வழக்கமா நம்ம நெ.த. இல்லைனா ஶ்ரீராமோடத் தான்போட்டி போடணும்னு தோணும். இந்தத் தடவை மாஸ்டர்செஃப், கவிப்புயல், அதிராமியாவோட போட்டி! அவங்க கீரை வடை போட்டிருக்கிறதாலே நாம இங்கே ஒரு இனிப்புப் பதார்த்தம் போட்டுடுவோம். அதுவும் ஏஞ்சலினுக்குப் பிறந்த நாள்னு வேறே சொல்றாங்க! வெறும் காரமாக் கொடுத்தா எப்பூடி? நாம ஸ்வீட் கொடுப்போம்!
இது நெ.த. பல மாதங்களாகக் கேட்டுட்டு இருந்தது. போன மாசம் தான் செய்தேன். உடனே போடுவதற்காக ஶ்ரீராமிடம் கேட்டப்போ அவர் இப்போ உள்ளது ஜனவரி வரைக்கும் வரும், பரவாயில்லையானு கேட்டிருந்தார். உடனே எனக்கு உடம்பும் வந்ததாலே சுத்தமா இதைப் பத்தின நினைப்பே இல்லை. போன வாரம் தான் நினைப்பு வந்தது. போடச் சந்தர்ப்பம் வாய்க்கலை! ஒரு மாசம் ஆச்சே செய்துனு நினைக்காதீங்க! இது ஒரு மாசம் வரை நன்றாகவே இருக்கும். :) ஆனால் நான் செய்தது ரொம்பக் கொஞ்சம் தான்! நான் ருசியே பார்க்கலை. உடம்பு ரொம்ப முடியாமல் இருந்ததால் சாப்பிடலை!
பெயரே சொல்லாமல் எழுதிட்டு இருக்கேனேனு பார்க்காதீங்க. ரொம்ப சுலபமான ஒன்று தான் இது. ஜீரா போளி! சாதாரணமாகப் பூரண போளி தான் வித விதமாப் பூரணம் வைச்சுக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் இது ஜீரா போளி. எப்படிச் செய்வது?
ரவை இரண்டு கிண்ணம்
மைதா அல்லது கோதுமை மாவு ஒரு கிண்ணம்
வெண்ணெய் அல்லது நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு அரை டீஸ்பூன்
சர்க்கரை அரைக்கிலோ
ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன் அல்லது ரோஸ் எஸ்ஸென்ஸ்
தேங்காய்ப் பூ, முந்திரி, பாதாம், மெலிதாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால்)
ரவை பொடி ரவையா இருந்தா, கிடைச்சா நல்லது. இல்லைனா கிடைக்கும் ரவையை இரண்டு கிண்ணம் எடுத்துக்குங்க!
கோதுமை மாவு/மைதாதான் பிடிக்கும்னா மைதா மாவு ஒரு கிண்ணம். நெய் அல்லது வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு கொஞ்சம் போல! கீழே காட்டியபடி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் போட்டு உப்பையும் போட்டு நன்றாகக் கைகளால் தேய்க்கவும். அவை நன்கு கலந்து நுரையாக வர ஆரம்பிக்கையில் ரவையையும் கோதுமை மாவையும் சேர்க்கவும். மீண்டும் கைகளால் நன்கு கலக்கவும். கலந்த மாவு உதிராக வரும். அப்போது நீர் சேர்த்துப் பிசையவும்.
நீர் சேர்த்துப் பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும்.
பிசைந்த மாவு! இதைச் சின்ன உருண்டைகளாக உருட்டிப் பூரி போல் இடவும்.
இட்ட பூரிகளை எண்ணெய் அல்லது நெய்யில் பொரிக்கவும். அதற்கிடையில் அடுப்பில் இன்னொரு அடி கனமான பாத்திரத்தில் அரைக்கிலோ சர்க்கரையைப் பாகு வைக்கவும்.
