முதல்லேயே சொல்லிடறேன். எனக்கு, ஹிஹிஹி, ரெண்டு பேருக்குமே கடப்பா பிடிக்காது. கடப்பானா என்னனு அப்பாதுரை கேட்டதுக்காகவும், ஶ்ரீராம் கடப்பா பத்தித் தெரியாமலே இருப்பதற்காகவும் போடறேன். அப்பாதுரை சாப்பிட்டிருப்பார். ஶ்ரீராமும் தெரிஞ்சிருக்கும். பெயர் தான் கடப்பானு தெரிஞ்சிருக்காது. இப்போ சுமார் நான்கு பேருக்காகக் கடப்பா செய்யத் தேவையான பொருட்கள்! (படமெல்லாம் எங்கேனு கேட்கக் கூடாதாக்கும்! வீட்டிலே செய்யலை! ஆகவே கற்பனையிலே பார்த்துக்க வேண்டியது தான்! இணையத்திலே தேடிப் பார்த்துக் கிடைச்சாப் போடறேன். இதை "திங்க"ற கிழமைக்குக் கொடுக்கலாமானு தான் யோசிச்சேன். அங்கே வரிசை கட்டி நிக்கறாங்க! அதனால் இங்கேயே போடறேன்.
பூண்டு சுமார் 50 கிராம் உரித்தது. (எல்லோரும் 100 கிராம் போடுவாங்க. நான் குறைச்சிருக்கேன்.)
பெரிய வெங்காயம் (நல்ல பெரிசாவே இருக்கட்டும்) 4 பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைச்சுக்கவும்.
உருளைக்கிழங்கு நல்ல பெரிய கிழங்காக 4 எடுத்து வேகவைத்துத் தனியாக வைக்கவும்.
பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் நன்கு குழைய வேக வைக்கவும்.
இப்போத் தேவையான மசாலா சாமான்கள்
இலவங்கப்பட்டை ஒரு துண்டு ஒரு அங்குல நீளம் இருக்கலாம்.
கிராம்பு (அதிகம் சேர்த்தால் காரம் ஜாஸ்தியாயிடும்) என்பதால் 3, 4 போதும்.
பச்சை மிளகாய் (இப்போச் சந்தையில் காரமான மிளகாயே கிடைக்கிறது. அது எனில்) 4 அல்லது 5 போதும். இல்லை எனில் சுமார் 10மிளகாய் நடுத்தர அளவில்
பொட்டுக்கடலை ஒரு சின்னக் கிண்ணம் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்துமல்லி ஒரு சின்னக் கட்டு. ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்
தேங்காய் ஒரு சின்ன மூடி, துருவிக் கொள்ளவும்.
கசகசா (சரியாக அரைபடாது என்பதால் இரண்டு டீஸ்பூன் கசகசாவைப் பாலில் அல்லது நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். சாயந்திரம் வேண்டும் எனில் காலையிலேயே ஊற வைக்கலாம்.)
இப்போப் பச்சைமிளகாய், பச்சைக் கொத்துமல்லி நறுக்கியதில் பாதி (மீதிப் பாதி மேலே தூவ) பூண்டு உரிச்சதில் பாதி அளவு, தேவையானால் நறுக்கிய வெங்காயம் இரண்டு டேபிள் ஸ்பூன், கசகசா, இஞ்சி ஒரு துண்டு இவற்றோடு துருவிய தேங்காயையும், பொட்டுக்கடலையையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் லவங்கப்பட்டை, கிராம்பு போட்டுச் சிவந்ததும் மீதம் இருக்கும் பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். குழைய வேக வைத்த பாசிப்பருப்போடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதில் விடவும். தேவையான அளவு மஞ்சள் பொடி சேர்க்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு உதிர்த்து இதில் சேர்த்துத் தேவையான அளவுக்கு உப்புச் சேர்க்கவும். இவற்றில் அரைத்த விழுதைச் சேர்க்கவும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். நன்கு கொதித்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். (தேவையானால்) மேலே பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
மஞ்சள் பொடி சேர்க்காத கடப்பா! படத்துக்கு நன்றி கூகிளார்!
