எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 05, 2019

சில, பல, எண்ணப்பகிர்வுகள்!

மைத்துனருக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஐசியூவில் வென்டிலேடர் உதவியுடன் இருந்தவர் இப்போது வென்டிலேடர் நீக்கப்பட்டு இன்னமும் ஐசியூவில் தான் இருக்கிறார். நினைவு திரும்பி விட்டது என என் நாத்தனார் செய்தி அனுப்பினார். அனைவரின் பிரார்த்தனைகளாலும், கடவுள் அனுகிரஹத்தாலும் பூரணமாய்க் குணமடைய வேண்டும்.

நாங்க பெண் வீட்டிலிருந்து இங்கே வந்த அன்று குட்டிக்குஞ்சுலுவுக்கு ஒரே கோபம். விட்டு விட்டுப் போயிட்டோம் என்று. அழுது கொண்டே உள்ளே ஓடிப் போய் விட்டது. பின்னர் பெண், மாப்பிள்ளை, அப்புவெல்லாம் கிளம்பும்போது அவங்களுக்கு "பை" சொல்ல வந்தது ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே "பை" சொன்னது. ஏனெனில் நான் பெண் வீட்டில் இருந்து    கிளம்பும்போது கட்டி இருந்த உடையை இன்னமும் மாற்றவில்லை. ஆதலால் சந்தேகம். ஆனால் நான் அங்கேயே உட்கார்ந்திருக்கேன் என்பதைப் பார்த்ததும்தான் அதுக்குச் சிரிப்பே வந்தது.

இரண்டு நாட்களாக ஒரே கொட்டம். விளையாட்டு. பள்ளிக்குப் போய்விட்டு வரும்போதே நான் வரவேற்புக்கூடத்தில் உட்கார்ந்திருந்தால் என்னைக் கணினியை மூடச் சொல்லிட்டு விளையாடக் கூப்பிடும். நேற்றும் அப்படித்தான் கூப்பிட்டது. அதான் கணினியை மூடிட்டுப் போயிட்டேன். ஒன்பது மணி வரை விளையாடியும் அதுக்கு அலுக்கவில்லை. தூக்கமும் வரலை. பையர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றார்.  ராத்திரி படுக்க அவங்க அப்பா, அம்மா கூப்பிட்டால் எங்க பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கும். பள்ளிக்குப் போகையிலும் அழகாய் "டாடா" காட்டிட்டுப் போகும்.

ஒரு சில படப்பதிவுகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளவேண்டும்.
*********************************************************************************

தாய்த்திருநாட்டில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இன்னமும் குறையவே இல்லை என்பதை அறியும்போது மனதில் வருத்தம் ஏற்பட்டது/ஏற்பட்டு வருகிறது. பெண்ணாகப் பிறப்பதே பிழை என்னும்படி ஆகி வருகிறது. ஏன் இப்படி எல்லாம் ஆண்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கையில் ஆண் வர்க்கத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களை எல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் திருத்தவே முடியாது என எண்ணுகிறேன். அதிலும் ஒரு திரைப்பட இயக்குநர்/தயாரிப்பாளர் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிர்ச்சியைத் தருகின்றன. பெண்களைப் பலாத்காரம் செய்ய வந்தால் பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது    என்கிறார். பலவந்தம் பண்ண வருபவர்களிடம் அவர்கள் தொடர   ஒத்துக்கொள்ள வேண்டுமாம். கருத்தடைத்தடுப்புச் சாதனங்களை பலவந்தம் செய்ய வரும் ஆண்களுக்குக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டுமாம். எதிர்த்தால் கொல்லத்தான் செய்வார்களாம்.


