அண்ணா பெண் கல்யாணத்திற்குச் சென்னை சென்றபோது 4 ஆம் தேதி இரவு மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்றோம். இரண்டாம் வகுப்புக் குளிர்சாதனப் பெட்டியில் எங்களுக்கு எதிர் எதிரான இரண்டு கீழ்ப்படுக்கை இருக்கை. நாங்க ஶ்ரீரங்கத்தில் ஏறியதால் திருச்சியில் மேல்ப் படுக்கைக்காரங்க ஏறி இருக்காங்க. அவங்க இருவருமே சின்ன வயசுக்காரங்க! எனினும் ஐந்து வயதுப் பையர் ஒருத்தர் இருந்தார். அவரைக் காரணம் காட்டிக் கீழ்ப்படுக்கைகளை அவங்க வாங்கிக்கணும்னு எண்ணம். டிடி யிடம் கேட்டிருக்காங்க! அவர் அந்தப் படுக்கை எண்ணுக்குரிய ஆட்கள் வந்ததும் நீங்களே பேசிக்கோங்கனு சொல்லி இருக்கார் போல் தெரிந்தது. ஆகவே ஶ்ரீரங்கத்தில் நாங்க ஏறினதுமே இருவரும் முதலில் சென்ற என்னைப் பார்த்து ஆவலுடன் குழந்தை இருக்கான் ஆகவே நீங்க மேலே படுத்துக்குங்க என்று சொல்லவே என்னால் ஏற முடியாத நிலைமை என்பது உண்மை என்பதால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.
அப்போ அந்தக் குழந்தையின் அம்மா இன்னொருத்தர் யாருனு கேட்க, எங்க வீட்டுக்காரர், அதோ வரார் என்றேன். உடனே அவரிடம் கேட்க அவருக்கும் கழுத்துப் பிரச்னை என்பதால் மேல்ப் படுக்கையில் உள்ளே செல்வதே கஷ்டம் என்பதை எடுத்துரைத்தோம். இருவருக்கும் கோபம். அந்தக் குழந்தையிடம் நமக்குத் தான் இங்கேனு சொல்லி வைச்சிருக்காங்க போல! அது பாவம் மேலே போக மாட்டேன்னு ஒரே அடம்! என்ன செய்யறது! ஏற்கெனவே மணி பதினொண்ணைத் தாண்டி விட்டது. என்பதால் நாங்க படுத்துட்டோம். வேறே வழியில்லாமல் இருவரும் மறுபடி டிடியைப் பார்த்துக் கேட்டாங்க. அவரும் கையை விரித்து விட்டார். இப்போல்லாம் சீனியர் சிடிசனுக்கு அலாட் பண்ணினால் அதை மாத்த முடியாதுனு சொல்லிட்டார். அரை மனதாக இருவரும் மேலே ஏறினார்கள். அதுக்குள்ளே அந்தப் பெட்டியே அமர்க்களப்பட்டு விட்டது. அந்தப் பையர் மேலே போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க ஒரு வழியா அவரை மேலே ஏற்றிக் கொண்டாங்க.
ஆனால் இரவு முழுவதும் தூங்க விடவில்லை. அவங்களைப் போகச் சொல்லு! நான் கீழே தான் படுப்பேன்னு அழுதுட்டே வந்தார்! அரை மணி நேரம் தூங்கினால் ஜாஸ்தி! ரொம்பக் கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டு வந்தோம். வண்டியானா சொன்னாச் சொன்னபடி சரியாகக் காலை நாலேகால் மணிக்குச் சென்னை எழும்பூர் வந்து விட்டது! ஆனால் அப்போ மேலே மூணு பேரும் நல்ல தூக்கம்! எப்படியும் எழுந்து தானே ஆகணும்! நாங்க கீழே இறங்கி ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அம்பத்தூர் போய்ச் சேர்ந்தோம்.