மஞ்சள் பொடி சேர்த்த கடப்பா!படத்துக்கு நன்றி மாலை மலர் கூகிளார் வாயிலாக!

கடப்பா என்று சொல்லவும் மார்பிள் கல்லைப்பற்றி எழுதப்போறீங்களோனானு நினைச்சேன் கடைசியில் இட்லி சாப்பிடுறதுக்கா....
ReplyDeleteஹாஹாஹா கில்லர்ஜி! நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! :)
Deleteகும்பகோணம் கடப்பா பற்றிப் பிரஸ்தாபித்ததே நான் தான்......
ReplyDeleteவாங்க ஜீவி சார், ஆமாம், ஆனால் கடப்பா நீங்க சாப்பிட்டிருக்கீங்க! தெரியாதவங்களுக்காகச் சொன்னது இது! :)
Deleteகும்பகோணம் பேரையே கெடுக்க வந்திருக்கும் போலருக்கே கடப்பா.. ஹிஹி.. சாப்பிட்ட நினைவே இல்லை.
Deleteஅப்பாதுரை, நானும் இன்று வரை சாப்பிட்டதில்லை. அந்தப் பூண்டு, மசாலா வாசனையே தலையைச் சுற்றும்! :)
Deleteஅதாவது உருளை கூட்டில் கிராம்பு பட்டை பூண்டு கசகசா சேர்த்தால் கடப்பா! அல்லது உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவில் பாசிப்பருப்பு சேர்த்தால் கடப்பா! சரிதானே?
ReplyDelete--
Jayakumar
அவங்க அவங்க நினைப்புக்கு ஏற்ப வைச்சுக்கலாம். எனக்குத் தெரிந்து இதைத் தான் கடப்பானு சொல்றாங்க! சாப்பிட்டதில்லை!
Deleteஇவ்வளவு சிரம்ப்பட்டதில்லை. ஙு.கி, வெங்காய பூண்டோடு ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கிளறி அக்கா கொடுத்திருக்கிறாள். மதுரையில் தல்லாக்குளம் தலைமைத் தபால் நிலையம் எதிரே வடை, பஜ்ஜிக்குக் கிடைக்கும் கடப்பா வேறு ரகம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அது வேறே! கடலைமாவு போட்டுச் செய்வதை நாங்க பாம்பே சட்னி என்போம். அதுக்குப் பூண்டு சேர்த்ததில்லை!
Deleteபாம்பே சட்னியா.. க்யா தமாஷ் ஹை..
Deleteஆமாம், அப்பாதுரை, எங்க வீடுகளிலே கடலைமாவு சேர்த்துச் செய்யும் இந்தக் கூட்டை பாம்பே சட்னி என்றே சொல்லுவோம். :)
Deleteஇதைத் தானே டாங்கர் பச்சடின்னுவாங்க?
Deleteஹையோ, ஹையோ, டாங்கர் பச்சடி வேறே! வறுத்த, வறுக்க உளுத்தமாவில் கெட்டி மோர் விட்டுக் கரைத்துக் கடுகு, ஜீரகம், பச்சைமிளகாய், கருகப்பிலை, பெருங்காயம், கொ.மல்லி தாளித்துச் செய்வது! பச்சடியாகவே பயன்படுத்தலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்குத் தொட்டுக்க இல்லை! :)
Deleteஇது எங்க சமையல்ல கிடையாது . என் கும்பகோணம் ஹஸ்பண்டும் இலவங்கப்பட்டை, பூண்டு பிஸினஸே நம்ம சமையல்ல கிடையாதுன்னுட்டா. இதுக்கும் குருமாவுக்கும் ஏதேனும் உறவு உண்டா? செய்முறை வித்தியாசம் அவ்வளவாத் தெரியலை.
