எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 07, 2017

சென்னையில் மழையை நிறுத்திய தலைவி!

எல்லோரும் தேடி இருக்கீங்க! சொல்லாமல் போனதுக்கு மன்னிக்கவும். சந்தர்ப்பம் அப்படி. டிசம்பரில் அண்ணா பெண்ணிற்குக் கல்யாணம்னு 3 மாசம் முன்னாடியே சென்னைக்குச் செல்ல டிக்கெட் வாங்கியாச்சு! ஆனால் திடீர்னு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில் போகமுடியுமானு கிளம்பும் வரை சந்தேகம்.  அதோட சென்னையில் புயல், மழைனு வேறே பயமுறுத்தலா இருந்தது. கல்யாணத் தேதிகளில் தான் மழை கொட்டித் தீர்க்கும் எனவும், சென்னையே வெள்ளக்காடாக மிதக்கும் என்றும் ஆருடங்கள் வந்து கொண்டிருந்தன. அதனாலும் தான்  யாரிடமும் எதுவும் சொல்லிக்கலை. ஆனாலும் நாங்க டிக்கெட்டைக் கான்சல் செய்யலை! ரொம்ப யோசனைகளுக்கு அப்புறமா இது தான் அண்ணன் வீட்டில் கடைசியா நடக்கும் பெண்ணின் கல்யாணம் என்பதால் ஒரே மருமகள் தான் என்பதாலும் எப்படியேனும் போயிடலாம்னு திங்கள் இரவு மலைக்கோட்டை வண்டியில் கிளம்பிட்டோம். கடைசி வரைக்கும் நிச்சயமில்லாமல் இருந்தது.

அதோட சென்னையில் மழை 5,6 தேதிகளில் கொட்டித் தீர்க்கப் போகுதுனு எல்லோருமே சொல்லிட்டு இருந்தாங்க! அந்த மழையையும் எப்படியேனும் நிறுத்திடலாம்னு தான்! ஹிஹிஹி! நாங்க போனதும் புயல், மழை எல்லாம் ஓடிப் போயிடுச்சு இல்ல! ஆனால் கல்யாணத்தில் முதல்நாளே மத்தியானம் சாப்பிட்டதும் ரொம்ப முடியாமல் போக, நாங்க ரெண்டு பேர் மட்டும் எங்க அண்ணா வீட்டுக்கே போயிட்டோம். அங்கே போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை திரும்ப வந்து ஒரு மணி நேரம் மட்டும் இருந்துட்டுத் திரும்பிட்டோம். நேற்றுக் காலை கல்யாண விசேஷங்களில் முடிந்த வரை கலந்து கொண்டு மதியம் பல்லவன் விரைவு வண்டியில் 3-45 மணிக்குக் கிளம்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சு.  இந்த வண்டி மதுரையிலிருந்து வைகையாக வந்துட்டுத் திரும்பும்போது பல்லவனாகக் காரைக்குடிக்குத் திரும்பும். நாங்க ரயில் நிலையம் போனப்போ சுத்தம் செய்துட்டு இருந்தாங்க. அறிவிப்புப் பலகை தொங்க விட்டுட்டுச் சுத்தம் செய்தாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கலை. மிக நன்றாகச் சுத்தம் செய்ததோடு அல்லாமல் பயணத்தின் போதும் ஒரு ஆளை நியமித்து ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளைச் சேகரம் செய்தார்கள். பெட்டியின் உள்ளே தளத்தை சோப் ஆயில் விட்டுத் துடைத்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம் கழிவறையும் சுத்தம் செய்யப்பட்டது. ரயில் சரியான நேரத்துக்கு ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்து விட்டது.

