ?

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி.

      Delete
  12. எல்லாமே அரசியல்தானே இங்கு. எதில் இல்லை அரசியல் சொல்லுங்கள். இந்தப் புத்தியை ப்ரொடக்டிவாக செலவழித்தால் நல்லது நடக்கும் இந்தியாவும் முன்னேறும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். அந்த மாதிரி ஆரம்பத்திலே இருந்தே இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்போம். :(

      Delete