எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 04, 2017

இந்த நாள் இனிய நாள்! :)

கடப்பாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் போல! ஏகக் கூட்டம். பார்வையாளர்கள் அதிகம். அவ்வளவுக்குக் கருத்துகள் வரலை! எப்போதுமே இப்படித் தான் என்பதால் ஒண்ணும் சொல்றாப்போல் இல்லை. நவராத்திரிப் பதிவுகளிலும் அப்படித் தான்! பார்வையாளர்கள் அளவுக்குக் கருத்துகள் இல்லை. போனால் போகட்டும்!

இப்போதைய தலையாய பிரச்னையாகத் தெரிவது தாஜ்மஹல் சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக நடக்கும் பிரசாரம் தான். உண்மையில் என்ன நடந்தது என்பது ஒரு சில குறிப்பிட்ட தினசரிகளில் மட்டுமே காண முடிகிறது! அப்படி ஏதும் இருந்தால் உ.பி.யில் இத்தனை நாட்களாக மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? அங்கே எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதிகளும் தொலைக்காட்சி சானல்களும் இந்த விஷயத்தைச் சொல்லி ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன.

தாஜ்மஹலை யாரும் படுத்தலை. எந்த அரசியல்வாதியும் அதன் பராமரிப்புக்களில் தலையிடவும் இல்லை. உத்திரப் பிரதேச அரசு புதிதாகப் பதினைந்து சுற்றுலாத் தலங்களை அறிமுகம் செய்து அவற்றை மேம்படுத்தப் பணம் ஒதுக்கி உள்ளது. அந்தப் பட்டியலில் தாஜ்மஹல் இல்லை. ஆகவே தாஜ்மஹலைச் சுற்றுலாப் பட்டியலில் சேர்க்கவில்லை  என ஊடகங்களும் தினசரிகளும் வழக்கம் போல் ஊதி ஊதிப் பெரிதாக்கத் தாஜ்மஹலை உ.பி.அரசு மதவாதத்துடன் ஒதுக்கிவிட்டதாக எல்லோரும் கூவுகின்றனர். உண்மையில் பழைய பட்டியலில் தாஜ்மஹல் உள்ளது. அதன் பராமரிப்புச் செலவுக்கு என 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் உள்ளது. இது அதிகாரபூர்வமான அறிவிப்பாகவும் சொல்லப்பட்டு உள்ளது! அப்படி எடுத்திருந்தால் ஆங்கில, ஹிந்தி சானல்கள் சும்மாவா விடும். ஒரு மாசத்துக்காவது இதையே பேச மாட்டாங்களா என்ன? இங்கே தமிழ்நாட்டுத் தமிழ்ச் சானல்கள் மட்டுமே இதைப் பற்றிக் கூறுகின்றன. :)

அதே போல மும்பையில் நடைமேடையில் நடந்த விபத்துக்குறித்தும் குற்றம் சொல்லுவது மத்திய அரசைத் தான்! நடைமேடை இடிந்து விழுவதாக வதந்தியைக் கிளப்பி விட்டது யார்னு கண்டுபிடிப்பதை விட்டுட்டு மோதியும் அவங்க அரசும் வேலை மெனக்கெட்டு வந்து நடைமேடையில் இருந்தவங்களைப் பிடிச்சுக் கீழே தள்ளிட்டாப்போல் கூச்சல், கூப்பாடு!

பெருமை மிக்க "தி இந்து" ஆங்கில நாளிதழ் அந்த நிகழ்வின் போது பிணமாக இருந்த ஓர் பெண்ணை யாரோ பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்தி வெளியிட்டு விட்டுப் பின்னர் அது தவறான செய்தி என மன்னிப்பும் கேட்டிருக்கிறது. செய்தி வெளியிடும் முன்னரே சரி பார்க்க வேண்டாமா? இவங்க கேட்டிருக்கும் மன்னிப்பை யார் பார்க்கப் போறாங்க? இதே போல் பல விஷயங்களிலும் ஹிந்து தவறான செய்தியைப் போட்டிருக்கிறது. பின்னர் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. இது ஹிந்து தினசரியின் நம்பகத் தன்மையையே பாதிப்பதாக உள்ளதே! அவங்களுக்கு அது புரியலையா?