பூரி பொரிக்க ஆரம்பிக்கும் முன்னர் சர்க்கரையைப் பாகு வைக்கவும். பாகு கைகளால் உருட்டினால் மிளகு போல் உருட்ட வர வேண்டும். இந்தப் பாகில் ஏலக்காய்த் தூள், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ(கிடைத்தால்) அல்லது ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்த்தால் ஏலக்காயெல்லாம் எடுபடாது. உங்கள் விருப்பம் போல் சேர்க்கவும். பொரித்த பூரிகளை இந்தப் பாகில் முக்கி எடுத்து ஒரு அகன்ற தாம்பாளத்தில் பரவலாக வைக்கவும்.
பாகில் முக்கிய பூரி!
பாகில் முக்கிய பூரிகளைத் தாம்பாளத்தில் வைத்திருக்கேன். தேவையானால் முந்திரி, பாதாம் போன்றவற்றையோ அல்லது தேங்காய்ப் பூவையோ மேலே ஒட்ட வைக்கலாம்.எங்களுக்கு அன்றைய விசேஷத்திற்கு அது தேவை இல்லை என்பதால் சேர்க்கவில்லை. சுமார் பதினைந்து நாட்களுக்காவது இது கெடாமல் நன்றாக இருக்கும்.
நல்ல கொழுப்புச் சத்துள்ள பாலைச் சுண்டக் காய்ச்சி இதன் மேல் விட்டுக் கொண்டும் பால் போளி போல் சாப்பிடலாம். அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும். இதைச் சர்க்கரைப் பாகில் முக்காமல் சர்க்கரையைப் பொடியாக நன்கு திரித்து மேலே தூவுவதும் உண்டு! ஆனால் அதில் உள்ளே தித்திப்புத் தெரியாது. பாகு வைத்து முக்கி எடுத்தால் உள்ளேயும் பாகு புகுந்து கொண்டு மொறுமொறுப்பும், இனிப்புமாக நன்றாக இருக்கும்.
ஏஞ்சலின், உங்க பிறந்த நாளைக்கு இங்கே வந்து ஸ்வீட் எடுத்துக்கோங்க. அப்புறம் ஒரு நாள் மொறு மொறு கீரை வடையும் செய்து தரேன். அதிராவுக்குக் கிடையாது! அவங்க தேம்ஸிலே குதிச்சால் நான் காவிரியில் குதிப்பேனே!
படங்கள் நிறைய எடுத்தும் ஃபோல்டர் சரியாகத் திறக்காததால் முக்கியமான படங்களை மட்டும் போட்டிருக்கேன்.

கீழக்கரையில் இந்த போளி விதம் விதமாய் செய்வார்கள்.
ReplyDelete"நான் அரசியலில் குதிக்கப்போறேன்"
அரசியல்வாதிகளைவிட பதிவர்கள் உதார் பார்ட்டியாக இருக்காங்க... யாரும் குதிச்ச பாடாக இல்லை.
கடைசியில் ஏமாறுவது எங்களைப் போன்ற அப்பாவிகளே..
வாங்க கில்லர்ஜி! குதிக்கிறேன் சொல்றது ரொம்ப சுலபமாச்சே! :))) உங்களுக்கு இந்த போளி பற்றித் தெரிந்திருப்பது ஆச்சரியம்!
Delete//நெ.த.வா? அதிராவா? ஏஞ்சலினா? ஶ்ரீராமா? யாருடன் போட்டி?// நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்!! :))
ReplyDeleteசெய்து பார்க்கிறேன், நன்றி!!
ரொம்ப நன்றி மிகிமா!
Delete/ஏஞ்சலினுக்குப் பிறந்த நாள்னு வேறே சொல்றாங்க! வெறும் காரமாக் கொடுத்தா எப்பூடி? நாம ஸ்வீட் கொடுப்போம்!//
ReplyDeleteஅஆவ் !! தாங்க்யூ அக்கா தாங்க்யூ :)
எடுத்துக்கிட்டேன் எடுத்துக்கிட்டேன் :)
வெயிட்டிங் for மொறு மொறு கீரை வடை ..
மிக்க சந்தோஷமும் நன்றியும் அக்கா ..
நல்வரவு ஏஞ்சலின். சாப்பிட்டீங்களா? :)
Deleteஅக்கா ..உண்மையில் அன்னிக்கு இதை படிக்கும்போது கண்ணில் நீர் வந்தது அப்பா இதை செய்வார் அடிக்கடி ..