இந்தப் பயணத்துக்காக என்னவெல்லாமோ திட்டங்கள் போட்டு ஒண்ணும் முடியாமப் போச்சு! ஆனால் பையர், பெண் ஆகியோரைத் தொடர்பு கொள்ளணும் என்னும் எண்ணத்தில் மொபைல் டாட்டா 21 நாட்களுக்கு பிஎஸ் என் எல்லிடம் வாங்கிக் கொண்டேன். கடைக்காரர் 21 நாட்களுக்கு வரும்னு உறுதியாச் சொன்னார். எனக்கு வீட்டில் வைஃபை இருப்பதால் மொபைல் டாட்டா எதுக்குனு இது வரை வாங்கிக்கலை. இப்போத் தான் அங்கே அம்பேரிக்காவில் பையர், மருமகள், குழந்தை மூணு பேருக்கும் உடம்பு சரியில்லாமல் இருந்ததால் தொடர்பு கொள்ள வசதினு வாங்கிண்டோம். காலை ஒன்பது மணி பத்து மணிக்கு டாட்டா வாங்கிக் கொண்டு எப்படி இயக்குவது என்றும் தெரிந்து கொண்டு வந்தோம். வீட்டுக்கு வரும் வரையிலும் அதிலே இணைய இணைப்பு வரவில்லை. சரி, இப்போ வரும், வரும்னு சுமார் ஒருமணி நேரம் போயும் இணைப்பு வரவே இல்லை.

மனதில் ஏதோ சந்தேகம் தட்ட மொபைல் டாட்டா இணைப்பைத் துண்டித்துவிட்டு வைஃபைக்கு மாறினேன். உடனே வாட்சப் மழையும் முகநூல் மழையும் பொழிய ஆரம்பித்தது. உடனேயே இந்த மொபைல் டாட்டாவில் தான் ஏதோ பிரச்னைனு புரிஞ்சது. அதுக்குள்ளே பிஎஸ் என் எல்லிடமிருந்து இதுவரை டாட்டாவை இயக்க முடியலைனா எஸ் எம் எஸ் பண்ணுனு சொல்லி நம்பர் கொடுத்து ஒரு செய்தி வரவே அந்த எண்ணுக்கு "ஸ்டார்ட்" என்று செய்தியை அனுப்பினேன். ஏற்கெனவே நாங்க ஆரம்பிச்சுட்டோம் என பதில் வந்தது. மறுபடி மொபைல் டாட்டா இணைப்பு! மறுபடி எதுவும் வரலை! இப்படிக் கொஞ்ச நேரம் விளையாடிட்டு அலுத்துப் போயிட்டு மறுபடி வைஃபைக்கே மாறிட்டு மொபைலை மூடியும் வைச்சுட்டேன். சாயந்திரமாக் கிளம்பும் நேரம் நெருங்கிட்டிருந்தது. மறுபடி ஒரு தரம் முயன்று பார்க்கலாம்னு முயன்றால் மறுபடி அதே தொல்லை.