அப்படித்தான் நடக்குமாம்! அதை எதிர்கொள்ளத்தான் வேண்டுமாம்! பெண்ணியம் பேசுபவர்கள் பலாத்காரம் செய்பவர்களை எல்லாம் எதிர்த்துப் பேசக் கூடாதாம். அவர்களாலும் நீதிமன்றங்களாலும் தான் இப்படி எல்லாம் ஆண்கள் நடந்து கொள்ளும்படி ஆகிறதாம். நீதிமன்றங்கள் எல்லாம் தலையிடவே கூடாதாம். அவர் வீட்டுப் பெண்களுக்கும் இதே சட்டத்தைக் கடைப்பிடிப்பார் என நம்புவோமாக! :((((((((( அந்தப் பெண்ணிற்கும் பெற்றோருக்கும் எவ்வளவு ஆசைகள், கனவுகள் இருந்திருக்கும்! வாழ வேண்டிய வயதில் அந்தப் பெண்ணைக் கெடுத்ததோடு அல்லாமல் எரித்தும் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ! இவர்களுக்கு வாழ்நாள் முழுதும் மறக்காமல் என்ன தண்டனை கொடுத்தால் சரியாக இருக்கும்? என்னைப் பொறுத்தவரை அவர்கள் இன்னொரு பெண்ணை மணக்கக் கூட முடியாத அளவுக்கு அவர்கள் உறுப்பை இழக்கச் செய்வது ஒன்றே சிறந்த தண்டனையாகத் தோன்றுகிறது. வாழ்நாள் முழுக்கக் கல்யாணம், காட்சி இல்லாமல் உறுப்பை இழந்து திரிய வேண்டும்.  கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களாகத் தெரிகிறார்கள் என்பதால் வழக்கம் போல் எச்சரிக்கை செய்து, தையல் மிஷின் வாங்கிக் கொடுத்து விடுதலை செய்து விடுவார்கள் என நம்புவோமாக!

35 comments:

  1. அன்பு கீதா மா.,
    மைத்துனர் உடல் நலன் எப்பொழுதும் நன்றாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    மிக பதைப்பாக இருந்தது.

    ஊடகங்களில் படித்து வந்த செய்திகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
    நடப்பது அக்கிரமம். இவர்கள் பேசுவது இன்னும் அதர்மம்.

    ஆகக் கூடி பெண்களை ரட்சிக்க இனி கடவுள்தான் அவதாரம் எடுக்கணுமோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, நாங்களும் கலங்கித்தான் போயிருந்தோம். நல்லபடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம்.
      பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டதே! :(

      Delete
  2. மச்சினர் குணமடைந்து வருவது மகிழ்ச்சி.   அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. குழந்தைகளின் பாசம் நெகிழ வைக்கும்.   அவர்களிடம் விளையாட, பேச பழக ஒருவரை எதிர்பார்க்கிறார்கள் குழந்தைகள்.   அது தாத்தா பாட்டியாலேயே முடியும்.  

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நாங்கள் இங்கேயே இருந்தாலோ, அல்லது குழந்தை அங்கே வளர்ந்தாலோ இன்னமும் நல்லது. இன்னும் 3 மாதங்கள் தான் நாங்க இருப்போம் என்பது தான் கஷ்டம். குழந்தை இன்னமும் ஏங்குவாள்! :( கொஞ்ச நாட்களுக்கு ஸ்கைபில் கூட எங்களைப் பார்க்க மறுப்பாள். முகத்தை மூடிக்கொள்வாள்.

      Delete
  4. மகா கொடூரமாய் அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்ட அதே இடத்தில இன்னொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடைத்தது என்று நேற்று செய்தித்தாளில் பார்த்தேன்.  கடுமையான தண்டனைகள் தந்தாலொழிய இது போன்ற குற்றங்கள் குறையப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இது எனக்குப் புதிய செய்தி ஸ்ரீராம். தண்டனை கடுமையாக இருந்தால் தான் நல்லது.

      Delete
  5. யாரந்த இயக்குனர்?    பாக்யராஜ் கூட ஏதோ பேசி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இப்போதைய இயக்குநர்கள் யாரையும் சரியாய்த் தெரியலை. யாரோ டேனியல் சரவணனாம். பெயர் போட்டிருந்தது. இது ஒரு பத்திரிகைச் செய்தி! அவர் படமும் இருந்தது. இளைஞர். பாக்யராஜ் சொன்னதெல்லாம் தெரியாது.

      Delete
  6. தங்களது மைத்துனர் பூரண நலம் பெறட்டும்.

    நீங்கள் சொல்லும் தண்டணை அரபு நாடுகளில் அமுலுக்கு இருப்பதால்தான் பெண்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி! கடுமையான தண்டனை கொடுத்தால் தான் திருந்துவார்கள்.

      Delete
  7. குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரை வேறு சற்றே வளர்ந்து விட்டால் எதிர்பார்ப்பது ஏமாற்றம் தரும் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார்கள்

    ReplyDelete
  8. உங்கள் மைத்துனரின் உடல் நிலையில் முன்னேற்றம் அறிந்து மகிழ்ச்சி. விரைவில் பூரண நலம் பெறப் ப்ரார்த்திக்கிறேன்

    குழந்தையின் ரியாக்‌ஷன்கள் சிரிப்பை உண்டாக்கியது.

