எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 11, 2017

மஹாகவியின் பிறந்த நாள்!

இன்று மஹாகவி பாரதியின் பிறந்தநாள். வழக்கம் போல் எல்லோரும் இன்று அவரை நினைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு பின்னர் அடுத்த வருஷம் டிசம்பர் 11 வரையோ அல்லது அவரது நினைவு தினமான செப்டம்பர் 11/12 தேதிக்கோ நினைச்சுட்டு வழக்கம் போல் மறந்துடலாம். பொதிகை தொலைக்காட்சி மட்டும் பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவங்க நடத்தும் பாட்டுப்போட்டி குயில் தோப்பு சீசன் 3-க்கு பாரதி பாட்டுக்களாகப் பாடச் சொல்லி இருக்கின்றனர். ஐந்து பெண் குழந்தைகள் பங்கெடுத்துக் கொண்டனர்.  இன்று மதியம் பனிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை நிகழ்ச்சி நடந்தது. அடுத்தவாரம் முடியும்.

பாரதியார் பெண்கள் தைரியமாகவும் சார்பில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் படிப்பு தேவை என்றும், கூறினார்.  நிமிர்ந்த நன்னடையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறியும் திமிர்ந்த ஞானச் செருக்கும் பெண்களிடம் இருக்க வேண்டும் என்றார். ஆனால் அதுக்காகப் பெண்கள் எல்லை மீறி நடக்கணும்னு சொல்லலை. ஆனால் இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை.

 பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கும் தற்போது நாம் காணும் புதுமைப் பெண்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எனினும் விரைவில் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உதயமாவார்கள் என்னும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். மஹாகவிக்கு அஞ்சலிகள்.

பாரதியார் பிறந்த நாள் க்கான பட முடிவு


என்னென்னமோ எழுத நினைச்சேன். ஆனால் முடியலை! ஒரே இருமல் வந்து தொல்லை கொடுக்குது! ஆகையால் இத்தோடு முடிச்சுட்டேன். :(

33 comments:

  1. பாரதியை பாடப்புத்தகத்தில் படித்து மறந்துவிட்ட இளைய சமுகத்தினர் என்றுதான் சொல்லவேண்டும் அல்லது பாரதி சொன்ன வரிகளுக்கு அர்த்தம் தெளிவாக தெரியாமல் படித்தவர்களாகவும் இவர்கள் இருக்க கூடும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரி தான் அவர்கள் உண்மைகள்

      Delete
  2. பாரதி பெண்ணுரிமையைப்பற்றி எப்படி நினைத்தான், அவனது கனவுகள் என்ன ? இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன ?

    என்பதைப்பற்றிய கருத்து நம் இருவருக்குமே ஒரே நேர்கோட்டில் வருகிறது இதை பலமுறை பல பதிவுகளில் கண்டு கொண்டேன்.

    நானும் எழுத நினைத்தேன் மனசஞ்சலம் (உண்மையை எழுதினாலும்) வருகிறது ஆகவே விட்டு விட்டேன்.

    நான் ஆணாதிக்கத்தை விரும்பாதவன் பெண்ணுரிமையை ஆதரிப்பவன் அதேநேரம் இன்றைய பெண்களின் சுதந்திரத்தின் போக்கு சரியில்லை முடிவு விவாஹரத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    இன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.
    நாளை ஒருவனுக்கு பிறந்தநாள் எல்லா தமிழனுக்கும் தெரியும் தமிழக சேனல்கள் தம்பட்டம் தொடங்கி ஒருவாரமாகி விட்டது.

    //காலக்கெரகம்//

    செல்லில் எழுதுவதால் நிறுத்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///இன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.
      நாளை ஒருவனுக்கு பிறந்தநாள் எல்லா தமிழனுக்கும் தெரியும் தமிழக சேனல்கள் தம்பட்டம் தொடங்கி ஒருவாரமாகி விட்டது.//

      ஹா ஹா ஹா கில்லர்ஜி.. நாளையிண்டைய பிறந்தநாளும் எல்லோருக்கும் தெரியுமே:)) அதை என்ன பண்ணப்போறீங்க?:)).. இப்போ எது புழக்கத்தில் இருக்கோ அதைத்தானே நினைவில் கொள்வோம்ம்.. ரஜனி அங்கிளின் பிற்காலம் அவரின் பி தினத்தை எல்லோரும் மறந்திடுவினம்... இப்போ எதுக்கு இவ்ளோ புகை விடுறார் கில்லர்ஜி:))..