மறுநாளே திரும்பியதால் மதியம் பல்லவனில் முன்பதிவு செய்திருந்தோம் அதிசயமாக இரட்டை இருக்கை கொண்ட சீட் கிடைத்தது. வண்டி நாங்க ஸ்டேஷனில் நுழையும்போது நடைமேடையில் இருந்தாலும் சுத்தம் செய்கிறார்கள் என்னும் அறிவிப்புப் பலகையை மாட்டிவிட்டுச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். முன்னெல்லாம் ஒரு பக்கம் சுத்தம் செய்யும்போது இன்னொரு பக்கம் போய் ஏறிப்பாங்க. இப்போ யாரையும் உள்ளே அனுமதிக்கலை. அப்படி ஏறினவங்களையும் கையைப் பிடிச்சுக் கீழே இறக்கி விட்டுட்டாங்க. முழுக்கச் சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிச்சாங்க. சுத்தம்னா சுத்தம் படு சுத்தம்! மயக்கமே வரும்போல் இருந்தது. என்ன ஒண்ணு நம் மக்கள் வேர்க்கடலையை உரித்துத் தின்று விட்டுத் தோலை அங்கேயே போடுவாங்க! அதான் கவலை! ஆனால் அப்படி ஏதும் நடக்கலை!
காஃபி, தேநீர் கொண்டு வந்தாங்க. கல்யாண வீட்டில் மதியம் ரசம் சாதம் மட்டுமே சாப்பிட்டிருந்தேன். மற்றவை எதையும் சாப்பிடலை! ஆகவே தேநீர் வாங்கிக் கொண்டோம். அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் கப்பில் முக்காலுக்குத் தேநீரை ஊற்றிக் கொடுத்தார் தேநீர் விற்பவர். தேநீரைக் குடித்தால் இன்னுமொரு ஆச்சரியம். தேநீர் குடிக்கும்படி இருந்தது. முன்னெல்லாம் கொஞ்சம் கடுமையாகவே பேசும் இந்த ஆட்கள் இப்போது மிகவும் தன்மையுடன், மரியாதையுடன் பேசுவதையும் காண முடிந்தது. அதோடு அடுத்தடுத்துத் தின்பண்டங்கள் விற்பனை ஆகிக் கொண்டிருக்க விருத்தாசலம் வரும்போது ஒரு ஆள் கையில் பெரிய ப்ளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு வந்து ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸில் குப்பையைச் சேகரம் செய்வது போல் சேகரம் செய்து கொண்டு போனார். பின்னாடியே இன்னொருத்தார் சோப் ஆயில் அல்லது சுத்தம் செய்யும் திரவம் ஏதோ ஒன்றைத் தெளித்துக் கொண்டே தளத்தைத் துடைத்தார்.
ஶ்ரீரங்கம் வருவதற்குள்ளாக இம்மாதிரி இருமுறை நடந்தது. ரயிலும் ஏற்கெனவே சொன்ன மாதிரி சரியான நேரத்தில் ஶ்ரீரங்கம் வந்தும் விட்டது. எப்போவும் முதல் நடைமேடையிலேயே வண்டி நிற்கும். இப்போ நாலு நடைமேடைகள் கட்டி முடித்து விட்டதால் நாலாவதில் வடக்கே இருந்து வரும் வண்டிகளை நிறுத்துகிறார்களாம். கடந்த ஒரு வருடமாக ரயில் பயணமே செய்யாததால் இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. சுரங்கப்பாதை வழியாக வெளியேறி மேலே போகணும்! என்னடா செய்வோம்னு கவலையாக இருந்தது. நல்லவேளையாக இன்னொரு தம்பதிகள் எங்களுடன் ஶ்ரீரங்கத்தில் இறங்கினவர்கள் சாமான்கள் அவர்களுக்கு அதிகம் இல்லாததால் எங்களுடையதைத் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோ பிடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வீட்டிற்கு ஒன்பதே காலுக்கெல்லாம் வந்தாச்சு. கல்யாண வீட்டில் கொடுத்த இட்லியைச் சாப்பிட்டோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துச் செய்த ரயில் பயணம் சொகுசாக அமைந்தது. எல்லா ஊர்களுக்குச் செல்லும் ரயில்களிலும் இதே மாதிரி சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்கள்/கொடுத்திருப்பார்கள் என நம்புவோம்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!
எல்லாமே சரிதான் கடைசியில் சொன்னீங்களே...
