எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 22, 2017

என்னவோ, ஏதோ! தப்பாய் நினைக்காதீங்க! :)

நான் கமென்டுகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லுவதில்லை என அதிரடி அதிராவுக்கும், நெல்லைத் தமிழனுக்கும் ஒரே குறை! எங்கே! ஒரு நாள் உட்கார்ந்தா இன்னொரு நாள் உட்கார முடியாது! பதிவு போட்டுடுவேன். அப்புறமா அன்னிக்குப் பூரா எழுந்துக்க முடியாது! இதிலே சில நாட்கள் இரண்டு வேளை நெபுலைசர் வைச்சுக்க மருத்துவர் கிட்டேப் போகும்படி இருந்தது. இப்போ வீட்டிலேயே நெபுலைசர் வாங்கியாச்சு!  கிட்டத்தட்ட இரண்டு மாசமாக உடம்பு சரியில்லாமல் போனது! அதில் சில நாட்கள் படுக்கை தான்! சாதம் மட்டும் வைப்பேன். அல்லது சாதம், ரசம் வைப்பேன். போய்ப் படுத்துடுவேன். என்னால் சாப்பிட முடியாது. வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைப்பார். மோர் சாதம் இல்லைனா ரசம் சாதம் மட்டும் கொஞ்சமாய்ச் சாப்பிடுவேன். ஒரே இருமல் துளைக்கும்! வயிற்றில் ஏதேனும் போனால் உடனே இருமல், குமட்டல், வாந்தி! வாயிலும் ருசி தெரியாது! காஃபி, டீ சுத்தமாய்ப் பிடிக்காமல் போனது. ஹார்லிக்ஸ் குடிச்சு ஒப்பேத்தினேன். ஆனால் அதுவும் பிடிக்காமல் போனது! வயிற்றுப் போக்கு அதிகமாக ஆரோரூட் கஞ்சி மட்டும் குடித்து வந்தேன். அதுவும் பிடிக்கலை.

என்றாலும் விடாப்பிடியாக அவ்வப்போது எழுந்து உட்கார்ந்து ஒரு மணி நேரமாவது மடிக்கணினியில் இருப்பேன். தொடர்ந்து பார்க்கவோ, படிக்கவோ முடியாது! உட்கார முடியாமல் வேதனை செய்யும். வயிற்றில் தொந்திரவு இருந்து கொண்டே இருந்தது.  இந்த இருமலும், குமட்டலும் வயிற்றுக் கோளாறால் தான் என்பது புரிந்தது. ஆகவே அதைச் சரி செய்யணும். அப்போத் தான் இருமலும் நிற்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே உடனே படுக்கணும் போல் இருந்தது. ரொம்ப யோசிச்சு இது அசிடிடியால் வந்த இருமல் தான் என்பதைப் புரிந்து கொண்டு முதல்லே பார்லி சேர்க்கலாம்னு முடிவு செய்து பார்லி வாங்கிக் கஞ்சி வைத்துக் கொண்டு பார்லித் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தேன். பின்னர் அங்கே இங்கே யோசிச்சுக் குடி தண்ணீரில் ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கொதிக்க வைச்சுக் குடித்தேன். மாறி மாறி ஒரு தரம் பார்லித் தண்ணீர் எனில் அடுத்த முறை சோம்புத் தண்ணீர் எனக் குடித்தேன்.  சிறுநீர் நிறம் மாற ஆரம்பித்தது. லகுவாகவும் பிரிந்தது. அதுக்கப்புறமாவே கொஞ்சம் குமட்டல் குறைந்தது.  ஒரு வேளை ஆகாரம் வயிற்றில் நிற்க ஆரம்பித்தது.