      ///பாரதி பெண்ணுரிமையைப்பற்றி எப்படி நினைத்தான், அவனது கனவுகள் என்ன ? இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன ?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டு:))... ஆண்களால் பாரதியைப்போல உடை அணிந்து உலாவ முடியுமோ?:))... அதை விட்டுப்போட்டு.. பெண்களைப் பற்றியே எப்பவும் பாரதி சொன்னதை வச்சுப் பேசிக்கொண்டு கர்:)) உங்களுக்குப் பொறாமை:)).. பெண்களைப்போல அழகழகா நம்மால உடை உடுத்தி அலங்காரம் பண்ண முடியல்லியே என:))..

      நான் வேணுமெண்டால்ல்.. வலையுலக ஆண்களை அடுத்த பிறப்பில் பெண்ணாகப் படையுங்கோ ஆண்டவா என நேர்த்தி வைக்கிறேன்ன்.. உகண்டாப் பிள்ளையாருக்கு:)).

      Delete
    2. வாங்க கில்லர்ஜி! உண்மையான பொருளைத் தெரிஞ்சுக்காமத் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க! மற்றபடி எல்லோரும் கொண்டாடும் அந்தப் பிறந்த நாளை எல்லாம் நாங்க கவனிக்கிறதே இல்லை!

      Delete
    3. வாங்க கவிப்புயல் அப்பாவி அதிரா, நிஜம்மாவே பெண்களைப் பற்றிய பாரதியின் கருத்துக்களோடு இப்போதுள்ள பெண்கள் நடத்தை ஒத்துப் போகிறதா என்ன? வெறும் உடையை மட்டும் வைச்சுச் சொல்லக் கூடாது! :)

      Delete
  3. மறக்காமல் பாரதியை நினைவுகூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    "இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை" - கீ.சா. மேடம். அந்தக் காலத்திற்கு ஏற்றவாறு பாரதியின் விஷன் அமைந்திருந்தது. காலம் மாறும்போது, முன்னேறும் (?) வேகமும் அதிகமாகும். உணவு உடை கலாச்சாரம் பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் மாறும்போது, எல்லாம் மாறத்தானே செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. இது கரீட்டூஊஊ... கடுகதி வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் உலகில் பாரதியார் சொன்னதன்படியே தான் நடக்கோணும் எனில் எப்படி வாழ முடியும்...?.. பாரதியார் இப்போ இருந்திருந்தார்ர்.. அப்போ சொன்னதை வாபஸ் வாங்கிட்டு, புதிசாச் சொல்லியிருப்பார்:)).. அவர் இல்லாமல் போனதுதான் இப்போ கீதாக்காவுக்கு பிரச்சனையாகிட்டுது:)

      Delete
    2. காலம் மாறினால் கலாசாரம் மாறணுமா என்ன? புரியலை நெத

      Delete
    3. அப்பாவி அதிரா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  4. சுக்கு மிளகு திப்பிலி ஏலம் இவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். தண்ணீரைச் சுடவைத்து இந்த பொடியைக் கொஞ்சம் போட்டு துளசி கற்பூரவள்ளி அல்லது ஓமம் கொஞ்சம் கருப்பட்டி அல்லது சீனி போட்டு கொதிக்க வைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இருமலுக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. எப்போவுமே சுக்கு, மல்லிக் காஃபிக்கு எங்கள் ஆதரவு உண்டு. என்றாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி.

      Delete
  5. நான் எழுதிய பின்னுட்டத்தை பப்லிஸ்ஹ் பட்டன் அழுத்தாமல் விட்டேனோ என்னும் சந்தேகம் பார்க்க வேண்டும் பிறகு

    ReplyDelete
    Replies
    1. இதான் வந்திருக்கு! ஸ்பாமிலும் இல்லை.

      Delete
  6. ///வருடைய கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு பின்னர் அடுத்த வருஷம் டிசம்பர் 11 வரையோ அல்லது அவரது நினைவு தினமான செப்டம்பர் 11/12 தேதிக்கோ நினைச்சுட்டு வழக்கம் போல் மறந்துடலாம். //

    ஹா ஹா ஹா அப்பூடித்தான் இங்கின.. அதிராவைப் பார்த்தால் மட்டும் நினைக்கிறாங்க:) இல்லை எனில் மறந்திடுறாங்க கீதாக்கா..:)..