Deleteஎங்க வீட்ல நளபாகம் :) அவர் கல்லூரியில் படிச்சி தனியே பல வெளியூரில் வேலை செஞ்சதால் தனக்குத்தானே சமைச்சி பழகினாராம் .
ஒரு நாள் அம்மாக்கு முடியலை எனது டிபன் பாக்சில் அப்போ லயோலாவில் ஒரு டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸுக்கு போயிருந்தேன் டிபனை திறந்தா இந்த போளிகள் இருக்கு சத்தமில்லாம கொட்டிட்டு காண்டீனில் சோலே பட்டூரா வாங்கி சாப்பிட்டு வந்தேன் இப்போ நினைச்சா கில்டியா இருக்கு ...அதனால் க்ளூட்டன் அலர்ஜிலாம் தூக்கிப்போட்டு இந்த ஸ்வீட் போளிகளை அப்படியே கண்ணால் விழுங்கிட்டேன் :)
இந்த ஜீரா போளி அப்புறம் பால் போளி இரண்டுமே எங்க அம்மா மற்றும் அப்பாவின் ஸ்பெஷல் .
ReplyDeleteஅந்த மாவு பிசைந்தது வைச்சது பூரிகள் எல்லாம் அப்படியே அப்பா அம்மாவை நினைவுக்கு கொண்டு வர வைச்சிட்டீங்க ..
அவங்க இருவருக்குமே ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும்
இங்கே எங்களுக்கும் ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரை வந்ததும் குறைஞ்சு விட்டது.
Deleteசும்மா கோல்கப்பா (பானிபூரி) வாங்கி பாகில் முக்கி எடுத்தால் போதாதோ. ஹிஹி.
கடையிலே விக்கிற பானிபூரி எல்லாம் வாங்கறதே இல்லையே! அதை முக்கினால் அவ்வளவு தான் அப்படியே பாகில் கரையும்.
Deleteஹை அக்கா இந்த ஜீரா போளியை பால் போளியாக என் மாமியார் வீட்டில் சரஸ்வதி பூஜை அன்று செய்வார்கள். கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு வருடமும் செய்வேன். ஜீரா போளியை செய்து டபாவில் ரெடியாக வைத்துக் கொண்டால் விருந்தினர் வரும் போதும் உடன் பால் போளியாகக் கூடச் செய்து கொடுக்கலாம் பருப்புகளால் டெக் பண்ணி பால் சுண்டக் காய்ச முடியாட்டால் இருக்கவே இருக்கு மில்க்மெய்ட் கலந்து உடன் செர்வ் செய்யலாம். நான் இதே பூரியை கொஞ்சம் நெய் உள் தடவி மடக்கிட் இட்டு பொரிப்பேன்.
ReplyDeleteஅது போல கர்நாடகாவில் இதே பூரியை சிரோட்டினு சொல்வாங்கலியா சிரோட்டி ரவை மைதாவுடன் கலந்து 5 அல்லது 6 ரவுண்ட் இட்டு உள்ளே நெய் + அரிசி மாவு கலந்து தேச்சு அடுக்கு எல்லாத்தையும் சுருட்டி அப்புறம் சின்னதாகக் கட் பண்ணி அது உள்ளே பொற பொற என்று பரோட்டா போன்று சுருளுடன் பொரித்து அப்புறம் இதே போன்று பொடித்த ஜீனி மேலே தூவி பால் விட்டு... இதுவும் வீட்டில் நான் தீபாவளியின் போது எல்லாரும் கூடுவதாக இருந்தால் செய்வதுண்டு.
கல்யாணங்களில் கூட இது பரிமாறப்படுகிறது ஆனால் உள்ளே தடவ டால்டா பயன்படுத்தறாங்க ஸோ பாலோடு சாப்பிடும் போது வாயில் ஒரு மாதிரி வழு வழுப்பாக இருக்கும்...
சூப்பர் ரெசிப்பி கீதாக்கா..செய்முறையும் படங்களும் செம....நானும் திங்க வுக்கு சிரோட்டி கொடுக்கலாம்னு லிஸ்ட்ல வைச்சிருக்கேன்.. ஆனா எப்ப செய்வேனு தெரில...விசேஷம் வந்தா எல்லாரும் சேர்ந்தா செய்யலாம்...பார்ப்போம்...
