விசித்திரமான பிரச்னை எங்களுக்கு. அம்பத்தூர் வீட்டுத்தொ(ல்)லைபேசியை நாங்க பிஎஸ் என் எல்லிடம் ஒப்படைத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் அந்த நம்பருக்கு உரிய பில்லும், அதற்கான எஸ் எம் எஸ் செய்தியும் என்னுடைய மெயில் ஐடிக்கும், அலைபேசி எண்ணுக்கும் வந்து கொண்டிருக்கிறது. நாங்க பயன்படுத்திய அந்தக் குறிப்பிட்ட எண்ணைத் தற்போது பயன்படுத்தும் பயனாளியின் பெயர், விலாசம் எல்லாம் பில்லில் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பில்லை கணினி மூலம் அனுப்பும்போது மட்டும் என்னோட மெயில் ஐடிக்கு அனுப்பறாங்க. அதே போல் நினைவூட்டும் எஸ் எம் எஸ் செய்திகளும் என்னுடைய அலைபேசிக்கு வருகின்றன. குறிப்பிட்ட எண்ணின் பயனாளியைத் தொடர்பு கொண்டு பேசினால் சண்டை போடுகிறார். இத்தனைக்கும் நீங்க எப்போப் பணம் கட்டப் போவீங்களோ அப்போச் சொல்லி உங்களோட மெயில் ஐடியையும், அலைபேசி எண்ணையும் இணைக்கச் சொல்லுங்க. எங்களோடதை அதிலேருந்து எடுக்கச் சொல்லுங்க என்று தான் கேட்டோம்.
இதற்கு நாங்க அவரை வேலை வாங்கறோமாம்! நீங்க வேணும்னா பிஎஸ் என்எல்லுக்குப் பேசிக்கோங்க என்கிறார். அவங்க கிட்டேயும் முட்டிண்டாச்சு! குறிப்பிட்ட எக்ஸ்சேஞ்சுக்கு நீங்க நேரிலே வந்து புகார் கொடுக்கணுமாம். இவங்க இம்மாதிரிப் புகார்களை ஏற்க மாட்டாங்க! இவங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையாம்! சரினு மெயில் மூலம் புகார் கொடுக்கலாம்னு போனால் சுத்தம்! ஏற்கவே இல்லை! என்ன என்னவோ கேள்விகள் எல்லாம் கேட்டுட்டு எந்தவகைப் புகார் என்றதற்கு மிசலேனியஸ் என்றிருந்ததைக் கொடுத்தால் ம்ஹூம்! இது செல்லுபடியாகும் புகார் இல்லைனு சொல்லிட்டது அந்த வலைத்தளம். :) இப்போதைக்கு வேறே ஒண்ணும் செய்ய முடியாது! எப்போச் சென்னை போறோமோ அப்போ நேரம் இருந்தால் பார்க்கணும். அதுவரைக்கும் வரும் பில்களையும் நினைவூட்டுதல்களையும் பொறுத்துக்க வேண்டியது தான்!இம்முறை போயிருந்தப்போ உறவினரை விட்டு இதை எப்படிச் சரி செய்யறதுனு கேட்டதுக்கு அவர் நேரே போய் பிஎஸ் என்எல் எக்ஸ்சேஞ்சில் சொல்லி இருக்கார். அவங்களும் கேட்டுட்டு சரினு மொபைல் எண்ணை நீக்கி இருக்காங்க. ஆனால் இ மெயில் ஐடிக்கும் வருதுங்கறதை ரங்க்ஸ் சொல்லலை என்பதால் அந்த உறவினர் அதைச் சொல்லவில்லை! :) இப்போ இ மெயில் வந்திருக்கு! ஹிஹிஹிஹி!
இப்படித் தான் இங்கே ஶ்ரீரங்கத்திலும் மின் வாரியத்தின் பில் நாங்க முன்னே குடியிருந்த பகுதியினுடையது எங்களுக்கே வந்து கொண்டிருந்தது. அப்புறமா நேரிலே மின்வாரியம் போய்ச் சொல்லித் தான் சரி செய்தோம். அதுவரை நாங்க முன்னே குடியிருந்தது, தற்போதையது இரண்டு பில்லும் எங்களுக்கே வரும்! :) நல்லவேளையா இந்த பில்லில் பயனாளியின் பெயர், விலாசம் எல்லாம் சரியாக் கொடுத்திருக்காங்க! அனுப்பறதைத் தான் நமக்கு அனுப்பறாங்க! ஆட்டோ பில்லிங்கில் ஒரு முறை பதிவானதை நீக்குவது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் ஐந்து வருஷங்களாவா என நினைத்தால்! ஹிஹிஹிஹிஹி!
