எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 18, 2018

மனிதர்களா? மிருகங்களா?

ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது? ஒருத்தனுக்கு 66 வயசாம்! இவங்களை அனுப்பி வைச்ச பாதுகாப்பு நிறுவனம் அவங்க பின்னணியை எல்லாம் விசாரிக்காமல் இருந்திருக்கு போல!  நினைக்க நினைக்க உடம்பெல்லாம் பத்தி எரியுது! ஏன் இப்படி? அதுவும் நம் நாட்டில்! தமிழ்நாட்டில்! இங்கே தான் காதலுக்காகக் கொலை, காதலியைக் கொலை, ஆசிட் வீச்சு எல்லாமும் நடக்கிறது. பெண்கள் என்ன அவ்வளவு மலிந்து விட்டனரா? இந்த ஆண்களுக்குத் தெரிவது பெண்களின் உடம்பு மட்டும் தானா? அதுவும் பனிரண்டே வயசு நிரம்பிய காது கேளாத, தனக்கு நேரிடும் கொடுமையை எடுத்துச் சொல்லத் தெரியாத ஒரு குழந்தையைப் போய்! சே!

எல்லாத்துக்கும் மேலே அந்தக் குழந்தைக்கு போதை மருந்து வேறே கொடுத்திருக்காங்க. தனக்கு என்ன நடந்ததுனே அந்தக் குழந்தைக்குப் புரிஞ்சிருக்காது. அப்பா, அம்மா என்ன செய்துட்டு இருந்தாங்க? இத்தகைய நிலையில் இருக்கும் குழந்தையைத் தனியாக இத்தகைய கொடியோர்களிடம் எப்படி விட்டாங்க? எத்தனை நாட்களாகவோ நடந்திருக்கு! திடீர்னு இப்போ வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? 17 பேரைக் கைது செய்திருப்பதாகச் சொல்றாங்க. அந்தக் குழந்தை என்னத்துக்கு ஆகறது? மனசாட்சியே இல்லாமல் நடந்திருக்காங்களே!  அவங்களுக்கு உரிய தண்டனை கொடுத்தே ஆகணும். கொஞ்சம் கூடக் கருணை காட்டக் கூடாது. ஆனால் உடனேயே  இந்த மனித உரிமைக்காரங்க வந்துடுவாங்க! மனித உரிமை அது, இதுனு சொல்லிக் கொண்டு. வயித்தை எரியுது! பெத்தவளுக்கு எப்படி இருக்கும்?  கண்ணை மூடினால் அந்தக் குழந்தை இப்படிக் கஷ்டப்பட்டிருக்குமோ, பயமுறுத்தி இருப்பானோ, இப்போ அதன் உடம்பு எப்படி இருக்கோ, மனநிலை எப்படி இருக்கோ என்றெல்லாம் தோணுது! நம்மால் முடிஞ்சது இப்படிப் புலம்பறது ஒண்ணுதான்! என்ன செய்ய! 

இவங்களுக்கு எல்லாம் தைரியம் வந்ததே தில்லி "நிர்பயா" வழக்கில் தண்டனை பெற்றவன் சின்ன வயசுனு சொல்லி விடுதலை ஆகி வந்ததும் அவனுக்குக் கிடைச்ச பணத்தையும், தையல் மிஷின் கொடுத்ததையும் பார்த்து வந்திருக்கும்! நம்மையும் எதுவும் சொல்ல மாட்டாங்க! எப்படியும் மனித உரிமைக்கழகம் வழக்கை ஏற்று நடத்தி நமக்கெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுத்துடும்னு நம்பிக்கையிலே இருந்திருப்பாங்க! என்னவோ போங்க! நடப்பது எதுவுமே சரியல்ல! எங்கேயும், எல்லா இடங்களிலேயும்! இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் குடும்ப வாழ்க்கை சிதைந்து வருவதே! அந்தக் குழந்தைக்கே ஒரு தாத்தாவோ, பாட்டியோ இருந்திருந்தால் கண்காணிப்பு இருந்திருக்குமோ? பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு என்ன இருந்தாலும் கண்காணிப்புக் குறைவு தான். குழந்தைகள் தானாகக் கதவைத் திறந்து வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஏதோ ஓர் உணவு அல்லது ஸ்நாக்ஸ் ஏதானும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தாயோ, தகப்பனோ யார் முதல்லே வராங்கனு காத்திருக்கணும்.

