எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 25, 2017

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்! கொடைக்கானல்!

மறுநாள் காலை விரைவில் எழுந்து குளித்துத் தயார் ஆனாலும் காலை உணவு ஏழரைமணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ஆகவே காத்திருந்தோம். இரண்டு இட்லியாவது சாப்பிடலாமே! அதே போல் காத்திருந்த பின்னர் இட்லி, தோசை கிடைத்தன. சுமாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டுக் குழந்தை வேலப்பர் கோயிலுக்குப் பயணித்தோம். போகும் வழியில் இப்போது புதிதாகக் கட்டி இருக்கும் மஹாலக்ஷ்மி கோயிலையும் பார்த்துக் கொண்டு போகும்படி கோமதி அரசு சொல்லி இருந்தார். ஆகவே போகும் வழியிலேயே மஹாலக்ஷ்மி கோயிலைப் பார்த்ததும் கீழே இறங்கினோம்.


இந்தப் படம் ஏற்கெனவே போட்டிருக்கேன். மஹாலக்ஷ்மி கோயிலுக்குப் போகும் வழி இது. கொஞ்சம் உயரமான இடத்தில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. நாங்க போனப்போ இளம் பட்டாசாரியார் அபிஷேஹ, ஆராதனைகள் செய்து கொண்டிருந்தார். படம் எடுக்க வேண்டிக் காமிராவை எடுத்தேன் பாருங்க, ஒரு முறை முறைச்சார். காமிராவை உள்ளேயே வைச்சுட்டேன். :))) ஆனால் அங்கே குளிச்சு முடிச்சு ஜம்ம்னு உட்கார்ந்திருந்தார் நம்ம நண்பர். அவரை அந்த பட்டாசாரியாருக்குத் தெரியாமல் ஒரு படம் எடுத்துட்டேன். அது கீழே!



பொறுப்புத் துறப்பு! :--
கீழேயும் மஹாலக்ஷ்மி கோயில் படம் தான். அது வண்ணம் பளிச்சிட்டால் பொறுப்பு என்னுடையது அல்ல! படம் நம்ம நெல்லைத் தமிழருடையது! :)



இதுவும் அவருடையதே! இது மஹாலக்ஷ்மி சந்நிதி!



மஹாலக்ஷ்மியைப் பார்த்துட்டுப் பூம்பாறை நோக்கிப் பயணித்தோம். அங்கே போகரால் செய்யப்பட்ட நவபாஷாணச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம். போகர் மூன்று சிலைகள் செய்தாராம். அவற்றில் முதலில் இங்கே வைக்கப்பட்டிருக்கும் சிலை என்றும் அடுத்து ஒரு சிலை இதே மலையில் யார் வீட்டிலோ வைத்து வணங்கப்படுவதாயும் சொல்கின்றனர். மூன்றாவது சிலையைத் தான் போகர் பழநிமலையில் வைத்தாராம். கிட்டத்தட்டப் பழநி மலை பாலதண்டாயுதபாணியைப் போலவே இங்கேயும் முருகன் சிலை. ஆனால் ரொம்பக் குழந்தை என்பதாக எனக்குத் தோன்றியது. முருகன் பெயரே குழந்தை வேலப்பன். இங்குள்ள கிராம மக்கள் அனைவருக்கும் அவனே குழந்தையாக இருக்கின்றான்.  பூம்பாறை போகும் வழியில் அடுக்கடுக்காகப் பாசன வயல்கள்.

படங்களுக்குப் பொறுப்பு, நெல்லைத் தமிழர்! என்னோட படங்களெல்லாம் பத்திரமாக இருக்கின்றன! :)







கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலையில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். இது முருகன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் கோலத்துடன் போகரால் வடிக்கப்பட்ட நவபாஷாண விக்ரஹம். பழனி முருகன் பழத்துக்காகக் கோவிச்சுண்டு போனப்போ, (ஹிஹிஹி, அது சரி இல்லைனு பலரும் சொல்வாங்க என்றாலும் இதானே வெகுஜன வாக்கு!) முதல்லே இங்கே தான் வந்து உட்கார்ந்துண்டாராம். கிட்டத்தட்டப் பழனியில் மேல் மலையில் காட்சி அளிப்பதைப் போலவே இங்கேயும் காட்சி அளிக்கிறார். ஆனால் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்யலாம் யாரும் போ, போனு விரட்டுவதில்லை. சிறப்புத் தரிசனம் கிடையாது. நாங்க போனப்போ யாரோ அபிஷேஹம் செய்து பிரசாத விநியோகங்கள் நடந்து கொண்டிருந்தது.

அதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் நாங்கள் தரிசிப்பதில் எவ்விதமான தடையும் இல்லை. பஞ்சாமிர்தப் பிரசாதம், அபிஷேஹ விபூதிப் பிரசாதம், தேனும், தினைமாவும் என்று கிடைத்த பிரசாதங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம். கோயில் அமைதியான சூழ்நிலையில் சுத்தமான சுகாதாரமான பராமரிப்பில் இருக்கிறது.