ஏஞ்சல் எஞ்சாய்!!!
கீதா
பால் போளிக்கு மைதாவில் தான் செய்வாங்க. அதுக்குப் பதிர் போடுவது உண்டு. சர்க்கரைப் பாகு வைத்துக் கொண்டு பாகில் நல்லச் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து போளிகளை முக்கி எடுப்போம். மில்க்மெய்ட் சேர்த்தது இல்லை! சிரோட்டி செய்ததில்லை. டால்டா பயன்பாடே வீட்டில் கிடையாது. நெய் (வீட்டில் காய்ச்சியது) அல்லது வெண்ணெய் தான். ரொம்பவே பதிர் போட்டுத் தேய்த்தால் எல்லோருக்கும் பிடிக்கிறதில்லை.
Deleteகீதாக்கா மீண்டும் பதிவுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி...
ReplyDeleteஎனக்கு கீரை அடை உண்டுலியோ??!!!! அப்புறம் அக்கா பார்த்து காவிரில இப்ப தண்ணி இருக்கோ??!! அதான் தைரியமா குதிக்கறேன்னு சொல்லுறீங்க போல...ஹா ஹா ஹா ஹா...எதுக்கும் நெட், கயிறு எல்லாம் வைச்சுக்கோங்க!!!!!!!!
கீதா
கீரை அடையும், செய்திருக்கேன், வடையும் செய்திருக்கேன். சாதாரணக் கீரைகளை விட மெந்தியக் கீரையில் அடை நன்றாக இருக்கும். இங்கே சொல்லி இருப்பது கீரை வடைதான்! காவிரியிலே தண்ணி இருக்கு. என்னோட கணுக்கால் முழுகும் வரை தண்ணீர்! :)))))
Deleteஜீரா போளி!
ReplyDeleteபடிக்கும்போதே நாவில் அருவி. ம்...ஹூம்... நெல்லைத்தமிழன் வீட்டுக்குப் பக்கத்தில் வாடகைக்கு இடம் கிடைத்தால் போய்விடலாம். அவர் எப்படியும் செய்து பார்க்கும்போது சாம்பிள் பீஸ் கிடைக்கும்!!
இல்லையா? கிளம்பி ஸ்ரீரங்கம் வரவேண்டும்.
இரண்டாவது ஈஸி!
வாங்க ஶ்ரீராம், வாங்க! என்னிக்குனு சொல்லுங்க பண்ணிடலாம்
Deleteஸாரி அக்கா போளி என்று வந்துவிட்டது அடிக்கும் போது பூரி என்று எடுத்துக் கொள்ளவும்..
ReplyDeleteகீதா
ஓ, அதனால் என்ன! பரவாயில்லை.
Deleteகர்நாடகாவில் பதிர் பேணி நும் சொல்றாங்க சிரோட்டிய. ஹையோ உள்ள ரூம் ரூம் போல பொற பொறனு....நல்லா வருது..... ஆனா கடைகள் ல பதிர் பேணி நு விக்கறாங்கலே அது இடியாப்பம மாதிரி ஆனா ட்ரையா அப்படியெ பொடியறா மாதிரி விக்கறாங்க அதுல வீட்டில வந்து நாம சுண்டக் காய்ச்ச்ய பாலை சேர்க்கணும்...அதுலயும் டூ மச் ஆஃப் டால்டா....ஹயோ நாக்குல அப்படியே கொழ கொழனு அந்த டால்டா...அதனால் அந்த பக்கமே போறதில்லை...