சரினு எனக்கு இணைப்பு வாங்கிக் கொடுத்த கடைக்கே போனேன். அவரும் என்னென்னமோ செய்தார். மொபைலை ஆஃப் பண்ணாமல் வைச்சிருந்தீங்களோனு கேட்டார். இல்லைனு சொல்லியும் நம்பலை. என்னவெல்லாமோ செய்துட்டு மொபைல் டாட்டா ஆன் பண்ணினதும் இரண்டு வாட்சப் செய்திகள் வந்தன. அப்போத் தான் தில்லையகத்து கீதாவுக்கு இந்தச் செய்தி வருதானு கேட்டிருந்தேன். வந்திருக்குனு செய்தி அனுப்பினாங்க. அதான் மொத்தமா நடந்த செய்திப் போக்குவரத்தே. மொபைல் டாட்டா தீர்ந்து விட்டதுனு செய்தி வந்து ஏற்கெனவே வந்திருந்த இரண்டு வாட்சப் செய்திக்குமாக மூன்று ரூபாய் என் கணக்கிலே இருந்து கழித்துக் கொண்டு பிஎஸ் என் எல் செய்தி அனுப்பியது.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டதில் மயக்கம் வராமல் இருந்ததே அதிசயம். ஆனால் அந்தக் கடைக்காரரோ உங்களுக்கு இத்தனை வாட்சப், முகநூல் கணக்கு இருக்கும்போது இந்த டாட்டா பத்தாது. ஆகையால் மொபைல் டாட்டா ஆன் பண்ணிட்டு நீங்க பயன்படுத்தினால் உங்க கணக்கில் இருந்து பணம் கழிப்பாங்க. என்னை வந்து எதுவும் கேட்கக் கூடாதுனு கறாராகச் சொன்னார். ஒவ்வொருத்தர் அதிலே சினிமா, சீரியல் எல்லாம் பார்க்கிறாங்க ஆன்லைனிலே என்னவெல்லாமோ செய்யறாங்க. எனக்கு வெறும் ரெண்டே ரெண்டு வாட்சப் செய்தி வந்ததுக்கும் ஒன்றோ அல்லதுஇரண்டோ முகநூல் நோட்டிஃபிகேஷனுக்கும் பணம் கழிப்பாங்களா என்று கேட்டால் கடைக்காரருக்குக் கோபம். இதெல்லாம் என்கிட்டே கேட்கக் கூடாது. உங்களுக்குச் செலவு அதிகம். ஆகையால் பணம் கட்டாயம் எடுத்துப்பாங்க என்றார். எனக்குத் தெரிந்து எங்க சொந்தக்காரங்க எல்லாம் வாட்சப்பிலேயே குடி இருக்காங்க. முகநூலில் குடி இருக்காங்க! அன்றாட வேலைகளைப் பற்றிய வாத, விவாதங்கள் செய்யறாங்க! நாம அப்படி எல்லாம் எதுவுமே பண்ணறதில்லை. வரும் வாட்சப் செய்திகளைப் படிச்சுட்டுத் தேவையானால் பதில் கொடுக்கிறதோடு சரி!

வாட்சப் செய்திகளுக்கு வைஃபை மூலமோ, அல்லது மொபைல் டாட்டா மூலமோ கொடுத்தால் பணம் கழிப்பாங்களா? அதுக்கெல்லாம் பணம் உண்டா? 21 நாளைக்கென வாங்கின டாட்டா 21 நிமிஷம் கூட வராமல் போனது எப்படி? என்ன கணக்கு? சுத்தமாப் புரியலை! இதுக்கு முன்னாடி இப்படித் தான் டாட்டா கார்ட் மடிக்கணினிக்கு வாங்கினது இரண்டே நாளில் தீர்ந்து போனது. அதுவும் பிஎஸ் என் எல் தான். இதிலே என்ன குறைபாடு அல்லது என்ன செய்தால் அதிக நாட்கள் வரும்படி வைச்சுக்கலாம். வெறும் எஸ் எம் எஸ் மட்டும் பார்க்கணும். வேறே ஏதும் பயன்படுத்தக் கூடாதுனு கடைக்காரர் சொல்றார். எல்லோரும் ஆன்லைனில் பாட்டெல்லாம், கச்சேரிகள் எல்லாம் கேட்கிறாங்க. நேற்று ரயிலில் வரச்சே பார்த்தேன். ஒரு பெண் சினிமா பார்த்துக் கொண்டே வந்தாள். எனக்குப் பயன்படுத்தத் தெரியலையா?

48 comments:

 1. ஒரு பிரச்சனையும் கிடையாது. போன ஜென்மத்துல அரசாங்கத்துக்கிட்ட கடன் வாங்கி திருப்பி கொடுக்கலைனு நினைக்கறேன். அதுனாலதான், கொஞ்ச கொஞ்சமாக உங்ககிட்டே இருந்து வசூலிக்கறாங்க. :-) மொபைல் டாட்டா என்பது 'உங்களுக்கு டாட்டா' சொல்வது போன்றதா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெத. என்னமோ போங்க! மொபைல் டாட்டாவுடைய அனுபவம் ரொம்பவே புதுசு. படுத்தி விட்டது!

