எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 14, 2017

யார் யார் யார் இவர் யாரோ? ஊர், பேர் தான் தெரியாதோ! 2

"சரி, சந்தேகப்படல்லே. கோயில்லே அப்போ என் பிரெண்டு யாரோ இருந்தான்னு அளகேசன் சொன்னாராமே? அவன் யாருன்னாவது சொல்லு!"

வசு அழ ஆரம்பித்தாள். முந்தானையைப் பந்தாய் வாயில் அடைத்தபடி கீழே ஓடினாள். அறைக்கதவை மூடிக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.//

மேலே உள்ளவை நமக்கெல்லாம் மிகத் தெரிந்த ஒருவரின் கதையில் வருபவை. இவற்றிற்குப் பலரும் விமரிசனங்கள் எழுதி உள்ளனர். யார், யார்னு எல்லாம் சொன்னால் எழுத்தாளர் யாருனு புரிஞ்சுடுமே! அதனால் சொல்ல மாட்டேனே! இப்போ நீங்க செய்ய வேண்டியது என்னன்னா எழுத்தாளர் யாருனு மட்டும் சொன்னாப் போதாதாக்கும்! இந்தக் கதையோட பெயரையும் சொல்லணுமாக்கும்! ஹிஹிஹி, இந்த உரையாடல் வரும் சம்பவம் பத்தியும் சொன்னால் இன்னும் சிலாக்கியம்.

அடுத்து இன்னொண்ணு! அநேகமா நெ.த. சரியாச் சொல்லிடுவார்னு நினைக்கிறேன். அவர் பிசியா இல்லைனா உடனே பதில் வரும்னு எதிர்பார்க்கிறேன். அவருக்கு மிகவும் தெரிந்த எழுத்தாளரோடது தான் அடுத்து வருவதும்! அந்தப் புத்தகம் பெயர், எழுத்தாளர் பெயர், மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை/கதையின் தலைப்பு எல்லாமும் சொல்லணும். அப்போத் தான் பாஸ்! இல்லைனா ஃபெயில்! :)

"நான் செங்கல்பட்டு வாசி. சென்னைக்குப் போய்வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்றுப் பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.

மேரிஸ் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடைசி வரிசையில் நிற்கத்தான் இடம் கிடைத்தது. மீட்டிங் முடிந்து வெளியே வந்த தேவனைமிக அருகில்சில நிமிடங்கள் பார்த்துப் பரவசம் அடைந்தேன். மாரிஸ் மைனர் காரில் விகடன் எழுத்தாளர் கோபுவைத் தன்னுடன் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். //


இதை எழுதினவங்க இரண்டு பேரும் வலை உலகில் தீவிரமான ஈடுபாட்டுடன் இருப்பதால் அவங்க இந்தப் பதிவைப் பார்த்தாலும் பதில் சொல்லக் கூடாது எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றியோ நன்றி 

47 comments: 1. //"நான் செங்கல்பட்டு வாசி. சென்னைக்குப் போய்வர..//

  இத எழுதுனது அழகிய சிங்கர்னு தோணுது. ’நேர்பக்கம்’ என்னும் அழகியசிங்கரின் நூலில் வந்த கட்டுரையில் இது எழுத்தாளர் தேவனை நேரிடையாகப்பார்த்ததுபற்றி.

  முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது யாருடைய படைப்பில் என்பது தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. ஏகாந்தன், உங்களுக்கு பதில் எழுதி இருந்தேன். :( இணையம் பிரச்னையில் அது வெளியாகலை போல! போகட்டும், உங்கள் பதில் தப்பு. இரண்டு பேரின் எழுத்தையும் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை! :)

   Delete
 2. இதோ இப்ப வர்றேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, கில்லர்ஜி, வாங்க, வாங்க, மெதுவா வாங்க!

