எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 12, 2017

யார், யார், யாரவர் யாரோ! ஊர் பேர் தான் தெரியாதோ!

ஏற்கெனவே ரெண்டு, மூணு ட்ராஃப்ட் மோடிலே இருக்கு! அதை எல்லாம் விட்டுட்டு இன்னிக்கு ஒரு மாறுதலுக்காக ஶ்ரீராமோடயும், நெ.த.வோடயும் போட்டி போடலாம்னு! அவங்க தான் படிச்சதைக் குறித்து இங்கே எடுத்துப் போட்டு யார் எழுதினதுனு கேட்கறாங்க! அப்படி ஒரு கேள்வியை நானும் இப்போக் கேட்கப் போறேனே!  கீழே நான் படிச்ச ஒரு நாவலில் இருந்து சில பகுதிகள்:

"சௌகரியமாகத் தான் இருக்கும், அதற்காக என்ன?"

"நீ போய் அதைக் கொண்டு வந்துவிட வேண்டியது! அதற்காகத் தான் உன்னைக் கூப்பிட்டேன்!"

"நானா? நான் எதற்கு? நீங்களே பொன்னாயியைக் கேட்டால் தானே கொடுத்து விடுகிறாள்! உங்கமேல் தான் அவள் காதல் கொண்டு விட்டாளே!"

"கொடுக்க மாட்டாள், எனக்குக் கொடுக்கவே மாட்டாள். அதனால் தான் உன்னைக் கொண்டுவரச் சொன்னது! ஹே!"

"நான் கேட்டால் மட்டும் எப்படிக் கொடுப்பாள்?"

"உன்னை யார் அப்பா அவளைப் போய்க் கேட்கச் சொன்னது? ஹே! மெள்ள எடுத்துக் கொண்டு வந்துவிடு! அவ்வளவு தான்!"

"திருடிக் கொண்டா? என்னிடம் மட்டும் அந்தப் பேச்சு.........."

"ஏன் கூச்சல் போடறே? இதுக்கு முந்தி இந்தமாதிரி வேலைகள் நீ செய்திருக்கிறதனாலேதான் உன்னண்டை அதைச் சொன்னேன்!"

"யாரைப் பார்த்து நீங்கள்......." என்று ஆத்திரமாக ரங்கராஜன் எழுந்தான்.

"உட்கார், அப்பா! உட்கார்! யாரை என்ன சொல்லிவிட்டேன்? போட்டோ என் சொத்து! அதைக் கொண்டுவர்ச் சொல்கிறேன். அதை என்னிடம் கொடுப்பதால் திருடுவதே ஆகாது! இஷ்டமானால் செய்! வேலையிலும் இரு! இல்லையானால் போய்விடு!"

"என்ன சொல்கிறீர்கள்?"


மேலே உள்ள பகுதி யாரால் எழுதப் பட்டது என்பதையும் நாவலின் பெயரையும் சொல்லணும். இது சினிமாவாய்க் கூட வந்தது. சின்ன க்ளூ டி.ஆர் ராமச்சந்திரன் இதில் ஹீரோ!

தவறுதலாய் டி.ஆர். மஹாலிங்கம் எனச் சொல்லிட்டேன். மிகவும் மன்னிக்கவும். :( தவறான க்ளூவைக் கொடுத்திருக்கேன். :(

69 comments:

 1. Replies
  1. தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :) இன்னொரு க்ளூ இருக்கு அதைக் கொடுத்தால் கண்டு பிடிச்சுடலாம். அதான் கொடுக்கலை! :)

   Delete
  2. அந்தப் படத்தில் ஒரு பாடல் சொல்லவும்!
   சின்னதுரை?​

   Delete
  3. ஹிஹிஹி, ஶ்ரீராம், நான் படம் வெளிவந்தப்போச் சின்னக் குழந்தையாக்கும். அப்புறமா டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ என்பதற்கு டி.ஆர் மஹாலிங்கம்னு போட்டுட்டேன். மன்னிக்கவும். :(

   Delete
  4. திவான் பகதூர்

   பி வி ஆர் நாவல்.

   Delete
  5. இல்லையே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? ரொம்ப சுலபம்! இன்னொரு க்ளூ கொடுக்கிறேன். நாவலின் பெயரே திரைப்படத்துக்கும் பெயர்!