குழந்தை வேலப்பர் கோயிலில் படம் எடுக்கத் தடா! :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக் கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. இங்கே அது மாதிரி சொல்லலை! ஆனாலும் காமிராவை வெளியே எடுத்தால் சத்தம் போட்டாங்க!  அங்கே ஒரு பெண்மணி தேனும், தினைமாவும் கலந்து முருகனுக்கு நிவேதனம் செய்ததை விநியோகம் செய்து கொண்டிருந்தார். நான் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டிருந்ததால் அதைச் சாப்பிட்டுவிட்டுத் தினைமாவுக்கு வர இருந்தேன்.

ஆனால் நம்ம ரங்க்ஸ் போய்த் தினைமாவு வாங்கிட்டார். ஆகவே எனக்கும் சேர்த்து வாங்கி இருப்பார்னு நினைச்சுக் கையை நீட்டினால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவரே சாப்பிட்டுட்டார். கோபத்துடன் மீண்டும் அந்த அம்மாவிடம் போனால் தீர்ந்து போச்சுனு சொல்லிட்டாங்க. முருகனையே கோவிச்சுண்டு திட்டிட்டுப் பிரகாரத்தைச் சுத்திட்டுக்கையைக் கழுவிக்கொண்டு விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். என்னிடம் தினைமாவு தீர்ந்து போச்சுனு சொன்ன அம்மா அங்கே மீண்டும் விநியோகிக்க, ஆஹானு ஓடியே போனேன். என்னைக் கண்ட அந்த அம்மா வீட்டுக்கு எடுத்துப் போக நினைச்சேன். ஏனோ தெரியலை, வேண்டாம்னு தோணவே இங்கேயே விநியோகிக்கிறேன்னு சொல்லிட்டு எனக்கும் ஒரு உருண்டை கொடுத்தாங்க. அப்பாடா! கோயிலுக்கு வந்த நோக்கமே நிறைவேறினாப்போல் ஓர் திருப்தி! ரங்க்ஸுக்கு ஆச்சரியம்!

"உனக்குக் கிடக்கணும்னு இருக்கு பாரு! இல்லைனா தீர்ந்து போச்சுனு அந்த அம்மா சொல்லிட்டுப் பாத்திரத்தையும் கழுவினாங்க! இப்போ திடீர்னு என்னவோ தோணிக் கொடுத்திருக்காங்க!" அப்படினு சொன்னார். இப்படித் தான் எனக்குக் கிடைக்கவே கிடைக்காது என நினைத்தக் கயிலை யாத்திரையும் எனக்குக் கிடைத்தது என் நினைவில் வரவே அப்பாவும், பிள்ளையுமாகச் சேர்ந்து எனக்குப் புரிந்த அருளில் கண்ணீரே வந்தது.  திருக்கயிலைக்கு ரங்க்ஸ் மட்டும் தான் போகறதா இருந்தார். என்னை அழைத்துச் செல்ல அவருக்கு இஷ்டமே இல்லை. ஆனால் அந்தப் பிரயாணத்தை ஏற்பாடு செய்தவர்கள் விடாப்பிடியாக என்னுடைய பாஸ்போர்ட்டையும் வாங்கிப் போய் எனக்கும் சேர்த்து விசாவாங்கி எனக்கும் சேர்த்துப் பயணச்சீட்டுப் போட்டு உறுதி செய்து கொண்டு வந்து விட்டார்கள். ஆகவே எனக்குக் கயிலை நாதனின் அருளால் அந்தப் பிரயாணம் கிடைத்தது. அதே போல் இப்போத் தினைமாவும் முருகன் அருளால் கிடைத்தது.


22 comments:

  1. நெல்லைத்தமிழருடைய படங்கள் எல்லாம் தெரியவே இல்லை. இப்படியா பொறுப்பை முற்றிலும் துறப்பது!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அட? என்ன பிரச்னைனு தெரியலை. மறுபடி பார்க்கிறேன். :(

      Delete
  2. தேனும் தினை மாவும் ஆஹா என்ன ருசி! உங்கள் மூலம் குழந்தை வேலப்பர் தரிசனமும் ஆச்சு....

    படங்கள் பலவும் தெரியவில்லை. இணைத்ததில் பிரச்சனை இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், அப்படியா, எனக்கு எல்லாப் படங்களும் தெரிகின்றன. இருந்தாலும் நீக்கிவிட்டு மறுபடி இணைத்துப் பார்க்கிறேன். நன்றி வெங்கட்.

      Delete
  3. ஶ்ரீராம், வெங்கட், முன்னேயும் எனக்குப் படங்கள் தெரிந்தன. இப்போதும் தெரிகின்றன. யாரானும் பார்த்துட்டுச் சொல்லவும். இப்போ மறுபடி இணைத்திருக்கிறேன். :)

    ReplyDelete
  4. பட்டாச்சார்யாவுக்கு தெரியாமலேயே ஸூப்பராக சுட்டு விட்டீர்களே...
    எனக்கு படங்கள் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.

