எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 17, 2017

கவர்னர் கதவைத் திறந்து பார்த்த விபரம்!

தமிழக ஆளுநர் முன்னறிவிப்பின்றித் தன்னந்தனியாகக் கடலூரில் ஆய்வு செய்கையில் ஒரு பெண்மணி குளிக்கையில் குளியலறையைத் திறந்து பார்த்தார்!

கடந்த இரண்டு நாட்களாக இந்தச் செய்தி தான் முகநூலிலும் மற்ற ஊடகங்களிலும் ஓட்டிட்டு இருக்காங்க. ஒரு கவுன்சிலர் ஆய்வு செய்ய வந்தால் கூட அவரோடு குறைந்த பட்சமாகப் பத்துப் பேர் இருப்பாங்க! கலெக்டர் வந்தால் கூடவே அலுவலக ஊழியர்கள், மற்ற அந்தக் குறிப்பிட்ட துறை ஊழியர்கள்னு வருவாங்க. போலீஸ் பந்தோபஸ்தும் இருக்கும். அப்படி இருக்கையில் ஒரு ஆளுநர் யாருமே இல்லாமல் தன்னந்தனியாக வந்து ஏதோ ஓர் வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் உள்ளே நுழைந்து அல்லது வாசல் பக்கம் இருக்கும் குளியலறையைத் திறந்து பார்க்க முடியுமா? அந்த வீட்டில் வேறு மனிதர்களே இல்லையா? அக்கம்பக்கம் வீடுகள் இல்லையா? தெருவிலே நடமாட்டமே இல்லாமல் இருந்ததா?

அல்லது கவர்னரோடு பாதுகாப்புக்கு வந்த காவலர்கள், கவர்னரின் செயலர், மற்றும் காவல் துறை, கூடவே படம் எடுக்க வரும் ஊடகங்கள் எல்லோருமே கவர்னர் கதவைத் திறந்த போது திரும்பிக் கொண்டு நின்று கொண்டார்களா? கவர்னர் மட்டுமே கதவைத் திறந்து பார்த்தாரா? இதை ஓர் ஊடகமும் முக்கியச் செய்தியாக வெளியிடுவதோடு ஆளுநர் மேல் போலீஸ் புகார் கொடுக்கப் பட்டிருக்கிறது என்னும் பொய்ச் செய்தியையும் சொல்லுகிறது. அதையும் நம்பிக் கொண்டு எல்லோருமே ஆளுநரைத் திட்டித் தீர்த்தாச்சு! அந்த ஊடகம் என்ன நினைச்சதோ அது நடந்து விட்டது.

உண்மையில் கவர்னர் இப்படிப் பட்ட ஆய்வுகளைச் செய்யலாமா? செய்யலாம்! அவருக்கு முழு உரிமை இருக்கிறது. இதுவரை இருந்த கவர்னர்கள் செய்யலை என்பதால் நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை!

"ஸ்வச் பாரத்" திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டிக் கொள்வதற்காக மத்திய அரசின் சுகாதாரத் துறை நிதி உதவி அளித்து வருகிறது. ஆனால் அந்த நிதி உதவியைப் பெற்றுக் கொண்ட சிலர் கழிப்பறை கட்டிக்கொள்ளாமல் சொந்த உபயோகத்துக்குப் பணத்தைச் செலவிட்டுக் கொண்ட செய்தி அரசுக்குப் போனதால் உண்மையிலேயே பயனாளிகள் கழிப்பறை தான் கட்டினார்களா என்பதைத் தான் ஆளுநர் ஆய்வு செய்தார்.  ஆனால் உண்மை வெளி வந்துவிடப் போகிறதே என்னும் பயத்தால் அதைத் திசை திருப்பி மாற்றிச் சொல்கின்றனர் ஊடகங்கள். கழிப்பறை இருப்பவர்களும் இல்லை என்று பொய் சொல்லி பணம் வாங்கி இருக்கின்றனர். ஆகவே விஷயத்தைத் திசை திருப்ப ஊடகங்கள் செய்த நாடகம் இது!

