எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 26, 2019

வண்ண விளக்கு அலங்காரங்களும் பனிக்கட்டிக் கொண்டாட்டங்களும்!

ஞாயிற்றுக்கிழமை இங்கே எங்க பையரின் நண்பர் ஒருத்தர் வீட்டுக்குப் போயிட்டோம். பின்னர் திங்களன்று கொஞ்சம் சொந்த வேலையில் மும்முரம். நேற்றுச் செவ்வாயன்று வெளியே போய்க்கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என ஏற்கெனவே பையர் சொல்லி இருந்தார். அதன்படி மத்தியானமாக் கிளம்பினோம்.

பனிக்கட்டியைச் செதுக்கிச் சிற்பங்கள் செய்வதில் வல்லவர்களான ஒரு  குழு இங்கே ஹூஸ்டன் நகருக்கு அருகே இருக்கும் "கால்வெஸ்டன் தீவு" இல் இருக்கும் "Moody Gardens" உள்ளே இருக்கும் ஐஸ்லாந்தில் பல்வேறு விதமான சிற்பங்களைச் செதுக்கிப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பங்கள் உலகம் முழுதும் உள்ள நாடுகள் இந்தக் கிறிஸ்துமஸை எவ்வகையில் வரவேற்கின்றனர் என்பதைக் காட்டும் விதத்தில் செதுக்கப்பட்டு உள்ளது. உள்ளே முழுக்க முழுக்கப் பனிக்கட்டி! அங்கே நாம் ஏஸ்கிமோக் குடியிருப்பைக் கூடப் பார்க்கலாம். இதற்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் பனிக்கட்டிகள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன.படத்துக்கு நன்றி கூகிள்.. நான் எடுத்த படங்களும் பயமுறுத்த வரும்!

இங்கிருக்கும் ஈஃபல் டவரின் மேலே இருந்து பார்த்தால் இங்கே செதுக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் சிற்பங்கள்,ஹாலந்து, ரியோ மற்றும் அங்கிருந்து மேலே பரிசுகள் அளிக்கவரும் சான்டாவைக் கூடப் பார்த்தாலும் பார்க்கலாம். இங்கே அமைக்கப்பட்டிருக்கும் கதகதப்பு உண்டாக்கும் நெருப்பு உண்டாக்கும் இடம் கூட பனிக்கட்டியால் உருவாக்கப்பட்டது. அதைத் தவிரவும் நியூயார்க்கில் இருக்கும் "சுதந்திர தேவி" சிலையும் கூட பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்டதே!

இது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் "நன்றி தெரிவிக்கும் நாள்" அன்று பொதுமக்கள் பார்வையிடத் தயாராக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஆரம்பித்து ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வரையிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உள்ள பெரிய மைதானத்திலே "பண்டிகை விளக்குகள்" அலங்காரம் செய்யப்படுகின்றன. இவை சுமார் 2 மைல் முதல் 3 மைல் வரை நீளம் உள்ளது, பாதையின் இரு மருங்கிலும் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.


இந்த மூடி கார்டன்ஸில் தங்குவதற்கான இடங்களும் உள்ளன. அங்கேயே தங்கி இரண்டு , மூன்று நாட்கள் அங்கே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இடங்கள் மற்றும் சின்னக் கப்பல்ப் பயணம் எல்லாம் செய்வார்கள். நாங்க அதுக்கெல்லாம் 2011 ஆம் ஆண்டிலேயே போயிட்டு வந்துட்டதால், இந்த முறை முக்கியமான இந்த அலங்காரங்கள் மட்டும் பார்த்துவிட்டு வரலாம் எனக் கிளம்பினோம்.  ஐஸ்லாந்தில் உள்ள எல்லா நாடுகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் (அனைத்தும் பனிக்கட்டியால் செய்தது), அதைத் தொடர்ந்து "பண்டிகைகளுக்கான விளக்கு அலங்காரங்கள்" அங்கேயே ஓடும் சின்ன ரயில்ப் பயணம் (அதில் பயணம் செய்வது ரொம்பக் கஷ்டம்! ஐஸ் ஸ்கேட்டிங், ஆர்க்டிக் ஸ்லைட், இயன்றால் சான்டாவுடன் படம் எடுத்துக் கொண்டு விளையாடுவது என அங்கே நிறையவே பார்க்கவும் களிக்கவும் இடங்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன ரெஸ்டாரன்டுகள். ஆனால் அவற்றில் லேஸ் சிப்ஸும், சூடான சாக்லேட் பானமும் தவிர்த்து மற்றவை நாம் சாப்பிடும்படி இல்லை.