   Delete
 3. இரண்டுமே தெரிந்தது போல இருக்கிறது. ஆனால், நிச்சயமாக சொல்ல முடியவில்லை. கல்லாதது உலகளவு என்பதை உணர்த்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஶ்ரீராம் சொல்லுவார்னு நினைச்சா! ம்ஹூம்! ஶ்ரீராம் என்னை ஆச்சரியப் படுத்திட்டார்! :)

   Delete
  2. கடுகு சார் அவர்களின் எழுத்துக்களை படிக்காமல் இருக்க முடியுமா? படித்திருக்கிறேன், இது கடுகு என்று தெரிந்தது, ஒரு வேலை சாவியாக இருக்குமோ என்ற சன்தேகத்தால் விடை கொடுக்கவில்லை.

   Delete
 4. எனக்கென்னவோ இந்த எழுத்துக்கள் வலைப்பக்கங்களில் பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை போல் தெரிகிறதே....

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, நீங்க சொன்னதில் பாதி சரி என்பதால் பதிவுகளில் தேடுவாங்க என்றே உங்கள் கருத்தை வெளியிடவில்லை! :)

   Delete
 5. என்னது..... பதிவில் ஒன்றுமே எழுதவில்லையா? என் கண்ணில் எதுவுமே படவில்லை... ஹலோ..... ஹலோ....யார் கூப்பிடறது....இதோ வந்துட்டேன்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், உங்களுக்கு ரொம்பவே தெரிஞ்சவங்க தான் இரண்டு பேரும்! யோசிங்க ஒழுங்கா! நாளை முழுசும் நேரம் எடுத்துக்குங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. ஶ்ரீராம், இரண்டாவதற்குச் சொன்ன விடை சரி! இன்னும் பார்க்கலாம். ஆகையால் விடையை வெளியிடவில்லை! :) மன்னிக்கவும்.

   Delete
 6. @மிகிமா, கிட்டத்தட்டப் பாதி பதிலைச் சொல்லிட்டதாலே யாரும் ஊகிக்க எளிதாகிடுமோனு உங்களோட கருத்தை நிறுத்தி வைச்சிருக்கேன். நாளை சாயங்காலமா வெளியிடுவேன். :)

  ReplyDelete
 7. இரண்டாம் பகுதியை எழுதி இருப்பவர் கடுகு (அகஸ்தியன்.)

  ReplyDelete
  Replies
  1. சரிதான் ஶ்ரீராம். அவர் புத்தகம் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நான் அதிலிருந்து தான் தட்டச்சினேன். :)

   Delete
 8. தேவனும் நானும் என்னும் தலைப்பு. (கோபுலு பற்றி கூட அவர் எழுதுவார் என்று ஆவலுடன்நானும் எதிர்பார்த்திருந்தேன்!)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம், எல்லோருடனும் அவர் அனுபவங்கள் அருமையாகப் பகிரப்பட்டிருக்கும். தேவன் என்பதைச் சொன்னால் கண்டு பிடிக்க எளிதுனு நினைச்சு இதைத் தேர்ந்தெடுத்தேன். :)

   Delete
 9. முதலாவது பாஹே என்ற சந்தேகம். வெளியிடப்பட்டிருக்கும் நிறம் வேறு நான் உபயோகப்படுத்தும் நிறம்!

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஶ்ரீராம். பாஹே இல்லை. நீங்கள் நன்கு அறிந்தவர் தான்! :) இன்னொரு க்ளூ கொடுத்தால் கண்டு பிடிப்பீங்க. நீங்களும் அவர் புத்தகம் குறித்து விமரிசனம் செய்து எழுதி இருக்கீங்க. :)

   Delete
  2. @ஶ்ரீராம், இரண்டும் சரி! க்ளூ கொடுத்ததும் கண்டு பிடிச்சீங்க போல! மத்தவங்களுக்காக வெய்ட்ட்ட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ஆகவே விடையை நாளைக்கு வெளியிடறேன். :)

   Delete
 10. 1) ஒரு ஊதாப்பூ - மோகன்ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம், நம்ம மோகன் ஜி தான்! வேறே யாருமே இல்லை. வசு என்னும் பெயரை வைச்சுக் கண்டு பிடிக்க முடியும் என எதிர்பார்த்தேன்.