      Delete
  5. கோவிலும், படங்களும் ஆஹா அழகு..

    ReplyDelete
  6. குழந்தை வேலப்பர் சன்னிதியில் பஞ்சாமிருதப் பிரசாதம் கிடைத்ததா. அதுல தேனும் தினைமாவும்வேற.. அதிருஷ்டம்தான். நான் அங்கே சென்றபோது ஷார்ட்ஸில் சென்றிருந்ததால், அங்கேயே வேஷ்டி வாங்கியபின் தரிசனத்துக்குச் செல்ல நேர்ந்தது. அமைதியான கோவில்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அன்னைக்கு யாரோ சிறப்பு அபிஷேஹம் செய்திருந்தார்கள். ஆகவே பஞ்சாமிர்தம் கிடைத்தது. பின்னர் தேனும் தினைமாவும்!:)

      Delete
  7. தேனும் தினைமாவும் நாவில் நீர்! (கீதா: வீட்டில் அடிக்கடிச் செய்வதுண்டு.! என்றாலும் பிரசாதம் பிரசாதம்தான்)

    படங்கள் முதலில் தெரியாமல் இருந்தன. அப்புறம் கமென்ட் அடிக்க வந்த போது வந்துவிட்டன!! மலை அழகு!!

    ReplyDelete
    Replies
    1. நான் தேனும் தினைமாவும் அந்தக் கோயிலில் தான் முதல் முறை சாப்பிட்டேன். தினைமாவில் தோசை, பொங்கல், அப்பம், குழி அப்பம், அடை என்று செய்தது உண்டு. :)

      Delete
  8. இந்தக் கோவில் சென்றதில்லை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், அப்படியா?

      Delete
  9. இந்த கோவிிலைப் பற்றி முதல் முறையாக கேள்வி படுகிறேன். முருகன் அருள் இருந்தால் தரிசனமும், தேன்,தினை
    மாவும் கிடைக்கும். படங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே அன்று தினைமாவு கிடைக்காதது வருத்தமாகவே இருந்தது. அப்புறமா அதே அம்மாவிடம் இருந்து வாங்கிண்டதும் ஏதோ அவார்டே கிடைச்சாப்போல் ஒரு எண்ணம்! :)

      Delete
  10. பஞ்சாமிருததீர்த்தம் எப்போதும் உண்டு இந்த கோவிலில், அதுதான் இக் கோவிலின் சிறப்பு என்று குருக்கள் சொன்னார். பஞ்சாமிருத தீர்த்தம் கொடுத்தாரா?
    நெல்லை தமிழன் அவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பஞ்சாமிர்தம் கிடைச்சது.பஞ்சாமிருத தீர்த்தம்? தெரியலை அல்லது எனக்குப் புரியலை! ஒரு பெரியவர் (உண்மையில் வயசில் எங்களை விடச் சின்னவர் தக்ஷிணாமூர்த்தி போல!) எங்களுக்கெல்லாம் விபூதிப் பிரசாதமும், தீர்த்தமும் கொடுத்தார். இறையருளில் மூழ்கியவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. திருப்புகழ் சபையைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

      Delete
    2. இந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு ஆச்சரியப்படத் தக்க ஒற்றுமை என்னவெனில் பிரசாதம் கொடுக்கும்போது இரு கைகளையும் நீட்டிப் பணிவுடன் குனிந்து வாங்கச் சொல்லுவது தான். இதே தான் அமிர்தசரஸில் பொற்கோயிலிலும் கடைப்பிடிக்கச் சொல்வது. இப்படி நம் இந்தியா முழுமையிலும் உள்ள பல கோயில்களிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதையும் கண்டு வருகிறேன். அவன் கொடுத்த உணவு! நாம் பணிவுடனும் விநயத்துடனும் வாங்க வேண்டும். என்றென்றும் நாம் பிச்சைக்காரர்கள் தாம் என்பதை நமக்கு உணர்த்துவதும் கூட!

      Delete
  11. வணக்கம்.இங்கு சிவன் சந்நிதி உள்ளதா?குழந்தை வேலப்பர் சிலை நவ பாடானத்தில் ஆனது என்பது செவி வழி சைதியா? பழனி கோவிலில் இரவு பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டு, காலையில் திறக்கும் பொழுது வெப்பமாக இருப்பதாக சொல்லுவார்கள்( நவ பாடானத்தால்). இந்த கோவிலிலும் அவ்வாறு இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு சுப்ரமணியன், இங்கு குழந்தை வேலப்பர் சிலை நவ பாஷாணத்தால் ஆனது தான். போகர் செய்த 3 சிலைகளில் முதலாவது இங்கும், இரண்டாவது இங்கிருந்து அருகிலுள்ள ஓர் இடத்திலும் மூன்றாவது பழநியிலும் வைக்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். மற்றபடி வெப்பம் குறித்தெல்லாம் அறியவில்லை.

      Delete