ReplyDeleteஎனக்குத் தெரிந்து கடப்பாக் கல்லுதான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் பகிர்வுக்குப் பாராட்டுகள்
எனக்குமே கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும் நெ.த. ஆனாலும் சாப்பிட்டதில்லை. கும்பகோணம், தஞ்சை ஊர்க்காரர்கள் இதைப் பத்திப் பிரமாதமாச் சொல்வாங்க!
Deleteகடப்பா வீட்டில் செய்வதுண்டு. சப்பாத்தி, பூரி, என்று தொட்டுக் கொள்ள. இட்லிக்கும் கூடச் செய்ததுண்டு. அடைக்கும் சில சமயம். இதே ரெசிப்பிதான்.
ReplyDeleteதேங்காய் கொஞ்சம் குறைவாக இருந்தால் கூட முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்வேன். அது போல தாளிப்பில் போடும் பட்டை லவங்கம் இரண்டையும் சில சமயம் வீட்டில் வாயில் அகப்படுகிறது என்று குறைப்பட்டுக் கொள்வார்கள் என்பதால் அதைப் பொடித்துப் போட்டுவிடுவேன் பொடித்துப் போடுவதால் மணம் தூக்கலாகும் என்பதால் பாதியளவு பயன்படுத்தி....நன்றாக இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். மஞ்சள் பொடி சேர்த்துச் செய்வேன். செய்து கொஞ்ச நாளாச்சு கீதாக்கா...இப்ப நினைவுபடுத்திட்டீங்க.....இப்படித்தான் என்ன செய்யறதுனு சில சமயம் குழம்பும் போது திங்க பதிவுகள் அங்கு வரும் கருத்துகள், இல்லை நீங்க ஏதாவது சொல்வது என்று நம்ம நட்பு வட்டம் போடும் சாப்பாடு பதிவுகள் கை கொடுக்கும்...ஹிஹிஹிஹி...
சாஷிகா கிச்சன் வலைத்தளமும் நல்லாருக்கு....http://sashiga.blogspot.in/ தேனம்மை அவங்களோட சாட்டர்டே கார்னரில் கிடைச்சுது...அங்கிருப்பவையும் பொதுவா நமக்குத் தெரிஞ்சதுதான் ஆனால் அவங்க அழகா க்ளாசிஃபை பண்ணிக் கொடுத்திருக்காங்க. ப்ரசெண்டேஷனும் தெளிவா கொடுக்கறாங்க..
கீதா
நான் செய்ததே இல்லை கீதா! சாஷிகா கிச்சன் வலைப்பக்கமும் போய்ப் பார்க்கிறேன். லவங்கப்பட்டைப் பொடியும் வைச்சிருக்கேன். எப்போவானும் சேர்ப்பேன். ரொம்பச் சேர்த்தால் வாசனை அதிகமாகிச் சில சமயம் காரமும் ஆகி விடுகிறது.
Deleteதாங்க்ஸ் கீதாக்கா....கடப்பா நினைவு படுத்தியதற்கு...கொஞ்ச நாளாச்சு செய்து. மகன் இங்கு இல்லையா...அதான்
ReplyDeleteகீதா
செய்ங்க! என் பேரைச் சொல்லிச் சாப்பிடுங்க!
DeleteEn indha peyar?
ReplyDeleteவாங்க மிகிமா, ஏன்னு எல்லாம் தெரியாது! கும்பகோணம் வாசிகளைத் தான் கேட்கணும். என்னைப் பொறுத்தவரை இந்தப் பெயரே புதுசு! பூண்டெல்லாம் என் பிறந்த வீட்டில் சேர்த்தது இல்லை. வெங்காயமும் சின்ன வெங்காயம் தான்! :) இதெல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாப் பார்ப்பது!
Deleteகீதாக்கா நானும் பூண்டு அளவு பாதிதான் போடுவேன்...