   Delete
 11. இரண்டவது எங்கோ வாசித்த நினைவு....அந்த 2 ரூபாய் வரி, மேரிஸ் ஹால் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது... .அப்புறம் நேராக தேவன் அவர்களைச் சந்தித்தது பற்றியும்...ஆனால் யார் என்று நினைவில்லை..இப்போது ரொம்பவே மறதியும் வந்திருக்கிறது...வாசிப்பு குறைந்திருப்பதால் இருக்கலாம்...

  தெரிந்து கொள்ள ஆசை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, தில்லையகத்து/கீதா, விடைகள் வெளியிடப் பட்டு விட்டன! :)

   Delete
 12. நான் ஓடி வந்து ஒளிஞ்சி பார்த்தேன் ஒண்ணுமே தெரியல :)

  ப்ரெசன்ட் போட்டதுக்காவது ஜஸ்ட் பாஸ் போட்டு விடுங்க :)
  ஏன்னா நான் பெயில் ஆனதேயில்ல :)

  நீங்க சொல்றத வச்சி பார்த்தா கரப்பாண்பூச்சி லவ்வர்ஸ் பற்றி எழுதின மோகன்ஜி யாக இருக்குமோன்னு டவுட்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், இப்போவும் நீங்க ஃபெயில் இல்லை! பாஸ் தான். இரண்டில் ஒன்றுக்கு விடை சரியானது! முதலாம் கேள்விக்கு விடை சரியானது! :)

   Delete
  2. ஆவ் பாஸாயிட்டேன் ..அள /கேசன் அந்த ள பார்த்துதான் டவுட் வந்தது .ரீசண்டாதான் அவர் கதைகளை படிக்க துவங்கினேன் .

   Delete
 13. கீதா சாம்பசிவம் மேடம்,... Not able to apply my mind. பதிவைப் பார்த்தேன். இரண்டாவது சாவி

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இதானோ! :( விடைகளைப் பார்த்திருப்பீங்க! இப்போச் சொன்னதில் சரியாச் சொல்லி இருக்கீங்க!

   Delete
 14. ஏஞ்சலின் முதல் பகுதிக்குச் சரியான விடையைச் சொல்லி இருக்கார். இரண்டாம் பகுதி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஶ்ரீராம் இரண்டும் சொல்லி இருக்கார். நெல்லைத் தமிழன் ஏமாற்றி விட்டார். இது நான் எதிர்பார்க்காதது. ஆனால் அவர் மனம் பதியவில்லை என்று சொல்லி இருப்பதால் எதுவும் சொல்வதற்கில்லை! :( சுவாரசியமான கருத்துக்களை எதிர்பார்த்திருந்தேன். போகட்டும். இன்று மாலை வரை என்று ஏற்கெனவே சொல்லி இருப்பதால் சாயந்திரமாய் விடைகள் சொன்னவர்களின் பின்னூட்டங்கள் வெளியிடப்படும். அதுக்குள்ளே நூறு பேர் வரப் போறாங்களானு ம.சா. கூவுது! ஹிஹிஹி, இல்லை தான்! இருந்தாலும் ஒரு நப்பாசை தான் வேறே என்ன?

  ReplyDelete
 15. கொஞ்சம் அந்த எழுத்தாளர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டால் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமாகும். அது விடைகள் வெளியானதும் அப்படியான பின்னூட்டங்கள் வரத் தொடங்கலாம். நிச்சயம் இதில் ஜீவி ஸார் பங்கு இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்கள் சொன்னால் எளிதில் கண்டு பிடிக்கலாமே! அதனால் தான் சொல்லலை! சரி, அடுத்தாற்போல் முயன்று பார்க்கலாம். அப்படி எல்லாம் சாமர்த்தியமாக எனக்குச் சொல்ல வருதானு! :) பார்வையாளர்கள் அளவுக்குக் கருத்துகள் வரலை! :(

   Delete
  2. // எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்கள் சொன்னால் எளிதில் கண்டு பிடிக்கலாமே! //

   அப்படிச் சொல்லவில்லை. விடைகள் வெளியானதும்தான் எழுத்தாளர்கள் பற்றிய எண்ணங்கள் வாசக அனுபவங்கள் எழுதப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறேன்!