நல்லாக் கடைஞ்ச மோரில் கருகப்பிலை, ஜீரகம், இஞ்சி தட்டிப் போட்டுக் கல் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சுட வைத்து அந்தத் தெளிந்த நீரைக் குடித்தேன். அதிலே நல்ல பலன் தெரிந்தது. வாயின் அருசி குறைய ஆரம்பித்தது.  திங்களன்று எழுந்து வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்க்க முடிந்தது. அன்று மாலை கொஞ்சம் வெளியேயும் போக முடிந்தது. திங்கள் கிழமையிலிருந்து ஆகாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்கிறது. என்றாலும் இன்னமும் கடின உணவு எடுத்துக்கொள்ளலை! பயம் தான் காரணம். மறுபடி ஜீரணிப்பதில் பிரச்னை ஏற்பட்டால்!ஆகவே கொஞ்ச நாளைக்கு சிறுதானியங்கள், எண்ணெயில் பொரித்த பொருட்கள், வெளிச்சாப்பாடு ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்கி இருக்கேன். வெளியே போனால் தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. ஏற்கெனவே சென்னைக்குக் கல்யாணத்துக்குப் போனப்போக் கல்யாணத்தில் கொடுத்த குடிநீரால் தான் பிரச்னையோ எனச் சந்தேகம். ஏனெனில் எனக்கு எல்லா மினரல் நீரும் ஒத்துக்கறதில்லை. அக்வாஃபினா மட்டும் தான் சேரும். கல்யாணத்தில் பிஸ்லேரியின் தம்பி போல ஒன்று. அரை மனசா வேறே வழியில்லாமல் தான் குடிச்சேன். பக்கத்தில் எங்கேயானும் அக்வாஃபினா வாங்கி இருந்திருக்கலாம்! தோணலை!

என்றாலும் பல பதிவுகள் ஆரம்பிச்சு முடிக்காமல் ட்ராஃப்ட் மோடில் கிடக்கின்றன. சமையல் பக்கத்தில் எழுத முடியவில்லை. ஆன்மிகப் பயணம் பக்கத்தில் எழுதாமல் இரண்டு மாசமா அப்படியே இருக்கு! நான் எதையும் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடிக்கிற ரகம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தடுத்து ஏதேதோ காரணங்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் நாட்கள் நகர்ந்து வருகின்றன. தினசரிக் காரியங்களை முடிப்பதே பெரிய விஷயம் என்றாகி விட்டது! இனி எப்படியோ!

அதோடு கடந்த இரண்டு, மூன்று தினங்களாக வீட்டைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்து சுத்தம் செய்து கொடுத்தனர். அவங்க சுத்தம் செய்கையில் நான் அங்கே இருக்க முடியாது என்பதால் வீட்டின் வேறொரு அறையில் முற்றிலும் முகக்கவசம் போட்டு மூக்கு, வாயை மூடிக் கொண்டு போய் உட்கார்ந்திருந்தேன். அந்த அறையில் கணினி இருப்பதால் அன்று பிரச்னை இல்லை. சும்மா இருக்கிறதுக்குக் கணினியைப் பார்க்கலாம் என்று பொழுது போய் விட்டது. ஆனால் நேற்றுக் காலையிலிருந்து மின்சாரமும் இல்லை! ஒன்பது மணி நேர மின்வெட்டு! அறிவிப்பே இல்லை அல்லது எங்களுக்குத் தெரியாது! அதோடு சுத்தம் செய்யவும் வந்துவிட்டார்கள். ஆகவே நான் சமைத்து முடித்துவிட்டுப் போய் வேறொரு அறையில் உட்கார்ந்தவள் தான். மதியம் அவங்க உணவு இடைவேளை கொடுத்தப்போ வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடி உள்ளே போய்விட்டேன். மீண்டும் மாலை ஆறரை ஆச்சு வெளியே வர! வந்தால் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யணுமே! அந்த வேலை சரியா இருந்தது. ஏழரை மணிக்கப்புறமாக் கணினியில் உட்கார மாட்டேன். என்றாலும் நேற்று வேலைகள் முடிந்ததும் எட்டரை மணிக்குக் கொஞ்ச நேரம் மடல்கள் பார்த்தேன். அவ்வளவு தான்!  இனி வரும் நாட்கள் எப்படியோ! காலமும், நேரமும் இழுத்துக் கொண்டு செல்கிற திக்கில் பயணித்து வருகிறோம்.

46 comments:

 1. உடல் நலம் பேணுக வலையுலகம் எங்கும் போய்விடாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! நன்றி.

   Delete
 2. கருத்தைவிட உடல் நலம்தாம் முக்கியம் அதை கவனித்து கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அவர்கள் உண்மைகள். மிக்க நன்றி.

   Delete
 3. படிக்க படிக்க வருத்தமாய் இருந்தது சிஸ் எல்லாம் விரைவில் சரியாகும் உங்கள் எழுத்தில் அது தெரிகிறது சிஸ்

  ReplyDelete
  Replies
  1. வாங்க பூவிழி, உணர்வுகளைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி.