அங்கே சுற்றிப் பார்க்க ஒரு நபருக்குக் கிட்டத்தட்ட 30 டாலர்கள், நாங்க மூத்த குடிமக்கள் என்பதால் எங்களுக்குக் கழிவு உண்டு. குழந்தைகளுக்குப் பதினைந்து டாலர்கள். நாங்க மத்தியானமாச் சாப்பாடை வீட்டில் முடித்துக்கொண்டு கிளம்பினோம். இங்கிருந்து கால்வெஸ்டன் போக வர 120 மைல். ஒரு மணி நேரத்தில் போகலாம். ஆகவே முதலில் ஐஸ்லாந்தைப் பார்த்துக் கொண்டு, பின்னர் கொஞ்சம் ஓய்வெடுத்துக் காஃபி, தேநீர் போன்ற ஏதானும் சாப்பிட்டுவிட்டு, அங்கே காட்டும் 3D திரைப்படம் பார்த்துவிட்டுப் பின்னர் விளக்கு அலங்காரத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்னும் எண்ணம். வரும் வழியில் இரவு உணவை வெளியே எங்கானும் சாப்பிட்டுக்கலாம் என்னும் திட்டம்.இப்போதைக்கு இதைப்பாருங்க! பின்னால் வந்து பயம் காட்டறேன். செரியா?

17 comments:

 1. படங்கள் அழகு.   அவற்றை நீங்களே இன்னும்கொஞ்சம் பெரிதாக்கிப் போடலாம்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவு ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்!

   Delete
 2. வணக்கம் சகோதரி

  படங்கள், விவரங்கள் அருமை.படங்கள் அழகாக உள்ளது. பனிக்கட்டியில் சிலைகள் என்றால் அது செய்வது கடினமான ஒன்றுதான். அனைத்துமே பார்வைக்கு விருந்தாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்கும் அதை காட்சிகளாக தந்ததற்கு மிக்க நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  மார்கழி பதிவை எதிர்பார்த்து வந்தேன். இன்றே பின்பு வருமோ? வரட்டும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, மார்கழிப் பதிவு இதுக்கு முன்னாலேயே போட்டுட்டேன். யாருமே கவனிக்கலை. அதெல்லாம் ஏற்கெனவே எழுதினவை என்பதால் ஷெட்யூல் செய்து வைத்து விடுகிறேன். அந்த அந்த நாள் அன்று சரியாகத்தானாக வெளியாகிவிடும். அதனால் தான் இதைப் போடலாமா வேணாமானு யோசிச்சேன். மார்கழிப் பதிவுக்குப் பார்வையாளர்கள் இருக்க மாட்டாங்க என்பதால்! இன்னும் சில இடங்கள் போய் வந்ததெல்லாம் போடுவதற்கான நேரம் இன்னும் வரலை! Older Post க்ளிக் செய்து முந்தைய பதிவைப் பார்க்கவும். மார்கழிப் பத்தாம் நாள் பதிவு வரும்.