ReplyDeleteகீதா
கீதா ரங்கன் - பதிர் பேணி - மைதாவுல, (நியாயமா நெய் சேர்த்து) ரொம்பக் கஷ்டப்பட்டு பண்ணுவாங்கன்னு சொன்னார், இங்குள்ள உத்திரப்பிரதேச ஸ்வீட் கடைக்காரர். இங்கு 1 பீஸ் 170 ரூ (நெய்ல செஞ்சது, வேலை ஜாஸ்தி இதுக்குன்னார்). ஆனா, அவ்வளவு நெய், ஜீனி நிச்சயம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. நீங்க சொன்ன சிரோட்டி(?) வேற. நான் ஜீரா போளின்னதும், நாலஞ்சு லேயரா மடக்கி (வட்டத்தை நெய் தடவி அரையாக்கி கொஞ்சம் அழுத்தி பின் நெய் தடவி காலாக்கி ) அப்புறம் பொரித்து ஜீனிபாகுல போட்டு எடுக்கறதுன்னு நினைத்தேன். ஒருவேளை கீ.சா மேடம் சுலபத்திற்காக வெறும் பூரியை ஜீனிப் பாகுல போட்டு எடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன்.
Deleteபதிர்பேணி வேறே! சிரோட்டி வேறேனு நினைக்கிறேன். மும்பையில் சுருள் பூரினு செய்யறாங்க. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரோனு நினைக்கிறேன்.
Delete//ஒருவேளை கீ.சா மேடம் சுலபத்திற்காக வெறும் பூரியை ஜீனிப் பாகுல போட்டு எடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன்.// ஏற்கெனவே வெண்ணெயோ, நெய்யோ சேர்த்துக் குழைத்துக் கொண்டு தான் பின்னர் மாவைச் சேர்ப்போம். ரொம்பவே பதிர் போட்டால் சில சமயங்களில் ஜீராவில் முக்கும்போது உதிர்ந்து விடும்! எங்க வீடுகளிலே பதிர் ஜீராபோளிக்குப் போடுவதில்லை. என் வரை போட்டுப் பார்க்கலை!
Deleteஜீரா போளி செய்முறை நன்றாக இருக்கிறது . ஏஞ்சலின் சாப்பிட்டு ருசி பார்த்து சொன்னபின் வருகிறேன்.
ReplyDeleteஅதிரா, உங்கள் பிறந்த நாளுக்கு உங்களுக்கு பிடித்த ஸ்வீட் செய்து தருவார்கள் கீதா.
காவிரியில் நிறைய நீர் இருக்கா கீதா? இப்போது மழை பெய்ததால் நீர்வரத்து இருக்கும் இல்லையா?
வாங்க கோமதி அரசு. நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க. அதிராவுக்குக் கிடையாது! :)))) காவிரியில் ஏதோ கொஞ்சம் நீர் ஓடுது!
Deleteஆஆஆஆவ்வ்வ்வ்வ் கீதாக்கா இப்பூடி என்னை ஒரே நாளில் அங்கும் இங்கும் ஓட வைக்கிறீங்களே இது நியாயமாஆஆஆஆ?:).. பாருங்கோ இப்பூடி ஓடி ஓடியே மீ 2 கிலோ குறைஞ்சிட்டேன்ன்ன்:))...
ReplyDelete///ஏஞ்சலின், உங்க பிறந்த நாளைக்கு இங்கே வந்து ஸ்வீட் எடுத்துக்கோங்க. அப்புறம் ஒரு நாள் மொறு மொறு கீரை வடையும் செய்து தரேன். அதிராவுக்குக் கிடையாது!///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடுங்கோ விடுங்கோ இதுக்கு மேலயும் இந்த உசிரூஊஊஊஊ உடம்பில இருக்குமெண்டா நினைக்கிறீங்க:)).. மீக்கும் ரோசம்ம்ம்ம்ம் மானம் ம்ம்ம்ம் வெய்க்கம்... சூடு சொரணைஐஐஐஐஐ.. கடமைஐஐஅ நேர்மைஐஐஅ எருமைஐஐஅ எல்லாம் இருக்குதாக்கும்:)) தோஓஓஓஓஓஒ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்...
ஆங்ங்ங் வெயிட் வெயிட்.. இன்று அஞ்சுட பேர்த்டே.. அதுவும் 66 ஆவது:)).. நோ நோ ஒரு நல்ல நட்புக்கு இன்று குதிப்பது அழகல்ல:) நாளக்குப் பார்த்திடலாம்:))
ஹாஹாஹா, மாஸ்டர்செஃப் அதிரா, உங்களை அங்கும் இங்கும் ஓட வைக்கிறது தானே எனக்கு வேலை! உங்களுக்குக் கிடையாது! தேம்ஸிலே நீங்க குதிச்சா நான் காவிரியில் குதிப்பேனாக்கும்.