இப்போக் கீழடி அகழ்வாராய்ச்சியில் மத்திய அரசு தமிழர் பெருமையை மறைப்பதாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரே இது குறித்து ஒரு கட்டுரை விபரமாக எழுதி இருக்கிறார். அதில் எந்த ஆய்வையும் மத்திய அரசு மறுக்கவோ தடுக்கவோ இல்லை என்றும் எல்லா ஆய்வுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி கொடுப்பது போலத் தான் இதற்கும் கொடுத்திருப்பதாகவும், இடையில் நடைபெற்ற தொல்லியல் துறை இயக்குநரின் மாற்றல் தற்செயலானது என்றும் தெளிவாகக் கூறி உள்ளார். அதோடு கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தனியாருக்குச் சொந்தமானது. ஆகவே அகழ்வாராய்ச்சி முடிந்த பின்னர் சேகரித்த பொருட்களைத் தனியாக சேமித்துவிட்டுத் தோண்டப்பட்ட இடங்களை மூடிக் கொடுக்க வேண்டும் என்பது பொதுவான விதி! அதன்படி அந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்கள் மூடப்பட்டன. பின்னர் மீண்டும் உரியவருக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாமல் தமிழனின் நாகரிகத்தை மறைத்து விட்டார்கள், அழித்து விட்டார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர்.

தொல்லியல் துறை அறிஞரின் விளக்கமான கட்டுரையை நாளைக்குப் பகிர்கிறேன். தில்லைநகரில்  இன்னிக்குக் கைத்தறிக் கண்காட்சினு பேப்பரிலே எல்லாம் அமர்க்களப்பட்டதேனு போயிருந்தேனா! ஒரே ஏமாற்றம்! 110 ஸ்டால்கள் இருப்பதாகச் செய்திகள் கூறின. போனால் 10 ஸ்டால் கூட இல்லை! :(  அதுவும் சின்னாளப்பட்டி, திருபுவனம் மற்ற ஊர்ப்பெயர்கள் எல்லாம் புதுசா இருந்தன. ஜமுக்காளம், துண்டு, சில்க் காட்டன் புடைவைகள், பட்டுப் புடைவைகள் என்று அடுக்கி இருந்தாங்க! அங்கே போனால் சின்னாளப்பட்டி ஸ்டாலில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் புடைவைகள் இருந்தன. அதிலும் நான் தேடிய வாழை நார்ப்புடைவை இல்லை! :( சென்னையில் எழும்பூரில் நடக்கும் கைத்தறிக் கண்காட்சியை ஒப்பிட்டால் இது ஒண்ணுமே இல்லை. போன வருஷம் இங்கே ஶ்ரீரங்கத்திலும் கைத்தறிக் கண்காட்சி போட்டிருந்தாங்க. எல்லா ஊர்களில் இருந்தும் துணிகள் வந்திருந்தன. கோவைப் புடைவை நெகமம் பருத்திப் புடைவை எடுத்தேன். இன்றளவும் நன்றாக இருக்கிறது. நல்ல அகலம், நல்ல நீளம். அப்படி இங்கே கிடைக்கலை! வீட்டிலிருந்து கண்காட்சிக்குப் போக  ஓலா ஆட்டோ புக் செய்து கொண்டு போனோம். எங்களுக்கு ஆட்டோ சார்ஜ் 56 ரூபாயிலிருந்து 59 ரூபாய்க்குள்ளாக வரும் என்றும் அதிகமானால் 5 அல்லது 10 ரூபாய் தான் அதிகம் இருக்கும் என்றும் தகவல் வந்தது.

ஆனால் போகையிலேயே ஆட்டோ ஓட்டுநர் எரிவாயு நிரப்ப வேண்டி 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். அப்போவே என்னடா இதுனு யோசிச்சேன். போனால் 92 ரூபாய் ஆயிற்று. எனக்கு இவ்வளவு தான் வந்தது என்று சொன்னேன். காட்ட முடியவில்லை.  wi-fi connection only! No data! :( ஆகவே அவரிடம் காட்ட முடியலை! அவர் நீங்க கான்சல் பண்ணிட்டு மறுபடி கூப்பிட்டிருப்பீங்க. அப்படிச் செய்தால் 20 ரூபாய் அபராதம். அதனால் 92 வந்திருக்கும் என்று சொன்னார். நாங்க கான்சலே பண்ணலை! திரும்பி வருகையில் ஓலா இல்லாத சாதாரண ஆட்டோக்காரர் 100ரூபாய்க்கு வந்தார். 200 ரூபாய் செலவு ஆனது தான் மிச்சம்! Today is not my day! 