   Delete
  6. AWWW :))அக்காவ் :) எவ்ளோ ஆராய்ச்சி செஞ்சேன் தெரியட்டுமா ..TR மகாலிங்கம்னு நினைச்சி :)

   Delete
  7. தப்புத் தான் ஏஞ்சலின். இந்த இனிஷியல் செய்த குழப்பம். முதல்லே கவனிக்கவே இல்லை. அப்புறமாத் தான் கவனிச்சேன்! மன்னிச்சுக்குங்க. சரியா எடிட் செய்யணும்னு நினைச்சுண்டாலும் என்னமோ அப்படிப் பண்ணறதே இல்லை! :(

   Delete
  8. பரவாயில்லைக்கா :) ஆனா இவ்வளவு நல்ல படங்கள் இருக்கான்னு ஆச்சர்யமா இருந்தது ஒவ்வொரு படம் பற்றியும் படிக்கும்போது .இப்படி தேடாட்டி எனக்கும் தெரிஞ்சிருக்காதே
   சிலதை தேடி எடுத்து வச்சிருக்கேன் போட்டு பார்க்கணும் ..

   Delete
  9. கீதாக்கா அப்போ இப்போ நீங்க சின்னக் கொயந்தை இல்லயா ? வளர்ந்திட்டீங்களோ?:)

   Delete
 2. கள்வனின் காதலி

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, தப்பு! ரொம்ப ஜிம்பிள்! ஆனால் யாருக்கும் தெரியலை! :)

   Delete
 3. மாலையிட்ட மங்கை சரியா ?

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம்@ கில்லர்ஜி! தப்பு, தப்போ தப்பு! அதுக்கும் முன்னாடி! அதோட எழுத்தாளர் பெயரெல்லாமும் சொல்லணுமே! எல்லோரும் பார்த்துட்டு பயந்துட்டாங்க போல! அதான் யாருமே இந்தப் பக்கம் வரலை! பார்ப்போம். யாருக்கானும் தெரியுதானு! ஒருத்தர் இருக்கார்! அவரை வரக்கூடாதுனு சொல்லிட்டேன்! :)

   Delete
 4. அவ்வ் :) மீ ப்ரெசென்ட் :)

  ஆனாலும் நீங்க கொடுத்த க்ளூவை வச்சே ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிட்டேன் :)
  அது நேர்மை ஆகாதே தனி பின்னூட்டத்தில் சொல்றேன் எல்லாரம் சொன்ன பிறகு சரியா இருந்தா அதை பப்லிஷ்பண்ணுங்க :)

  ReplyDelete
 5. வாங்க ஏஞ்சலின், இங்கேயே சொல்லலாம். வெளியிட மாட்டேன். மாடரேஷன் உண்டு! ஆகவே கடைசியில் வெளியே சொல்லுவேன்! :)

  ReplyDelete
 6. கண்டு பிடிச்சுச் சொல்லுங்கப்பா! காலம்பர வந்து பார்த்துக்கறேன். ஏற்கெனவே சொன்ன ஒருத்தர் தவிர இன்னும் இரண்டு பேர் முகநூலில் இருக்கிறவங்களாலே சொல்ல முடியும்! பார்ப்போம். நான் கடமை ஆத்திட்டுத் தூங்கப் போயிடுவேன். காலம்பரப் பார்த்துக்கறேன்.

  ReplyDelete
 7. அக்காவ் :) எவ்ளோ ஆராய்ச்சி செஞ்சேன் தெரியுமா ..TR மகாலிங்கம்னு நினைச்சி :)
  ஹாஹா அப்புறம் குமா பாலசுப்ரமணியம்லாம் கண்டுபுடிச்சேன்
  இப்போ TR ராமச்சந்திரன் னு தேடினாலும் கண்டுபுடிக்க முடில :)
  சரி நீங்களே சொல்லிடுங்க வந்து பார்க்குறேன் அப்புறம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, பதில் வந்துடுச்சு, வந்து பாருங்க. :) இன்னொரு க்ளூ என்னன்னா அவரே தயாரித்து நடிச்சார். ஜோடி சாவித்திரி! :)

   Delete
 8. தேவன் எழுதின நாவல் , பேரு தொண்டைல நிக்கறது வெளிய வறப்ப சொல்றேன் ����

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஷோபா! அதே, அதே! பேரு வெளிலே வந்தாச்சே!