கவர்னர் வெளியே செல்வது என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கெனத் தனி ப்ரோட்டோகால் உண்டு. கவர்னரின் அந்தரங்கக் காரியதரிசி, அலுவலக ஊழியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், கவர்னரின் பாதுகாப்புக்கு என இருக்கும் அதிகாரிகள், உள்ளூர் கலெக்டர் மற்றும் அவர் அலுவலக ஊழியர்கள், மாநிலக் காவல் துறை, இவர்களைத் தவிரக் கையில் காமிராவோடு கூடவே ஓடி வரும் ஊடகங்களின் நபர்கள் இத்தனை பேர் புடை சூழத் தான் ஆளுநரால் போக முடியும்.  அதுவும் குறிப்பிட்ட வீட்டுக்கு கவர்னர் வரப்போவதாக முன் கூட்டியே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியும் உள்ளே சட்டுனு எல்லாம் கவர்னர் நுழைவாரா? கொஞ்சம் யோசிக்கணும்! முன்னே அவர் பாட்டுக்குப் போயிட்டு யாரானும் உள்ளே இருந்து கவர்னரைத் தாக்கினால்? உள்ளே சந்தேகப் படும்படியான நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்யாமல் ஆளுநரால் உள்ளே நுழைந்திருக்க முடியாது. இத்தனை தூரம் நடந்தும் அதன் பின்னர் மாநில அதிகாரிகள் இருவர் உள்ளே போனதும் தான் கவர்னர் மூன்றாவதாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஆனால் அதைத் திரித்துச் செய்தி வெளியிட்டு மகிழ்கின்றனர் தொலைக்காட்சி சானல்கள். அதையும் நம்பி எல்லோரும் கவர்னரைத் திட்டுகின்றனர்.

வர வர மோதி எதிர்ப்புக்கு ஓர் அளவே இல்லாமல் போயிடுத்தே! மோதியைப் பிடிக்கலைனால் ஆளுநருமா பிடிக்காமல் போகும்? எல்லோரும் பிஜேபி ஆளும் மாநிலங்களின் கவர்னர்கள் அங்கே ஏன் ஆய்வு செய்யவில்லை என்று கேட்கின்றனர். அங்கிருந்து புகார் வந்தால் அங்கும் ஆய்வு செய்திருப்பார்கள். மொத்தத்தில் புரையோடிப் போன ஊடகங்கள்! பொய்யையே மெய் போலச் சொல்லிக் கொண்டு திரிகின்றன.

ஆளுநர் மாளிகையிலிருந்து மறுப்புக் கடிதம் வந்திருப்பதோடு முழு விபரங்களும் கொடுத்திருக்கின்றனர். செய்தி வெளியிடும் முன்னர் ஆளுநர் மாளிகையோடு சரி பார்த்துக் கொண்டு செய்தி வெளியிடும்படியும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! இந்த அரசு செய்து வரும் பல நல்ல விஷயங்கள் பொதுமக்களிடம் பரவலாகப் போய்ச் சேரவில்லை என்பதோடு அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பி விட்டு வேடிக்கை பார்க்கின்றன ஊடகங்கள்!

16 comments:

  1. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அரசியல்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆமாம்! அதிலும் மோசமான அரசியல்!

      Delete
  2. எப்படியோ ஊடகங்கள் கல்லாக்கட்டுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, மோசமான ஊடகங்கள்

      Delete
  3. கழிப்பறை கட்டாமல் பணம் பெற்றுக்கொண்டவர்கள்மேல் தேசத் துரோக வழக்கு போட்டு சிறையில் வைத்தால் அது பெரிய impactஐக் கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. அது முடியாது! ஏனெனில் அவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். அல்லது வறுமையில் இருப்பவர்கள். பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலமும் இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு சில பயனாளிகள் இருக்காங்க. அதே போல் எரிவாயு அடுப்பு இணைப்புக்கும். விஷயம் தெரிஞ்சவங்க முத்ரா திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெற்று ஆட்டோ கூடச் சொந்தமாக வாங்கிக்கறாங்க. எங்க குடும்ப ஆட்டோ ஓட்டுநர் அப்படித் தான் வாங்கப் போறார்.