Deleteகீதாக்கா நீங்க இப்போ அவசரப்பட்டு இங்கே போட்டிட்டீங்க ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்போறார் ஹா ஹா ஹா:)... இந்த சுவீட்டை மீ ஸ்-ரீட் ஃபூட் இந்தியா.... என நினைக்கிறேன் அதில் பார்த்திருக்கிறேனே.. சூப்பரா செய்வாங்க.. ஆனா அவங்க குட்டிக் குட்டி பூரியாத் தட்டுவாங்க நீங்க அலுப்பில் பெரிசா தட்டி டக்குப் பக்கென அலுவலை முடிச்சிட்டீங்க :)).. சாப்பிட்டுப் பார்த்ததில்லை இதுவரை..
ReplyDeleteமுதலில் நெ. தமிழன் செய்யட்டும் நான் அடுத்துச் செய்றேன்:))
மாஸ்டர்செஃப் அதிரா, இது அளவில் இன்னும் பெரிசா எங்க மாமியார் செய்வாங்க. நான் தான் மடித்துப் போட்டு மடித்துப் போட்டு முக்கோண வடிவில் கொண்டு வந்தேன். ஆகவே நான் செய்தது பெரிசே இல்லை!
Delete///அவங்க தேம்ஸிலே குதிச்சால் நான் காவிரியில் குதிப்பேனே!///
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ எதுக்கு நீங்க குதிக்கிறேன் என்கிறீங்க?:).. இப்போதானே கொஞ்சம் கொஞ்சமா நலமாகி வாறீங்க:).. அந்தச் சாட்டில 2 நாளா நீங்க சமைக்காமல் இருந்த கதை எல்லாம் அறிஞ்சோம்ம்:))..
///இந்தத் தடவை மாஸ்டர்செஃப், கவிப்புயல், அதிராமியாவோட போட்டி! அவங்க கீரை வடை போட்டிருக்கிறதாலே நாம இங்கே ஒரு இனிப்புப் பதார்த்தம் போட்டுடுவோம்///
ஹா ஹா ஹா என் அத்தனை பட்டங்களையும் ஒழுங்காப் பாடமாக்கி வச்சிருக்கிறீங்க.. மீ கூட பலதை மறந்திட்டேன்ன்ன்:)..
வாங்க மாஸ்டர்செஃப், இன்னிக்கும் வீட்டிலே சமைக்க முடியலை! சாதம் மட்டும் தான் வைச்சேன். மெஸ்ஸிலே இருந்து சாம்பார், ரசம்! கறி, கூட்டு! :)))
Deleteஉங்களோட பட்டங்களை நினைவில் வைச்சுக்கலைனா முடியுமா? அடுத்து என்னவோனு காத்திருக்கேன்.
Deleteஅருமையான ஸ்வீட் செஞ்சு பார்த்துட்டு வேண்டியதுதான்
ReplyDeleteநன்றி அவர்கள் உண்மைகள்.
Deleteஇதுபோல மறந்து போன சமயல் குறிப்புகளை ஞாபக படுத்தியதற்கு நன்றிம்மா
ReplyDeleteநன்றி அவர்கள் உண்மைகள்.
DeletehAPPY bIRTHDAY ONCE AGAIN Angel. கீதா ரொம்ப அழகா செய்து படமும் போட்டிருக்கிறீர்கள். பால் பூரி இன்னும் பிடிக்கும்.
ReplyDeleteஉடம்பு இப்போ தேவலாமா. எல்லோரும் ருசித்து மகிழட்டும் மா.வாழ்த்துகள்.
வாங்க வல்லி, உடம்பு தான் படுத்திட்டு இருக்கு! :)
DeleteThanks vallimaa :)
Deleteஆஹா..... போளி - எல்லா வகை போளியும் எனக்குப் பிடிக்கும்!
ReplyDeleteபூரி போல செய்வதெல்லாம் எனக்கு ஓகே. சர்க்கரை பாகு வைக்கும் அளவு பொறுமை இல்லை! இல்லை என்றால் செய்து விடுவேன்!