   Delete
 2. இந்த டேட்டா கணக்கு இன்னும் பிடிபடவே மாட்டுது.

  மாட்டிவர்களை தீட்டி எடுத்துடுறாங்கே... உங்களுக்கே இப்படினா என்னைப் போன்ற அப்பாவிகளின் நிலை ?

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே கில்லர்ஜி! எனக்கு மட்டும் என்ன தெரியும்னு நினைக்கிறீங்க? க.கை.நா. நான்! :)))

   Delete
 3. கல்யாண ஆல்பத்திலே உங்கள் படம் பார்த்தேன். ஸீதா ஜனனியின் அத்தை நீங்கள். மாப்பிள்ளை என் நாத்தனாரின் பிள்ளை வழிப்பேரன். வெகு நாட்களாகவே கேட்க நினைத்தேன். இன்று விவாக ஆல்பம் பார்த்து உடனே உங்கள் தளம் வந்தேன். வெளிநாட்டில் இருந்து விட்டதால் விசேஷங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. இப்போது வயோதிகம். திருவண்ணாமலை போனால் போவோம். விசேஷங்களுக்கு என் பெண்தான் கலந்து கொள்வாள். அவளும் இப்போது அயல்நாடு. இளைய தலைமுறைக்கு எங்களைத் தெரியக்கூட வாய்ப்பில்லை. உறவுகள் தெரிவதில் ஒரு மகிழ்ச்சி. உடல் நிலை கவனித்துக் கொள்ளுங்கள். வலை உறவு மட்டுமில்லை. மற்றும் ஸம்பந்த உறவும் நீங்கள் . அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அம்மா, இதைப் படிச்சதும் என் உடம்பையும் மறந்து ஒரு குதி குதிச்சேன்! எனக்கு முன்னாடியே உங்களைக் கேட்கத் தோணலை! உறவானதில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு ஏற்கெனவே கௌதமன் சார் என் பிள்ளை மாமனாரின் நண்பர் மற்றும் கௌதமன் சாரின் சம்பந்தி என் மாமனார் வழியில் உறவு. பானுமதி வெங்கடேஸ்வரனும் அவர் அம்மா வழியில் உறவாகி விட்டார்! இன்னும் இப்படி நிறையப் பேர் உறவினரும் நண்பருமாக இருக்காங்க. ஜெயஶ்ரீ நீலகண்டன் என்னும் சிநேகிதியும் தூரத்து உறவு! செல்லப்பா யக்ஞசாமியின் மனைவி என் மாமனார் வழியில் உறவு! ஆக மொத்தம் உண்மையிலேயே இணையம் உறவை ஊட்டி வளர்த்து வருகிறது.

   Delete
  2. இதை வெளில சொல்லிட்டீங்களா? இனி காமாட்சியம்மா உங்களைப் பாராட்டினாலோ அல்லது ஸ்ரீராம் உங்களுக்கு எக்ஸ்டிரா பின்னூட்டம் இட்டாலோ, நான் சொல்லலாம், 'எனக்கு மட்டும் பின்னூட்டம் போடலை, உறவுனால அவங்களுக்குப் போட்டீங்களான்னு' :-) (பானுமதி வெங்கடேஸ்வரன் அவங்க, ஜி.எம்.பி சாருக்கு உறவுன்னு படிச்சிருக்கேனே)

   Delete
  3. வாங்க நெ.த. ஶ்ரீராமுக்கு எப்போவோ தெரியும், கௌதமன் சம்பந்தி எங்க உறவுனு! பானுமதி வெங்கடேஸ்வரனின் ம.பா. அதாவது அவங்க ரங்க்ஸ் ஜிஎம்பி சாருக்கு ஒண்ணுவிட்ட சகோதரர்! சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள்!