   Delete
 4. கீதாக்கா வலை இருக்கட்டும்...பின்னூட்டம் இருக்கட்டும்,...பதில் இருக்கட்டும் இவை எங்கும் போகப் போவதில்லை. உங்க உடம்பைக் கவனிச்சுக்கங்க...அதுதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்...அக்கா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்,கீதா. என் உடம்பை நான் தானே கவனிச்சுக்கணும்! இல்லைனா வேறே யார் இருக்காங்க!:)

   Delete
 5. உடல் நலன் முக்கியம். பதிவகள் எங்கே போய்விடப் போகிறது....

  ReplyDelete
 6. உடல் நிலையைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  எல்லோரையும்தானே காலமென்னும் வெள்ளம் இழுத்துச் செல்கிறது. கவலை வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. சுருக்கமான கருத்து! :) மிக்க நன்றி.

   Delete
 7. டேக் கேர் அக்கா .உடல் நலன் தான் முக்கியம் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், இன்னும் இரண்டு நாட்களில் பண்டிகை! வாழ்த்துகள். உங்கள் தொண்டு சிறக்கட்டும்.

   Delete
 8. ///நான் கமென்டுகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லுவதில்லை என அதிரடி அதிராவுக்கும், நெல்லைத் தமிழனுக்கும் ஒரே குறை! ////

  தப்பு கீதாக்கா டப்பூஊஊஊஊ:) அதாவது ஒரே குறை அல்ல:) இரு குறைகள்:)).. அது எண்ணாண்டா.... ஒன்று, நீங்க பதில் போடத்தாமதமாகுது.. அதை பெரிய குற்ரச் சாட்டாகச் சொல்ல முடியாது.. ஏனெனில் உடனுக்குடன் பதில் குடுப்பதென்பது.. கொஞ்சம் கஸ்டம் தான்...

  ஆனா நான் கூறும் ஆனைக்குறை:)) யானைக்குறை என்னவெனில்.. போடும் கொமெண்ட்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணவே 2 நாள் எடுக்கிறீங்க என்பதே:)..

  அதாவது நீங்க இல்லை எனினும் :) நாங்க இங்கு இருப்போர் கொமெண்ட்ஸ் போட்டு விவாதம் சண்டை எல்லாம் பிடிக்க முடியாமல் இருக்கு.. நீங்க பப்ளிஸ் பண்ணாமல் இருப்பதால்:)..

  சரி சரி உங்கள் நிலைமை புரியுது... அதுக்காக நீங்கள் இவ்ளோ வருத்தங்களை எல்லாம் அடுக்கிச் சொல்லி எம்மைப் பயமுறுத்தக்குடா:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி, கமென்ட்ஸ் வெளியிட முடியலைனா ஒண்ணு ஊரில் இல்லை, இல்லாட்டு ரொம்ப உடம்பு சரியில்லை, வேலைகளில் பிசி என நினைச்சுக்கோங்க! :) ஹிஹிஹி, விவாதம் சண்டை எல்லாம் இல்லாமல் உங்களுக்குப் பொழுது போகுமா? ஹிஹிஹி! பயமுறுத்தவெல்லாம் இல்லை! நடந்ததை, நடப்பைச் சொன்னேன்.

   Delete
 9. தினமும், 2,3 வேளையாவது ஜின்சர் பிளேன் ரீ குடியுங்கோ கீதாக்கா. இருமல் அதிகமாக இருப்பின், இஞ்சியும் நிறைய நற்சீரகமும் சேர்த்து நன்கு அவித்து வடித்து, கொஞ்சம் கற்கண்டும் சேர்த்துக் குடியுங்கோ.. முக்கியமா நைட் இலும் காலையிலும்...

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, இஞ்சி உணவில் தினம் சேர்ப்பேன். எப்போவுமே! ஆனால் காஃபி, டீயை இப்போ நிறுத்திட்டேன். கிட்டத்தட்டப் பதினைந்து நாட்கள் ஆகப் போகின்றன. இப்போ நாலு நாட்களாகக் காலையில் மட்டும் ஒரே வேளை அரை டம்பளர் காஃபி! அவ்வளவே! அப்புறமாப் பத்து மணிக்குப் புளிப்பில்லாத தயிர்! மாலை எதுவுமே காஃபி, டீ, ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் எதுவுமே குடிப்பதில்லை. தேவைனா மோர் கொஞ்சமா!