    ஊசிக்குறிப்பு:
    கீதாக்கா நேற்று கடலைப்பருப்பு வாங்கி வந்து இன்று காலை ஊறவும் போட்டு விட்டேன்... நான் கடலைப்பருப்பை எப்பவும் 2,3 நாட்கள் ஊற விட்டே வடை சுடுவேன்.... அதனால பயப்பூடாதீங்க.. உங்க பருப்புக்கீரை வடை ரெசிப்பியைப் போடுங்கோஓஓஓஓஓஓஒ:))..

    ReplyDelete
    Replies
    1. கடலைப்பருப்பை எல்லாம் 2,3 நாட்கள் ஊற வைச்சால் ஒரு மாதிரி வாசனை வந்துடும். இங்கே நம்ம நாட்டில். அங்கே தான் குளிர்னு சொல்றீங்களே! அதனால் ஊறினால் ஒண்ணும் ஆகாதா இருக்கும். இருந்தாலும் ஊற வைச்சதில் இருந்து நாலைந்து முறையாவது (ஒரு நாளைக்கு) களைந்து நீரை மாற்றுங்க!

      Delete
  7. //ஆனால் அதுக்காகப் பெண்கள் எல்லை மீறி நடக்கணும்னு சொல்லலை. ஆனால் இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை.///

    கீதாக்கா பாரதியார், உயர்ந்தவர் .. போற்ருதலுக்குரியவர்... ஆனா அதுக்காக பெண்களுக்கு வரைவிலக்கணம் சொன்னவர் அவர்தான், அவரின் பேச்சுப் படியேதான் பெண்கள் நடக்கோணும் எனச் சொல்வதை நான் மறுக்கிறேன்ன்.. படைத்தவரே பெண்களுக்கு எந்த ரூல்ஸ் உம் போட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை.. எதுக்கு பாரதியார் சொன்னதையே பெண்கள் செய்யோணும் என எதிர்பார்க்கிறீங்க...

    மனிதராகப் பிறந்திட்டால்.. இப்படித்தான் ஒவ்வொருவரும் வாழோணும் என சில எழுதப்படாத விதி முறைகள்.. நாட்டுக்கு நாடு மாறுபட்டு இருக்கிறது.. அதில் நல்லவற்றைக் கடைப்பிடிக்கோணும்... மற்றும் படி காலவோட்டத்துக்கு ஏற்ப மாற்றம் வரத்தானே செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. பாரதி வரைவிலக்கணம் சொல்லலை அதிரா. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற காலம். அப்போது பாரதி சொல்கிறான், 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை' - காரணம், அப்போது ஆண்களை முகம் நோக்கிப் பார்ப்பதே தவறு என்று இருந்த காலம், பெண் என்பவள், நிலம் நோக்கித்தான் நடக்கவேண்டும் என்ற வழக்கம், அடங்கி ஒடுங்கிப்போயிருந்த காலம். பெண்கள் படிக்கவேண்டும் என்று அவன் அழுத்திச் சொன்னான். இந்த மாதிரி சிந்தனை உதிக்காத சமயத்தில், அதுவும் பிராமண குலத்தில் பிறந்த அவனுக்கு இந்த மாதிரிச் சிந்தனை வந்து, அதனை வெளியிட்டான் என்றால், எப்படிப்பட்ட விஷன். அதைத்தான் நாம் பாராட்டணும்.

      இப்போகூட பாருங்க... பெண் குழந்தைகளுக்கு, 'சமையல் சாதன விளையாட்டுப் பொருட்களை'த் தருவதும், ஆண் குழந்தைக்கு 'எலெக்டிரானிக் ரிமோட் கார், விளையாட்டுத் துப்பாக்கி' போன்ற பொருட்களை Gift ஆகத் தருவது சகஜம்.