வெங்கட், பூரணம் வைச்ச போளியை விட இது சுலபம். அடுப்பில் சர்க்கரையைப் பாகு வைத்தால் அது பாட்டுக்குக் கொதிக்கும்!
Deleteஇதுவும் புதுசு தான் எனக்கு...
ReplyDeleteஆன பார்க்கவே ஆசையாய் இருக்கு...
வாங்க அனுராதா! செய்து சாப்பிட்டுப் பாருங்க!
Deleteபார்க்க அழகா இருக்கு. செய்முறை கடினம் கிடையாது. நான் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteஎனக்கு ரொம்பப் பிடித்தது நீங்கள் குறிப்பிட்டுள்ள பால்போளி. என் ஹஸ்பண்டை செய்துதரச் சொல்லுவேன் (எப்போவாவதுதான். எனக்கு ரசிச்சுச் சாப்பிடணும்னா குறைந்தது அவ 7-8ஆவது தரணும். அதுனால அடிக்கடி பண்ணமாட்டா). இதோ.. கிறிஸ்துமஸ், புதுவருடத்துக்கு இங்க எல்லோரும் இருக்கும்போது செய்துதரச் சொல்றேன் (ஜீரா போளியையும் பால் போளியையும்).
ஜீரா போளிகளை நன்றாக அடுக்கி படம் எடுத்திருக்கலாம். இன்னும் அழகா வந்திருக்கும். ஸ்ரீராம் சொன்னார், 'பதிவர்களோ வாசகர்களோ இரண்டு வாரம் முன்பே சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் வந்தால், அவர்கள் சொல்லிய இனிப்போ காரமோ செய்துவைத்திருப்பீர்கள்' என்று. உண்மையா? :-)
நெ.த. செய்ததே பத்து போளியோ என்னமோ! ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அப்புறம் எடுக்கும்போது ஒட்டிக் கொள்ளும். ஆகையால் தனித் தனியாக அடுக்கி இருக்கேன். முன்னால் சொல்லிட்டு வந்தால் வர அன்னிக்கு என்ன முடியுமோ அதைச் செய்து வைப்பேன். ஶ்ரீராம் வந்தப்போ ஏதோ கல்யாணத்திலே கலந்து கொண்டுவிட்டு வந்ததால் காஃபி மட்டும் தான் கொடுத்தேன். மற்றபடி பதிவர் சந்திப்புக்கெல்லாம் கீழே இருக்கும் ரெஸ்டாரன்டில் இருந்து போண்டோ, வடை என வாங்கி வருவோம். கேசரியோ அல்லது வேறே ஸ்வீட்டோ செய்து வைப்பேன். நிறையப் பேர் வந்தால் எண்ணெய் வைத்துச் செய்யும்போது வரவங்களோட பேச முடியாது என்பதால் காரம் மட்டும் வாங்கி வருவோம். முன்னாலேயே செய்து வைத்தால் சூடாக இருக்காது! நன்றாக இருக்காது.
Deleteநீங்க போட்டி போட முடியாதபடியான ஒரு ரெசிப்பியோட விரைவில் வர்றேன். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதால், ஸ்ரீராம் ஜனவரி கடைசி வாரத்தில்தான் வெளியிடுவார் போலத் தெரிகிறது. அதற்குள் செய்தவர்களுக்கும் அதற்காகக் காத்திருப்பவர்களுக்கும் மறந்துவிடுமே. ஆனால் அந்த ரெசிப்பி நீங்கள் இதுவரை செய்யாதது. :-)
ReplyDeleteவாங்க பார்க்கலாம், என்ன என ஆவலைக் கிளப்பிட்டீங்க! பார்க்கலாம்.
Deleteநான் தான் ஸ்வீட் பூரி பார்க்க கேட்டதே பண்ணவிட்டேன் என்று பார்த்தால் இங்கே யாரையும் காணோம் பூரி சாப்பிட்டு மயக்கத்தில் இருக்கிறார்களா குறிப்புகளுடன் விவரமா சொல்லியிருக்கீங்க கீதா சிஸ் (நலம் தானே கமெண்ட் எதுவும் பப்ளிஷ் ஆகவில்லை )
ReplyDeleteவாங்க பூவிழி, கருத்துக்களை வெளியிடவே இல்லை. இன்று தான்ன் வெளியிட்டேன். உடல் நலம் பெற்று வருகிறது.