   Delete
 10. சனி மாற்றம் வந்ததுதான் வந்துது எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டுது...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ஏழரை வருஷமா அவர் நம்ம வீட்டிலே தானே குடி! இப்போத் தானே பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார்! :)

   Delete
  2. உங்களுக்குக் கூட இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா? ஆச்சரியம்! :))))))

   Delete
  3. ஓ ஏழரை அங்கிளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களோ?:).. அப்போ உங்களுக்கு வெள்ளி “துலா” வில போல:)).. ஹா ஹா ஹா...

   அனைத்தும் விழுந்து விழுந்து பார்ப்போம் கீதாக்கா, ஆனா கதிரை போட்டு இருத்துவதில்லை இவர்களை வீட்டுக்குள்:)... ஆராவது பொய்க்காக எனினும் நல்லதா சொல்லிட்டால் மனது ஹப்பியாகிடும்.. இல்லை எனில் இதுவும் கடந்து போகும் என எண்ணிட வேண்டியதுதேன்:)...

   உங்களுக்கொன்று சொல்லட்டோ.. எங்கள் வீட்டில் நானும் கணவரும் ஒரே ராசி, ஒரே நம்பர்:).. பிள்ளைகள் இருவரும் ஒரே ராசி ஒரே நம்பர்:)).. நட்சத்திரங்கள் வேறு வேறு:)..

   Delete
  4. ஒரே ராசி எனில் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பிரச்னைகள் வரலாம்னு சொல்வாங்க போல! என்றாலும் என்னைப் பொறுத்தவரை கணவனுக்குப் பிரச்னை வந்தால் பாதிப்பு மனைவிக்கும் தானே! அதே போல் தான் மனைவியின்பிரச்னையால் கணவனுக்குப் பாதிப்பு ஏற்படத் தானே செய்யும்! ஆகவே இதை எல்லாம் ஓரளவுக்குத் தான் நம்பலாம்.

   Delete
 11. பின்னூட்டம் மின் அஞ்சலாக அனுப்பியுள்ளேன்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. பதில் அனுப்பி விட்டேன். மிக்க நன்றி.

   Delete
 12. சுவர் இருந்தால்தானே சித்திரம் உடல்நலம் முக்கியம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, ரொம்ப நன்றி.

   Delete
 13. அன்பு கீதா. இதென்ன இத்தனை கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.
  மகன் வந்திருப்பாரோ என்று நினைத்தேன். என் உடம்பும் எவ்வளவு மாக்சிமம் படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துகிறது. காயமே இது பொய்யடான்னு போக முடியவில்லை.
  கவனமாக இருங்கள். சீக்கிரமாகக் குணம் காண என் பிரார்த்தனைகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, சுற்றும் முற்றும் நடப்பதே தெரியவில்லை. மகன் இப்போ வரமுடியலைனு சொல்லிட்டார்! :( கவனமாகத் தான் இருக்கேன். என்னை நானே பார்த்துக் கொண்டு தானே ஆகணும்! வீடு வேறே தலைகீழாக ஆயிடறது! :)

   Delete
 14. குடலிலே வலுவிருந்தால்தான் உடலிலே ஆரோக்கியம் இருக்கும். இந்த வயிறு சிக்கலான விஷயம்தான். நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்.

  உங்கள் கட்டுரையில் எங்காவது ’இன்னிக்கு சமையல் அவர்தான், சாயந்தரம் காஃபி போட்டுக்கொடுத்தார்’ - இப்படி ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம்..
  பிறகு நான் போய் ஒரு காஃபி போட்டுக்கொண்டுவந்தேன். .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், முன்னெல்லாம் சமைச்சுட்டுத் தான் இருந்தார். இட்லி, தோசைக்கு அரைச்சு வைச்சிருந்தால் அதையும் பண்ணுவார். இப்போல்லாம் முடியறதில்லை. அதிலும் காஃபி! வாய்ப்பே இல்லை! நான் எழுந்து போட்டால் தான் உண்டு. அப்படியே போட்டாலும் டிகாக்‌ஷன் போட்டு வைச்சுட்டு என்னை எழுப்பிக் கலக்கச் சொல்வார். :) சாப்பாடு, சாதம் மட்டும் வீட்டில்! மற்றவை வாங்கி வந்துடுவார். நான் வெறும் மோர் சாதம் மட்டும் தான்!

   Delete
  2. அவருக்கும் முடிவதில்லை என்றறிந்ததில் வருத்தமாயிருக்கிறது. காஃபி விஷயத்தில் அவருடைய கொள்கையை ஆதரிக்கிறேன்!