   Delete
 9. Replies
  1. வாங்க நெ.த. உங்களுக்குக் கூட முடியலையா? !!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
 10. தவறான க்ளு கொடுத்ததால் நான் தவறான பதில் சொல்லி விட்டேன் இல்லைன்னா... முதல் ஆளா சொல்லி இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, கில்லர்ஜி!

   Delete
  2. மீயும்தேன் மீயுந்தேன் முதலிலேயே கரீட்டாப் பதில் சொல்லியிருப்பேன்:) இது தகவல் தவறு அதனால் வட போச்சேஏஏஏஏஏ:) ஹா ஹா ஹா

   Delete
  3. ஹாஹா, அதிரா, சமாளிப்ஸ்! :)

   Delete
 11. எனக்குத் தெரியலை. நான் வந்து பார்த்ததற்கான ஆஜர்.

  ReplyDelete
  Replies
  1. என்ன போங்க நெ.த. கீழே நம்ம சினிமா மன்னி சொல்லிட்டாங்களே!

   Delete
 12. மலைக்கள்ளன் படம்
  கதை
  நாமகல் கவிஞர் ராமலிங்கம் அவர்கள்.


  ராமலிங்கம் அவர்கள் கதை ஆசிரியர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! தப்போ தப்பு! :)

   Delete
 13. நான் எங்க அம்மாவயெல்லாம் நோண்டி குடைந்து கேள்வி கேட்டுடு இருக்கேன் நீங்க கூலா டி.ஆர் மஹாலிங்கம் இல்லைனு இப்படி குண்டு போட்டுட்டீங்க நானும் ஜீ சொன்ன பதில் சொல்ல வந்தேனே

  ReplyDelete
  Replies
  1. பூவிழி, ஹாஹாஹா, எதிர்பாராமல் நேர்ந்து விட்ட தவறை மன்னிக்கவும்.

   Delete
 14. திரு.தேவன் எழுதிய 'கோமதியின் காதலன்'.

  ReplyDelete
  Replies
  1. @பார்வதி, நீங்க சினிமா மன்னி என்பதை நிரூபிச்சுட்டீங்க! ரைட்டோ ரைட்டு!

   Delete
  2. ஓ.... இதுதான் விடையா? போனாப்போகுது போங்க.. இதில் எல்லாம் வயசானவங்களோட போட்டி போடமுடியுமா? பாவம்னு விட்டுக்கொடுத்துடணும்... அவ்வ்வ்வ்....

   Delete
  3. @ ஶ்ரீராம், பார்வதியைத் தானே வயசானவங்கனு சொன்னீங்க? ஹிஹிஹி, அப்போ ஓகே. மீ இன்னும் பிறக்கவே இல்லை! :)

   Delete
  4. ஹாஹாஹா, நம்ம கோமதி இல்லை இது! இந்த கோமதி வேறே!

   Delete
 15. Super, this is nice. New information to me. I like TRR's acting. Haven't heard of this film earlier. Thanks. Continue this type of puzzles pl :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, ரசனைக்கு நன்றி. "தேவன்" கதைகள் அநேகமா எல்லோரும் படிச்சிருப்பாங்கனு நினைச்சேன். அதிலும் கோமதி அரசு சரியாச் சொல்லுவாங்கனு ரொம்ப எதிர்பார்த்தேன். அவங்களுக்கே தெரியலை! :))))

   Delete
  2. மிகிமா, அடுத்ததும் இப்படி ஒண்ணைக் கொடுக்கலாம்னு தான் எண்ணம். பார்ப்போம். :)

   Delete
 16. டி.ஆரை, எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொண்டதால் தவறான பதில்.