அந்த எண்ணைப் பயன்படுத்துபவர் மொபைல் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கும் இடத்திலே எங்களோட எண்ணை எடுத்துட்டு இப்போதைய பயனாளியின் எண்ணைக் கேட்டுச் சேர்க்கணும். அதே போல் மெயில் ஐடியும்! அதைச் செய்ய எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு! குறைந்த பட்சம் அவங்க புகார் எண்ணில் நாம் கொடுக்கும் புகாரையாவது ஏத்துக்கணும். அதுவும் இல்லை. என்ன செய்யறதுனு மண்டை காயுது! இது தான் இந்தியா! நம்ம இந்தியா! ஜெய்ஹிந்த்!
இதை ஏற்கெனவே எழுதிட்டேனோ? என்னமோ நினைவில் வரலை. மீள் பதிவாப் போட்டிருக்கேனோ? தெரியலை! இருந்துட்டுப் போகட்டும்! :)

when you know it does not pertain to you , just ignore if payment is not made they will cut the connection let them
ReplyDeleteஅப்படித் தான் இருக்கோம் என்றாலும் மாதம் இருமுறை திரும்பத் திரும்ப இ மெயில்கள் வருகின்றன! :(
Deleteசும்மா மன ஆறுதலுக்கு 'எங்க ஊரைப் போல வருமா, இங்கில்லாத அறிவாளிகளா'ன்னு இந்தியாவைப் பற்றி சொல்லிக்கிறோம். ஆனால், வேலைன்னு பார்த்தா, நாம இன்னும் 18ம் நூற்றாண்டைத் தாண்டலை. இந்த மாதிரி சல்லிப் பிரச்சனை இந்தியாவைத் தவிர உலகத்தில் எங்கேயும் இருக்காது. இதுல நாம 'மேட் இன் இந்தியா'ன்னு சொல்லிக்கறோம். எந்த சர்வீஸ் டிபார்ட்மென்டை எடுத்துக்கிட்டாலும், இந்தியா உலகத்தில் கடைசி இடத்தில்தான் இருக்கும். ஏதோ, இந்தியர்கள் இந்திய கவர்ன்மென்ட் வேலையை வெளினாட்டுல பண்ணும்போது ரொம்ப நல்லாப் பண்ணறாங்கன்னும் நினைக்கவேண்டாம். தூதரக அதிகாரிகள், வேலை செய்வோர் (இந்திய) கொஞ்சம்கூட உருப்படியாக இல்லை. இதெல்லாம் என் அனுபவம்தான். வேற என்ன சொல்ல.
ReplyDeleteஇப்போப் பரவாயில்லை என்றே பலரும் சொன்னாலும் பிஎஸ் என் எல் இன்னமும் மாறணும். :(
Delete///இது தான் இந்தியா! நம்ம இந்தியா! ஜெய்ஹிந்///
ReplyDeleteஸூப்பராக சொன்னீங்க.... இதுக்காக... மத்தியஅரசை இழுப்பது நல்லாயில்லை.
வாங்க கில்லர்ஜி, மத்திய அரசைச் சேர்ந்தது தானே பிஎஸ் என் எல்! அதைத் தான் இழுக்க முடியும்! :)
Deleteஅதுக்காக எங்கள் மோடியை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது.
Deleteஹாஹாஹா, மோதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நான் குற்றம் சொல்வது தகவல் ஒளிபரப்புத் துறையை! அதன் கீழ் தானே பிஎஸ் என் எல் வருது? அப்படித் தான் நினைக்கிறேன். :))))) அவங்க சரியாக் கவனம் செலுத்தலை!