20 comments:

  1. இப்போலாம் ஓலா, ஊபர் எல்லாவற்றிலும் நாம் புக் பண்ணும் பொழுது காட்டுகிற சார்ஜை விட அதிகம் தான் இறங்குகையில் கேட்கிறார்கள். டிராபிக் ஜாம், பீக் அவர், ஜீபிஸ் காட்டும் சுற்றுப் பாதை என்று ஏதேதோ காரணங்கள். இருந்தும் ஆட்டோக்காரர்களிடம் சென்னையில் மல்லாடுவதை விட இதெல்லாம் ஆயிரம் மடங்கு மேல். ஊபர் உபயத்தில் இரண்டு ஏர்வேஸ் டிராலி பேக், இரண்டு பெரிய ஜிப் பேக்ஸ், ஒரு பெரிய அட்டைப் பெட்டி, இரண்டு போதீஸ் கைப்பைகள், மற்றும் நாங்கள் இருவர் என்று அசோக் நகரிலிருந்து போரூர் வர்றத்துக்கு 160 தான் சார்ஜ் ஆயிற்று. நேரம் மதியம் இரண்டரை என்பதினால் இது சாத்தியமாயிற்று. இதுவே மாலை 5 மணி என்றால் 230 ஆகியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், நாங்க போன மத்தியான நேரத்தில் (3-00) கூட்டமோ, போக்குவரத்து நெருக்கடியோ இல்லை. ஆட்டோ ஓட்டுநரும் வேகமாகவே ஓட்டினார். என்றாலும் பணம் அதிகம் தான்! :( எங்களுக்கு 59 ரூ பில் வரும் எனச் செய்தி வந்திருந்தது.

      Delete
  2. இனியநாள் என்று கசப்பான விடயங்களாகவே போட்டு இருக்கின்றீர்கள்.
    பாட்டியின் உறவு முறைகள் வெளியிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, போய்ப் பார்த்துட்டோமுல்ல! சில நாட்கள் அப்படித் தான் கொஞ்சம் சிரமமான நாட்களாக ஆகின்றன. :)

      Delete
  3. கடப்பாவுக்கு ரசிகர்கள் - ஒருவேளை நிறைய பேர் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்களோ? அதனால் எங்கேயோ கடப்பா கல் குறைந்த விலைக்குக் கிடைக்கிறதோ என்று பார்த்தார்களோ? (ஹிஹி.. ஆனாலும் கடப்பா செய்முறை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காதே. நானே முதல் முறையாகக் கேள்விப்படறேன். உங்களுக்குப் பெருமைதான்)

    தமிழ்நாட்டில் பாஜக வந்துடுமோன்னு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கு. அதுவும்தவிர தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக சிலர் ஊடகங்களில் பெரிதுபடுத்துகின்றனர். இதுக்குமேல் அரசியலைப் பற்றி எழுதத் தோன்றவில்லை.

    புடவை பர்சேசுக்கு அவரையும் கூட்டிக்கொண்டு சென்றீர்களா? பாவம் அவர்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. கடப்பாவுக்கு ரசிகர்கள் இருப்பதுக்கு இதான் காரணமா? :P:P:P பாஜக வந்துடும்ங்கற பயத்தை விட எங்கே நாம மாட்டிப்போமோங்கற பயம்தான் அதிகம் இருக்குனு நினைக்கிறேன்.

      அப்புறமாப் புடைவை பர்ச்சேஸ் எப்போவுமே ரெண்டு பேருமாத் தான் போய் வாங்குவோம். இந்தத் தனியாப் போய் வாங்கறது, அக்கம்பக்கத்துப் பெண்களோடு சேர்ந்து போறது எல்லாம் எனக்கு வழக்கமாய் வரலை! நவராத்திரி மட்டும் விதி விலக்கு! அக்கம்பக்கம் பெண்களோடு சேர்ந்து போவேன், போயிருக்கேன்.