Deleteகீதாக்கா, நேற்றே செய்ய நினைச்சேன், ஆனா இன்று செவ்வாய்க்கிழமை சைவம்தானே அப்போ செய்தேன் இதை, பூரி பொரித்தபின் பாகு காச்சுவதுதான் நல்லது எனத் தோணுது, டக்கென இறுகத்தொடங்கிட்டுது பாகு. மிக நன்றாக வந்தது, ஆனா சரியான சுவீட்.. :(.
ReplyDeleteவாங்க மாஸ்டர்செஃப் அதிரா, பாகை வைத்துவிட்டுக் கொதிக்கத் தொடங்கியதும் எண்ணெய் வைத்துப் பூரி பொரிக்க ஆரம்பிக்கலாம். பாகு கொஞ்சம் அதிக நேரம் வைச்சுட்டீங்களோ? கையால் தொட்டுப் பார்த்தால் மிளகு மாதிரி உருட்ட வரும். அப்போ நிறுத்திடணும். அந்தப் பாகு இன்னமும் என்னிடம் இருக்கு. என்ன செய்யறதுனு தெரியலை! :)
Deleteஇது ஒரு கஷ்டமா கீதா சாம்பசிவம் மேடம். பேசாம அமாவாசைக்கு 'சேமியா ஜவ்வரிசி' பாயசம்தான்னு சொல்லி, இந்தப் பாகை ஜீனிக்குப் பதிலா உபயோகப்படுத்துங்க. இல்லைனா, இரவுக்கு ரவாக்கஞ்சி சூடா சாப்பிடலாம், டிஃபனுக்குப் பதிலான்னு சொல்லி, ஜீனிக்குப் பதிலா மிஞ்சின பாகை விட்டுடுங்க. இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி.
Deleteஇனிப்புச் சேர்க்க முடியும்னா அன்னிக்கே உ.கி. குலாப்ஜாமூன் பண்ணி ஜீராவைத் தீர்த்திருப்பேன். சாப்பிட முடியாதே என்பதால் தான் பிரச்னையே! மற்றபடி பாயசம் எல்லாம் தினசரி சமையலில் செய்யறது இல்லை. :) அமாவாசை அன்னிக்கு சேமியா, ஜவ்வரிசி பயன்படுத்த மாட்டோம். இப்போல்லாம் அமாவாசைக்குப் பாயசம் வைக்கிறதும் இல்லை
Deleteஎங்கள் அம்மா அடிக்கடி செய்வார். அம்மா கவர்ச்சிக்கு கேசரி பவுடர் சேர்ப்பார். என் பெரிய அக்கா, மற்றும் இரண்டாவது அக்காக்களின் திருமணத்தின் பொழுது ஜானவாசத்தன்று இரவு சாப்பாட்டில் இலைக்கு இதைத்தான் இனிப்பாக போட்டார்கள்.
ReplyDeleteவாங்க பானுமதி! கலர் சேர்ப்பதில்லை. திருமணங்களிலும் ஒருவேளை பூரண போளி போட்டால் இன்னொரு வேளை இது போடுவாங்க. இப்போல்லாம் அசோகா அல்வானு மொழுக்குனு ஒண்ணைப் பண்ணி வைச்சுடறாங்க. மெழுகு மாதிரி இருக்கு!
Deleteஅக்கா !! என்னாச்சு எங்கேயும் பார்க்கல்லியே உங்களை .நலம்தானே .டேக் கேர்
ReplyDeleteவாங்க ஏஞ்சலின், கனிவான விசாரிப்புக்கு நன்றி
Deleteஏன் எங்கும் வருகையை காணோம் வெளியூர் பயணமா ?
ReplyDeleteவாழ்க நலம்.
வாங்க கில்லர்ஜி, நாளைக்குள் வரேன். வெளியூர்ப் பயணம், உடல்நலக்குறைவு இரண்டும் தான்! :)
Delete