வரவங்க வேலை அலுப்புடன் வருவாங்க! இது ஆண், பெண் யாராக இருந்தாலும் பொருந்தும். எனினும் தாய் என்பதால் அவள் வந்தவுடன் குழந்தைக்கு எதையோ செய்து கொடுக்கணும். அல்லது குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து சூடு செய்து கொடுக்கணும். இடைப்பட்ட அந்த மூணு மணி நேரம் தனியாக இருக்கும் குழந்தைக்கு என்ன நடந்தது என்றோ அது எங்கே போயிருந்தது என்றோ, அல்லது யார் யார் அந்தக் குழந்தையை வந்து பார்த்தார்கள் என்பதோ அந்தப் பெற்றோருக்குக் குழந்தை சொன்னால் தான் தெரியும். அதுவும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கையில் அதைக் குழந்தை தைரியமாகப் பெற்றோரிடம் சொல்லணும். பெற்றோருக்குக் கேட்கப் பொறுமை இருக்கணும். குழந்தை சொல்வதை நம்பணும். அக்கம்பக்கம் யாரிடமானும் அவங்க குழந்தைகளுக்கு இப்படி நடக்குதானு மறைமுகமா விசாரித்துத் தெரிந்து கொள்ளணும். குற்றவாளியைக் கையும் களவுமாப் பிடிச்சுக் காவல் துறையிடம் முன்னிறுத்தணும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைக்குச் செல்லும் பெற்றோரால் குழந்தைகள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் பொறுமை இல்லையோ? இல்லை எனில் அந்தக் குழந்தைக்குத் தொடர்ந்து இவ்வாறு நடந்திருக்குமா? அதுவும் போதையில் வேறே இருந்திருக்கே! தாய்க்கு மாற்றங்கள் தெரியாமலா இருந்திருக்கும்? இப்படி ஒரு குழந்தையைத் தனியாக விட்டுவிட்டுப் பொறுப்பின்றிச் செல்ல அந்தத் தாய்க்கு எவ்வாறு மனம் துணிந்தது? அவள் சூழ்நிலை காரணமா? ஒண்ணும் புரியலை! ஆனால் குற்றவாளிகளுக்குச்  சிறிதும் கருணை காட்டாமல் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! 

43 comments:

  1. யார் யாரோ எத்தனை எதிர்ப்புகள்,
    எத்தனை கோபங்கள்,எத்தனை கண்ணீர்த்துளிகள்
    எத்தனை எத்தனையோ என்று சொல்லி கொண்டாலும்
    இந்தக் காமக்கயவர்கள் கண்ணில் இரக்கமே இல்லாமற்போனதுதான் வேதனை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க, முதல் வருகைக்கு நன்றி. தூணுக்குப் புடைவை சுற்றினாலும் பெண் என நினைப்பவர்கள் திருந்தவே மாட்டார்கள்!

      Delete
  2. ரொம்ப வேதனையாக இருக்கிறது.
    நமது நாட்டில் சட்டத்தை நம்பி பயனில்லை என்றே தோன்றுகிறது.

    நான் பெண்களை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். இன்றைய கல்லூரிப் பெண்களின் உடை நாகரீக மோகத்தில் மிகவும் கீழ்த்தரமாகி விட்டது.

    இந்த நிகழ்வுகளுக்கு இதுவும் ஒரு காரணமே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது ஒரு வகையில் சரிதான் கில்லர்ஜி! ஆனால் இந்தக் குழந்தை! 12 வயதே ஆன சின்னஞ்சிறு குழந்தை! பள்ளிக்குழந்தை! அந்த 66 வயசுக் கிழவனுக்கு இந்த வயசில் பேத்தி இருக்கமாட்டாளா? இந்தப் பெண் அப்படி எல்லாம் உடை உடுத்தினதாயும் தெரியலை! அந்தப் பெற்றோரை முக்கியமாய் அதன் தாயைத் தான் சொல்லணும். பெண்ணிடம் உள்ள மாற்றங்களை முக்கியமாய் போதை மருந்தினால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளக் கூட முடியாத அம்மா! சே!

      Delete
    2. அந்தக் குழந்தையின் வயது 12 என்பது தெரியும்.