      எனக்கு மட்டும் துணி எடுக்கப் போனால் போக, வர ஆகும் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்காமல் மொத்தம் அரை மணியே ஆகும்! போகும்போதே என்ன நிறம், எப்படியான புடைவை என்பதை முடிவு செய்துப்பேன். தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டுமே பார்ப்பேன். அவங்க நிறையப் போட்டாலும் ஒதுக்கிடுவேன். குழப்பிக்கறதில்லை!

      Delete
  4. வர வர எல்லாவற்றுக்கும், எல்லாவற்றையும் எதிர்க்கும் மனோபாவம் நம்மூரில் வளர்ந்து வருகிறது. இப்படி இருந்தால் எதையும் செய்ய முடியாது. ஹிந்து நாளிதழ் பற்றிச் சொல்லவே வேண்டாம். துளியும் பொறுப்பில்லாத பத்திரிக்கை. குருமூர்த்தி கூட துக்ளக்கில் வருத்தப் பட்டிருந்தார். அவர் சொன்ன ஒரு கருத்தை அப்படியே மாற்றி போட்டிருப்பதாக.

    ReplyDelete
    Replies
    1. எதிர்ப்புத் தெரிவிப்பது வேண்டுமென்றே. மத்திய அரசைக் குறை கூறி அதற்கு ஆதரவில்லாமல் செய்வதற்கெனச் சிலர் கிளம்பி இருக்கின்றனர். என்ன செய்ய முடியும்? இன்றைய தினசரியில் பீச்-செங்கல்பட்டு மின்ரயில் பாதையில் செல்லும் ரயில்களில் மதப் பிரசாரம் அதுவும் விஷமத்தனமாக நடைபெறுவதாகப் போட்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்டித்தால் சகிப்புத் தன்மை இல்லைனு சொல்லிக் கூப்பாடு போடவும் ஆட்கள் இருக்காங்க! :(

      Delete
  5. புடைவை விஷயம் எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் இந்த ஓலா, ஊபர் விஷயம் எல்லாம் எங்களுக்கும் அனுபவம் உண்டு. சில சமயங்களில் டிரைவர் கேன்சல் செய்வார். நாம் பார்த்திருக்க மாட்டோம். அதற்கு 50 ரூபாய் நமக்கு பச்சா விழும்! மெயில் அனுப்பி அதைத் திரும்பி வாங்க முடியும் என்பார்கள். என் தங்கைப் பெண்கள் இருவரும் வாங்கவும் வாங்குவார்கள் எனக்கு அந்தக் கலை(யும்) கைவந்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. அட, ஶ்ரீராம், (ஹிஹிஹி, மேலே பெயர் சொல்ல மறந்துட்டேன்) புடைவை உங்க பாஸுக்கு நீங்க வாங்கித் தரதில்லையா? சரியாப் போச்சுபோங்க! கிளப்பி விட வேண்டியது தான்!

      மற்றபடி ஓலா, ஊபர் எல்லாம் எங்களுக்குச் சரியா வரும்னு தோணலை! :)

      Delete
  6. தொல்லியல் துறை கட்டுடறையை பகிருங்கள் மற்றபடி நீங்கள் சொல்வது போல்தான் இருக்கவேண்டும் அந்த விஷயம் நான் பிளாக்கை மறுபடியும் திறந்த பிறகு உங்கள் இடது வந்து போகிறேனே எப்போதும்
    இந்த டைப்பு ஆட்டோ கூட இந்த வேலையை காட்டுகிறதா சரிதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி,பகிர்ந்திருக்கேன், பார்த்திருப்பீங்க! ஆட்டோக்கள் எப்போவுமே வேலையைக் காட்டும் போல! :)