ReplyDelete///நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை///
இவரு எங்கே இருக்காரு...?
அவங்க தானே எங்களுக்கு உதவினாங்க! இல்லைனா சுரங்கப்பாதையில் படி இறங்கி, ஏறி, சாமானைத் தூக்கிக் கொண்டுனு சிரமப்பட்டிருப்போம். :)
Deleteஹா ஹா ஹா கில்லர்ஜி அவரு இப்போ ஸ்கொட்லாந்தைச் சுற்றிப் பார்ப்பதாகக் கிளவிப்பட்டேன்ன்:)
Deleteநான் என்னைத்தான் சொல்றீங்களோளோளோளோளோனு நினைச்சுட்டேன் ஹி.. ஹி.. ஹி..
Deleteஹாஹாஹா, கில்லர்ஜி!
Deleteகம்பபாரதி, அவருக்கு விருந்து என்ன கொடுக்கப் போறீங்க?
Deleteஅது ஆரியபவான் ல ஸ்பெஷல் விருந்து.. ஏற்பாடு பண்ணிட்டோம்ம்:))
Deleteஅட? அங்கேயும் ஆரியபவன்? ஹெஹெஹெஹெ
Deleteநோஓஓஓஓஓஓஒ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)..
ReplyDeleteகீதாக்கா நீங்க போஸ்ட் போட்டால் எங்கேயும் காணாமல் போயிடக்கூடது ஜொல்லிட்டேன்ன்ன்ன்:).. போஸ்ட் போடுவீங்க, பின்பு கொமெண்ட்ஸ் போட்டால் காணாமல் போயிடுவீங்க 2 நாளைக்கு, அது ஆறிய கஞ்சி போலாகிடுது கர்:).. இல்லை எனில் உங்கட மொடரேசன் பொக்ஸ் ஐத்தூக்கிக் காவேரி ல வீசிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))
அதிரா - கீதா சாம்பசிவம் மேடத்துக்கு கை வலி சரியாசா, உடம்பு நல்லாயிடுத்தான்னுல்லாம் கேட்காம, உடனுக்குடன் பதில் போடலையே என்று சொல்கிறீர்களே. இந்தத் தளத்திலாவது பதில் வரும். ஆனால் 'உணவு' தளத்தில் பதில் 'வருமா' அல்லது புது 'இடுகை'வருமா என்பதெல்லாம் அவங்களுக்கே தெரியாது.
Deleteconflicting edit or error னு ப்ளாகர் கூவுது! :) கம்பபாரதி! உடம்பு சரியில்லாமல் போயிடுது இல்லையா! அதான் கருத்துக்களை வெளியிடக் கூட சமயத்தில் உட்கார முடிவதில்லை! இப்போ 3 நாளாக் கொஞ்சம் பரவாயில்லை ரகம்! :) மாடரேஷன் பாக்ஸைக் காவிரியிலே வீசினா என்ன உள்ளேயே போயிடப் போகுதா என்ன? அப்படியே கிடக்கும். திரும்ப எடுத்துட்டு வந்துடுவேன்.
Deleteநெ.த. ஆன்மிகப் பயணம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு எழுத ஆரம்பிச்சேன். கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் சுணக்கம். பொதுவா நான் எதையும் உடனுக்குடன் முடிப்பேன். இப்போல்லாம் என்னை மீறிய நிகழ்வுகள், உடம்பு! பல சமயங்களிலும் மதியம் மட்டும் ஓர் இரண்டு மணி நேரம் கணினியில் உட்கார்ந்து விட்டு மூடும்படி இருக்கிறது. சமையல் பக்கத்திலும் அதே தான்! ஆனால் ஏற்கெனவே நிறையப் பகிர்ந்திருக்கேனே! :)
Deleteபஸ் ஐ விட ரெயின் பயணம் ஈசிதான், ஆனா நீங்க சொன்ன சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteவாங்க கம்பபாரதி, இந்தப் பெயர் தான் ரொம்பப் பிடிச்சிருக்கோ? ஒரு சிரமங்களைத் தவிர்த்தால் ரயில் பயணம் வசதி தான்.