      நான் சொல்ல வருவது பெண்களுக்கு இன்று பாதுகாப்பு இல்லாத நிலையாகி விட்டது. இதை அனைவரும் உணர்ந்து மாற்று வழிக்கு மாறவேண்டும்.

      பாரதி சொன்ன புதுமைப்பெண் இப்படி அல்ல!
      மறுமணம் செய்யச் சொன்னான்.
      ஆணுக்கு நிகராக படிக்கச் சொன்னான்.
      இன்னும் நிறைய ஆனால் புரிதல் தவறாகி வழி மாறிவிட்டது.

      Delete
    3. நீங்க சொல்வது பொதுவான கருத்து என்பதை அறிந்தேன் கில்லர்ஜி! இருந்தும் இந்தக் குழந்தைக்குக் கடந்த ஏழுமாசமா நடந்திருக்கும் கொடுமை! அம்மா வீட்டில் இருப்பவர் தான் என வல்லி சொல்கிறார். அப்பவுமா குழந்தையைப் பார்த்துக்கத் துப்பில்லை? என்ன பெண்ணோ? :(

      Delete
    4. அந்தப் பெண்ணின் அக்கா வெளிநாட்டில் இருந்து வந்து தங்கைக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படி எனில் குடும்பம் வசதியான குடும்பமாய்த் தான் இருக்கும். அப்படியும் ஏன் அந்தத் தாய் மௌனம்? மிரட்டப்பட்டார் என்கிறார்கள்!எது உண்மையோ, எது பொய்யோ! அநாவசியமாக ஒரு பிஞ்சு சீரழிக்கப்பட்டது!

      Delete
  3. சிறிய மான் குட்டியைப் பெரிய மிருகங்கள்
    கடித்துக் குதறி இருக்கின்றன. அந்தக் குழந்தையின் படம் என்று வேறு ஒரு
    படம் பார்த்தேன். செய்தி மட்டும் போதாதா.

    அம்மா வீட்டில் இருப்பவர் என்று சொன்னார்களே.
    சீரியலில் மூழ்கிவிட்டார்களோ என்னவோ.
    ஒருவருக்கும் பாதுகாப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வல்லி! முகநூலில் ஒரு பெண் குழந்தை தாத்தா, பாட்டியோடு அப்பாவும் அம்மாவும் கூட இருக்க வசித்த குழந்தைக்குத் தாத்தாவே! என்னனு சொல்றது. இத்தகைய அயோக்கியர்களை என்ன செய்யறது? அம்மாவுக்குத் தெரிஞ்சும் பெற்றவர் என்பதால் வெளியே சொல்ல முடியலையாம். கணவனுக்குத் தெரிஞ்சதும் ஊர் மாற்றல் வாங்கிக் கொண்டு மாமனார், மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கார். அந்த அம்மா பதினைந்து வருடங்களாக உடல்நலமில்லாமல் இருக்காராம். அதனால் தனிமை அவரை இப்படி எல்லாம் செய்ய வைச்சதாம்! சப்பைக்கட்டு! :(((( உடல் ஒன்றே பிரதானம் என நினைப்பவர்களை என்ன செய்தால் தேவலை!

      Delete
  4. வாழ்நாள் முழுக்க நினைச்சி நினைச்சி கதறி மறுகிச் சாகுற மாதிரி தண்டனைகள் வெளிப்படையாகக் கொடுக்கப்பட வேண்டும். அப்பதான் அடுத்து இந்த தப்பை நினைச்சிப் பாக்கக் கூட பயந்து நடுங்கணும் மத்தவங்க.

    ReplyDelete
    Replies
    1. @நாமக்கல் சிபி, எங்கே! அதான் தண்டனை கொடுக்கறதுக்குள்ளே மனித உரிமைக்காரங்க வந்துடுவாங்களே! :(

      Delete
  5. இந்தக் கொடூரர்களை மிருகங்கள் என்று சொல்வதே மிகப் பெரிய பாவம்...
    மிருகங்கள் எவ்வளவோ மேல்!..

    இந்தப் பாவிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையால்
    மற்ற கயவர்கள் தாமாகவே மரணத்தைத் தழுவிக் கொள்ளவேண்டும்!..

    ஆனால், அப்படியெல்லாம் பேராசைப்படமுடியுமா - நம்நாட்டில்!..