   Delete
  3. உண்மையைச் சொல்லணும்னா நீங்க சொல்ல வருவது எனக்குப் புரியலை! அல்லது என் மண்டையில் ஏறலை! என்றாலும் ஒரு சின்னக் குறிப்புக் கொடுத்தால் கூட உடனே சொல்லிவிடும் அளவுக்கு இருவரும் பிரபலமானவர்கள் இல்லையா? அதான் குறிப்புக் கொடுக்க யோசிச்சேன். :)

   Delete
  4. இந்த மாதிரி பகுதிகளில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும், ஸ்ரீராம்.

   புதுமையும், புதுச் சிந்தனைகளும் புரண்டு வர வேண்டும். இந்தக் கால எழுத்தாளர்களைப் பற்றி அவர்களின் எழுத்துக்களைப் பற்றி ஒரு awareness வர வேண்டும். நம் பதிவுலகிலேயே மிகச் சிறப்பாக எழுதக் கூடிய எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அறிமுகங்களும் இந்த மாதிரி பகுதிகளில் தேவை.

   எல்லாம் பழங்கஞ்சியாகப் போய் விடக்கூடாது. சுஜாதாவைத் தாண்டியே நாம் வெகு தூரம் வந்தாயிற்று என்ற நிலையில் மாமாங்க காலத்தவர்கள் புத்தகங்களை இந்தத் தலைமுறையினர் வாசித்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமே தரும்.

   எல்லாம் குப்பை என்று ஒரேடியாக புறம் தள்ளுவது ஒருதலைபட்சமான முடிவே. குப்பை என்றாயினும் அவற்றில் குந்துமணிகளைத் தேடி அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்த இந்தப் பகுதியை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

   முந்தைய தலைமுறை எழுத்தாளர்களில் பலர் பொழுது போக்கு எழுத்துக்களிலேயே மூழ்கி தானும் பலியாகி வாசித்தவர்களையும் பலி கொடுத்தவர்கள். அவர்களிலிருந்து விலகி அன்றைய கால கட்டத்திலும் சாதித்தவர்களைப் பற்றிச் சொல்லலாம். கிளறக் கிளறத் தான் நம் வாசக ரசனையும் கிளர்ந்து எழும்.

   எழுத்து, கவிதை, விமர்சனம் என்று சகல விஷயங்களிலும் முக்குளித்து இந்தப் பகுதியை புது ரத்தம் பாய்ச்சி புத்துணர்ச்சி பெறச் செய்வோம். வாழ்த்துக்கள்.

   Delete
 16. கடுகு சாரா? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அவருக்கு டைரக்டர் ஶ்ரீதர், எழுத்தாளர் சடகோபன் இவர்களெல்லாம் பால்யத் தோழர்கள். அங்கு இருந்தபோதுதான் கல்கி தரிசனம் எல்லாம்.... இப்போ mind work பண்ணறது. பசங்கள்லாம் இப்போ வந்ததுனால

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. மீள் மீள் வரவுக்கு நன்றி. இப்போச் சொன்னது இரண்டாவதுக்கு சரியானது. எல்லாம் சரியானதுக்கு மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

   Delete
 17. இரண்டு கேள்விக்கும் சரியான பதிலைச் சொன்னது ஶ்ரீராம். இரண்டாவது ஏஞ்சலின், மூன்றாவது நெ.த. இன்னும் பூவிழி, அதிரா ஆகியோர் வருவாங்கனு நினைச்சேன்! இரண்டு பேரும் வேலை மும்முரம் போல! வரலை! அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் தீவிரமான வேலையில் இருப்பேன். இந்த வருஷம் தீபாவளி கிடையாது! ஆகையால் அந்த வேலை இல்லை! எனினும் மத்தியானம் சிறிது நேரம் கணினியில் உட்கார்ந்தால் முடிந்தவரை பதிவுகளைப் படிக்கணும்! எழுதுவது கடினம்! :)

