நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது என்பதைச் சொல்ல பள்ளித் தலைமை ஆசிரியை மேடை நோக்கிச் செல்கிறார். இந்த மாபெரும் அறை பள்ளியின் ஜிம்னாசியம் என்னும் உடற் பயிற்சிக் கூடம். அங்கே இருந்த சின்ன மேடையில் தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமருவதற்கு நாற்காலிகள் போடப்படவில்லை. எல்லோரும் கூட்டமாக நின்று கொண்டு தான் பார்க்க வேண்டி இருந்தது. அப்புறமா எங்க மாப்பிள்ளை எங்கிருந்தோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து எங்களுக்கு அமரக் கொடுத்தார். ஆனாலும் முன்னால் எல்லாரும் அமர்ந்திருந்ததோடு குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்! படம் எடுக்கையில் கையைத் தட்டி விட்டுக் கொண்டு செல்வார்கள். :) இல்லைனா நமக்கு நேரே நின்று கொண்டு மறைப்பார்கள். :)
இது சீனக்குழந்தைகள் அவர்கள் மொழியில் உள்ள தேசியப் பாட்டுக்குப் பிடித்த அபிநயம். எல்லாக் குழந்தைகளும் நன்றாகச் செய்தார்கள்.
கீழே காண்பது டேக் வான்டோ என்னும் ஜப்பானிய/கொரிய கராத்தே (?) பயிற்சி முறை. அதில் கையில் வேல் போன்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர் தான் பயிற்சியாளர் என்பதோடு கடைசியில் ஒரு ஆட்டம் ஆடிக் காட்டினார் பாருங்க! அதைப் படம் எடுக்கும் முயற்சியில் அங்கேயும் இங்கேயும் போனது தான் மிச்சம்! :(
சிறுவர்கள் நன்றாக டேக் வான்டோ பயிற்சிகளைச் செய்து காட்டினார்கள். நம்ம அப்புவும் கொஞ்ச நாட்கள் போய்க் கொண்டிருந்தாள். பின்னர் அவளால் முடியலை என்பதால் நிறுத்தி விட்டாள்.
இது யு.எஸ். அமெரிக்கக் குழந்தைகள் என நினைக்கிறேன். அல்லது ஸ்விட்சர்லாந்தாக இருக்கலாம். அறிவிப்புச் செய்தது சரியாகக் காதில் விழவில்லை. :(
இந்தியக் குழந்தைகள் "ஜய ஹோ!" பாடலுக்கு ஆடினார்கள். மூவர்ணக் கொடியை நினைவூட்டும் வண்ணம் உடை அணிந்திருந்தார்கள். முதலில் ஆரஞ்சு, பின்னர் வெண்மை, பின்னர் பச்சை. நடுவில் நீல நிறச் சக்கரத்துக்கு ஒரு பையர். இந்தப் பாடலுக்கு ஆடிப்பாடச் சொல்லிக் கொடுத்தது ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த லாவண்யா என்னும் ஒரு பெண்மணி ஆவார். அவரை இன்னும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருக்குப் பல்வேறு கலைகள் தெரிந்திருப்பதால் அவற்றில் வேலை மும்முரமாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக எங்க பொண்ணு வேலை செய்தாள். பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவரவர் வீட்டிலிருந்து முடிந்த பொருட்களை எடுத்து வந்து அழகு செய்து பெரிய கோலம் போட்டு, வந்தவர்களில் விருப்பப் பட்டவர்களுக்கு மெஹந்தி கையில் இட்டுவிட்டு என்று எல்லாமும் செய்தார்கள். எல்லோருமே அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள்! என்றாலும் பிறந்த மண்ணை மறக்காமல் குழந்தைகளுக்கும் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்தியக்குழந்தைகள் ஆடியதோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. கடைசியில் ஒரு ஊர்வலமாக எல்லா நாட்டுக் குழந்தைகளும் அவரவர் கொடியை ஏந்தி வந்தார்கள்.