  ReplyDelete
  Replies
  1. மீள்வரவுக்கு நன்றி கோமதி! நம்ம பதிவர் வெங்கட் அவர்கள் இந்தக் கதையைப் படிச்சுட்டு விமரிசனம் எழுதி இருக்கார். இன்னமும் திரு ரிஷபன் ஶ்ரீநிவாசன், தி.வா. எனும் திருமூர்த்தி வாசுதேவன் ஆகியவர்களுக்குத் தெரியும். அவங்கல்லாம் வந்து பதில் சொல்லுவாங்களோனு எதிர்பார்த்தேன். வெங்கட்டுக்கு இணையம் இல்லை! ரிஷபன் சார் வழக்கம்போல் பிசி போல! தி.வா ஜி+இல் மறைமுகமாய்ச் சொல்லிட்டார். :)

   Delete
  2. //http://venkatnagaraj.blogspot.com/2013/02/blog-post_6.html//

   வெங்கட் எழுதி உள்ள விமரிசனம். அதில் உங்கள் கருத்தையும் படித்தேன். படமும் பார்த்திருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் சொல்லி விடுவீர்கள் என எதிர்பார்த்தேன். :) அடுத்த க்ளூவாகப் பாடலைக் கொடுக்க இருந்தேன். அதுக்குள்ளே பார்வதி சொல்லிட்டாங்க! :)

   Delete
 17. 'ஹே' என்று வந்தவுடனேயே தேவன் எழுதியது என்று நினைத்தேன். மீதி விஷயங்களை கூகிளில் தேடி கோமதியின் காதலன் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் இந்தப் பெயரில் ஒரு படம் வந்துள்ளது என்பது, இதுநாள் வரை தெரியாது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கௌதமன்! நீங்க முதல்லேயே வந்து சொல்லிடப் போறீங்கனு நினைச்சேன்! :) படம் வந்தது தெரியாதுன்னா ஆச்சரியம் தான்! :)

   Delete
 18. இணையத்தில் இந்தக் கதை பற்றிய குறிப்பைப் படித்துவிட்டு, கோமதியின் காதலன் படம் தரவிரக்கினேன். என்னிடம் மின்னூலும் உள்ளது. இன்னும் கதை படிக்கவில்லை, படமும் பார்க்கவில்லை. விடை தெரிந்திருக்காது. உங்கள் பதிலை வைத்து, வெங்கட் தளத்தில் படித்திருக்கலாம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கு நன்றி நெ.த. கதையும் படிங்க, படமும் பாருங்க! நான் இன்னமும் படம் பார்க்கவில்லை! :)

   Delete
 19. அப்பாடா விடைகிடைத்தது....... நன்றி பார்வதி .ரா விற்க்கு
  இந்த மாதிரி கேள்வி பதில்கள் என்றால் விடை தெரியும் வரை அங்கேயே மனம் சுத்தி கொண்டு இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க பூவிழி, பா.ரா. சினிமா விஷயத்தில் மன்னியாக்கும்! ஶ்ரீராமையே தோற்கடிப்பார்! :)))))

   Delete
  2. அப்போ ஸ்ரீராம் தோத்திட்டாரா?:) ஹா ஹா ஹா நினைச்சேன் சிரிச்சேன்ன்ன்:).

   Delete
  3. ஆமாம் அதிரா, ஶ்ரீராம் தோத்துட்டார்! :)

   Delete
  4. வாங்க பூவிழி, அப்பாவி அதிரா, உங்க ரெண்டு பேரையும் இதன் பகுதி 2க்கு ரொம்ப எதிர்பார்த்தேன். வரவே இல்லை! :(

   Delete
 20. // ஶ்ரீராமையே தோற்கடிப்பார்! :)))))
  Reply //

  கர்ர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. என்ன தப்பு? என்ன தப்புன்னேன்! :))))

   Delete
 21. அதிரா, மீ இன்னும் பிறக்கவே இல்லை! சொல்லி இருக்கேன் பாருங்க! :)

  நீங்க லேட்டா வந்ததாலே பதில் சொன்னாலும் நோ பொற்கிழி! :)))))

  ஶ்ரீராமுக்கு நம்ம சினிமா மன்னி பா.ரா. முன்னாடி நிற்கக் கூட முடியாதாக்கும்! எல்லாத்துக்கும் டக், டக், டக் னு விடை வந்துடும்! :))))

  என்ன ஶ்ரீராம் நான் சொல்லுவது சரியா? :))))

  அவங்க அவங்க கருத்துக்கு நேரே பதில் சொல்லலாம்னு பார்த்தா அந்த ஆப்ஷன் என்னமோ தெரியலை வேலை செய்ய மாட்டேன்னு அடம்! :(

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்.... ஆமாம்னு சொல்லலாம்னு மனசுக்குள் தோணுதுன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்.