  ReplyDelete
 18. பழைய கால நடை. சாவி என்று நினைத்தேன். இப்பதான் துப்பட்டா வந்துவிட்டதே வாயில் அடைத்துக் கொள்ள. மூளைக்கு நல்ல வேலை. நன்றி கீதா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை என்பதால் நீங்க சொல்வீங்கனு நினைக்கலை! எனினும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 19. இந்த புதிர்போட்டி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! ஆனால் நான் கடுகு அகஸ்தியன் தளம் வாசித்து இருக்கிறேன்! மோகன் ஜி குறித்து அறியேன்!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ், மூளைக்கு வேலை கொடுக்கும். அதோடு அந்தக் கதை படித்த சூழ்நிலை, படிக்கும்போது ஏற்பட்ட மன உணர்வு, அதன் பின்னால் மீண்டும் படிக்கையில் தோன்றியது என ஒவ்வொன்றாக நினைத்துப் பார்ப்போம். கதையின் உள் கருத்துக்கள் சில சமயங்களில் முதல் தரம் படிக்கும்போது எனக்குப் புரிந்ததில்லை. மீண்டும் படிக்கையில் தான் புரிந்து கொண்டிருக்கேன். அது மாதிரிப் பல கதைகள் நம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. கடுகு என்னும் அகஸ்தியன் சாரின் வலைப்பக்கம் போய்ப்பார்த்திருக்கிறீர்களே! வியக்க வைக்கும் அதிசய மனிதர்! ஆனால் எவ்வளவு எளிமை!

   Delete
  2. அந்தக் காலமே ஓர் பொற்காலம் எனலாம். கதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மூலம் நம் அறிவை மட்டுமல்ல, தமிழையும் வளர்த்தார்கள். அதிலும் 1930 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1960=70கள் வரை உள்ள எழுத்தாளர்கள் காலம் மிகவும் நினைவு கூரத் தக்கது. இத்தனைக்கும் அவர்கள் பெற்ற வருமானம் மிகவும் சொல்பம்! உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் உழைத்தார்கள். இன்றளவும் அனைவர் பெயரும் நினைவில் நிற்கின்றன. அடுத்தும் ஓர் பழைய எழுத்தாளரின் எழுத்திலிருந்து தான் தேர்ந்தெடுக்கணும்னு இருக்கேன். பார்க்கலாம். தவறாமல் வாங்க சுரேஷ்!

   Delete
  3. மோகன் ஜி "வானவில் மனிதன்" என்னும் பெயரில் எழுதி வருகிறார். அற்புதமான நடை! அநாயாசமாக வந்து விழும் வார்த்தைகள்! அது கதையானாலும், கவிதையானாலும், கட்டுரையானாலும். ஒரு முறை போய்ப் பாருங்கள்! அவருடைய சிறுகதைத் தொகுப்பு "பொன் வீதி" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது தான் முதலில் உள்ள பகுதி!

   Delete
 20. நான் இந்த விளையாட்டுக்கு லாயக்கில்லை

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, நிறைய வாசிக்கிறீர்களே! என்றாலும் பழைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எல்லோரும் படிச்சிருப்பாங்கனு சொல்ல முடியலை! ஆனால் இந்தக் காலத்து இளைஞர்கள் நிறையப் பேர் படிச்சிருக்கிறதோடு அல்லாமல் விவாதிக்கவும் செய்கின்றனர். நன்றி வரவுக்கும், கருத்துக்கும்! :)

   Delete
 21. இரண்டு பேருமே வலை உலகில் பிசியாக இருப்பவர்கள் என்று கூறியிருப்பதைப் பார்த்தால் ரிஷபன் அவர்களாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வருகிறது. ஆனால் நடை அவருடையதைப் போல இல்லை. மணிக்கொடி காலத்தவர்களின் எழுத்து போல இருக்கிறது.

  ReplyDelete