Deleteஅது அடுத்த பட்டம் எனக்கு வழங்கப்படும்வரை இப்பட்டம் இருக்கும் கீதாக்கா:))
Deleteமேல் பர்த் கீழ் பர்த் பிரச்சனை - புரிந்துகொள்ள முடிந்தது. பெற்றோர்கள் மற்றவர்களது நலனையும் கவனத்தில் கொள்ளணும்.
ReplyDeleteஒரு வேளை நீங்க ரொம்ப ஆதரவா செய்திகள் போடறதுனால, உங்க ஆதார் கார்டை மோப்பம் பிடித்து, உங்கள் ரயில் பிரயாணத்தை ரொம்ப சொகுசா மத்திய அரசு செஞ்சுகொடுத்துடுச்சோ? எனக்கு இப்போதைக்கு பிரயாணம் செய்யும் வாய்ப்பில்லை. வாய்ப்பு வரும்போது நம்ம ஊர் ரயில் பிரயாணம் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன். அந்த சுத்தம் செய்தவர்கள், பயணிகளிடம் காசு கேட்கலையா?
இல்லை. இப்போப் பலரும் சொல்றாங்க ரயில் பயணம் நன்றாக இருப்பதாக! அந்த ஊழியர்கள் எங்களிடம் மட்டுமில்லை யாரிடமுமே பணம் கேட்கவில்லை. கருமமே கண்ணாயினர்!
Deleteஇரவு நேர ரயில் பயணங்கள் தொல்லையாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைகள், அடுத்தவரின் அரட்டைகள்-எங்கே தூங்க முடிகிறது? நாம் கஷ்டப்பட்டு பல மாதங்கள் முன்பே டிக்கட் ரிசர்வ் பண்ணியிருப்போம். ஆன்லைனின் உதவி இல்லாமல் க்யூவில் நின்றும் டிக்கட் வாங்கியிருப்போம். அப்பாடா என்று ரயிலில் ஏற வந்தால் நம் வயதைக்கூட பார்க்காமல் இப்படி சிலர் கேட்கும்போது ஆச்சரியமாயிருக்கும்!
ReplyDeleteவாங்க மனோ சாமிநாதன், எங்களுக்கு இதுக்கு முன்னால் பல சமயங்களிலும் இப்படி நேர்ந்திருக்கிறது. ஆனால் நாங்க யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு என ஒதுக்கி இருக்கும் கீழ்ப்படுக்கைகளை விட்டுக் கொடுத்தது இல்லை. ஏன்னா இரண்டு பேருக்கும் முடியாது! அதிலும் பக்கவாட்டுப் படுக்கையின் மேல்ப் படுக்கை எனில் இவர் மேலே போய் உடம்பை இரண்டாக மடித்து உள்ளே போறதுக்குள்ளேயும் மறுபடி வெளியே வரதுக்குள்ளேயும் எனக்கு உயிர் போயிட்டுத் திரும்பி வரும்! :(
Delete////நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை///
ReplyDeleteஎங்க லண்டனில் எப்பவுமே சமரில் மழைதானே அப்படின்னா யூகே முழுதுமே நல்லார் இருக்காங்க :)))
ஹாஹாஹா, யுகே முழுவதும் நல்லவர்களா? இருக்கும், இருக்கும்! :)
Deleteஅஞ்சு வயசு பையர் பேரண்ட்ஸில் தான் தவறு இருக்கு ..எல்லாமே உனக்கு என்ற வழியில் வளர்ப்பது சரியில்லை .ஏமாற்றங்களை தனக்கும் பக்குவம் கற்று கொடுக்கணும் .
