எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 31, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15

திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு

திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!


கிளி கோலங்கள், க்கான பட முடிவு கிளி கோலங்கள், க்கான பட முடிவு
           

 கிளி கோலங்கள், க்கான பட முடிவு யானை கோலங்கள் க்கான பட முடிவு

 யானை கோலங்கள் க்கான பட முடிவு

கோலங்கள், திருப்பாவைப் படங்களுக்கு நன்றி கூகிளார்!

தோழியைக் கடுமையாக அழைத்தும் அவள் வரவில்லை.  ஆகையால் கிளியைப் போல் மழலை பேசுபவளே என அழைக்கிறாள்.  ஆனால் இப்போது தான் கண் விழித்த அந்தத் தோழி இதையே கடுமையாகப் பேசுவதாய்க் குறை கூறிவிட்டு, என்னை மட்டும் தான் எழுப்புகிறீர்கள்.  எல்லோரும் வந்துவிட்டனரா எனக் கேட்க வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றனர் தோழியர். இங்கே வல்லானைக் கொன்றானை என்பது குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றதைக் குறிக்கும்.  மாற்றாரை மாற்றழிக்க என்பது தன் எதிரிகளை எல்லாம் கண்ணன் அழித்ததைக் குறிக்கும்.

தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன் என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள்.  அதோடு இரு தரப்பாரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலுடன் தோழியை அழைப்பது முடிந்தும் விடுகிறது.


எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!

சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும்.

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடைஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள்.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,


வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்.

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே.

இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.

இப்படி பகவான் நாமத்தின் மகிமை பற்றி பட்டத்திரி கூறும்போது இவ்வுலகையே படைத்த விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லாமல் அவனிடம் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்கிறார்.

ஹே லோகா விஷ்ணுரேதத் புவநமஜநயத் தந்ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்த்ரஸ்த்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம்
நீஹார ப்ரக்க்ய மாயா பரிவ்ருத மநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யைக த்ருப்தாஸ்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே

இந்த உலகை சிருஷ்டித்தது அந்த மஹாவிஷ்ணு தான், மக்களே, இதை யாருமே புரிந்துகொள்ளவில்லையே; அவன் உருவம், ரூப செளந்தர்யம் இத்தகையது என எவராலும் விளக்கமுடியாமல் இருக்கிறது. அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்.
    

17 comments:

 1. அருமை.   

  இந்தக்காலத்தில் பெண்கள் தங்களுக்குள் ஆண்கள் அழைப்பதுபோல "மச்சி" என்று அழைத்துக் கொல்வதைக்கேட்டிருக்கிறேன்.  எனவேஅப்போது ஏலே என்பது வழக்கத்தில் இருந்திருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. "ஏலே" என விளிக்கும் வழக்கம் இப்போவும் தென்மாவட்டங்களில் உண்டு ஸ்ரீராம். இணையம் சரியாகி விட்டதா?

   Delete
  2. //"ஏலே" என விளிக்கும் வழக்கம் இப்போவும் தென்மாவட்டங்களில் உண்டு ஸ்ரீராம்.//

   ஆம்.   அறிவேன்.  ம்ம்ம்...   
    
   //இணையம் சரியாகி விட்டதா?//

   நேற்று முதல் ஓகே!  ஒரு ஜேசிபி காரர் புண்ணியம் கட்டிக்கொண்டார்.    சரி செய்யத் தாமதம்!

   Delete
  3. நல்லது. ஆனால் பெரும்பாலான சென்னை வாசிகள் இணையம் இல்லை என்றார்கள்.

   Delete
 2. ஏலே பழமையான வார்த்தையா ?
  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கில்லர்ஜி! மிகப் பழமையான வார்த்தை. இது குட்டன் என்னும் சொல், நாற்றம் என்னும் சொல் எல்லாம் வழக்கொழிந்து போனதுடன் குட்டன் என்னும் அழகிய தமிழ்ச் சொல் மலையாளத்துக்குப் போய்விட்டது! :(

   Delete
 3. நாம் அருகில் இருப்பதைப் போன்ற எண்ணத்தைத் தருகின்ற பாடல் அடிகள். இவற்றையெல்லாம் ரசிக்க நாம் அதிக புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
  இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, ரசனைக்கு நன்றி.

   Delete
 4. தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன்//

  தீமைகளை அழித்து உலகிற்கு நன்னையை தரவேண்டும்.எங்கும் அமைதியும், ஆனந்தமும் பெருக வேண்டும்.
  எல்லோரும் அன்புடன் ஒருத்தரை ஒருத்தர் நேசித்து வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. இலக்கியப் பாடல்களில் எல்லே போன்ற சொற்கள் உபயோகித்திருப்பார்கள்.

  பாடல் மிகவும் சிறப்பு.

  இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில், ஆண்டாள் தன் முகத்தைப் பார்த்த கிணறை கிட்டத்தட்ட போர்வெல் அளவிற்குக் குறுக்கி மேலே கண்ணாடித்தடுப்பெல்லாம் போட்டு கிணறு என்ற தோற்றமே இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, இந்தக் கிணறு மட்டுமில்லை, நந்தவனமும் பாழாகிக் கொண்டிருந்தது! எங்கே! நம்மவர்களுக்குப் பழம் பெருமை பேசுவதில் இருக்கும் மகிழ்ச்சி அதைப் போற்றிப் பாதுகாப்பதில் இல்லை.

   Delete
 6. ஏன்தான் நான் திருப்பாவை பற்றி எழுதமுனையவில்லை என்று தோன்றுகிறது கோலங்கள்பதிவுக்கு மெருகு சேர்க்கின்றன

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. நான் மேலோட்டமாகத் தான் பொருள் தந்திருக்கிறேன். உள்ளார்ந்த பொருள் வேறே! பாராட்டுக்கு நன்றி.

   Delete
 7. வணக்கம் சகோதரி

  இன்றைய திருப்பாவை பாடலும், அதன் பொருளும் மிக அருமை.

  திருநெல்வேலி பக்கம் கூட "ஏலே" என்று விளிப்பார்கள். நீங்கள் அன்று குறிப்பிட்ட "பிள்ளை" என்ற சொல் வழக்கும் அங்கும், மதுரையிலும் உண்டு.

  பாடல் இன்று சற்று தாமதமாக பாடி மகிழ்ந்தேன். கோலங்கள் சிறப்பாக உள்ளது.

  /வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்./

  இந்த பாடலின் கடைசி வரியை, அதனுடைய இந்த அருமையான விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.

  /அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்./

  நாராயண பட்டத்திரி கூறும் இந்த ஆத்ம ஞான விளக்கமும் பாடலுக்குப் பொருத்தமாய் அமைந்துள்ளது. "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பக்திச் சுவையான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பொங்கும் மங்கலம் என்றும் தங்குக..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, அநேகமா மதுரை, திருநெல்வேலிப் பழக்கங்கள் எல்லாம் ஒன்றாகவேஇருக்கும். எனக்குத் திருநெல்வேலிச் சொந்தங்கள் உறவிலும் நட்பிலும் நிறையவே உண்டு என்பதால் அநேகமாக அவங்க பழக்க, வழக்கங்கள், பேச்சுக்கள் அத்துபடி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 8. ஒருமுறை திருமதி ராஜராஜேஸ்வரிஅவர்கள் ஏலேலோர் எம்பாவாய் என்பதற்கு வேறுபொருள் கூறி இருந்தார் சரியாக நினைவில்லை ஔவையார் ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் என்பதைக் குறிப்பிட்டதாக நினைவு

  ReplyDelete