    ReplyDelete
    Replies
    1. எங்கே! தண்டனை கொடுப்பதற்குள்ளே ஓடி வருவாங்க காப்பாத்த! :(

      Delete
    2. அரபு நாட்டில் கொடுமையான தண்டனை கொடுப்பது அவனை தண்டிக்வேண்டும் என்பதற்காக அல்ல!

      இதைக்காணும் மனிதன் இனியும் தவறு செய்யக்கூடாது என்பதற்காக...

      Delete
    3. நம் நாட்டில் தையல் மிஷின், இல்லைனா கடை வைச்சுக் கொடுத்து உபசாரம் பண்ணுவாங்க! :(

      Delete
  6. பரும் சந்தர்ப்பங்களுக்கு பலியாகிறார்கள் என்னதான் தண்டனை கொடுத்தாலும் நடந்து முடிந்த சம்பவம் மாறப் போவதில்லையே

    ReplyDelete
    Replies
    1. இப்படிச் செய்னு யாரும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை! ஒரு மனிதனால் தன்னை அடக்க முடியலை, அதுவும் ஒரு சின்னக் குழந்தையிடம். பேத்தி வயசு இருக்கும் பெண்ணிடம்! மனிதனா அவன்! மிருகத்தை விடக் கேவலமானவன்! சந்தர்ப்பமாம் சந்தர்ப்பம்! யார் கொடுத்தாங்க?

      Delete
  7. முழு விவரம் இப்போதான் படிச்சேன் :(

    என்ன ஒரு வேதனை :( ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகிட்ட இப்படி நடக்க எப்படி மனம் வந்தது :(

    அந்த குழந்தையின் நிலை அறிந்தும் பெற்றோர் எப்படி வீட்டில் தனியே :( தனியே விட எப்படி மனசு வந்தது :(
    மனுஷங்க அரக்கர்களாகி வராங்க என்பதே உண்மை .இப்டி குழந்தையை சீரழித்த ஜென்மங்கள் வாழ தகுதியற்றவங்க .

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், அந்தத் தாய் என்ன செய்தாள் என்பது தான் புரியாத புதிர்! சீரழித்தவர்களில் 50%க்கும் மேல் ஐம்பது வயதுக்கும் மேல் ஆன முதியோர்கள்! :( என்ன கொடுமை!

      Delete
    2. ஓரிடத்தில் படிச்சேன் தாய் டிவி சீரியலில் ஆர்வமுள்ளவராம் :( எத்தனை உண்மைன்னு தெரில .அதற்க்காக அந்த பச்சை அறியா குழந்தையை தனியே விடுவது விட்டது என்ன நியாயம் .
      வாழ்நாள் முழுக்க தீரா மன வலியுடன் அந்த சிறுமி இருக்கப்போறா என்பதே கசப்பான உண்மை :( கல்லூரி நாட்களில் எங்கம்மா நான் வர கொஞ்சம் லேட்டானாலும் கேட் கிட்ட வந்து நிப்பாங்க .
      ஒரு குழந்தை நம்மை பார்த்து சிரிக்கிறதுன்னா அதற்கு நாம் பாதுகாப்பானவர்கள் என்ற நம்பிக்கை ஏற்படுவதால்தானே புன்னகைக்கிறது ? அந்த நம்பிக்கையை கொன்னுட்டாங்க அந்த கேவல ஜந்துக்கள் .

      Delete
    3. அதுவம் 12 வயதுன்னா பருவமடையும் வயது அந்த காட்டேரி பிசாசு தாய் எத்த்னை பொறுப்புடன் கவனிச்சிருக்கணும் அக்குழந்தையை .

      Delete
    4. எனக்கும் இதிலே தாயின் தவறு தான் பெரிசாய்த் தெரிகிறது ஏஞ்சல்! இப்படியான ஒரு குழந்தைக்கு எவ்வளவு கவனிப்பும், அக்கறையும் இருந்திருக்கணும்! எனக்கென்ன வந்ததுனு இருந்திருக்காளே!

      Delete
  8. கடுமையான தண்டனைகள் இல்லாததே காரணம். எப்படி மனம் வருகிறதோ.. தன் வீட்டிலும் இந்த வயதில் குழந்தைகள் இருப்பார்கள் என்பது உணரமாட்டார்களா?