   Delete
 3. இந்த முறை நன்றி தெரிவிக்கும் நாளன்று நீங்கலங்குதான் இருந்தீர்கள் இல்லையா?  அன்றுதானே பொருள்கள் சீப்பாகக் கிடைக்கும் என்று சொல்வார்கள்?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஸ்ரீராம், (Thanks Giving Day) நன்றி தெரிவிக்கும் நாளன்று பெண் எங்களை டாலஸ் அழைத்துச் சென்றாள். அங்கே ஓர் ம்யூசியம், கெனடி நினைவிடம், உயர்ந்த கோபுரம் ஒன்று நு சில இடங்கள் மட்டுமே பார்த்தோம். அலைய முடியலை! அதெல்லாம் இன்னமும் போடவேண்டிய வரிசையில் காத்திருக்கு! அன்றைய தினம் காலை ஏழு மணிக்குள்ளாக எல்லாக் கடைகளும் மூடிவிடுவார்கள். அதற்குள்ளாக இரவு முழுதும் வியாபாரம் நடக்கும். குறைந்த விலையில் பல விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். என்னோட இரண்டு மடிக்கணினியும் அந்தச் சமயங்களில் வாங்கியவையே. ஒன்று 2011, இப்போதையது 2016

   Delete
 4. அடுத்த வரும் படங்கள் காண(வும்) ஆசை

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் கில்லர்ஜி, அப்படி எல்லாம் உங்களைத் துன்புறுத்தாமல் விடமாட்டோமாக்கும்!

   Delete
 5. படமெல்லாம் அழகா இருக்கே. எதுக்கு பயம்.
  நல்ல அவுட்டிங்க் தான். நேத்திக்கும் இன்னிக்கும் இங்க ஸ்கேடிங்க்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இன்னமும் போகப் பையருக்கு ஆசை தான். எங்களால் தான் அலைய முடியலை. டிஸ்னி லான்ட் போகணும்னு ஏற்பாடு பண்ணினார். முடியாதுனு சொல்லிட்டோம்.

   Delete
 6. வண்ணவிளக்கு பயம் காட்டுதா பார்போம்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, வாங்க மாதேவி!

   Delete
 7. /ஆனால் அவற்றில் லேஸ் சிப்ஸும், சூடான சாக்லேட் பானமும் தவிர்த்து மற்றவை நாம் சாப்பிடும்படி இல்லை.//
  இதுக்குதான் எங்க பிரித்தானியா க்ரேட் னு நான் பெருமையா சொல்வேன் :) இங்கே சூடா பிரெஷா தக்காளி வெஜ் சூப்லாம் கிடைக்கும் . செஸ்னட்ஸ் இல்லய்யாக்கா ?? இங்கே வீகன் ஸ்டால் எல்லா இடத்திலும் உண்டு அதோட கூடவேபஞ்சாபி ஸ்டாலும் உண்டு . ஆனா ஸ்கொட்லாந்தில் இதெல்லாம் இல்லக்கா :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், நீண்டநாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி. இங்கே மிஞ்சிப் போனால் ஸ்டார்பக்ஸ் காஃபி கிடைக்கும். மற்றபடி லேஸ் சிப்ஸையும், ஹாட் சாக்லேட்டையும் விட்டால் பெப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவை தான். இங்கே தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீமை நாங்க அதிகம் வாங்குவதில்லை. இங்கேயே அமுல் ஐஸ்க்ரீம், க்வாலிடி போன்றவை கிடைப்பதால் அவற்றையே வாங்குவோம். ஆனால் இம்மாதிரி இடங்களில் அவை கிடைக்காது.

   Delete
 8. வித்தியாசமான அனுபவம் தான் - பனிக்கட்டிகளில் இப்படிச் செய்வது இந்தியாவிலும் உண்டு என்றாலும் பெரிய அளவில் இல்லை. மணாலியில் இப்படிச் செய்த சில உருவங்கள் பார்த்ததுண்டு.

  வெளியே செல்லும்போது உணவு தான் சிலருக்குப் பிரச்சனை. அங்கே கிடைப்பதில் நமக்கு தோதானதை சாப்பிட்டு நாட்களைக் கடத்திவிடுவது தான் நலம்!

  தொடரட்டும் பதிவுகளும் அனுபவங்களும்.

  ReplyDelete
 9. கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரம் , பனி சிற்பங்கள் அழகு.

  ReplyDelete