   Delete
 22. வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே பாடல் மட்டும் தெரியும் . படம் பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, எனக்குப் படம் பார்க்காததால் பாடல் தெரியலை என்பதே உண்மை! :) அதோடு பிரபலமான பாடலைக் கொடுத்தால் கண்டு பிடிக்கிறது எளிதாகிடுமே! அதனாலும் யூ ட்யூபைப் பார்த்துப் பாடலைக் கண்டு பிடிக்கலை! :)

   Delete
 23. வல்லி அக்கா சொன்ன பாடலை பகிர்ந்து இருந்தால் எல்லோரும் கண்டு பிடித்து இருப்பார்கள்.
  மிகவும் பிடித்த பாட்டு . வெங்கட் கொடுத்த சுட்டியில் போய் அந்த பாடலுக்காக படம் பார்த்தேன், மறந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, மீள் வரவுக்கு நன்றி. ஶ்ரீராம் கூடப் பாடல் கேட்டிருந்தாரே! நான் பாடல்களை எல்லாம் தேடலை! :)

   Delete
  2. /ஶ்ரீராம் கூடப் பாடல் கேட்டிருந்தாரே! நான் பாடல்களை எல்லாம் தேடலை! //

   ரொம்ப்ப்ப்பப்ப்ப்ப நன்றி.

   Delete
 24. ம்ம்ம் நஇந்தப் பதிவு வந்த அன்னிக்கே நான் வந்திருந்தாலும் கண்டிப்பா விடை தெரிஞ்சுருக்காது....ஹே என்பதை வைத்து தேவன் என்பது மட்டும் தெரிந்திருக்கும் ஆனா கதை வாசித்ததில்லை, படமும் பார்த்ததிலலி எனவே தெரிந்திருக்காது....

  தேவன் எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்தாளர்...கதையும் வாசிக்கணும், படமும் பார்க்கணும்..இப்படி ஒரு படம் எல்லாம் தெரியவே தெரியாது. ஸோ மிக்க நன்றி கீதாக்கா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தில்லையகத்து/கீதா, "தேவன்" அருமையான எழுத்தாளர்! அவரோட கதைகள் எல்லாம் என்னோட கலெக்‌ஷனில் இருந்தது. எல்லாம் இப்போத் தூள் தூளாகப் போய்விட்டன. :( ஆனாலும் ப்ளாஸ்டிக் கவருக்குள் போட்டு வைச்சிருக்கேன். :) இவை மின்னூலாகக் கிடைக்கின்றன. ஆகவே தரவிறக்கிப் படிக்கலாம்.

   Delete
 25. உங்கள் தூண்டுதல் பேரில் இந்தப் புத்தகத்தைத் தரவிறக்கி, படித்து முடித்தேன். சிரிக்க வைத்த அதே நேரத்தில் இத்தனை கேரக்டர்களை தனித்தனி விதமாக சொல்லி கதையை வேகமாக நகர்த்திய விதம் அதிசயிக்க வைத்தது!! எழுதி 60 வருடங்களுக்கு மேலிருக்கும், அந்த ஃபீலிங்கே வரவில்லை!! மணிபாக்ஸ் போன்ற சிறு வித்யாசங்கள் தாம்! 'ஹே' சொன்னவரை மற்றவர்களே கிண்டல் செய்தது வேறு அருமை!! நன்றி உங்களூக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்திற்கு!

  ReplyDelete
  Replies
  1. அருமையான புத்தகம் மிகிமா. எனக்கு மனசு சரியில்லைனா நான் கையில் எடுக்கறது தேவன் அவர்களின் ஏதேனும் ஓர் நாவல் தான்! இல்லைனா பொன்னியின் செல்வன்! எல்லாமே இப்போத் தனித்தனியாக வருகின்றன! :) வேறே ஒரு செட் புதுசா வாங்கலாம்னா! எனக்கப்புறமாப் படிக்க ஆள் இல்லை. இருக்கிறதுக்கே உயில் எழுதி வைச்சுடுனு ரங்க்ஸ் சொல்லிட்டு இருக்கார்! :) பாதி புத்தகங்கள் இணையத்து நண்பர்கள் அனுப்பி வைச்சவை! நேரில் பார்க்கையில் கொடுத்தவை!

   Delete