ReplyDeleteகீதா
ரொம்பப் பூண்டு போட்டா வாசனை சாப்பிட விடாமல் அடிக்கும்னு என்னோட எண்ணம்! அதான்! :) நன்றி கீதா!
Deleteஅது சரி கீதாக்கா கடப்பானு ஏன் பெயர் வந்தது??!! இல்லை யாராவது சொல்லுங்க...கடப்பானு பேர் அதுவும் கும்பகோணத்துல???!!
ReplyDeleteகீட்ஜா
தெரியலை கீதா! மிகிமாவும் அதான் கேட்டிருக்காங்க! என்னனு கும்பகோணத்துக்காரங்க தான் சொல்லணும்.
Deleteகடப்பா என்ற தோய்த்துத் தொட்டுக்கற சமாச்சாரத்தை பல ஊர்களில் நான் சாப்பிட்டிருக்கிறேன்.
Deleteகாஞ்சீபுரம், பவானி, திருப்பத்தூர், புதுவை எல்லா ஊர்களிலும்.
ஆனால் கும்பகோணத்து கடப்பா என்று சொன்னது கீதாம்மா தான். அதனால் தலைப்பிட்ட காரணத்தை அவங்க தான் சொல்லணும்.
பூண்டின் மேல் எனக்கு அளப்பரிய காதல். உரித்த கத்தை பூண்டை ரசத்தில் போட்டு, ரச வண்டியிலிருந்து எடுத்துச் சாப்பிட்டால் முந்திரிப்பருப்பு கெட்டது போங்கள்!
பூண்டு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஒன்று. இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் ஆரம்பித்து இதய நோய் அண்டாது இருக்க என்பது வரை பூண்டு வரப்பிரசாதமான ஒன்று.
எனக்குத் தெரிந்து இது கும்பகோணம் நகரிலேயே அதிகம் செய்யப்பட்டுப் பின்னர் பிரபலம் அடைந்து மற்ற ஊர்களுக்குப் போனதாகச் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை கடப்பா என்னும் பெயரே எனக்குப் புதுசு! பல ஆண்டுகள் பெயரை மட்டும் கேள்விப் பட்டிருந்துவிட்டுப் பார்த்ததே இல்லை. ஒரு முறை ஓட்டலில் சாப்பிடப் போனப்போ கடப்பானு தெரியாம இட்லி கேட்டுத் தொட்டுக்க வந்தது கடப்பா! அதைத் தொடவே இல்லை. இருந்த சட்னியோடு மி.பொடி கொஞ்சம் வாங்கிச் சாப்பிட்டேன்.:) சில ஹோட்டல்களில் தேங்காய்ச் சட்னியில் கூடப் பூண்டு! :(
Deleteகொஞ்சம் சோம்பும் சேர்ப்பேன் தாளிக்கும் போது....சொல்ல விடுபட்டுவிட்டது...
ReplyDeleteகீதா
பொதுவாச் சப்பாத்திக்கான கூட்டு வகைகள், கறி வகைகளில் நானும் ஜீரகம், சோம்பு தாளிப்பேன் கீதா!
Deleteநான் கடப்பா சாப்பிட்டதில்லை. Ler me try. என் புகுந்த வீட்டில் உ.கி.போட்டு இஷ்டு என்று ஒன்று செய்வார்கள். செய்முறை எழுதுகிறேன். அது இஷ்டு இல்லை, ஸ்டூ என்பேன் நான். என் கணவர் ஓப்புக் கொள்ள மாட்டார்.
