தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ? 1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? 2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? 4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 6
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? 7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? 8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? 9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? 11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே? 13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே
நீங்களாவது பாரதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்தீர்கள் நன்றி.
ReplyDeleteபல தமிழன்களுக்கும் நினைவு இருக்காது
ஆனால் நாளை கன்னடனின் பிறந்தநாள் தமிழகமே கூத்தாடும்....
வாங்க கில்லர்ஜி, தெரிந்த விஷயம் தானே. சின்னத்தளபதி என்றழைக்கப்படும் மெர்சல் நடிகர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு (அரசுப்பள்ளி) படப்பிடிப்புக்குச் சென்று இருக்கிறார். ஆனால் இவர்களால் அங்கே பள்ளி நிர்வாகத்தினரும், பள்ளி மாணவர்களும் இந்தப் படப்பிடிப்புக்குழுவாலும், நடிகராலும் பட்ட அவஸ்தைகளைப் படித்த பின்பு மனம் ரொம்பவே வேதனைப்படுகிறது.
Deleteகீதாவும் பாரதியும் இல்லாமல் ஒரு டிசம்பர் 11 கிடையாது.
ReplyDeleteபயிர் நலம் பெற வேண்டுவோம்.
வெல்க பாரதம். வாழ்க பாரதியின் திரு நாமம்.
வாங்க ரேவதி, அப்படி எல்லாம் இல்லை. பாரதி நினைவு நாளில் செப்டெம்பரில் மறந்தே போயிருந்தேன். பின்னர் எழுதி வைத்தது கூட ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு! அப்போத் தானே இங்கே வந்தோம்! அந்த அமர்க்களம், ஜெட்லாக் எல்லாவற்றிலும் நினைவே வரலை என்பதே உண்மை!
Deleteமஹாகவியின் புகழ் பாடுவோம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்!
Deleteநினைவுகூர்ந்த விதம் அருமை.
ReplyDeleteநன்றி முனைவரே!
Deleteநானும் ஒவ்வொரு ஆண்டும் பாரதி பிறந்த நாளுக்கு பதிவு போட்டேன்.
ReplyDeleteஇந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.
பாடும் போது கண்ணீர் வரும்.
வாங்க கோமதி, அப்படியா, நான் கவனிக்கலை. இப்போவும் போடுங்கள். உங்களுக்குத் தெரிந்ததை எழுதினால் படிக்க நாங்கள் இருக்கோமே!
Deleteபேத்தியுடன் கண்ணம்மா பாட்டு பாடி மகிழ்ந்து இருப்பீர்கள். பேத்தி இன்ப கவிதைகள் பல சொல்வாள்.
ReplyDeleteநான் பாடினால் பேத்தி பயந்து ஓடிடுவாளே! அவள் தான் எங்களிடம் ரைம்ஸ் எல்லாம் பாடிக் காட்டுவாள். கண்ணைப் பொத்திக்கொண்டு "லாலாலாலா" அப்படினு தானும் பாடி எங்களையும் பாடச் சொல்லுவாள். ஆனாலும் இது எல்லாவற்றையும் விட விஷமம் தான் முதலில்!
Deleteபொதிகையில் பாரதி படம் வைக்கிறார்கள் பார்க்கிறேன்.
ReplyDeleteஆமாம், ஒவ்வொரு வருஷமும் போடுவாங்க, மக்களில் கூடப் போட்டிருக்காங்க. நான் 2,3 முறை பார்த்திருக்கேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்று பாரதியாரின் பிறந்த நாளன்று நல்ல பாடலாக பகிர்ந்துள்ளீர்கள். பாடலை பாடி மகிழ்ந்தேன். பாவேந்தரான அவரின் நினைவுகள் எந்நாளுமே நம்மிடையே மலர்ந்திருக்க ஆசைப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. பாடி மகிழ்ந்ததுக்கும் நன்றி. அப்புறமாப் "பாவேந்தர்" என்று பாரதிதாசனைத் தான் சொல்லுவார்களோ?
Deleteவணக்கம் சகோதரி
Deleteஉண்மைதான்..! பாரதிதாசன்தான் பாவேந்தர் என அழைக்கப்படுபவர். நான் ஏதோ நினைவில் "மகாகவி பாரதியார் " எனச் சொல்வதற்கு பதிலாக "பாவேந்தர்"என கூறி விட்டேன். மன்னிக்கவும்.
பாரதியின் கவிகளில் ஆழமாக மயங்கி அவரின்"தாசர்"என்பதாக அவர் பெயரை வைத்து புனைப்பெயராக வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பல அற்புதமான காவிகளை மனதில் நினைத்தவுடன் மடை திறந்த வெள்ளமாக உரைக்கும் தன்மையுடைய மகாகவி பராதியாரையும்" பாக்களின் வேந்தர்" என கூறுவதில் தவறில்லை எனவும் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அற்புதமான கவிகளை .. என படிக்கவும். தவறுதலாக அது துணை எழுத்தையும் அழைத்து வந்து விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.
Delete
ReplyDeleteவளர்க கவியின் புகழ்.....!