   Delete
  4. கீதாக்க்காஆஆஆஆஆ கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் எல்லாம் புரட்டிப் பாருங்கோவன்.. எங்காவது பழைய தொடர்பில அதிராவும் உங்களுக்கு சொந்தமாகி இருந்தாலும் இருக்கலாம்...:))

   Delete
  5. ஹலோ கீதாம்மா அப்ப நாங்க எல்லாம் உங்களுக்கு உறவு இல்லைன்னு சொல்லீட்டிங்களே உம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... எங்கே அந்த அதிரா ஏஞ்சல் கீதா ஸ்ரீராம் ......வாங்க இதுக்கு நாம ஒரு பஞ்சாயத்தை கண்டிப்பாக கூட்டியாகனும்

   Delete
  6. இந்த பஞ்சாயத்தில் என்னையும் சேர்த்துக் கொள்கிறீர்களா மதுரை? நிஜமாவா?!!

   Delete
  7. ஹாஹா, மாஸ்டர் செஃப் அதிரா, இணையத்தில் எல்லோருமே சொந்தம் தானே!

   Delete
  8. வாங்க அவர்கள் உண்மைகள், எல்லோருமே எனக்குச் சொந்தம் தான்! :)

   Delete
  9. ஹாஹா, ஶ்ரீராம், பஞ்சாயத்தைக் கூட்டுங்க!

   Delete
 4. கீதாகா வந்தாக்சா...சூப்பர்!!! உடல் நலம் பார்த்துக்கோங்க...பரவால்லகா இதுல என்ன... சொல்லாம போனதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு...

  கீதாக்கா இந்த மொபைல் டேட்டா இருக்கே அது ரொம்பப் புரியாத ஒரு குழப்படி சங்கதி. அதுவும் பிஎஸ் என் எல், ஏர்டெல் எலலம் . அதாவது நாம் செய்தி அனுப்பறோமோ இல்லையோ நம் ஆப்கள் திறந்திருந்தால் ஆப்புதான்.!!! ஒவ்வொரு முறையும் வாட்சப் ஓபன் செய்திட்டு க்ளோஸ் பண்ணிடனும் அதாவது வாட்சப்பையே ஆஃப் செய்து வைக்கணும். என்று சொல்லப்பட்டது.

  நான் ஜியோ தான் பயன்படுத்தறேன். மூன்றுமாதத்திற்கு சார்ஜ். ஏர்டெல் நம்பர் இருந்தாலும் அது சும்மா எல்லாத்துக்கும் அதுதான் கொடுத்துருக்கேன் என்பதால் அது அப்படியெ இருக்கு. ஜியோ வில் ஒரு நாளைக்கு 1 ஜிபி ஃப்ரீ கொடுக்கறாங்க. கால்ஸ் எல்லாம் ஃப்ரீ. இந்தியா முழுக்க. அதிலும் ஏதோ சில ப்ளான் இருக்கு. நான் வாட்சப், சில சமயம் ப்ளாக் வாசித்தல் பதி இடுதல் அதில் செய்யறேன். மெய்னாக நான் வெளியில் இருந்தால், பயணம் செய்தால் மகனுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான் இந்த டேட்டா போட்டுக் கொண்டது....மற்றபடி பல டேட்டா ப்ளான் புரிவதில்லை. நீங்கள் சொன்னபடியான அனுபவமும் உண்டு. அத்னால்தான் ஜியோ போட்டுக் கொண்டேன்.

  ஆனால் அதுவும் இப்போதுகட்டணம் உயர்த்தி வருகிறார்கள். நல்ல மார்க்கெட்டை பிடித்துவிட்டார்கள். அதனால் இப்போ கட்டணம் உயர்ந்திருக்கு.
  உடல் நலம் பார்த்துக்கோங்க...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தில்லையகத்து கீதா, விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றி. மொபைல் டாட்டா தான் புரியலை! ஜியோ போட்டுக்கலாம்னா வேண்டாம்னு நம்ம வீட்டு சர்வாதிகாரியோட கட்டளை! என்னவோ போங்க! இப்போதைக்கு வேறே எங்கேயும் போகப் போறதில்லை. போகும்போது யாரையானும் விஷயம் தெரிஞ்சவங்களை வைச்சுண்டு செய்யணும்னு வைச்சிருக்கேன். :))))