ReplyDeleteஆமாம், அது எங்களுக்கும் புரிஞ்சது. இது கூடப் பரவாயில்லை. நாங்க 3,4 வருடம் முன்னர் தில்லி செல்லும்போது முதல் வகுப்பில் முன்பதிவு செய்திருந்தோம். நான்கு பேர் படுக்கும் அபேயில் கீழ்ப் படுக்கை எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மேல்ப்படுக்கை யாரோ ரயில்வே உயர் அதிகாரியாம். அவர் வந்து பார்த்துட்டு டிடியுடன் சண்டையே போட ஆரம்பித்து விட்டார். டிடி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இத்தனைக்கும் 45,50 வயதுக்கு உட்பட்டவரே! ஆனால் டிடி ஏதும் சொல்லாமல் கூப்பே ஒன்றை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு அங்கே பதிவு செய்தவர்களுக்கு வேறு இடம் கொடுத்தார். கடைசியில் கல்லூரி மாணவர்கள் இருவர் நாங்க இருந்த பெட்டியில் மேல்ப்படுக்கையைப் பகிர்ந்து கொண்டனர். இப்படியும் இருக்காங்க! :(
Deleteபேருந்து க்ளீனிங் சர்வீஸ்லாம் படிக்க ஆச்சர்யமா இருக்கு ..நல்லது இப்படியே தொடரட்டும்
ReplyDeleteஏஞ்சல், பேருந்து இல்லை. ரயில்! :) பேருந்துப் பயணம்னாலே எனக்குக் கொஞ்சம் இல்லை நிறைய அலர்ஜி! பக்கத்தில் மதுரைக்குப் பேருந்துப் பயணம்னாலே எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
Deleteபல சமயங்கள் நல்லதும் நடக்கிறது! ஆனால் வெளியே யாரும் சொல்வதில்லை.
ReplyDeleteதொடர்ந்து நடந்தால் தேவலை.
வாங்க வெங்கட், நிறைய மாற்றங்கள்!
Deleteரயில் பயணம் சுகமாக அமைந்தது. சந்தோஷம். அந்தக்குழந்தை பிடிவாதம் பிடித்ததற்கு உண்மையில் அந்தப் பெற்றோர் வெட்கப்பட்டிருக்க வேண்டும். வயதானவர்களை மேலேற்ற வேண்டும் என்று எப்படி எண்ணம் வந்ததோ... ரயில் பெட்டியில் அலுமினிய ஃபாயில் பொறுக்கும் பிசினஸ் தெரியுமோ? பெரிய பிசினஸ் அது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அந்தப் பெற்றோர் வெட்கப்படவில்லை. மாறாக எங்களிடம் கோபம். புலம்பிக் கொண்டே வந்தார்கள்.
Deleteரயில் பெட்டியில் அலுமினிய ஃபாயில் பொறுக்கும் நபர் பற்றிப் பல இடங்களில் பெரிய கட்டுரையாகப் பகிர்ந்திருக்கின்றனர். படிச்சிருக்கேன்.
அருமையான விஷயம் தான் இதே போல் ஒன்றொன்றாய் எல்லாவற்றயும் ஒழுங்கு படுத்தினால் ஓரளவுக்காவது நன்றாகத்தான் இருக்கும் மனதுக்கும்
ReplyDeleteவாங்க பூவிழி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கீங்க போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
DeleteFor about 2 years, I was traveling a lot, almost on weekly basis towards the end. I saw the differences too. For the better. Sometimes, it so happened that somebody was already sleeping in my lower berth:(
ReplyDeleteவாங்க மிகிமா , கொஞ்ச நாட்களா உங்களையும் காணோம்! நீங்க சொல்லுவது போல் எங்களுக்கு நீண்ட தூரப் பயணங்களில் நடந்திருக்கிறது.
Deleteஇவ்வாறான நிகழ்வுகளை பயணங்களில் எதிர்கொண்டுள்ளேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா. எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும்.
Deleteமாற்றங்கள் நல்லதுக்குத்தானே
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteநம்முடைய ரெயில்வே பயணிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தியிருக்கிறது. நாமும் கொஞ்சம் ஓத்துழைக்க வேண்டும். நாங்க சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களுர் வரும் பொழுது, நீங்கள் சொன்னது போல குப்பைகளை அவ்வப்பொழுது வாங்கிக்கொண்டு போனார்கள். ஏ.சி. பெட்டிகள் ஓ.கே. சாதாரண இரண்டாம் வகுப்பு இன்னும் கொஞ்சம் முன்னேறலாம்.
ReplyDeleteஸ்ரீரங்கம் ஸ்டேஷன் சப்வே பெரிய பெட்டிகளை கொண்டு வருபவர்களுக்கு கஷ்டம்தான்.