    ReplyDelete
    Replies
    1. எங்கே ஶ்ரீராம், அப்படி எல்லாம் உணர்ந்தால் மனசாட்சி இருந்தால் இப்படி நடக்கத் தூண்டாது! மனசாட்சியை விடப்பெரிய இறைவன் வேறில்லை.

      Delete
  9. கீசாக்கா நான் நியூஸ் ஏதும் பார்க்கவில்லை இதுபற்றி, ஆனா மதுரைத்தமிழனின் போஸ்ட் படிச்சேன் புரியவிலை, பயமாக இருந்துது எதுவும் பேச.

    இப்போ கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்குது. இப்படியானவற்றுக்கு சவூதி அரசாங்கம் போல , எதனால் பிரச்சனை வருகிறதோ அதை உடனே வெட்டி விட வேண்டும், அப்போதுதான் பயப்படுவார்கள், ஜெயிலில் போடுவதால் எந்த நன்மையும் இல்லை, ஜெயில் இப்போ ஒரு பிக்னிக் பிளேஸ்போல ஆகிவிட்டது.. கொஞ்சக்காலம் உள்ளே இருந்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான் அதிரடி, இங்கே ஜெயிலுக்குப் போவதென்பது பிக்னிக் போல் ஆயிடுச்சுத் தான்! :(

      Delete
  10. இதில் இன்னொரு விசயம் சிந்திக்கோணும், என்ன எனில், நாம் சும்மா சும்மா பொயிங்குவதால் என்ன ஆகப்போகிறது... கடந்த சில காலமாக இந்தியாவில் தொடர்ந்து குழந்தைகளே இப்படி நிலைமைக்கு ஆளாகிறார்கள், உண்மையில் ஒருவர் மேல் உள்ள ஆசையில் அல்லது ஏதும் வெறியில் செயல்பட்டால். அது ஒரு பெண்ணின்மீதுதானே காட்டப்பட்டிருக்கோணும், இது குழந்தை மீது எனும்போது, இது ஒருவகை மனநோயாகவும் நினைக்க தோணுது, ஒரு 66 வயசானவர் இப்படி ஒரு குழந்தையை கெடுக்கிறார் எனில் அது ஏதோ ஒரு மனக் கோளாறாகத்தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

    இன்னொன்று கீசாக்கா... நான் கேள்விப்பட்ட அளவில் நம் நாடுகளில் பல பெண்களில் இருக்கும் ஓர் தப்பான எண்ணம், தமக்கு குழந்தை பிறந்திட்டாலோ இல்லை மகள் வயசுக்கு வந்திட்டாலோ.. கணவரை ஒதுக்கி விடுவார்கள்... இதனால்கூட அப்படி ஆண்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு இப்படியான செய்கையில் ஈடுபட வாய்ப்பிருக்கலாம்.

    முற்காலத்தில் இந்தியாவில்தானே தாசி வீடுகள் என இருந்தனவாம், அவை எதுக்காக, மனைவிக்கு உடல் சுகயீனம், முடியாமல் போகும் நேரங்களில் ஆண்கள் அங்கு போய் வருவது வழக்கமாக இருந்ததாம், இப்போ நாம் எல்லா வகையிலும் வளர்ச்சி கண்டமையால், அதை ஏற்றுக் கொள்ளாமல் போகவே, அதையும் ஒளித்து விட்டார்கள்.. அப்போ இப்படியான காரணங்களும் சிலருக்கு அவர்களை அறியாமலேயே ஒரு மனநோயை உருவாக்குகிறதோ என்னவோ...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, இது வெறும் காமம், மனைவி இல்லாக் குறைனு சொல்ல முடியலை! ஏனெனில் சுமார் 40 பேர்கள் குழுவாக இதில் ஈடுபட்டுக் காசு பார்த்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. அதோடு கூட வீடியோ எல்லாம் எடுத்திருக்காங்க! இதில் காமம் எங்கே இருந்து வந்தது? வக்கிரம்! மோசமான கொடூரமான வக்கிரம்! தாசியிடம் இப்படி எல்லாம் நடந்திருந்தால் விளக்குமாற்றைக் கையில் எடுத்திருப்பாள். அறியாக் குழந்தை, சொல்லத் தெரியாக் குழந்தையிடம் அவங்க தங்கள் கைவண்ணத்தைக் காட்டி இருக்காங்க! அந்தக் குழந்தையின் அக்கா வந்ததால் இந்த விஷயம் வெளியே வந்திருக்கு!