ReplyDeleteஇஷ்டு? தெரியலை பானுமதி! விபரமா எழுதுங்க! பார்க்கலாம். நானும் இன்று வரை கடப்பா சாப்பிட்டதில்லை! :)
Deletehttp://kamalabalu294.blogspot.in/2015/07/blog-post_26.html ஹிஹிஹி, கூகிளில் தேடியதில் ஜிஎம்பி சார் பதிவு போட்டு நான் அதுக்கு பதிலும் போட்டிருக்கேன். :)
Deleteஎங்க கும்பகோணம் பாட்டி இதைச் செய்ததே இல்லை. முதலில் உ.கிழங்கே உள்ள வராது. அதுக்கப்புறமான்னா பூண்டு வெங்காயம் வர. ருசியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteபூண்டு சமைச்சதுக்கப்புறம் வாசனை போகாதுன்னு
இங்கே சமைத்துப் பார்க்க பர்மிஷன் கேட்கிறேன். நன்றி கீதா.
எங்க வீடுகளிலே உ.கி..சி.வெ. உண்டு. பூண்டெல்லாம் பிரசவம் ஆனவங்க மட்டுமே சாப்பிடுவாங்கனு பல வருஷங்கள் நினைச்சிருக்கேன். :) எல்லோரும் சாப்பிடுவாங்க என்பதே ராஜஸ்தான் போய்த் தான் தெரியும்! :)
Deleteவல்லிசிம்ஹன் சொல்றது ரைட்டு.. இது கும்பகோணம் வஸ்துவே இல்லை.. ஜீவி சும்மா கிளப்பி விட்டுப் போயிட்டாரு..
Deleteஇதன் மூலம் கும்பகோணம் என்றே பலரும் சொல்கின்றனர் அப்பாதுரை! :)
Deleteசென்னை வரை பரவி இருக்கும் கடப்பா என்னும் பெயரை மதுரைப் பக்கம் சொல்லிப் பாருங்க! பலருக்கும் தெரியாது! புரியாது! :)))) திருநெல்வேலியிலே சொதி என்றால் தெரியும். அதுவே மற்ற ஊர்களிலே முன்னெல்லாம் தெரியாது! இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சொதியிலும் முழுப் பூண்டுகள்! :)
Deleteநான் கும்பகோணத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் கும்பகோணம் கடப்பா என்பதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteவாங்க சோழ நாட்டில் பௌத்தம், கும்பகோணத்தில் இப்போதும் பல ஹோட்டல்களில் வாரம் ஒரு நாள் கடப்பா போடுவாங்க! அன்னிக்கு அந்தக் குறிப்பிட்ட ஓட்டலுக்குப் போகாமல் தவிர்ப்போம். :)
Deleteசினிமாவுல வர கட்டப்பா மாதிரியா? எப்படி வந்தது எங்கிருந்து வந்தது யார் கொண்டு வந்தாங்கனு ஒரு வரலாறும் இல்லையா கடப்பா கட்டப்பா?
ReplyDeleteதேடிப் பார்க்கிறேன் அப்பாதுரை!
Delete'மெய்ன் டிஷ்'ஐ சீக்கிரம் உள்ளே கடத்துவதற்குப் பயன் படுவதால் இந்த 'சைட் டிஷ்'பேர் கடப்பா!!?? ஹஹஹா
ReplyDeleteநீங்க வேறே! இதைக் கொண்டு வைச்சால் சாப்பிட ஆரம்பிச்ச இட்லியைக் கூட வேணாம்னு சொல்லத் தோணும்! அவ்வளவு மசாலா வாசனை! :) எனக்கு ஒரு விள்ளல் கூடச் சாப்பிட முடியாது! :)
Deleteகேரள இஷ்டூ போல இருக்கோ இஷ்டு என்றால் )stew வின் மறுவல்
ReplyDeleteஇருக்கலாம் ஐயா! இஷ்டுவும் சாப்பிட்டதில்லை! :) ஸ்டூவும் சாப்பிட்டதில்லை!
Deleteஸ்டூ நான் சாப்பிட்டிருக்கிறேன். மதுரையில் ஒரு மலையாள அக்கா ஒருமுறை செய்து கொடுத்தார்கள்!
ReplyDelete//இதுதான் டாங்கர் பச்சடியா//
ReplyDeleteஹையோ.... ஹையோ. அப்பாதுரைக்கு நானே தேவலாம் போல...!