வாங்க பானுமதி! ரொம்ப நாளாச்சு பார்த்து! இங்கேயும் வரதில்லை! :) வருகைக்கு நன்றி. சென்னை-பெங்களூர் இப்போ சமீபத்தில் பயணிக்க வாய்ப்பு இல்லை! ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸில் எப்போவுமே குப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள். சாதாரண இரண்டாம் வகுப்பு எப்படினு பார்க்கலை! :)
Deleteகீதாக்கா அந்தக் குட்டிப் பையனின் பெற்றோரின் மீதுதான் தவறு. இப்படி நிறைய பெற்றோர் உள்ளனர். அதை ஏன் கேக்கறீங்க...வயதானவர்கள் பயணம் செய்யும் போது இளையவர்கள்தான் அவர்களுக்கு ஒரு வேளை மேல் பெர்த் என்றால் இளையவர்கள்தான் தான் தம் பெர்த்தைக் கொடுக்க வேண்டும்...அது போன்று உடல் முடியாதவர்கள் என்று....சிலர் இளையவர்களாகவே இருந்தாலும் கீழ் பெர்த்தைத் தரமாட்டார்கள்...நான் வயதானவர்கள் மேலே ஏற முடியாதவர்கள், உடல் முடியாதவர்கள் வந்தால் நானாகவே கொடுத்துவிடுவேன்...இத்தனைக்கும் எனக்கு ஜன்னல் இருக்கைதான் பிடிக்கும்...என்றாலும் அவர்கள் படுக்கும் சமயம் கொடுத்துவிடுவேன்...
ReplyDeleteஇப்போது ரயிலில் கொஞ்சம் சுத்தம் செய்கிறார்கள் தான் அக்கா ஆனால் அது ஏசி கோக் என்பதாலோ? நார்மல் கோச்சில் வருவதில்லையே....சுத்தம் செய்ய..ஒரு வேளை கூட்டம் காரணமாக இருக்குமோ என்னவோ....
கீதா
வாங்க கீதா/தில்லையகத்து! எங்கே இளையவர்கள் யாரும் அப்படி எல்லாம் அனுசரிச்சுப் போவதில்லை. சாதாரண இரண்டாம் வகுப்புக்குச் சுத்தம் செய்வதில்லையா? தெரியலை! அதில் பயணமே செய்தது இல்லை. குறைந்த தூரம் எனில் போவோம். உதாரணமாகக் கும்பகோணம்--திருச்சி, நாகர்கோயில்--திருவனந்தபுரம்! இப்படி! :)
Deleteசாதாரண இரண்டாம் வகுப்பில் வருவதில்லை அக்கா...நான் இரண்டாம் வகுப்பில் தான் பயணம் செய்வது....அதனால்தான் ..ஒரே ஒரு முறை பூனே சென்ற போது சாதாரண இரண்டாம் வகுப்பிலும் ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்டேஷனில் வந்து க்ளீன் செய்துவிட்டுப் போனார்கள் அவ்வளவே...அப்புறம் வந்ததில்லை...
ReplyDeleteகீதா
ம்ம்ம்ம் ஆனால் பயணிகள் கேட்டுக் கொண்டால் பெரிய ரயில் நிலையம் வரும்போது சுத்தம் செய்து தருவார்களே! நாங்க முன்பெல்லாம் 3,4 நாட்கள் ரயில் பயணம் தொடர்ந்து செய்திருக்கோம். அப்போல்லாம் சொல்லுவோம்! வந்து சுத்தம் செய்து கொடுப்பாங்க! ஆனால் முதல் வகுப்பு! ஹிஹிஹி! :)
Deleteஇரண்டாம் வகுப்பு பாத்ரூம் உட்பட சீட்கள் எல்லாமே இன்னும் முன்னேற வேண்டும்....சாதாரண மக்கள் என்று செய்வதில்லையோ?!!!
ReplyDeleteகீதா
ரயில்வே அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் இதைக் குறித்த உங்கள் புகாரை அளிக்கலாம் கீதா! உடனடியாக எதுவும் செய்யாட்டியும் மெல்ல மெல்லவாவது முன்னேற்றம் வரட்டுமே!
Delete