      Delete
  4. கீதாக்கா ஊடகங்களுக்கு செய்திகள் இல்லை போலும்...அதான் வெறும் வாயை மெல்லுவது போரடிச்சு.. அவலை மெல்லுவது என்று சொல்லுவதுண்டு இல்லையா அது போலத்தான்...அதைத்தான் செய்கிறார்கள்.....பரபரப்புதானே இப்போதைய வாழ்க்கை!!!!சென்சேஷனல் ந்யூஸ்!!! வியாபாரம்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. செய்திகள் இல்லைனு எல்லாம் இல்லை. அவங்களோட முக்கியக் குறி பிஜேபி தான். மத்தியில் ஆளும் பிஜேபி கொண்டு வந்திருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் வரை போய்ச் சேரக் கூடாது என்பதே அவங்க நோக்கம். இல்லைனா நவம்பர் 30 ஆம் தேதிப் புயல் அடிச்சுக் காணாமல் போன மீனவர்களைக் கண்டு பிடித்துத் தரச் சொல்லி டிசம்பர் ஏழாம் தேதி போராட்டம் ஆரம்பிப்பாங்களா? அது வரைக்கும் என்ன பண்ணினாங்க?

      Delete
  5. எது எப்படி இருந்தாலும் மோதிக்கு ஒரு கொபசெ கிடைத்துவிட்டார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அதெல்லாம் தேவையே இல்லைனு இப்போ குஜராத், ஹிமாசல் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிஞ்சிருக்குமே! உண்மையா மக்களுக்குப் பாடுபடறவங்களுக்கு விளம்பரமே தேவை இல்லை.

      Delete
  6. செய்தி தேடுபவர்களுக்கு எல்லாமே செய்திதான். பரபரப்புச் செய்தி. ஒருவர் சொல்லிவிட்டால் உண்மையாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பி விடுகின்றனர்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இம்மாதிரிச் செய்திகளை எல்லாம் எப்படித் தான் நம்புகிறார்களோ!

      Delete
  7. அரசியலின் நிலை இந்த அளவிற்குக் கீழ்த்தரமாக ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! மிகவும் மோசமானதொரு காலகட்டத்தில் இருக்கோம்.

      Delete
  8. தமிழ்நாட்டில், பல ஆண்டுகளாக, மத்திய அரசு திட்டங்கள் பலவும் மாநில அரசின் திட்டங்கள் போலவே விளம்பரம் செய்து செயல் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் இப்போதைய அரசில் யாரும் மக்களைக் கண்டு கொள்வதே இல்லை. இவர்களும் செய்ய மாட்டார்கள், ஆய்வு செய்ய வந்த கவர்னரையும் தடுப்பது சரியல்ல; மேலும் எதிர்ப்பு என்ற பெயரில் அளவுக்கு மீறி போகிறார்கள். இது கண்டனத்திற்கு உரியது.

    தமிழக கவர்னர் தங்கள் வீட்டில் வந்து பார்வையிட்டு சென்ற போது யாரும் குளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும் சம்பந்தப்பட்ட பெண் கவுரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
    “ நான் குளித்துக்கொண்டிருந்தேன் என்று சொல்கிறார்களே நான் அவரிடம் மனு கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்படி நான் குளித்துக் கொண்டிருந்தால் நான் குளித்துவிட்டு வரும் வரையா ஆளுநர் காத்திருந்து மனு வாங்கிவிட்டு போவார் “ என்று கவுரி தெரிவித்துள்ளார்
    Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cuddalore-lady-gowri-explains-that-fake-news-is-roaming-media-governor-visited-bathroom-she-bath-305294.html

    இதுபற்றி யூடியூப்பிலும் அந்த பெண்ணின் பேட்டி வந்துள்ளது https://www.youtube.com/watch?v=qtjWgTMkV5c

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழ் இளங்கோ ஐயா, உங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. அந்த அம்மாவின் பேட்டியையும் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும் காட்டினாங்க! யாரும் அதைப் பொருட்படுத்தவே இல்லை!

      Delete