      Delete
  7. நம்மஏரியாவில் எழுதியகதை படித்தேன் கீதா, நன்றாக இருக்கிறது கருத்து சொல்லி விட்டேன் அங்கு.
    ஓலா ஆட்டோவில் இரண்டு முறை வெற்றிகரமாய் போய் இருக்கிறோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.
    எப்போதும் அப்படி நடக்க மாட்டேன் என்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, அங்கேயும் உங்கள் கருத்தைப் பார்த்தேன். நன்றி. ஓலா ஆட்டோக்கள் மதுரையில் வெற்றிகரமாய் இருப்பது ஆச்சரியம், சந்தோஷம்! :)

      Delete
  8. பெருமை மிக்க "தி இந்து" ஆங்கில நாளிதழ் அந்த நிகழ்வின் போது பிணமாக இருந்த ஓர் பெண்ணை யாரோ பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்தி வெளியிட்டு விட்டுப் பின்னர் அது தவறான செய்தி என மன்னிப்பும் கேட்டிருக்கிறது. செய்தி வெளியிடும் முன்னரே சரி பார்க்க வேண்டாமா? இவங்க கேட்டிருக்கும் மன்னிப்பை யார் பார்க்கப் போறாங்க? இதே போல் பல விஷயங்களிலும் ஹிந்து தவறான செய்தியைப் போட்டிருக்கிறது. பின்னர் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. இது ஹிந்து தினசரியின் நம்பகத் தன்மையையே பாதிப்பதாக உள்ளதே! அவங்களுக்கு அது புரியலையா?// ஹிந்து பெருங்காய டப்பா! கீதாக்கா. இவங்களாவது மன்னிப்பு கேட்டிருக்காங்க ஆனா பல பத்திரிக்கைகள் தவறான செய்தி, வீடியோனு போட்டுட்டு மன்னிப்பு கூடக் கேட்பதில்லை. நம்ம மக்களுக்குத் திருத்தப்பட்ட செய்தி எல்லாம் பார்ப்பாங்களா நீங்க சொல்லுற மாதிரி. ஏன்னா முதல் தவறான செய்திக்கே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணை மறைச்சுடுமே...அப்புறம் எப்படி...இதோ முழுவதும் வாசித்துவிட்டு வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. "இந்து"பத்திரிகை படிப்பதை நான் விட்டுப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அந்த அளவுக்குப் பொய், வன்மம்! இப்போ விகடன் வாராந்தரியும் அதில் சேர்ந்திருக்கிறது. :(

      Delete
  9. இப்போது எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு இங்கு...கண் மூடித்தனமாகவும் இருக்கு பல..சொல்லிப் பயனில்லை..

    ஊபர் ஓலா இதுவரை அதிகம் வாங்கியதில்லை. சரியாக என்ன நமக்கு வருதோ அதுதான் வாங்கியிருக்கிறார்கள்...ஆட்டோ அல்ல...கார்..

    ஓலா ஆட்டோ பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் என் உறவினர் அனுபவம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா/தில்லையகத்து, ஒரு முறை மாம்பலத்திலிருந்து அம்பத்தூர் ஓலா ஆட்டோவில் போனோம்னு ரங்க்ஸ் சொல்றார். நினைவில் இல்லை. ஆனால் கார் என்றால் ஃபாஸ்ட் ட்ராக் தான் சரியா வருது!

      Delete
  10. நீள் தூரப்பயணத்துக்கு ஓலா உபர் இவற்றயேஉபயோக்கிறேன் குறைகள் இல்லைஎன்றே சொல்லலாம் தெ ஹிந்து பத்திரிகையை நினைவு தெரிந்த நாளிலிருந்து வாசித்து வருகிறேன் வேறு தினசரிகளை விட எவ்வளவோ மேல்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா. எங்களுக்கு என்னமோ ஓலா சரியா வரலை! ஹிந்துப் பத்திரிகை மட்டுமல்ல எந்தப் பத்திரிகையுமே சரியான செய்தியைத் தருவதில்லை. World Economic Forum மோதி அரசின் பொருளாதாரக் கொள்கையைப் பாராட்டி இருப்பதோடு இப்போது ஏற்பட்டிருக்கும் சரிவு தாற்காலிகமானது என்றும் விரைவில் சரியாகிவிடும் என்றும் சொல்லி இருப்பதை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? எல்லோரும் பொருளாதாரச் சரிவு என்றே சொல்லிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் இருக்கின்றனர். :(

      Delete