    நீங்கள் எழுதியுள்ள பெண் பற்றிய செய்தியை நான் இன்னும் படிக்கவில்லை. ஒருவேளை சொன்னவர், காந்தியின் சீடராக இருந்திருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத்தமிழரே! குழந்தையாக இருக்கும்வரை எல்லாமே ரசிப்புத்தானே! கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண். இளம்பெண்ணான அவர் மிருகங்களுக்கான வைத்தியர், (பிரியங்கா ரெட்டி/உண்மைப்பெயர் அல்ல) ஆனால் மனித மிருகங்கள் கடித்துக்குதறி விட்டன. இதைப் பற்றி எல்லாப்பத்திரிகைகளும் அலறுகின்றன.

      Delete
  9. மைத்துனருக்கு நல்லபடியாக அறுவை சிகிட்சை முடிந்தது மருத்துவர் கவனிப்பில் இருப்பது மகிழ்ச்சி.
    பூரண நலம் பெற்று வீடு திரும்புவார்.

    பேத்தியோடு விளையாடுவது மகிழ்ச்சி. இன்று காலை பேரனுடன் நீண்ட நேரம் விளையாடி களித்தேன்.
    அவர்களும் நம்முடன் இருக்க முடியாது, நாமும் அங்கு இருக்க முடியாது . ஸ்கைப்பில் பார்த்து பேசுவது ஒரு வரபிரசாதம்.

    பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தண்டனைகள் குறைவு . அவர்களை மன்னித்து வெளியே விடக்கூடாது.


    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. பேத்தியோடு விளையாடிவிட்டுச் சில நாட்களில் பிரியவேண்டுமே என்பதை நினைத்து மனம் ஒரு பக்கம் வருந்துகிறது. இப்போதைய நிமிஷத்தின் சந்தோஷத்தை இன்னொரு பக்கம் அனுபவிக்கிறது. மற்றபடி உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளாலும் இறைவன் அனுகிரஹத்தாலும் கணேஷ் விரைவில் பூரண குணம் பெற்று வர வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்து கொண்டே இருப்போம்.

      Delete
  10. ///பள்ளிக்குப் போய்விட்டு வரும்போதே நான் வரவேற்புக்கூடத்தில் உட்கார்ந்திருந்தால் என்னைக் கணினியை மூடச் சொல்லிட்டு விளையாடக் கூப்பிடும்.//

    யூ ஆ த வெரி பாட் கிரான்மாஆஆஆஆஆ இன் த வேல்ட்ட்ட்ட்ட்ட்:)).. பிள்ளை வரும் நேரம் கொம் ஐ மூடிபோட்டு வாசலிலேயே வெயிட் பண்ண வாணாம்? கர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, அன்னக்கிளி அதிரா, கார் ஷெட்டில் இருந்து வந்தால் நேரே கூடம் தான். ஆகவே நான் அங்கே போய் நிற்கணும்னு இல்லை. அதுவே ஓடி வந்துடும். குளிர் இருப்பதால் வாசல் கதவை எல்லாம் திறந்து வைப்பதில்லை. நாங்களும் வாசல்பக்கம் நிற்க மாட்டோம். கார் ஷெட்டிலேயே குளிர் தெரியும். ஷெட் கதவைத் திறந்து பத்து நிமிஷம் வைத்திருந்தால் ஃப்ரீவேயில் போகும் வண்டிகளின் விர், விர் சப்தம், காற்றின் சப்தம்னு ஒரே இரைச்சலாகக் கேட்கும். :))))))

      Delete
  11. //ராத்திரி படுக்க அவங்க அப்பா, அம்மா கூப்பிட்டால் எங்க பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கும். பள்ளிக்குப் போகையிலும் அழகாய் "டாடா" காட்டிட்டுப் போகும்.//

    ம்ம்ம் இப்போ நல்லா செட் ஆகிட்டா, இனி நீங்க திரும்பும்போது புரியாமல் அழப்போகிறா. இதுதான் வெளிநாட்டு வாழ்க்கையிலுள்ள மிகப் பெரிய பிரச்சனை.
    சின்னனில் கனடா போய்விட்டுத்திரும்பும்போது, பெரியவரின் முகம் இறுகிப்போய் இருக்கும், சின்னவர் எயார்போர்ட் உள்ளே வந்ததும் விம்மி விம்மி அழுவார்.. பாவமாக இருக்கும்..