   Delete
 5. "மத்தியானம் சாப்பிட்டதும் ரொம்ப முடியாமல் போக, நாங்க ரெண்டு பேர் மட்டும் " - எனக்கு என்னைவிடப் பெரியவர்களின் அனுபவங்களைக் கேட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும் (வயதாவதால் உண்டாகும் சிரமங்கள்). மனசு சொல்வதை, உடம்பு கேட்காது என்ற நிலையை நினைத்தால் எனக்கு இப்போவே பயமாத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. ஒரு பத்து, இருபது வருஷத்துக்கு முன்னாடி எனக்கு இருந்ததை விட இப்போது எவ்வளவோ தேவலைனு சொல்லணும். சொல்லப் போனால் என்னோட நாற்பது, நாற்பத்தைந்து வயசில் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். நாள் கணக்கில் வாரக் கணக்கில் படுக்கை! இப்போ அதெல்லாம் இல்லை. நடமாட்டம் இருக்கு! அவ்வப்போது தொந்திரவு செய்கிறது. அதுவும் கடந்த இரு வருடங்களாகத் தான்! 2005 க்குப் பின்னரே உடம்பு ரொம்பப் படுத்தாமல் இருந்து வருகிறது. அவ்வப்போது வரும் பிரச்னைகள் தவிர்த்து.

   Delete
  2. ஆகவே வயசுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிக. அதோடு எனக்கு என்ன வயசாச்சுனு நினைக்கறீங்க?

   Delete
  3. என்னைவிடப் பெரியவர், ஆபீஸ் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் - அது போதாதா? 'பெரியவர்'னு சொல்ல 90ஐத் தாண்டியிருக்கணுமா? 60ஐத் தாண்டினாலே போதாதா? (நான் மனதுக்கு வயதைச் சொல்லவில்லை)

   Delete
  4. ///அதோடு எனக்கு என்ன வயசாச்சுனு நினைக்கறீங்க?

   Reply///

   ஹா ஹா ஹா கீதாக்கா ....நெல்லைத்தமிழன் இப்போ கட்டிலுக்குக் கீழே:))

   Delete
  5. நெ.த. நல்ல சமாளிப்ஸ்!

   Delete
  6. மாஸ்டர்செஃப் அதிரா, அவர் எப்போவுமே சமாளிப்ஸ்!

   Delete
 6. Bsnl ennaiyum ipdi than paduthiyadhu.i now go for Airtel.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா. பிஎஸ் என் எல் நல்லாத் தான் இருந்து வந்தது! இப்போ என்னமோ தெரியலை!

   Delete
 7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோ கீதாக்கா...

  நீங்க கல்யாணப்பந்தியில போட்டுப்போட்டூஊஊஊஊஉச் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறீங்க:) இங்க அதிரா, உண்ணா நோன்பிருந்து நெய் விளக்கேத்தினேன்ன்ன் ஆண்டவா கீதாக்காவைக் காணல்ல... விரைவில நலமோடு கூட்டிவாப்பா என:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, கல்யாணப்பந்தியிலே வெறும் ரசம் சாதம் தான் சாப்பிட முடிஞ்சது. மத்தபடி என்ன போட்டாங்க என்பது கூடத் தெரியாது! :) அன்பான பிரார்த்தனைக்கு நன்றி.

   Delete
 8. கல்யாணத்துக்கு போய் வந்திங்களா .சந்தோஷம் அக்கா .மழை யை சென்னையை விட்டு ஓட வச்சதுக்கு வெல்டன் :)
  பாவம் சென்னைவாசிகள் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க தொடர் மழையால் ..
  இங்குள்ள போன்களில் என் போனில் வீட்டை விட்டுவெளியே கால் வச்சதும் வை/ஃபை தானாவே கட்டாகிடும் வீட்டுக்குள் இருக்கும்போது WIFI இருக்கும் அதனால் மொபைல் டேட்டா வேலை செய்யாது ..