Deleteஇருந்தாலும் மோதியைக் குற்றம் சொல்வது என்னும் கலாசாரத்தை மீறவும் முடியாதே! ஆகவே "மோதி ஒழிக!" :)))) செரியா? :)))))
Deleteசூப்பரா வேலை பார்க்கறாங்களே... சொன்னால் கூட சரி செய்துகொள்வதில்லை என்பதுதான் சோகம், கடுப்பு கரும் சமாச்சாரம்!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், மிகவும் அலட்சியம்! வேறே என்ன!
Delete
ReplyDeleteமுன்னைக்காட்டிலும் BSNL இப்போது எவ்வளவோ தேவலாம். EMail மூலமாகவே உங்கள் குறையை சரி செய்து கொள்ளலாம் . மேலும் தகவலுக்கு :
http://www.chennai.bsnl.co.in/News/RedressalMechanism.htm
அதற்கென்ன . முற்றிலும் மாற நேரமாகும். - பாபு
நீங்க கொடுத்ஹ்டிருக்கும் சுட்டியில் போய்ப் பார்க்கிறேன். நன்றி.
Deleteபிரச்ச்சனைகள்.... பெரும்பாலான விஷயங்கள் சுலபமாக தீர்க்கப்பட வேண்டியவை. ஆனாலும் அங்கே வேலை செய்பவர்கள் அடுத்தவர்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் கீழே Unsubscribe என்ற சுட்டி இருக்கிறதா பாருங்கள். அப்படி இருந்தால் அதன் மூலமும் உங்களுக்கு வரும் மின்னஞ்சலை நிறுத்த முடியும்.
ReplyDeleteவாங்க வெங்கட், Unsubscribe என்ற சுட்டி இருக்கு. ஆனால் அதிலே க்ளிக்கினால் பிஎஸ் என் எல்லின் வேறொரு தளத்துக்குச் செல்கிறது. அந்தத் தளம் பயனாளர் பெயர், கடவுச் சொல் கேட்கிறது. உள்ளே போய்த் தகவல்களைத் தெரிவிக்கணும். இல்லைனா கஸ்டமர் கேரைத் தான் மறுபடி கூப்பிடணும். ஏற்கெனவே முயன்றோம். அவங்க எங்களிடம் இதைப் புகாராகக் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.
Deletehttps://selfcare.bsnl.co.in/tungsten/UI/facelets/login.xhtml Unsubscribe பண்ணினால் இந்தத் தளத்துக்குத் தான் செல்கிறது. வெங்கட். இதிலே போய் என்ன செய்யணும்னு பார்க்கணும்.
Deleteஅம்பத்தூர் போனப்போ உறவினர் மூலமா பிஎஸ் என் எல்லிடம் அலைபேசி எண்ணைக் கொடுத்து நீக்கச் சொல்லி இருந்தோம். அவங்களும் சரினு குறிச்சு வைச்சிருக்கிறதாச் சொல்லி இருந்தாங்க. ஆனால் இந்த மாசம் பில்லும் கரெக்டா அலைபேசிக்கும் மெயில் ஐடிக்கும் வந்திருக்கு! என்னத்தைச் சொல்ல! :(
Deleteஎன்ன செய்வது? இவற்றையெல்லாம் எதிர்கொள்ளவேண்டும் என்ற நிலையில் உள்ளோம்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! நீங்க சொல்வதும் சரிதான்!
Deleteநிஜமாவே தமாஷ் தான் சொல்லியும் இப்படியே இருந்தால் பெருமூச்சுதான் வரும் அப்படியே விடுங்கோ அப்பதான் புரியும்
ReplyDeleteநீங்க வேறே பூவிழி! இந்த மாசமும் கரெக்டா பில் வந்திருக்கு! :(
Deleteஇது போன்ற கஷ்டங்கள் நிறையவே....பி எஸ் என் எல் மட்டுமில்லை எந்த சேவைத் துறையும்...நீங்கள் சொல்லியிருப்பது போல் மின்சாரவாரியமும் தான்....
ReplyDeleteநெல்லையின் கருத்தையும் வாசித்தேன். எனக்குள் இருக்கும் கருத்து நான் சொன்னதில்லை...அவர் சொல்லிவிட்டார்...
கீதா
மின்வாரியம் இங்கே பரவாயில்லை ரகம். இப்போத் தனியார் இணைய இணைப்பு என்பதால் உடனுக்குடன் சேவை.
Delete