      Delete
    2. ஓ கீசாக்கா நான் எங்கும் இன்னும் நியூஸ் பார்க்கவில்லை, உங்கள் போஸ்ட்டை மட்டும் வச்சே கருத்திடுகிறேன், நீங்க 66 வயசு எனப் போட்டிருக்கிறீங்க அப்போ ஒருவராக்கும் என நினைச்சேன்.. இப்போ 40 பேர் என்கிறீங்க.. இது என்ன இது 12 வயசு சிறுமிக்கு ... இது எதையும் நம்பும் தகவலாக இல்லையே... ஏதோ அரசியல் சதி போல இருக்கே ..

      Delete
    3. அதிரடி, சதி எல்லாம் இல்லை. உண்மையில் நடந்தது தான். இம்மாதிரி இளம் குழந்தைகளிடம் பாலியல் துன்பங்கள் செய்து அதை வீடியோ எடுத்துக் குழுவாக விற்பனை செய்து வரும் ஒரு கும்பல் என்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் தான் போதை மருந்தெல்லாமும் தயாராக இருக்கும். இதை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் எனச் சொல்கின்றனர். 40 பேர்களில் 17 பேரைப் பிடிச்சிருக்காங்க. மத்தவங்களைத் தேடறாங்க! இதிலே சம்பந்தப்பட்டவங்க யார்னு இன்னமும் வெளியே வரலை! :(

      Delete
  11. இதில் தாய் தந்தையை எருமளவில் குற்றம் சொல்ல தெரியவில்லை எனக்கு, அவதானிக்க வேண்டியது அவர்கள் பொறுப்புத்தான், இருப்பினும் சில குடும்பங்கள் வசதி.. வருமானக் குறைவால் இருவருமே வேலைக்குப் போக வேண்டிய சூழல், இதை விடவும் குழந்தைகள் இருக்கலாம், அவர்களையும் கவனிக்கும் பொறுப்பு.. இப்படி பல சோலிகளாலும் போர்த்தப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தில் தாய் எவ்வளவு சுமையைத்தான் தாங்க முடியும்... ஒருவரை குறை சொல்லிவிடுவது எழிது, ஆனா அதன் பின்னணியையும் ஆராய வேண்டும்.. எதுவாயினும் பாதிக்கப்பட்டது ஏதுமறியாத குழதை ஆயிற்றே பாவம் அது என்ன பண்ணும்....

    ReplyDelete
    Replies
    1. அம்மாக்காரி என்னதான் பண்ணினாளாம்? குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அதிலும் போதை மருந்தினால் ஏற்படும் தள்ளாட்டம், உணவு மேல் வெறுப்பு ஆகியவை கூடவா அவளுக்குத் தெரியாமல் போச்சு! உண்மையில் குழந்தையைப் பெத்தவள் தானா என்றே நினைக்கச் சொல்கிறது!

      Delete
    2. அதிரா அண்ட் கீதாக்கா அக்குழந்தைக்குக் கண்டிபபகச் சோர்வு ஏற்பட்டிருக்கும் மயக்க மருந்து கொடுத்து செய்திருப்பதால்....கண்டிபபகப் பின்விளைவுகள் இருந்திருக்கும். அதை எப்படி பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டார்கள்? 7 மாதம் என்பது எல்லாம் எங்கேயோ என்னவோ இடிக்கிறது அக்கா...ஐ ஸ்மெல் சம்திங்க் ஃபிஷ்ஷி....விஷயங்கள் மறைக்கபப்டுகிறதா....ஒன்றும் புரியவில்லை. கண்டிப்பாக 12 வயதுக் குழந்தை 7 மாதங்கள் தொடர்ந்து இப்படிச் செய்யப்பட்ட்டது அதுவும் மயக்க மருந்து ஏதோ கொடுத்து என்றெல்லாம் எப்படி அக்குழந்தையின் ஹெல்த்தில் தெரியாமல் போச்சு...செய்தியை வைத்து நிறைய கேள்விகள் எழுகின்றன...