  இங்கு யூசேஜ் எவ்ளோ செஞ்சிருக்கோம்னு போனில் செக் பண்ணலாம் ..அப்படி வசதி இல்லைனாலும் கஸ்டமர் கேரில் நீங்க கேட்டா விவரம் தருவார்களா அங்கே அப்போ தெரிஞ்சிக்கலாம் என்ன விஷயத்திற்கு பணம் எடுக்கப்பட்டிருக்குன்னு .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், சென்னையில் இப்போ மழை பெய்யலை தான், ஆனாலும் சிலர் இன்னமும் மழை வேணும்னு சொல்றாங்க! ஒண்ணும் புரியலை!
   நீங்க சொல்லும்படியான கனெக்‌ஷன் மொபைலில் வர இங்கெல்லாம் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, தெரியலை! :(

   Delete
 9. இப்போது உடல் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  சென்னையில் புயல்
  மழை இல்லை என்பது அறிந்தும் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, சென்னைப் புயலுக்கு பயந்துட்டே தான் கல்யாணத்துக்குப் போனோம். நல்லவேளையா எதுவும் இல்லை.

   Delete
 10. மொபைல் டேட்டா பொறுத்தவரை ஏர்டெல் ஓகே. பி எஸ் என் எல் கொஞ்சம் மட்டம்தான். சும்மா ஆன் செய்து வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. வீடியோ, ஆடியோ இறக்கினால் செலவு ஆகும். டெக்ஸ்ட் மெசேஜ் போன்றவைகளுக்கு அதிகம் ஆகாது. சென்னையில் எந்த ஏரியாவில் கல்யாணம்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், காலம்பர பத்து மணிக்கு மொபைல் டாட்டா இணைச்சேன். அதை ஆன் செய்து வைச்சிருந்தும் எனக்கு எந்தவிதமான பலன் தெரியவில்லை.முகநூலுக்குப் போனால் இணைய இணைப்புக்குக் காத்திருப்பதாகச் சொன்னது. வாட்ஸப்பில் எதுவுமே வரலை. அப்புறமா வீட்டுக்கு வந்து வைஃபை இணைப்பைக் கொண்டு வந்ததும் எல்லாம் சரியாச்சு. மறுபடி மாலை தான் சோதனை செய்தேன். அதே பிரச்னை! கடைக்கு எடுத்துப் போனால் கடைக்காரர் என்னை அடிக்கலை! :) நான் என்னமோ டவுன்லோட் நிறையப் பண்ணி இருப்பதாக அவர் நினைப்பு! எனக்கு அவ்வளவெல்லாம் தொ.நு.அ கிடையாதுனு அவருக்குப் புரியலை! :(

   Delete
 11. எல்லா டாட்டா ப்ளானும் இப்படித்தான். அதிலும் பி.எஸ்.என்.எல் ரொம்பவே மோசம். மேலும் உங்கள் மொபைலில் பல Apps டாட்டாவை குடித்து விடும். அவை wifi-ல் மட்டும் வேலை செய்யும் படி வைத்துக் கொள்ள முடியும் - உங்கள் அலைபேசி செட்டிங்க்ஸ் மூலம்.

  நானும் அலைபேசியில் பயன்படுத்தும் டாட்டா ஜியோ தான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், மொபைலில் ஆப்ஸ் எல்லாம் எதுனே இன்னும் புரியலை. அப்புறம் தானே அவை வைஃபையில் செயல்படும்படி வைச்சுக்க முடியும்! ஜியோ பத்தி எல்லோரும் சொல்றாங்க. ஆனாலும் அதை இன்னமும் வாங்கலை.

   Delete
  2. நானும் ஜியோ வாங்கவில்லை. நிறைய பேர்கள் - என் சொந்தத்திலும் சரி, நட்பிலும் சரி ஜியோ வைத்து உபயோகிக்கிறார்கள்.