இந்தியா என்பதற்குப் பொருளை ஆங்கிலத்தில் வாட்சப் குழுவில் பார்த்தேன்.
INDIA Independent Nation Declared in August என்று பொருளாம். Independent Nation Divided in August என்றும் சொல்லலாமே எனத் தோன்றியது!
எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக மேடையில்
காயோ, கனியோ, சமையலோ, சாப்பாடோ இந்தியாவில் செய்யும் ருசியில் இங்கு அமைவதில்லை என்றே சொல்ல வேண்டும். பொருட்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. எல்லாமும் கிடைக்கிறது. என்றாலும் நம் நாட்டு மண்ணின் ருசி இதில் இல்லை தான்!
வந்தேமாதரம்!
வந்தே மாதரம்.....
ReplyDeleteநிகழ்வுகளை இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாங்க வெங்கட், உங்க பதிவுகளுக்கும் வரணும்! :) ரொம்ப வேகமாப் போடறீங்க போல! திருஷ்டி படப் போறது!:)
Delete//பிறந்த மண்ணை மறக்காமல் குழந்தைகளுக்கும் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர்//
ReplyDeleteஉண்மை இந்தியாவில் வாழும் பொழுது மறந்து விடுகின்றனர் என்பதும் உண்மை
ஆமாம், சுடும் உண்மை! :(
Deleteபகிர்வுக்கு நன்றி! இந்தியாவை மறக்காத நெஞ்சங்களுக்கு நன்றி!
ReplyDeleteசில புகைப்படங்கள் தெரியவில்லை.
"Independent Nation Declared in August" பாகிஸ்தானுக்கும் பொருந்தும் தானே!! கூகிளார் ஆகஸ்டில் சுதந்தர நாளைக் கொண்டாடும் நாடுகளுக்கு பெரிய லிஸ்டே தரார்!! நீங்கள் சொன்ன டிவைடட் தான் பொருந்தும்!!
எந்தப் படங்கள்னு தெரியலை. மத்தவங்க யாரும் சொல்லவும் இல்லை. கேட்டுப் பார்க்கிறேன்.
Deleteவந்தே மாதரம்
ReplyDeleteநாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது? சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா!
ReplyDeleteசுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்.
நம் நாடு தான் நமக்கு சொர்க்கம்! :)
Deleteஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது...அருமையான விழா நிகழ்வுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅதனால் என்ன! மெதுவா வாங்க! அவசரமே இல்லை!
Delete
ReplyDelete"பொருட்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. எல்லாமும் கிடைக்கிறது. என்றாலும் நம் நாட்டு மண்ணின் ருசி இதில் இல்லை தான்!"--இதை புரிந்துகொள்ள முடியாகிவில்லை ..தாங்கள் கைப்பக்குவத்தில் கூடவா?
மாலி
என்னதான் சமைச்சாலும் ருசியில் மாறுபாடு இருக்கத் தான் செய்கிறது. பழங்கள், காய்கள் எல்லாமும்! சமையலில் கூட. இதே சமையல் அமெரிக்காவின் டெனிசி மாகாணத்தின் மெம்பிஸில் இருக்கிறமாதிரி இங்கே ஹூஸ்டனில் இல்லை. ஆனால் இங்குள்ளவர்கள் பொருட்படுத்துவதில்லை. அவங்களுக்கு இதுவே அமிர்தம்! :))))
Deleteபார்க்கப் பளிச்சுனு பொருட்கள் இருந்தாலும் அதில் மண்ணின் மணம் இருப்பதில்லை! இந்தியா ஸ்டோரிலிருந்து தேங்காய் வாங்கி வந்தா எங்க பொண்ணு. இது நன்றாக இருக்கும்னு சொல்லவும் சொன்னாள். ஆனால் அந்தத் தேங்காயும் கொஞ்சம் போல் காரல் வாசனை வரத் தான் செய்கிறது. மற்ற அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளின் தேங்காயைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இளநீரிலும் தித்திப்பு இருக்காது. இங்கே கோகனட் வாட்டர் என்று டின்களில் அடைத்து விற்பதைப் பையர் நிறைய வாங்கி வைத்திருந்தார். ஒன்று எடுத்துக் குடித்துப் பார்த்தால்! கடவுளே! :( நம்ம ஊரின் இளநீரின் சுவைக்கு உறைபோடக் காணாது!
ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி. சாப்பாட்டின் ருசி மண்ணைப் பொறுத்தது. இதுனாலதான், திருநெவேலி அல்வா போன்று பல உணவுகள் மற்ற இடங்களில் அதே சுவையைத் தருவதில்லை. சரவணபவனும் அதே கதைதான்.
ReplyDeleteநன்றி நெல்லைத் தமிழன், மண்ணின் மணமே தனி தான். சரவண பவன் எப்போவோ ஒரே முறை போனேன். க்ளூகோஸ் டாலரன்ட் டெஸ்ட் முடிஞ்சு சாப்பிட! இட்லி மட்டும் தான் சாப்பிட்டேன். ஸ்டிக்கர் பொட்டு சைசுக்கு நாலு இட்லி 75 ரூபாயோ என்னமோ! :(
Deleteநல்ல விவரணம்! பிறந்த வீடு பிறந்த வீடுதான்! இங்கிருக்கும் போது நம் கதைகள், கலாச்சாரம் கற்றுக் கொடுக்காத நம்மவர்கள் வெளிநாடு செல்லும் போது கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதைப் பல குடும்பங்களில் காண முடிகிறது. ஆனால் கேரளத்தில் இங்கும் சரி எங்கு சென்றாலும் சரி அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை...
ReplyDeleteகீதா: எனக்கோ மணமே தெரியாது என்பதால் எந்த ஊருக்குப் போனாலும் ஒரே போன்றுதான் ஹிஹிஹிஹி...
வாங்க துளசிதரன், கேரளம் மட்டும் இல்லை. இந்த விஷயத்தில் குஜராத்தியர்களும், வங்காளிகளும் கூட உண்டு. அதிலும் குஜராத்தியரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்போதெல்லாம் ஆந்திரர்கள் இந்தப் பட்டியலில் வருகின்றனர். :)
Deleteவாங்க கீதா, ஹிஹிஹி, கொடுத்து வைச்சிருக்கீங்க போல! நம்மைப் போல நாக்கு நாலு முழம் இல்லை! :)
அமெரிக்காவில் எங்கு போனாலும் இந்தியப் பொருட்களும் காய்கறிகளும் கிடைப்பதைச் சொல்லவேண்டும். சுவை என்பது அவரவர்களின் தனிப்பட உணர்வு. பெரும்பாலும் இங்குள்ள காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளே என்பதால் நிச்சயம் சுவையில் வித்தியாசம் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
எங்க பெண்ணும் சரி, பையரும் சரி ஆர்கானிக் காய்களையே வாங்குகின்றனர். கொஞ்சம் விலை கூடத் தான்! என்றாலும் அது தான் வாங்கறாங்க. பால் கூட ஆர்கானிக் பால் தான். இப்போ whole foods store இல் பச்சைப் புல் தின்னும் மாட்டுப் பாலும் கிடைப்பதாகச் சொல்கின்றனர். :) எல்லோரும் இந்திய முறைக்குத் திரும்ப இந்தியாவில் நவீனம் என்னும் போர்வையில் மரபணு மாற்றப்பட்ட பழங்கள், காய்கள்! இன்னும் மாற்றங்கள் வரவே இல்லை! :)))) திருச்சி போன்ற நகரங்களில் காய்களைச்சாப்பிட்டு விட்டுச் சென்னையில் சாப்பிடும்போதே வித்தியாசம் தெரியும்! :)
Delete