      Delete
    2. அதிரா, மாறுபாடுகள் நல்லவையாக இருந்தால் சரிதான். ஆனால் பெண்களுக்கு எனச் சில வரையறைகள் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

      Delete
    3. நெ.த. நீங்க இந்தியாவில் சொல்றீங்க, பெண் குழந்தைகளுக்குச் சமையல் சாதன விளையாட்டுப் பொருட்கள் என! யுஎஸ்ஸில்? அங்கே மட்டும் என்ன வாழுதாம்? பெண் குழந்தைகளுக்கு எனத் தனியான விளையாட்டுப் பொருட்கள், ஆண் குழந்தைகளுக்கு எனத் தனி! உடையின் நிறம் கூடப் பெண் என்றால் பிங்க்! ஆண் எனில் நீலம்! இது தாங்க்ஸ் கிவிங் டேக்குக் குழந்தைகள் போட்டுக் கொள்ளும் அலங்காரங்களிலும் மாறுபடும். பெண் குழந்தைகள் இது தான் போட்டுக்கணும்னு உண்டு ஆண் குழந்தைகளுக்குத் தனி!

      Delete
  8. ஒரு காலத்தில் பாரதியார் கவிதைகள்னா உயிர் .ஒரு குட்டி புக் கூட பரிசா கிடைச்சது ..
    டிசம்பர் என்றால் பாரதியார் தான் எனக்கு நினைவு வருவார் ..பின்னாளில் ..கில்லர்ஜி சொன்னாரே அவரும் மீடியாக்களால் காட்டப்படுவார் ..
    பாரதியார் அவரது கவிதையில் சொன்ன //கண்ணிலா குழந்தைகள் போல // இப்படி நிறைய இருக்கிறாங்க அப்பவும் இப்பவும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், எனக்கும் சின்ன வயசில் பாரதியார் பத்தின புத்தகம் பரிசாக் கிடைச்சது.

      Delete
  9. முண்டாசுக் கவிஞனை நினைக்க ஒரு நாள் என்பதாகப் போய்விட்டது இப்போது....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.

      Delete
  10. இருமல் ஆரம்பித்தால் விட மாட்டேன் என்கிறது. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நன்றி. இருமல் இன்னமும் விடலை! :)

      Delete
    2. கீதாக்கா இப்பத்தான் உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணியய்தைப் பார்த்து வரேன். இருமல் இருக்கா..இன்னும்...அக்கா எனக்குக் கிட்டத்தட்ட 1 1/2 மாதம் போச்சு ..ஆனால் நான் இம்முறை அலோபதி போகாமல் உப்பு கார்களிங்க், சமஹன், முசுமுசுக் கீரையை வார்ம் வாட்டரில் போட்டுக் குடித்தல் என்று செய்ததில் இருமல், சைனஸ் எல்லாம் நன்றாகக் குணமாகிவிட்டது....முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்...

      கீதா

      Delete
    3. உப்பு கார்க்ளிங் பண்றேன்.சமஹன் ஒண்ணு தான் வாங்கலை. மத்தபடி ஆயுர்வேதத்துக்கு உள்ள ஆஸ்த்மா இருமல் மாத்திரை லக்ஷ்மிவிலாஸ் ரஸ் வாங்கிச் சாப்பிட்டு வரேன். முசுமுசுக்கீரை இங்கே கிடைக்குமானு தெரியலை. இப்போ உள்ள இருமல் அசிடிடியால் வரும் இருமல்! :)

      Delete
  11. இருமல் தொல்லையா. பாவமே. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
    பாரதியாரையும் கீதா பதிவையும் எதிபார்த்தே டிசம்பர்
    பிறக்கிறது மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நன்றி.

      Delete
  12. அக்கா உங்க இருமலையும் ஆஸ்துமா வையும் சில foods ட்ரிக்கர் பண்ணிடும் ..ரொம்ப இருமல் இருக்கும்போது பால் கோதுமை சேர்க்காதிங்க .... இன்னொன்றும் இருக்கு அது ஆர்டிபிஷியல் கலரிங் ,நீங்க இதுவரை உங்க ரெசிபிஸ்லயே சேர்த்ததில்ல அதானால் சொல்லலை ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், நான் செயற்கையான எந்தப் பொருளையும் வலிந்து சேர்ப்பதில்லை. காஃபி கூட இப்போக் கொஞ்ச நாட்களா நிறுத்திட்டேன். தால், சாதம், மோர் சாதம்னு தான் சாப்பிடறேன்.

      Delete
    2. அதுவும் மருத்துவ ஆலோசனையின் பேரில்.

      Delete