      கீதா

      Delete
    3. ஓ 7 மாதமாக போதை வஸ்து கொடுத்தார்களோ.. இல்லை என்னால நம்ப முடியவில்லை, 12 வயசுக் குழந்தைக்கு அப்ப்டி தொடர்ந்து கொடுத்தால் அதுக்கு நிட்சயம் ஏதும் கோளாறு வந்திருக்கும், டொக்ரேர்ஸ் கண்டு பிடித்திருப்பார்கள்.. இது முடிவிலதான் ஏதோ அப்படி கொடுக்கப் பட்டிருக்கோ.. எந்தச் செய்தியையும் முழுவதும் நம்ப முடியவில்லை.. எதற்காக அப்படி ஒரு குழந்தையை இலக்காக்கினார்கள்...

      அத்தனை பேரையும் அப்படியே கிடங்கு வெட்டி உயிரோடு தாக்க வேண்டும்.. அதுதான் இதுக்கு சரியான வழி...

      Delete
    4. தி.கீதா, நீங்க சொல்வது போல் எதுவும் புரியவில்லை தான்!

      Delete
  12. கில்லர்ஜி அவர்கள் // அரபு நாட்டில் கொடுமையான தண்டனை கொடுப்பது அவனை தண்டிக்கவேண்டும் என்பதற்காக அல்ல! இதைக்காணும் மனிதன் இனியும் தவறு செய்யக்கூடாது என்பதற்காக... //

    ஞானி:) athira அவர்கள் // இப்படியானவற்றுக்கு சவூதி அரசாங்கம் போல , எதனால் பிரச்சனை வருகிறதோ அதை உடனே வெட்டி விட வேண்டும், அப்போதுதான் பயப்படுவார்கள் //

    பதிவை வாசிக்கும் போது, சொல்ல வந்த கருத்துகள்... இவைகள் தான் சரி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி, இவை தான் சரியான தீர்வு! காலம் காலத்துக்கும் எல்லோரும் நினைச்சு நடுங்கறாப்போல் இருக்கணும். :(

      Delete
  13. அப்பா, அம்மா என்ன செய்துட்டு இருந்தாங்க? இத்தகைய நிலையில் இருக்கும் குழந்தையைத் தனியாக இத்தகைய கொடியோர்களிடம் எப்படி விட்டாங்க? எத்தனை நாட்களாகவோ நடந்திருக்கு!//

    ஆச்சரியம் கீதாக்கா...எப்படி அந்த ஃப்ளாட்டிலுள்ள மற்றோருக்குமா தெரியாமல் போகும்?...

    எனக்கு இந்தச் செய்தியே முதலில் தெரியாது...விசுவின் பதிவு பார்த்துத்தான் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்து நெட்டில் பார்த்தேன்...அப்புறம் யாரெல்லாம் பதிவு இது பற்றி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் மதுரையின் பதிவு உங்கள் பதிவும் இருந்தது...

    ஒன்று கடுமையான சட்டம் வேண்டும் கண்டிப்பாக.

    அடுத்து இப்படிச் செய்பவர்களில் பெரும்பாலும் மனோவியாதிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நல்ல சூழல் இல்லாதவர்களாகவும் அறியலாம். குடி போன்ற பழக்கங்கள்...என்று பல காரணங்கள் சொல்லலாம். இதில் யாரைச் சொன்னாலும் கடைசியில் பலியானது என்னவோ அந்தக் குழந்தைதான்....அதுவும் செவித்திறன் இல்லா குழந்தை பாவம்...மனம் என்னவோ செய்கிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விசு? யாரு அது? மற்றவங்களும் மிரட்டப்பட்டாங்களா என்னனு ஒண்ணும் புரியலை! உண்மையில் இது கொஞ்சம் ஒரு மாதிரி மர்மமாகவே இருக்கு.

      Delete
  14. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை! ஆனால் இங்கே சாத்திரங்கள் வந்து எதையும் கெடுக்கவில்லை. மனிதன் தான்!

      Delete
  15. கொடுமையான நிகழ்வை
    ஒறுப்பு (தண்டனை) அதிகரிக்கணும்
    பெரியோரின் பொறுப்பு அதிகரிக்கணும்
    எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறினால் இந்நிலை தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. தண்டனை கடுமையாக இருக்கணும் என்பதில் சந்தேகமே இல்லை.

      Delete