    சின்னனில் நானும் அப்படித்தான், ஊரால திரும்பும்போது நெஞ்செல்லாம் இறுகி அடைக்கும், கண்ணால தண்ணி வடியும்.. 2,3 நாட்கள் எடுக்கும் நோர்மலுக்கு திரும்ப.

    ReplyDelete
    Replies
    1. அது தான் கவலையாக இருக்கு அன்னக்கிளி. இதுக்காகவே ஜாஸ்தி நெருங்காமல் இருக்கோம். ஆனாலும் குழந்தை ஓடி வரச்சே என்ன பண்ண முடியும்! அதுக்குத் தாத்தா, பாட்டி இங்கே தான் இருப்பாங்க என்ற அளவில் பழகி விட்டது.

      Delete
  12. ///பெண்ணாகப் பிறப்பதே பிழை என்னும்படி ஆகி வருகிறது.///

    அப்படிச் சொல்லக்கூடாது கீசாக்கா, நான் எப்பவும் பெண்ணாகப் பிறந்திருப்பதால மகிழ்ச்சி, பெருமையாக ஃபீல் பண்ணுவேன். ஆனா நடகும் சம்பவங்கள் அப்படி எண்ணத் தோணுது போலும்.

    அரசாங்க சட்டதிட்டம் போதாது என்றே சொல்ல வேண்டும், வெளி நாடுகளில் இவ்வளவு மோசமாக இல்லையே... அங்குதானே இப்படி அதிகம் நடக்குது. பொலீஸ் பிடிக்கட்டும் நான் ஜெயிலுக்குப் போக ரெடி என்கிறார்கள் சில ஷோக்களில்., அப்போ ஜெயிலில் பெரிய தண்டனை இல்லாமையாலேதானே இப்படி நிலைமை.

    கடும் தண்டனை கொடுக்கப்பட்டால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும்.

    //இவர்களை எல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் திருத்தவே முடியாது என எண்ணுகிறேன்.//

    நீங்கள் கீழே சொல்லியிருப்பதுதான் சரியான தண்டனை, நானும் இதையேதான் நினைப்பேன்...

    //என்னைப் பொறுத்தவரை அவர்கள் இன்னொரு பெண்ணை மணக்கக் கூட முடியாத அளவுக்கு அவர்கள் உறுப்பை இழக்கச் செய்வது ஒன்றே சிறந்த தண்டனையாகத் தோன்றுகிறது//

    ReplyDelete
    Replies
    1. அன்னக்கிளி, எனக்கும் பெண்ணாய்ப் பிறந்ததில் குறை ஒன்றும் இல்லை. மகிழ்ச்சி தான். இத்தனைக்கும் பல கஷ்டங்களை விதம், விதமாக அனுபவிச்சாச்சு! எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வந்திருப்பது தான் கடவுள் அனுகிரஹத்தால்! ஆனால் இந்த மாதிரிச் சீரழிவு ஓர் அப்பாவிப் பெண்ணிற்கு ஏற்படும்போது மனம் துயரத்திலும், கோபத்திலும் பொங்கி வருகிறது.

      Delete
  13. மைத்துனரின் செய்தி மகிழ்வளிக்கிறது.. அவர் இனிப் பூரண குணமாகிடுவார்.

    ReplyDelete
    Replies
    1. ஃபிசியோதெரபி ஆரம்பிச்சிருக்காங்களாம். அதனால் வலி அதிகம் தெரியுது போல! :(

      Delete
  14. உங்கள் மைத்துனர் உடல் நலம் தேறி வருவது குறித்து மகிழ்ச்சி. அவர் பூரண நலம் அடைய பிரார்த்தனைகளை தொடர்கிறேன்.  

    ReplyDelete
  15. பெண்களுக்கு இழைக்கப்படும் இம்மாதிரி கொடுமைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது. கற்பழிக்கப்படும் பொழுது ஒத்துழைக்க வேண்டும் என்று பினாத்தியிருப்பவர், 'ர்' விகுதி தேவையில்லை என்று நினைக்கிறேன், பினாத்தியிருப்பவன் டேனியல் ஷ்ரவன். இவனெல்லாம் படம் எடுத்தால் அதில் எப்படிப்பட்ட விஷயங்களை சொல்லுவான் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. ரேபரேலியில் இன்னொமொரு அநீதி. நெஞ்சி பொறுக்குதில்லையே. தண்டனைகள் கடுமையானால் மட்டும் இவ்வகை குற்றங்கள் குறையலாம், நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், பெண்கள் குறித்த மதிப்பீடுகளை இளமையிலிருந்தே மாற்ற வேண்டும். 

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலர் ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து படிப்பது நல்லது எனவும், பலர் நல்லது இல்லை எனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் அறிந்தவரையில் பெரும்பாலும் இத்தகைய குற்றங்களைக் கூட்டாகச் செய்வது கீழ்த்தட்டு இளைஞர்களே. தில்லி நிர்பயாவின் வழக்கிலும் பார்த்தாச்சு, இப்போதும் பார்த்தாச்சு. பெரும்பாலும் மைனர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு நிலைமையைப் புரிய வைத்து மேலே கொண்டு வரப் பாடுபட்டாலே போதும். வெகு சிலரே இப்படி இருக்கின்றனர் என்பதால் எளிதில் கண்டறியலாம் என எண்ணுகிறேன். ஆனால் ஆரம்பத்திலேயே இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது இந்த இளைஞர்களை மன்னித்து விடக் கூடாது! கடுந்தண்டனை அவர்கள் வாழ்நாள் முழுதும் நினைத்துப் பார்த்து வருந்தும் அளவுக்குக் கொடுக்க வேண்டும்.

      Delete
    2. இந்த மாதிரி குற்றங்களைச் செய்பவர்கள், பெரிய பணக்கார பெற்றோர்களைக் கொண்ட, பசங்களுக்கு காசின் அருமையைப் புரிய வைக்காத பெற்றோர்களைக் கொண்டவர்கள். அல்லது மிகவும் கீழ்த்தட்டு, டாஸ்மாக் மைனர்கள். மேல்தட்டு மக்கள்னா, அவங்களுக்கு பெயில் அது இது வென வெளியில் வந்துடுவாங்க அரசியல்வாதிகள் ஆதரவோடு. கீழ்த்தட்டு மக்கள்னா என்கவுண்டர் செய்வாங்க. மைனாரிட்டின்னா, எப்படியும் சமூக ஆதரவோடு தப்பிச்சுடுவாங்க.

      பெண்களைப் பற்றிய மதிப்பீட்டை சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கணும். இரு பாலினமும் சமம் என்றும், ஆண் பெண்ணைவிட உயர்ந்தவன் என்று நினைப்பானாகில், அவனது கடமை பெண்ணைக் காப்பது என்பதையும் மனதில் விதைக்கவேண்டும்.

      Delete
  16. வணக்கம் சகோதரி

    தங்கள் மைத்துனர் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். விரைவில் பூரண நலமடைந்து குணமடைந்து பழைய நிலைமைக்கு திரும்புவார்.

    தங்கள் பேத்தியின் விஷமங்கள் ரசிக்க வைக்கிறது. குழந்தையின் பாசங்கள் என்றும் மறக்க இயலாதவை.பேத்தியோடு நன்கு விளையாடி மகிழுங்கள்.

    பெண்களின் நிலை பற்றி தாங்கள் கூறுவது மனதை சங்கடபடுத்துகிறது. விஷயங்களை கேட்டதும் மனம் பதறுகிறது. மற்ற பெண்களை தாயாக, சகோதரியாக, மகளாக மட்டுமே பார்க்கும் தன்மை இப்பேர்ப்பட்ட ஆண்களுக்கு எப்போது வரப் போகிறதோ? இவர்களுக்கான கடுமையான தண்டனைகளை குறைக்காமல் நீதித்துறை தரவேண்டும். அப்படியே தண்டனைகள் கிடைத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைபாடு கொடூரங்கள்தானே!
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, குழந்தை நன்கு விளையாடுகிறாள். பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை எல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துத் திரும்பச் செய்ய வைப்பாள். புரியலைனா கோபம் வந்துடும். :)))) சில சமயம் மழலை புரிஞ்சுக்க நேரம் எடுக்கிறது. மற்றபடி குழந்தையோடு இனிமையாகவே பொழுது போகிறது. இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள் ஆகியவற்றில் வந்தன.

      Delete
  17. மைத்துனர் உடல் நலம் தேறி வருவது கண்டு சந்தோஷம்... அப்புறம் உங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இங்கே இருக்கும் போது நீங்களும் இங்கேயே தங்கிவிடலாமே யோசிங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரைத்தமிழரே, உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி. குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். எங்களுக்கு 2011 ஆம் ஆண்டிலேயே பச்சை அட்டை வாங்கித்தர முயன்றனர். நாங்கள் ஒத்துழைக்கவில்லை. இங்கேயே இருக்கும் எண்ணமும் இல்லை. பார்ப்போம்.

      Delete