   Delete
 12. ஜியோ பெஸ்ட் கீதா. சென்னையில் நான், பேரன்,மகள்,மாப்பிள்ளை எல்லோரும் பயன் படுத்தினோம்.
  உடம்பு தேவலை என்று அறிய சந்தோஷம். சீதா ஜனனிக்குத் திருமணம் ஆன சேதி
  மகிழ்ச்சி.
  மகன்,குடும்பம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்களா. பாவமே.
  இப்பொழுது நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். நீங்களும் பத்திரமாக இருக்கவும்..
  எனக்கும் முகனூல் வழி இரண்டு மூன்று உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். உண்மையாகவே மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. அதிகம் வெளியே போகும்படி நேர்ந்தால் ஜியோ வாங்கிக்கலாம்னு ஓர் எண்ணம். இப்போதைக்கு வைஃபை மூலம் வரதே போதும்னு தோணுது. பையர் குடும்பம் இப்போத் தேவலை. பேத்தி தான் விக்ஸைத் திறந்து எடுத்து உடம்பு பூரா தடவிக்கொண்டு ஒரே அமர்க்களம். மருத்துவரிடம் கூட்டிச் சென்று ஒண்ணும் இல்லைனதும் தான் நிம்மதி. விஷமம் ரொம்பப் பண்ணறா!

   Delete
 13. if you are using smart phone , please install the provider's app (myBSNL/myAirtel App) . so that the status of data/bills can be seen on time to time basis . As per my knowledge for checking these apps the data wont be charged. And if you are using data instead of Wifi automatic updates/playstore should be deactivated for data . Which phone are you using ? If its samsung , i can send you screenshots of how to disable the things for data .

  ReplyDelete
  Replies
  1. இதைக் குறிச்சு வைச்சுக்கறேன் கண்ணன்.

   Delete
 14. இளைஞர்கள் மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துகின்றார்கள். முடிந்தவரை பயன்படுத்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை.டாட்டா பயன்பாடு தான் புரியவில்லை.

   Delete
 15. சிஸ் வெளியூர் போயிருந்திங்களா எங்க சென்னைதான் அதுதான் காணலை சிஸ் இந்த டேட்டா பற்றி தெரிந்து கொண்டு விவரமா பதிவு போடுங்க நானும் தெரிந்து கொள்கிறேன் ஏற்பாடு யூஸ் பண்ணணுமென்று ஹி ஹி (நானே கஷ்டமா இருக்கே இதில்.... இவளுக்கு தெரிந்து கொண்டு சொல்லணுமாம் திட்டுவீங்க பரவாயில்லை ஆனா கண்டிப்பாய் தெரிந்து கொண்டு பதிவு கொடுப்பிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு) சிஸ் படம் பாடல் பார்த்தங்கனு சொன்னிங்கக இல்லையா அவங்க நெட்காட் போட்டு இருப்பாங்க தனியாக அது 350 சம்திங் அது ஒருநாளைக்கு 3 ஜிபி இலவசம் bsnl தான் ஆன்ராய்ட் போனுக்கு

  ReplyDelete
  Replies
  1. விபரம் தெரிந்ததும் பதிவு போடுகிறேன் பூவிழி. நெட்காட் பத்தி எல்லாம் தெரியாது.மொபைல் வழியா சீரியலே பார்க்கலாம்னு சொல்றாங்க!ஒண்ணும் புரியலை!

   Delete
 16. என் பேரன் எனக்கு ஒரு ஆப்பிள் ஃபோன் வங்கிக் கொடுத்திருக்கிறன் இன்னும் அதன் உபயோகம் பிடி படவில்லை

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார் நானும் தொலைபேசியாகவும் அவ்வப்போது முகநூல், மற்றும் வாட்சப் செய்திகளும் மட்டும் தான் பார்க்கிறேன்.

   Delete