   மோர் சாதம் மட்டும் என்றிருக்கும் உங்களுக்கும், வயிறு இவ்வளவு தொல்லை தருகிறதா? இதை என்னதான் செய்வது ?

   Delete
 15. Replies
  1. நன்றி அபயா அருணா!

   Delete
 16. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்!

  உடனுக்குடன் பதில் சொல்ல ஏது நேரம்? நானும் ரெண்டு மூணு நாளுக்கப்பறம்தான் பதில் சொல்றேன்.

  டேக் கேர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி. இப்போ எவ்வளவோ பரவாயில்லை.

   Delete
 17. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதா மேம்

  எனக்கும் இவருக்கும் கூட சமயத்தில் பசி இருப்பதில்லை. ( பிள்ளைகள் பக்கத்தில் இல்லாவிட்டால் உணவு ருசிப்பதில்லை. ) மேலும் அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் போல ஏதோ வயிற்று உபாதை. சாப்பாட்டில் காரம் புளிப்பு அதிகம் போல. இருவருக்கு திட்டமாக சமைக்கத் தெரியவில்லை.அதிகம் செய்து வைத்து ஃப்ரிஜ்ஜில் தூங்கும் பொருட்களைப் பார்த்தால் பயமா இருக்கு. புதிதாய் சாப்பிடுங்கள். உடை கஞ்சி நல்லது. அரிசியை உடைத்து உப்புப் போட்ட நாரத்தை அல்லது எலுமிச்சை அல்லது கிடாரங்காயைக் கரைத்துக் குடித்து வாருங்கள் எல்லாம் சமனப்படும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தேனம்மை. இருவருக்குத் திட்டமாய்ச் சமைச்சாலும் ஒரு கரண்டி குழம்பாவது மிஞ்சத் தான் செய்கிறது. சாதம் போதும், போதாததாக வைச்சுடுவேன். ஆகவே மிஞ்சாது. :)

   Delete
  2. குளிர்சாதனப் பெட்டியில் வைச்செல்லாம் சாப்பிடுவதில்லை. பிடிக்காது. ருசியும் மாறும்.

   Delete
 18. இதற்கு உங்கள் உடல்நிலையை விசாரித்து, கவனமாக இருக்கும்படி எழுதிய பின்னூட்டம் காணோம்!

  நானும் கூட உடனுக்குடன் பதில் சொல்வதில்லை. அதனால்தானோ என்னவோ நெல்லை எங்கள் தளத்தில் சுருக்கமான பின்னூட்டங்கள் தருகிறார் போலும்!!!! மேலும் அவரவர்க்கு அவரவர் வேலைத் தொந்தரவுகள் இருக்கும்.

  உங்கள் உடல் நலத்தில் கவனம் வையுங்கள். நீங்கள் சொல்லி இருக்கும் தொந்தரவுகள் போலவே என் மாமியாரும் சில வயிற்றுக் கோளாறுகள் சொல்லி தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தும், என்ன மாத்திரை கொடுத்தும் நிற்காமல் மெல்ல மெல்ல சரியானது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நல்லாத் தட்டிக் கொட்டித் தேடிப் பார்த்தேன். கிடைக்கலை. ட்ராஷில் கூடப் போய்ப் பார்த்தாச்சு. கவனிக்காமல் டெலீட் செய்துட்டோமோனு! மற்றபடி நீங்க சொல்றாப்போல் மெல்ல மெல்லச் சரியாகிக் கொண்டு வருது.

   Delete
 19. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மாமி. ஏதேனும் உதவி தேவையென்றால் சொல்லுங்கோ மாமி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதி! தற்சமயம் தேவலை.

   Delete
 20. Blog பக்கமே வர்றதில்லையே... இன்னைக்கு வருவோமேன்னு வந்தேன். கலவரப்படுத்தறீங்களே அக்கா?! முதல்லே உடம்பு சரி பண்ணிக்கோங்க. மூணு நாள் அம்பத்தூரிலே இருந்தேன். உங்களை நினைச்சுகிட்டேன். Take care...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி, வரவுக்கும் கனிவான விசாரிப்புக்கும் நன்றி.

   Delete
 21. கடவுளே உங்கள் பதிவு சங்கடப் படுத்துகிறது. விரைவில் பூரண நலமடைந்து எப்போதும்போல வலைப்பூவில் கலக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete